முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

ஐயம்:
இறைவன் ஆணா? பெண்ணா?
- மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manojதெளிவு:
இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன!

"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்" (அல்குர்ஆன் 1:2)
.
"தீர்ப்பு நாளின் அரசன்" (அல்குர்ஆன் 1:4).
"அரசுகளின் அரசன்" (அல்குர்ஆன் 3:26).
"மனிதர்களின் அரசன்" (அல்குர் ஆன் 114:2).
"நானே (நித்திய) அரசன்; பூமி(யை ஆண்ட) அரசர்கள் எங்கே?" என்று அல்லாஹ் கேட்பான் (நபிமொழி-புகாரி 6519).

அகிலங்களைப் படைத்து, இரட்சித்து ஆட்சியதிகாரம் செய்யும் இறைவன், தன்னை "இறைவன்" என்றும் "அரசன்" என்றும் தன் மறையில் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். நபிமொழிகளின் சொல்லாட்சிகள் சிலவற்றிலும் இறைவன், 'அரசன்' எனக் குறிப்பிடப்படுகின்றான். நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியான "இறைவன்" என்கிற சொல்லிலும் ஆண் பால் உள்ளது!


இறைவன் உருவகமாக:

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (அல்குர்ஆன் 2:115).
அவன் பார்ப்பவன்; செவியுறுபவன் (அல்குர் ஆன் 4:58).
அல்லாஹ்வின் இரு கைகள் விரிக்கப்பட்டே இருக்கின்றன (அல்குர்ஆன் 5:64).
"அல்லாஹ் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான்!" (நபிமொழி-முஸ்லிம் 131).
"இறைவன் சிரித்துவிட்டான்" (நபிமொழி-புகாரி 6573).

மேலும், இறைவன் பார்க்கிறான், கேட்கிறான், பேசுகிறான்; அவன் இரக்கமுள்ளவன், கருணையுள்ளவன், பேரறிவாளன், விருப்பு, வெறுப்பு உள்ளவன் போன்ற இறைவனின் தன்மைகள் மனிதர்களுள் ஆண்களை ஒத்து இருக்கின்றன. மேலும், இறைமறைக்கும் நபிமொழிக்கும் பொதுவான அரபு மொழியில் இறைவன் ஆண் பாலாகக் குறிக்கப்படுகின்றான்.


எனினும்
,
மனிதர்களின் பார்வை, செவிப்புலன், பேச்சு, அறிவு, கருணை, விருப்பு, வெறுப்பு ஆகியன குறிப்பிட்ட எல்லைவரை/வயதுவரை வரையறைக்கு உட்பட்டவை; இறைவனுக்கு அவ்வாறன்று என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.

 

இறைவன் ஆண் என்றால் அவனுக்குப் பெண் துணை அவசியமல்லவா? என்கிற கேள்வி இங்கு எழலாம்.

இது நியாயமானக் கேள்வியாக இருந்தாலும், இக்கேள்விக்கு, இறைமறையின் 112வது அத்தியாயத்தில் விளக்கம் உள்ளது.


112:1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே.


112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.


112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.


112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


இறைவனின் உருவகம், உணர்வுகள் - குணம் - பண்பு இவற்றை மனிதனை ஒத்து இறைமறையும் நபிமொழிகளும் விளக்கினாலும், மனிதன் தேவையுள்ளவனாகவும், இறைவன் தேவையற்றவனாகவும் இருப்பதில் மனிதத் தன்மையும் இறைத் தன்மையும் வேறுபட்டு விடுகின்றன! இறைவன் நித்திய ஜீவன்! ஊன் உறக்கம் என அவனுக்கு எவ்விதத் தேவையுமில்லை! அதுபோல் இறைவன் ஆண் என்பதால் பெண் துணையும் அவனுக்குத் தேவையற்றுப் போய்விடுகிறது!


