முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படி அறிவுப்பூர்வமாக கேட்டவர்களே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் என்று பிரிந்து நிற்கிறார்கள்; ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எப்படியோ அது எனக்குத்தேவையில்லை.

இதனால் எனக்கு குழப்பமாக உள்ளது. இன்று பெருநாள் தொழுவதா? இல்லை நாளை தொழுவதா? என்று குழப்பம். அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று பெருநாள் மட்டும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் வேறுபடுமா? ஒரே நாளில் பெருநாள் கிடையாதா? ஷரிஅத் அடிப்படையில் ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை என்று கொண்டாட, குறிப்பாக தொழ வேண்டும்? விளக்கம் தேவை.
வஸ்ஸலாம் - முகம்மது சாதிக்.

தெளிவு:

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!

மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற அவாவில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் முகம்மது சாதிக் அவர்களுக்கு மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.

சமூகத்தில் பாமர முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமின்றி அறிஞர்களுக்கிடையேயும் நீண்டகாலமாக நிலவும் குழப்பமான ஒரு விஷயத்தைத் தொட்டு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒத்தக் கருத்து இல்லாத விஷயங்களில் ஓரளவாவது தெளிவு ஏற்படும் வரை மார்க்க அறிவு முழுமையாகப் பெறாதப் பாமர முஸ்லிம்கள் எந்நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே இத்தகைய ஒன்றுக்கு மேற்பட்டக் கருத்துகள் நிலவும் விஷயங்களில் சந்தேகங்கள் எழ அடிப்படைக் காரணமாகும். இத்தகைய விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் எனில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

தொலைதூரத் தகவல் தொடர்பு ஏற்படாத காலத்தில் அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அவர்கள் முடிவு செய்யும் நாளே பெருநாளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அக்காலத்தில் ஆசியா கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் எந்நாளில் பெருநாள் கொண்டாடினார்கள் என ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தெரியாது.

ஆனால், இன்று உலகம் சுருங்கி விட்டதோ எனும் அளவுக்கு உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தையும் அந்த நிமிடத்திலேயே உலகம் முழுவதும் அறிவித்து விடும் அதிவேக நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை இக்கால மக்கள் பெற்றிருக்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என முஸ்லிம் மக்கள் வெவ்வேறு நாட்களில் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு வித்தியாசமான நாட்களில் பெருநாளைக் கொண்டாடுவது அதிவேகத் தகவலாக அறிவிக்கப்பட்டு இதனால், முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒரே நாளில் ஏன் பெருநாள் கொண்டாடுவதில்லை? என அநேகரிடையே கேள்வியை எழுப்புகிறது.       

சகோதரர் எழுப்பியுள்ளக் கேள்வி இன்று அவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகம் முழுமையாக வியாபித்துக் காணப்படும் குழப்பமே இக்கேள்வியின் ஊற்று கண்ணாகும். சகோதரர்கள் முதலில் அடிப்படையாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கம் என்பது எப்பொழுதுமே தெளிவானது தான். அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே சில வேளைகளில் ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன. அது அவரவர்களின் ஆய்வு திறன், கல்வியறிவு, ஒரு பிரச்சனையை ஆழமாகக் கூர்ந்து நோக்கும் திறமை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றது.

இவ்வாறு கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களைப் பொறுத்தவரை அதனை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருபவர்களுக்கு அவ்வாய்வுகள் தவறாக இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு நன்மை கிடைத்து விடுகின்றது. சரியாக இருந்து விட்டால் இரு நன்மையும்.

இங்கு மற்றவர்களைக் குறித்துத் தான் பிரச்னையே. மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்துப் பின்பற்ற இயலாதப் பாமரன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் கிடைத்து விட்டால் இங்கு கேட்கப்பட்டுள்ள பெருநாள் போன்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் கொண்ட விஷயத்தில் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதுத் தெளிவாகி விடும்.

இஸ்லாம் எப்பொழுதுமே இபாதத் சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. அது தொழுகையாக இருந்தாலும் சரி, ஹஜ்ஜாக இருந்தாலும் சரி, ஜக்காத்தாக இருந்தாலும் சரி.

இதன் அர்த்தம், இஸ்லாம் எச்செயலின் மூலமும் சமூகத்தில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த நாடுகின்றது என எடுத்துக் கொள்ளலாம். அது போன்றே இந்தப் பெருநாள் விஷயத்திலும் தற்போதைய குழப்ப நிலைக்கு இஸ்லாம் ஒரு தீர்வை முன்வைக்கிறது.

