முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி...

 

ஐயம்:-

மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து?
- ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2)
- நீரிலிருந்து (21:30)
- சுட்டக் களிமண்ணிலிருந்து (15:26)
- புழுதியிலிருந்து (3:59)
- வெறுமை (19:67)
- பூமியிலிருந்து (11:61)
- கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37)

தெளிவு:-

நான் மரணித்து விட்டால் உயிருடன் வெளியாக்கப்படுவேனா? என மனிதன் கேட்கிறான்.

அவன் எப்பொருளாகவும் இல்லாத நிலையில் நிச்சயமாக நாமே இதற்கு முன்னர் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:66, 67)

19:67வது வசனத்தைச் சுட்டிக்காட்டி ''மனிதன் வெறுமையிலிருந்து படைக்கப் பட்டானா?'' என்று கேள்வியில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. வசனத்தின் பொருள், மனித இனம் படைக்கப்படுவதற்கு முன் மனிதன் ஓர் உயிர் அணுவாகவோ, துரும்பாகவோ, தூசியாகவோ எப்பொருளாகவும் இல்லை. எதுவாகவும் இல்லாமலிருந்த மனிதனை  ''நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப் போகிறேன்'' (2:30. 15:28) என்று பூமியிலிருந்து மண்ணெடுத்து, முதல் மனிதரை நேரடியாக மண்ணிலிருந்து படைத்து மனித இனத்தைத் துவக்கினான் இறைவன்.

...அவரை (ஆதமை) மண்ணிலிருந்து அவன் படைத்தான். (அல்குர்ஆன் 3:59)

அதே போன்று 3:59வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ''மனிதன் புழுதியிலிருந்து படைக்கப்பட்டானா?'' என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3:59, 18:37, 22:5, 30:20, 35:11, 40:67 ஆகிய வசனங்களில் ''துராப்'' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மண்ணைக் குறிப்பிடுவதற்கே துராப் எனப்படும். மண்ணிலிருந்து பொடி (powder) போன்ற புழுதிகள் காற்றில் பறந்தாலும் அதுவும் மண்ணிலிருந்தே கிளம்புவதால் புழுதியையும் மண் என்று குறிப்பிடலாம். (இதற்கான ஹதீஸ் விளக்கம் புகாரி 441.) களிமண்ணை உதிர்த்தால் முழுக்க பொடி (powder) புழுதி போன்றதாகும்.

...அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்... (அல்குர்ஆன் 11:61)

தொடர்ந்து 11:61வது வசனத்தைச் சுட்டிக்காட்டி, ''மனிதன் பூமியிலிருந்து படைக்கப் பட்டானா?'' என்று கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து உங்களைப் படைத்தான் என்பது பூமியிலிருந்து மண்ணெடுத்து மனிதனைப் படைத்தான் என்று பொருளாகும். (இதற்கு வரும் நபிமொழிகளில் விளக்கம் உள்ளன)

குர்ஆன் வசனங்களில் முரண்பாடு உள்ளன எனக் கேள்வியில் எழுதியுள்ள 3:59, 11,61 இருவசனங்களில் விளங்கிய புழுதி என்றாலும், பூமி என்றாலும் மனிதன் மண்ணிலிருந்து படைப்பட்டான் என்கிற கருத்தையே கூறுவதால் அதற்கென தனி விளக்கம் தேவை இல்லை! கேள்வியில் எழுதியுள்ள 19:67வது வசனம், மனிதன் படைக்கப்படுவதற்கு முன் எப்பொருளாகவும் இல்லாமலிருந்தான் எனக் கூறி, மனிதன் ஒன்றுமாக இல்லாமலிருந்து பின்னர் உருவாக்கப்பட்டான் என்பதால் 19:67வது வசனத்திற்கும் தனி விளக்கம் தேவை இல்லை!

மனிதன் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான்

(தட்டினால்) ஓசை வரக் கூடிய காய்ந்த கருப்புக் களிமண்ணால் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல்குர்ஆன் 15:26, 28, 55:14)

நிச்சயமாக நாம் (முதல்) மனிதரைக் களிமண் எனும் மூலத்திலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)

...நான் அவரை (ஆதமை) விடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:12 மேலும் பார்க்க, 15:33, 38:76 வசனங்கள்)

முதல் மனிதர், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களை, இறைவன் மண்பாண்டம் செய்யும் களிமண்ணினால்  வடிவமைத்தான் என்பதை 7:12, 15:26, 33, 23:12, 38:76, 55:14 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம். மனித வடிவத்தின் மூலப் பொருள் களிமண். (23:12)

