முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

http://familysecuritymatters.org/imgLib/20111123_MeccaSign1.jpgபதில்:  முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்பது இவ்வுலகை படைத்த இறைவனால் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியாக வழங்கப்பட்ட மார்க்கமாகும். அதன்படி இவ்வுலகம் முழுமையும் ஒரு சமுதாயமாகக் காண்கிறது இஸ்லாம். அதாவது இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே தலைவனாக கொண்டு அவன் வகுத்த சட்டதிட்டத்தின் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஓர் ஆட்சியினை நிர்வகிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) இச்சட்டதிட்டங்களை கடைபிடித்தே ஆக வேண்டும். அதனை மீறுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆகமாட்டார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் விஷயத்தில் இஸ்லாமிய கொள்கைபடி நடந்து கொள்ளவேண்டும் என நிர்ப்பந்தம் செய்வது கூடாது. அதாவது ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அதன் படி நடக்க வேண்டும் என நிர்பந்திப்பதோ அல்லது அவ்விஷயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பதோ கூடாத காரியமாகும்.

இஸ்லாத்தின் இந்த அடிப்படையான கொள்கையை மனதில் வைத்து மேற்கண்ட கேள்வியை அணுகுவோம்.

கேள்வியில் காணப்படும் இரண்டு இடங்களான மக்கா மற்றும் மதீனாவில் சில சட்டதிட்டங்களைப் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எடுத்துக்காட்டாக மக்காவின் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் நோவினை செய்வது அனுமதிக்கப்படாத காரியமாகும். செடி கொடிகளில் உள்ள இலைகளை கூட தகுந்த காரணமின்றி பறிப்பது கூட, பரிகாரம் செய்தாலொழிய பாவத்தைப் பெற்றுத் தரக்கூடிய குற்றமாகும்.

முஸ்லிமல்லாத ஒருவர் அவர் இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்காத காரணத்தினால் இஸ்லாமிய அடிப்படையின் படி இச்சட்டங்களைப் புரிந்து கொண்டு அதனைப் பேணி நடக்க அவரை நிர்பந்திப்பது முடியாத காரியம் மட்டுமல்லாது நடைமுறைக்கும் ஒத்து வராத செயலாகும்.

ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம்

ஒரு நாட்டில் இராணுவ கேந்திரம் போன்ற சில முக்கிய பகுதிகளில் அந்நாட்டின் குடி மக்களுக்கே உள்நுழைய விதிக்கப்பட்டிருக்கும் தடையினை எடுத்துக் கொள்வோம். ஒருவர் இங்கு உள்ளே நுழைய வேண்டுமெனில் அவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதியுள்ள ஒருவர் அங்கு உள் நுழைந்த பின் அங்குள்ள சட்டதிட்டத்திற்கு அவரும் கட்டுபட்டவர் ஆகி விடுவார். மீறினால் அங்குள்ள முறைப்படி ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளாக்கப்படுவார்.

அதுபோன்ற ஒரு விதிமுறை தான் மக்கா மற்றும் மதீனாவின் விஷயத்திலும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குள் வர எண்ணும் எவருக்கும் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டால் தான் உள்நுழைய அனுமதிக்கும் ஆணையை (Visa) வழங்குகிறது. அதேபோல,

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் மதினாவிற்கும் செல்ல விரும்புபவர் "இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே, முஹம்மது நபி அந்த இறைவனின் தூதர் என நான் நம்புகிறேன்" என்ற பொருள் படும் "அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற வாசகத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தன் உதடுகளால் அதனை மொழிய வேண்டும். இந்த ஓர் எளிய நிபந்தனையை ஏற்று அவர் அதனை கூறிவிட்டால் அங்குள்ள சட்டத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். எனவே அவரும் அந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர் ஆகிவிடுவார். பின்னர் அவர் அங்குள்ள சட்டத்தை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இயலக்கூடிய காரியமாகி விடும்.

