முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பிற மதத்தினருக்காக

பதில்:

ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.

"அர்ஷின்(இருக்கை) மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்."(திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)

"வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்."(திருக்குர்ஆன் 89:22)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இது தவிர, அல்லாஹ்வுக்கு முகம் உண்டு. விரல்களும், கைகளும் கால்களும் உண்டு. அர்ஷின் மீது அமர்தல், முதல் வானத்திற்கு இறங்கி வருதல் போன்ற இறைப்பண்புகளை விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அதற்கு உவமைகள் கூறக்கூடாது. உதாரணங்கள் கூறக்கூடாது. எவருக்கும் நிகரில்லாத எப்பொருளைப் போலும் இல்லாமலும் இருக்கின்றான். அவன் தன்மைகளை உருவகப்படுத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ, மனித கற்பனைக்கு ஏற்ப பொருள் கொள்ளக்கூடாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக ஏக இறைவன் இருக்கிறான்.

பின்னர் ஏன் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவமில்லை எனக் கூறுகின்றனர்? என்ற விஷயத்திற்கு வருவோம்.

பார்வைகள் அவனை அடைய முடியாது - குர்ஆன் (6:103)

இங்கு உருவமில்லை எனக் கூறுவதன் கருத்து அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறிவால் ஊகித்து அறிந்து கொள்ள இயலாது; அதாவது படைத்தவனைக் குறித்து அறியும் சக்தி படைப்பினத்துக்கு இல்லை என்பதேயாகும்.

‘பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது. (இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

இதனை விளங்குவதற்குப் படைத்தவன், படைப்பினம் என்ற இரு வார்த்தைகளின் முழு சக்தியையும் புரிந்து கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு மனித ரோபோவை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவர் அது எப்படி செயல்பட வேண்டும் என அவர் வடிவமைத்தாரோ அதனை விடுத்து அதற்கு உபரியாக அதனால் ஒன்றும் செய்ய இயலாது.

தெளிவாக கூற வேண்டுமெனில் படைத்தவனை மிஞ்சி படைப்பினத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது. இந்த உலகமெலாம் கண்காணிக்கும் சக்தியுள்ள இறைவனின் ஞானத்தில் மிகச் சிறிய அளவே மனிதன் பெற்றுள்ளான். நமக்கு தரப்பட்ட இச்சிறிய அறிவினைக் கொண்டு நம்மைப் படைத்தவன் எப்படியிருப்பான் என ஒரு தீர்மானத்திற்கு வருவது இயலாத காரியம்.

இனி ஒவ்வொருவரும் அதற்கு முயற்சிப்போமானால் அவரவருக்கு தரப்பட்டுள்ள சிந்தனா சக்திக்கு உட்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவமான இறைவன் கிடைப்பான். இது உலகில் குழப்பமும் கலகமும் பிரிவினையும் தோன்றுவதற்கும் மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதற்கும் வழி பிறப்பித்து விடும்.

எனவே தான் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். உருவம் உண்டு எனக்கூறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனுக்கு உருவம் கொடுத்து பல இறைவனை உருவாக்கும் அபத்தத்தைச் செய்வதை விட ஆரம்பத்திலேயே உருவமில்லா(உருவகப்படுத்த முடியா) இறைவன் எனக் கூறிவிடுவது சிறந்ததல்லவா?

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments   

raja
0 #1 raja -0001-11-30 05:21
நன்பர்களே!

உங்கள் வாதம் நன்றாக உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் 'படைப்பு-படைத்த வன்', 'இறைவன்' போன்றவற்றை என்னால் ஏற்க இயலவில்லை.

நாம் அறிந்தவரையில், படைப்பு என்பது ஒரு அழகான விபத்து. இறைவன் என்ற ஒருவன் எந்த காலத்திலும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
அப்படியே இருந்திருந்தால் உலகில் இத்தனை ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

உங்களுடைய கருத்தான - 'இறைவன் உலகைப் படைத்தான்' என்பது விஞ்ஞானத்தை மறுப்பது போல் உள்ளது.