'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

இதனை மனதில் கொண்டு இன்றைய முஸ்லிம்களின் சமூகச் சூழலை எண்ணிப் பார்த்தால் ஒட்டு மொத்தமாக இப்பெருநாள் விஷயத்தில் அது பின்பற்றப்படாமையைக் கண்டு கொள்ளலாம். அதற்காக பிளவுப்பட்டு வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதில்லை. சமூக ஒற்றுமைக்காக அறிஞர்கள் தங்கள் பிடிவாதங்களைச் சற்றுத் தளர்த்திக்கொண்டு (அருகருகே அமைந்த ஊர்களிலாவது) ஒரே நாளில் பெருநாள் கொண்டாடக் கருத்தொற்றுமை ஏற்படுத்த முன்வர வேண்டும், இறைவன் அருள் புரியட்டும். நாம் வேணவாவுடன் ஏங்கிக் கிடக்கும் உலகளாவிய இஸ்லாமிய இமாரத் ஒன்று ஏற்பட்டு, இதற்கு முடிவான தீர்வு கிடைக்கும்வரை  பாமர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் சார்ந்திருக்கும் அந்தந்த ஊர் ஜமாஅத் முடிவு செய்யும் நாளில் அவ்வூர் மக்களுடன் இணைந்துப் பெருநாள்/தொழுகை நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   
M.G.ஃபக்ருத்தீன்
0 #1 M.G.ஃபக்ருத்தீன் -0001-11-30 05:53
சகோ. சாதிக் இந்த கேள்வியை கேட்காவிடின், சத்தியமார்க்கத் திற்கு எனது அடுத்த கேள்வி இது குறித்துதான் இருந்திருக்கும் . மிகச் சுருக்கமாக இருந்தாலும் இதன் விளக்கம் நன்கு புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.... அல்ஹம்துலில்லாஹ ். ஆனாலும் வெகுஜன மக்களுக்கு இது குறித்து இன்னும் விரிவான தேட்டம் இருக்கத்தான் செய்யும். எனவே இதைப் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை சத்தியமார்க்ம் வெளியிடவேண்டும் . அல்லாஹ் அருய் புரிவானாக!
Quote | Report to administrator
ஜமீல்
0 #2 ஜமீல் -0001-11-30 05:53
அன்புச் சகோதரர் -ஃபக்ருத்தீன்,

ஆய்வுகள் தேவைதான். என்றாலும் ஆய்வுகள் செய்வதற்கு ஆகும் காலமும் தீர்வுகள் பெறுவதற்கு ஆகும் காலமும் தீர்வுகள் குறித்து எதிரெதிர்க் கருத்துகள் ஏற்பட்டு அவை ஒரு முடிவுக்கு வருவதற்கு ஆகும் காலமும் எனக் கணக்கிட்டுக் கொண்டே இறுதி முடிவை எட்டுகின்ற வரைக்கும் சத்தியமார்க்கம் .காம் மூலம் பெறப் பட்டிருக்கும் இந்தத் தீர்வு, பின்பற்றுவதற்கு எளிதாகவே இருக்கும் என்பது எனது கருத்து.
Quote | Report to administrator
மட்டுறுத்துனர், சத்தியமார்க்கம்.காம்
0 #3 மட்டுறுத்துனர், சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:53
நீங்கள் உங்கள் ஆய்வை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

- nuzrath bin nalir.

சகோதரர் நஸ்ரத் பின் நளீர்,

யூனிகோடு தமிழில் தட்டச்ச நமது தளத்தில் உள்ள செயலியைப் பயன்படுத்துங்கள ்: www.satyamargam.com/.../

மட்டுறுத்துனர், சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator
அபூ இம்தியாஸ்
0 #4 அபூ இம்தியாஸ் -0001-11-30 05:53
/'அந்தந்த ஊர் ஜமாஅத் முடிவு செய்யும் நாளில் அவ்வூர் மக்களுடன் இணைந்துப் பெருநாள்/தொழுகை நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும்.'

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை, காரணம் அநேக ஊர்களில் ஜமாஅத்தின் தலைமை மார்க்க அறிவில் தெளிவில்லாமையால ்தான் இது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. நம்மால் அல்லாஹ் நமக்கு தந்துள்ள நம் சுய அறிவால் சிந்தித்து முடிவெடுப்பதுதா ன் சிறந்தது என்பது என் கருத்து. அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
அல் அமீன்
0 #5 அல் அமீன் -0001-11-30 05:53
//காரணம் அநேக ஊர்களில் ஜமாஅத்தின் தலைமை மார்க்க அறிவில் தெளிவில்லாமையால ்தான் இது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன//