"குல் ஹுவல்லாஹூ அஹத் - அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! (112:1)


"அவன்" என்பதைக் குறிப்பிட அரபு மொழியில் "ஹுவ" என்ற சொல் பயன்படுத்தப்படும். இறைவன் தன்னைப்பற்றிக் கூறும்போது "ஹுவ - அவன்" என்றே சொல்லிக்கொள்கிறான். தமிழில் "அவன்" என்ற வாசகம் ஆண் பாலினத்தைக் குறித்து நிற்பதால் இறைவன் என்பவன் ஆண் பாலினம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்!


(இறைவன் மிக்க அறிந்தவன்).

Comments   

Ali Akbar
0 #1 Ali Akbar 2011-12-27 09:57
ஆதாரங்களை அணிவகுத்து ஐயங்களை அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்
மாற்று மத சகோதர்கள் / இஸ்லாமியர்களும் விளங்கி கொள்ளும்படி இருக்கிறது தொடரட்டும் உங்கள்பணி அன்புடன் மண்டபம் அலிஅக்பர்
Quote | Report to administrator
என்.ஷஃபாத் அஹ்மது
+1 #2 என்.ஷஃபாத் அஹ்மது 2012-01-02 22:13
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த பின்னூட்டத்தின் நோக்கம்: "மேலே இருக்கும் கட்டுரையின் மையக் கருத்தும் அதற்கான புரிதலும் தவறானது" என்பதைப் பற்றியது.

விளக்கம்:

1) இறைவனது பாலினம் குறித்த தெளிவான (அதாவது , "இறைவன் ஆண் ஆவான்" என்ற நேரடியான வசனங்கள்) இல்லாத காரணத்தினால், அவன் ஆணா? இல்லை பெண்ணா? என்ற முடிவுக்கு, நிச்சயமாக யாராலும் வர இயலாது. இந்த பாலினம் குறித்த முழு அறிவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அதனை விளங்குதல் சிறிய அறிவினை உடைய மனிதர்களால் முடியாது.

2) இந்த கட்டுரை முழுக்க முழுக்க வார்த்தை பிரயோகத்தை ஒட்டியே, இறைவன் ஆண் என்பதாக முடிவுறுகிறது.அ தாவது, 'அவன்','இறைவன்' ,'செய்கிறான்',' ஒருவன்' என்கிற ஆண்பால் வினைமுற்றுப் பெயர்ச்சொற்கள் இடம்பெறுவதால் இறைவன் ஆண் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை என பறைசாற்றுகின்றத ு. வெறும் வார்த்தை பிரயோகங்களை மட்டும் வைத்து பாலினம் குறித்த முடிவுக்கு வருவது தவறானதாகும்.

ஆண் அதிகாரியாக இருக்கும் ஆற்றல் படைத்தவன் என்பதாலும், ஆண் என்னும் இனம் நிர்வகிக்கும் திறன் படைத்த இனமாக இஸ்லாமிய பார்வையில் கருதப் படுவதாலும் கூட, தன்னுடைய அதிகாரத்தை பறைசாற்றவும், ஆளுமையை அறிவிக்கவும் ஏதுவாக கூட, இந்த ஆண்பால் வினைமுற்றுப் பெயர்ச்சொற்கள் இறைவனால் சொல்லப்பட்டிருக ்கலாம் (எனினும், இது இந்த அடிமையின் கருத்தே..அல்லாஹ ்வே நன்கறிந்தவன், விசாலமான அறிவுள்ளவன்). சுருக்கமாக, வார்த்தை உபயோகங்களை வைத்து நம்மால் பாலினம் குறித்த முடிவுக்கு வருதல் முடியாது !!

3) எல்லா கேள்விகளுக்கும் 'ஆமாம்' அல்லது 'இல்லை' என்பது மட்டும் சாத்தியமான பதில்கள் இல்லை. அதையும் தாண்டி, "இது இறைவன் ஒருவன் மட்டுமே அறிந்தது-
அல்லாஹ்வுக்கே வெளிச்சம்" என்பதும் முதன்மையான பதிலாகும்.

