முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

யம்: அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வேறு வீடு மாற்றுவதற்காக வீடு பார்த்த போது வீட்டு உரிமையாளர், "வீட்டிற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணம் வேண்டும்; கட்டிட வேலை முடிப்பதற்காக நீங்கள் வாடகை தரவேண்டாம்; இரண்டு வருடத்தில் தங்களுடைய பணத்தை கொடுத்து விடுகிறேன்!" என்று கூறுகிறார்.

மேற்கண்ட பணத்தை கொடுத்துவிட்டு வீடு வாடகை இல்லாமல் இருந்து கொள்ளலாமா? சிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு தங்கள் விளக்கம் தர அன்புடன் கோருகின்றேன். - சகோதரர் முஸ்தஃபா.

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

நீங்கள் கூறும் மேற்படி நிபந்தனையை ஒத்தி அல்லது குத்தகை என்று சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான். வீடு, கடை, நிலம், வயல், தோட்டம்-துரவு என ஒப்பந்த அடிப்படையில் இவற்றை வாடகைக்கு விடலாம்.
 
உமர் இப்னு கத்தாப் (ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி 2338, முஸ்லிம் 3158)
 
வீடு வாடகைக்கு விடும்போது, வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு வருபவரிடம் முன்பணம் (Advance) பெறுவதுண்டு. இது வாடகைப் பணத்தை முன்னரேப் பெறுவதாக இருக்கலாம். அல்லது குடியிருக்க வருபவர் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடு பாதுகாப்புத் தொகை (Security deposit) ஆகவும் இருக்கலாம். எனினும் வீட்டைக் காலி செய்யும்போது வீட்டின் உரிமையாளர் வாடகையாளருக்கு இந்த முன்பணத்தைத் திரும்பத் தந்துவிடுவார்.
 
வீட்டின் உரிமையாளரிடம் முன்பணம் இருந்தாலும் வாடகைதாரர் ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணத்தைக் கொடுத்திட வேண்டும். நடப்பில் வாடகை ஒப்பந்தம் இந்த அடிப்படையில் உள்ளன என்பதை அனைவரும் அறிந்தது. இதில் கடன் ஏற்படாது.

கேள்வியில் உள்ள "ஒத்திக்கு முடித்தல்" சூழ்நிலையில் வீட்டின் உரிமையாளருக்குத் தேவைப்படும் பெரும் தொகையைக் கொடுத்து அதைத் திரும்பத் தரும்வரை வாடகை தரமாட்டேன் என ஒப்பந்தம் செய்து வீட்டில் குடியேறி இலவசமாக அனுபவித்துக் கொள்வது இஸ்லாம் பொருந்திக் கொள்ளாத ஒப்பந்தமாகும்! இது கடன் கொடுப்பதாகும்.

ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து, வாடகையைக் கொடுக்காமல் மூன்று வருடங்கள் ஒருவர் குடியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்: மாதம் 2,000 ரூபாய் வாடகை என்றாலும் மூன்று வருடங்களுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வீட்டின் உரிமையாளர் இழக்கின்றார். ஒரு லட்சம் ரூபாயை வேறெங்காவது முதலீடு செய்து அதன் மூலம் வீட்டின் உரிமையாளர் லாபம் அடைவார் என்று சொன்னாலும் அந்த லாபம் அவர் ஓடி உழைப்பதற்கான கூலியாகும். நஷ்டமடைந்தாலும் அது அவரைச் சார்ந்ததாகும்.
 
மூன்று வருடங்களில் ஒரு லட்சம் ரூபாயைத் திரும்பப் பெறும் நிலையில், மூன்று வருடங்களுக்கு வாடகைக் கொடுக்காமல் குடியிருப்பவர் எவ்வித உழைப்புமின்றி 72,000 ஆயிரம் ரூபாய் லாபம் பெறுகின்றார் இதன் சுயரூபம் வட்டி!

அதே ஒரு லட்சம் ரூபாயை உறங்குநிலை கூட்டாளி (Sleeping partner) ஆக ஒரு தொழிலில் முதலீடு செய்தாலும், தொழிலில் ஏற்படும் லாப - நஷ்டங்கள் இரண்டிற்கும் பொறுப்பேற்கிறார் என்பதைக் கவனித்தால், பிறரின் மீது நஷ்டத்தைப் போட்டு விட்டு லாபத்தை மட்டுமே பெற வைக்கும் வட்டி நிலை வெளிப்படும்.

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் மாதம் வட்டியைப் பணமாகப் பெறாமல் வாடகையாகப் பெற்றுக் கொள்கிறார். வாடகைப் பணம் 72,000 ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தி லாபடைந்தாலும் துவக்கத்தில் கொடுத்த அந்த ஒரு லட்சம் ரூபாய் குறையாமல் இருக்கிறதே என்பதைச் சிந்தித்தாலும் இது தெளிவான வட்டியாகும் என்பதை விளங்கலாம்.

சிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள்:
 
வட்டியின் தன்மையை அறிந்தவர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார். கடன் கொடுத்தவருக்கு கடன் பட்டவர் அன்பளிப்பாக எதையும் வழங்குதல் கூடாது. கடன் கொடுத்தவரும் கடன் பட்டவரும் ஒருவருக்கொருவர் இதற்கு முன்னர் அன்பளிப்புகள் வழங்கிக் கொண்டிருந்தாலே தவிர.
 
போகின்ற வழியாக இருந்தாலும் ''என்னை இந்த இடத்தில் இறக்கிவிடு'' என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் வாகனத்தில் இடம் (Lift) கேட்டால் அது வட்டியாகும். இதற்கு முன்னர் அவர்களிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகள் செய்திருந்தாலே தவிர, என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் எவ்வித சலுகைகளையும் பெறக்கூடாது. இவ்வாறு சலுகையை எதிர்பார்ப்பது வட்டி என்றே நபிமொழிகள் உரைக்கின்றன.

இதன் அடிப்படையில், 2000 ரூபாய் மாத வாடகைக்கு விடப்படும் வீட்டை ஒரு லட்ச ரூபாய் கடன் தந்திருக்கிறார் என்பதற்காக 500 ரூபாய் என மாத வாடகையைக் குறைத்துக் கொண்டால் எஞ்சியுள்ள 1500  ரூபாயும் இஸ்லாத்தின் பார்வையில் வட்டியாகும்.

பணமதிப்பில் வீழ்ச்சி எழுச்சி ஏற்படுகின்றதே என்கிற வாதம் சரியா?

இன்று பணமதிப்பில் ஏற்றத் தாழ்வு (Rupee fluctuation) நிகழ்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் கொடுத்த அதேத் தொகையை மட்டும் பெறும்போது கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறாரே? என்கிற வாதமும் எழுகிறது. இது தொடர்பாக முந்தைய கேள்வி - பதிலை இங்கு தருவது பொருத்தமெனக் கருதுகிறோம்.

கேள்வி:   அஸ்ஸலாமு அலைக்கும்....

பிற மதச் சகோதரர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டுள்ளார். இதற்கான உங்கள் பதிலை தருமாறு கேட்டு கொள்கிறேன். இன்று என் கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதை ஒருவருக்கு வட்டியில்லா கடனாகக் கொடுக்கிறேன். அவர் இந்தப் பணத்தை ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆயிரம் ரூபாய்க்கான இன்றைய மதிப்பு அப்படியே மாறாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் இருக்கப் போவதில்லை. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆயிரம் ரூபாயை கொண்டு நாம் வாங்கியிருக்கக் கூடிய பொருளை இப்போது நம்மால் வாங்க இயலாது. அதுபோலவே இப்போது வாங்கக் கூடிய பொருளை பத்து வருடங்களுக்குப் பிறகு வாங்க இயலாது.

ஆக, வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படும்போது (அது உதவியாக இருந்தாலும் கூட) கொடுத்தவர் பாதிக்கப்படுகிறார். அவரது உழைப்புக்கான சரியான மதிப்பு இல்லாமல் போகிறது. (அந்தப் பணம் உழைப்பில்தானே வந்திருக்கும்). கடன் வாங்கியவர் வட்டியில்லாமல் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது, ஒருவரை ஏமாற்றிய பாவத்தை ஏற்கிறாரே? பணம் கொடுத்தவரின் பணத்தை திருடியவரைப் போலாகிறாரே?