எப்படி தான் விதித்த விதிமுறையை ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு நாடு உள் நுழைய அனுமதிப்பதில்லையோ, அதே போல மேற்கண்ட நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாத முஸ்லிமல்லாதவர்களை அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட நிர்பந்திப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடாத காரியமாதலால் தான் அங்கு முஸ்லிமல்லாதவர்களுக்கு பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Comments   

சிவா
0 #1 சிவா -0001-11-30 05:21
//எப்படி தான் விதித்த விதிமுறையை ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு நாடு உள் நுழைய அனுமதிப்பதில்லை யோ, அதே போல மேற்கண்ட நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாத முஸ்லிமல்லாதவர் களை அங்குள்ள சட்டத்திற்கு கட்டுப்பட நிர்பந்திப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடாத காரியமாதலால் தான் அங்கு முஸ்லிமல்லாதவர் களுக்கு பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.//

சரி. வெட்ட வந்த ஒரு காஃபிர் கூட குரான் ஒலி கேட்டு முஸிலிம் ஆக மாறின வரலாறு இல்லையா? அதுபோல் ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்?
Quote | Report to administrator
அபூ முஹை
0 #2 அபூ முஹை -0001-11-30 05:21
//சரி. வெட்ட வந்த ஒரு காஃபிர் கூட குரான் ஒலி கேட்டு முஸிலிம் ஆக மாறின வரலாறு இல்லையா? அதுபோல் ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்?//

சகோதரர் சிவா அவர்களின் ஆலோசனையில் இஸ்லாத்தின் வரம்பு மீறப்படுகிறது.

வெட்ட வந்தவர் குர்ஆன் ஓதல் கேட்டு முஸ்லிமானார் என்பது போல், முஸ்லிமல்லாதவர் கள் மக்கா, மதீனா எனும் நகருக்குள் செல்ல அனுமதியில்லை என்பதும் வரலாறு. முஸ்லிமல்லாதவர் கள் இரு நகருக்குள் செல்லத் தடை செய்தது அகிலங்களின் இறைவன் வகுத்தக் கட்டளை. தோன்றும் பொழுது அழித்து விட்டு எழுதிக்கொள்ள இஸ்லாம் மனித மார்க்கமல்ல. அதனால் முஸ்லிமல்லாதவர் கள் மக்கா, மதீவுக்குள் செல்வதை முஸ்லிம்கள் சுயமாக மறுக்கவில்லை, இறைவனின் கட்டளை எதுவோ அதையே நிறைவேற்றி வருகின்றனர்.

சரி, காபாவில் நிறைவேற்றப்படும ் கிரியைகளைப் பார்த்து ஒரு காஃபிர் முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றால் மக்கா, மதீனா இரு புனிதத்தலங்களின ் நேரடித் தொலைக்காட்சிகள ைக் கண்டு மாறிலாமே!

தர்க்க ரீதீயாக:
ஒரு வாதத்துக்கு, காபாவில் நிறைவேற்றப்படும ் கிரியைகளை நேரில் கண்டால் ஒரு காஃபிர் முஸ்லிமாக மாறும் வாய்ப்பு உள்ளது போல், மக்காவுக்குள் காஃபிர்களை அனுமதித்தால் மீண்டும் அங்கு சிலை வணக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் காஃபிர்களில் நிர்வாணத்தைப் புனிதமாகக் கருதும் ஒரு கூட்டம் உண்டு.
இவர்களை காபாவின் எல்கைக்குள் அனுமதித்தால் அங்கும் இவர்கள் ஆடைகளைக் களைந்தே கிரியைகளை நிறைவேற்றுவார்க ள்.

இஸ்லாம் அனுமதித்த ஆடையலங்காரத்துட ன் ஆண்களும், பெண்களும் கிரியைகளை நிறைவேற்றும் காபாவில், ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு காஃபிர் நுழைவது எவ்வளவு பெரிய விபரீதம்!

ஓரிறைக் கொள்கையை மட்டுமே நிறைவேற்ற வேண்டிய காபாவில் நுழைந்து விட்ட சிலை வணக்கமும், நிர்வாண வலமும் இறுதி இறைத்தூதரால் அப்புறப்படுத்தப ்பட்டு, இவைகள் மீண்டும் நுழைய வாய்ப்புள்ள எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டது. அதன் எந்த வாசலையும் சிவா போன்றவர்கள் முட்டித் திறக்க முயற்சிக்க வேண்டாம். முறையான திறவுகோல் கொண்டுத் திறந்து வாசலில் நுழையுங்கள் என அன்புடன் அழைக்கப்படுகிறா ர்கள் நன்றி!
Quote | Report to administrator
சிவா
+1 #3 சிவா -0001-11-30 05:21
//மேலும் காஃபிர்களில் நிர்வாணத்தைப் புனிதமாகக் கருதும் ஒரு கூட்டம் உண்டு.
இவர்களை காபாவின் எல்கைக்குள் அனுமதித்தால் அங்கும் இவர்கள் ஆடைகளைக் களைந்தே கிரியைகளை நிறைவேற்றுவார்க ள்.

