முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

 

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருகிறது.


அறிவுப் போட்டி எண் 1(01-09-1431 / 11-08-2010)இல், 199 பேர் கலந்து கொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்! அவர்களுள் கீழ்க்காணும் 11 பேர் மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1. முஹம்மது அர்ஷாத்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

2. மிர்சா ஆதம்புள்ளே(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

3. நவ்ஃபல்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

4. ஹிஃப்லான்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

5. அஸார் இஸ்லாஹி(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

6. அனிஸ்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

7. அபுதாஹிர்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

8. இப்னு ஹுஸைன்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

9. ஷரஃபுதீன்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

10. அப்துல் ரஹீம்(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

11. நூறா(This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள பதினொருவருள் மிகக் குறைந்த நேரத்தில் (1 நிமிடம் 14 நொடிகளில்) பதிலளித்த சகோதரர் ஹிஃப்லான் அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறிவுப்போட்டியில் ஒரேயொரு பரிசு மட்டுமே அறிவித்திருந்தோம்.  வாசகர்களின் பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து, அறிவித்திருந்த ஒரு முதல்பரிசைவிடக் கூடுதலாக மேலும் இருவருக்கு இரண்டாம்,  மூன்றாம் பரிசுகளையும் வழங்க முடிவெடுத்து இருக்கிறோம்.

 

அதன்படி, அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோதரர் நூறா(1:18 - ஒரு நிமிடம் 18 நொடிகள்) அவர்கள் இரண்டாம் பரிசுக்குரியவராகவும் சகோதரர் இப்னு ஹுஸைன்(1:43 - ஒரு நிமிடம் 43 நொடிகள்) மூன்றாம் பரிசுக்குரியவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

அறிவுப்போட்டி-I க்கான சரியான விடைகள்:

1 - நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது? - விடை: வரம்பில்லை.

2 - ரமளானைப் பற்றி எத்தனை ஆயத்துக்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன? - விடை: ஐந்து

3 - ரமலான் நோன்பாளிகளின் சிறப்பான பரிசு எது? - விடை: ரய்யான் எனும் சுவன வாயில்.

4 - முஸ்லிம்கள் நோன்பிற்கும் யூதர்கள் நோன்பிற்கும் வித்தியாசம் என்ன? - விடை: ஸஹர்.

5 - நோன்பின் மூலம் முஸ்லிம்கள் அடையும் பலன் என்ன? - விடை: தக்வா.

6 - குர் ஆன் அருளப்பட்ட மாதம் எது? - விடை: ரமளான்.

7 - குர் ஆனில் ஆரம்பத்தில் எத்தனை ஆயத்துக்கள் அருளப்பட்டன? - விடை: ஐந்து.

8 - நோன்பு எந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டது? - விடை: ஹிஜ்ரி இரண்டு.

9 - குர் ஆனில் முதலில் அருளப்பட்ட சூராவின் பெயர் என்ன? - விடை: சூரா அலக்.

10 - ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதம் எது? - விடை: ரமளான்

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

11. - இப்படத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா எங்குள்ளது? - விடை: மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் டூம், உமர்(ரலி) அவர்களால் கட்டப்பட்டதாகும். அதன் பக்கத்தில் பாழடைந்த கட்டடம் போன்று பராமரிக்கப்படாமல் காணப்படுவதே மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். யூதர்களின் கைவசமான பின்னர் அதனை இடித்து ஸாலமோன் கோவில் கட்டுவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருவதும் அதற்காகவே மஸ்ஜிதுல் அக்ஸா என்றாலே மஞ்சள் நிறத்திலுள்ள டூம் ஆஃப் ராக்கை முன்னிலைபடுத்தி விளம்பரப் படுத்தப்படுவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.