(துபையிலிருந்து ஜமால்)

பதில்:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இன்று கையிருப்பாக உள்ள ஆயிரம் ரூபாயின் மதிப்பில் நாளை ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். அதுபோல் விலைவாசி ஏற்றமும் வீழ்ச்சியும் நாளைய தினத்தில் என்னவாகுமோ என்கிற எதிபார்ப்பில் நாம் இன்று உள்ளது போல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் விலைவாசி ஏற்றம், நாணய மதிப்பின் ஏற்றத் தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்க இதே சூழ் நிலையில் வஹீ அருளப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் அருளப்பட்ட வசனம்:

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும் வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டு விடுவீர்களானால் - (அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் 002:280)

கடன் வாங்கியவர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு வசதி வரும்வரை அவகாசம் கொடுங்கள் என்பது அல்லாஹ்வின் அறிவுரையாகும். அவகாசம் என்பதில் கால அளவு குறிப்பிட்டுச் சொல்லாததால் இங்கு கால அளவுக்கு எல்லையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!

விலைவாசி ஏற்றம், பண மதிப்பின் வீழ்ச்சி, என்பதெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை நன்கு அறிந்த இறைவன், கடன் கொடுத்தோருக்கு அவகாசம் கொடுங்கள் என்றும் கூறுகின்றான். பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பிச் செலுத்தினால் கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகிறார் என்று கூறுவது சரியல்ல.

மேலும், கடன் வாங்குபவரிடம், கொடுப்பவர் - இத்தனைத் தவணைகளில் - இத்தனை மாதங்களில் கடன் திருப்பி அடைக்கப்படும் என்ற உறுதிமொழிகள் முன்னமே ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் கடன் தொகை கை மாறும் போது, கொடுத்தவரின் பாதிப்பு பற்றி பேசுவதும் முறையல்ல...

கடன் வாங்கியவர் பத்து ஆண்டுகள் கழித்து வட்டியில்லாமல் கடனைத் திரும்பச் செலுத்தும்போது, கடன் கொடுத்தவரை ஏமாற்றுகிறார் அல்லது கடன் கொடுத்தவரிடமிருந்து திருடிக் கொள்கிறார் என்கிற கருத்தை அல்லாஹ்வோ இறைத் தூதரோ சொல்லாமல் நாமாக முடிவு செய்ய இயலாது.

யூதர்கள் ''வியாபாரம் வட்டியைப் போன்றதே'' (அல்குர்ஆன் 002:275) என்று கூறியதைப் போன்றே இன்றும் வட்டியை வியாபாரத்துடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துவோரும் உள்ளனர். அப்படி வியாபாரத்துடன் இணைத்து வட்டியை நியாயப்படுத்தும் கேள்வியைத் தான் பிற மத சகோதரர் கேட்டிருக்கிறார். விலைவாசி ஏற்றம் பணமதிப்பின் வீழ்ச்சி என்பதையெல்லாம் காரணியாக்கி வட்டியை நியாயப்படுத்துவது மார்க்கத்திற்கு முரணாகும்.

கடன் கொடுப்பவர், கடன் தொகை ஆயிரம் ரூபாயை நாளைய விலைவாசி ஏற்றத்துடன் ஒப்பிட்டு கடனுதவியை வியாபாரமாக்கி கொச்சைப் படுத்துவதைவிட கடன் கொடுக்காமல் இருந்து விடலாம். ஏனெனில், கடன் தொகையைத் திரும்பப் பெறும்போது விலைவாசியைக் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது பண மதிப்பின் ஏற்றத்தாழ்வைக் கணக்கிட்டு கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

COT Mohammed Ghouse
0 #1 COT Mohammed Ghouse 2013-10-20 10:36
மாற்றுக்கேள்விய ே தேவையில்லாத வகையில், மிகவும் விளக்கமாக அளிக்கப்பட்டிரு க்கும் தெளிவுரை இது. பாராட்டுக்கள்!

- கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்
Quote | Report to administrator
Anwar
0 #2 Anwar 2013-10-21 15:06
I have questions.

Is it wrong if we lend money in terms of Gold rather INR to avoid interest as well as loss of money's value.

For example, Instead of giving INR 29,000 as debt, can't it be termed as 10gms of gold. The borrower has to return 10gms (irrespective of INR it could be either 35,000 or 25,000 when he returns).

a, Is it right as per Islamic rules?
b, Is it right as per our govt law?

-----------------------------------
கடனுதவியை வியாபாரமாக்கி கொச்சைப் படுத்துவதைவிட கடன் கொடுக்காமல் இருந்து விடலாம்

Honestly telling, many Muslims are doing this and the needy people are getting the loans for 24% to 36% of compound interest from others and getting poorer from poor. Will this idea help both?


(Above question is for long term loan., not for few days help)

Plase correct me if I am wrong !
Quote | Report to administrator
ஜி.என்
+1 #3 ஜி.என் 2013-10-26 18:15
இந்த பதிலில் அடைப்படைத் தவறு இருப்பதாக தெரிகின்றது.

ஒத்திக்கு, அடைமானத்திற்கு வீடு பிடிக்கும் யாரும் அதை வைத்து சம்பாதிப்பதற்கா க பிடிப்பதில்லை. அவர்களின் அத்தியாவதியத் தேவையான வீடு, அவர்களுக்கில்லா த நிலையில் , மிகுந்த மனசுமையுடன்தான் ஒத்திக்கோ, வாடகைக்கோ வீடு பிடிக்கிறார்கள் .

மனிதர்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளில் ஒன்று வீடு. அத்தகைய வீடில்லாதவர்கள் இஸ்லாமியப் பார்வையில் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்படாதவராக வே கருதப்படுவார் என்பதை நாம் கவனத்தில் கொண்டு இப்பிரச்சனையை அணுக வேண்டும்.

அடிப்படைத் தேவையான வீட்டைப் பற்றி இஸ்லாம் கூறும் போது,

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا

அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதித்தளமாக ஆக்கியுள்ளான் (அல்குர்ஆன் 16:80) என்று குறிப்பிடுகிறான்.

"புயூத்திகும்" உங்கள் வீடுகள் என்று இறைவன் குறிப்பிடுவதையு ம் அங்குதான் அமைதி கிடைக்கின்றது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஒப்பந்தமிட்டு 2,3 ஆண்டுகளுக்கொரு முறை பொருட்கள் எல்லாவற்றையும் அல்லிக் கொண்டு அடுத்த வீடு தேடி அலைபவர்கள், மன அமைதியோடு வாழ்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவே முடியாது. வீடு தேடி அலைபவர்களால் தான் அந்த சுமையையும் வலியையும் உணர முடியும். இஸ்லாமியப் பார்வையில் தேவையுள்ளவர்கள் .

இதை புரிந்துக் கொண்டு இப்பிரச்சனையை அணுகுவோம்.

சொந்த வீட்டுக்கு வசதி இல்லாமல், இடமில்லாமல், இடமிருந்தாலும் வீடுகட்ட பணமில்லாமல் வீடுதேடி அலையும் மக்கள் இருக்கின்ற பணத்தை கொடுத்து வீடு பிடிக்கிறார்கள் . இன்றைக்கு வீட்டை அடைமானம் அல்லது குத்தகையிடுபவர் கள் தமக்கென்று சொந்த வீட்டை வைத்துக் கொண்டு மேலதிக வருமானத்திற்காக வே இதை செய்கிறார்கள்.

இந்நிலையில் உள்ள ஒரு வீட்டை 3 லட்சம் கொடுத்து ஒருவர் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மாதத்திற்கு 2 ஆயிரம் வாடகை என்ற நிலையில் 3 வருடங்கள் அவர் இருந்தால் அவர் கொடுத்த 3 லட்சத்தில் 72 ஆயிரத்தை இழந்து மீதி 2.25 ஆயிரத்துடன் அவர் வீட்டை காலி செய்கிறார். மீண்டும் அடுத்த வீடு பிடிக்க அடுத்தத் தொகை புரட்ட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

அதே சமயம் ஆரம்பத்தில் 3 லட்சத்தை அவரிடமிருந்து பெற்ற வீட்டுக்கு சொந்தக்காரர் எவ்வித நட்டமுமில்லாமல் முன்பே 3 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு கொடுக்கும் போது வாடகையையும் கழித்துக் கொண்டு கொடுத்தால் இங்கு அசலில் வட்டியில் விழுபவர் வீட்டுக்கு சொந்தக்காரர் தான். மாதந்தோரும் குறிப்பிட்ட தொகையை வாடகையாக பெறுவதென்பது வேறு. முன்கூட்டியே பணத்தைப் பெற்று அதிலிருந்து கழித்துக் கொண்டு கொடுப்பதென்பது வேறு.

