முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக
ஐயம்:
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
 
நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும் மரணித்து விட்டார். எங்கள் தந்தை சுயமாக எதுவும் சம்பாதிக்கவில்லை. எங்கள் பாட்டனாருடைய வயல், தோப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த அபரிமிதமான வருமானத்தின் மூலம் எங்கள் குடும்பம் செழிப்புடன் வாழ்ந்து வந்தது.
 

எங்கள் ஊரில் பெண்களுக்குச் சீதனமாக வழங்கப் படும் நகைகளோடு தனியாக ஒரு வீடும் சீதனமாகக் கொடுப்பது வழக்கம். சொத்துப் பிரிவினை என்று வரும்போது, பெண்களுக்கு வயல், தோப்புகளில் பங்கில்லை என்பதும் எங்கள் ஊர் வழக்கமாகும். அதற்குக் காரணம் ஆண்களுக்குப் பெற்றோர் வழியாக வீடு கிடைப்பதில்லை, மாறாக மனைவியின் வீட்டிலேயே ஆண்கள் வாழ்ந்துக் கொள்வர். இவ்வழக்கம் பன்னெடுங் காலமாக நடைமுறையில் உள்ளது.

எங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்வதற்காக எங்கள் பாட்டனாரின் சொத்துகளில் பாதிக்கு மேல் விற்கப் பட்டன. தற்போது மீந்திருக்கும் எங்கள் பாட்டன் வழிச் சொத்தை நாங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். பலரும் பலவாறு பாகப் பிரிவினை செய்து கொள்ளக் கூறுகின்றனர்:

1. எங்களின் சகோதரிகளுக்குக் கொடுத்த வீடுகள் பாட்டன் வழிச் சொத்துகளை விற்றுக் கிடைத்த பணத்தில் கட்டப் பட்டதால் அந்த நான்கு வீடுகளையும் மீந்திருக்கும் வயல், தோப்புகளையும் கணக்கிட்டு, மொத்தமாக்கி, ஆண்களுக்கு இரண்டு பங்கென்றும் பெண்களுக்கு ஒரு பங்கென்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. ஊர் வழக்கப்படி சகோதரிகளுக்குச் சொத்தாக வசதியான வீடு கிடைத்து விட்டதால் வயல், தோப்புகளை மூன்று சகோதரர்களும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. சகோதரிகளுக்குக் கொடுக்கப் பட்ட வீடு சீதனத்தில் அடங்குவதால் மீந்திருக்கும் வயல், தோப்புகளிலும் அவர்களுக்குப் பங்கு உண்டு.

இந்நிலையில் எங்கள் பாட்டன் வழிச் சொந்தாக மீந்திருக்கும் வயல், தோப்புகளை நாங்கள் எவ்வாறு பாகப் பிரிவினை செய்து கொள்வது என்பதை இஸ்லாத்தின் அடிப்படையில் விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்.

-எம்.ஏ.ஏ - அதிராம்பட்டினம்

தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

கேள்வியில் அடிப்படையாகவே சில தவறான கருத்துகள் இருக்கின்றன. அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அவற்றுக்கான விளக்கத்தை முதலில் பார்ப்போம்.

1. ''இது எங்கள் பாட்டன் சொத்து'' என்று கேள்வியில் உள்ளது. பாட்டன் சொத்துகள் பேரப்பிள்ளைகளுக்கு என இந்திய சட்டம் ஒரு வகுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை நியாயப்படுத்தும் விதமாகவே சில ஊர்களில் ''இது எங்கள் பாட்டன் சொத்து'' என அழுத்தமாக சில முஸ்லிம்கள் சொல்லி வருகிறார்கள். இது இஸ்லாத்தில் இல்லாத கருத்து என்பதை விளங்க வேண்டும்.

தந்தையின் தந்தை பாட்டனாராவார். அந்தப் பாட்டனாருக்கு வாரிசுகள் இல்லையென்றால் பேரப்பிள்ளைகள் என்ற உறவும் இல்லை. பாட்டானாருக்கு மகன் என்ற வாரிசு இருந்து, அந்த மகனின் வாரிசுகளே தந்தையின் தந்தையைப் "பாட்டனார்" என்று அழைக்கவும், பாட்டன்-பேரன் என்ற இரத்த உறவையும் ஏற்படுத்தும்.

''எங்கள் தந்தை எதுவும் சுயமாக சம்பாதிக்கவில்லை'' என்று குறிப்பிடுவதே தவறு. உங்கள் தந்தை, அவரின் தந்தையின் சொத்துக்கு வாரிசு ஆவார். பிறகு நீங்கள், உங்கள் தந்தைக்கு வாரிசுதாரர்களாகி தந்தையின் சொத்துக்கு உரிமையாளர்களாக வருவீர்கள். உங்கள் தந்தை இல்லை என்றால் நீங்களும் இல்லை! அதாவது உங்கள் பாட்டனாருக்கு வாரிசு இல்லாமல் போயிருந்தால் நீங்களும் இல்லை! இதுதான் எதார்த்தம்.

ஊர் வழக்கம்

"கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்).

ஒருவர் மரணித்த பின் அவரின் சொத்துகளை அடைய அவரது வாரிசுதாரர்களே உரிமை பெற்றவர்கள் என்பதை மேற்கண்ட நபிமொழி மிகவும் தெளிவாக விளக்குகிறது.

பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற - நிறைந்த/குறைந்த சொத்துகளில் ஆண்மக்களுக்குப் பங்குண்டு; பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற - நிறைந்த/குறைந்த சொத்துகளில் பெண்மக்களுக்கும் பங்குண்டு. இது அல்லாஹ்வால் விதிக்கப் பட்டதாகும். (பார்க்க: 004:007 திருமறை வசனம்).

ஒருவருடைய சொத்துக்கு ஆண் மக்கள் வாரிசுரிமை பெறுவதைப்போல் பெண் மக்களும் வாரிசுரிமை பெற்றவர்களே என்று மேற்காணும் இறைவசனம் கூறுகிறது.

எனவே மரணித்தவரின் சொத்துக்கள் அவரின் ஆண்/பெண் பிள்ளைகளையே சேரும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால், ஊர் வழக்கம் என இஸ்லாத்திற்கு முரண்பட்ட சட்டங்களை முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்துவது வருந்ததக்க விஷயமாகும்.

ஊர் வழக்கம் என்று ஏற்படுத்திக் கொண்டு பாகப்பிரிவினை எனும் பெயரில் கண்ணுக்குத் தெரிந்தே பெரும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. ஊர் வழக்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த ஒட்டுமில்லை! அதிலும், "பெண்களுக்குத் திருமணச் சீதனமாக நகைகளும் தனியாக வீடும் கொடுத்தே ஆக வேண்டும்" என்ற ஊர் வழக்கம் இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரானது.