இறைவன் ஆணா? அல்லது பெண்ணா? என்னும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கும் முன்னதாக, இது பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் இதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே என்று தான் பதில் அளித்திருக்க வேண்டும். முதலில் உங்களது (வார்த்தை உபயோகங்கள் சார்ந்த) ஊகங்களை முன் வைத்துவிட்டு, கடைசியாக "இறைவன் மிக அறிந்தவன்" என ஒரு வரி இடம்பெறச் செய்வது - முக்கியமாக-இந்த விஷயத்தில் அழகல்ல. சிகரெட் கம்பெனியின் எச்சரிக்கை வாசகம் போன்றது அது.

மேலும், இறைவனது பாலினம் குறித்த முடிவுக்கு வரலாம் அல்லது வரக்கூடாது என்பதற்கு ஆதாரம் கேட்பதும் பொருத்தம் ஆகாது. காரணம், அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது, மனிதரின் ஆய்வுக்கு அவசியம் அற்றது. இறைவன் எல்லா கட்டுப்பாடுகளுக ்கும், வரைமுறைகளுக்கும ், பாலின பிரிவுகளுக்கும் , வடிவங்களுக்கும் , அவனது உருவம் குறித்த மனித மூளையின் ஆய்வுக்கும் அப்பாற்பட்டவன். இவை பற்றிய கேள்விகளுக்கு ஒரே பதில் 'அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்' என்பதே என்னுடைய கருத்தாகும்.

அன்புடன்,
என்.ஷஃபாத் அஹ்மது.
001 913 963 3745.
Quote | Report to administrator
muslim:
0 #3 muslim: 2012-01-03 08:33
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

அன்புச் சகோதரர் என்.ஷஃபாத் அஹ்மது அவர்களே, 

அருமையான விளக்கம்!

இந்த அகிலங்களைப் படைத்து ஒவ்வொன்றுக்கும ் விதிகளை அமைத்து ஒரே சீராக இயங்கவைத்துள்ளா ன் இறைவன். உயிரினங்களைப் படைத்து அவற்றில் மனிதனுக்கென்று பகுத்தறிவு வழங்கப்பட்டு முறையான வாழ்க்கை நெறி சட்டங்களை வழங்கியுள்ளான்.

இவை ஒரு மாபெரும் நிர்வாகத் திறனாளியின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறத ு. அனைத்தையும் அரசாட்சி செய்பவன் அல்லாஹ். இறைவனின் அரசாட்சி இம்மையுடன் முடிந்து விடுவதில்லை. மறுமையிலும் முறையான நீதிமன்ற விசாரணையுடன் நல்லவருக்கு வெகுமதியும், குற்றவாளிகளுக்க ு தண்டனையும் வழங்கப்படும்.

இவற்றை எழுதும்போது அல்லாஹ்வை ''அவன்'' என்று குறிப்பிடாமல் எழுத முடியவில்லை! அதுபோல் நீங்களும் அல்லாஹ்வை அவன் என்று தான் குறிப்பிட்டுள்ள ீர்கள். 'அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்' என்பது வரை!

இறைவனை ''அது'' என்று எழுதாமல் ''அவன்'' என்று ஏன் எழுதியுள்ளீர்கள ்? இதற்கு விடையறிய முற்பட்டால் குர்ஆனும், சுன்னாவும் இறைவனை ''அவன்'' என்றே அறிமுகப்படுத்து கிறது. என்பதே நமது கருத்துமாகும்!

மற்றபடி, புறத் தோற்றத்தில் மனிதனைப் போல், அவனை கற்பனை செய்தல் கூடாது! என்கிற உங்கள் கருத்தை நாமும் ஏற்றுக்கொள்வோ ம்!
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #4 சத்தியமார்க்கம்.காம் 2012-01-03 09:54
அன்புச் சகோதரர் ஷஃபாத்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

அல்லஹ்வை ஆண் பாலினமாகத் தன்னாய்வு மூலமாக இங்கு யாரும் நிறுவவில்லை. தன்னைப் பற்றிக் கூறும் அல்லாஹ்வின் சொற்களின் மூலத்திலிருந்தே அவை பெறப்பட்டன.

