முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

ஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் ? அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்? வந்தார்கள்? கேள்வியில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். (சகோதரி தீபிகா)

தெளிவு:

அறிந்த விஷயங்களைப் பிறருக்குச் சொல்வதும் அறியாத விஷயங்களைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும்தான் அறிவு. "தெரியாத விஷயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றுதான் இஸ்லாம் ஆர்வமூட்டுகின்றது. எனவே, தெரிந்து கொள்வதற்காக கேள்விகள் கேட்பதில் தவறேதும் இல்லை.

மனித இனத்தைப் படைப்பதற்கு முன் மனிதன் உள்பட பிற உயிரினங்களுக்கும் தேவையானவற்றையும் படைத்து விடுகின்றான் இறைவன். இவற்றில் காற்று, வெப்பம், குளிர், உணவு, எனவும் கிரகங்கள், அண்டங்கள் என அனைத்தும் அடங்கும். மனித இனத்தைப் படைக்க நாடிய இறைவன் அது குறித்து ஏற்கெனவே படைக்கப்பட்ட வானவர்களிடம் கூறுகின்றான்:

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான். (அல்குர்ஆன் 2:30)

பின்னர் மனித இனத் துவக்கமாக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைக்கின்றான் இறைவன். அவரிலிருந்தே மனித இனம் பரவிப் பெருக வேண்டும். இதற்கு முதல் மனிதரை மட்டும் படைத்தால் போதாது பிறகு ''அவரிலிருந்து அவர் மனைவியைப் படைத்தான்'' இறைவன். இது தொடர்பான இறைமறை வசனங்கள்:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள், (அல்குர்ஆன் 39:6)

ஆதம் (அலை) அவர்களை தான் நாடிய உருவில் படைத்துவிட்டு பின்னர் அவருக்குத் துணையாக அவரிலிருந்தே ஒரு பெண்ணையும் படைக்கிறான் இறைவன். அந்தப் பெண்மணியைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆதமின் மனைவி" என்றே குர்ஆன் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்படி புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்) (அல்குர்ஆன் 7:19 மேலும் பார்க்க: 20:119)

இதன் பின்னரே இறைவனின் நியதிப்படி ஆண், பெண் பாலினக் கலவையின் மூலம் இவர்கள் இருவரிலிருந்தே தலைமுறை தலைமுறைகளாக மனித இனம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆதம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் ஹவ்வா என நபிமொழியிலிருந்து அறிந்து கொள்கிறோம்:

"பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர் நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3330, 3399)

ஆதம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர் இஸ்லாமில் ஹவ்வா என்றும் முந்தைய வேதங்களில் ஏவாள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதமின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களின் படைப்புப் பற்றிய நபிவழி அறிவிப்பு:

பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3331)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் இடதுபக்க விலா எலும்பை எடுத்து அவர் மனைவியைப் படைத்ததாக மேற்கண்ட நபிமொழிக்கு  விளக்கம் கொடுத்தாலும், பெண்களின் இயல்பான குணங்களைக் குறிப்பிடவே வளைந்த எலும்பாகிய விலா எலும்புச் சுட்டிக் காண்பிக்கப் படுகின்றன. மற்றோர் அறிவிப்பு:

பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி - 5184)

பெண் விலா எலும்பைப் போன்றவள். அவளை நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். எனவே, பெண்ணின் இயல்பானத் தன்மையோடு அவளுடன் வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை சீராகவும், சுமுகமாகவும் அமையும் என்பதே இதன் பொருளாகும். ஆகவே, ''அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்'' என்கிற குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவரது மனைவி படைக்கப்பட்டு, அவர்கள் இருவரிலிருந்து மனித இனம் பெருகியது.

மேலும் சந்தேகம் இருப்பின் எழுதுங்கள்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

Dr.A.Anburaj
0 #1 Dr.A.Anburaj 2013-07-19 10:39
ஆதாமையும் ஏவாளையும் அம்மணமாகப் படைத்த இறைவன் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது எனத் தடைவிதித்தார்.அ ம்மரத்தின் பெயர் பைபிள்படி -ஞானப்பழம் - Tree of Knowledge.ஞானப் பழம் உண்ணக்கூடாது என கருணைகடவுள் நினைக்கின்றார். ஆண் பெண் இருவர் அம்மணமாக இருப்பதை காணச்சகிக்காத சாத்தான் என்ற நல்லவன் இருவரையும் மேற்படி ஞானப்பழத்தை உண்ணச் செய்கிறான். பணம் தின்ன உடனே மேற்படி இருவருக்கும் வாந்தி பேதி இரத்தக் கொதிபபு ஏதும் ஏற்படவில்லை. தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதைக்குறித ்து வெட்கப்பட்டார்க ள்.எனவே இலை கொடிகளால் உடை செய்து அணிந்து கொண்டார்கள். இது பொறுக்காத கடவுள் அவர்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றி விடுகிறார். இருவருக்கும் ஆபேல் காயின் என்ற இரு ஆண் மக்கள் பிறக்கின்றனர். ஒரு மகன் இன்னொருவரைக் கொன்று விடுகின்றான். தற்போது மீதம் இருப்பது மொத்தம் ஒரு பெண் -தாயார்.ஆதம் தந்தை .காயின் மகன். மகனுக்கு மனைவி யார் ? என்பது கேள்வி.இக்கதை அரபு நாட்டில் தோன்றிய ஒரு கட்டுக்கதை. உலகம் என்படி தோன்றியது என்பது குறித்து சிந்தித்த பண்டைய மனிதன் பலவிதமான அனுமானங்களை உருவாக்கினான். இந்தியாவில் திசையானைகள் உலகை தாங்கிக் கொண்டிருக்கின்ற து என்ற கதை எல்லாம் உண்டு.அதில் இக்கதையும் ஒன்று.
இது ஒன்றும் உலக உண்மை அல்ல.இது உண்மையான வரலாறாக இருக்கவே முடியாது. வடிகட்டிய மூடநம்பிக்கை மட்டும் அல்ல.சமூகத்திற் கு மிகவும் ஆபத்தான கருத்தை ச் சொல்லும் கதையாகும். அறிவியல் துறையில் அணுவைப்பிளக்க முடியாது என்று உலக விஞ்ஞானிகள் நம்பினார்கள். பிறகு ஒருவிஞ்ஞானி அணுவைப்பிளக்க முடியும் என்று கண்டுபிடித்து நிரூபித்துக்காட ்டினார்.ஆதம் ஏவாள் கதை உண்மைக்கதை அல்ல. குரானில் இடம் பெற்றதனால் அது உண்மை எனக் கருதுவது பையித்தியக்காரத ்தனம். மேலும் ஆதாமு் ஏவாளும் ஆபேல் காயின் பேசிய மொழி என்ன? எழுத்து என்ன ? புத்தகங்கள் இருந்தனவா ? வேதம் எப்படி அளிக்கப்பட்டது ? அந்த மொழி என்னவாயிற்று ? புத்தகம் இருந்தால் எழுது கோல் இருந்ததா ? ”மை” இருந்ததா ? எழுத்தாணி இருந்ததா ? ஆதம்-ஏவாள் கதை கட்டுக்கதை. நிராகரிக்கப்படவ ேண்டிய கதை.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #2 Dr.A.Anburaj 2013-07-19 10:47
பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள் . மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவ ிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3331)
இதற்கு என்ன அரத்தம் என்பது விளங்கவில்லை. பெண்கள்தானன் கோணல் பத்தி கொண்டவர்களா ? ஆண்கள் எல்லாம் புரண யோக்கியர்களா ? விலா எலும்பு கோணலானது.எனவே பெண்கள் அனைவரும் கோணல் .... புத்தி கொண்டவர்களாகவே இருப்பார்கள் என்ற முடிவு முட்டாள்தனமானது ? ஆண்கள் பெண்கள் இருவரிலும் கோணல்புத்திக்கா ரர்களுக்குப் பஞ்சம் இல்லையே. குரான் இறைவின் கூற்று என்பது தவறு என்பதற்கு இதுபோன்ற கட்டுக்கதை பையித்தியக்காரத ்தனமாக கருத்துக்களே போதும்.
Quote | Report to administrator
O J DEEN
0 #3 O J DEEN 2013-07-19 11:31
இனத் துவக்கமாக முதல் மனிதர் ஆதம் அவர் மூலம் மனித இனம் பெருகியது.???