திரண்ட செல்வங்களைக் கொண்ட ஒரு செல்வந்தருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் தந்தையின் அனைத்து சொத்துகளுக்கும் (மனைவி, தாய், தந்தையின் பாகம் போக) ஆணுக்கு இரண்டு, பெண்ணுக்கு ஒன்று என இருவரும் வாரிசுக்குரியவர்களாவார்கள். இதில் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் கொஞ்சம் நகைகளும் அவளுக்கென ஒரு வீடும் (ஊர் வழக்கப்படிக்) கொடுத்தால் போதும் என்று 'ஊர் வழக்கத் தீர்ப்பு'ச் சொன்னால், தந்தையின் திரண்ட சொத்துக்கு நேரடி வாரிசாகிய அந்தப் பெண்ணுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கீடு பாகத்தை பிரித்துக் கொடுக்காமல் ஏதோ கொஞ்சம் சொத்துக்களை மட்டும் கொடுத்து அவள் ஏமாற்றப்படுகிறாள்.

செல்வமே இல்லாத, அல்லது குறைந்த அளவே செல்வத்தைப் பெற்றிருக்கும் ஒரு தந்தைக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் அப்போதும் பெண்ணுக்கு சீதனமாக நகைகளும் அவளுக்கென ஒரு வீடும் (ஊர் வழக்கப்படிக்) கொடுக்க வேண்டும் என்றால் தன்னிடம் இல்லாத சொத்துக்களின் தகுதிக்கு மீறி தனது பெண்ணுக்குத் திருமண சீதனமாகக் (கடன் பட்டாவது) கொடுக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படும்போது இங்கு தந்தையும் மகனும் ஏமாற்றப் படுகிறார்கள்.

இப்படி இரு பக்கமும் பாதகத்தை ஏற்படுத்தும் இச்செயல்களை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கிறது. ஒரு தந்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டப் பிள்ளைகள் இருந்தால் அவர்களிடையே சமமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பிள்ளைக்குக் கொடுப்பது போலவே எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இது மட்டுமின்றி,

"ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ, அபூதாவூத்)

பிள்ளைகளிடம் பாராபட்சம் காட்டக் கூடாது என மேற்கண்ட நபிமொழி எச்சரிக்கிறது. இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு ஊர் வழக்கம் எனும் பெயரில் ஆண் பிள்ளைக்குச் சாதகமாகவும், பெண் பிள்ளைக்குப் பாதகமாகவும் பாகப் பிரிவினைப் பங்கீடு செய்வது நியாயமன்று.

வாரிசு உரிமை
 

கேள்வி: நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும் மரணித்து விட்டார்.


இறந்தவருக்கு ஆண் மக்கள் மூவர், பெண் மக்கள் நால்வர் என எழுவரும் தந்தையின் சொத்துக்கு நேரடி வாரிசுதாரர்கள் ஆவீர்கள். தாய் மரணித்து விட்டதால் கணவரின் சொத்தில் மனைவிக்குச் சேர வேண்டிய பங்கு என்பது இல்லை.
 

கேள்வி: எங்களின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்வதற்காக எங்கள் பாட்டனாரின் சொத்துகளில் பாதிக்கு மேல் விற்கப் பட்டன.


தந்தையின் சொத்தில் பாதிக்கு மேல் பெண் மக்களுக்குக் கொடுத்து விட்டு ஆண் மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள், அதாவது பாகப் பிரிவினையின் வாரிசு உரிமையில் இறைவரம்பு மீறப்பட்டுள்ளது என்பது தெளிவு! நடந்த தவறுக்கு காரணமானவர் யார் என்றோ எந்தச் சூழலில் தவறு நிகழ்ந்தது என்றோ ஆராயாமல், தொடர்ந்து அதில் நீடிக்காமல், நடந்துவிட்ட தவறுதனை மனமுவந்துத் திருத்திக்கொள்வதே முஸ்லிம்களுக்கு அழகு.

தீர்வு:

சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு வீடுகளையும் அதோடு மீதம் இருக்கும் தந்தையின் அசையாச் சொத்துக்கள், அசையும் சொத்துக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இன்றைய நிலவரப்படி மதீப்பீடுக்குட்படுத்தி வரும் மொத்த சொத்துக்களில் ஆண் மக்களுக்கு இரண்டு பாகமும், பெண் மக்களுக்கு ஒரு பாகமும் என பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

இதுவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள வாரிசு உரிமையாகும்.
 

கேள்வி: எங்களின் சகோதரிகளுக்குக் கொடுத்த வீடுகள் பாட்டன் வழிச் சொத்துகளை விற்றுக் கிடைத்த பணத்தில் கட்டப் பட்டதால் அந்த நான்கு வீடுகளையும் மீந்திருக்கும் வயல், தோப்புகளையும் கணக்கிட்டு, மொத்தமாக்கி, ஆண்களுக்கு இரண்டு பங்கென்றும் பெண்களுக்கு ஒரு பங்கென்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்.


"இரண்டு பெண்களின் பாகம் போன்று ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்" (மேலும் பார்க்க: 004:11 திருமறை வசனம்)

பாகப் பிரிவினை சட்டம் இறைவன் ஏற்படுத்திய வரம்புகள் என்பதை முஸ்லிமான ஒவ்வோர் ஆணும், பெண்ணும் உணர்ந்திடல் வேண்டும். சொத்துப் பங்கீடு செய்வதில் மனித மனம் விரும்பும் கருத்துக்கு எவ்வித மதிப்பும் இல்லை! குடும்பச் சொத்துகளில் நேர்மையான பங்கீடு செய்யவில்லையெனில் அது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி தலைமுறையாகப் பகைமையை வளர்த்துவிடும்.

''உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர்கள் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்'' (அல்குர்ஆன் 004:011)

''இவை அல்லாஹ்வின் வரம்புகள்'' (அல்குர்ஆன் 004:013)

திருமறை கூறும் பாகப் பிரிவினைச் சட்டம், அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளனான எல்லாம் வல்ல இறைவனால் இயற்றப்பட்டது. வாரிசு உரிமை பெற்ற உறவுகளில் யார் யாருக்கு எவ்வளவு பங்கீடு வழங்க வேண்டும் என்பதை இறைவன் விதித்திருக்கிறான். இச்சட்டங்கள் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 1400 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் இஸ்லாத்திற்கு எதிரான ஊர் வழக்கத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் எச்சரிக்கை பெற வேண்டும்.

''நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி'' (அல்குர்ஆன் 002:208)

என்ற வசனத்தை நினைவு கூருவோம். இறைவன் விரும்பும் வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments   

jafar
-2 #1 jafar -0001-11-30 05:21
அல்ஹம்துலில்லாஹ ்! அருமையான, தெளிவான விளக்கங்கள்!! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!
Quote | Report to administrator
மஸ்தூக்கா
0 #2 மஸ்தூக்கா -0001-11-30 05:21
யாரோ ஒரூ வாசகர் அவர்தம் குடும்ப பாகப்பிரிவினை பற்றி கேட்ட விபரமாக எடுத்துக் கொள்ளாமல், அனைவரும் பயன் பெறும் விதத்தில் மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது 'ஊர் நடை முறை', 'வழக்கத்தில் உள்ளது' என்பன போன்ற வாதங்களை எல்லாம் கண்டித்திருப்பத ு மட்டுமின்றி, இறைவன் வகுத்த நியதிப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்வேண்ட ும் என்பதை அனைவருக்கும் அழகாக உணர்த்திய விதம் பாராட்டத்தக்கது .
Quote | Report to administrator
அப்துல்லாஹ் M
+1 #3 அப்துல்லாஹ் M -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்

ஜஸாக்கல்லாஹு கைர்

//அல்ஹம்துலில்லாஹ்! அருமையான, தெளிவான விளக்கங்கள்!! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!!!//

அல்லாஹ் நம் அனைவரும் அல்லாஹ்வின் வரம்புகளை பேணி அவனுக்கு அஞ்சி வாழும் நலலடியார்களாக வாழ அருள்புரிவானாக.
அப்துல்லாஹ் .M.
Quote | Report to administrator
பரங்கிப்பேட்டை, ஜி.என்
+1 #4 பரங்கிப்பேட்டை, ஜி.என் -0001-11-30 05:21
இந்தக் கேள்விக்கு கொடுக்கப்பட்டு ள்ள பதிலின் சில பகுதிகளை மீண்டும் ஒரு முறை பரிசீலிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

தீர்வு:

சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு வீடுகளையும் அதோடு மீதம் இருக்கும் தந்தையின் அசையாச் சொத்துக்கள், அசையும் சொத்துக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இன்றைய நிலவரப்படி மதீப்பீடுக்குட் படுத்தி வரும் மொத்த சொத்துக்களில் ஆண் மக்களுக்கு இரண்டு பாகமும், பெண் மக்களுக்கு ஒரு பாகமும் என பங்கிட்டுக்கொள ்ள வேண்டும்.
என்று குறிப்பிடப்பட்ட ுள்ளது.

ஏற்கனவே சகோதரிகளுக்கு வழங்கப்பட்டு விட்ட சொத்துக்களையும ் சேர்த்து பாகப்பிரிவினையை செய்ய வேண்டும் என்பதை எந்த ஆதார அடிப்படையில் குறிப்பிட்டுள்ளீர்கள்?

பாட்டனின் சொத்துக்கு மகன் வாரிசாகி அவர் தனது பெண் பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கும் போதே சில சொத்துக்களை (வீடுகள்) கொடுத்துள்ளார் . இது அவரது உரிமை. அப்படிக் கொடுக்கப்பட்ட சொத்துக்களை மீள எடுக்க வேண்டும் என்பது சட்டரீதியானதல்ல .

அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம அளவு கொடுக்க வேண்டும், பிள்ளைகளுக்கு மத்தியில் பாராபட்சம் காட்டக் கூடாது என்பதெல்லாம் சொத்துக்குரியவ ருக்கு சொல்லப்பட்ட அறிவுரைத்தானே தவிர அப்படிக் கொடுக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் அவருக்கு பிறகு பிடுங்கிக் சமமாக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டமல்ல.

தந்தை வழியாக அவர் உயிருடன் இருக்கும் போது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்து (அவை பாராபட்சமாக இருந்தாலும் சரி) அவர் மறைவுக்குப் பிறகு மீண்டும் ஒருங்கிணைத்துப் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்.

அடுத்து நீங்கள் எடுத்துக்காட்டி யுள்ள ஹதீஸும் தவறான கருத்தில் புரியப்பட்டுள்ளது.

'ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ, அபூதாவூத்)

இந்த ஹதீஸ் உயில் எழுதுவதைத்தான் தடைசெய்கின்றது. உயில் என்பது ஒருவரது மறைவுக்குப்பிறக ு நடைமுறைக்கு வரும் சட்டமாகும். ஒருவரது மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்று இறைவன் வகுத்து விட்டதால் என் மறைவுக்கு பிறகு இந்த விதத்தில் சொத்தைப் பிரியுங்கள் என்று சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்பதைத்தான் அந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது. (இருப்பினும் இந்த ஹதீஸின் கருத்தை இன்னும் ஆய்வுக்குட்படுத ்த வேண்டும். இயன்றால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைக் கொடுங்கள்)

மாறாக அவர் உயிருடன் இருக்கும் போது பிறருக்கு கொடுத்த சொத்துப்பற்றிய எந்த குறிப்பும் இந்த ஹதீஸில் இல்லை.

பாகப்பிரிவினைப் பற்றி பேசும் வசனங்களில் 4:7,8 வசனங்களில் ''மரணித்தவர் விட்டு சென்ற சொத்து'' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்ட ுள்ளது.

விட்டு சென்றது என்பது அவருக்கு உரிய, அவர் பெயரில் இருக்கக் கூடிய சொத்துக்களைக் குறிப்பதாகும். பிறருக்கு அவர் கொடுத்து விட்ட சொத்து அவர் விட்டு சென்ற சொத்தாக ஒரு போதும் ஆகாது.

எனவே இந்த பதிலில் குறிப்பிடப்பட்ட ுள்ள பெண்களுக்கு கொடுக்கப்பட்டு ள்ள சொத்தையும் சேர்த்து கணக்கு பார்த் பிரிக்க வேண்டும் என்பது சட்டத்துக்குட்ப ட்டதாக தெரியவில்லை. மீண்டும் பதிலை பரிசீலியுங்கள்.
Quote | Report to administrator
ஹாஜியார்
+1 #5 ஹாஜியார் -0001-11-30 05:21
//அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம அளவு கொடுக்க வேண்டும், பிள்ளைகளுக்கு மத்தியில் பாராபட்சம் காட்டக் கூடாது என்பதெல்லாம் சொத்துக்குரியவ ருக்கு சொல்லப்பட்ட அறிவுரைத்தானே தவிர//

தவறாகப் படுகிறது.

பாகபிரிவினை குறித்து இன்னின்னாருக்கு இன்னின்ன விகிதத்தில் சொத்துக்கள் பங்கிட வேண்டும் எனவும் பாரபட்சம் காட்டப்படக்கூடா து எனவும் இஸ்லாம் கூறுவது அறிவுரையா? சட்டமா?

சட்டம் எனில் அது தீர்க்கமாக நடைமுறைபடுத்தப்படவேண்டியது.

அறிவுரை எனில், தீர்க்கமாக நடைமுறைபடுத்த வேண்டிய அவசியமற்றது.

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?