நபிமொழி

அல்லாஹ், ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிகப்பு நிறமுடையோர், வெண்மை நிறமுடையோர், கருப்பு நிறமுடையோர், இவற்றுக்கு இடைப்பட்ட நிறமுடையோர் எனவும், நளினமானவர், திடமானவர், தீயவர் மற்றும் நல்லவர் உருவாயினர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) (நூல்கள் - திர்மிதி 2879, அபூதாவூத், அஹ்மத்)

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 5722, அஹ்மத்)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணினால் வடிவமைத்துப் படைக்கப்பட்டார். மனித இனத்தில் தோன்றிய முதல் மனிதரின் படைப்பிற்கு எது மூலப் பொருளாக இருந்ததோ அதுவே அவரது வம்சாவழிக்கும் மூலப் பொருளாக இருக்கும். இதேக் கருத்தையே வரும் வசனங்களும் கூறுகின்றன.

அவனே உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான்... (அல்குர்ஆன் 6:2)

...அவன்தான் பூமியிலிருந்து உங்களை உருவாக்கி, அதில் உங்களை வசிக்கவும் செய்தான்... (அல்குர்ஆன் 11:61)

மண்ணில் இருந்து உங்களை அவன் படைத்திருப்பதும் பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (அல்குர்அன் 30:20)

மனிதர்களே! (மரணித்த பின்) எழுப்பப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும், பின்னர் சதைப்பிண்டத்திலிருந்தும் உங்களைப் படைத்தோம்... (அல்குர்ஆன் 22:5, மேலும் படிக்க, 40:67)

(நம்பிக்கையாளரான) அவரது தோழர் இவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, ''உன்னை மண்ணாலும், பின்னர் இந்திரியத் துளியாலும் படைத்து, பின்னர் உன்னை ஒழுங்குற அமைத்தவனையா நீ நிராகரிக்கின்றாய்'' என்று இவரிடம் கேட்டார். (அல்குர்ஆன் 18:37)

மனித இனத்தின் முதல் மனிதர் மண்ணால் வடிவமைக்கப்பட்டுப் படைக்கப்பட்டார். ஆனால், முதல் மனிதரைத் தவிர மற்ற மனிதர்கள் எவரும் நேரடியாக மண்ணால் படைக்கப்படவில்லை. அப்படியிருக்க மேற்கண்ட 6:2, 11:61, 30:20, 22:5,  40:67 ஆகிய வசனங்கள் ''உங்களை மண்ணில் இருந்து படைத்தோம்'' என்று பன்மையிலும், 18:37வது வசனம் ''உன்னை மண்ணில் இருந்து படைத்தான்'' என்று ஒருமையிலும் கூறுவது சரியா? என்ற சந்தேகம் எழலாம். கீழ்காணும் வசனங்களில் இதற்கான விளக்கம் பெறலாம்.

மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்... (அல்குர்ஆன் 4:1 மேலும் படிக்க, 7:89, 49:13 வசனங்கள்)

முதல் மனிதரிலிருந்தே மனித இனப் பெருக்கம் துவங்குவதால் முதல் மனிதரின் வழித் தோன்றல்களில் ஒவ்வொரு மனுஷன் மனுஷியிடமும் ஆதி தந்தையின் மூலச்சத்து இருக்கும் என்பதே இதன் பொருளாகும்.

அடுத்த ஐயங்களுக்கான விளக்கங்கள் தொடர்ந்து பதிவாகும், இன்ஷா அல்லாஹ்...

குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3) >>

<< குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)

Comments   

லறீனா அப்துல் ஹக்
0 #1 லறீனா அப்துல் ஹக் 2012-11-04 08:51
மாஷா அல்லாஹ்! அருமையான தொடர். தொடரட்டும் உங்கள் பணி... பாரகல்லாஹு ஃபீகும்!
Quote | Report to administrator
அப்துர்ரஹீம்
0 #2 அப்துர்ரஹீம் 2012-11-06 21:48
சரியான விளக்கம்!!இருந் தாலும் சிரிய ஐய்யம் இருக்கிறது....

