முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்:

கொட்டாவி வந்தால் அடக்குவது கூடாது என்று மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொழுகையில் கொட்டாவி வந்தால் அதனை அடக்கிக் கொள்ள முயல்கிறேன். இது தொழுகையைப் பாதிக்குமா? விளக்கம் தேவை.

- சகோதரர் வாஸிம் அக்ரம்.

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

தும்மல், கொட்டாவி, இருமல், விக்கல், ஏப்பம் இவை நாம் விரும்பிச் செய்வதில்லை. அவை, உடற்கூறுகளின் இயற்தன்மையால் ஏற்படும் அனிச்சை செயல்களாகும்.

"கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவருக்கும் கொட்டாவி வந்தால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 3289, முஸ்லிம் 5718, திர்மிதீ 2747, அபூதாவூத் 5028, அஹ்மத் 27504).

"அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் யாரும் தும்மி 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினால் அதைக் கேட்பவர் ஒவ்வொருவரும் 'யர்ஹமுகல்லாஹ்' என்று கூறுவது கடமையாகும். கொட்டாவி வந்தால் இயன்றவரை தடுக்கவேண்டும். ஹா ஹா வென வாயைப் பிளக்கக் கூடாது ஏனெனில் இதன் காரணமாக ஷைத்தான் சிரிக்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2747).

கொட்டாவி சோம்பலுக்கான அறிகுறியாகும். அளவுக்கதிகமாக உண்பதாலும், பருகுவதாலும் உற்சாகம் இழந்து சுறுசுறுப்பின்றி சோம்பல் நிலை ஏற்படும். ஒருவருக்குக் கொட்டாவி வரும்போது அவர் "ஹா"வென வாயைப் பிளப்பதைப் பார்க்க சற்று அருவருப்பாகவே இருக்கும். இதனால் கொட்டாவி வரும்போது கையை வைத்து வாயை மறைத்துக் கொள்ள வேண்டும்.

"உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து (மறைத்து) அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழை(ய முயல்)கின்றான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5719). 

உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழை(ய முயல்)கிறான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5721).

கொட்டாவி வருவதை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இயலாதெனில் கொட்டாவி ஏற்படும்போது வாய் பிளக்க நேர்ந்தால் கையை வைத்து வாயை மறைத்தால் போதும்; அது, ஷைத்தான் நுழைய தடுப்பாகிவிடும்!

கொட்டாவி தொழுகையைப் பாதிக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! "கொட்டாவி ஏற்படுவதை இயன்றவரை கட்டுப்படுத்தட்டும்" என்கிற நபிமொழி, இயலாதவற்றுக்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம் என்பதை உணர்த்துகிறது.

உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளதுபோல், கொட்டாவி வந்தால் அடக்கக்கூடாது என்பதற்கு நிறுவப்பட்ட அறிவியல் சான்று ஏதுமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

Comments   

JAFAR
0 #1 JAFAR 2014-01-03 12:00
எனக்கும் சில நாட்களாக தொழுகையில் கொட்டாவி விடுதல் குறித்து சந்தேகம் இருந்தது.. தற்போது அது ஓரளவுக்கு தெளிவாகியுள்ளது .
Quote | Report to administrator
abdul rahiman haneef
+1 #2 abdul rahiman haneef 2014-01-03 21:57
அஸ்ஸலாமுஅலைக்கும்,

தெளிவான விளக்கம் நன்றி. ஜமாத் தொழுகையில் அருகில் தொழுபவர்கள் அசைந்தும், தலை, மற்றும் உடலை சொறிந்துகொண்டே செய்யும் செய்கை நமக்கு இடையூறாக இருப்பின் கண்களை மூடிக்கொண்டு தொழலாமா?
Quote | Report to administrator
அபூ முஹை
+1 #3 அபூ முஹை 2014-01-08 20:04
//தெளிவான விளக்கம் நன்றி. ஜமாத் தொழுகையில் அருகில் தொழுபவர்கள் அசைந்தும், தலை, மற்றும் உடலை சொறிந்துகொண்டே செய்யும் செய்கை நமக்கு இடையூறாக இருப்பின் கண்களை மூடிக்கொண்டு தொழலாமா?//

இறைவணக்கத்தில் ஈடுபடும்போது இந்த உலகை மறந்து இறைவனுடன் இணைந்து ஒன்றிவிட வேண்டும் அதற்கு கண்களை மூடித் தியானிப்பதே சரி எனும் கருத்து ஒரு சாராரிடம் இருந்து வருகின்றது. ஆனாலும், தொழுகையில் கண்களைத் திறந்து வைத்திருக்கவே ஆதாரங்கள் உள்ளன!

நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சுவர்க்கத்தைக் கண்டு, அங்கிருந்த பழக் குலையைப் பிடிக்க முயன்றதாகவும், தொழுது கொண்டிருக்கும் போது முன் சுவற்றில் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் காட்சி எடுத்துக் காட்டப்பட்டதாகவ ும் அறிவிப்புகள் உள்ளன.

தொழுது கொண்டிருக்கும் பொழுது பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களைக் கண்டால் கொன்று விடவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார ்கள்.

திறந்த வெளியில் தொழும்போது, கால்நடைகள் அலைவது, மேய்வது. பறவைகள் பறப்பது, மற்ற உயிரினங்கள் ஊர்ந்து செல்வது பார்வையில் தென்பட்டாலும், இவை குரலெழுப்பி தொழுபவர் செவியேற்றாலும் இது தொழுகைக்கு இடையூறாக அமையும் என்று எவ்வித சான்றும் இல்லை.

சொறிதல் எல்லாருக்கும் ஏற்படும். தொழுது கொண்டிருப்பவர் , அருகில் தொழுது கொண்டிருப்பவரி ன் சொறிதலைப் பார்த்தால் அது தொழுகைக்கு இடையூறாக அமையும் என்கிற கருத்துச் சரியானல்ல! அசைவதையும்,, சொறிதலையும் பார்ப்பது தொழுகைக்கு இடையூறு ஆகும் என்று இஸ்லாம் அறிவிக்கவில்லை.
Quote | Report to administrator
abdul rahiman haneef
0 #4 abdul rahiman haneef 2014-01-09 13:45
Quoting அபூ முஹை:
//தெளிவான விளக்கம் நன்றி. ஜமாத் தொழுகையில் அருகில் தொழுபவர்கள் அசைந்தும், தலை, மற்றும் உடலை சொறிந்துகொண்டே செய்யும் செய்கை நமக்கு இடையூறாக இருப்பின் கண்களை மூடிக்கொண்டு தொழலாமா?//

இறைவணக்கத்தில் ஈடுபடும்போது இந்த உலகை மறந்து இறைவனுடன் இணைந்து ஒன்றிவிட வேண்டும் அதற்கு கண்களை மூடித் தியானிப்பதே சரி எனும் கருத்து ஒரு சாராரிடம் இருந்து வருகின்றது. ஆனாலும், தொழுகையில் கண்களைத் திறந்து வைத்திருக்கவே ஆதாரங்கள் உள்ளன!

நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது சுவர்க்கத்தைக் கண்டு, அங்கிருந்த பழக் குலையைப் பிடிக்க முயன்றதாகவும், தொழுது கொண்டிருக்கும் போது முன் சுவற்றில் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் காட்சி எடுத்துக் காட்டப்பட்டதாகவும் அறிவிப்புகள் உள்ளன.

தொழுது கொண்டிருக்கும் பொழுது பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களைக் கண்டால் கொன்று விடவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

திறந்த வெளியில் தொழும்போது, கால்நடைகள் அலைவது, மேய்வது. பறவைகள் பறப்பது, மற்ற உயிரினங்கள் ஊர்ந்து செல்வது பார்வையில் தென்பட்டாலும், இவை குரலெழுப்பி தொழுபவர் செவியேற்றாலும் இது தொழுகைக்கு இடையூறாக அமையும் என்று எவ்வித சான்றும் இல்லை.

சொறிதல் எல்லாருக்கும் ஏற்படும். தொழுது கொண்டிருப்பவர், அருகில் தொழுது கொண்டிருப்பவரின் சொறிதலைப் பார்த்தால் அது தொழுகைக்கு இடையூறாக அமையும் என்கிற கருத்துச் சரியானல்ல! அசைவதையும்,, சொறிதலையும் பார்ப்பது தொழுகைக்கு இடையூறு ஆகும் என்று இஸ்லாம் அறிவிக்கவில்லை.