சத்தியமார்க்கம்.காம் நடத்திய முதல் அறிவுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் ஹிஃப்லான், நூறா மற்றும் இப்னு ஹுஸைன் ஆகியோருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Comments   
NOOR RUKAIYA - AKURANA...SRILANKA
0 #1 NOOR RUKAIYA - AKURANA...SRILANKA 2010-08-20 11:25
வெற்றியாளர்கள் அனைவருக்கும் my best wishes !!!
congratulations
Quote | Report to administrator
ஆர்.தாஹா முஹம்மது
-1 #2 ஆர்.தாஹா முஹம்மது 2010-08-21 04:07
அஸ்ஸலாமு அலைக்கும். வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் கங்க்ராஜ்....இர ன்டாவது போட்டி முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்.மாஅஸ்ஸலாமா.. .......
Quote | Report to administrator
Basheer
0 #3 Basheer 2010-08-21 08:21
அஸ்ஸ‌லாமு அலைக்கும்
அல்ஹ‌ம்துலில்லாஹ், அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்..

வெற்றியாள‌ர்க‌ளுக்கு வாழ்துக்க‌ள்!

ச‌மா‍விற்கு பாராட்டுக்க‌ள்!

அடுத்த‌ போட்டி எப்போது?
Quote | Report to administrator
anisry
0 #4 anisry 2010-08-21 12:26
அஸ்ஸ‌லாமு அலைக்கும்
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்துக்க‌ள் !!!
Quote | Report to administrator
i.m.irshath
0 #5 i.m.irshath 2010-08-23 13:36
ALL THE BESD TO ALL THE WINERS
Quote | Report to administrator
மு.இ.முஹம்மத் ஷாஃபி
0 #6 மு.இ.முஹம்மத் ஷாஃபி 2010-08-23 19:11
அஸ்ஸலாமு அலைக்கும்.
சத்யமார்க்கம் தள அறிவுப்போட்டி, சுமார் 25-30 ஆண்டுகளுக்கு முன்பான என் பால்ய கால நினைவுகளை கிளறி விட்டிருக்கறது. அப்போது சவூதியிலிருந்த என் மாமாமார்கள் இருவர் ரமலான், பெருநாட்கள் போன்ற பண்டிகை காலங்களில் இம்மாதிரியான கேள்விகளைத் தயாரித்து எங்கள் குடும்ப பெண்களுக்கு அனுப்பி வைத்து சரியான விடையளிப்பவர்கள ுக்கு (புடவை போன்ற) பரிசுப் பொருள்கள் தருவர். அப்போதெல்லாம் விடையைத் தேர்வு செய்வதில் எம் சகோதரிகளுக்கு உதவியிருப்பதாய் நினைவு.

இது போன்ற மார்க்க தேடுதல்கள் எல்லாம் குடும்பங்களில் இப்போது அருகி விட்டதை எண்ணி உண்மையில் கடந்த சில வருடங்களாகவே அது போன்றதொன்றை மீண்டும் ஆரம்பிக்கச் சொல்லி அதே என் மாமாமார்களைக் கேட்கலாமா எண்ணிகொண்டேயிரு ந்தேன். நாம்தான் நல்லவற்றைத் தள்ளிப் போடுபவர்கலாயிற் றே, முடியாமல் போய் விட்டது. இந்த மின்னணு யுகத்தின் நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் எல்லாம் வல்ல அல்லாஹ் சத்யமார்க்கம் தளத்தின் மூலமாக எமது எண்ணக் கிடக்கையை நிறைவேற்றியிருக ்கிறான். என்ன ஒன்று, தாயகத்தில் எங்கள் வீடுகளில் இணையத் தொடர்பு இல்லாததால் எம் குடும்பத்தினர் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இல்லாவிட்டால் என்ன, எத்தனையோ எம் சகோதர, சகோதரிகள் பயனடைகின்றனரே. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவுப்போட்டி-1ல் நான் கலந்து கொண்டு 60 விழுக்காடு மட்டுமே பெற்றதை எண்ணி வெட்கமாயிருக்கிறது!
--
மு.இ.முஹம்மத் ஷாஃபி
Quote | Report to administrator
M . MUHAMMAD
0 #7 M . MUHAMMAD 2010-08-24 00:03
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் மு ஷாபி அவர்களே
அல்ஹம்துலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைர்.
இணையம் வசதி இல்லாதோர்க்கு இதை அச்செடுத்து அதை ஜெரொக்ஸ் எடுத்து வழங்கி பலன் பெற செய்யலாம்,
இன்ஷா அல்லாஹ். சத்தியமார்க்கம் .காம் சகோதரர்கள் இவர்களுக்கு பரிசு வழங்கவில்லையெனி லும் கடந்த வாரங்கள் கேள்வி பதில்களை அச்செடுக்கும் விதமாக வசதி ஏற்படுத்தி தந்தால் அது பல்ருக்கும் பலனுள்ளதாக அமையும்.
அல்லாஹ் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
Quote | Report to administrator
அப்துல் பாஸித்
0 #8 அப்துல் பாஸித் 2010-08-25 00:28
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் ஷாஃபி அவர்களுக்கு,
//அறிவுப்போட்டி-1ல் நான் கலந்து கொண்டு 60 விழுக்காடு மட்டுமே பெற்றதை எண்ணி வெட்கமாயிருக்கிறது!//

இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது, சகோதரரே? ஒரே நாளில் நாம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. போட்டியில் கலந்துக் கொண்டதன் மூலம் சிலவற்றை நீங்கள் கற்றுக் கொண்டிருப்பீர்க ள். நாளை வேறு சிலவற்றை கற்று கொள்வீர்கள், இன்ஷா அல்லாஹ். அதனால் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.

உங்களுக்காக,
கீழுள்ள கட்டுரையை படியுங்கள்.

தோற்றுப் பார்!
:-)
Quote | Report to administrator
Ashma
0 #9 Ashma 2010-09-01 16:36
அஸ்ஸலாமு அலைக்கும்?
நான் இந்த போட்டியில் வெற்றி பெறவிலை எனினும் என்னால் இஸ்லாம் சம்பந்தபட்ட கேள்வியில் 40மூ வெற்றியிருப்பது மிகவும் மகிழ்ச்சி.

மீண்டும் ஒரு போட்டியில் குரான்கள் உள்ள கருத்துகளை கற்று முழு சதவீத பெற்றி பெறுவது என்னுடைய முயற்சி இன்ஷாஅல்லா அல்லாவின் நாட்டத்தோடும்.


ஜஸக்கல்லா ஹைர்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #10 சத்தியமார்க்கம்.காம் 2010-09-01 22:11
அன்புச் சகோதரி அஸ்மா,
அஸ்ஸலாமு அலைக்கும்.

சரியாகச் சொன்னீர்கள்.
இந்தப் போட்டி நடத்துவதே நம் சமுதாயச் செல்வங்கள் மார்க்க-பொது அறிவு பெறவேண்டும்; அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில்தான்.

தொடர்ந்து பங்கு பெறுங்கள்; வெல்வீர்கள், இன்ஷா அல்லாஹ்.

- சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator
sarthaj begam j.k.
0 #11 sarthaj begam j.k. 2010-12-19 16:38
vetriyalargal anaivarukum amathu nal valthukal
valga valamudan
Quote | Report to administrator
ibnuhussain
0 #12 ibnuhussain 2011-01-31 18:07
Dear Admin,

Assalamu alaikkum varah,

This is to inform that I got 3rd prize of the 1st competition. If you don't mind, still I didn't receive any prize from your side.
If you want to send , pls note below address..

MSO.ABDUL HUSSAIN
10/11 PERIYAR NAGAR ,IDAIYAKKADU . ,MADUKKUR -614903 / TANJORE -DT.
Quote | Report to administrator
SINNAMARAIKAYAR
0 #13 SINNAMARAIKAYAR 2011-03-01 18:48
இந்த வெப்ஸைட் (website) தற்போது உள்ள காலகட்டத்திற்கு மிக ஏற்றமான ஒரு பயனுள்ள வெப்ஸைட். எந்த நோக்கத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட தோ அந்த எண்ணத்திற்கு ஏற்ப அல்லாஹ் நன்மையை தருவானாக.
Quote | Report to administrator
ஜாகிர் ஹுசைன்
0 #14 ஜாகிர் ஹுசைன் 2011-03-05 19:49
அறிவுப்போட்டி ரொம்பவும் அழகியமுறையில் நடத்தி மக்களுக்கு மத்தியில் கல்வியைப் பறப்பிவரும் சத்தியமார்க்கம் மேலும் மேலும் வளர இறைவனைப் பிறார்திக்கிறேன்.

1 - நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது? - விடை: வரம்பில்லை.'