காரணம் என்ன எனத் தெரிந்தப் பின் காரணத்தைச் சரி செய்ய முனைவதை விடுத்து....... ......
Quote | Report to administrator
அபூ இம்தியாஸ்
0 #6 அபூ இம்தியாஸ் -0001-11-30 05:53
நன்றி அல்அமீன்,காரணம் தெரிந்தபின் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் ஊர் ஒதுக்கப்பட்டு அவமானப் படுத்தப் பட்டு சொந்த ஊரை விட்டே வெளியேற வேன்டிய பரிதாப நிலைக்கு தள்ளப் பட்ட பல சகோதரர்களை அறிவேன். இது தனி மனிதனால் முடிகிற ஒண்றல்ல, இதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் திசை மாறி பயணம் செய்வதும் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.எனவே அல்லாஹ்வின் உதவியால் நாம் நமது முகல்லாவில் நம்மால் ஆன முயற்சியை முன்னெடுப்போம், வல்லோன் உதவி செய்வானாக ஆமீண்.
Quote | Report to administrator
அல் அமீன்
0 #7 அல் அமீன் -0001-11-30 05:53
பதிலுக்கு நன்றி சகோ. அபூ இம்தியாஸ்.

//காரணம் தெரிந்தபின் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் ஊர் ஒதுக்கப்பட்டு அவமானப் படுத்தப் பட்டு சொந்த ஊரை விட்டே வெளியேற வேன்டிய பரிதாப நிலைக்கு தள்ளப் பட்ட பல சகோதரர்களை அறிவேன்.//

இஸ்லாம் புனர் நிர்மாணிக்க முயற்சிகள் எடுக்கப்படும் இடங்களில் எல்லாம் நிச்சயம் இது போன்ற சோதனைகள் இருக்கத்தான் செய்யும். அதற்கு நமது நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்வே மிகப்பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறதே. ஷாபே பள்ளத்தாக்கில் அவர்கள் குடும்பத்துடன் சுமார் இரு வருடங்களுக்கும் மேலாக ஊர் விலக்கி வைக்கப்பட்டு குடிக்க நீர் கூட இன்றி துன்பப்பட்டதை விட தற்போதைய ஊர் விலக்கல்களால் மிகப்பெரும் துன்பம் ஒன்றும் நமக்கு நேர்ந்து விடப்போவதில்லைய ே?.

அவ்வாறான சோதனைகள் வரின், அதனை தூய எண்ணத்தில் இஸ்லாமியப் பணிகளில் வரும் சகோதரர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து த் தனக்கு வைக்கப்படும் எளிய சோதனையாகவே எடுத்துக் கொள்வார்கள். ஆகவே அதனைக் குறித்து நாம் பெரிதாகக் கவலைப்பட ஒன்றும் இல்லை.

//இதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் திசை மாறி பயணம் செய்வதும் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.//

ஒன்றும் சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை. மறைந்த அறிஞர் மௌதூதி அவர்கள் 'இஸ்லாம் -நேற்று, இன்று, நாளை' என்ற ஓர் புத்தகத்தில் இதனைக் குறித்து எழுதிய ஓர் வாசகம் நினைவுக்கு வருகின்றது.

'இஸ்லாத்தின் எழுச்சிக்காக, விடுதலைக்காக இஸ்லாத்தின் பெயர் கூறி மக்களை ஒருங்கிணைத்த இயக்கங்கள் தாங்களே எதிர்பார்க்காத வளர்ச்சியையும் வெற்றியையும் கண்ட வேளைக்குப் பின்னர், தங்களின் வளர்ந்த இயக்கத்தையும் அதில் உள்ள உறுப்பினர்களையு ம் தக்க வைப்பதிலேயே பின்னர் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டனர். சுருக்கமாக, இஸ்லாத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களின் செயல்பாடுகள், பின்னர் இயக்கங்களின் வளர்ச்சிக்காகவு ம் நிலைநிற்பிற்காக வும் இஸ்லாத்தைப் பயன்படுத்தும் வெறுக்கப்பட்ட நிலைபாட்டுக்குத ் தங்களை மாற்றிக் கொண்டன'.

