முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.    

பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ" என்பதன் பொருள் என்னவெனில் "தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள்" என்பதாகும். இறைவன் இவ்வுலகைப் படைத்து மனிதர்களுக்கு சிந்திக்கக்கூடிய திறனை அளித்துள்ளான். அதனால் அவனது சுதந்திரமான சிந்தனையைப் பயன்படுத்தி சத்தியம் எது என தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றவேண்டும். "சிந்திக்க மாட்டீர்களா?" என்றும் இறைவன் மனிதகுலத்தை நோக்கிக் கேட்கிறான். இவ்வுலகவாழ்க்கை ஒரு தேர்வைப்போன்றது, தேர்வில் வெற்றிபெறுவதற்கான வழிகாட்டிகள் இறைத்தூதர்கள். இனி ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத, அதிகமாகத் தொந்தரவு செய்கிற, தனது வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை அவன் இறுதித் தேர்வில் தேற மாட்டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித் தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யார் காரணம்? மாணவனா? ஆசிரியரா? மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை அறிவுடைய எவரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாகப் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்குப் பொறுப்பாவான்.

அதேபோலத் தான் இறைவன் நேரான வழிகாட்டலுக்கு வேதத்தையும் அதன் செய்முறை விளக்கமாகத் தூதரையும் அருளியிருக்கிறான். தூதர் வாழ்ந்து காட்டியதோடு அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்து விட்டார். இனி சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பதும் விடுவதும் மனிதச் சிந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருமுறை தவறான வழிக்குச் சென்ற ஒரு மனிதன் அதன் உலகியல் சிற்றின்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுவானேயானால், அவனுக்கு அச்சமூட்டி செய்யப்பட்ட எச்சரிக்கைகள் மரத்தும் மறந்தும் போய்விடலாம். இந்த நிலையில் தான் செல்லப் போவது நரகம் தானே பார்த்துக் கொள்ளலாம் என எள்ளல் நிலைக்கு அவன் வரும் போது, இறைவன் அவன் சிந்தையை முத்திரையிட்டு விட்டதாகக் கூறுகிறான்.

இறைவன் மிக அறிந்தவன்.

Comments   

ரியோ
0 #1 ரியோ -0001-11-30 05:21
//மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்ல ை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்க ு யார் காரணம்? மாணவனா? ஆசிரியரா? மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை அறிவுடைய எவரும் குற்றம் சொல்ல மாட்டார்கள்//

வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமாக பாடம் நடத்தப்படும். சம வாய்ப்பு கொடுத்த பின்பே தேர்வு நடத்தப்படுகிறது . ஆனால் மத நம்பிக்கையைப்ப் பொறுத்த வரையில் அப்படியா?
அரபுநாட்டில் பிறந்து குழந்தையிலிருந் தே குரானைப் படித்து வாழும் ஒருவனுக்கும், இந்தியாவில் இந்து மதத்தில் பிறந்து, வறுமையில் வாடிக்கொண்டு, கூலி வேலை செய்துகொண்டு படிப்பறிவில்லாத ு தன் மதத்தைப்பற்றியே தெரிந்து கொள்ள நேரமில்லாது, குரான் பற்றிய அறிவில்லாது வாழ்பவனும் ஒன்றா?

இந்த இருவரில் இந்த ஏழை இந்துவை இறுதிநாளில் ஏன் குரானைப் படித்து அல்லாவை ஏற்றுக்கொள்ளவில ்லை என்று கேட்டு நித்திய நரகத்தில் தள்ளுவது எந்த வகையில் நியாயம்?
Quote | Report to administrator
அபூ முஹை
0 #2 அபூ முஹை -0001-11-30 05:21
சகோதரரர் ரியோ அவர்களே,

அரபு நாடுகளில் பிறந்து அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட குழந்தைகளிலும் - பெரியவர்களிலும் ஒரே இறைவனை எற்றுக் கொண்டவர்களும், மறுத்தவர்களும் இருக்கிறார்கள். அதாவது, அரபு நாடுகளிலும் முஸ்லிம்களும் - நிராகரித்தவர்கள ும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், அரபு நாட்டில் பிறந்து அரபு மொழி தெரிந்திருந்தால ் போதும் அவர்கள் திருக்குரானை ஏற்றுக் கொள்வார்கள் என்ற உங்கள் ஒப்பீடு தவறு.

//வறுமையில் வாடிக்கொண்டு, கூலி வேலை செய்துகொண்டு படிப்பறிவில்லாத ு தன் மதத்தைப்பற்றியே தெரிந்து
கொள்ள நேரமில்லாது, குரான் பற்றிய அறிவில்லாது வாழ்பவனும் ஒன்றா?//

வறுமையும், படிப்பறிவில்லாத தும் சிந்திக்கத் தடையாகும் என்று தோன்றவில்லை. வேண்டுமானால் முயற்சி செய்யாதவர்கள் என்று சொல்லிக்கொள்ள லாம். மேலும் குர்ஆனைப் படிக்கும் சிந்தனையாளர்களே அதை
நிராகரிக்கும் போது, இஸ்லாம் பற்றி சிறிதும் பரிச்சயமில்லாதவ ர் அதை நிராகரித்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்? மதங்களைப் பற்றிய சிந்தனையில்லாத ஒருவரால் மதத்தை நேசிக்கவும், நிராகரிக்கவும் முடியாது.

//வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமாக பாடம் நடத்தப்படும். சம வாய்ப்பு கொடுத்த பின்பே தேர்வு நடத்தப்படுகிறது . ஆனால் மத நம்பிக்கையைப்ப் பொறுத்த வரையில் அப்படியா?//

வகுப்பில் படித்த மாணவர்களுக்குத் தான் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்ப டும். வகுப்பில் படிக்காதவர்கள் தேர்வே எழுத முடியாது என்று புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லை. சம வாய்ப்புக்கு பின்பே தேர்வு என்பது மனித
நியதியாக இருக்கும் போது, இறைவன் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்காதவன், அனைவருக்கும் இறைக் கொள்கையை அறிந்து கொள்ள சம வாய்ப்பளிக்காமல ் இறைவன் எவரையும் தண்டித்து விடமாட்டான்.

//அதேபோலத் தான் இறைவன் நேரான வழிகாட்டலுக்கு வேதத்தையும் அதன் செய்முறை விளக்கமாகத் தூதரையும் அருளியிருக்கிறா ன். தூதர் வாழ்ந்து காட்டியதோடு அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்து விட்டார். இனி சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது ம் விடுவதும் மனிதச் சிந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளது.// -

- இறைவன் தெளிவான வழிகாட்டலை மனிதர்களுக்கு வழங்கி, அதைத் தேர்ந்தெடுப்பது ம் மறுப்பதும் அவரவரின்
சிந்தனையின் சுதந்திரத்திற்க ுட்பட்டது என்பதை மேற்கண்ட கட்டுரை வாசகங்கள் பிரதிபலிக்கிறது.
''நீங்கள் இதை சிந்திக்க மாட்டீர்களா''? என்று திருக்குர்ஆன் மனிதகுலத்தை நோக்கி கேள்வியெழுப்புக ிறது. குர்ஆனின் போதனைகள் கிடைத்த பின்னும் அதைச் சிந்திக்காமல் நிராகரித்தவர்கள ை இறைவன் தண்டிப்பான்.

மேலும் கொள்கை என்பது சிந்தனை ரீதியானது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஓரிறைக் கொள்கை எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறத ு. இதை விளங்கிக் கொள்ள வறுமை, செழிப்பு, ஏழை, பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத் தாழ்வு தடையாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

//இந்த இருவரில் இந்த ஏழை இந்துவை இறுதிநாளில் ஏன் குரானைப் படித்து அல்லாவை ஏற்றுக்கொள்ளவில ்லை என்று கேட்டு நித்திய நரகத்தில் தள்ளுவது எந்த வகையில் நியாயம்?//

கேள்வி இவ்வாறு இருக்காது. எனது வழிகாட்டல் உன்னிடம் வந்தும் அதை ஏன் நிராகரித்தாய்? என்று கேட்கப்படும்.

மற்றவை பின்...

அன்புடன்,
அபூ முஹை
Quote | Report to administrator
jenifer
0 #3 jenifer -0001-11-30 05:21
'உங்கள் மார்க்கம் உங்களோடு; எங்கள் மார்க்கம் எங்களோடு' என்பதற்கு என்ன அர்த்தம்? அப்படியானால், நாம் இருவருமே அவரவர் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யக்கூடதா? சகோதரர் 'அபூமுஹை' நன்றாக- ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்கம் தருவதால் அவர்களே இதற்கும் விளக்கம் தர விழைகின்றேன்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #4 அபூ முஹை -0001-11-30 05:21
''உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு'' (099:006)

பல மதத்தவரும் குடிமக்களாக வாழும் ஒரு நாட்டில் அவரவர் மதத்தைப் பிரச்சாரம் செய்வதை இந்த வசனம் தடுக்கவில்லை! ஒருவர் பின்பற்றும் கொள்கையை மற்றவர் மீது கட்டாயப்படுத்தக ் கூடாது என்பதே ''உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்'' என்பதன் பொருளாகும்.

''இந்த மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை'' (002:256)

''நீர் அவர்கள் மீது அடக்கு முறை செய்பவர் அல்ல'' (050:045)

நிர்ப்பந்தமாக - அடக்கு முறையாக பிறர் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகிறது.
Quote | Report to administrator
mohamed jia
0 #5 mohamed jia 2010-04-09 12:02
எல்லா புகழும் இறைவனுக்கு! சகோதரர் அபூ முஹை அவர்கள்க்கு மிக அழகிய முறையில் பதில் அளித்தீர்கள் நன்றி
Quote | Report to administrator
mohamed jia
0 #6 mohamed jia 2010-04-09 12:06
assalamu alaikum hi brother abu ur answers are superb very clear.

2: 156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.

ella phazhum iraivanuke
Quote | Report to administrator
Basheer
0 #7 Basheer 2010-04-13 12:11
ஜெனிஃபர் அவர்களே!
"நாம் இருவருமே அவரவர் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யக்கூடதா?"

இறைவன் ஆதி மனிதன் ஆதம் தொடங்கி நோவா(நூஹ்), ஆபிரகாம்(இப்ராஹ ீம்), மோஸஸ்(மூஸா), இயேசு(ஈஸா) மற்றும் முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் இறைசாந்தி உண்டாவதாக) மூலம் கூறியது ஒரே செய்திதான். அது, தன்னை மட்டும் வணங்க வேண்டும் என்றும் தனக்கு யாரையும், எதனையும் இணை வைக்கக் கூடாதென்றும் ஆகும். அப்படியிருக்க, இறைவன் ஒருவனாகவும் அவனுடைய மார்க்கமும் ஒன்றாக‌ இருக்க, "அவ‌ர‌வ‌ர் மார்க்க‌ம்" என்ப‌து எப்ப‌டி சாத்திய‌மாகும்?
சி‍ந்தியுங்க‌ள்........
Quote | Report to administrator
Rafeeq
0 #8 Rafeeq 2013-01-20 18:14
Thanx brother It's really convincible and understandable
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்