அஸ்ஸலாமுஅலைக்கு ம், அருமையான விளக்கம், நன்றி, ஜும்மா அன்று எனது இருபக்கங்களிலும ் நெருக்கமாய் நின்றிருந்தவர்க ளின் செயல் ஒருவர் குனிந்து கால்களை சொரிந்தவாரும், மற்றவர் ஆடியபடியேயும் இருந்தார். சிலர் வலது கால்களின்மேல் இடது காலை வைத்தும் சிலர் சுஜுதில் கைகள் முழுவதையும் பதியவைத்து (நாய் படுத்திருப்பது போல்) கொள்வது போன்ற செய்கைகள் செய்தால், அவர்கள் தொழுகை முடிந்த பின் தவறு ஏன் கூறி திருத்தலாமா?
Quote | Report to administrator
Thamimun Ansari
-1 #5 Thamimun Ansari 2014-06-04 11:48
கொட்டாவி வந்தால் எதாவது கூறவேண்டுமா
Quote | Report to administrator
அபூ முஹை
0 #6 அபூ முஹை 2014-06-06 14:34
Quoting Thamimun Ansari:
கொட்டாவி வந்தால் எதாவது கூறவேண்டுமா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

தும்மினால் இன்னின்ன கூற வேண்டும் என அறிவிப்புகளில் உள்ளது போல், கொட்டாவி வந்தால் கூற வேண்டியவைக் குறித்து நாமறிந்து ஹதீஸ்களில் எதுவும் சொல்லப்படவில்ல ை.

கொட்டாவி ஷைத்தானிடமிருந் து வருவதாகும் என நபிமொழிகள் கூறுவதால் கொட்டாவி வரும்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் கேட்கலாம் எனச் சிலர் கூறுவது நியாயமாகத் தோன்றினாலும் இவ்வாறு கூறுவது ''சுன்னத்'' ஆகிவிடும் என்பதைக் கவனத்தில் கொண்டு, கொட்டாவி வந்தால் எதையும் கூறுவதற்கு மார்க்க ரீதியாக அனுமதி இல்லை என்றே விளங்குவோம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
அப்துல் மாலிக்
0 #7 அப்துல் மாலிக் 2014-06-08 13:34
தெளிவான விளக்கம் நன்றி. ஜமாத் தொழுகையில் அருகில் தொழுபவர்கள் அசைந்தும், தலை, மற்றும் உடலை சொறிந்துகொண்டே செய்யும் செய்கை நமக்கு இடையூறாக இருப்பின் கண்களை மூடிக்கொண்டு தொழலாமா?//


மேலே ஒரு சகோதரர் கூறி இருப்பதாய் போல், எனக்கும் பலமுறை இடையூறாக இருந்துள்ளது. தொழுகையில் மூக்கை நோன்டியவரு இருப்பது, இது போன்ற அருவருக்கத்தக்க செய்கைகளில் ஈடுபடுவது, ஆ.. என்று சப்தமிட்டு வாயை பிளந்து கொட்டாவி விடுவது ( அடிக்கடி ), அதுவும் தலையை தூக்கி வானத்தை பார்த்து கொட்டாவி விடுவது, போன்ற செயல்கள் நம் கவனத்தை திசை திருப்புவதால் நம்மால் தொழுகையில் ஒன்ற முடியவில்லை.

பயான் செய்யும் அறிஞர்களும் இது குறித்தெல்லாம் பேசுவது இல்லை.

இந்நிலையில் நாம் என்ன செய்வது ?
Quote | Report to administrator
rahamath beevi
0 #8 rahamath beevi 2014-07-17 10:30
ASLAM ALIKUM.

THUJID THOLUGAI ENTHA NERATHIL THOLUGA VENDUM.
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #9 அபூ ஸாலிஹா 2014-07-21 16:19
Quote:
THUJID THOLUGAI ENTHA NERATHIL THOLUGA VENDUM.
இரவு முழுவதும் தொழுது கொள்வதற்கு ஏற்ற நேரங்கள் என்பதை அறியவும்.

இருப்பினும், தஹஜ்ஜத் தொழுகையை, இரவில் கடைசி பகுதியில் தொழுது கொள்வதற்கு பரிதுரைக்கும் நபிமொழிகள் ஆதாரங்கள் உள்ளன (புகாரீ 183, புகாரி 7452, முஸ்லிம் 376)
Quote | Report to administrator
அபூ முஹை
0 #10 அபூ முஹை 2014-07-23 09:10
இரவுத் தொழுகை நேரங்கள் குறித்தான திருமறை வசனங்கள் பார்க்க, 73:1-4,20
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்