முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


"படிப்பீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் படிப்பீராக!" - ஓதுதலையும் அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதையும் அடிப்படையாக வைத்து அருளப்பட்ட இறைமார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் சமுதாயம் ஏனோ சண்டை, சச்சரவு, அநாவசிய வாக்குவாதம், பிளவு, வேற்றுமை பாராட்டல் போன்ற ஷைத்தானிய குணங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

இச்சமுதாயத்தில் ஊடுருவியுள்ள - இஸ்லாம் அறவே தடை செய்துள்ள, இத்தகைய தீய குணங்களெல்லாம் மறைந்து உன்னத சமுதாயமாக மாற வேண்டுமெனில், இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும், அறிவுப் புரட்சியை நோக்கி கவனத்தைத் திசை திருப்புவதும் அவசியமாகிறது.

கற்றலும் கற்பித்தலும் மேலோங்கவும், அறிவைப் பெருக்கிக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் (ஆகஸ்ட் 2010)  முதல் தேதியிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.

கல்வி கற்றலின் முக்கியத்துவத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் அவசியத்தையும் இச்சமுதாயத்தில் பரவலாக்கிடுவதற்கு இந்த அறிவுப்போட்டி உதவும் என சத்தியமார்க்கம்.காம் நம்புகிறது. அதுவே இப்போட்டியின் நோக்கமாகும்.

வல்ல இறைவன் அதற்கு உறுதுணையும் அருளும் புரிவானாக!

 

போட்டியில் கலந்து கொள்ள முகப்பில் வெளியாகும் அறிவுப்போட்டிக்கான சுட்டியைக் கிளிக்கவும்.

 

போட்டியின் நிபந்தனைகள்:

1. மார்க்கம் மற்றும் உலக விஷயங்களிலிருந்து பிரதி வாரம் 10 கேள்விகள் இடம்பெறும். போட்டியாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளிலிருந்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.

1அ. போட்டியாளர்கள் தங்களின் சரியான மின் அஞ்சல் முகவரியைத் தந்து போட்டியில் கலந்து கொள்ளவும். வெற்றி பெற்ற அறிவிப்பும், பரிசுக்கான விபரத்திற்காகவும் இந்த மின் அஞ்சல் முகவரியை  மட்டுமே சத்தியமார்க்கம்.காம் தொடர்பு கொள்ளும்.

2. போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம் ஒவ்வொரு வாரமும் தளத்தில் வெளியாகும்.

3. போட்டியில் வெல்வோருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவான முறையில் எடுத்துரைக்கும் "ரஹீக்" நூல் பரிசாக வழங்கப்படும்.

4. ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான விடையளித்திருப்பின், அவர்களில் மிகக் குறைந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுவார். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருப்பின் அவர்களில் முதன் முதலாக சரியாக விடையளித்தவர் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். அதிலும் போட்டி ஏற்படின் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். சத்தியமார்க்கம்.காம் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது.

5. வெற்றி பெற்றவருக்குரியப் பரிசு இந்திய அல்லது இலங்கை முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். மற்ற நாடுகளுக்கு அனுப்ப இயலாது.

6. பரிசு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் பரிசுக்குரியவர் தமது முகவரியைத் தெரிவித்துப் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. வெற்றிபெற்றவர்கள், போட்டியின் போது உள்ளீடு செய்த மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளப்படுவர். அதனைத் தொடர்ந்து பரிசு அனுப்பி வைக்கப்பட வேண்டிய இந்திய அல்லது இலங்கை முகவரியை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான தொழில் நுட்ப சந்தேகங்கள் ஏதும் இருப்பின் இதே மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

8. சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் எவரும் இப்போட்டியில் பங்கு பெற அனுமதி இல்லை.

சகோதரர்கள் அனைவருக்கும் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்.

- சத்தியமார்க்கம்.காம்

Comments   
mohamed ali jinnah
0 #1 mohamed ali jinnah 2010-08-11 07:04
Alhamthulilah.
This is excellent. Go ahead and do that.
People must be encouraged to get knowledge and சத்தியமார்க்கம் .காம் இஸ்லாமிய அறிவுப் போட்டி! would help for that.


அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத ்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

அன்புடன்,
அ முஹம்மது அலி ஜின்னா
Quote | Report to administrator
mohamed ali jinnah
0 #2 mohamed ali jinnah 2010-08-11 07:09 Quote | Report to administrator
Basheer
0 #3 Basheer 2010-08-11 10:15
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்.

சமா-விற்கு ஜஸாக்கல்லாஹு கைரன்.

எந்த கேள்வியின் பதில் தவறானதோ அதன் சரியான பதிலை போட்டியாளருக்கு தெரிவிப்பது அவரது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் என நம்புகிறேன்.
Quote | Report to administrator
Aseena
0 #4 Aseena 2010-08-11 11:36
சித்தபா,பெரியப் பா,மககனெய்,திரு மணம் செயது கொள்ள்லாமா மற்றூம்
தன்னே விட ஒரு வயது அதிகம் உள்ள் ஆண்கள்,பெண்கலெய ் திருமணம் செயது கொள்ள்லாமா?
Quote | Report to administrator
Sabina
0 #5 Sabina 2010-08-11 14:44
முற்றிலும் புதுமையான முயற்சி.
அறிவுப்பூர்வமானது மட்டுமின்றி அசத்தலாகவும் உள்ளது.
நானும் கலந்து கொண்டேன். என் உறவினர்களுக்கும ் அனுப்பியுள்ளேன் . நன்றி!
Quote | Report to administrator
அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
0 #6 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா 2010-08-11 21:18
மாஷா அல்லாஹ் சத்தியமார்க்கம் இவ்வாண்டு சிறந்ததொரு பொது அறிவுப்போட்டிய ை ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்கிறோம். வழக்கமான கட்டுரைப் போட்டிகளை விட இததகைய பொது அறிவுப்போட்டி அனைவருக்கும் மிகுந்த பயனைத் தரும். கட்டுரைப் போட்டிகளில் கொஞ்சமேனும் எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமே பங்கு பெற இயலும் ஆனால் இது போன்ற பொது அறிவுப்போட்டிக ள் முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்.இதுவரை எந்த இணைய தளமும் முயற்சிக்காத ஒரு புதுமையான முயற்சி. சத்தியமார்க்கத் தின் வாசகர்கள் தங்கள் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ள இந்த புதுமையான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் .
Quote | Report to administrator
M Muhammad
0 #7 M Muhammad 2010-08-11 23:50
அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைர்.

இம்முயற்சி அனைவருக்கும் பலனுள்ளதாகவும், இஸ்லாமிய அறிவை வளர்க்கவும் தூண்டுதலாக அமைய அல்லாஹ்விடம் பிராத்தனைகள். ஆமீன்.
Quote | Report to administrator
nawfal.r
0 #8 nawfal.r 2010-08-12 04:36
i like this
Quote | Report to administrator
ஆர்.தாஹா முஹம்மது
0 #9 ஆர்.தாஹா முஹம்மது 2010-08-12 05:14
சபாஷ் என்னுள்ஒளிந்துக ிடக்கும்மார்க்க விஷயங்கள் விடைகளாய் தங்கள்இணைய போட்டியின்வாயி லாகவெளிவருவதை எண்ணி மகிழ்கிறேன் போட்டியில்கலந் துகொள்ள நினைவுபடுத்திய masdooka,இணையதள ம்பற்றிமற்றவர்க ளுக்குசொல்லி கொடுக்கும் புலி அவர்களுக்கும் சுக்ரன்........
Quote | Report to administrator
k.karthic
+1 #10 k.karthic 2010-08-12 06:46
ramzam nonbu vaikum pothu vanthi aduthal nonbu muriuma
Quote | Report to administrator
Basheer
0 #11 Basheer 2010-08-12 09:17
Assalamu alaikum,
Alhamdulillah Allahumma salli alaa muhammadin

Things that invalidate the fast:

One must avoid doing anything that may render one's fast invalid. Things that invalidate the fast and require qada' (making up for these days) are the following:

1) Eating, drinking or smoking deliberately, including taking any non-nourishing items by mouth, nose or anus.