-ஹாஜியார்.
Quote | Report to administrator
அல் அமீன்
-1 #6 அல் அமீன் -0001-11-30 05:21
ஊர் வழக்கம் என்ற பெயரில் இஸ்லாம் வகுத்தச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் மக்களிடையே பாரபட்சம் காட்டிய செயல்பாட்டை திருத்திக் கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பதிலளித்துள்ளீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ். பதில் ஏற்றுக் கோள்ளூம் படி உள்ளது.

//ஆண்களுக்குப் பெற்றோர் வழியாக வீடு கிடைப்பதில்லை, மாறாக மனைவியின் வீட்டிலேயே ஆண்கள் வாழ்ந்துக் கொள்வர். இவ்வழக்கம் பன்னெடுங் காலமாக நடைமுறையில் உள்ளது.//

ஆனால் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இஸ்லாமிய சட்டத்திற்குப் புறம்பான வழியில் சொத்திலிருந்து வீடு கொடுத்ததற்குக் காரணமாகக் கேள்வியில் குறிப்பிடப்பட்ட இவ்விஷயத்திற்கு உரிய தீர்வு பதிலில் காணப்படவில்லையே.

ஆண்கள் திருமணத்திற்குப ் பின் பெண்வீட்டில் குடித்தனம் அமைத்துக் கொள்வதைக் குறித்தும் பதிலில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Quote | Report to administrator
ஜி.என் பரங்கிப்பேட்டை
0 #7 ஜி.என் பரங்கிப்பேட்டை -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் ஹாஜியார்.

சொத்துக்களை இப்படி இப்படியெல்லாம் பிரிக்க வேண்டும் என்பது சொத்துக்குரியவ ருக்கு சொல்லப்பட்ட சட்டமல்ல. அவருக்குப் பின் சொத்துக்கு வாரிசாக வருபவர்களுக்கு சொல்லப்பட்ட சட்டமாகும்.

குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சம் காட்டக கூடாது என்பதை அறிவுரையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக தந்தைக்கு சொல்லப்பட்ட அறிவுரையாகும். குழந்தைகளின் மனம் புண்படாது என்றிருந்தால் கூடுதல் குறைவாக கொடுப்பதில் தவறு ஏற்படாது. தந்தை உயிருடன் இருக்கும் போது அனைத்து முஸ்லிம் குடும்பங்களிலும ் ஆண் குழந்தைகளை விட பெண் பிள்ளைகளே தந்தையிமிருந்து அதிகமாக பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களாக கேட்டு பெறாவிட்டாலும் அதுவே இயல்பாகும்.

பல இடங்களில் குறைந்த அளவு 25, 30 பவுன் என்று பெண் பிள்ளைக்கு சேர்த்து வைக்கும் போது அதே அளவு தொகையை ஆண் குழந்தைக்கா ஒதுக்குவதில்லை. இதை ஆண்குழந்தைகளும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. அதே போன்று அபூர்வமாக சில இடங்களில் பெண்களுக் செலவு செய்வதை விட ஆண்குழந்தைகளுக் கு (படிப்புக்கு) பெற்றோர் செலவு செய்கிறார்கள். இதை பெண் பிள்ளைகள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை.

குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சம் காட்டக் கூடாது என்று நபி(ஸல்) சொன்னதை சட்டமாக புரிந்துக் கொண்டால் நடைமுறை சிக்கல்கள் அதில் நிறைய உருவாகும். குழந்தைகளின் மனம் புண்படக் கூடாது என்பதை கருத்தில் வைத்து சொல்லப்பட்ட அறிவுரை என்று புரிந்துக் கொண்டால் நடைமுறை சிக்கல் ஒன்றும் தோன்றாது.

நடைமுறை சிக்கலான எந்த சட்டமும் இஸ்லாத்தில் இல்லை என்பதை இங்கு நினைவுக் கூர்வது நல்லது.

எது எப்படி இருந்தாலும் ஒருவர் உயிருடன் இருக்கும் போது கொடுத்து விட்ட சொத்தை அவரது மரணத்திற்கு பிறகு மீண்டும் பெற்று பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்பது சட்டப்பூர்வமான கருத்தல்ல. பிறருக்கு எழுதப்பட்ட சொத்து அவருக்குரியதுதா ன். அதை கேட்கும் உரிமையில்லை. இதை தெளிவாக விளக்கும் விதமாகத்தான் ரப்புல் ஆளமீன் 'விட்டு சென்றவையில் பாகப்பிரிவினை் என்று குறிப்பிட்டுள்ள ான். எனவே மகள்களுக்காக கொடுக்கப்பட்ட வீடுகள் மகள்களுக்குரியவ ையாகும். மரணித்து விட்டவருக்குரியவையல்ல.

விளக்கம் வேண்டும் என்றால் இன்னும் விரிவாக கருத்துப்பரிமாற லாம் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
அப்தல்லாஹ்
0 #8 அப்தல்லாஹ் -0001-11-30 05:21
விளக்கங்கள் அருமை.

பேரப் பிள்ளைகளுக்குத் தகப்பன் என்ற ஒருவன் இருந்ததாலேயே சொத்துக் கிடைத்துள்ளது என்ற விளக்கம் நன்றாக உள்ளது.

பாட்டனாருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் இருந்து ஒவ்வொருவருக்கும ் இரு ஆண் மகவுகள் உள்ளனர் எனக் கொள்வோம்.

மூன்று ஆண் பிள்ளைகளில் ஒருவர் பாட்டனார் இறக்கும் முன் இறந்துவிட்டார். அந்த ஆண் பிள்ளையின் ஆண் மகவுகளுக்கும் பாட்டனாரின் சொத்தில் பங்குள்ளதா?
Quote | Report to administrator
அபூ முஹை
0 #9 அபூ முஹை -0001-11-30 05:21
إن الله أعطى كل ذي حق حقه ولا وصية لوارث

*******
‏ ‏إن الله عز اسمه قد أعطى كل ذي حق حقه ‏ ‏ولا وصية لوارث

********
'ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி பல விமர்சனங்கள் இருப்பதால் இவர் வழியாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானது என்று கொள்வோம்.

இஸ்மாயீல் பின் அய்யாஷ் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் வருமாறு,

நஸயீ 3583

சுட்டி: hadith.al-islam.com/.../...

அபூதாவூத் 2486, 3094

சுட்டி: hadith.al-islam.com/.../...

சுட்டி: hadith.al-islam.com/.../...

திர்மிதீ 2046

சுட்டி: hadith.al-islam.com/.../...

இப்னுமாஜா 2704

சுட்டி: hadith.al-islam.com/.../...

அஹ்மத் 21263

சுட்டி: hadith.al-islam.com/.../...

மேற்கண்ட ஹதீஸ்களில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் இடம் பெறுகிறார். இவர் அல்லாத வேறு வழியில் அறிவிக்கும் செய்திகள்:

நஸயீ 3581

சுட்டி: hadith.al-islam.com/.../...