இது சரியான பதில்தானா என்பது என் கேள்வி, காரணம் நோன்பு கடமை என்பது சுய சிந்நனையுள்ள, பருவ வயதை அடைந்த, முஸ்லிமான நோன்பு நோற்க சக்தியுடைய ஒவ்வொருவர் மீதும் கடமை இதுதானே அதற்கு பதில் அதைவிட்டு விட்டு வரம்பில்லை என்ற பதில் சரியா

வரப்பில்லை என்றால் ஒரு வயது பிள்ளைக்கும் நோன்பு கடமையா?

அல்லது ஒரு வயதில் கடமையில்லை பத்து வயதில் கடமையில்லை இருபது வயதில் கடமையில்லை 30 அல்லது 40 வயதில் எந்த வயதில் கடமை அதற்கு அலவுகோல் என்ன

இதில் விடை தப்பா அல்லது கேள்வி தப்பா

அல்லது கேள்வி இப்படியிருந்தால ் : எந்த வயது முதல் நோன்பு நோற்பது

இதில் என்னுடைய கேள்வி தவரா

அல்லது உங்களுடைய பதில் தவரா? அல்லது கேள்வி தவரா திருத்துங்கள்.

தயவுசெய்து பதில் தாருங்களேன்
Quote | Report to administrator
எம் எஸ் kee
0 #15 எம் எஸ் kee 2011-03-08 06:49
அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த கேள்வியும் பதிலும் நேரடியாக பொருள் கொண்டால் தவறு போன்று தோன்றினாலும் இதைப் பற்றி கலந்துரையாடலில் எனக்கு கிடைத்த பதில். தொழுகைக்கு நபி மொழியில் "ஏழு வயது முதல் தொழ ஏவுங்கள் பத்து வயது முதல் தொழவில்லையெனில் அடியுங்கள் " என்பது போல் நோன்பிற்கு வயது எண்ணிக்கை வரையருக்க பட்டு கூறப் படவில்லை என்பதால் பருவமடைந்தவர் இதை நோற்க வேண்டும்.

சிறுவர் சிறுமிகளையும் அவர்கள் விரும்பும் போது இயலுமானால் ௭ழு வயது பத்து௦ வயது என்று பொறுக்காமல் பழக்கலாம் என்பதே கருத்து ஆகும். மற்ற சலுகைகள் குர் ஆனிலும் ஹதீஸிலும் விளக்கப்பட்டுள்ளன.

இப்படி புரிந்தால் முரணில்லை
Quote | Report to administrator
எம் அப்துல்லாஹ்
0 #16 எம் அப்துல்லாஹ் 2011-03-08 19:51
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ

நோன்பிற்கு தொழுகையைப் போல் வயது நபி வழியில் வயது ஏதும் குறிப்பிடப் படவில்லை நோன்பு எனும் கடமைக்கு சக்தி / இயலும் நிலை இருப்பின் சிறுவர்களுக்கும ் நோன்பிற்கு ஆர்வமூட்ட அனுமதியுண்டு என்பதற்கு பின் வரும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது ( இது அனுமதியே, ஆனால் நிர்ப்பந்திக்கவ ும் கூடாது அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு இயலும் பட்சத்தில் குறிப்பிட்ட ஏழு அல்லது பத்து வயது வரை என்று அனுமதி மறுக்கவும் கூடாது ) என்று இதை விளங்கலாம்.

.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரே ா அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்க ாக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1960
ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்


// அல்லது ஒரு வயதில் கடமையில்லை பத்து வயதில் கடமையில்லை இருபது வயதில் கடமையில்லை 30 அல்லது 40 வயதில் எந்த வயதில் கடமை அதற்கு அலவுகோல் என்ன//

எந்த வயது எனும் வரம்பு இல்லை ஆனால், பருவமடைந்த(சிறு வர்கள் அல்லாத)வர்கள் இதை நோற்க வேண்டும். இதை தள்ளிப் போடக் கஊடாது ) என்று விளங்கலாம்.
( பார்க்க 2 : 183 - 187 )