மாதந்தோரும் இரண்டாயிரம் வாடகையென்றால் வீடு பிடிப்பவர்கள் வசம் 3 லட்சமும் மொத்தமாக இருக்கும். அதை அவர்கள் எதிலாவது முதலீடு செய்து லாபமீட்ட வழியுண்டு. (மூன்று லட்சத்திற்கு மிக குறைந்த லாபமாக அவர்கள் ரூ 2000 பெற்றால் கூட அதை வாடகையாக கொடுத்தால் அவர்களின் பணம் குறையாமல் அவர்களிடம் இருக்கும். அதை விடுத்து வீட்டு சொந்தக்காரருக் கே லாபமீட்டி கொடுப்பது போன்ற பதில்கள் வீட்டு அவலங்களை மனதில் சுமந்து அலைபவர்களை மேலும் பலவீனமடைய செய்யும்.

இதுமட்டுமின்றி இன்னொன்றையும் ஆழமாக நாம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

பணத்திற்கென்று தனி மதிப்பு எதுவும் உலகில் கிடையாது. சென்ற மாதம் 100 ரூபாயாக இருந்த தாள் அதே போன்று இன்றும் இருந்தாலும் சென்ற மாதம் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த மாதம் வாங்க முடிவதில்லை. இதை புரிந்தவர்கள் பணத்திற்கென்று தனி மதிப்பு எதுவுமில்லை என்பதை விளங்குவார்கள்.

பணவீக்கத்தால் சிக்கித் தவிக்கும் மக்களின் பொருளாதார நிலையில் விடில்லாதவர்கள் , இருக்கும் பணத்தின் எண்ணிக்கையையும் குறைத்து கிடைக்கும் பணத்தின் மதிப்பையும் இழந்து நின்றால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு தீர்வு சொல்வது யார்? இன்றைக்கு 2 லட்சத்தில் கிடைக்கும் எந்தப் பொருளும் அடுத்த மூன்று வருடங்களில் கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் பஞ்சம் வரும் என்று அறுவடையை நிறுத்த சொல்லி ரேஷன் முறைக்கு வழி வகுத்தார்கள் யூசுப் (அலை) அவர்கள். அத்தகைய தீர்க்கமான முன்னறிவிப்பு எதுவுமில்லாத நிலையில் தொடர்ந்து பண வீட்சியையே சந்தித்து வரும் மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது பதில்.

நபி(ஸல்) காலத்தில் பணபுழக்கம் இல்லை. உற்பத்தி குறைச்சல் போன்றவற்றை மட்டுமே சந்தித்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்த திர்ஹம் - தினார் (தங்கம் வெள்ளி) மதிப்பு குறையவில்லை. இன்றைக்கும் நிலைமை அதுதான். பணத்தின் மதிப்பை ஒரு நாட்டின் உற்பத்தி, கையிருப்பு, தங்கம் போன்ற பல நிலைகளே தீர்மானிக்கின்ற ன. எனவே பணம் என்ற காகிதங்களைக் கொண்டு இப்பிரச்சனையை அணுகுவது பொருந்தாது.

வீடு அடைமானம் - ஒத்திக்கு வைப்பவரிடம் நான் 3 லட்சம் ரொக்கமாக கொடுக்காமல் ஒரு லட்சத்திற்கு 5 பவுன் விதம் 15 பவுன் கொடுக்கிறேன். 3 வருடம் கழித்து அவர் 15 பவுனை திரும்ப கொடுத்தால் எனக்கு எந்த நட்டமும் ஏற்படாது. ஏனெனில் தங்கத்தின் மதிப்பு நிலையானது.

அவ்வாறு ஒப்பந்தத்தில் வீடுகளை அடைமானம் வைத்தால் தங்கம் கொடுத்து அடைமானத்திற்கு செல்பவர்கள் மாதாமாதம் வாடகைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அந்த வீட்டை விட்டு கிளம்பும் போது மீண்டும் 15 பவுன் கிடைப்பதால் அவர் எந்த நஷ்டமும் அடையமாட்டார்.

தங்கத்தில் முடிவு செய்தால் மட்டுமே அடைமான வீட்டுக்கு வாடகை என்ற நிலை வரும். பணத்தை வைத்து முடிவு செய்தால் இங்கு வீட்டின் தேய்மானம் - அங்கு பணமதிப்பின் வீழ்ச்சி இரண்டும் நடப்பதால் மேலதிகமாக வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
Quote | Report to administrator
M Muhammad
0 #4 M Muhammad 2013-10-27 01:04
சகோதரர் ஜி என் அவர்கள் விளக்கத்தில் அனைத்து வாதங்களும் கருவோடு தொடர்பற்றதாகவும ், அனுதாபத்தினை அடிப்படையாக்கி, ஒத்தியை சரி காண முயன்றுள்ளதாக உள்ளது.

இஸ்லாம் இவ்வாரு அனுதாபத்தின் அடிப்படையில் மார்க்க விஷயஙளை அணுகிட அனுமதி வழங்க வில்லை. அனுதாபம் கஷ்ட நஷ்டங்கள் என்பது வேறு மார்க்க சட்டங்கள் ஹலால் ஹராம் என்பது வேரு.

வீடு கட்ட வாங்க வசதியில்லை, வாடகை வீட்டை விட்டு அடிக்கடி மாற்றுவது சிரமம் போன்ற காரணங்களுக்காக இதை நியாயப்படுத்திட லாகாது. வீடு கட்ட வாங்க வசதி வரும் வரை அதற்கு ஹலாலான வழிகளில் முதலீடு முயற்ச்சி மற்றும் தொழில் வியாபாரம் செய்ய வேண்டும். ஆனால் அதற்காக ஒரு தொகையை கொடுத்து விட்டு வாடகையின்றி அந்த வசதியை வீட்டை அனுபவிப்பது கூடாது.

ஒருவர் தம் வீட்டை அனுதாபத்தின் அடிப்படையில் ஒருவருக்கு இலவசமாக வழங்கிடலாம் அதில் ஒருவர் குடியிருக்கலாம் என்பது வேரு விஷயம். ஆனால் ஒரு தொகையை கொடுப்பதால் அந்த நிலை எனும் போது இது தெளிவாக வட்டியாகிறது. வட்டியெனும் போது கொடுப்பவர் பெருபவர் சாட்சி என்று அனைவரும் சமமான குற்றவாளிகள் என்பது போல் இங்கும் இரு சாராரும் சமமாக குற்றவாளிகள் என்பது பதிலில் தெளிவாக உதாரணங்களோடும் ஹதீஸ் ஆதாரங்களோடும் விளக்கப் பட்டுள்ளது.

அதை கருத்தில் கொள்ளாமல் இவ்வாரு நீண்ட ஒரு விளக்கம் கொடுத்து அடிப்படையை அதாவது ஒரு பொருளை உபயோகிக்க அதற்குரிய வாடகையை தருவது அவசியம் என்பதை கருத்தில் கொள்ளாமல் பண வீக்கம், தேய்மானம், தங்கம், முதலீடு என்று ஆய்வை கொண்டு செல்வது முறையல்ல. அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
Abu Muhai
0 #5 Abu Muhai 2013-10-27 14:41
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் ஜி.என்

பதிலில் அடிப்படைத் தவறு இருப்பதாக தெரிகின்றது என்று துவக்கி, தவறு எதையும் சுட்டிக் காட்டாமல் சம்பந்தமில்லாத கருத்துகளை எழுதியுள்ளீர்கள ். உங்கள் வீடுகளில்தான் அமைதி கிடைக்கின்றது என்கிற இறைவசனத்தை எடுத்தாண்டிருப் பது பதிவுக்கு சம்பந்தமில்லாத வினோத விளக்கம்.