திர்மிதீ 2047

சுட்டி: hadith.al-islam.com/.../...

இப்னுமாஜா 2705

சுட்டி: hadith.al-islam.com/.../...

சகோதரர் ஜீ.என்,

ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களை பரிசீலித்து உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள். பிறகு மற்ற கருத்துகளை அலசுவோம் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #10 அபூ முஹை -0001-11-30 05:21
//ஆண்கள் திருமணத்திற்குப ் பின் பெண்வீட்டில் குடித்தனம் அமைத்துக் கொள்வதைக் குறித்தும் பதிலில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.//

சகோதரர் அல் அமீன்,

இதை இஸ்லாம் தடை செய்யவில்லை!

மனைவி கணவன் வீட்டில் வாழ்வதும், கணவன் மனைவி வீட்டில் வாழ்வதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.
Quote | Report to administrator
முஹம்மது அப்துல் ரஹ்மான்
0 #11 முஹம்மது அப்துல் ரஹ்மான் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் சகோதரர் அபூ முஹை,
//மனைவி கணவன் வீட்டில் வாழ்வதும், கணவன் மனைவி வீட்டில் வாழ்வதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.//
மனைவியின் வீட்டிலேயே திருமணத்திற்கு பிறகு வாழ்வதால் கணவனின் வயதான பெற்றோரின் அவல நிலையை எண்ணி பார்த்திர்களா ? மகனின் பராமரிப்பும் அன்பும் இன்றி, மகளின் (கொடுக்கப்பட்ட) வீட்டில் தன் இறுதி வாழ்நாட்களை வேதனையுடன் கழிக்கும் பெற்றோரின் நிலையை ..... அனுபவித்தோருக்க ும் அதை நேரில் கண்டோருக்குமே அதன் வலி உணரமுடியும் .

தங்களின் கருத்தின் விளக்கம் யாது ?
தங்கள் பதில் ஹதீஸின் படியா அல்லது தனிப்பட்ட கருத்தா? அறிய தருக
அன்புடன்
முஹம்மது அப்துல் ரஹ்மான்
Quote | Report to administrator
அபூ முஹை
+1 #12 அபூ முஹை -0001-11-30 05:21
//மூன்று ஆண் பிள்ளைகளில் ஒருவர் பாட்டனார் இறக்கும் முன் இறந்துவிட்டார். அந்த ஆண் பிள்ளையின் ஆண் மகவுகளுக்கும் பாட்டனாரின் சொத்தில் பங்குள்ளதா?//

அன்பின் சகோதரர் அப்துல்லாஹ்,

தந்தை இறந்து விட்டால் பாட்டனாருக்கு மகன் வழி நேரடி வாரிசாக இறந்த மகனின் ஆண் மக்களும், பெண் மக்களும் வாரிசு உரிமை பெறுவார்கள். பாட்டனாரின் சொத்தில் தன் தந்தைக்குச் சேர வேண்டிய பங்கு சொத்து இவர்களுக்கு உண்டு.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #13 அபூ முஹை -0001-11-30 05:21
//தங்கள் பதில் ஹதீஸின் படியா அல்லது தனிப்பட்ட கருத்தா? அறிய தருக
அன்புடன் முஹம்மது அப்துல் ரஹ்மான்//

அன்பின் சகோதரர் முஹம்மது அப்துர்ரஹ்மான்,

பெற்றோருடனே தங்குவது தான் பெற்றோரைக் கவனித்துக்கொள் வதாகும் என்று பொருள் கொண்டால் ஆண் மக்களும், பெண் மக்களும் அயல் நாடு சென்று பொருளீட்ட முடியாது. வருடக் கணக்காக அயல் நாட்டில் இருப்பவர்களெல்ல ாம் பெற்றோரைக் கவனிக்காதவர்கள் என்று சொல்ல மாட்டோம்.

மேலும், ஆண் மக்களே பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும், பெண் மக்களுக்கு அந்தப் பொறுப்பு இல்லை என்று இஸ்லாம் சொல்லவில்லை, நாமும் சொல்ல மாட்டோம். அப்படியானால் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வாழும் பெண் மக்களெல்லாம் பெற்றோரைப் பேணாமல் புறக்கணித்தவர்க ள் என்ற முடிவுக்குத்தான ் வர வேண்டும். இம்முடிவை நீங்களும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் சரியா!

கணவன், மனைவி வீட்டில் வாழ்வதால் அவர் பெற்றோரைப் பேண முடியாது என்பது தவறானக் கருத்தாகும். உள்ளூரில் மட்டுமில்லை ஒரு மகனோ, மகளோ உலகத்தில் வேறு எந்த இடத்தில் இருந்தாலும் உள்ளுரில் வாழும் பெற்றோரைப் பேண முடியும்.

உள்ளூரில் ஒரே வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்து, பெற்றோரைப் புறக்கணித்தப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். உலகத்தில் ஏதோ மூலையில் வாழ்ந்து கொண்டு, கண் இமையைக் காப்பது போல் பெற்றோர்களை கவனிப்பவர்களும் இருக்கிறார்கள். இது எண்ணத்தையும், முயற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. அதனால் கணவன், மனைவி வீட்டில் வசிப்பது அவரின் பெற்றேரைக் கவனிக்க முடியாமல் போய்விடும் என்ற கருத்து சரியல்ல!

திருமணத்தின் போது கணவர், மனைவியின் வீட்டில் வாழவேண்டும் என்று விதித்த நிபந்தனையே இங்கு நிறைவேற்றப்படுக ிறது. நியாயமான திருமண நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. (புகாரி, முஸ்லிம்)

திருமணத்திற்கு முன்பே மனைவியின் வீட்டில் வாழ சம்மதம் இல்லை என நிபந்தனையிட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கும் பெண்ணைத் தேர்வு செய்து கொள்ளலாமே தவிர, மனைவியின் வீட்டில் கணவன் வாழ்வதைக் கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. இஸ்லாம் இதைத் தடை செய்யவில்லை!

தன் பிள்ளை மனைவியின் வீட்டில் வாழ்வதால் அது பெற்றோருக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டா லும் பெற்றோரும் அந்த நிபந்தனையை விரும்பி ஏற்றுக்கொண்ட பின்னரே அத்திருமணம் நடைபெறுகிறது.

இந்நிலை மாற வேண்டும் என விரும்புபவர்கள் , சம்பந்தப்பட்வர் களே தமது நிலைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
ஜி.என்
-1 #14 ஜி.என் -0001-11-30 05:21
அன்பின் அபுமுஹை.

உயில் பற்றிய ஹதீஸின் தரத்தை மேற்கொண்டு அலசத் தேவையில்லை. ஏனெனில் அந்த கருத்தின் கருத்து என்னவென்பதை எழுதியுள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்.