Quote | Report to administrator
ஜாகிர் ஹுசைன்
0 #17 ஜாகிர் ஹுசைன் 2011-03-12 11:18
வஅலைக்குமுஸ்ஸலாம்
//இந்த கேள்வியும் பதிலும் நேரடியாக பொருள் கொண்டால் தவறு போன்று தோன்றினாலும் //
உங்களுடைய கேள்வியோ அல்லது பதிலோ தவறு என்று சொல்கிறீர்கள் உங்களுக்கு ஒரு ஹதீஸை மட்டும் சொல்ல விரும்பகிறேன் இது ஒரு பொதுவான சட்டம்
رفع القلم عن ثلاثة : عن المجنون حتى يفيق وعن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم رواه ابو داود واحمد والترمدي صححه الباني

இதற்கு அருத்தம் புரிந்தால் சமாளித்து இரண்டு நபர்களும் பதில் தரமாட்டீர்கள் என் கடமை எத்திவைப்பது அல்லாஹீ அஃலம்
Quote | Report to administrator
எம் அப்துல்லாஹ்:
0 #18 எம் அப்துல்லாஹ்: 2011-03-13 06:27
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்
அன்பு சகோதரர் ஜாகீர் ஹுசைன்

رفع القلم عن ثلاثة : عن المجنون حتى يفيق وعن النائم حتى يستيقظ وعن الصبي حتى يحتلم رواه ابو داود واحمد والترمدي صححه الباني

The Pen is lifted from three: from the insane mind, from the sleeper until he wakes up, and the boy until he grows up?

மூவர் மீதிருந்து எழுது கோல் உயர்த்தப் பட்டது, மனோநிலை பாதிக்கப் பட்டவர்,(குணமடை யும் வரை) உறக்கத்திலுள்ளவ ர்(விழிக்கும் வரை) சிறுவர் (பருவமடையும் வரை)

இது பொதுவாக எல்லாவித குற்றங்களுக்கும ் அடிப்படையான ஒரு இஸ்லாமிய நிலைபாடு ஆகும்.

இந்த சட்டம் எவ்வாரு மேலே அளிக்கப் பட்ட விளக்கத்திற்கு முரணாக உள்ளது.

அதில் உள்ள புகாரி நூலில் பதிவான ஹதீஸை எவ்வாரு விளங்குவது.
Quote | Report to administrator
ஜாகிர் ஹுசைன்:
0 #19 ஜாகிர் ஹுசைன்: 2011-03-13 12:23
வ அலைக்குமுஸ்ஸலாம
//நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பிஇ 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரே ா அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்க ாக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

புகாரி பாகம் 2இ அத்தியாயம் 30இ எண் 1960
ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார் //

சகோதரரே தாங்கள் சொன்ன புகாரி நூலில் பதிவான ஹதீஸீம் சகோதர் எம் எஸ் சொன்ன பதிலும் நோன்பு சிறுவர்களுக்கு கடமையில்லை என்றுதானே சொல்கிறீர்கள் இதில் என்ன விளக்கம் தேவைப்படுகிறது மேலே சொல்லப்பட்ட ஹதீஸில் நோன்பு நோற்கவைப்போம் என்றுதானே இருக்கிறது கட்டாயப்படுத்து வோம் என்று இல்லையே

நோன்பு நோற்கவைப்போம் என்பது இஸ்லாத்தில் உள்ள பற்று கட்டாயப்படுத்து வோம் என்றால் கடமை ஒரு மனிதன் கடமையை செய்யாவிட்டால் குற்றம் அந்த சிறுவர்கள் செய்யாவிட்டால் குற்றமா

சகோதரர் எஸ் எம் சொன்னதுபோல் //சிறுவர் சிறுமிகளையும் அவர்கள் விரும்பும் போது இயலுமானால் ௭ழு வயது பத்து௦ வயது என்று பொறுக்காமல் பழக்கலாம் என்பதே கருத்து ஆகும். //

சிறார்களை பழக்கலாம் கடமையாக ஆக்கக்கூடாது

இதே கருத்தைத்தானே தாங்களும் சொல்லிருக்கிறீர ்கள் அப்படி இருக்க எப்படி கேள்வி சரியாகும்

நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது? - விடை: வரம்பில்லை

கடமைஎன்பதற்கும் விருப்பம் என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா
உங்கள் சொல்பிரகாரம் சிறார்கள் மீது கடமை என்றால் அவர்கள் நோன்பு நோற்காவிட்டால் குற்றம்