உங்களைப் பற்றிப் பலரும் பலவிதமாக அறிமுகம் செய்யக்கூடும். அவற்றிலிருந்து மாறுபடும் உங்களுடைய தன்னறிமுகம்தானே சரியாக இருக்க முடியும்?

தன்னைப் பற்றி அறிமுகம் செய்யும் அல்லாஹ்வின் சில வசனங்கள் இந்த ஆக்கத்தில் உள்ளன. அவற்றின் மூல மொழியிலிருந்து தங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலாவது, பால் வேற்றுமையில்லாம ல் ஒன்றிரண்டை மொழியாக்க முயன்று பாருங்கள்.

Quote:
இறைவன் எல்லா கட்டுப்பாடுகளுக்கும், வரைமுறைகளுக்கும், பாலின பிரிவுகளுக்கும், வடிவங்களுக்கும், அவனது உருவம் குறித்த மனித மூளையின் ஆய்வுக்கும் அப்பாற்பட்டவன்.
எனும் உங்கள் கருத்தில், இறைவன் பாலினப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது அடிபட்டுப் போகும்.

தங்கள் வருகைக்கும் கூடுதல் விளக்கமளிக்க வாய்ப்பளித்த தங்கள் கருத்துக்கும் நன்றி!
Quote | Report to administrator
என்.ஷஃபாத் அஹ்மது
0 #5 என்.ஷஃபாத் அஹ்மது 2012-01-03 09:55
/*இறைவனை ''அது'' என்று எழுதாமல் ''அவன்'' என்று ஏன் எழுதியுள்ளீர்கள்?*/

எழுதுவதிலோ, அழைப்பதிலோ 'அவன்' என்று தானே எழுத வேண்டும்? இறைவனும் தன்னை அவன் என்று தானே குறிப்பிடுகின்ற ான்?.

என்னுடைய கருத்து என்னவென்றால் "அவன் என்னும் சொல்லாடலை வைத்து, அல்லாஹ்வை ஆண் என நாம் முடிவு செய்ய அறுகதை அற்றவர்கள்-போது மான அறிவுத்திறனற்றவ ர்கள்" என்பதாகும்.
Quote | Report to administrator
என்.ஷஃபாத் அஹ்மது
0 #6 என்.ஷஃபாத் அஹ்மது 2012-01-03 11:03
/*தன்னைப் பற்றி அறிமுகம் செய்யும் அல்லாஹ்வின் சில வசனங்கள் இந்த ஆக்கத்தில் உள்ளன. அவற்றின் மூல மொழியிலிருந்து தங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலாவது, பால் வேற்றுமையில்லாம ல் ஒன்றிரண்டை மொழியாக்க முயன்று பாருங்கள்.*/

மொழியாக்கமல்ல நான் வலியுறுத்துவது. மொழியாக்கத்தை வைத்து, அல்லாஹ்வினது பாலினத்தை மனிதன் தீர்மானிப்பது தான் என்னுடைய பின்னூட்டத்தின் சாரம்.

சில இடங்களில் இறைவனே தனது செயலைப் பற்றி கூறுகையில் "நாமே இறக்கினோம்" என்றும், "நாம் மூசாவிற்கு உத்தரவிட்டோம்" என்றும் கூறுகின்றான். இந்த மொழியாக்கத்தை வைத்து அல்லாஹ்வினது தன்மையை மனிதன் உணர முயன்றானாயின், நஊதுபில்லாஹ், அது மாபெரும் சீர்கேட்டில் கொண்டுபோய் விட்டுவிடும்.