வீட்டுக்காரரிடம ் குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுத்து அதைத் திரும்பத் தரும்வரை வாடகைக் கொடுக்காமல் குடியிருந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒத்திக்கு வீடு முடித்து, வாடகையின்றி இலவசமாக குடியிருக்கலாமா ? என்பதே கேள்வி. அவ்வாறு வாடகையின்றி குடியிருப்பது வட்டி எனப் பதிலில் குறிப்பிடப்பட்ட ுள்ளது. இது வட்டி இல்லை என்பதற்கு மார்க்க ரீதியாக சான்றுகள் இருந்தால் எழுதுங்கள். சத்தியமார்க்கம் தளத்தினர் திருத்திக் கொள்வார்கள்.

பணவீக்கத்தை முன்னிலைப்படுத் தி பணமதிப்பின் வீழ்ச்சியை ஆதாரமாக்குவது முறையல்ல. பணம் சேமிப்பாக கைவசம் வைத்திருந்தாலும ் அப்பவும் பணமதிப்புக் குறையத்தான் செய்யும் இது இயல்பு.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் விலைவாசி உயர்ந்து, மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் என்று முறையிட்டனர்.

''அல்லாஹ்தான் விலை நிர்ணயம் செய்பவன், வாழ்வாதாரத்தைக் குறைப்பவன், தாராளமாக வழங்குபவன் ஆவான். உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதியிழைத்ததாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத நிலையில் என் இறைவனைச் சந்திக்க விரும்புகிறேன்' ' என்று நபியவர்கள் விலை நிர்ணயம் செய்வதை மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, விலை உயர்வைக் காரணம்காட்டி நியாயப்படுத்துவ தும் சரியல்ல!

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு ஏன் பத்து டன் இரும்புக்கும் கூட மதிப்பீடு செய்து ஒப்பந்தம் எழுதிக்கொள்ளலா ம். இவையனைத்தும் வியாபாரப் பொருட்களே! இதை ஆட்சேபிக்கும் வகையில் பதிவில் எந்த வார்த்தைகளும் இல்லை. ஆனால், நடைமுறைப் பழக்கத்தில் இருக்கும் காகிதப் பணத்தைக் கொண்டு மதிப்பீடு செய்தல் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் அதிகாரமில்லை!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
ஜி என்
0 #6 ஜி என் 2013-10-27 22:52
வஅலைக்குமுஸ்ஸலா ம் வரஹ்.

என் பதிவில் சிந்தித்து போதுமான விளக்கம் எடுத்துக் கொள்ளப்படும் என்றே நினைத்தேன். மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ள தால் மேலும் தொடரும் நிலை.

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்திற்காக மக்களல்ல இது உலக நடைமுறை என்றாலும் இஸ்லாம் மட்டும் இதில் அதீத கவனம் செலுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியா நிலை வரும் போது மனிதன் மீது குற்றமில்லை என்ற முக்கியமான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

குர்ஆன் மற்றும் சுன்னாவின் சட்டவரைகளை நீங்கள் ஆய்வு செய்தால் மனிதனின் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத்தான் சட்டங்கள் வகுக்கப்பட்டுள் ளன என்பதை சாதாரணமாக புரிந்துக் கொள்ள முடியும் (ஷிர்க் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு)

மனிதர்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் சட்டங்களை அவர்கள் மீது திணிப்பது இலகுவான இஸ்லாமிய மார்க்கத்தை கடினப்படுத்துவத ற்கு ஒப்பாகி விடும்.

மனிதர்களின் வாழ்வாதார தேவைகளில் ஒன்றாக இஸ்லாம் வீட்டை கூறியுள்ளது. அதனால் தான் அந்த வீட்டிற்கு ஜகாத் இல்லை. வீடு கட்டுவதற்காக வாங்கிப் போடப்பட்டுள்ள இடத்திற்கு ஜகாத் இல்லை. இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் வீடு வாழ்வாதாரத் தேவை. இஸ்லாமிய ஆட்சியாக இருந்தால் குடிமக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும். இஸ்லாமிய ஆட்சியில் வீடு ஒத்திகைக்கு பிடிப்பது, இது போன்ற சட்டப் பிரச்சனைகள் எழாது. bவாழ்வாதாரமாக இஸ்லாம் கூறியுள்ள அடிப்படைத் தேவை இந்த பிரச்சனையின் மூலக் கூறு. மக்களின் மீதான இந்த அனுதாபத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. எனவே இதை கருவோடுதான் தொடர்புபடுத்தி ப் பார்க்க வேண்டும்b. வீடுள்ளவர்கள் அதை தேடி அலைய வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் இன்றைக்கு தேடி அலைகிறார்கள் என்றால் அதை கருவோடு தொடர்பற்றதாக எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

சம்பந்தப்பட்ட வீடு ஒத்திகைக்கு சத்தியமார்க்கம் வழங்கிய பதிலை சற்று விளக்கமாகவே அணுகுவோம்.

வீடு ஒத்திகைக்காக கொடுக்கப்படும் பணம் கடனேயல்ல. கடன் என்று இரு சாராரும் அதை எடுத்துக் கொள்வதுமில்லை. என் வீட்டை நீ பயன்படுத்து உன் பணத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதே அங்கு ஒப்பந்தம். எனவே இங்கு கடனை நுழைத்துப் பார்ப்பது தேவையற்றது.

****வீடு வாடகைக்கு விடும்போது, வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு வருபவரிடம் முன்பணம் (Advance) பெறுவதுண்டு. இது வாடகைப் பணத்தை முன்னரேப் பெறுவதாக இருக்கலாம்.**** சத்திய மார்க்கம்

பதிலின் ஆரம்பமே ஒத்திகை என்ற ஒப்பந்தத்திற்கு சம்பந்தமில்லாதத ு. ஒத்திக்கு வீடு என்பதால் அங்கு வாடகை என்ற பேச்சே கிடையாது எனவே வாடகையை முன்பணமாக பெற முடியாது. (இஸ்லாமும் வாடகையை முன்பணமாக பெற்றுக் கொள்ள எங்கே அனுமதியளித்துள் ளது என்பதை கூறுங்கள்)

*****குடியிருக்க வருபவர் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால ் அதற்கான இழப்பீடு பாதுகாப்புத் தொகை (Security deposit) ஆகவும் இருக்கலாம்.**** சத்திய மார்க்கம்.*****

இதுவும் ஒத்திக்கு சம்பந்தமில்லாதத ு. ஏனெனில் ஒத்திக்கு ஒப்பந்த பத்திரம் எழுதும் போது வீடு கொடுக்கப்பட்ட மாதிரியே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஷர்த் மட்டுமே கொள்ளப்படுகின் றது. சேதப்படுத்தப்பட ்டால் சரி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றே பத்திரத்தில் ஒப்பந்தம் எழுதுவார்கள்.

முன் பணமாக பெற்றுக் கொள்வதிலிருந்த ு "கழித்துக் கொள்வது" என்ற பேச்சுக்கே இடமில்லை ஒத்திகையில். (ஒத்திக்காக எழுதப்படும் ஒப்பந்தப் பத்திரங்களைப் பார்க்கவும்).

****ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து, வாடகையைக் கொடுக்காமல் மூன்று வருடங்கள் ஒருவர் குடியிருக்கிறார ் என்று வைத்துக் கொள்வோம்: மாதம் 2,000 ரூபாய் வாடகை என்றாலும் மூன்று வருடங்களுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வீட்டின் உரிமையாளர் இழக்கின்றார்*** ** சத்தியமார்க்கம்

எப்படி வருமான இழப்பு வரும் என்கிறீர்கள். அவர் free யாக வீட்டில் இருக்க சொல்லவில்லை. வருமான இழப்பு ஏற்பட. 3 லட்சம் ரொக்கப்பணத்தைப ் பெற்றுக் கொண்டே குடி இருக்க சொல்லியுள்ளார் . எனவே இங்கு வருமான இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த மூன்று லட்சத்தை அவர் எந்த நோக்கத்திற்காக பெற்றுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளாமல் பதிலளித்துள்ளீர ்கள். bபிற தொழிலில் முடக்கி லாபம் ஈட்டுவதற்கோ அல்லது வீட்டை கட்டி முடிப்பதற்காகவே ா அவர் அதை பெற்றிருந்தால் நிச்சயம் அந்த பணம் அவருக்கு லாபத்தையே ஈட்டி கொடுக்கின்றது. ஒன்று வீடு முழுமைப் பெற்றுள்ளது. அல்லது தொழில் முதலீடு லாபத்தை பெற்றுக் கொடுக்கின்றதுb

வீட்டின் தேய்மானத்தை அதை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு வாடகை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நீங்கள். பண மதிப்பீட்டின் இழப்பையும், அது பிறரால் பயன்படுத்தப்படு வதையும் கவனத்தில் கொள்ளாமலிருப்ப தேன் என்பது புரியவில்லை.

buபிறருடைய மூன்று லட்சத்தில் இவர் இவ்வாறு லாபமீட்டுவது வட்டியாகாதாu.b..