2) Deliberately causing oneself to vomit.

3) The beginning of menstrual or post-childbirth bleeding even in the last moment before sunset.

4) Ejaculation out of sexual excitement from kissing, hugging, etc.

5) Eating, drinking, smoking or having sexual intercourse after Fajr (dawn) on mistaken assumption that it is not Fajr time yet. Similarly, engaging in these acts before sunset on the mistaken assumption that it is already sunset time.

Sexual intercourse during fasting is forbidden and is a great sin. Those who engage in it must make both qada' (make up the fasts) and kaffarah (expiation by fasting for 60 days after Ramadan or to feed 60 poor people for each day of fast broken in this way).

Read more: islamonline.net/.../...
Quote | Report to administrator
M . Muhammad
0 #12 M . Muhammad 2010-08-12 11:36
Dear Karthic

Ramzaan nonbu vaikum pothu vanthi eduthaal nonbu muriyaathu.

Unbathu Paruguvathu , Udaluravu Kolvathu thavira idhara Kaariyangal Nonbai Murikkaathu.

Melum thelivu pera paarkavum

islamkalvi.com/.../index.htm
onlinepj.com/books/nonbu/
Quote | Report to administrator
sadiq
0 #13 sadiq 2010-08-13 11:53
alhamdulillah good idea keep it up
Quote | Report to administrator
Basheer
0 #14 Basheer 2010-08-14 09:04
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ்! அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்..

ச‌கோத‌ரி ஹ‌ஸீனா,
உங்க‌ள் கேள்விக்கான‌ விடை சூரா நிஸாவின் 23ஆவ‌து வ‌ச‌ன‌த்தில் உள்ள‌து.

4:23 உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர் கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால ், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமா க இருக்கின்றான்.

வ‌ய‌து வித்தியாச‌ம் ப‌ற்றி எந்த‌ த‌ய‌க்க‌மும் வேண்டாம். ஏனெனில், ர‌ஸூலுல்லாஹி ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் ம‌னைவிமார்க‌ளில ் ஆயிஷா(ர‌லி)வைத் த‌விர‌‌ அனைவ‌ரும் வ‌ய‌து மூத்த‌வ‌ர்க‌ளே! ஆதலால், க‌வ‌லை வேண்டாம். த‌ங்க‌ளின் ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளை அல்லாஹ் நிறைவேற்றி தருவானாக‌!
Quote | Report to administrator
A.K.IRFANULLAH
0 #15 A.K.IRFANULLAH 2010-08-16 14:50
SATTIYAMARKAM.C OM NALLA BAYANULLA TAGAVALKAL ULLANA ALHAMDU LILAH MELUM SIRAKKA YAN DUVAA NICCAYAM UNDU
Quote | Report to administrator
abu hudhaifa
-2 #16 abu hudhaifa 2010-08-16 20:55
சகோதரர் மஸ்தூக்கா அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.ல ேட்டாக ஒன்றைச்செய்தாலு ம் அதை லேட்டஸ்டாக தரமானதாக செய்வதுதான் சத்திய மார்க்கத்தின் பாணி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ள து.
Quote | Report to administrator
மஸ்தூக்கா
0 #17 மஸ்தூக்கா 2010-08-17 04:26
சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக ்கு அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் இணைய தள கட்டுரைப் போட்டி குறித்து எமது 'தமிழ் இஸ்லாம் அரங்கம்' வலைப்பதிவிலும் வெளியிட்டுள்ளோ ம். பல நண்பர்கள் கேட்கும் கேள்வி. 'முதல் முறை போட்டியில் கலந்து கொள்ளும்போது நேரத்தை கவனத்திற் கொள்ளாமல் இருந்து விட்டோம் பின்னர் சரியான பதிலை தேடிப்பிடித்து தெரிந்து வைத்துக் கொண்டு மறுபடியும் இரண்டாவது முறையாக போட்டியில் கலந்து கொள்ளலாமா? அப்படி ஒருவரே பலமுறை கலந்து கொண்டால் எந்த பதில் கனக்கில் எடுத்துக் கொள்ளப்படும்' என்று கேட்கின்றனர். தயவு செய்து இது பற்றி விளக்கவும். நன்றி
Quote | Report to administrator
அப்துல் பாஸித்
0 #18 அப்துல் பாஸித் 2010-08-18 01:31
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரிய து. இந்த கேள்வி-பதில் மூலம் நான் உள்பட பல சகோதரர்கள் அறிந்திடாத பல செய்திகளை அறிந்து கொள்வார்கள் என் நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ்...

