முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

பதில்:

இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும்.

திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில்  கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.

கஃபாவும் அதைச் சுற்றியுள்ளப் புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள.  இது யுக முடிவு நாள் வரைக்கும் இறைவன் அளித்த உத்தரவாதமாகும். இவ்வுத்தரவாதம் உலகின் வேறு எந்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் இறைவன் கொடுக்கவில்லை.

"நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." (திருக் குர்ஆன் 28:57)

"இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?" (திருக் குர்ஆன் 29:67)

"அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். " (திருக் குர்ஆன் 3:97)

"இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! " (திருக் குர்ஆன் 14:35)

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து யுக முடிவு நாள் வரை கஃபத்துல்லாஹ்வை இறைவன் பாதுகாப்பதாக உத்தரவாதமளித்துள்ளதை அறிய முடியும். அதற்கு முன் எவரும் கஃபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஃபாவை இறைவன் பாதுகாத்தான்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை.  

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்." (22:40)

மேற்கண்ட வசத்திலிருந்து உலகில் உள்ள மற்ற பள்ளிவாயில்களை பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்குத் தான் என்பதை அறிய முடியும். மேலும் அவ்வாறு கஃபத்துல்லாஹ்வை விட்டு மற்ற எந்த பள்ளிவாயில்களையும் இடிக்க வருவோரை முஸ்லிம்கள் தடுக்க முயற்சித்தால் மட்டுமே இறைவன் உதவுவதாக வாக்களித்திருப்பதையும் மேற்கண்ட வசத்திலிருந்து உணர முடியும். பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு முஸ்லிம்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் உலகில் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.

Comments   

abubakkar
0 #1 abubakkar -0001-11-30 05:21
oru lachcham nabikal vantharkal aanal qranil 25 nabimaarkal peyar irukirate ath en?
Quote | Report to administrator
abdul azeez
0 #2 abdul azeez -0001-11-30 05:21
குர்ஆன் என்பது அல்லாஹ் உலக மக்களுக்கு இறக்கிய இறுதி வேதம். பொதுவாக வேதம் என்றால் மனிதர்களுக்கு வழிகாட்டியாக தூதர் மூலம் அனுப்பி வைத்து இப்படி தான் வாழனும். இதை செய்யக்கூடாது என்று நேரடி கட்டளையாகவும். அல்லது இதற்க்கு முன்னாள் வந்த தூதருக்கு இந்த காரணத்தை கொண்டு முன்வைத்தே அம்மக்கள் தண்டிக்கப்பட்டா ர்கள் என்ற விதிமுறைக்கு உள்ளடங்கியது தான் வேதம். ( உதாரணம்: பிர்அவௌன் தர்ப்பெருமை, லூத் சமூக மக்கள் பின் துவார புணர்ச்சி ) போன்றதை சொல்லலாம். இதெல்லாம் குர்ஆனில் இருக்கிறது. அந்த மக்களுக்கு நடந்த சரித்திரத்தை தான் சொல்கிறது நாம் அதை செய்தால் குற்றம் இல்லை என்று நினைத்து விடமுடியாது. அதன் மூலம் நமக்கு படிப்பினையாகவும ், எச்சரிக்கையாகவு ம். போதிக்கும் வசனமாகும். மற்றும் பல அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சி சம்பந்தமான வசனங்களும் காணலாம். ஆதம் (அலை) முதல் இறுதி தூதர் முஹம்மது ( ஸல்) வரை அல்லாஹ் ஒருவனே தாம் அவனின் தூதர் என்று சொல்லும் வழமையையே அனைத்து தூதர்களின் வாக்காகவும் மக்களை நெறிமுறை படுத்தி நல்வழியில் நடத்தும் நபியாகவும் தான் லட்சக்கணக்கான நபிமார்களின் செயலாகவும் இருந்துள்ளது. இதற்க்கு மாற்றமாக எந்த நபி செயலும் அமைந்தது இல்லை. எல்லா நபி பெயர்களும் குர்ஆனில் எழுதி பெயர் பட்டியல் போடுவதால் நமக்கு என்ன பயன். அல்லது அவர்களின் வரலாறுகள் அனைத்தையும் அல்லாஹ் நமக்கு வசனமாக இறக்கினால் குர்ஆன் ஒரு காப்பியை மட்டும் கிரேன் மூலம் அல்லது போர்க் லிப்ட் மூலம் தூக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவோம். மனனம் செய்வது முடியாததாகிவிடு ம். இன்னும் ஏராள காரணம் இருக்கலாம் அல்லாஹ்வே ! நன்கறிவான். நமக்கு தெரிந்தது வரை இது தான். வேற ஒன்றும் இல்லை. அனைத்து முஸ்லிம்களுக்கு ம் அஸ்ஸலாமு அலைக்கும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
hussain
0 #3 hussain -0001-11-30 05:21
assalamu alaikkum all MESSAGE VERY VERY SUPER MASSAGE SAVE PANNUVATHU EPPADI ENTRU THERIYA PADUTHAUMM PLEASE VASSALAM
Quote | Report to administrator
abdul azeez
0 #4 abdul azeez -0001-11-30 05:21
சகோதரர் ஹுசைன் அவர்களே ! அப்படியே அந்த பேஜை காப்பி செய்து உங்கள் ஈமைளில் கம்போசில் வைத்து பேஸ்ட் செய்து ( சேவ் ) பண்ணிக்கொள்ளவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
தவ்ஃபீக்
-1 #5 தவ்ஃபீக் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் அசீஸ் அவர்களே,

நான் வழமையாக செய்தியின் மேல் புறத்தில் வலது பக்க மூலையில் காணப்படும் 'பிரிண்ட்' படத்தை கிளிக் செய்து பிரிண்ட் செய்கிறேன். அதை அப்படியே கண்ட்ரோல்+A பின்னர் கண்ட்ரோல்+C அழுத்தியும் சேவ் செய்கிறேன். இது நன்றாக உள்ளது.

அனைத்து முஸ்லிம்களுக்கு ம் இந்த தள ஆசிரியர்களுக்கு ம் எனது ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்.
Quote | Report to administrator
முனாஸ் சுலைமான்
-1 #6 முனாஸ் சுலைமான் 2009-07-26 19:49
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முடிவுகள் வெளியானதாக செய்திகிடைத்தது ஆனால் என்ன முடிவு என்று இன்னும் செய்தி கிடைக்க வில்லை இதன் காரணம் என்ன.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்