பெறப்படும் அடைமானத் தொகை குறித்து நீங்கள் பரசீலிக்கவே இல்லை

கடன் பற்றி விளக்கமளிக்கப்ப ட்டுள்ளது. ஒத்திகைக்கும் கடனுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதால் அதை நாம் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.

நபி(ஸல்) காலத்தில் தங்கத்தில் தான் கொடுக்கல் வாங்கல் எல்லாமும் நடந்தது. அந்த நடைமுறை இன்றைக்கு வந்தால் இழப்பு ஏற்படாது. தீர்க்கமில்லாத காகிதப் பணத்தை பிரச்சனைகளுக்கு அடிப்படையாகக் கொள்வதை சட்டவிதியாக எடுத்துக் கொள்ளவே முடியாது.

வீட்டின் தேய்மானம் - பணமதிப்பின் வீழ்ச்சி இதை ஒப்பிட்டு பாருங்கள். இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
ஜி என்
0 #7 ஜி என் 2013-10-27 22:53
பண மதிப்பின் சரிவு பற்றி குறிப்பிடும் போது எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ் என்ன சொல்கின்றது என்பதை முதலில் புரிவோம்.

எவ்வளவு விலை உயர்வு ஏற்றத்தாழ்வு வந்தாலும் அதை கட்டுப்படுத்த இஸ்லாமிய அரசாங்கம் அல்லது முஸ்லிம் உம்மத் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இந்த ஹதீஸை வைத்து புரிந்துக் கொள்வதா...? அவ்வாறு புரிந்தால் அது குடிமக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

ஹதீஸ் என்ன சொல்கின்றது?

''அல்லாஹ்தான் விலை நிர்ணயம் செய்பவன், வாழ்வாதாரத்தைக் குறைப்பவன், தாராளமாக வழங்குபவன் ஆவான்.

இயற்கையாக ஏற்படும் விலைச்சல் வீட்சி, உற்பத்தி மாற்றங்கள் குறித்தே நபி(ஸல்) இந்த முடிவை அறிவிக்கிறார்கள ். அது யாராலும் எதுவும் செய்ய முடியாததாகும். அதே நேரம் நல்ல விளைச்சலும் உற்பத்தியும் இருக்கும் நிலையில் அதை யாராவது பதுக்கி வைத்து விலை உயர்வை ஏற்படுத்தினால் அதை நபி(ஸல்) கண்டித்துள்ளார் கள். பதுக்குபவன் இஸ்லாமியனாக - நம்மை சார்ந்தவனாக இருக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள்.

எனவே இன்றைக்கு ஏற்படும் பொருளாதார வீட்சி அனைத்திற்கும் மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் காட்டி முஸ்லிம் உம்மத் வாய்மூடி இருக்க வேண்டும் என்ற முடிவை நாம் எடுக்க முடியாது. சத்தியமார்க்ம் இதை புரிந்துக் கொள்ளும் என நினைக்கிறோம்.

(குறிப்பு 1) தேவைக்கேற்ப விளக்கம் விரிவாக கொடுக்க வேண்டி வரும்

(குறிப்பு 2) சத்தியமார்க்கமள ித்த பதிலில் எடுத்துக் காட்டியுள்ள ஆதாரங்களே பதிலோடு சம்பந்தப்படவில் லை எனும் போது அதை விளக்கினாலே போதும் வேறு ஆதாரங்களை எடுத்துக் காட்ட வேண்டி வராது.

(இஸ்லாமிய சட்டங்களை விளங்குவதற்கான பதிவுகள் தான் இவை - அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
Quote | Report to administrator
M Muhammad
0 #8 M Muhammad 2013-10-28 01:12
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஜி என் அவர்களே

மீண்டும் அடிப்படையை விட்டு விட்டு நீண்ட விளக்கம அளிப்பதாக தோன்றுகிறது.

வீடு அடிப்படை வாழ்வாதாரம் அதனால் குடியிருக்கும் வீட்டிற்கு ஜகாத் இல்லை என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்று கொள்வோம், அதை இங்கு இணைப்பது எதற்காக மேலும் அதனால் ஒருவர் வீட்டிற்கு வாடகை தராமல் இருக்கலாம் என்றோ ஒருவர் பொருளை வாடகை தராமல் அல்லது பணம் தராமல் அனுபவிக்கவோ இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளதா ?

உணவு அதை விட அடிப்படையான ஒன்று நாம் ஒரு ஹோட்டல் முதலாளியிடம் ஒரு தொகையை கொடுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட காலம் உணவை சாப்பிட்டு விட்டு ஒரு நாள் கொடுத்த தொகையை திரும்ப பெற்றுகொள்வதும் கூடும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.....

கூட்டு முறை வியாபாரம் இலாப நஷ்ட அடிப்படையில் ஈடுபடுவது வேறு இது போன்று அனுபோகம் எனும் முறையில் ஈடுபடும் போது அடிப்படையே வேறு ஆகும்.

ஒத்திக்கு இருப்பவர் பணத்தை கடனாக தருவதில்லை என்று கூறுகிறீர்கள் சரி கடன் என்றால் என்ன ஒன்ரை கொடுத்து திரும்பி பெற்றுகொள்வது தானே கடன். பெறாதது அன்பளிப்பு, அல்லது விலை, கிரயம்.

முன்பணம் அல்லது அடமானம் எனும் போதும் அது திருப்பி தரப்படும் ஆனால் அதை வழங்குபவர் அனுபோகத்திற்கு உரிய தொகையை வழங்காமல் இருந்தால்.... அது எனது தொகைக்கு வட்டி / இலாபம் தேவையில்லை. எனது அனுபோகத்திற்கு வாடகை தேவையில்லை, என்பது முன்பனம் வழங்கிய ஒரே காரணத்திற்காக என்பதால் அந்தநிலை மேலே சொன்ன வாகனத்தில் பயணம் செய்வது வட்டி என்பதைப் போல் நிபந்தனை அல்ல்து ஒப்புதல் இருப்பினும் இல்லையெனிலும் தெளிவாக வட்டியாகும்.

கடனாக ஒரு தொகையை ஒருவர் தந்தால் அல்லது அட்வான்ஸாக தந்தால் அல்லது அடமானமாக தந்தால் அதை பெருபவர் நிலை ஒன்றாகுமா பெற்றவர் மூன்று நிலைகளிலும் உரிமை கொண்டாட இயலுமா ?

ஒரு தொகையை வழங்கியவர் அதை பெற்றவருடைய வாகனத்தில் பயணிப்பதை, அதற்கு முன்னர் அந்நிலை இலையெனில் வட்டி என்று இஸ்லாம் எச்ச்சரிக்கின்ற து என்பதை கவனத்தில் கொள்ளவும் ஒத்தி தெளிவான வட்டி என்பது விளங்கும் அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
சஃபி
0 #9 சஃபி 2013-10-28 02:56
அன்புச் சகோதரர் ஜி என்,

நீங்கள் ஒத்திக்குக் குடியிருப்பவர் என்றும் நான் வீட்டின் உரிமையாளன் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

உங்களிடமிருந்து நான் பெற்ற ஒத்தித் தொகையைப் பயன்படுத்தி தொழில் செய்து லாபம் அடைவதால் எனக்கு நீங்கள் வாடகை தரத் தேவயில்லை என்பது உங்கள் கருத்து.

