முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 12இல் 137 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 12 பேர் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1)

B. ஸய்யிது கனி்

syedk...ymail.com

46 வினாடிகள்

2)

சாம் அப்துல் பாஸித்

basith_...yahoo.co.in

47 வினாடிகள்

3)

ஹஃப்ஸா ருக்கையா

abkale...gmail.com

52 வினாடிகள்

4)

அபு

abusi...gmail.com

52 வினாடிகள்

5)

அப்துல் மஜீத்

abdulm...gmail.com

55 வினாடிகள்

6)

பஷீரா பேகம்

basheeramaj...gmail.com

56 வினாடிகள்

7) ஸுபைதா பேகம் begumzube...gmail.com 56 வினாடிகள்
8) ஸைனப் ஜுவைரியா abkal...gmail.com 60 வினாடிகள்
9) அப்துல் ஹமீத் hameed742...gmail.com 1 நி் 1 வினாடி
10) உம்மு ஆதில் msasmaa2...gmail.com 1 நி 9 வினாடிகள்
11) அப்துல் மஜீத் majeed_..yahoo.com 1 நி 11 வினாடிகள்
12) பஷீரா bashee...yahoo.com 1 நி 50 வினாடிகள்

மேற்காணும் பட்டியலில் உள்ள பன்னிருவருள் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரர் B. ஸய்யிது கனி - முதலாம் பரிசு (46 வினாடிகள்)
(2) சகோதரர் சாம் அப்துல் பாஸித் - இரண்டாம் பரிசு (47 வினாடிகள்)
(3) சகோதரி ஹஃப்ஸா ருக்கையா - மூன்றாம் பரிசு (52 வினாடிகள்)
(4) சகோதரர் அபு - மூன்றாம் பரிசு (52 வினாடிகள்)

அறிவுப்போட்டி-12க்கான சரியான விடைகள்:

வினா-01: அல்லாஹ் பூமியை எத்தனை நாட்களில் படைத்தான்?

விடை : இரண்டு நாட்கள் (அல்குர்ஆன் 41:9)


வினா-02: இபுராஹீம் (அலை) இல்லத்திற்கு வருகை புரிந்த பெருமதிப்பிற்குரிய விருந்தினர்கள் யாவர்?

விடை : மலக்குகள் (அல்குர்ஆன் 15:52)


வினா-03: மர்யம் (அலை) யார்?

விடை : நபி ஈஸா (அலை) அவர்களின் தாய் (அல்குர்ஆன் 19:34)


வினா-04: வேட்டையாடுவது தடுக்கப்பட்ட நிலையும் நிலமும் யாவை?

விடை : இஹ்ராம் நிலையும் ஹரம் எல்லையும் (அல்குர்ஆன் 5:1-2, 95)


வினா-05: முஹாஜிர்கள் யாவர்?

விடை : மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் (அல்குர்ஆன் 9:100)


வினா-06: நபி இபுராஹீம் (அலை) அவர்களின் உறவினராய் அமைந்தை நபி யார்?

விடை : லூத் (அலை) (அல்குர்ஆன் 29:26)


வினா-07: இஃப்ரித் யார்?

விடை : ஜின் (அல்குர் ஆன் 27:39)


வினா-08: நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் தாயார் பெயர் என்ன?

விடை : சாரா


வினா-09: ஆயத்துல் குர்ஸீ குர் ஆனின் எந்த ஸூராவில் அமைந்துள்ளது?

விடை : அல்-பகரா (அல் குர்ஆன் 2:255)


வினா-10: மத்யன் நகர மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபி யார்?

விடை : ஷுஐப் (அலை) (அல்குர்ஆன் 7:85)


மதிப்பெண் இல்லாப் படக்கேள்வி:

வினா : வானில், மீனில், மரத்தில், பழங்களில், அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டதாக உலா வரும் மின்னஞ்சல்களைக் கண்டால் என்ன செய்வீர்கள்?

 

விடை : இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இஸ்லாமிய எதிரிகள் திட்டமிட்டு உருவாக்கி பரப்பி விடும் கட்டுக்கதைகளான இவற்றை அனுப்பிய நண்பர்களுக்கு இவ்விபரத்தினை எழுதித் தெரிவிப்பேன்.

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 12இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
Haroon Ibrahim
0 #1 Haroon Ibrahim 2010-11-29 20:13
Assalamu Alaikum,

I received my prize last week. Jazakallahu Khair. But i have one doubt i got two books 1. Raheeq 2. Muslim mun madiri penmani.

What is the first prize? and what is the second prize?

Pls explain.

Regards,
Haroon
Quote | Report to administrator
ansari
0 #2 ansari 2010-11-30 10:04
I not received my prize.. arivupotti3 second prize, and arivupotti4 first prize. pls send me my prizes.
Quote | Report to administrator
ansari
0 #3 ansari 2010-12-02 12:41
I not received my prize.. arivupotti3 second prize, and arivupotti4 first prize. pls send me my prizes.

pls ans... me.
Quote | Report to administrator
B.ISMAIL
0 #4 B.ISMAIL 2011-02-03 15:38
அஸ்ஸலாமு அழைக்கும் ,சகோதரர் அவர்களே தங்கள் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை சுட்டும் பொழுது அவர்களின் பெயரை மட்டுமே சுட்டவும் ,அவர்களின் ஈமெயில் முகவரியை தவறான உள்ளபாடோடு தொடர்பு கொள்ள சைத்தான் எம்மை தூண்டுகிறான், மேலும் நமது சகோதர,சகோதரிகளி ன் உள்ளபாடு அவ்வாறு அமைந்து விட கூடாதென விரும்புகிறேன் . இப்படிக்கு நலன் விரும்பும் சகோதர வாஞ்சை
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்