முதல் அல்லாஹ்வின் தூதர் நபி ஆதம் (அலை) ???

சந்தேகம் !!!
தங்கள் கருத்தை வேண்டுகிறோம்
Quote | Report to administrator
Jessy
0 #4 Jessy 2013-07-19 18:29
Dear Dr. A. Anburaj,

Answer to your question //எழுத்து என்ன ? புத்தகங்கள் இருந்தனவா ? வேதம் எப்படி அளிக்கப்பட்டது ? அந்த மொழி என்னவாயிற்று ? புத்தகம் இருந்தால் எழுது கோல் இருந்ததா ? ”மை” இருந்ததா ? எழுத்தாணி இருந்ததா ? ஆதம்-ஏவாள் கதை கட்டுக்கதை. நிராகரிக்கப்படவ ேண்டிய கதை.// Before reading the below, keep your mind clear and open. Don't be rigid about your opinion. எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. Read the below carefully, Allah knows the best:
The Precious Qur'an consists of 114 surahs [1]and 6256 ayat, some 77,436 words and about 320,211 letters. [2] These numbers may be reported differ­ently from scholar to scholar depending on the method of counting the Arabic words and letters, and sometimes depending on the division or grouping of certain ayat. The entire Book was revealed in 23 years through 194 revelations with the last revelation in the 11th year after the Hijrah (the migration from Makkah to Madinah). On an average basis, one ayah, of about 12 words was revealed per day (but not, of course, every day in practice).

The longest surah in the Noble Qur'an is surah al‑Baqarah with 286 ayat and in it occurs the longest ayah (II:282). The shortest surah is surah al‑Kawthar (CVIII) with only three short ayat. A total of 92 surahs were revealed in Makkah before Muhammad (SA), migrated to Madinah (begin­ning of the Hijri calendar), and the other 22 surahs were revealed in Madinah.

The first surah of the Glorious Qur'an is al‑Fatihah (The Opening). Each surah is named after some striking incident or purpose, or after a key word in that surah. To emphasise the deserving importance of the entire being, and the environment in which the human being lives, Almighty God has granted many environmental names to the surahs of the Holy Qur'an, such as The Night, The Day, The Spider, The Honeybee, The Dawn, The Time, The Sun, The Moon, etc. All the surahs of the Holy Qur'an begin with Bismillahi 'r‑Rahmani 'r‑Raham (in the name of God, the Merciful, the Compassionate) to keep reminding us of His endless Mercy and His all‑encompassin g Compassion, except for surah at‑Tawbah (IX), meaning Repentance. This may indicate the degree of God's anger with those who insist on disobeying Him. In contrast, this key word for the Grace, Blessing and Mercy of God has been effectively used twice in the Opening surah (al‑Fatihah).

For the convenience of those who wish to read all the surahs of this great book over a fixed period, the Glorious Qur'an is divided into 30 equal parts, each called one juz' (plural, ajza' meaning parts), or into seven equal segments, each called a manzil. Each juz' is subdivided into two hizbs (sections) which are further divided in four rubs (quarters). Therefore, if one reads one rub every night, the entire Qur'an will be read in about eight months. Similarly, if one wishes to read the complete Qur'an in one week, one must read one manzil a day. Large surahs of the Glorious Qur'an are also divided into rukuc according to the meaning of the passage.

The Noble Qur'an has been well preserved in its original form through­out fourteen centuries in two ways: 1) in writing, and 2) by memorising and passing the words from the heart of one generation into that of another. Two copies of the original standard Qur'an still exist today, one in Istanbul [3] (Turkey) and one in Tashkent [4] (Uzbekistan). The existing Quran is written on leather.
Quote | Report to administrator
Jessy
+1 #5 Jessy 2013-07-19 18:35
Dear Dr. Anburaj,

Another explanation regarding female.
//பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள் . மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவ ிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா(ரலி) நூல் - புகாரி 3331)
இதற்கு என்ன அரத்தம் என்பது விளங்கவில்லை. பெண்கள்தானன் கோணல் பத்தி கொண்டவர்களா ? // It means that female are very fragile and to handle with care. அவளை வளைக்க முயற்சிக்காதே அவள் எப்படி இருக்கிறாளோ அப்படி அவளை கையாள முயற்சி என்பதே அதன் பொருளே தவிர கோணல் புத்தி என்ற பொருளில் இல்லை.