அடுத்து இன்னொன்றையும் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

பாட்டனார் உயிருடன் உள்ள நிலையில் அவரது மகன் இறந்து விட்டால் இறந்த மகனுடைய சொத்து பாட்டனாரிடமிருந ்து பேரபிள்ளைகளுக்க ு செரும். என்ற தங்கள் கருத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.

இறந்து விட்டவருக்கு சொத்தில் பங்கு கிடைக்கும் என்றால் எந்த வசன அடிப்படையில் அப்படிப் புரிந்துக் கொண்டீர்கள்?

நெருடலாக இருக்கின்றது கூடுதல் விளக்கம் வேண்டும்

சகோதரன் ஜி.என்
பரங்கிப்பேட்டை
Quote | Report to administrator
அபூ முஹை
-1 #15 அபூ முஹை -0001-11-30 05:21
அன்பின் சகோதரர் ஜி.என்,

தந்தை உயிரோடு இருக்கும்போதே தனது பெண் மக்களுக்கு சில சொத்துக்களை கொடுத்துள்ளார் , இது அவரது உரிமை என்று நாம் சொல்லிக் கொண்டாலும் தந்தையின் சொத்திலிருந்து பெண் மக்களுக்கு கொடுத்தது பாகப்பிரிவினையா கவே பங்கீடு செய்யப்பட்டுள்ள து. கேள்வியை சற்று உள் வாங்கி படித்தால் இதை விளங்கலாம்.

//எங்கள் ஊரில் பெண்களுக்குச் சீதனமாக வழங்கப் படும் நகைகளோடு தனியாக ஒரு வீடும் சீதனமாகக் கொடுப்பது வழக்கம். சொத்துப் பிரிவினை என்று வரும்போது, பெண்களுக்கு வயல், தோப்புகளில் பங்கில்லை என்பதும் எங்கள் ஊர் வழக்கமாகும். அதற்குக் காரணம் ஆண்களுக்குப் பெற்றோர் வழியாக வீடு கிடைப்பதில்லை,//

பெண்களுக்கு வீடுகளில் பங்கு உண்டு. வயல், தோப்புகளில் பங்கு இல்லை.

ஆண்களுக்கு வயல், தோப்புகளில் பங்கு உண்டு வீடுகளில் பங்கு இல்லை.

இவ்வாறு ஏற்கெனவே ஒரு முடிவுடன் பாகப்பிரிவினை நடந்திருக்கிறது . அதாவது பெண் மக்களுக்கு சீதனமாகக் கொடுக்கும் வீடுகள் பாகப்பிரிவினை என்ற அடிப்படையிலேயே தந்தை கொடுக்கிறார். பின்னர் ''மரணித்தவர் விட்டு சென்றதில்'' பெண் மக்களுக்கு பங்கு இல்லை என இங்கு தீர்மானிக்கப்பட ுகிறது.

பாகப்பிரிவினையா க ஏற்கெனவே தந்தையின் சொத்தில் பாதிக்கு மேல் பெண் மக்களுக்கு கொடுத்தாகி விட்டது. பின்னரும் தந்தை விட்டு சென்றதில் பெண் மக்களுக்கும் பங்கு உண்டு என்றால் முந்திய பாகப்பிரிவினை இஸ்லாத்திற்கு முரண்பட்டது என்பதால் தவறுகளை அழித்து விட்டு இஸ்லாத்தின் பார்வையில் இங்கு தீர்வு காண்பது அவசியமாகிறது.

அதற்காக பெண் மக்களுக்கு சீதனமாகக் கொடுத்த வீடுகளை பலவந்தமாக பிடுங்கி, இருக்கும் சொத்துக்களோடு ஒன்று சேர்த்து பங்கீடு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஏழு மக்களும் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தால் இஸ்லாம் கூறும் அடிப்படையில் இப்படியொரு பாகப் பிரிவினை செய்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக:

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தவர்கள் பின்னர் வரதட்சணை வாங்குவது தவறு என உணர்ந்து பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய வரதட்சணையை திருப்பித் தருவது நடைமுறைக்கு ஒவ்வாத செயல் அல்ல! வரதட்சணையைப் பெற்றவர் திருப்பித் தருவதை விட பாகப்பரிவினை விஷயத்தில், தமக்குச் சேர வேண்டிய உரிமையை விட அதிகம் பெற்றவர் அதைத் திருப்பி தருவதில் பல மடங்கு நியாயம் உள்ளது.

//1. எங்களின் சகோதரிகளுக்குக் கொடுத்த வீடுகள் பாட்டன் வழிச் சொத்துகளை விற்றுக் கிடைத்த பணத்தில் கட்டப் பட்டதால் அந்த நான்கு வீடுகளையும் மீந்திருக்கும் வயல், தோப்புகளையும் கணக்கிட்டு, மொத்தமாக்கி, ஆண்களுக்கு இரண்டு பங்கென்றும் பெண்களுக்கு ஒரு பங்கென்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. ஊர் வழக்கப்படி சகோதரிகளுக்குச் சொத்தாக வசதியான வீடு கிடைத்து விட்டதால் வயல், தோப்புகளை மூன்று சகோதரர்களும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. சகோதரிகளுக்குக் கொடுக்கப் பட்ட வீடு சீதனத்தில் அடங்குவதால் மீந்திருக்கும் வயல், தோப்புகளிலும் அவர்களுக்குப் பங்கு உண்டு.//

பிரச்சனை வராதவரை ஒன்றுமில்லை. ஆனால் பிரச்சனை என்று வந்து விட்டால் முழுக்க சட்டத்தின் பக்கமே சார்ந்திருக்க வேண்டும். அந்த வகையில் முதலில் சொல்லப்பட்ட தீர்வுதான் இஸ்லாத்திற்கேற் றதாக நாம் கருதுகிறோம்.

இல்லை,
மற்ற இரு கருத்துகளில் ஒன்றுதான் சரி என்றால் அதை தக்க ஆதாரத்துடன் எழுதலாம் நன்றி!
Quote | Report to administrator
பரங்கிப்பேட்டை ஜி.என்
+1 #16 பரங்கிப்பேட்டை ஜி.என் -0001-11-30 05:21
அல்லாஹ்வின் மார்க்கத்தில் தனி மனித கருத்துக்களுக்க ு இடமளிக்கக் கூடாது என்பதால் இன்னும் சற்று விளங்கிக் கொள்வதற்காக எழுதுகிறேன்.

ஒரு தந்தை தான் உயிருடன் இருக்கும் போது தன் மகள்களுக்கு சில சொத்துக்களைக் கொடுத்து 'என் மரணத்துக்கு பிறகு நான் விட்டு செல்வதில் நீ பங்கு கேட்கக் கூடாது' என்று நிபந்தனை விதித்து சென்றால் சர்ச்சைக்கோ பேச்சுக்கோ இடமில்லை. அவ்வாறு சொத்துக்குரியவ ர் எந்த நிபந்தனையும் விதிக்காத நிலையில் ஊர் வழக்கத்தையெல்லா ம் மார்க்க அடிப்படையாக கொண்டுவர முடியாது.

