முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

 

இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த அருளப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

இறுதித்தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

 

"இந்தக் குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது." (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).

 

3:138. "இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது ".

 

38:87. ''இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."

 

இந்த குர்ஆனுடைய போதனைகள் நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும் , ஆண்களுக்கும், பெண்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானதுதான்.

 

தனக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை இறைக்கட்டளைப்படி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்தியம்பியதாலேயே திருக்குர்ஆன் வார்த்தெடுக்க விரும்பும் நேரான வாழ்க்கைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அமையப்பெற்றது. அவ்வாறு திருக்குர்ஆன் வழிகாட்டுதல்படி ஒரு சமுதாயம் அமைப்பெற்ற பிறகு, அதனை அதனால் உருவான சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.

 

இறைவனை இவ்வுலகின் படைப்பாளனாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் இருக்கின்றதே தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

 

திருக்குர்னுக்கு முந்தைய வேதங்கள் அதனை கொண்டு வந்த தூதரின் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அத்தூதருக்கு அருளப்பட்டது. எனவே அவ்வேதங்கள் அத்தனி சமுதாயத்திற்கு மட்டும் உரியது என்ற வாதத்தில் உண்மையுண்டு. ஆனால் அதே நேரம் திருக்குர்ஆன் தனியொரு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த அருளப்பட்டதல்ல.

 

மொத்த உலகமும் படைத்தவனை மறந்து கணடதையெல்லாம் வணங்கி தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரம், அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி இறைவனின்பால் மொத்த உலகையும் அழைக்க அருளப்பட்டதே இறுதி வேதமான இத்திருக்குர்னாகும்.

 

எனவே இது தனியொரு சமுதாயம் உரிமை கொண்டாடும் வேதமல்ல. மாறாக அகிலாத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக - நல்லுபதேசமாக - அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டதேயாகும்.

 

இறைவன் மிக அறிந்தவன்.

Comments   

niyamath
0 #1 niyamath -0001-11-30 05:21
arumaiyyana vilakkam alithullergal
Quote | Report to administrator
kavianban KALAM, Adirampattinam
0 #2 kavianban KALAM, Adirampattinam -0001-11-30 05:21
அல்-குர்-ஆனும் அதனை எவர்கள் மீது இறக்கப்பட்டதோ அம்மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்)அவர்களு ம் உலக மக்கள் யாவர்க்குமாகவே ஏக இறைவனால் அருளப்பட்டிருந் தும் 'முஸ்லிம்'கள் தங்கட்கு மட்டுமே திருமறையும்; திருநபி(ஸல்) அவர்களும் சொந்தம் என தவறான அபிப்ராயத்தில் இருப்பதால் இது போன்ற கேள்வி எழுகின்றன.
Quote | Report to administrator
ஹாஜியார்
0 #3 ஹாஜியார் -0001-11-30 05:21
//உலக மக்கள் யாவர்க்குமாகவே ஏக இறைவனால் அருளப்பட்டிருந் தும் 'முஸ்லிம்'கள் தங்கட்கு மட்டுமே திருமறையும்; திருநபி(ஸல்) அவர்களும் சொந்தம் என தவறான அபிப்ராயத்தில் இருப்பதால்//

இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத பாமரர்களில் சில இவ்வாறான தவறான அபிப்பிராயத்தில ் இருக்கின்றனர் என்பது உண்மை.
Quote | Report to administrator
k.karthic
0 #4 k.karthic 2010-08-07 12:47
ரம்ஜான் நொன்பு வெக்கலமா உடன பதில்
Quote | Report to administrator
M . Muhammad
0 #5 M . Muhammad 2010-08-07 19:25
// ரம்ஜான் நொன்பு வெக்கலமா உடன பதில் //

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிர ுந்தது போல் உங்கள் மீதும்(அது)விதி க்கப்பட்டுள்ளது . (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து!

1) அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்க ு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவ ர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது,
2)தொழுகையை நிறைவேற்றுவது,
3) நோன்பு நோற்பது,
4) ஜகாத் கொடுப்பது,
5) ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

RAMALAAN NONBU VAIPPADHU IRAI VICHUVAACHIKAL , MEEDHU KADAMAI, ADHAI MATTUMINRI VITHIKKAPPATTA ANAITHTHU KADAMAIKALAIYUM MURAIYAAKA YAAR NIRAIVETRINAALU M , IMMAI VAAZKAIYILUM MARUMAI VAAZKAIYILUM MUZHU PALAN UNDU. ILLAIYENIL MUZHU PALANUM KIDAIKKAATHU. IRAIVAN NAADINAAL ORALAVU PALAN IVVULAKIL KITTALAAM.