எல்லா விஷயங்களும் நாம் பார்க்கும் பார்வையிலும் புரிந்துக் கொள்ளும் தன்மையிலும் உள்ளது. விஷயங்களை புரிந்துக் கொள்ள ஆராய்ச்சியும், தெளிவான சிந்தனையும், நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். சிலர் விதண்டாவாதம் செய்வதற்கே சிலவற்றை கேள்வி எழுப்புகிறார்கள ே தவிர தேடி தெரிந்து கொள்ளும் ஆர்வமிருப்பவர்க ள் கேள்வி கேட்பதற்கு முன்பு அது குறித்து சிறிதளவாவது தெரிந்து வைத்துக் கொள்ளுதல், அல்லது ஆராய்ச்சி செய்ய முயற்சித்தல் அவசியம். நீங்கள் மற்றவர்களை போல் இல்லை என்று நம்பியே பதில் எழுத முயற்சித்துள்ளே ன், என் அளவில்.
Quote | Report to administrator
சாணக்கியன்
+1 #6 சாணக்கியன் 2013-07-19 21:20
100 வருடங்களுக்கு முன் உலக ஜனத்தொகை எவ்வளவிருந்தது? . 200 வருடங்களுக்கு முன் எவ்வளவு?. 2000 வருடங்களுக்கு முன் எவ்வளவு என்று போனால் ஒரு கட்டத்தில் ஒரு ஆனும் பெண்ணும்தான் மிஞ்சுவார்கள்.

ஆக ஒரு ஜோடி ஆன் பெண்ணிலிருந்துத ான் உலக மக்களை அல்லாஹ் உருவாக்கினான் எனும் திருக்குரானின் கருத்தை தவறு என்று திரு.அன்புராஜால ் நிரூபிக்க முடியுமா?
Quote | Report to administrator
abu hudhaifa
0 #7 abu hudhaifa 2013-07-20 16:21
//எழுது கோல் இருந்ததா ?”மை”இருந்ததா ? எழுத்தாணி இருந்ததா//Dr.A.Anburaj.
எழுதுகோல் [எழுத்தாணி]இருந ்தது."முதன் முதலில் அல்லாஹ் படைத்தது எழுது கோலைத்தான்.அதை படைத்ததுடன் அல்லாஹ் அதனிடம்"எழுது"எ ன்று சொன்னான்"எதை நான் எழுதுவது"என்று எழுதுகோல் கேட்டது.உடனே அல்லாஹ்"நடந்ததை யும் இனி தொடர்ந்து கடைசிவரை நடக்கப்போவதையும ் எழுதுவாயாக"என்ற ு சொன்னான் என்று நபிகள் நாயகம்[ஸல்]அவர் கள் அல்லாஹ் தனக்கு அறிவித்ததாக கூறினார்கள்.[அற ிவிப்பாள்ளர்:உப ாதா பின் சாமித்[ரலி]நூல் :திர்மிதீ&அபூ தாவூத்]

இஸ்லாம் இவ்வாறு தெளிவுபடுத்துகி றது.ஆதமை படைப்பதற்கு முன்பே எழுதுகோல் படைக்கப்பட்டது என்பது தெளிவு.அன்பு ராஜ் அவர்களின் எழுத்தில் ஏன் இந்தளவிற்கு காட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை.தான ே ஒரு முடிவுக்கு வந்து விட்டு உளறி கொட்டி இருக்கிறார் சகோதரி jessi அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
-1 #8 Dr.A.Anburaj 2013-07-20 17:12
தங்களின் விளக்கத்திற்கு நன்றி.முதல் கடிதத்தில் உள்ள கருத்துக்களுக்க ு ஆட்சேபணை ஏதும்யில்லையோ. ? அனைவருக்கும் சம்மதமோ !
ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள் . மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவ ிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இக்கருத்து உடலைப்பற்றியதா? மனதைப்பற்றியதா? குணத்தைப்பற்றிய தா ? எனக்கு பெண்களை மலினப்படுத்துவத ாக கோணல் பத்தி என்பது அவர்களின் படைப்பின் தன்மை - எனறே பொருள் படுகின்றது. சகோதரிகள் சற்று கூடுதல் விளக்கம் அளிக்கலாமே.
சாணக்கியன் என்றால் பேரறிவாளி என்று பொருள்.தாங்கள் ஏன் இவ்வளவு மட்டமாக ஆவேசமா எழுதுகின்றீர்கள ். காயினுக்கு மனைவி யார் ? இக்கேள்வி்க்கு தங்களின் சாணக்கிய பதில் என்னவோ !தந்தை-தாயார் - ஒரு மகன் - உலக ஜனத்தொகை 3 பேர்கள் மட்டுமே. காயினின் மனைவியும் ஏவாள்தானா ?
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #9 Dr.A.Anburaj 2013-07-20 17:20
அன்புள்ள அபுகுடைபா அவர்களே! வணக்கம்.முதன் முதலில் அல்லாஹ் படைத்தது எழுது கோலைத்தான்.அதை படைத்ததுடன் அல்லாஹ் அதனிடம்"எழுது" என்று சொன்னான்"எதை நான் எழுதுவது"என்று எழுதுகோல் கேட்டது.உடனே அல்லாஹ்"நடந்ததை யும் இனி தொடர்ந்து கடைசிவரை நடக்கப்போவதையும ் எழுதுவாயாக"-
ஆதாமுக்கு முன்னர் எழுதுவதற்கு ஏதும்யிருந்திரு க்க முடியாது. அரேபிய நாட்டு கட்டுக்கதை யென்றால் வாயைப்பிளந்து கொண்டு நம்பிவிடவேண்டாம ்.குரானில் இருந்தாலும் வேறு எதில் இருந்தாலும் அதெல்லாம் கட்டுக்கதைகள். பழையது கழிய வேண்டும் கழிய விடுங்கள். அல்லா படைத்தது Auto pen/intelligent pen. மனிதன் தன் எண்ணத்தை பதிவு செய்வதுதான் எழுதுகோல்.அல்லா படைத்தது அதுஅல்ல. இதற்கும் அதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக உள்ளது. விளக்கம் அளிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #10 Dr.A.Anburaj 2013-07-20 18:12
ஆதமு் ஏவாளுக்கு ஏன் கடவுள் உடையை வழங்கவில்லை. உடையை அணிவிக்க கடவுள் விரும்பததுஏன் ? சாத்தான்தானே உடையை அணிய வேண்டும் என்ற உணர்வை படைத்தான் ?
Quote | Report to administrator
Jessy
+1 #11 Jessy 2013-07-21 03:06
Dear Dr. Anburaj,