தந்தைக்கு பிறகு ஏற்கனவே சொத்தைப் பெற்றுக் கொண்ட மகள் 'நான் தந்தையிடமிருந்த ு சொத்தைப் பெற்றுக் கொண்டேன், அதனால் இப்போது எனக்கு எதுவும் தேவையில்லை' என்று சொன்னால் அந்த பிரச்சனை வேறு.

தந்தையும் நிபந்தனை விதிக்காத நிலையில், மகளும் முன் வந்து இப்படி ஒரு முடிவு எடுக்காத நிலையில் அனைத்து சொத்தையும் ஒன்றாக்கி பிரிக்க வேண்டும் என்பது ஆதாரத்திற்கு முரணானதாகும்.

வரதட்சனை என்பதை இங்கு ஒப்பு நோக்கக் கூடாது ஏனெனில் அது வாங்கியவரைப் பொருத்தவரை கடன் அல்லது அபகரிப்பு என்ற நிலையைப் பெறும். பாகப்பிரிவினையி ல் இறைவனின் வழிகாட்டல் தெளிவாக உள்ளதால் மற்ற உதாரணங்கள் இங்கு தேவைப்படாது.

நீங்கள் உங்கள் பதிலில் (கடைசிப் பதிவில்) ஏழு மக்களும் முழு மனதுடன் சம்மமதம் தெரிவித்தால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள் ளீர்கள். அது அவர்களின் சொந்த உரிமையைப் பொருத்ததாகும். அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் அவ்வாறு நடப்பது மிக மிக அபூர்வம்.

சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்தை எவ்வாறு அணுகுவது? அங்குதான் நாம் மார்க்க அடிப்படையைப் பார்க்க வேண்டும்.
Quote | Report to administrator
ஜமீல்
-1 #17 ஜமீல் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர்களுக்கு,

மேற்காணும் கேள்வியைக் கேட்ட சகோதரரையும் அவர்தம் குடும்பத்தாரையு ம் அறிந்தவனும் கேள்வியை சத்தியமார்க்கம் .காம் தளத்துக்கு அனுப்புவதற்குப் பரிந்துரைத்தவனு மான நான் இங்குச் சில நடப்புகளைச் சொல்லியாக வேண்டும்.

முதலாவது, மேற்காணும் கேள்வியைக் கேட்டிருக்கும் சகோதரர் எம்.எம்.ஏ. அவர்களும் அவர்தம் சகோதரர்களும் ஓரிறைக் கொள்கையில் தொடக்கத்திலிருந ்து பிடிப்புள்ளவர்க ளாவர். சகோதரிகளைப் பற்றி அதிகமாக எனக்குத் தெரியாது என்றாலும் அவர்கள் அனைவரும் 'ஊர் வழக்கம்' என்பது குர் ஆன் ஹதீஸைக் கொண்டு சரி செய்யப்பட வேண்டிய ஒன்று என்பது கேள்வியைப் பொது இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்ததன் மூலம் அறிந்து கொண்டேன்.

ஊர் வழக்கத்தை அனைவரும் ஒத்துக் கொள்வதாக இருந்தால் சகோதரிகள், இறந்து விட்ட தம் தந்தையின் வயல்-தோப்புச் செத்துகளில் பங்கு கேட்கவும் மாட்டார்கள்; சகோதரர்கள் கொடுக்கவும் முன்வர மாட்டார்கள். எவ்விதக் கேள்வியுமின்றி மூன்று சகோதரர்கள் மாத்திரம் அனைத்துச் சொத்துகளையும் பங்கு போட்டுக் கொள்ள முடியும்.

ஆனால், இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டங்களின்படி இதில் சகோதரிகள் அநீதி இழைக்கப் படுகின்றனர் என்று சகோதரர்களும் ஆதங்கப் பட்டு, காலங் காலமாக நடைமுறையில் உள்ள ஊர் வழக்கத்தை - குறைந்த பட்சம் - தம் குடும்பதுக்குள் ளாகவாவது சரி செய்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர்.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.

'பெண் மக்களுக்கு (ஊர் வழக்கப்படி) சேர வேண்டிய வீடுகளை நல்லமுறையில் கட்டிக் கொடுத்தாயிற்று; மீந்திருக்கும் சொத்துகளெல்லாம் ஆண் மக்களுக்குத்தான ்' என்று இறந்தவர் தமக்கு நெருக்கமானவர்கள ிடம் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த ஒரு பிடியை வைத்துக் கொண்டு, சகோதரர்கள் எளிதாகத் தம் சகோதரிகளுக்கு அநீதி இழைக்க முடியும். ஆனால், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதால் இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வை எதிர் நோக்குகின்றனர்.

மேற்காணும் கூடுதல் தகவல்களை மனதில் கொண்டு மேற்கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் செய்வது நலம் பயக்கும் என்று கருதுகிறேன்.

நன்றி!
Quote | Report to administrator
அபூ முஹை
0 #18 அபூ முஹை -0001-11-30 05:21
கேள்வியை விட்டு வெளியேறி இந்தப் பிரச்சனையை அலசுவது சரியெனப்படுகிறது.

நடைமுறை என்பது எல்லோரும் சம்மதித்து நடைமுறைப்படுத்த ுவதாகும். தந்தை என்ன செய்தாரோ அதையே பிள்ளைகளும் தந்தை என்ற நிலைக்கு வந்தவுடன் தொடர்கிறார்கள் .

பெண் பிள்ளைளை திருமணம் முடித்து கொடுக்கும்போத ு அதற்கான நகைகள், செலவுகள் அனைத்தும் அப்பெண்ணிற்கு தந்தை கொடுத்த சொத்தாவாகவே முடிவு செய்யப்படுகிறது . பிறகு தந்தையின் சொத்து ஆண் பிள்ளைகளுக்கென் று ஆகிவிடும். பெண் பிள்ளைகளுக்கு அதில் பங்கு இல்லை, அவர்களும் அதற்கு உரிமை கொண்டாடுவதில்லை.

//ஒரு தந்தை தான் உயிருடன் இருக்கும் போது தன் மகள்களுக்கு சில சொத்துக்களைக் கொடுத்து 'என் மரணத்துக்கு பிறகு நான் விட்டு செல்வதில் நீ பங்கு கேட்கக் கூடாது' என்று நிபந்தனை விதித்து சென்றால் சர்ச்சைக்கோ பேச்சுக்கோ இடமில்லை. அவ்வாறு சொத்துக்குரியவ ர் எந்த நிபந்தனையும் விதிக்காத நிலையில் ஊர் வழக்கத்தையெல்லா ம் மார்க்க அடிப்படையாக கொண்டுவர முடியாது.

