முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,

ஐயம்:
வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? - சகோதரி உம்மு ஸைனப்

 

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

"மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்" புகாரீ 2078.

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது - புகாரீ 2391.

போன்ற நபிமொழிகளை வாழ்ந்துகாட்டும் முஸ்லிம்கள் நம் சமுதாயத்தில் பெருகினால் மட்டுமே வட்டியில்லாமல் கடன்பெற வாய்ப்புண்டு. தேவையுடையோருக்குக் கடன் கொடுத்து அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நம் சமகாலத்தில் அருகிப்போய்விட்டது.

எனவே, வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? என்று கேள்வி கேட்பதைவிட, "கடனின்றிச் செலவுகளை சமாளிப்பது எப்படி?" என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியான இக்காலகட்டத்தில் செலவுக்கேற்றவாறு வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்பதே நியாயமாக இருக்கும். அது இயலாது எனில், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்கேற்றவாறு செலவுகளைக் கட்டுப்படுத்திக் கடனின்றி வாழ்வதே சிறப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கடன்படுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, "இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே! கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகத் தாங்கள் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். (ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 832, முஸ்லிம் 925, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

மற்ற நேரங்களிலும் நபி (ஸல்) அவர்கள் கடன் சுமையிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் வேண்டி பிரார்த்தனை செய்துள்ளனர்.

இறைத்தூதர்(ஸல்) எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது அவர்கள், "இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) நபிமொழிச் சுருக்கம் நூல்: புகாரீ 2893.

கடன் வாங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால், கடனாளியாக மரணமடைந்தவரின் ஆன்மா, கடன் அடைக்கப்படும் வரை தொங்கிக் கொண்டிருக்கும் அவலமும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது:
"(கடனாளியாக இறந்துவிட்ட) இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் அடைக்கப்படாத வரை தொங்கும் நிலையில் விடப்படுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 999, இப்னுமாஜா, அஹ்மத்).

கடனாளியாக இறந்து, கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்லாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்துவிட்டார்கள் என்ற அறிவிப்பு புகாரீ 2298, முஸ்லிம் 3309, திர்மிதீ 990 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன கடனைத் தவிர" என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்ற அறிவிப்பு முஸ்லிம் 3832 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் குறித்தான காரியங்களில் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட நபிவழி அறிவிப்புகள் எச்சரிக்கின்றன. கடன் வாங்குவதற்கு முன், கடனைத் திரும்ப செலுத்த இயலுமா? என்பதில் திட்டமிடல் வேண்டும். வாங்கிய கடனை அடைக்க நம்மிடம் சொத்துக்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொண்டு தகுதிக்கேற்ற வாழ்வாதார தேவைக்காக மட்டும் கடன் வாங்கினால் கடனை அடைப்பதற்கு எளிதாக அமையும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

oOo

(குறிப்பு: சகோதரியின் மற்ற கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக்கம் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)

Comments   

அபூ அப்துல்லாஹ்
0 #1 அபூ அப்துல்லாஹ் 2013-10-26 12:42
அருமையான கட்டுரை. ஆக்கபூர்வ மற்றும் ஆரோக்கியமான ஆலோசனைகள். இக்காலத்திலும் வட்டியில்லா கடன் வழங்கும் சகோதரர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
Quote | Report to administrator
MBM. Hanif
+1 #2 MBM. Hanif 2013-10-26 23:21
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோத்ரர்களே

அல்ஹம்துலில்லாஹ் அளிக்கப்பட்ட பதிலில் இன்னும் சிலவற்றை சேர்த்து இருக்கலாம் .

வட்டியில்லா கடனுதவிகளுக்காக ஆங்காங்கே இயங்கி வரும் பைத்துல்மால் / கூட்டுறவு அமைப்புகள் போல் வட்டியில்லா கடனுதவி வழங்கிடும் அமைப்புகள் மேலும் பெருக வேண்டும்.

வட்டியில்லா கடனுதவி திட்டங்களை முன்னெடுத்து துவங்கும் அமைப்புகள் அதிகரிக்காமல், தேவையான அளவு பலனளிக்காமல் இருக்கும் நிலைகள் காரணிகள் ஆய்வு செய்து சரி செய்யப்பட வேண்டும்.

ஆங்காங்கே பொருளாதார வசதியுள்ள முஸ்லிம்களும் வசதியில்லாதவர்க ளும் இந்த நோக்கத்திற்க்கா க இத்திட்ட நிதியில் பங்கு முறைப் போல் தமது வசதிகளுக்கு ஏற்ப தொகையை அவ்வப்போது சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முன்வர வேன்டும். அந்த நிதியை ஒரு குறிப்பிட்ட கால கெடுவரை திரும்பி பெறாமல் சேமிப்பாக வைக்க முன் வர வேண்டும்.

இதில் சேரும் நிதித்தொகையில் ஒரு பகுதியை முறையாக இலாபம் தரும் ஹலாலான வியாபாரங்களில் அல்லது Real Estates போன்றவற்றில் முதலீடு செய்தால் இலாபம் பெறவும் வாய்ப்பாக அமையலாம் அதை பங்குதாரார்கள் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமது பங்காக முதலீடும் செய்யலாம்.