//அவர்களில் மிகக் குறைந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர் பரிசுக்குரியவரா க தேர்வு செய்யப்படுவார்.//

ஆனால் இந்த விதியின் மூலம் குறைவான இணையவேகம் கொண்ட netconnection வைத்திருக்கும் என் போன்றோர் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என்று கருதுகிறேன்.
Quote | Report to administrator
அ.அப்துல் ஹமீத்
0 #19 அ.அப்துல் ஹமீத் 2010-08-20 08:08
னம் சமுதாயத்தவருக்க ு மிகவும் பயனுடையதாக இருக்கும் இன்ஷ அல்லாஹ்
Quote | Report to administrator
j.aneess fathema
0 #20 j.aneess fathema 2010-08-20 08:43
வல்ல இறைவன் அதற்கு உறுதுணையும் அருளும் புரிவானாக!
Quote | Report to administrator
மெய்தீன்
0 #21 மெய்தீன் 2010-08-20 14:21
alhamthulillaha
Quote | Report to administrator
ameerali.m
0 #22 ameerali.m 2010-08-24 14:08
fine

thanks
ameer
Quote | Report to administrator
ashma
0 #23 ashma 2010-09-01 12:18
i will compatite the Islamic Quiz Programme
Quote | Report to administrator
Naseema
0 #24 Naseema 2010-09-06 16:56
அறிவுப்போட்டிகள ை பல தளங்கள் வெளியிடுகிறது. ஆனால் இஸ்லாமிய இனைய தலங்களில் இதுவரை இல்லாத புதிய தொழில் நுட்பம் இது. மிகவும் பிடித்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. தினமும் புதிய போட்டி வெளியிட முடியாதா?
Quote | Report to administrator
javith
0 #25 javith 2010-10-12 19:26
MAASHAA ALLAHA SUPER SUPER
Quote | Report to administrator
asmaa
0 #26 asmaa 2010-10-27 15:15
அஸ்ஸலாமு அழைக்கும், தற்போது அறிவு போட்டிக்கான கேள்வி எதுவும் வெளியாவதில்லை. முந்தைய 7 & 8 க்குரிய விடைகளும் வெளியாகவில்லை ஏன் இந்த தொய்வு . போட்டிகளை ஆர்வமுடன் எதிர்பார்த்திரு க்கிறோம்
Quote | Report to administrator
ஷமீமா
0 #27 ஷமீமா 2010-11-10 18:27
இஸ்லாம் தொடர்புள்ள அறிவு போட்டி எங்கு நடந்தாலும் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வேன்.

நீங்கள் இங்கு நடத்தும் போட்டி தரமானதாகவும் ஹைடெக்காவும் உள்ளது. இது சமுதயாத்திற்கு மிகுந்த பலன் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
Quote | Report to administrator
நீடூர் ஃபைஜு ஹாதி
0 #28 நீடூர் ஃபைஜு ஹாதி 2010-11-30 09:50
அன்பார்ந்த சத்தியமார்க்கம் இணைய குழுவினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தாங்களின் இணையத்தில் அறிவுப்போட்டியி னை நடத்துவது மிக்க மகிழ்ச்சியான செய்தியே.எம்போன ்ற சாதாரன வாசகர்கள் இஸ்லாத்தினை பற்றி அறியாத விஷயங்களை அறிந்துக்கொள்ள பயனுள்ளதாக இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகமதிகம் நடத்துவது இன்றைய தேவையும் கூட என்பதிலும் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