உடன் பிறந்த சகோதர சகோதரிகள் திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகையில் எப்படி ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களிடம் இருந்து மனித இனம் பறவியது?
Quote | Report to administrator
M Muhammad
0 #3 M Muhammad 2012-11-08 00:22
முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம், ஹவ்வா தம்பதியரின் பிள்ளைகளுக்கு, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணமுடிக்க இறைவன் அனுமதித்தான். இங்கு சகோதரன் சகோதரியை மணக்க அனுமதிக்கவில்லை யெனில் மனித இனம் அத்தோடு முடிந்திருக்கும ். அதனால் அனுமதித்து, பின்னர் மனித இனம் பெருகியதும் உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணந்து கொள்வதைத் தடை செய்து விட்டான்.
Quote | Report to administrator
Abdurraheem
0 #4 Abdurraheem 2012-11-08 08:24
தெளிவு படுத்தியதற்க்கு நன்றி சகோதரரே!!!
Quote | Report to administrator
நாகூர் மீரான்
0 #5 நாகூர் மீரான் 2012-11-14 19:02
சலாம் சகோ.

"உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் .....(21:30) "

இந்த கேள்விக்கு பதில் இல்லையே சகோ...சரி செய்து கொள்ளவும்

நன்றி !!!
Quote | Report to administrator
abdul azeez
0 #6 abdul azeez 2012-11-16 11:46
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நாகூர் மீரான் அவர்களுக்கு

// "உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் .....(21:30) " //

ஒரு பிடி மன் அதன் மூலக்கூறு என்ன? அதனுள் அடங்கியிருக்கும ் வேதிப்பொருள் தனிமங்கள் எத்தனை இப்படி ஒவ்வொன்றாக விளக்கத் தேவையில்லை நாமளாக தெரிந்து கொண்டோம். மெக்னேஷியம், இரும்பு, காப்பர், சோடியம் இன்னும் எவ்வளவோ சத்துக்கள் அடங்கியது தான் அந்த மன் அதனுள் கலவைகள் சேர்த்து ஒருமித்தது மனித உடம்பு அதற்குள் தண்ணீர் என்ற திரவமும் அடக்கம் இன்னும் அதனுள் இந்திரியம் என்ற வேறு வகையான வித்தியாசமான நீரும் உள்ளது அது கொஞ்சம் திரவத்திற்கு மாறுபட்டு வழ வழப்பானது அதை தான் அல்லாஹ் வேறு வசனத்தில் சொல்லிகாட்டுகிற ான் தட்டினால் சத்தம் வரக்கூடிய ( பிசுப் பிசுப்பான ) அந்த பிசுப் பிசுப்பான மன் உலர்ந்த மன் அல்ல நீரும் கலந்தது தான் என்பதை சகோதரர் அறியவும் குதித்து வெளியாகும் நீர் என்று இந்திரியத்தை சொல்லி காட்டுகிறான். அது சிலருக்கு நீர்த்து போகுதல் அதனால் டாக்டரை சந்தித்தல் போன்ற நிலை ஏற்படுகிறது அந்த நீர்த்து என்ற வார்த்தை நீர் அல்லவா ? ஆகையால் நீங்கள் குறிப்பிட்டு காட்டும் வசனம் மாறுபட்டது கிடையாது
மா சலாம்

அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #7 சத்தியமார்க்கம்.காம் 2012-11-16 14:37
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்...

சகோதரர் நாகூர் மீரான்,

மனிதன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டான் என்று மட்டுமே சொல்லியுள்ளோம்.

- ரத்தக்கட்டியிலி ருந்து (96:1-2)

- நீரிலிருந்து (21:30)

- கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37)

குர்ஆனில் முரண்பாடுகள் எனச் சொல்லப்பட்டுள் ள மேற்கண்ட வசனங்களுக்கான விளக்கங்கள் தொடர்ந்து வெளிவரும், இன்ஷா அல்லாஹ்...
Quote | Report to administrator
நாகூர் மீரான்
0 #8 நாகூர் மீரான் 2012-11-16 16:42
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ,சகோ.அப்துல் அஜீஸ், சத்யமார்க்கம்.க ாம்

தங்களுடைய விளக்கங்களுக்கு நன்றிகள்...!!!

