முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஹாரூன் யஹ்யா

களி தின்னும் கிளிகள்சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும்! ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்தச் செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.

ஆங்கிலத்தில் 'மகாவ்' (MACAW)என அழைக்கப்படும் இந்தக் கிளியினம், விஷ விதைகளை உணவாக உட்கொண்டாலும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லையே, எப்படி? என்கிற கேள்வி, விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் கிளியினத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அவைகளிடம் உள்ள முற்றிலும் வித்தியாசமான நடத்தையை அறிய முடிந்தது.

அவை உணவாக உட்கொள்ளக்கூடிய, ஆனால் விஷத்தன்மையுள்ள விதைகளை உட்கொண்டதும், இந்தக் கிளிகள் பாறை போன்ற ஒரு இடத்திற்குப் பறந்து செல்கின்றன. அங்குள்ள பாறைகளை கொஞ்சம், கொஞ்சமாக அரித்து களிமண் தன்மை கொண்ட பாறைகளை விழுங்குகின்றன. இவ்வாறு களிமண் தன்மை கொண்ட பாறைகளைக் கிளிகள் விழுங்கும் இந்தச் செயல், எந்தவித நோக்கமும் இன்றிச் செய்யக்கூடிய செயல் அல்ல. உண்மையிலேயே, அவை விழுங்கக் கூடிய களிமண் தன்மை கொண்ட பாறைகள், கிளிகள் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடுகின்றன. எனவேதான் இந்தப் பறவையினம் விஷத்தன்மை உள்ள விதைகளை உணவாக உட்கொண்டாலும், எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.

இந்தப் பறவையினம், விஷத்தன்மை உள்ள விதையைச் செரிக்க வைக்கக்கூடிய மருத்துவ அறிவை எப்படிப் பெற்றுக் கொண்டது? இந்தப் பறவையினம், தான் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் வித்தையை எப்படிக் கற்றுக் கொண்டது?

ஒரு தாவரவிதையைப் பார்த்தவுடன், அது விஷத்தன்மை உள்ளதா? இல்லையா? என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களால்கூட தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிந்து கொண்டாலும், அந்தத் தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையைப் போக்க மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மனிதர்களால் முடியாத காரியம். விஷத்தன்மையைப் போக்க வேண்டுமெனில், அதைப்பற்றிய விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, சாதாரண மனிதர்களால் தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையை இல்லாமல் செய்ய முடியாது. ஆறறிவு படைத்த மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, ஐந்தறிவு படைத்த பறவையினம் மருத்துவம் கற்றுக் கொண்டு, விஷத்தன்மௌ உள்ள தாவரவிதையில் உள்ள விஷத்தை இல்லாமல் ஆக்குவது என்பது நடக்காத காரியம்.

மனிதன் பல வருடங்கள் படித்து, ஆய்வுசெய்து பெறக்கூடிய மருத்துவ அறிவு, கிளிகளுக்கு எதேச்சையாக கிடைத்திருக்கும் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நிச்சயமாக ஏற்றக்கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே கிளிகளுக்கு இந்த அறிவை வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று, கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

'அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையில் உள்ளவற்றையும் உண்மையையும், குறிப்பிட்ட ஒரு தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.' (அத்தியாயம் 30 ஸூரத்துர் ரூம் - 8வது வசனம்).

மொழியாக்கம் : அபூ இஸாரா

Comments   

A.Salaam
0 #1 A.Salaam -0001-11-30 05:21
Assalaamu Alaikkum
Alhamdulillaah its really amazing.....
கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

A.Salaam
Quote | Report to administrator
Abdul hadi baquavi
0 #2 Abdul hadi baquavi 2009-11-11 10:59
மாஷா அல்லாஹ்.
30 : 06 என்பது தவறு. 30: 08 என்பதே சரி. கவனிக்க.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #3 சத்தியமார்க்கம்.காம் 2009-11-11 12:11
அன்புச் சகோதரர் அப்துல் ஹாதி பாக்கவி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் சுட்டிக் கட்டிய பிழை, திருத்தப் பட்டது.

ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
faris
0 #4 faris 2012-09-08 06:33
al-hamthulillah , do best
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்