// இக்கருத்து உடலைப்பற்றியதா? மனதைப்பற்றியதா? குணத்தைப்பற்றிய தா ? எனக்கு பெண்களை மலினப்படுத்துவத ாக கோணல் பத்தி என்பது அவர்களின் படைப்பின் தன்மை - எனறே பொருள் படுகின்றது. // உங்களுக்கு ஏன் அப்படி பொருள்படுகிறதென ்றால் உங்களுக்கு ரசூல் (ஸல்) பற்றிய மற்ற விஷயங்கள் தெரியாது. தாங்கள் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்ல ை. நீங்கள் Michael H. Hart எழுதிய The 100: A Ranking of the Most Influential Persons in History என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். ஓரளவுக்காவது உங்களுக்கு மாற்று கருத்து ஏற்படலாம்.

இறைத்தூதர் (ஸல்) பெண்களை கோணல் புத்தி கொண்டவர்கள் என்று குறிப்பிடவுமில் லை, குறிப்பிடுவதற்க ான சாத்தியகூறுகளும ் குறைவு காரணம் /தன்னுடைய மனைவியிடத்தில் காணப்படும் வெறுப்புக்குரிய விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, ஒரு முஃமின் தன்னுடைய மனைவியிடத்தில் ஏதேனும் ஒரு குணம் பிடிக்கவில்லையெ ன்றால் அவள் மீது கோபப்பட மாட்டான். மாறாக மற்றொரு புறத்தைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். (நூல்: முஸ்லிம்)// என்றும், பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும், அவர்கள் உரிமைகளை அவர்களுக்கு எப்படி தர வேண்டுமென்பதையு ம் பலநூற்றாண்டுகளு க்கு முன்பே சொல்லிவிட்டார்க ள். வரலாறு புத்தகங்களையும் , குறிப்புகளையும் புரட்டி பார்த்துவிட்டு கேள்வி எழுப்புவது நலமாக இருக்கும். கேள்வி கேட்பது தவறில்லை ஆனால் அதில் வன்மம் இருக்க கூடாதல்லவா? கேட்டு பதில் பெறுவதை விட அதை தேடி தெரிந்து கொள்வதே அறிவு என்று சான்றோர்கள் சொல்லியிருப்பதை நாம் பின்பற்றுவோமே. பெயரில் ‘அன்பை’ வைத்துக் கொண்டு வெறுப்புணர்வோடு நட்பு பாராட்டுவது சகோதரத்துவம் ஆகாது நண்பரே.
Quote | Report to administrator
சாணக்கியன்
+1 #12 சாணக்கியன் 2013-07-21 06:53
Quoting Dr.A.Anburaj:
காயினுக்கு மனைவி யார் ?


ஆபெல் காயின் இருவருமே தங்களுடைய உடன்பிறந்த சகோதரிகளையே மணந்து கொண்டனர். இது அருவருக்கத்தக்க து என்று ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

நேபாள புத்த ராமாயணம், ராமர் தன்னுடைய சொந்த தங்கை சீதையை மணந்தாரென சொல்கிறது. தமிழ் ஹிந்து கலாச்சாரத்தில், சொந்த தாய்மாமனை மணந்து கொளவது தொன்று தொட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இதெல்லாம் உங்களுக்கு அருவருப்பாக தெரிகிறதா?
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #13 சாணக்கியன் 2013-07-21 07:26
Quoting Dr.A.Anburaj:
ஆதமு் ஏவாளுக்கு ஏன் கடவுள் உடையை வழங்கவில்லை. உடையை அணிவிக்க கடவுள் விரும்பததுஏன் ? சாத்தான்தானே உடையை அணிய வேண்டும் என்ற உணர்வை படைத்தான் ?


திருடன் இருப்பதால்தான் போலீஸ்காரனுக்கு வேலை. ஆகவே, திருடர்களை நல்லபடியாக கவனித்து அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது போலீஸ்காரர்களின ் கடமை என்று சொல்வது போலிருக்கிறது உங்களுடை சாத்தானின் வாஞ்சை.

உங்களூக்கு உடை கொடுத்த சாத்தான் மீது அவ்வளவு அன்பிருந்தால் சாத்தானுக்கு நன்றி சொல்லிவிட்டு உங்களுடைய வீட்டு பெண்களை புர்கா அணிய சொல்லலாமே? (Edited)
Quote | Report to administrator
சாணக்கியன்
+1 #14 சாணக்கியன் 2013-07-21 07:55
Quoting Jessy:
பெயரில் ‘அன்பை’ வைத்துக் கொண்டு வெறுப்புணர்வோடு நட்பு பாராட்டுவது சகோதரத்துவம் ஆகாது நண்பரே.


ஒருவருடைய பெயருக்கேற்றார் போல் குணமிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. நல்ல பாம்பிடம் போய் "நல்ல பாம்பே நல்ல பாம்பே, நல்ல பாம்புனு பேர் வச்சுக்கிட்டு ஏன் விஷத்த கக்கறே?. பாலை கக்கு" என்று சொல்வது போல்தான்.
Quote | Report to administrator
Abu Muhai
0 #15 Abu Muhai 2013-07-21 10:58
மதிப்புக்குரிய டாக்டர் அன்புராஜ்