வஸ்ஸலாம் ...
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #9 Dr.A.Anburaj 2013-07-20 18:19
முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம், ஹவ்வா தம்பதியரின் பிள்ளைகளுக்கு, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணமுடிக்க இறைவன் அனுமதித்தான். இங்கு சகோதரன் சகோதரியை மணக்க அனுமதிக்கவில்லை யெனில் மனித இனம் அத்தோடு முடிந்திருக்கும ். அதனால் அனுமதித்து, பின்னர் மனித இனம் பெருகியதும் உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணந்து கொள்வதைத் தடை செய்து விட்டான்.
படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இவ்வளவு அறிவு ஆற்றல் உள்ள கடவுளுக்கு அல்லாவுக்கு பல ஆண்களையும் பல பெண்களையும் மண்ணிலிருந்து படைக்க இயலாதா ? அனுமதி கொடுத்துவிட்டு அனுமதியை ரத்து செய்ய இது என்ன வியாபாரமா ? அசிங்கமாக உள்ளது. இதுபோன்ற குப்பை கதைகளை நாம் படிக்காமல் புறக்கணித்து மறக்க வேண்டும் என்பது எனது கருத்து
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #10 சாணக்கியன் 2013-07-21 06:03
Quoting Dr.A.Anburaj:
இவ்வளவு அறிவு ஆற்றல் உள்ள கடவுளுக்கு அல்லாவுக்கு பல ஆண்களையும் பல பெண்களையும் மண்ணிலிருந்து படைக்க இயலாதா ? அனுமதி கொடுத்துவிட்டு அனுமதியை ரத்து செய்ய இது என்ன வியாபாரமா ? அசிங்கமாக உள்ளது. இதுபோன்ற குப்பை கதைகளை நாம் படிக்காமல் புறக்கணித்து மறக்க வேண்டும் என்பது எனது கருத்து


ஒரு ஆன் பெண்ணிலிருந்து மனித இனம் பெருக வேண்டுமானால் அப்படித்தான் நடக்க வேண்டும். அதுதான் அந்த காலகட்டத்தில் படைத்தவனின் கட்டளை. இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், உங்கள் மூதாதையர் எங்கிருந்து வந்தனர்?. குரங்கிலிருந்து வந்தார்கள் என்று நீங்கள் சொன்னால் நான் தாராளமாக ஏற்றுக்கொள்கிறே ன்.
Quote | Report to administrator
மரைக்காயர்
+2 #11 மரைக்காயர் 2013-07-21 10:07
Quoting Dr.A.Anburaj:
இவ்வளவு அறிவு ஆற்றல் உள்ள கடவுளுக்கு அல்லாவுக்கு பல ஆண்களையும் பல பெண்களையும் மண்ணிலிருந்து படைக்க இயலாதா ? அனுமதி கொடுத்துவிட்டு அனுமதியை ரத்து செய்ய இது என்ன வியாபாரமா ? அசிங்கமாக உள்ளது. இதுபோன்ற குப்பை கதைகளை நாம் படிக்காமல் புறக்கணித்து மறக்க வேண்டும் என்பது எனது கருத்து


அன்புராசு அய்யா, இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையே நம்பிக்கைதான். அது என்ன நம்பிக்கை? இறைவன் ஒருவனே என்பதும் அவன்தான் எல்லாவற்றையும் (உங்களையும் உட்பட) படைத்தான் என்பதும் இறப்பிற்குப் பின் நாம் அவன் முன் நிறுத்தப்படுவோம ் என்பதும் அவனே இறைத்தூதர்களை அனுப்பினான் என்பதும் அவனே குர்ஆனை அருளினான் என்பதும் மேலும் இது போன்ற நம்பிக்கைகள். இவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமா என்றால் இல்லை. குர்ஆனில் எராளமான சான்றுகளை சுட்டிக்காட்டும ் அல்லாஹ், 'நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?' என்று கேட்கிறான்.

குர்ஆனே ஒரு அத்தாட்சிதான். "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள ். (4:82)" என்கிறான் அல்லாஹ்.

இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை உறுதிப்பட்ட பிறகு அவனுடைய ஒவ்வொரு சொல்லையும் மீண்டும் கேள்விக்குட்படு த்த வேண்டிய தேவை ஏற்படாது.

ஒரு சிறு உதாரணம் சொன்னால் உங்களுக்கு நன்றாக புரியக்கூடும். இன்னார்தான் உங்கள் தாய் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர ்கள் அல்லவா? அவர் உங்களை பிரசவிப்பதை நீங்கள் நேரடியாக பார்த்திராவிட்ட ாலும் அதை அருகில் இருந்து பார்த்த மருத்துவரோ மருத்துவச்சியோ குடும்பத்தவரோ சொல்வதை நீங்கள் நம்புவீர்கள். ஆனால், இன்னார்தான் உங்கள் தந்தை என்பதற்கு யார் சாட்சியம் அளிக்க முடியும்? உங்கள் தாயாரின் வார்த்தைகள் மட்டுமே அதற்கு சான்று. உங்கள் தாயின் மேல் நீங்கள் கொண்ட நம்பிக்கையில் அவர் யாரை உங்கள் தந்தை என்று சொல்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா? அல்லது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்துதான் நம்புவேன் என்பீர்களா?