இஸ்லாம் அனுமதித்த ஆடையலங்காரத்துட ன் ஆண்களும், பெண்களும் கிரியைகளை நிறைவேற்றும் காபாவில், ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு காஃபிர் நுழைவது எவ்வளவு பெரிய விபரீதம்!//

நீங்களாக கற்பனை கட்டிக்கொண்டு விட்டால் என்ன வேணாலும் சொல்லிக் கொள்ளலாம். இச்லாம் பரந்தமனப்பான்மை கொண்டது என்றார்கள் அதனால் தான் கேட்டேன். நீங்கள் உயிராக மதிக்கும் ஒரு இந்து கையில் புனித குரானை கொடுத்து மட்டும் படிக்க சொல்கிறீர்கள். அதை அவன் படித்தானா இல்லை வேற எதாவது செய்தானா என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவன் படித்து மனம் மாறி முசுலிமுக்கு வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்கிறீ ர்கள். அதைப்போல் இதையும் முன்வைத்து சவ்தியினுள் எங்களையும் அனுமதிக்க சொல்லி முசுலிம்கள் போராடலாமே?
Quote | Report to administrator
அபூ முஹை
+1 #4 அபூ முஹை -0001-11-30 05:21
//ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்?//

மக்காவுக்குள் முஸ்லிம் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டும் என வைத்த மேற்கண்ட சிவா என்பவரின் வாதத்திற்கு எதிராக காஃபிர்களை மக்காவுக்குள் அனுமதித்தால் அதிலுள்ள பாதகமாக சிலை வணக்கமும், நிர்வாண வழிபாடும் ஏற்படும் என்று எழுதியிருந்தோம ். அதை அவர் புரிந்து கொள்ளாமல், மேற்கொண்டும் அறியாமை வாதத்தை வைத்திருக்கிறார்.

//ஒரு இந்து கையில் புனித குரானை கொடுத்து மட்டும் படிக்க சொல்கிறீர்கள். அதை அவன் படித்தானா இல்லை வேற எதாவது செய்தானா என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவன் படித்து மனம் மாறி முசுலிமுக்கு வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்கிறீ ர்கள். அதைப்போல் இதையும் முன்வைத்து சவ்தியினுள் எங்களையும் அனுமதிக்க சொல்லி முசுலிம்கள் போராடலாமே?//

போராடலாமே (!?)

அதாவது, காஃபிர்களையெல்ல ாம் மக்காவுக்குள் அனுமதிக்க வேண்டுமென, இறைவனுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும் என்கிறார்.

யாருக்கு எதிராக இவர் போராட்டத்தைத் துவக்கச் சொல்கிறார் என்பது சிந்தனைக்குரியது.

புனிதத் திருக்குர்ஆன், அகிலத்திற்கெல்ல ாம் அருட்கொடையாகும ் - நல்லுபதேசங்களாக ும் என்று தன்னை அறிமுகம் செய்கிறது. (பார்க்க: 012:104. 021:107) அதனால் உலகளாவிய நிலையில் திருக்குர்ஆனை முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்கலாம், படித்து நேர்வழி பெறலாம் என்கிறோம்.

''மஸ்ஜித் ஹராமுக்குள் - காபாவின் எல்கைக்குள்'' முஸ்லிம் அல்லாதவர்களை அனுமதிக்க கூடாது என்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது . (பார்க்க் 009:028) அதனால் இதுவும் இறைவனின் கட்டளை என்பதால் காஃபிர்கள் காபாவின் எல்கைக்குள் செல்வதை முஸ்லிம்கள் அனுமதிப்பதில்லை .

இங்கு இறைவனின் இரண்டு கட்டளைகளுக்கும் முஸ்லிம்கள் கீழ்படிகிறார்கள ் என்று கொள்க!

இப்போ சொல்லுங்கள், திருக்குர்ஆனுக் கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும் என்று சிவா சொல்வது சரியா அறியாமையா?