ரமளான் மாதத்தில் பசித்திருப்பதும ் தாகித்திருப்பது ம் வெறும் பட்டினிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கமல்லாமல். இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற அடியாரின் நம்பிக்கையும் உறுதிப்படுத்தப் பட்டு, அல்லாஹ்வுக்கும் , ரஸுலல்லாஹ்வுக்க ும் கட்டுப்படும் பண்பு மேலோங்க வேண்டும்

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிர ுந்தது போல் உங்கள் மீதும்(அது)விதி க்கப்பட்டுள்ளது . (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும ் கடமையாகும்.

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவரா கவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் . என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம்: புகாரி

Source : satyamargam.com/1018
Quote | Report to administrator
k.karthic
0 #6 k.karthic 2010-08-09 19:30
திருப்பூர் மாவட்டத்திற்கான ரமளான் நோன்புகால அட்டவணை வேண்டும்.
Quote | Report to administrator
M . முஹம்மத்
0 #7 M . முஹம்மத் 2010-08-10 02:12
// திருப்பூர் மாவட்டத்திற்கான ரமளான் நோன்புகால அட்டவணை வேண்டும்.//

அன்பு சகோதரர் கார்திக் அவர்களே நோன்பு கால அட்டவணை கீழே :

Ramadan 2010 Prayer Times ScheduleMonth: 9/1431, 8-9 / 2010 C.E
Location: Tiruporur, INDIA
Calculation Method: University Of Islamic Sciences, Karachi
Juristic Method: Standard

www.islamicfinder.com/.../

ரமலான் 1431 - ஆகஸ்ட்/ செப்டம்பர் 2010
DayRamadanGregorianFajrDhuhr  AsrMaghribIsha
நாள்ரமலான்ஆங்கிலம்ஃபஜ்ர்லுஹர்அஸர்மஃக்ரிப்இஷா
  Wed111-Aug4:431 2:15  3:256:337:47
  Thu2124:4412:15   3:256:327:46
  Fri3134:4412:15   3:246:327:45
  Sat4144:4412:15   3:236:317:45
  Sun5154:4412:14   3:226:317:44
  Mon6164:4412:14   3:226:317:44
  Tue7174:4512:14   3:206:307:43
  Wed8184:4512:14   3:196:297:42
  Thu9194:4512:13   3:186:297:42
  Fri10204:4612:1 3  3:196:287:41
  Sat11214:4612:1 3  3:196:277:40
  Sun12224:4612:1 3  3:196:277:40
  Mon13234:4612:1 3  3:196:277:40
  Tue14244:4612:1 2  3:206:267:38
  Wed15254:4612:1 2  3:206:257:37
  Thu16264:4712:1 2  3:206:257:37
  Fri17274:4712:1 1  3:216:247:36
  Sat18284:4712:1 1  3:216:237:35
  Sun19294:4712:1 1  3:216:237:35
  Mon20304:4712:1 1  3:216:237:35
  Tue21314:4712:1 0  3:216:227:34
  Wed221-Sep4:471 2:10  3:216:217:32
  Thu2324:4712:10   3:216:207:32
  Fri2434:4812:09   3:216:197:31
  Sat2544:4812:09   3:226:197:30
  Sun2654:4812:09   3:226:187:29
  Mon2764:4812:08   3:226:177:29
  Tue2874:4812:08   3:226:177:29
  Wed2984:4812:08   3:226:167:27
  Thu3094:4812:07   3:226:157:26


குறிப்பு : ஃபஜ்ர் தொழுகை நேரம் வந்த பின் உண்ணவோ பருகவோ கூடாது
மஃக்ரிப் தொழுகை நேரம் வந்த பின்னர் உண்ணலாம் பருகலாம்.
இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட் நேரம் நோன்பு ஆகும்.
கருப்பில் உள்ளவை இதர மூன்று தொழுகை நேரங்கள் ஆகும்.

Note 1: Fajr means both Fajr Athan (Azan) and Imsak (starting fast) and Maghrib means both Maghrib Athan (Azan) and Iftar (breaking fast

www.islamicfinder.com/.../
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்