உங்களுடைய பிறப்பின் ரகசியமே ஒரு நம்பிக்கையில்தா ன் இருக்கிறது எனும்போது இறைவனின் இருப்பைக் குறித்து நீங்கள் அவநம்பிக்கைக் கொண்டிருக்கிறீர ்களே!!!! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
Quote | Report to administrator
மரைக்காயர்
+1 #12 மரைக்காயர் 2013-07-21 15:33
Quoting Dr.A.Anburaj:
படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இவ்வளவு அறிவு ஆற்றல் உள்ள கடவுளுக்கு அல்லாவுக்கு பல ஆண்களையும் பல பெண்களையும் மண்ணிலிருந்து படைக்க இயலாதா ? அனுமதி கொடுத்துவிட்டு அனுமதியை ரத்து செய்ய இது என்ன வியாபாரமா ? அசிங்கமாக உள்ளது. இதுபோன்ற குப்பை கதைகளை நாம் படிக்காமல் புறக்கணித்து மறக்க வேண்டும் என்பது எனது கருத்து


அருவருப்பு என்பது கால சூழ்நிலைக்கேற்ப மாறக்கூடியது. எவ்ளோ பெரிய டாக்டர் நீங்க.. இந்த சின்ன விஷயத்தைக்கூட புரிஞ்சுக்காம இருக்கீங்களே? இன்னொரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. ஒரு விந்துத்துளியில ிருந்து உருவான நீங்கள் அதுவே ஒரு சிறு துளி உங்கள் ஆடையில் பட்டுவிட்டால் 'ஆகா.. உன்னதமான உயிர்க்கருவைத் தாங்கிய அற்புதத்துளி இது' என ஆடையெங்கும் பூசிக் கொள்வீர்களா? அருவருப்படைந்து உடனே அதைச் சுத்தம் செய்ய நாடுவீர்கள்தானே ? விந்துத்துளி அருவருப்பென்றால ் நாமனைவரும் அந்த அருவருப்பிலிருந ்து உருவானவர்கள்தான ே?
Quote | Report to administrator
ANWAR
0 #13 ANWAR 2013-07-22 14:01
Asalam மரைக்காயர்,

Good Explainations.

I think Dr Anburaj is Atheist, but still your soft/smart explainations may (insha Allah) get rewards.
Quote | Report to administrator
Dr.A.Anburaj
0 #14 Dr.A.Anburaj 2013-07-22 14:55
பழைய காலத்தில் சிந்தனை சக்தி உள்ளவர்கள் தன்னைச்சுற்றி உள்ள உலகத்தின் நடப்புகளை பற்றி பலவிதமான அனுமானங்களை உருவாக்கினான்.அ தில் சில வருங்காலத்தில் உண்மையானது.பல பொய்யானது. இந்தியாவில் உலகம் உருண்டை என்பதை 7000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் உலகம் எப்படி அந்தரத்தில் மிதக்கின்றது என்பதை அவன் அறியவில்லை.எனவே பெரிய 4 யானைகள் உலக உருளையைத்தாங்கி க் கொண்டிருக்கின்ற து. அதை ..அது தாங்குகிறது என் ஒரு படடியல் போட்டான். புவியிர்ப்பு விசையை கண்டுபிடிக்க துவங்கிவிட்டான் என்பதற்கு அதுவே விடையாகும். அணுவைப்பிளக்க முடியாது என்றான்.பின் ஒருவர் பிளந்து காட்டினார். பிளக்க முடியாது என்றவன் முட்டாள் அல்ல. அது போல மனித இனம் தோன்றிய விதம் குறித்து ஆதி மனிதனின் யுகமே-Hypothesi s -தான் ஆதாம் கதை.அதிக எண்ணிக்கையில் ஆண் பெண்களைப்படைத்த ு இருந்தால் ஒழுக்கவிதிகளில் மாறுபட்ட முரண்பட்ட ஒரு நிலைஉலகில் தோன்றியிருக்தாத ல்லவா ? நியாயத்தீரப்புந ாளில் ஆதம் ஏவாள் காயின் ஆபேல் ஆகியோருக்கும் இக்காலத்தில் ஒருவன் சகோதரியோடு உறவு வைத்த ஒருவனைன சமமாக தீர்ப்பானா ? (Edited)
----------------------------------------
மரைக்காயர் ஐயா அவர்களே! எனது கேள்விக்கும் தங்களின் பதிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ? சம்பந்தம் இல்லையே?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்