தந்தைக்கு பிறகு ஏற்கனவே சொத்தைப் பெற்றுக் கொண்ட மகள் 'நான் தந்தையிடமிருந்த ு சொத்தைப் பெற்றுக் கொண்டேன், அதனால் இப்போது எனக்கு எதுவும் தேவையில்லை' என்று சொன்னால் அந்த பிரச்சனை வேறு.//

ஊர் வழக்கம் மார்க்கம் ஆகாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் இங்கு சொல்லப்பட்டுள் ள அந்த நிபந்தனைக்கு தந்தை, ஆண் மக்கள் பெண் மக்களின் சம்மதத்துடனேயே இது நடக்கிறது. திருமணம் முடிந்து விட்ட பெண் பிள்ளைகள், திருமணம் முடித்த செலவுகளையே தனது தந்தையின் சொத்தாக ஏற்றுக்கொண்டு பின்னர் தந்தையின் சொத்தில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்ற நிபந்தனையை ஒப்புதலுடன் மனமுவந்து ஏற்று ஒதுங்கி விடுகிறார்கள். (சில இடங்களில் இது விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பான்மை குடும்பங்களில் இதுதான் நிலைப்பாடு)

இந்தக் கருத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சொன்னதையே திரும்ப சொல்ல வேண்டியுள்ளது என்பதால் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.

***
வரதட்சணை கடன் போன்றது என்பதற்கு மேலதிக விளக்கம் வேண்டும். வரதட்சணையைக் கடனாக யாரும் கேட்டுப் பெறுவதில்லை. பெண் வீட்டாரும் இது கடன் என்று சொல்லி வரதட்சணை கொடுப்பதில்லை.

***
//மூன்று ஆண் பிள்ளைகளில் ஒருவர் பாட்டனார் இறக்கும் முன் இறந்துவிட்டார். அந்த ஆண் பிள்ளையின் ஆண் மகவுகளுக்கும் பாட்டனாரின் சொத்தில் பங்குள்ளதா?//

மகன் இறந்து விட்டால் பாட்டனாருக்கு மகனின் பிள்ளைகள் கிளை வாரிசாக வருவார்கள்.

''இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்பட வேண்டும்'' என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம் புகாரி, 6736)

இந்த செய்தியின் அடிப்படையில் இறந்த மகனுக்கு வாரிசு இருந்தால் பாட்டனாரின் சொத்தில் அவர்கள் வாரிசுரிமை பெறுவார்கள் என்று எழுதினோம். இதை மேலும் ஆய்வு செய்ய மாற்றுக் கருத்து இருந்தால் மீண்டும் பரிசீலிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
kavianbanKALAM, Adirampattinam
+2 #19 kavianbanKALAM, Adirampattinam -0001-11-30 05:21
நானும் அதே 'அதிரை'யைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்பதால் எனது கருத்துக்களை இதில் பதிவு செய்கின்றேன். 'பெண் வீட்டில் குடித்தனம் நடத்துவது கூடுமா/' என்று எங்களூரின் முஸ்லிம் இளைஞர்களின் கருத்தை எங்களூரின் அலிய் ஆலிம் (மர்ஹூம்)அவர்கள ிடம் பல முறை கேட்டுள்ளேன்.அவ ர்களின் பதில்: 'நமது ரசூலுல்லாஹ்(ஸல் ) அவர்கள் ஆயிஷா (ரழி-அன் ஹா) அவர்கள் ட்டில் வாழ்ந்துள்ளதை உதாரணமாக்கி தான் நமது முன்னோர்கள் மட்டுமல்ல, நாகூர், கீழ்க்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களின் உள்ள ஆலிம்களும் அதன் படியே நடைமுறைப் படுத்தி விட்டுச் சென்று விட்டதால் தவறாகப் படவில்லை' என்றார்கள்.ஆனால ், அவ்வாறு குடித்தனம் நடத்துவதில் ஏற்படும் 'நடைமுறை சிக்கல்' பல உள. எனவே, எங்களூர் இளஞ்சிங்கங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அயராது உழைத்து (நான் உட்பட) அழகான மாளிகை வீடுகளை மனைவிக்காக கட்டிக்கொண்டு, தனிக்குடித்தனம் காண்போரும் உண்டு. இன்னும் சில இளைஞர்கள் பெண் வீட்டிலிருந்து வீடு, நகை வாங்காது 'மஹர்' மட்டும் கொடுத்து மணம் முடிக்கும் மாண்புமிக்க மாப்பிள்ளைகளும் உளர். இக்கட்டுரையில் உள்ளபடி பெண் பிள்ளைக்கு மட்டும் கொடுட்து விட்டு ஆண்பிள்ளைக்கு வேண்டி மீண்டும் 'பயணம்' போY இளமை காலத்தை இப்படியாகவே வீணாக்குபவர்களி ன் ஆதங்கமே அதிகம் , அதிரையில்...... ...
Quote | Report to administrator
தர்வேஸ் மைதீன்.M
0 #20 தர்வேஸ் மைதீன்.M 2016-12-20 01:51
அஸ்ஸலாமு அலைக்கும்,
தந்தை இறந்தபின் அவருடைய ஒரு மகன், நான்கு மகள்களுக்கு எவ்வாறு சொத்தை பிரிப்பது
Quote | Report to administrator
நடராஜன் மு
-2 #21 நடராஜன் மு 2017-03-22 18:49
வணக்கம்.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,
என்னுடைய பெயரில் சொத்துக்கள் வாங்கினால் வரும் பின் விளைவுகள் என்ன?
அது எனக்கு மட்டும் சொந்தமாகுமா?
அல்லது
என் உடன் பிறந்தவர்களுக்க ும் சொந்தமாகுமா?
Quote | Report to administrator
Indian
0 #22 Indian 2017-03-25 07:21
// வணக்கம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, என்னுடைய பெயரில் சொத்துக்கள் வாங்கினால் வரும் பின் விளைவுகள் என்ன? //
-------------------------------

அன்பரே, அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்). தயவு செய்து இஸ்லாமியருக்கு வணக்கம் சொல்ல வேண்டாம். "தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்" எனும் உறுதிமொழிதான் (ஷஹாதா) இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் நாங்கள் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு வணக்கம் சொல்லவும் மாட்டோம், அவர்களுடைய வணக்கத்தை ஏற்கவும் மாட்டோம்.

உங்களுடைய சொத்து விஷயத்தை பொறுத்த வரை, தயவு செய்து இந்து சொத்துரிமை சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி இந்து வக்கீல்களிடம் பேசிப் பாருங்கள். இது தவிர, உங்களுடைய ஜாதியின் பழக்க வழக்கங்கள் பொறுத்தே பெரும்பாலும் முடிவு செய்யப்படும்.
Quote | Report to administrator
MOHAMMED RIYAZ A H
+1 #23 MOHAMMED RIYAZ A H 2018-09-24 19:37
Jasakallah Kairan
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்