உங்களிடமிருந்து பெற்ற ஒத்திப் பணத்தைத் தொழிலில்தான் மூலதனம் செய்ய வேண்டும் என்பதும் அதில் லாபம் மட்டுமே வரவேண்டும் என்பதும் உங்கள் ஊகம்தானே?

இன்னும் தெளிவாக, "என் பணத்தைக் கொண்டு லாபமடைந்தாய்; எனவே வாடகை இல்லை" என்று சொல்கின்றீர்கள்.

உங்கள் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கி நான் நட்டப்பட்டால் வாடகையை டபுளாகத் தருவீர்களாக்கும ் ...?
Quote | Report to administrator
ஜி என்
0 #10 ஜி என் 2013-10-28 15:30
****உணவு அதை விட அடிப்படையான ஒன்று நாம் ஒரு ஹோட்டல் முதலாளியிடம் ஒரு தொகையை கொடுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட காலம் உணவை சாப்பிட்டு விட்டு ஒரு நாள் கொடுத்த தொகையை திரும்ப பெற்றுகொள்வதும் கூடும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது** ** முஹம்மத்

முதலாளியிடம் நாமாக சென்று பணம் கொடுத்து சாப்பிட்டு விட்டு அந்தப் பணத்தை பெறுவதென்பது வேறு. அவராக ஒப்பந்தம் செய்வதென்பது வேறு.

கடையின் விஸ்தீகரிப்பிற் காக உங்களிடம் அவர் மூன்று லட்சம் கேட்கிறார். மூன்று வருடங்களில் அதை திருப்பிக் கொடுப்பதாக கேட்கிறார். கடனாக வேண்டாம் லாபத்தில் பங்கு கொடுக்கிறேன் என்ற ஒப்பந்தத்தில் தினமும் 100 ருபாய் கொடுக்கிறார். அல்லது சாப்பிட சொல்கிறார். இதை வட்டி என்பீர்களா...? இங்கு கடன் என்ற பேச்சுக்கே வேலையில்லை. இதை நீங்கள் வட்டி என்று புரிந்தால் கூட்டு தொழில்முறைப் பற்றி விளக்குங்கள்.

நஷ்டம் என்பது வியாபாரத்தில் மட்டுமல்ல. வீடு இடிந்து விழுந்தால் அதுவும் கூட நஷ்டம் தான். எனவே வியாபார நஷ்டத்தை மட்டும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டாம்.

***போகின்ற வழியாக இருந்தாலும் ''என்னை இந்த இடத்தில் இறக்கிவிடு'' என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் வாகனத்தில் இடம் (Lift) கேட்டால் அது வட்டியாகும்.*** * சத்திய மார்க்கம்.

கடனுக்காக வந்த ஹதீஸை இங்கு பொருத்துகிறீர்கள்.

அடைமானம் என்பது கடன் அடிப்படையில் வரவே வராது என்பதுதான் சரி.

"உன் பணத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என் வீட்டை நீ பயன்படுத்திக் கொள், நீ வீட்டை திரும்ப கொடுக்கும் போது உன் பணத்தை நான் திரும்ப கொடுத்து விடுகிறேன்" என்பதுதான் ஒப்பந்தம்.

அடைமான சட்டங்களை எடுத்துப் பாருங்கள்.

நபி(ஸல்) வார்கோதுமையை வாங்கிக் கொண்டு திரும்ப அதை கொடுக்கும் வரை அடைமானமாக கவசத்தை யூதரிடம் கொடுக்கிறார்கள ் என் கவசத்தை நீ பயன்படுத்தக் கூடாது என்ற எந்த நிபந்தனையுமில்ல ாமல். (புகாரி)

வார்கோதுமையை திரும்ப கொடுத்து விட்டு கவசத்தைப் பெற்றுக் கொள்வதே இங்கு ஒப்பந்தம்.

வீட்டை திரும்ப கொடுத்து விட்டு பணத்தைப் பெறுவதும் இப்படித்தான். இங்கு வீட்டின் தேய்மானத்தை கருத்தில் கொண்டால் பணமதிப்பின் இழப்பீடுகளையும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

*****உங்களிடமிருந்து பெற்ற ஒத்திப் பணத்தைத் தொழிலில்தான் மூலதனம் செய்ய வேண்டும் என்பதும் அதில் லாபம் மட்டுமே வரவேண்டும் என்பதும் உங்கள் ஊகம்தானே?

உங்கள் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கி நான் நட்டப்பட்டால் வாடகையை டபுளாகத் தருவீர்களாக்கும ்***** சஃபி

அடைமானத்திற்காக பெற்றப் பணத்தைக் கொண்டு நீங்கள் வீடு கட்டி முடித்து உங்களுக்கு வீடு முழுமையாக கிடைத்தால் அதற்கு நீங்கள் பணம் கொடுத்தவருக்கு லாபம் தருவீர்களாக்கும ் என்று நம்மாலும் கேட்க முடியும்.

பிரச்சனை அதுவல்ல. அடைமானத்திற்காக அவர் ஏன் பணத்தைப் பெறுகிறார்? வீட்டு பீரோவில் பூட்டி வைக்கவா.... நிச்சயம் அந்தப் பணத்தைக் கொண்டு அவரது தேவை நிறைவேறுகின்றது . பணம் கொடுத்தவர்களுக ்கு வீட்டு தேவை நிறைவேறுகின்றது . அவ்வளவுதான்.

தொழிலில் முடக்கினால் நஷ்டம் என்கிறீர்கள். இந்தப் பணத்தால் வீட்டை முழுமையாக்கிக் கொண்டால்..... இப்போது பதில் கொடுங்களேன்.

அடைமானம் என்பதை கடன் என்ற தோரணையிலிருந்த ு விலகி நின்று பரிசீலியுங்கள். தெளிவு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
Abdullah M.
0 #11 Abdullah M. 2013-10-29 00:52
// போகியம், ஒத்தி என்ற பெயரில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த செயல் மார்க்கத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்பதை விளங்க முதலில் வியாபாரம், வட்டி பற்றிய சிறிய விளக்கத்தை தெரிந்து கொண்டு பின்னர் கேள்விக்குரிய பதிலை பார்ப்போம்.
www.onlinepj.com/.../aug_2009

வியாபாரம் என்பது, இலாபமும் நஷ்டமும் இணைந்தது. ஆனால் வட்டியில் இவ்வாறு இருப்பதில்லை. வட்டி எனும்போதும் அதில் உறுதி யான இலாபம் கிடைக்கிறது. மேலும் வியாபாரம் என்பதில் ஒரு தடவை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் அப்போது மட்டுமே ஒரு தடவை இலாபம் கிடைக்கும். தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்காது. ஆனால் வட்டியில் தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்கும். இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு போகியம் என்பதைப் பார்ப்போம்.

ஒருவர் ஒரு இலட்சம் ரூபாயை கொடுக்கிறார். அதற்காக ஒரு வீட்டை இரண்டு வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பணத்தை கொடுக்கிறார். மேலும் இரண்டு வருடம் கழித்த பின்னர் கொடுத்த ஒரு இலட்சத்தையும் திருப்பி வாங்கிக் கொள்கிறார்.

இந்நிலையில் போகியத்திற்கு வீட்டை பயன்படுத்துபவர் , அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தால் அவர் சுமார் மாதம் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியிருக்கும ். அப்படியானால் அவர் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த பணம், அவர் கொடுத்த ஒரு இலட்சத்தால் கிடைத்திருக்கிற து.

இதை இன்னொரு கோணத்தில் பாருங்கள் : போகியத்திற்கு வாங்கிய வர் அந்த வீட்டை பயன்படுத்தாமல் மற்றவருக்கு வாடகைக்கு கொடுத்தி ருந்தால் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் வாங்கியிருப்பார ். இந்த 48,000 ரூபாய் வட்டி இல்லையா? இதை வியாபாரத்துடன் ஒப்பிடமுடியுமா? இதில் இலாபமும் நஷ்டமும் இருக்கிறதா? இலாபம் மட்டும்தானே உள்ளது.