நீஙகள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்கவில்லை என்றாலும் உஙகள் முரண்பட்ட கருத்துகளுக்கு விளக்கம் எழுதுவோம்.
Quote | Report to administrator
அப்துல் ரஹ்மான்
0 #16 அப்துல் ரஹ்மான் 2013-07-21 16:00
"தாயின் காலடியில்தான் சுவர்க்கம் உள்ளது" என பெண் குலத்தின் மகிமையை ஒருவரியில் நபி(ஸல்) அவர்கள் பறைசாற்றியுள்ளா ர்கள்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #17 Dr.A.Anburaj 2013-07-22 14:20
ஆபெல் காயின் இருவருமே தங்களுடைய உடன்பிறந்த சகோதரிகளையே மணந்து கொண்டனர். இது அருவருக்கத்தக்க து என்று ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
நேபாள புத்த ராமாயணம், ராமர் தன்னுடைய சொந்த தங்கை சீதையை மணந்தாரென சொல்கிறது. தமிழ் ஹிந்து கலாச்சாரத்தில், சொந்த தாய்மாமனை மணந்து கொளவது தொன்று தொட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இதெல்லாம் உங்களுக்கு அருவருப்பாக தெரிகிறதா?
அதுதான் நான் தெளிவாகச் சொல்லிவிட்டேனே. காலத்திற்கு ஒவ்வாத கட்டுக்கதைகளைத் தளளுபடி செய்யுங்கள் என்று. ஞாயத்தீர்ப்புநா ளில் காயில் ஆபேல ஏவாள் ஆகியோருக்கு சொர்க்கமா ? நரகமா ?
ஆளுக்கு ஒரு சட்டமா ? இக்காலத்தில்யார ாவது சொந்த சகோதரியை திருமணம் செய்வாரா ? ஞாயத்தீர்ப்பு நாளில் அல்லா காயினையும் அவனையும் சமமாக தீர்ப்பாரா ? கள்ள வழக்கு பேசுவாரா ?
-----------------------------------------
மண்ணில் இருந்து ஆதமை உருவாக்கிய கடவுள் மணணிலிருந்து 10 ஆண்களையும் 40 பெண்களையும் படைத்திருக்கலாம ே ? (Edited)
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #18 Dr.A.Anburaj 2013-07-22 14:29
சாணக்கியன் ஐயா அவர்களே ,
ஆதமு் ஏவாளுக்கு ஏன் கடவுள் உடையை வழங்கவில்லை. உடையை அணிவிக்க கடவுள் விரும்பததுஏன் ? சாத்தான்தானே உடையை அணிய வேண்டும் என்ற உணர்வை படைத்தான் ? என்ற கேள்விக்கு தாங்கள் நேரடியாக விளக்கம் அளிக்காமல் சம்பந்தமற்ந விசயங்களைப்பேசு வது ஏன் ?

(Edited)
Jessy அக்கா அவர்களும் அல்லா (Edited) ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்களுக்கு இரண்டு ஆண்மக்களையும் படைத்து- பாலியல் ஒழுக்கக் கேட்டை படைத்தது ஏன் ? ஒரு நேரத்தில் 100 பெண்களையும் 400(குரான்படி 1ஆணுக்கு 4 பெண்கள் என்ற விகிதத்தில் ) ஆண்களையும் படைத்திருந்தால் உடல்உறவு ஒழுக்கவிதிகள் மீறப்பட்டிருக்க ாதல்லவா ? பாலியல் ஒழுக்க பாவங்கள் ஆதமுக்கு ஒரு மாதிரியாகவும் நமக்கு வேறுவிதமாக ஏன் இருக்க வேண்டும். (Edited)
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #19 Dr.A.Anburaj 2013-07-22 14:31
மாமன் மகளை மணப்பது பொருத்தமற்ற முடிவுதான்.தற்ச மயம் அப்பழக்கம் வெகுவாகக்குறைந் து வருகிறது.விரைவி ல் நின்று விடும்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #20 Dr.A.Anburaj 2013-07-22 14:34
ஆதம்-ஏவாள் தம்பதியினருக்கு பெண்மக்கள் யாரும் பிறந்ததாக பைபிளில் இருப்பதாகத் தெரியவில்லை. குரானில் உள்ளதா ? விளக்கமான தகவல் அளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #21 Dr.A.Anburaj 2013-07-22 14:39
எனது வீடு ஒரு சர்ச் பக்கத்தில் உள்ளது. ஆதம் கதையை வெகுகாலமாக கேட்டுக் கொண்டேயிருக்கின ்றேன். கதைமாறவில்லை. ஆதிபாவம் என்ற கருத்துக்கு ஆதரவாக இக்கதையை போதித்து வருகின்றனர். வெகுமாலமாகவே இக்கதைகள் ஏதோ பழையகாலத்து மக்களின் கற்பனை என்று எண்ணியிருந்தேன் . அதுபடியேதான் தங்களுக்கும் கடிதம் எழுதிக்கொண்டிரு க்கின்றேன். ஆதம்ஏவ்ாள் கதை சரியான கட்டுக் கதை..
Quote | Report to administrator
Jessy
+1 #22 Jessy 2013-07-22 18:01
Quoting Dr.A.Anburaj:
ஆதமு் ஏவாளுக்கு ஏன் கடவுள் உடையை வழங்கவில்லை. உடையை அணிவிக்க கடவுள் விரும்பததுஏன் ? சாத்தான்தானே உடையை அணிய வேண்டும் என்ற உணர்வை படைத்தான் ?


அன்பின் Dr. அன்புராஜ்,

நிர்வாணம் என்பது ஒளிவுமறைவற்ற தூய நிலை. அந்த நிலை தன்னை துதிக்க இறைவன் ஆதம்- ஹவ்வாவை படைத்தான். ஆனால் சாத்தான் அவர்களை வழிகெடுத்ததின் மூலமாக அவர்களுக்கு வெட்கதலங்கள் வெறுமையாக இருக்கும் உணர்வு வெளிப்பட்டது. அதன் பிறகுதான் பாலின பிரச்சனைகள், எதிரின கவர்ச்சி, ஈர்ப்பு என்று எல்லாமும் பிறந்தது. தூய நிலைக்கும், திறந்த நிலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துக் கொள்ளுங்கள்.
Quote | Report to administrator
Jessy
0 #23 Jessy 2013-07-22 18:04
Quoting சாணக்கியன்:


நேபாள புத்த ராமாயணம், ராமர் தன்னுடைய சொந்த தங்கை சீதையை மணந்தாரென சொல்கிறது. தமிழ் ஹிந்து கலாச்சாரத்தில், சொந்த தாய்மாமனை மணந்து கொளவது தொன்று தொட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இதெல்லாம் உங்களுக்கு அருவருப்பாக தெரிகிறதா?

சகோதரர் சாணக்கியன் மாற்று மத சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளித்தால் நலமாக இருக்கும். ராமாயணம், ராமர் என்று ஒப்பிடாமல் பதில் அளிப்பதே சிறந்தது.
Quote | Report to administrator
Jessy
-1 #24 Jessy 2013-07-22 18:11
quote name="Dr.A.Anbu raj"]காயினுக்கு மனைவி யார் ?