//எனவே அல்லாஹ்வின் உதவியால் நாம் நமது முகல்லாவில் நம்மால் ஆன முயற்சியை முன்னெடுப்போம், வல்லோன் உதவி செய்வானாக ஆமீண்.//

ஆம். இது தான் நாம் செய்ய வேன்டியது. அவரவரால் இயன்றதை அவரவர் அங்கமாக இருக்கும் ஊர் முகல்லாக்களில் செய்வதற்கும் எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் ஊர் முகல்லாக்களில் இருந்துத் தங்களை விடுவித்துக் கொண்டு பிளவுபடுத்துவதற ்குத் தாங்களே முன்னுதாரணமாக இருந்து விடாமலும் கவனித்துக் கொண்டால் போதும். இன்ஷா அல்லாஹ் வெற்றிகளையும் மாற்றங்களையும் உருவாக்க இறைவன் போதுமானவன்.
Quote | Report to administrator
அபூ ஆயிஷா
0 #8 அபூ ஆயிஷா -0001-11-30 05:53
\ நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!' என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ள ார்கள். (புகாரி) \

அல்-குர் ஆனிலாகட்டும் அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸிலாகட்டும் ஒரு விடயம் சம்பந்தமாக ஆளப்படும் எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தையோ அல்லது பத்தியையோ அழகு படுத்துவதற்காகச ் சொல்லப்பட்டவையல ்ல. நிச்சயமாக, அந்தச் சொற்களுக்குப் பாரிய அர்த்தங்கள் உண்டு.
\ நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம்.\
இந்த அர்த்தங்கள் புரியப்பட வேண்டும். முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அப்படிப் பின்பற்றுவது வழிகேட்டில் கோண்டு சேர்த்துவிடும். இதுதான் யதார்த்தம். இதுதான் சத்தியம். இதுதான் உண்மை.

\அன்றியும் உமக்கு அறிவு வந்ததன் பின்னும் அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றுவீரானா ல், அல்லாஹ்விடமிருந ்து (உம்மைக் காப்பாற்றுகிற) எந்தப் பாதுகாவலனும், எவ்வித உதவி செய்பவனும் உமக்கில்லை.\ (குர் ஆன் 2:120)

\பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கு காலம் காட்டுகின்றது, ஹஜ்ஜை அறிவிக்கின்றது' ' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.\ (அல்குர்ஆன் 2:189

மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸ்கள், அல்-குர் ஆன் வசனங்களையும் பார்த்துச் சிந்தித்தால் உலகம் முழுமைக்கும் ஒரு பிறைதான் என்பது விளங்கும். அனைத்தையும் பார்க்கிறவன், கேட்கிறவன், இயக்குபவன், ஞானமிக்கவன் அல்லாஹ்தான் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் தீர்வுகள் குர் ஆனிலும் ஹதீஸிலும் உண்டு. நான் என்ற தொப்பியைப் போட்டுக் கொண்டால் கண்கள் திரையிடப்படும், காதுகள் அடைக்கப்பட்டு விடும், இதயம் பூட்டப்பட்டு விடும்.

நமது அறிஞர்களின் உள்ளங்கள் தூய்மையாவதற்காக எங்களுக்கு பிரார்த்திக்க மட்டும்தான் முடியும். பிரார்தனைகளின் தாக்கம் பிரார்த்திப்பவர ் எவ்வாறு உளத்தூய்மையுடன் இருக்க வேண்டுமோ அவ்வாறே பிரார்த்திக்கப் படுபவரும் அல்லாஹ்விடம் பரிபூரணமாகத் தம்மை ஒப்படைத்தவராக இருக்க வேண்டும். நான் அறிஞன் சட்ட வல்லுனன், என்னை விட்டால் வேறு யார் என்ற மமதையில் இருந்தால் அல்லாஹ்தான் நம்மனைவரையும் காப்பாற்றத் தகுதி படைத்தவன்.

பிழையான ஆய்வுகளைச் செய்துவிட்டு அதில் மனமுரண்டாக இருப்பவர்களைப் பின்பற்றி நமது வணக்கங்களை ஏன் பழுதாக்கிக் கொள்ள வேண்டும்?

அல்லாஹ் நம்மனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவைத் தந்து அருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்
Quote | Report to administrator
abdul hadhi-kdnl.
0 #9 abdul hadhi-kdnl. -0001-11-30 05:53
ஆய்வுகள் தேவைதான். என்றாலும் ஆய்வுகள் செய்வதற்கு ஆகும் காலமும் தீர்வுகள் பெறுவதற்கு ஆகும் காலமும் தீர்வுகள் குறித்து எதிரெதிர்க் கருத்துகள் ஏற்பட்டு அவை ஒரு முடிவுக்கு வருவதற்கு ஆகும் காலமும் எனக் கணக்கிட்டுக் கொண்டே இறுதி முடிவை எட்டுகின்ற வரைக்கும் சத்தியமார்க்கம் .காம் மூலம் பெறப் பட்டிருக்கும் இந்தத் தீர்வு, பின்பற்றுவதற்கு எளிதாகவே இருக்கும் என்பது எனது கருத்து.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்