/*உங்களைப் பற்றிப் பலரும் பலவிதமாக அறிமுகம் செய்யக்கூடும். அவற்றிலிருந்து மாறுபடும் உங்களுடைய தன்னறிமுகம்தானே சரியாக இருக்க முடியும்?*/

ஆம், இது தான் என்னுடைய கருத்தும், அல்லாஹ்வே தன்னை ஆண் என்று அறிமுகப்படுத்தி னால் தானே அவனை ஆண் என்று தீர்மானிப்பது சரியாக இருக்கும்?
Quote | Report to administrator
சஃபி
0 #7 சஃபி 2012-01-03 17:20
சகோ. ஷஃபாத் அஹ்மது,

இந்த ஆக்கத்தில் எடுத்தாளப்பட்டு ள்ள இறைமறையின்
1:2 வசனத்தின் رب (இறைவன்) எனும் அரபுச் சொல், எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாத, தெளிவான ஆண்பால். மேலும்
1:4; 3:26; 114:2 வசனங்களில் இடம்பெற்றுள்ள مالك (அரசன்) எனும் சொல்லும் ஆண்பாற் சொல்லே.

மேற்காண்பவை அல்லாஹ்வே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டவை.

இவ்வாறின்றி இன்னும் தெளிவாக, "நான் ஆண் இறைவன்" என்றும் "ஆண் அரசன்" என்றும் அல்லாஹ் கூறியிருந்தால்த ான் இறைவனை ஆண்பால் எனச் சொல்லமுடியும் என்பதுபோல் நீங்கள் வாதிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

இந்தப் பதிவில் உள்ளது, ஒரு பிற மத அன்பரின் கேள்விக்கான மூலாதாரங்களிலிர ுந்து பெறப்பட்ட விளக்கம் என்பது எனது புரிதல்.

"நான் ஆண் இறைவன்" என்று அல்லாஹ் சொல்லாததால் இறைவன் எந்தப் பால் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது; "நான் உயர்திணை இறைவன்" என்று அல்லாஹ் சொல்லாததால் அல்லாஹ் என்பவன்/என்பது உயர்திணையா அஃறிணையா எனச் சரியாகத் தெரியவில்லை எனச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுவதை அப்படியே மொழியாக்கிக் கூறுவதற்குக் குர்ஆனிய மொழியறிவைத் தவிர, வேறு அருகதைகள் தேவையெனில் அவை யாவை? என்று விளக்குங்கள்.

மேலும், அல்லாஹ்வை ஆண் பாலாகக் குறிக்கலாகாது என்ற உங்களின் வாதத்திற்கான சான்றுகளை முன்வையுங்கள்.

தெளிவு கிடைக்கும்வரை கலந்துரையாடுவோம ், இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
என்.ஷஃபாத் அஹ்மது
0 #8 என்.ஷஃபாத் அஹ்மது 2012-01-03 19:47
சகோ சஃபி அவர்களுக்கு,

/*இந்தப் பதிவில் உள்ளது, ஒரு பிற மத அன்பரின் கேள்விக்கான மூலாதாரங்களிலிர ுந்து பெறப்பட்ட விளக்கம் என்பது எனது புரிதல்*/

முதலாவதாக,
இந்த கலந்துரையாடல், (கேள்வி கேட்ட மற்றும் பல) மாற்று மத சகோதரர்களைக் குழப்பக் கூடும் என நாம் அனைவரும் எண்ணினால், இதை தனி இழையில் கலந்துரையாடலாம்.