ஆனால், வெற்றியாளர்களை தேந்தெடுக்க தாங்கள் கையாளும் முறையானது திறமையாளர்களை பின்னுக்கு தள்ளவே செய்யும். யாரிடம் இன்டர்நெட் இணைப்பு வேகமாக இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும். பத்து கேள்விகளுக்கு ஒருவர் 30,40,50,60 வினாடிகளில் விடையை தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. கேள்விகளையும், விடைகளையும் படிப்பதற்கே சுமார் 5 நிமிடங்கள் ஆகும் என்பதனை தாங்களும் நன்கு அறிவீர்கள்.

எப்படி இது சாத்தியம் என்பதனையும் நானே விளக்குவதில் தவறில்லை என் நினைக்கிறேன்.
முதலில் போட்டியில் பங்கெடுக்கும் ஒருவர் ஒரு டம்மியான பெயரையும், இமெயில் முகவரியையும் பயன்படுத்தி கேள்விகளையும், பதில்களையும் எழுதிவைத்துக்கொ ள்கிறார். பிறகு நிதானமாக கேளிவிகளுக்கான பதில்களையும் தேடி உறுதிசெய்து கொள்கிறார். எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தப்பிறகு தமது உண்மையான பெயரையும், இமெயில் முகவரியையும் பயன்படுத்தி அனைத்து கேள்விகளுக்கும் சட்டென்று பதில் அளித்துவிடுகின்றனர்.

தாங்களே கூறுங்கள், இப்போது யார் வெற்றிபெற முடியும்? சந்தேகமே வெண்டாம், யாரிடம் வேகமான இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதோ அவர்களே வெற்றிபெற முடியும். இந்த அடிப்படையில் தாங்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தால ் அது முற்றிலும் தகுதியானவர்களைய ும், உண்மையான திறமையாளர்களையு ம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எமது அன்பான வேண்டுகோள்! வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க்க தாங்கள் கையாளும் வழிமுறையை மாற்றினால் நியாயமாகவும் இருக்கும். இஸ்லாமியர்கள் இஸ்லாத்தினை பற்றி அறிந்துக்கொள்ள தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி மென்மேலும் சிறப்படைய அல்லாஹ் போதுமானவன்.

வஸ்ஸலாம்!

நீடூர் ஃபைஜு ஹாதி
Quote | Report to administrator
Mandapam Ali Akbar
0 #29 Mandapam Ali Akbar 2010-12-02 12:00
அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு

அறிவு போட்டியில் கலந்து கொண்டு 10 / இல் 9 கேள்விகளுக்கு விடை அளித்தவர்களுடைய ே பெயரையும் நீங்கள் பிரசுரித்தால் மற்ற அனைவருக்கும் ஆர்வம் அதிகரிக்கும் இந்த சிறியவனின் யோசனையே பரிசீலிக்கவும்

அன்புடன்
அலி அக்பர்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #30 சத்தியமார்க்கம்.காம் 2010-12-02 12:17
வெற்றியாளர்களைத ் தேர்ந்தெடுக்க கையாளும் வழிமுறைகளைப் பற்றிய தமது அழகிய ஆலோசனைகளை தெரிவித்த வாசகர்களுக்கு மிக்க நன்றி! கீழ்க்கண்ட சுட்டியில் இதற்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள ்ளது என்பதை அறியவும்.

அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம்!
www.satyamargam.com/1589
Quote | Report to administrator
H.Md.Shafiullah Basha
0 #31 H.Md.Shafiullah Basha 2011-01-01 12:43
Alhamdulillah , oru iniya sandarpatthai Allah tala ungal moolamaga nam samudayattukku airpaduttiullaa n.
Nanmaiyai naaduorukku idu payanalikkum.In shaallah
Quote | Report to administrator
jailani
0 #32 jailani 2011-01-20 10:06
assalamu alikum
Quote | Report to administrator
MS Asmaa
0 #33 MS Asmaa 2011-01-25 02:24
அஸ்ஸலாமு அலைக்கும், சத்திய மார்க்கம் நிர்வாகத்திற்கு - தங்களது அறிவு போட்டிக்கான பரிசு இது வரை இரண்டு / மூன்று பேர் தவிர யாருக்கும் பரிசு கிடைத்ததற்கான பின்னூட்டமும் இல்லை. ஏனென்றால் எனக்கே நிறைய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன ். இது வரை எந்த பரிசும் நான் அனுப்பிய முகவரியில் கிடைக்கவில்லை. இனியாவது சரி செய்ய பாருங்கள், இல்லையென்றால் தங்கள் இணைய தளம் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும்.
Quote | Report to administrator
முஹம்மது ஸாலிஹ்
0 #34 முஹம்மது ஸாலிஹ் 2011-01-29 16:24
அஸ்ஸலாமு அலைக்கும், சத்திய மார்க்கம் அறிவு போட்டி குழுவினர்க்கு, தங்களது அறிவு போட்டி 22 ல் ஒரு கேள்வியில் - ஒன்றாக இருந்த வானங்களையும் பூமியையும் அல்லாஹ்வே பிரித்தான் அத்தியாயம் வசனம் ? இதற்கான பதிலுக்கான வசனத்திற்கு தங்கள் கொடுத்த நான்கு வாய்ப்பும் தவறு (21 : 25 , 21 : 35, 21 : 45 & 21 : 55 ) ஆனால் அதன் சூரா எண் 21 : 30 - கேள்வியை திருத்தி கொள்ளவும்
Quote | Report to administrator
முஹம்மது கவ்ஸ்
0 #35 முஹம்மது கவ்ஸ் 2011-01-31 21:23
Assalaamu alaikum va rah....... This Compitation is very use full to develop our islamic knowledge, Thank you Please keep cont
Quote | Report to administrator
முஹம்மது கவ்ஸ்
0 #36 முஹம்மது கவ்ஸ் 2011-01-31 21:37
Assalaamu alaikum, inimayana poatti thodarndhu nadai pera dhu'aa seivom .
Quote | Report to administrator
முஹம்மது கவ்ஸ்
0 #37 முஹம்மது கவ்ஸ் 2011-02-05 12:39
இன்ஷா அல்லாஹ் இறைவன் தங்கள் முயற்சிக்கு நற்கூலி நல்குவானாக ஆமீன்
Quote | Report to administrator
umamah
0 #38 umamah 2011-02-17 10:19
சத்திய மார்க்கம் 24ஆவது வினா விடைப் போட்டியில் 9ஆவது கேள்வியில் 1ஆவது விடை தவறாகத் தரப்பட்டுள்ளதென நினைக்கிறேன்.ஏன ெனில், சூறா அந்நூரில் 64 வசனங்களே உள்ளன.
நன்றி ! வஸ்ஸலாம்
Quote | Report to administrator
அப்துல்லாஹ் M
0 #39 அப்துல்லாஹ் M 2011-02-18 06:57
தவறான விடைக்கு வசன எண்கள் குறிப்பிடும் போது அது தவறல்ல், அத்தியாய எண்ணே 115என்றும் வசனம் 115என்றும் போட்டாலும் அதை தவிர்த்து நாம் சரியான விடையை அளிக்க வேண்டும்.
Quote | Report to administrator
meharban
0 #40 meharban 2011-04-19 15:54
assalamu alaikum
menmelum ennda satya margam valaratum .matrum arivo pootyi 30 adavadu tadai ullada ennal kalandu kolla mudiya villai click saidal edo tadai ulladu pls parkkaum
Quote | Report to administrator
shahul
0 #41 shahul 2014-09-01 10:51
yeppadi arivuppottiyil kalandhu kolvathu
Quote | Report to administrator
Mohamed saheel
0 #42 Mohamed saheel 2016-09-03 08:37
Sirantha potti.. Marks Arivu atra varhaluku arivai petru kolla sirntha murai.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்