காஃபிர்களையெல்ல ாம் மக்காவுக்குள் அனுமதிப்பதுதான் பரந்த மனப்பான்மை என்றால் இறைவனுக்கெதிரான அந்தப் பரந்த மனப்பான்மை முஸ்லிம்களுக்கு வேண்டாம் என்பதை சிவா புரிந்து கொள்வாராக!
Quote | Report to administrator
மு முஹம்மத்
0 #5 மு முஹம்மத் -0001-11-30 05:21
சகோதரர் சிவா அவர்களே

//சரி. வெட்ட வந்த ஒரு காஃபிர் கூட குரான் ஒலி கேட்டு முஸிலிம் ஆக மாறின வரலாறு இல்லையா? அதுபோல் ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்?//

இங்கு தாங்கள் வைத்த கருத்துக்கு அபு முஹை அவர்கள் அழகாக விளக்கம் அளித்துள்ளார்கள ். என் மனதில் பட்ட் ஒன்றை மட்டும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

வெட்ட வந்த காபிர் குர் ஆன் ஒலியை கேட்டு முஸ்லிம் ஆகவில்லை அவரது தாய்மொழியான அரபியில் குர் ஆனின் வசனங்களின் உண்மையான நிகரற்ற பொருளை உனர்ந்து கருத்தால் ஈர்க்கப்பட்டு (இறைவனின் அருளால்) முஸ்லிம் ஆனார் என்பதே அந்த உண்மை இது இரண்டாம் கலீஃபா எனப்படும் உமர்(ரலி) அவர்கள் குறித்த சம்பவம் ஆகும். இன்றும் பல மாற்று மத சகோதரர்கள் இதை பொருளுடன் அணுகியதால் ( இதை குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அணுகியவர்களில் சிலர் உட்பட) இறைவன் அருளால் முஸ்லிம்களாக இறைமார்க்கத்தில ் மீண்டுள்ளார்கள் என்பதும் உண்மையாகும்.

மேலும் தங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் இதே தளத்தில் மாற்றுமதச் சகோதரர்களுக்கு என்ற கேள்வி பதில் பகுதியில் ஒரு விளக்கம் உள்ளது அதையும் பார்வையிடுங்கள்.

தாங்கள் உண்மையை நாடினால் தங்களுக்கு அது கிடைக்க நாடி பிராத்திக்கும் தங்கள் சகோதரன்.

மு முஹம்மத்
Quote | Report to administrator
மஸ்தூக்கா
+1 #6 மஸ்தூக்கா -0001-11-30 05:21
சகோதரர் சிவா அவர்களே தங்கள் கோரிக்கை நியாயமானது தான். தங்கள் நல்ல நோக்கத்தை புரிய முடிகிறது. சகோதரர் அபூ முஹை அவர்கள் சொல்வது போல் தொலைக் காட்சி ஒளிபரப்பில் பல்வேறு இன நிற மொழிகளை எல்லாம் கடந்து அந்த இறையில்லத்தில் உலக முஸ்லிம்கள் பேணும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தை யும் கண்டு மகிழுங்கள் அதிசயித்துப் போவீர்கள். தங்கள் நியாயமான கோரிக்கைக்கும் விடை கிடைக்கும் ஓரிறைக் கொள்கையின் உயர்ந்த தத்துவத்தை உள்ளத்தால் உணருங்கள். பிறகென்ன ஜாம்ஜாமென்று மக்காவின் இறையில்லத்தில நீங்கள் நுழையலாமே. இரு கரம் நீட்டி வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோ மே
Quote | Report to administrator
இறை நேசன்
0 #7 இறை நேசன் -0001-11-30 05:21
சிவா அவர்களின் கோரிக்கை வரவேற்கத்தக்கது.

உண்மையிலேயே நல்ல எண்ணத்தில் தான் மேற்கண்ட கேள்வியைத் தாங்கள் கேட்டுள்ளீர்கள் எனில், சகோ. அபூ முஹை கூறியது போன்று தொலைக்காட்சியில ் அங்குள்ள காட்சிகளைக் கண்டு கொண்டால் போதுமே.

அப்புறம் இஸ்லாத்தைக் குறித்து நேரில் அனுபவரீதியாக அறிந்து கொள்ள ஆவல் எனில் கூறுங்கள். உங்களிடையே இஸ்லாத்தை வாழ்ந்து போதிக்க உங்கள் பகுதியிலேயே பல முஸ்லிம் சகோதரர்கள் தயாராக வருவார்கள்.

இனி, இவை எல்லாவற்றையும் விடுத்து மக்காவினுள் நுழைய அனுமதித்தால் தான் ஆயிற்று எனத் தாங்கள் கூற வந்தால்,

மிக எளிய வழி: தாங்கள் ஒருவார்த்தை நாவினால் 'லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மது ரசூலுல்லாஹ்' என சாட்சி கூறுகின்றேன் என்று மட்டும் கூறி விடுங்கள். அதன் பின்னர் தாங்கள் விரும்பும் இடம் எல்லாம் மக்காவினுள் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம்.