என் கருத்து உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால், மன்னிக்கவும். இல்லை என்றால் நான் விவாதத்திற்கும் , கற்றுக்கொள்ளவும ் தயார்
Quote | Report to administrator
முஸ்பா.முஹம்மத்
0 #2 முஸ்பா.முஹம்மத் -0001-11-30 05:21
அன்பு சகோதரர் ராஜா அவர்களுக்கு
எனது அன்பார்ந்த மடல், நலம் நாடுவதும நலமே.
தங்கள் மடலின் இறுதியில் இருந்த இரண்டு அழகிய வாசகங்கள்,குர் ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸ்ல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு உட்பட்டிருந்தமை யால், தங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்ய விருப்பம் ஏற்பட்டது
தங்கள் மடலின் இறுதியாக தாங்கள் 'விவாதிக்க மற்றும் கற்றுக்கொள்ள' தயார் என்று குறிப்பிட்டு உள்ளதால் இதை உங்கள் மேலான சிந்தனைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
அன்பு சகோதரரே, மனிதன் எங்கு எந்த சூழ்நிலையில் பிறக்கிறானோ பொதுவாகவே அதன் தாக்கம் அவன் மீது ஏற்பட்டுவிடுகிறது.
அதாவது கலாச்சார அடிப்படையில்,கொ ள்கை,கோட்பாடுகள ் அடிப்படையில்,தொ ழில்,விளையாட்டு ,வணிகம்,போன்ற இதர துறைகளின் தாக்கம் அவனில் எளிதாக காண முடியும். அதே நேரத்தில் மாற்று கருத்து கொள்கைகள் எளிதில் மனம் ஏற்கக்கூடிய சூழ்நிலையில் அமைவது கடினம். (இதற்கும் விதிவிலக்குகள் உண்டு.)
அதனால் தான் மனிதன் நாட்டு பற்று, குலப்பற்று, மத, இன, மொழிப்பற்று, கொள்கை, கோட்பாடு, இயக்கம், கட்சி ,கழகம், போன்ற விஷயங்களில் பற்ற்றாகவும் இன்னும் சிலர் வெறி எனும் அளவில் இதில் உறுதியாக கடுமையாக செயல் பட்டு மனிதர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்கின்றனர்.
எல்லா கோட்பாடுகளும் பொதுவாக கொண்டுள்ள மனிதம் மனித நேயம் எனும் அடிப்படை விஷயத்தை மறந்து மறுத்து வாழும் அளவிற்க்கு இது இருப்பதும் நிதர்சனமான உண்மை.
இதன் விளைவாக தான் மனிதர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வுகளும் இன்ன பிற வெளிபாடுகளும் குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஆக இதனால் மற்றும் இன்ன பிற பகுத்தறிவுக்கு அப்பால் பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை காணும் போது தங்களுக்கு எற்பட்ட சிந்தனையை போல் இறைவன் இல்லை என்ற சிந்தனை எற்படுவது சகஜமே.
மேலும் இவ்வுலக சரித்திரத்தில் எத்கனையோ நல்லடியார்கள் சிந்தனையாளர்கள் ஆரம்பத்தில் இந்நிலைக்கு வந்தபின் தான் அவர்கள் சத்தியத்தை ஆய்ந்தறிந்து எற்று கொள்ளும் நிலைக்கு வந்தனர்.
ஆக இந்த ஏற்றாத்தாழ்வுகள ின் காரணமாக இறைவன் இல்லை, அவன் இவ்வுலகத்தை படைக்கவில்லை எல்லாம் ஒரு விபத்து தற்செயல் எனும் கருத்துகள், 'தாங்கள் எங்களுக்கு இந்த மடலை எழுத வில்லை இது தற்செயலாக விபத்தாக தானாக எங்களை வந்தடைந்தது' என்பதற்கு சமமான ஒன்று தான் எனதில் தவறு இல்லை.

எப்படி இம்மடலை தொகுத்து சீராக ஒரு அமைப்பாக கட்டுக்கோப்பான வார்த்தைகள் மற்றும் அவற்றை வெளிபடுத்தும் எழுத்துரு அமைப்புகள் மூலம் தாங்கள் வெளிப்படுத்தினீ ரோ அதேபோல் தான் இவ்வுலகம் இப்பேரண்டம் சூரியன் சந்திரன் காற்று நீர் இதர பல கோள்களின் சீராக இயங்கும் கட்டுக்கோப்பான அமைப்பு அதன் பயன்கள் பண்புகளின் பின்னணியில் இறைவன் எனும் ஒரு பெரிய சக்தி உள்ளது என்பது விஞ்ஞானிகளும் மறுக்காத உண்மை.

இதற்கு ஆதாரமாகவும்,இறை வன் உண்டு என்பது விஞ்ஞானத்திற்க் கு எதிரானது இல்லை என்பதற்கும் உலகளவில் உள்ள பல அறிஞர்கள், டாக்டர்கள் விஞ்ஞானிகளின் நூல்களின் ஆதாரங்களை காட்ட முடியும் அவற்றை கவனமாக தாங்கள் ஆய்வு செய்தால் தாங்களும் தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்ய வழி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டி காத்திருக்கின்ற ேன், அதற்காக அந்நூல்களின் ஆதார தொகுப்புகளுடன் மேலும் மற்ற விவரங்களுடன் தங்களை விரைவில் சந்திக்க காத்துள்ளேன்
தங்கள் அன்பு சகோதரன்
முஸ்பா.முஹம்மத்
Quote | Report to administrator
யாசிர் அராஃபத்
0 #3 யாசிர் அராஃபத் 2010-07-30 11:46
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராஜா மற்றும் முஸ்பா முஹம்மது. சகோதரர் ராஜா அவர்களே-சகோதரர் முஸ்பா அவர்கள் மிக அழகாக நிரைய விஷயங்களை சொன்னவைகளிலிருந ்து தெளிவுபட்டிருப் பீர்கள்.கூடுதளா ன தகவள்களுக்கு தாங்கள்-இஸ்லாமு ம் விஞ்ஞானமும் என்ற தலைப்பின் கீழ் உள்ள புத்தகத்தை வாசித்தீர்களானா ல் நிரைய விஷயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்