விறுப்பப்பட்டு அல்லது தாய் தந்தையர்கள் நோன்பு வை என்று சொல்லி பழக்கப்படுத்தின ால் அப்போது அவர்கள் நோன்பு வைக்காவிட்டாலும ் குற்றம் இல்லை

சத்திய மார்கத்தின் கேள்வி தவறு என்று சொல்கிறீர்கள்
Quote | Report to administrator
எம் அப்துல்லாஹ்::
0 #20 எம் அப்துல்லாஹ்:: 2011-03-13 13:36
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்
அன்பு சகோதரர் ஜாகீர் ஹுசைன்

முதலில் இது போன்ற போட்டிகளின் ஒரு அடிப்டை, இருக்கும் பதில்களில் சரியானதை தேர்வு செய்வது என்பதாகும்.( விளக்கங்களின் அடிப்படையில்)

இரண்டாவது இந்த கேள்வியில் எங்கும் யாரையும் நிர்ப்பந்திக்க ஆதரவு அளிக்கப் படவில்லை.

மேலும் இது குறிப்பிட்ட வயதுக்கு நோன்பு கடமை எனும் ஒரு தவறான கருத்தை தெளிவு படுத்தி நோன்பு என்பது பருவமடைந்த சக்திக்கு உட்பட்டவர்கள் வயது வரம்பின்றி நிறைவேற்ற வேண்டிய கடமை எனும் அடிப்படையில் அமைந்தது.

சிறுவர் சிறுமிகளையும் அவர்கள் விரும்பும் போது இயலுமானால் ௭ழு வயது பத்து வயது என்று பொறுக்காமல் பழக்கலாம் என்பதே எனது புரிதல்.

மேலும் புதிய விளக்கம் தேவையற்ற நிலையில் இது தெளிவு படுத்தப்பட்டுள் ளது, ஆகையால் மேலும் இது சரி தவறு என்பதும் அவசியமற்றது.
Quote | Report to administrator
muslim:
0 #21 muslim: 2011-03-18 00:03
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் எம்.அப்துல்லாஹ் அவர்களே,

நீங்கள் முன் வைத்துள்ள புகாரி 1960, முஸ்லிம் 2092 நூல்களில் இடம்பெற்றுள்ள ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ''சிறுவர்கள் உணவு கேட்பார்கள். அவ்வாறு உணவு கேட்கும்போது சிறுவர்கள் பசியை மறந்து விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக வே பொம்மைகளைக் கொடுப்போம்'' என்கிற கருத்தில் அறிவிக்கப்படுகி றது.

இதிலிருந்து சிறுவர்கள் சுயமாக நோன்பு வைத்திருக்கவில் லை. அதாவது நாம் நோன்பு வைத்திருக்கிறோ ம் என்ற எண்ணம் சிறுவர்களுக்கு இல்லை என்று விளங்கலாம். ஆகவே, பருவ வயதை அடைந்தவருக்கே நோன்பு கடமையாகும். சிறுவருக்கு நோன்பு கடமையில்லை!

சகோதரர் ஜாகிர் ஹுஸைன் அவர்களின் விளக்கம் பொருத்தமாகவுள்ளது!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
??? ???????????:
0 #22 ??? ???????????: 2011-03-18 03:18
அலைக்குமுஸ்ஸலாம்

அன்பு சகோதரர் முஸ்லிம் அவர்களே

//இதிலிருந்து சிறுவர்கள் சுயமாக நோன்பு வைத்திருக்கவில் லை. அதாவது நாம் நோன்பு வைத்திருக்கிறோ ம் என்ற எண்ணம் சிறுவர்களுக்கு இல்லை என்று விளங்கலாம்.//

ஒரு சில சிறுவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து நோன்பு வைப்பதும் , பின்னர் பசி எடுக்கிறது என்று கூறும் நிலையய்யும் நேரில் காண முடிகிறது என்பதை கவனத்ல் கொள்ளவும்.

மேலும் சில பெற்றோர்கள் தொழுகைக்கும் நோன்பிற்கும் ஏழு வயது அல்லது பத்து வயது முதல் தான் கடமை என்று நம்புவதும் கூறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக இதர பதில்கள் வயது எண்ணிகை அடிப்படையில் அமைந்துள்ளதால் இங்கே வரம்பில்லை எனும் பதில் சரியாக படுகிறது, வயது எண்ணிக்கை வரம்பு இல்லை என்பது பொறுத்தமாக வே உள்ளது எனலாம்.