/*இவ்வாறின்றி இன்னும் தெளிவாக, "நான் ஆண் இறைவன்" என்றும் "ஆண் அரசன்" என்றும் அல்லாஹ் கூறியிருந்தால்த ான் இறைவனை ஆண்பால் எனச் சொல்லமுடியும் என்பதுபோல் நீங்கள் வாதிடுவது வேடிக்கையாக இருக்கிறது*/

இதில் இரண்டு வார்த்தைகள், நான் வாதிடவில்லை-கருத்தை பறிமாறுகிறேன். இதில் எதுவும் வேடிக்கை இல்லை-மிகவும் அவசியமான் கருத்து பறிமாற்றம். உரிய வார்த்தைகளைக் கையாளுதல் நலம். நிற்க,

/*"நான் உயர்திணை இறைவன்" என்று அல்லாஹ் சொல்லாததால் அல்லாஹ் என்பவன்/என்பது உயர்திணையா அஃறிணையா எனச் சரியாகத் தெரியவில்லை எனச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?*/

ஏன் இறைவனை அஃறிணை அல்லது உயர்திணை என்று இரண்டு திணைகளுக்குள் அடக்கி விட வேண்டும் என எண்ணுகிறீர்கள்? . திணைப் பிரிவுகள் இறைவனுக்கு ஏது? அவன் அஃறிணையுமல்ல..உ யர்திணையுமல்ல.. திணைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது தான் என் கருத்து. 0 அல்லது 1 என்று இறைவன் விஷயத்தில் ஏன் பார்க்கின்றீர்க ள்? ஆண் அல்லது பெண் என்று இரண்டே பிரிவுகளில் ஏன் இறைவனது பாலினத்தைப் பார்க்கின்றீர்க ள். படைப்பினங்களையன ்றி படைத்தவனுக்கு பாலினப் பிரிவுகள் கிடையாது என (ஒரு சிந்தனைக்காக கூட) ஏன் கருத்தில் கொள்ளவில்லை?

/*அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுவதை அப்படியே மொழியாக்கிக் கூறுவதற்குக் குர்ஆனிய மொழியறிவைத் தவிர, வேறு அருகதைகள் தேவையெனில் அவை யாவை? என்று விளக்குங்கள்*/

இரண்டு விஷயங்கள்:

1) அப்படியே மொழியாக்கியதில் உங்களுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. மொழியாக்கத்திலி ருந்து அவனது பாலினத்தை நாமாக தீர்மானித்ததில் தான் கருத்தில் வேறுபடுகிறோம்.

2) வேறு அருகதை - மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறியச்செய்யும் எந்த அருகதையும் இல்லை. இல்லாத ஒன்றை சொல்லுதல் இயலாது.

/*
அல்லாஹ்வை ஆண் பாலாகக் குறிக்கலாகாது என்ற உங்களின் வாதத்திற்கான சான்றுகளை முன்வையுங்கள்
*/


மார்க்க விஷயத்தில் ஒன்று இருக்கின்றது என்பதற்குத் தான் சான்று தர வேண்டுமே ஒழிய, ஒன்று இல்லை என்பதற்கு சான்று தர வேண்டியது இல்லை. "அல்லாஹ்வை ஆண் பாலாகக் குறிக்கலாம்" என்பதற்கு (ஆண்பால் வார்த்தைகள் அல்ல, ஆண் பாலாக குறிக்கலாம் எனபதற்கு )வேண்டுமானால் ஆதாரங்களை எனக்கு அறியத் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஷஃபாத்
Quote | Report to administrator
haneefm
0 #9 haneefm 2012-01-03 21:58
பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் நிர்ரஹிம்
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள ்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
முஸ்லிம் நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியும் போது திருகுர்கானின் வசனங்களும் நபி [ஸல்] அவர்களின் விளக்கத்தையும் சேர்த்து பதிவுசெய்தால் மிக எழிதகயிருக்கும் படிப்பவர்களுக்க ு!!!!!!!
Quote | Report to administrator
haneefm
0 #10 haneefm 2012-01-03 22:06
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய ்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல் லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
Quote | Report to administrator
Abdullah M
0 #11 Abdullah M 2012-01-03 23:08
Assalamu Alaikkum
Dear Brothers

Pls refer below on the subject...


13. "Why does Quran say "He" when referring to God (Allah) if God is not having gender?"