இவ்வாரு வட்டியின் கொடுமையை அல்லாஹ்வோடு போர் செய்வது என்பதை உணர்ந்து நிரந்தர நரகம் (அல் குர் ஆன் 2:275- 278) எனும் பாவம் என்பதை உணர்ந்து முஸ்லிம்கள் இதில் பங்கு பெறுவதை கடமையாக கருதி செயல் பட வேண்டும்.

அதில் கடனுதவி கேட்டு வருபவர்களை விட கடனுதவி அளிக்க நாடுபவர்கள் அதிகரிக்க வேண்டும். அதில் கடனுதவி கோருபவர்களும் உண்மையான காரணங்களுக்காகவ ே அணுக வேண்டும் மேலும் நேர்மையாக கடனுதவி வழங்குபவர்களும் நேர்மையாக காரணங்களை ஆய்வு செய்து அதை வழஙகப்பட வேண்டும். அவற்றை முறையாக திருப்பித் தரப்பட வேண்டும், இல்லையேல் இவைகள் முறையாக செயல் பட வழியாகாது.

ஆக மக்களிடம் முழுமையான இறையச்சம் இருந்தால் மட்டுமே இது முறையாக செயல்படுத்த சாத்தியப் படும் இன்ஷா அல்லாஹ்,என்பதைய ும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Quote | Report to administrator
M Muhammad
0 #3 M Muhammad 2013-10-27 00:09
இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?

www.satyamargam.com/1583

தொடர்புடைய பதிவுகள் (சத்தியமார்க்கம ்.காம்):

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் - சீதாராமன்


உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமியப் பொருளாதாரமும்!
Quote | Report to administrator
rajaraja
+1 #4 rajaraja 2013-10-28 18:09
aanaal yaar kodukkirargal engu kidaikkirathu enru sollavilai
Quote | Report to administrator
syedali
0 #5 syedali 2013-11-04 21:33
Asalamu alaikkum,
Anbavargale nengal sonna bay an migavum arumai
Aanal indru ethanai Muslim kalukku baithul maal irupathu
Theriyum halal muraiyel kadan anaivarukkum ariyapada
Vendum
Quote | Report to administrator
இம்ரான்
0 #6 இம்ரான் 2014-07-09 17:29
கடன் வாங்க வழிகேட்டால், வச்சிருக்கிறவர் களைப் பார்த்து எடுத்துச் சொல்லி கடன் கொடுங்கபான்னு உபதேசம் பண்ணனும்...வழி கண்டுபிடிச்சி சொல்லனும்..அத விட்டுட்டு கடனுதவி செய்யுங்கப்பான் னு உதவி கேட்டா அதை மனித உரிமைக்கு எதிரானது போன்று உதவி கேட்டவனுக்கு உபதேசம் பண்ணுகின்றீர்கள ்...நல்லது!!
Quote | Report to administrator
அபூ முஹை
0 #7 அபூ முஹை 2014-07-11 18:58
Quoting இம்ரான்:
கடன் வாங்க வழிகேட்டால், வச்சிருக்கிறவர்களைப் பார்த்து எடுத்துச் சொல்லி கடன் கொடுங்கபான்னு உபதேசம் பண்ணனும்...வழி கண்டுபிடிச்சி சொல்லனும்..அத விட்டுட்டு கடனுதவி செய்யுங்கப்பான்னு உதவி கேட்டா அதை மனித உரிமைக்கு எதிரானது போன்று உதவி கேட்டவனுக்கு உபதேசம் பண்ணுகின்றீர்கள்...நல்லது!!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
வெறும் தகவல் அறிக்கை மையம் என்றிருந்திருந் தால் கடன் பெறுவதற்கான வழியைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடலாம். ஆனால் சத்தியமார்க்கம் இணையதளம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எவற்றையும் அணுகுவதால் ''மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான், வாக்குறுதி தந்து மாறு செய்கிறான்'' என்பதையும் சேர்த்துச் சொல்லியிருப்பத ு சரி எனப்படுகிறது.

கடன் கொடுக்கல் வாங்கலை தகுந்த சாட்சிகளுடன் நேர்மையாக எழுதிக்கொள்ளுங ்கள் என்று திருமறை நிபந்தனை விதித்துள்ளது என்பதை அறிவோம். இவற்றையும் கடந்து மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான் என்றால் இஸ்லாமிய அமைப்புகளில் கடன் பெறுவோருக்கும் இது பொருந்தத்தானே செய்யும்.

தினமும் சந்தித்துப் பேசி மகிழ்ந்த நண்பர்களிடையே இந்த இயல்பு நிலைமாறி ஒருவரைப் பார்த்து மற்றவர் தலைமறைவாகி விடுகிறார் என்றால் மனிதன் கடன்படும்போது இந்த அவலமெல்லாம் ஏற்படும். ஆகையால் கடனால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொண்டு, தகுதிக்கு மீறி கடன்படுவதைத் தவிர்க்கவேண்டும ் என்று சொல்லியிருப்பத ு சரியே!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்