அந்த காலகட்டத்தில் சகோதரியிடமும், தாயிடம் கூட உறவு வைத்திருந்த காரணத்தினாலேயே திருகுரானில் இப்படியொரு அழகிய வசனம் உள்ளது. எல்லா கேள்விகளுக்கும் விடையிருக்கும் திருகுர்ஆனை படியுங்கள்: 4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர் கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால ், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமா க இருக்கின்றான்.( Quran 4:23)
Quote | Report to administrator
Abu Muhai
0 #25 Abu Muhai 2013-07-22 21:31
\இனத் துவக்கமாக முதல் மனிதர் ஆதம் அவர் மூலம் மனித இனம் பெருகியது.???

முதல் அல்லாஹ்வின் தூதர் நபி ஆதம் (அலை) ???

சந்தேகம் !!!
தங்கள் கருத்தை வேண்டுகிறோம்\ - O J DEEN

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இந்த இழையின் மூன்றாவது மறுமொழியாக இரண்டு கேள்விகள் உள்ளன. என்ன சந்தேகம் கேட்கப்பட்டிருக ்கிறது என்பதில் போதிய தெளிவில்லாமல் கேள்விகள் எழுதப்பட்டுள்ளன .

மனித இனத் துவக்கத்தின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களாவார்.
மனித இனத்திற்கான முதல் நபியும், முதல் அல்லாஹ்வின் தூதரும் ஆதம் (அலை) அவர்களாவார்.

இங்கு, மனித இனம் பெருகவில்லை எனும்போது ஆதம் என்ற தனிநபருக்கும் அவரது மனைவி ஹவ்வா என்கிற பெண்மணிக்கும் போதனை வழங்குவதற்கு நபியும், இறைத்தூதரும் தேவைதானா? என்கிற சந்தேகம் எழலாம். இந்த சந்தேகம் நியாயமாக இருந்தாலும், ''நபியை அனுப்பாத எந்த சமுதாயமும் இல்லை'' என்கிற இறைவசனத்தின் நியதிப்படி ஆதம், ஹவ்வா இருவருக்கும் இறைவழிகாட்டல் அவசியம். அதனால் ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறும் நபியாகவும், இறைத்தூதராகவும் , இறைச் செய்தியைப் பின்பற்றுபவர்கள ாக ஆதமும், ஹவ்வாவும் இருந்தனர்.

பின்னர், ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களு க்கு நபியும், இறைத்தூதருமாக ஆதம் (அலை) இருந்தார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 2:38 வசனம்)
Quote | Report to administrator
Abu Muhai
0 #26 Abu Muhai 2013-07-22 21:36
//ஆதம்-ஏவாள் தம்பதியினருக்கு பெண்மக்கள் யாரும் பிறந்ததாக பைபிளில் இருப்பதாகத் தெரியவில்லை. குரானில் உள்ளதா ? விளக்கமான தகவல் அளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.// - அன்புராஜ்

இந்தக் கேள்விக்கான விளக்கம் இந்த ஆக்கத்தில் பதிவுசெய்யப்பட் ட அல்குர்ஆன் 4:1வது வசனத்தில் உள்ளன:

...பின்னர் அவ்விருவரிலிருந ்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்... (அல்குர்ஆன் 4:1)

அதாவது, ஆதம், ஹவ்வா தம்பதியினருக்கு ஏராளமான ஆண்மக்களும், பெண்மக்களும் பிறந்தனர் என்பதை குர்ஆன் உறுதிப்படுத்துக ின்றது.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #27 சாணக்கியன் 2013-07-22 21:51
Quoting Jessy:

சகோதரர் சாணக்கியன் மாற்று மத சகோதரர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளித்தால் நலமாக இருக்கும். ராமாயணம், ராமர் என்று ஒப்பிடாமல் பதில் அளிப்பதே சிறந்தது.

மிக்க நன்றி. தயவு செய்து என்னை எனது பாணியில் பேசவிடுங்கள். அப்படியும் அவரைப்போல் இருட்டிலே கல்லெறிவது எனது வழக்கமில்லை. அவருக்கு எவ்வளவு கருத்து சுதந்திரம் இருக்கிறதோ அதே அளவு சுதந்திரம் எனக்குமுண்டு.
Quote | Report to administrator
சாணக்கியன்
-1 #28 சாணக்கியன் 2013-07-22 22:05
Quoting Dr.A.Anburaj:
மாமன் மகளை மணப்பது பொருத்தமற்ற முடிவுதான்.தற்சமயம் அப்பழக்கம் வெகுவாகக்குறைந்து வருகிறது.விரைவில் நின்று விடும்.


மாமன் மகளை மணப்பது தவறல்ல. சொந்த மாமனையே மணப்பதுதான் தவறு. ஆனால் சகோதரன் சகோதரியை மணக்க இறைவன் அனுமதித்திருந்த காலத்தில் இது தவறல்ல. ராமர் தனது தங்கை சீதையை அந்த காலகட்டத்தில் மணந்ததும் தவறல்ல.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #29 சாணக்கியன் 2013-07-22 22:30
Quoting Dr.A.Anburaj:
கடவுளை மற.மனிதனை நினை.


கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள் பாதி முஸ்லிம் ஆகிவிட்டீர்கள். ஏனென்றால் இஸ்லாத்தின் அடிப்படையே "கடவுள் இல்லை அல்லாஹ்வைத்தவிர " என்பதுதான். உங்களுக்கு தைரியமிருந்தால் "லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் திருக்கலிமாவை சொல்லிப்பாருங்க ள். இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாகிவிடுவ ார்கள்.
Quote | Report to administrator
Abu Muhai
0 #30 Abu Muhai 2013-07-22 23:08
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களுடைய பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிரு ந்து வெளியேற்றியதைப் போன்று உங்களையும் அவன் குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவ்விருவரின் வெட்கத் தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்களைவிட்டு அவர்களது ஆடையை அவன் அகற்றினான்... (அல்குர்ஆன் 7:27)

மேற்கண்ட வசனத்தில் ஆதம் தம்பதியினரின் ஆடைகளை அகற்றி, அவர்களை நிர்வாணமாக்கியத ு ஷைத்தான் என்று இறைவசனங்கள் பேசுகின்றன. வசனத்தில் ஆதமின் மக்களே! என அழைப்பதால், அன்புராஜும் ஆதமின் மக்களில் ஒருவர்தானே.

பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் ஏன் நிர்வாணமாக பிறக்கின்றன? ஆடை அலங்காரத்துடன் குழந்தைகளைப் பிறக்கச் செய்யவேண்டும் என இறைவனுக்குக் கட்டளையிடாமல் இருந்தால் சரி!
Quote | Report to administrator
சாணக்கியன்
+1 #31 சாணக்கியன் 2013-07-23 10:22
Quoting Jessy:
நிர்வாணம் என்பது ஒளிவுமறைவற்ற தூய நிலை. அந்த நிலை தன்னை துதிக்க இறைவன் ஆதம்- ஹவ்வாவை படைத்தான்.


"ஒரு துளி சிறுநீர் ஆடையில் விழுந்துவிட்டால ும் எனது பள்ளியில் நுழையாதே, என்னை தொழாதே" என்று அல்லாஹ் தடுத்து நிறுத்தியுள்ளான ். ஆதமும் ஹவ்வாவும் சொர்க்கத்தில் ஆடையின்றி அலைந்தார்கள், தடுக்கப்பட்ட ஆப்பிளை புசித்தமும் காம உணர்வு கொண்டார்களென்பத ு பவுல் ஜான் போன்றவரின் கற்பனை.

நிர்வாணம் என்பது ஒளிவுமறைவற்ற தூய நிலை என்பதெல்லாம் வடிகட்டிய காமசூத்திரம். இதெல்லாம் திருக்குரானில் கிடையாது. இருந்தாலும் உங்களுடைய கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு. அதை தடுக்க நான் யார்?
Quote | Report to administrator
Dr.A.Anburaj
-1 #32 Dr.A.Anburaj 2013-07-23 13:26
அன்புள்ள Jessy, ஒரு கட்டுக்கதையை குரானில் இடம் பெற்றுவிட்டதற்க ான வலிந்து நியாயப்படுத்த முயல கதை எப்படியெல்லாம் போகிறது பாருங்கள்.அந்த காலகட்டத்தில் சகோதரியிடமும், தாயிடம் கூட உறவு வைத்திருந்த காரணத்தினாலேயே திருகுரானில் இப்படியொரு அழகிய வசனம் உள்ளது. எல்லா கேள்விகளுக்கும் விடையிருக்கும் திருகுர்ஆனை படியுங்கள்: 4:23. ஆதம் நபி காலத்தில் அல்லாதானே அபபடி வாழ வைத்திருக்கின்ற ான்.இது தவறு என்றால் அப்படிதானே உலகம் பெருக அல்லா நாடியிருக்கின்ற ான். இது படிப்பதற்கு பொருத்தமானதாக இல்லையே.குரான் முகம்மது இறந்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து 4வது கலிபாவால் முதலில் தொகுக்கப்பட்டு பின் அழிக்கப்பட்டு பின் தக்க நீக்கம் சேர்த்தல் செய்து தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது . குரான் வெளியிடப்பட்டு 1450 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் கூட, 1450 ஆண்டுகள் வரை எது பாவம் எது சரி என்ற கருத்தை (Edited) முறையாக ஏற்படுத்தவில்லை யே? ஏன்! (Edited) பல ஆயிரம் ஆண்டுகள் சரியாக இருந்து கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வந்த ஒரு பாலியல் பழக்கத்தை குரானில் தடை செய்வது ஏன் ? (Edited) நேற்று சரி இன்று தவறு என்பது சிறுபிள்ளைத்தனம ானதாகத் தெரியவில்லை!
பாலியல் ஒழுக்கம் என்பது சுழிநிலைக்கு உட்பட்டது என்றால் பாவம் என்பது குறித்து நிரந்தர கொள்மை ஏதும்யிலிலை என்றுதானே ஆகின்றது. இதில் நியாயத் தீர்ப்பு நாள் எப்படி வரும் ? நியாயத்தீர்ப்பு நாளில் தாயோடு சகோதரியோடு உறவு கொண்டவர்களையும் உறவு கொள்ளாதவர்களையு ம் அல்லா எப்படி தீர்ப்பான் ? அப்படி தீர்த்தால் அது நியாயமாக இருக்குமா ? இன்றும் அந்ததான் ஆப்பிரிக்கை மக்கள் பலர் ஒழுக்கவிதிகளை அறியாமல் வாழ்கின்றனர். (Edited) அந்தமானுக்கு ஒரு நபியும் போகவில்லை.ஏன் ? நபி யோயிருந்தால் அம்மக்கள் ஏன் இப்படி வாழ்கின்றனர்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்கள் கையில் ஒரு வேதத்தையும் கொடுத்து படிக்க சிந்திக்க முழுமையான அறிவையும் படைத்திருந்தால் உலகம் முதலிலேயே சரியான பாதையை அறிந்திருக்கும் அல்லவா ? கட்டுக்கதையை கட்டுக்கதை என்று ஒப்புக் கொள்ள ஏன் இப்படி ஒரு அசிங்கமான கதையை வலிந்து காப்பாற்ற நினைக்கின்றீர்க ளே ? ஏன்.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #33 Dr.A.Anburaj 2013-07-23 13:29
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களுடைய பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிரு ந்து வெளியேற்றியதைப் போன்று உங்களையும் அவன் குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவ்விருவரின் வெட்கத் தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்களைவிட்டு அவர்களது ஆடையை அவன் அகற்றினான்... (அல்குர்ஆன் 7:27)
ஆடையை அளித்தவன் சாத்தான் தானே ! அல்லா அம்மணமாகப்படைத் தான் .குழந்தையாக அல்ல.ஆடையை அகற்றினான் என்றால் அகற்றியது அல்லாவா ? சாத்தானா? என்ன புதுகதையாக உள்ளது.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #34 Dr.A.Anburaj 2013-07-23 13:31
Quoting சாணக்கியன்:
Quoting Dr.A.Anburaj:
மாமன் மகளை மணப்பது பொருத்தமற்ற முடிவுதான்.தற்சமயம் அப்பழக்கம் வெகுவாகக்குறைந்து வருகிறது.விரைவில் நின்று விடும்.


மாமன் மகளை மணப்பது தவறல்ல. சொந்த மாமனையே மணப்பதுதான் தவறு. ஆனால் சகோதரன் சகோதரியை மணக்க இறைவன் அனுமதித்திருந்த காலத்தில் இது தவறல்ல. ராமர் தனது தங்கை சீதையை அந்த காலகட்டத்தில் மணந்ததும் தவறல்ல.