இது வட்டிதான் என்பதை புரிந்து கொள்ள இன்னொரு உதாரணத்தை கவனியுங்கள்: ஒருவர் இதே ஒரு இலட்சத்தை ஒருவருக்கு வழங்கி, மாதம் எனக்கு 2000 ரூபாய் வட்டி தர வேண்டும் என்று கூறுகிறார். அவரும் ஒத்துக் கொண்டு இரண்டு வருடம் 48000 ரூபாய் வட்டி கட்டுகிறார். பின்னர் ஒரு இலட்சத்தையும் திருப்பிச் செலுத்துகிறார். இதை கூடும் என்று சொல்வோமா?

வட்டி என்று பெயர் சொன்னால் கூடாது. அதற்கு வேறு பெயரில் வாங்கினால் கூடும் என்று நாம் கூற முடியுமா? என்பதை சிந்தியுங்கள் தவறு வெளிப்படும். www.onlinepj.com/.../aug_2009
Quote | Report to administrator
ஜி என்
0 #12 ஜி என் 2013-10-29 01:18
ஆன்லைன்பிஜேயிலி ருந்து எடுத்து லிங்க் கொடுக்கப்பட்ட இந்த பதில் மேலே நாம் பேசிவரும் வாதங்களோடு ஒத்துப் போகக் கூடிய அறிவார்ந்த பதில் தான் என முதலில் சத்தியமார்க்கம் ஒத்துக் கொள்கின்றதா... என்பதை விளக்கட்டும். பிறகு அந்த பதில் குறித்து ஆய்வோம்.
Quote | Report to administrator
M. Muhammad
0 #13 M. Muhammad 2013-10-29 01:35
அன்பு சகோதரர் ஜி என் எனது பின்னூட்டத்தை முழுமையாக படித்து பார்க்கவும் அதில் நான் இலாபம் நஷ்டம் எனும் அடிப்படையில் கூட்டு வியாபாரம் செய்வது என்பது வேரு, என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

உங்கள் வாதப்படி ஹோட்டல் முதலாளி தினம் நூறு ரூபாய் தருகிறேன் அல்லது தினம் வந்து எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று ஒப்பந்தம் செய்தாலும் அது ஹராம் ஆகும். இருவரின் ஒப்புதல் எதையும் ஹலால் ஆக்கிவிடும் என்றால் எத்தனையோ விஷயங்கள் ஹராம் இல்லை ஹலால் எனும் நிலை ஏற்படும். இது விபரீதமான சிந்தனையாகும்.
அதுமட்டுமின்றி உங்கள் பணமும் குறையாமல் திருப்பி தரவேண்டும் எனும் நிபந்தனை.....

ஹோட்டல் முதலாளி வியாபாரத்தில் இலாபம் பெற்றால் உங்களுக்கு அதில் முதலீட்டுக்கு ஏற்ப சதவீதமாக இலாபத்தில் பங்கு தர வேண்டும்,அதை குறிப்பிட்ட தொகையாக முன்னரே நிர்ணயிக்கக் கூடாது.அதே போல் எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் உங்களுக்கு நூரு ரூபாய் தருகிறேன் அல்லது நீங்கள் தினம் சாப்பிடுங்கள் நான் இன்னும் பலரிடம் பணம் பெற்று உங்களுக்கு ஒப்பந்தப் படி குறையாமல் தினம் தருகிரேன் / சாப்பாடு போடுகிறேன் சாப்பிடுங்கள் பின்னர் உங்கள் பணமும் முழுமையாக தருகிறேன் என்பதை... என்னவென்பீர்கள் . இதுதான் கூட்டு முறை வியாபாரம் என்று நீங்கள் விளங்கியுள்ளீர் களா.

இலாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் சத வீதம் எனும் அடிப்படையில் முன்னரே ஒப்பந்தம் செய்து கூட்டு முறையில் வியாபாரம் செய்வது அனுமதிக்கப் பட்டது அதை விட்டு நீ பட்டினி கிடந்தாலும் எனக்கு இவ்வளவு தர வேன்டும் என்பதும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் என்ன செய்தாவது எனக்கு எனது தொகையை திருப்பித் தர வேன்டும் என்ற ஒப்பந்தம் இஸ்லாம் சற்றும் அனுமதிக்காத ஹராமான ஒப்பந்தம் ஆகும்...

இது கடன் இல்லை என்று மீண்டும் கூறியுள்ளீர்கள் இது கடன் இல்லையா என்பது வேறு விஷயம் ஆனால் இது ஹலால் இல்லை ஹராம் என்பது மிகவும் தெளிவாக உள்ளது

குர் ஆனில் உள்ள மிக நீளமான ஒரு வசனம் அத்தியாயம் 2 : 282வது வசனம் ஆகும் இது வணக்க வழிபாடு பற்றியோ, சொர்க்கம் நரகம் பற்றியோ, வேறு மார்க்க விஷயங்கள் பற்றியோ அல்ல கடன் பற்றிய ஏவல் வழிமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மீண்டும் ஹோட்டல் உணவுக்கு வருவோம். ஹோட்டல் முதலாளிக்கு நஷ்டம் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் செலவில் அவனுக்கு சாப்பாடு போடவெண்டும் என்பதோ அவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என்று ஒப்புதலும் கூட ஹராம் எனும் போது அவரிடம் போய் சாப்பிடுவதை என்ன சொல்ல.

ஒத்தியும் இதே அடிப்படை என்பதை ஒத்துக் கொள்ள முன்வாருங்கள் இல்லையெனில் தொடருவோம் இன்னும் பல உதாரணங்களுடன். .
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #14 சத்தியமார்க்கம்.காம் 2013-10-29 12:08
அன்புச் சகோதரர் ஜி.என்,

பேசுபொருளுக்கு உட்பட்ட வாசகர்களின் கருத்துகளை அனுமதிப்பதில் சத்தியமார்க்கம் .காம் தெளிவான வரையறைகளைப் பின்பற்றி வருகின்றது.

எங்களுக்கு உடன்பாடு உடைய கருத்துகளை மட்டும் வாசகர்கள் எழுதவேண்டும் என்ற விதியை நாங்கள் பின்பற்றுவதில்ல ை. எனவேதான் ஆக்கத்தின் தொடர்புடைய அனைத்துப் பின்னூட்டங்களும ் அனுமதிக்கப் படுகின்றன - உங்களுடையவை உட்பட.

நன்றி!
Quote | Report to administrator
Abdul Rahmaan
0 #15 Abdul Rahmaan 2013-10-30 00:50
ஒத்திக்கு விடலாமா?

www.youtube.com/.../
Quote | Report to administrator
S.S.K.
0 #16 S.S.K. 2013-10-30 01:03
வீட்டை ஒத்திக்கு விடுவது ?
aleemqna.blogspot.com/.../...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒத்தி என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் பழக்கத்தைத் தான் பெந்தகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஒருவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றத ு என்று வைத்துக் கொள்வோம். இவர் தன்னிடமுள்ள வீட்டை ஒருவரிடம் அடைமானமாகக் கொடுத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார். கடன் வாங்கியவருக்கு வசதி வரும் போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டு தனது வீட்டை வாங்கிக் கொள்கிறார். இது அடைமானமாகும்.

கொடுக்கின்ற பணத்திற்கு ஈடாக ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பணம் கொடுத்தவர் அந்தப் பொருளை உபயோகப்படுத்தாம ல் இருக்க வேண்டும்.

அந்தப் பொருளை அவர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால் அது வட்டியாகி விடுகின்றது. அதாவது அந்த வீட்டை அவர் உபயோகிப்பதற்காக க் கொடுக்க வேண்டிய வாடகையை, தான் கொடுத்துள்ள பணத்திற்கு வட்டியாக எடுத்துக் கொள்கின்றார். ஒத்தி என்று கூறப்படுவது இது தான்.

ஒத்தி என்பது தெளிவான வட்டி தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. உயிருள்ள பிராணிகளை அடகு வைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும் அந்தப் பிராணியை வளர்ப்பதற்கு ஆகும் பராமரிப்புச் செலவுக்குப் பிரதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

"அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப ்பின் அதன் பாலை அருந்தலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2511

இந்த ஹதீஸில், அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்காகும் செலவுக்குப் பிரதியாக அதைப் பயன்படுத்தலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற ார்கள். இது உயிருள்ள பிராணிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கால்நடைகளைப் பொறுத்தவரை அவற்றை வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட்டாக வேண்டும். அடைமானமாகப் பெற்றவர் இந்தச் செலவுகளை தனது சொந்தப் பணத்திலிருந்து செய்ய முடியாது. எனவே தான் அந்தச் செலவுக்குப் பிரதியாக அந்தப் பிராணிகளைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளிக்கின்றார்கள்.