மேலும் பருவ வயதில் தான் நோன்பும் தொழுகையும் கடமை என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இருப்பின் தரவும்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #23 சத்தியமார்க்கம்.காம் 2011-03-18 21:26
அன்பான சகோதரர் ஜாஹிர் ஹுஸைன்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது சத்தியமார்க்கம் தளத்தில் வெளியான அறிவுப் போட்டி 1இல்,

"நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது?" எனும் வினாவுக்கு விடையாக, "வரம்பில்லை" என்பது உள்ளீட்டுத் தேர்வாகக் கொடுக்கப்பட்டது.

"எத்தனையாவது வயதுமுதல் நோன்பு நோற்கலாம்?" எனும் பொதுவான வினாவாக இருந்தால் "வரம்பில்லை" எனும் விடை பொருத்தமானது; "எந்த வயதுமுதல் கடமையாகிறது" எனும் வினாவுக்கு "வரம்பில்லை" என்பது பிழையான விடை என நீங்கள் சுட்டிக் காட்டிப் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் வழங்குவானாக!

அந்த வினா/விடை தெளிவின்றி இருப்பதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின் உணருகிறோம்.

நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமை ?

A) ஆறு வயது B) ஏழு வயது C) பத்து வயது D) வரம்பில்லை

பருவம் அடையும் நபர்களைப் பொறுத்து வயது வேறுபடும் என்பதால் வரம்பில்லை என்று குறிப்பிடப்பட்ட து. ஆனால் வரம்பில்லை என்பதற்குப் பருவ வயது வந்த பிறகும் கடமையாவதில்லை என்றும் பொருள் தருவதால் "வரம்பில்லை" என்பதற்குப் பதில் "பருவம் அடையும் வயது" என்று தந்திருக்க வேண்டும்.

தவறான தேர்வு இடம்பெற்றதற்கு வருந்துகிறோம். தவறைச் சுட்டிக் காட்டிய தங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

சிறார்களின் நோன்பு பற்றி ஓர் ஆக்கம் நமது தளத்தில்இன்று பதிவேறியுள்ளது : www.satyamargam.com/1678. படித்துக் கருத்துக் கூறுங்கள்.

ஜஸாக்கல்லாஹு கைரா.
Quote | Report to administrator
எம் அப்துல்லாஹ்
0 #24 எம் அப்துல்லாஹ் 2011-03-19 01:33
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

நோன்பு கடமை பற்றி குர் ஆன் 2 : 183 முதல் 2 :187 வரை மற்றும் பல நபி மொழிகள் தெளிவாக உள்ள போது.......

// ஆனால் வரம்பில்லை என்பதற்குப் பருவ வயது வந்த பிறகும் கடமையாவதில்லை என்றும் பொருள் தருவதால் //

இப்படி ஒரு பொருள் எவராவது கொள்வாரா என்று ஆச்சரியப் பட வைக்கிறது, சகோ ஜாக்கீர் ஹுசைன் அவர் 1 வயதில் வைக்கும் பொருள் வருவதாக கூறினார்,!!! நீங்க்ள் நோன்பு கடமையே இல்லை என்ற பொருளை தருவதைப் போல் பின்னூட்டியுள்ளீர்கள்,!!!

அவசரப் படாமல் நிதானமாக எனது முந்தய பின்னூட்டங்கள் மற்றும் நோன்பு பருவ வயதுடையவர் கடமை எனும் இன்றைய ஆக்கத்தில் நான் இட்ட பின்னூட்டத்தையு ம் பார்த்து விட்டு கருத்திடுங்கள் , நேரடி ஹதீஸ் இருப்பின் தந்து எனது நிலைப் பாட்டை திருத்த உதவுங்கள் மேலும் நான் இதில் சுட்டிக் காட்டிய // பருவ வயது வந்த பிறகும் கடமையாவதில்லை என்றும் பொருள் தருவதால் // என்பதை திருத்திக் கொள்ளுங்கள். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே,
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்