நேபாளத்து ராமாயாணம் நான் படிக்கவில்லை. இராவணனுக்கு சீதை மகள் என்றும் ஒரு கதை உள்ளது. மாமனை மணப்பது சில் முன்னேற்றம் பெறாத சாதியில் உள்ளது. தற்சமயம் இதுவும் வெகுவாகக் குறைந்துள்ளது. விரைவில் நின்று விடும்.
Quote | Report to administrator
மட்டுறுத்துநர்
0 #35 மட்டுறுத்துநர் 2013-07-24 01:18
Dr. A. Anburaj என்பவரின் அண்மைய பின்னூட்டங்களில ் இறைபழிப்பு (blasphemous) வார்த்தைகளும் அநாகரீக வாசகங்களும் அதிகரித்து வருகின்றன. சில பின்னூட்டங்கள் எடிட் செய்து அனுமதிக்கப்பட்ட ுள்ளன.

வாசகர்கள் அனைவரும் கவனத்தில் கொள்க.
பதிவுக்குத் தொடர்புடைய, ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும ். கண்ணியம் மீறுபவர்களின் பின்னூட்ட வசதி முடக்கப்படும்.

மட்டுறுத்துநர்,
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
Dr.A.Anburaj
-1 #36 Dr.A.Anburaj 2013-08-02 10:29
எனது கடிதங்களை தாங்கள் நியாயமற்ற முறையில் தணிக்கை செய்து வெளியிடால் மறைத்தது நியாயமில்லை. இக்கட்டுலை விரபங்களை செங்கொடி என்ற வலைதளத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். One who refueses to submit his opinions to the test of free discussion is more in love with his opinion than with truth- என்ற மொழிக்கு எற்ப தாங்கள் ஏதோ ஒரு அரேபிய கட்டுக்தைக்கு வக்காலத்து வாங்கி முறையான விவாதம் செய்ய அனுமதிக்கவில்லை . இது வருந்தத்தக்கது.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
+2 #37 சத்தியமார்க்கம்.காம் 2013-08-04 07:46
திரு. அன்பு ராஜ், தங்களின் ஆர்வமான கருத்துக்களுக்க ு நன்றி!

மேலேயுள்ள பின்னூட்டத்தில் , உங்கள் வசதிக்கு ஏற்றதொரு மேற்கோளைச் சுட்டியுள்ளீர்க ள். அதே வேளையில் Your liberty to swing your fist ends just where my nose begins என்பதையும் எங்காவது வாசித்திருப்பீர ்கள் என நம்புகிறோம்.

சத்தியமார்க்கம் .காம் இணைய தளத்தில் பதிவாகும் வாசகர் கருத்துக்கள் ஆக்கத்திற்குத் தொடர்புடையதாகவு ம், கண்ணியமாகவும் இருக்கும் பட்சத்தில், அவற்றிற்கு என்றும் தடையில்லை. இதே தளத்தில் இடம் பெற்றுள்ள உங்களின் பல்வேறு பின்னூட்டங்கள் இதற்கு சாட்சி.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்களின் நம்பிக்கையை "கட்டுக்கதை" என்று கூறும் உங்களிடம் விசாலமான பார்வை இல்லை. உங்கள் கருத்துக்களில் கருத்துப் பரிமாற்றத்திற்க ு எவ்வித அடிப்படையும் இன்றி துவேஷமும், காழ்ப்புணர்ச்சி யும், குரோதமும் கொப்புளிப்பதால் Dr.A.Anburaj என்ற பெயர் சத்தியமார்க்கம் .காம் தளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

வெறும் சீண்டல்களும் சினமூட்டல்களும் மட்டுமே நோக்கமாக கொண்டு அநாகரீகமாக எழுதப்படும் உங்களைப் போன்ற எவரது பின்னூட்டமும் அனுமதிக்கப் படமாட்டாது.

எனவே, மிரட்டல்களைக் கைவிட்டு, வேறொரு பெயரில் அழகான கருத்துப் பரிமாற்றங்களை முன் வையுங்கள். வாதத்தை வாதத்தினால் எதிர்கொள்ளுங்கள ். கண்ணியமான உங்கள் கருத்துக்களுக்க ு எப்போதும் வரவேற்பு உண்டு.

உங்கள் அரிய நேரத்தினை சத்தியமார்க்கம் .காம் தளத்தில் செலவிட்டமைக்கு நன்றி!

அன்புடன்,
சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator
A.M.Abdul Khader
0 #38 A.M.Abdul Khader 2013-08-04 18:01
திரு.அன்புராஜ் அவர்கள், ராகுலசாங்கிருத் தியாயன் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்ற் புத்தகத்தை படிக்கவும். மனிதசமுதாயம் எவ்வாரு உருவானது என்ரு அரியலாம்
Quote | Report to administrator
shahruk sreen
0 #39 shahruk sreen 2017-03-14 21:59
thowba yeppadi seiyavendum? dua ketkum murai yenna? nabi sal avargalin meethu salawath senjathan dya yethukuma?
Quote | Report to administrator
Indian
0 #40 Indian 2017-03-15 10:59
// thowba yeppadi seiyavendum? dua ketkum murai yenna? nabi sal avargalin meethu salawath senjathan dya yethukuma? //
----------------------------

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது, துஆ செய்வது எல்லாம் தொழுகை, திக்ர் அடிப்படையில். ஆனால் "பாதிக்கப்பட்டவ ன் மன்னிக்காத வரை நான் உனது பாவங்களை மன்னிக்க மாட்டேன்" என அல்லாஹ் திருக்குரானில் உரைக்கிறான்.

உங்களுடைய செய்கையால் யாராவது பாதிக்கப்பட்டிர ுந்தால் அவரிடம் போய் மன்னிப்பு கேளுங்கள். எண்ணங்களையும் உள்ளங்களையும் அல்லாஹ் நன்கறிவான். மனம் வருந்தி அவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவான்.

பாவமன்னிப்புக்காக மொட்டை போட்டு, எண்ணையை உடல் முழுதும் தடவிக்கொண்டு பல கிலோமீட்டர் உருண்டு தர்காவுக்கு செல்வதுதான் மிகப்பெரிய பாவம்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்