Answer:

This is similar to the above answer. The word "He" is used when referring to Allah out of respect, dignity and high status. It would be totally inappropriate to use the word "it" and would not convey the proper understanding of Allah being who Allah is; Alive, Compassionate, Forgiving, Patient, Loving, etc. It is not correct to associate the word "He" with gender, as this would be comparing Allah to the creation, something totally against the teaching of Quran.
source : islamtomorrow.com/allah.asp#13

"QURAN SAYS THERE IS NOTHING LIKE HIM" CH 112 : Verse 4 ( its obvious here too HIM is used as respect, not as masculine which will contradict the meaning of the verse itself which is Pillar of Islam.)
Quote | Report to administrator
muslim:
0 #12 muslim: 2012-01-04 09:12
இழையின் கலந்துரையாடல் தமிழ்மொழி கற்க உதவின, நன்றிகள்!
Quote | Report to administrator
அபூ அதுல்லாஹ் முஹம்மது யூசுஃப் இப்னு நூர் அஹமது ஸலஃபி
0 #13 அபூ அதுல்லாஹ் முஹம்மது யூசுஃப் இப்னு நூர் அஹமது ஸலஃபி 2012-01-05 11:52
42:11 فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

//அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.//(42.11)

அன்பு சகோதரர்களே....அ ல்லாஹ்வை பற்றி அறிவது என்பது ஈமான் சார்ந்த, இஸ்லாமிய அடிபடை(அகிதாவில ்) ஒன்று எனவே அல்லாஹ்வை பற்றி அறிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்தி உலமாக்களான ஷெஹுல் இஸ்லாம் இப்னுதய்மியா அவர்களின் கிதாப் அகிததுல் வாசிதியா என்ற கிதாபை வாங்கி படித்து இஸ்லாமிய அகிதாவை அறிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்...

அல்லாஹ் அஃலம்....
Quote | Report to administrator
ரிஃபாத். A.R
0 #14 ரிஃபாத். A.R 2012-01-05 23:27
‎52.525252 5555444423332'அ னுமதிக்கப்பட்டவ ையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாத வையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும ் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கு ம் தம் மானம் மரியாதைகளுக்கும ் களங்கம் ஏற்படுத்துவதிலி ருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிட மானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாக ும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்hடல் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால ் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
Bukhari Volume :1 Book :2 , No: 52
Quote | Report to administrator
புகாரி
0 #15 புகாரி 2012-06-03 00:34
இந்தப் பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரையை அப்படியே தருகிறது. தமிழை நேசிக்கும் நான் இதை மொழியாக்கம் செய்ய நேரமில்லாத சங்கடத்தில் அப்படியே இடுகிறேன். அதற்காக வருந்துகிறேன்.

www.irf.net/.../

Is Allah Masculine in Gender

Question:
Why do we quote Allah (swt) as - Him/His ?

- Jameela Arif


Answer:
a) The Arabic word 'Allah' has no gender. The Arabic grammar has only two genders, male and female and male gender is of two types:

1. Masculine Haqeeqi i.e. Real, which is used to denote the masculine gender in humans, animals.

2. Masculine Majazi i.e. Unreal, wherein it is used as Masculine but in reality it is not so e.g. (Angels) Malak, Layl (Night), Bab (door). The word Allah (swt), too falls in the second category i.e. Masculine Majazi.

The English language has got three genders; male, female and neutral. So if we translate the Arabic word 'huwa' into English, it can be translated as 'he' or 'it'. And the Arabic word 'hiya' can be translated as 'she' or 'it'.

Allah (swt) is unique and cannot be referred as 'it' in English, since Allah (swt) has no gender, neither male nor female or neutral.

Some people may argue that the Arabic word 'huwa' and 'hiya' both can be used for 'it' or neutral gender, then why Allah has used 'huwa' and not 'hiya' ?