(மேற்கண்ட ஒரு நிபந்தனையைத் தங்களை இஸ்லாத்தில் நிர்பந்தமாக ஆக்குவதாகத் தாங்கள் கருதினால்.... அது மிகப் பெரியத் தவறாகும். அப்பகுதிக்கென உள்ள சட்ட திட்டங்களை நிறைவேற்ற தாங்கள் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத ் தாங்கள் பேண வேண்டும் என நிர்பந்திப்பது நியாயமானது அல்ல எனத் தாங்களே கூறுவீர்கள். தலைவேதனையைப் பிடித்து தலையில் வைத்துக் கொண்டு என ஒரு பழமொழியைக் கேட்டிருப்பீர்க ள். அங்குள்ள சட்டதிட்டங்களுக ்கு ஒத்துக் கொள்ளாத ஒரு முஸ்லிம் அல்லாதவரை உள்ளே அனுமதித்து விட்டுப் பின்னர் அவர் அந்தச் சட்டத்தை அங்கு மீறும் பொழுது குத்துதே, குடையுதே எனக் கூறுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? எனவே தான் மேற்கண்ட நிபந்தனை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

அன்புடன்
இறை நேசன்.
Quote | Report to administrator
Mohammed
0 #8 Mohammed -0001-11-30 05:21
சிவா அவர்களே,
இதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் , நம்ம நாட்டில் உள்ள ஒரு சில வழிபாட்டு தளங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் .. அது அந்த வழிபாட்டு தளத்துடைய கட்டுபாடு , அதே மாதிரி தான் இதையும் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.மக்கா , மதினா உக்கு உண்டான சில கட்டுபாடு அவளவு தான்

உங்களுகஅக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்தவனாக ....
Quote | Report to administrator
ரக
0 #9 ரக 2011-02-12 17:32
சிவா அவர்கலெ ஒரு சில இன்து கோவில்கலுக்கு இன்துக்கல் னுலய்ய முடிய வில்லய் தயவு ஸெய்து இன்துக்கல் இன்து கோவிலில் னுலய அனுமதி கொடுன்கல்.
Quote | Report to administrator
முஹம்மது சாதாத்
0 #10 முஹம்மது சாதாத் 2011-03-14 22:56
அன்பிற்குரிய சகோதாரர் சிவா அவர்களே உங்களது சில கேள்விகளையும், அதற்காக தங்களுக்கு வழங்கப்பட்ட பதில்களையும் என்னால் பார்வையிட முடிந்தது. உங்களது கேள்வி வரவேற்கத்தக்கது . ஆனால் தங்களது மனதில் எதை நினைத்துக் கொண்டு கேட்டீர்களோ யான் அறியேன். எல்லாம் வல் அல்லாஹ் அறிவான். நீங்கள் முதலில் அல்குர்ஆனை திறந்த மனதோடு படித்துப் பாருங்கள். அதில் உங்களுக்கு நல்லருள் வழங்கப்பட்டிருக ்கலாம். அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள். அதனை மீண்டும் மீண்டும் படியுங்கள். இறைவனையும் அவன் படைப்பினைங்களைய ும் அறிந்து கொள்வீர்கள். அதன் பின்னர் மனித இனம் எதற்காக இவ்வுலகத்திற்கு படைக்கப்பட்டது என்பதன் அர்த்தம் புரியம். புரியும் போது நீங்கள் உங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் தற்போதைய நிலைப்பாட்டையும ் புரிந்து கொள்வீர்கள். தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் .
Quote | Report to administrator
Romiano Prince
0 #11 Romiano Prince 2011-05-29 14:59
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில ்லை; வழிகேட்டிலிருந் து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது ; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றை யும்) செவியுறுவோனாகவு ம் நன்கறிவோனாகவும் இருக்கின்றான் - Al-Quran - 2:256.
Quote | Report to administrator
azar
+1 #12 azar 2013-01-16 12:33
சகோதரர் சிவா அவர்களே ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள் இன்று எதனையோ மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாதிற்க்கு வந்த பிறகு தனது பாஸ்போர்டில் தனது பழைய பெயரை மாற்றாமல் ஹஜ் கிரியை நிறைவு செய்துள்ளார்கள் . அவர்களிடம் சில கேள்விகள் மற்றும் சில மார்க்கம் சம்பந்தமான பயிற்சிகளுக்கு பிறகு இந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்