In Arabic grammar there are certain rules and criteria for feminine gender. First, if it is female by nature, like the word mother (ummum), it becomes feminine in gender. Allah is not a female. Second, if it ends with the third Arabic letter 'ta' like 'mirwahtun' (fan), it becomes feminine. The Arabic word 'Allah' doesn't end with 'ta' so it cannot be feminine. Third, if the word ends with 'Alif Mamduda' (big Alif), it becomes feminine. But the Arabic word 'Allah' doesn't end with 'Alif Mamduda' so, it cannot be feminine. And lastly, if the object occurs in pairs, like pairs of the body, e.g. 'Ainun' (eyes), 'yadun' (hands), they are considered feminine. But Allah (swt) says in the Glorious Qur'an in Surah Ikhlas, chapter 112, verse 1"
Quote | Report to administrator
abdul azeez
+1 #16 abdul azeez 2012-06-03 11:15
அஸ்ஸலாமு அலைக்கும். அன்புச் சகோதரர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ''பால்'' இனம் குறித்து விவாதிக்காதீர்க ள் என்று கேட்டுக் கொள்கிறேன்
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
fareeth
0 #17 fareeth 2013-06-24 18:44
சகோதரர்களே ! இறைவனின் பாலினம் குறித்து விவாதிப்பது பொருத்தமானது அன்று . மனிதன் உள்ளிட்ட படைபினங்களுக்கே ஆன் -பெண் என்ற பாலின வேறுபாடு உள்ளது ,தேவையும் கூட . ஆகவே நாம் அறியாத ஒன்றை மறைவான ஒன்றை , குரான் ஹதீசில் நேரடியாக குறிப்பிட படாத ஒன்றை குறித்து விவாதிப்பது குப்ரில் கொண்டு போய் விட்டு விடலாம் ! . கவனமாக ஆய்வு செய்யுங்கள் பின் பகிருங்கள் .
Quote | Report to administrator
Sadiq
0 #18 Sadiq 2013-06-25 10:44
என்ன கொடுமை சார் இது !!!

அரபி மொழியில் எல்லாப் பொருட்களும் (உயிருள்ளவையும் மற்றும் உயிர் அல்லாதவையும்) எதாவது ஒரு பாலினத்தைக் கொண்டே குறிக்கப்படும். நாற்காலி, பேனா, புத்தகம இவை எல்லாமே மொழி இலக்கணப்படி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் கூறப்படும். அரபி பாஷையில் "அது" என்ற ஒரு வார்த்தை கிடையாது.

உதாரணமாக குர் ஆன் என்பது "அவன்" என்று அரபியில் கூறப்படும். அதற்காக குர்ஆன் ஆண் பாலினம் என்று கூறுவது மடமையாகும்.

“There are no people who went astray after having been guided except for indulging in disputation.” (al-Tirmidhi). நேர்வழி பெற்ற பின்னரும் வழிகேட்டின்பால் சென்றவர்கள் வீண் விவாதம் செய்தவர்கள் அன்றி வேறு எவருமில்லை.

The Messenger of Allah ﷺ repeated three times, “Those who search deeply for confusing questions have perished.” (Muslim)

குழப்பத்திற்கான கேள்விகளைத் தேடுபவர்கள் அழிந்தார்கள். (நபி மொழி)

“He (Satan) always commands you to do what is evil and indecent, and to say things about Allah that you do not really know.” Quran: 2:169

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றை யும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். குர்ஆன் : 2:169

ஆகவே, உயிர் உற்பத்திக்காக இறைவன் இவ்வுலகில் உயிர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தான். இது இறைவன் உயிர்களுக்கு ஆக்கி வைத்த விதி. இந்த விதியை அந்த இறைவனுக்கே பொருத்திப் பார்ப்பது அவனுக்கு இணை வைக்கும் செயலாகும்.

குர் ஆன் கூறுகிறது: நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான ்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள ோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள் . (குர் ஆன் 4:48)

மேலும்:

"Indeed shirk is the greatest oppression." [Luqman: 13]

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவ ீராக). (குர் ஆன் 31:13)


அன்புடன் சாதிக்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்