வீடு, நிலம் போன்றவற்றிற்கு இது போன்ற பராமரிப்புச் செலவுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றை அடைமானமாகப் பெற்றால் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வாடகையை வட்டியாக வாங்குவதற்குச் சமம். மேற்கண்ட ஹதீஸில் பிராணிகளைப் பயன்படுத்தலாம் என்று மேலோட்டமாகச் சொல்லாமல் "அதற்காகும் செலவுக்குப் பகரமாக' என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே வீடு, நிலம் போன்றவற்றை அடைமானம் பெற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாகின்றது.

அதே சமயம் அந்த வீட்டிற்கான வாடகையை நில உரிமையாளருக்குக ் கொடுத்து விட்டு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
Quote | Report to administrator
அப்துர் ரஹ்மான்
0 #17 அப்துர் ரஹ்மான் 2013-10-30 10:25
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் ஜி.என்,

உங்கள் உரையாடலைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

கடன், அடைமானம் இரண்டையும் வெவ்வேறாக கொண்டு விளக்கமளித்து வருகிறீர்கள். எனக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டு.

//வீட்டின் தேய்மானத்தை அதை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு வாடகை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நீங்கள். பண மதிப்பீட்டின் இழப்பையும், அது பிறரால் பயன்படுத்தப்படு வதையும் கவனத்தில் கொள்ளாமலிருப்ப தேன் என்பது புரியவில்லை.// - ஜி.என்.

கடனும் அடைமானமும் வெவ்வேறானவை எனில், கடன் பெறும்போது அடைமானமாக ஏதாவது கொடுப்பது கூடாதல்லவா?

அடைமானமாக எதுவுமே பெறாமல் ஒருவரை நம்பி பெரிய தொகையினைக் கடன் வழங்க யார் முன்வருவர்?

எனவே கடனும் அடைமானமும் வெவ்வேறானவை அன்று; ஒன்றுக்கொன்று தொடர்பானவையே என்றே தோன்றுகிறது.

கடனில்லையேல் அடைமானம் இல்லை; அடைமானம் இல்லையேல் கடன் இல்லை!

ஒத்திகைக்கு வீடு எடுப்பவர் கொடுக்கும் பணத்தினை வீட்டு சொந்தக்காரர் பயன்படுத்தி லாபம் பெறுவதைக் கணக்கில் எடுத்து, ஒத்திகைக்கு வீடு எடுத்தவர் வீட்டை வாடகை கொடுக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம் என்றுள்ளீர்கள். அத்துடன், பணத்தின் மதிப்பு வீழ்ச்சியினையும ் கணக்கில் எடுக்க வேண்டுமென கூறியுள்ளீர்கள் .

இந்தியாவில் ரூபாய்க்கு மதிப்பு வீழ்ச்சி; நல்ல அரசாங்கம் வந்தால் மதிப்பு உயரவும் வாய்ப்பிருப்பதை மறக்கக்கூடாது. சமீபத்தில்கூட, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கீழே போய் மீண்டும் மேலேறியதைக் கவனிக்க வேண்டும்.

இதுவே ரூபாய் அன்றி டாலர் அல்லது யூரோ எனில்? அவற்றின் மதிப்பு உயருகிறதே? அப்படி எனில், யூரோ அல்லது டாலராக பணத்தைப் பெற்றவர், பணம் பெற்ற அன்றைய மதிப்பில்தான் திரும்ப செலுத்தும்போது கொடுப்பாரா? அல்லது பெற்ற பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பாரா?

இந்த மதிப்பு பிரச்சனை கடன் விசயத்திலும் உள்ளதே? 2005 ஆம் ஆண்டு நான் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, அதனை 2013 ல் திரும்பப்பெறுகி றேன் எனக்கொள்ளுங்கள் . 2005 ல் கொடுத்த 10 லட்சத்தின் மதிப்பு இப்போது கடுமையாக குறைந்துள்ளது. எனவே 2013 ல் நான் திரும்பப்பெறும் போது இன்றைய மதிப்புக்குக் கணக்கிட்டு வாங்கலாம்தானே? உங்கள் கருத்துபடி பார்த்தால், இதுதான் சரி என்று தோன்றுகிறதே? இல்லையேல், கடன் கொடுத்த நான் பெரும் இழப்புக்கு ஆளாவேனே?

வீட்டை ஒத்திகைக்கு விட்டு பணம் பெற்றவர் அதனைக் கொண்டு பெறும் லாபம்(தொழிலில் முதலீடு அல்லது வீட்டை முழுமைபடுத்தல்) , வீடு ஒத்திகைக்கு எடுத்தவர் அதனைப் பயன்படுத்துவதால ் சமன் ஆகிறது என்று கூறியுள்ளீர்கள் . வீட்டை ஒத்திகைக்கு விட்டவர், தம் தொழில் விருத்திக்காகவோ அல்லது வீட்டை முழுமைபடுத்துவத ற்காகவோ மட்டும்தான் பணம் பெற வாய்ப்புள்ளதா? தமது வேறொரு கடனுக்காகவோ அல்லது மருத்துவ செலவுக்காகவோ இப்படி ஏதாவது தம் அத்தியாவசிய செலவுக்காக தம் வீட்டை அடைமானமாக கொடுத்து பணம் பெற வாய்ப்புள்ளதுதா னே? இதில் பணம் பெற்றவருக்கு என்ன லாபம்?

மிக்க அன்புடன்
சகோ. அப்துர் ரஹ்மான்
Quote | Report to administrator
ஜி என்
0 #18 ஜி என் 2013-10-30 12:03
*****பேசுபொருளு க்கு உட்பட்ட வாசகர்களின் கருத்துகளை அனுமதிப்பதில் சத்தியமார்க்கம் .காம் தெளிவான வரையறைகளைப் பின்பற்றி வருகின்றது.

எங்களுக்கு உடன்பாடு உடைய கருத்துகளை மட்டும் வாசகர்கள் எழுதவேண்டும் என்ற விதியை நாங்கள் பின்பற்றுவதில்ல ை. எனவேதான் ஆக்கத்தின் தொடர்புடைய அனைத்துப் பின்னூட்டங்களும ் அனுமதிக்கப் படுகின்றன - உங்களுடையவை உட்பட.**** சத்தியமார்க்கம்.

வாசகர்கள் சுயமாக சிந்திப்பதற்காக எல்லா கருத்துக்களையும ் வெளியிடுவது ஆரோக்யமான செயல்தான். இதற்காக நாம் சத்தியமார்க்கத் தை பாராட்டுகிறோம் . அதே நேரம் எந்த ஒரு பிரச்சனையிலும் எங்கள் நிலைப்பாடு இது என்ற கருத்து இருக்க வேண்டும். அது குறித்தே எனது கமண்டை வைத்தேன். புரிதலுக்கு நன்றி!

ஒத்திக்கு விடலாமா.... என்ற கருத்தாடலில் கருத்து 15, கருத்து 16 ஒரே கருத்தை (அதற்கான ஆதாரத்தை அல்ல) சொல்லி வந்துள்ளதால் அதற்கு ஏற்கனவே உள்ள பதிவுகளில் கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன . ஆனாலும் ஆன்லைன் பிஜேயிலிருந்து லிங்கை கொடுத்து சில பகுதிகளை மட்டும் பதித்திருந்த (கருத்து 11) சகோதரர் அப்தல்லாஹ் அவர்களின் கவனத்திற்கு ஒரு பதிலை சொல்ல விரும்புகிறோம்.

பணமதிப்பின் வீழ்ச்சியில் பணம் கொடுத்து வீட்டை பிடிப்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தங்கத்தின் அடிப்படையில் போகியம் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் வாடகை கொடுக்க வேண்டும் என்று எழுதி இருந்தோம். சகோதரர் அப்தல்லாஹ் எடுத்துக் காட்டிய பதிவின் இறுதியில் நமது இந்தக் கருத்தே எழுதப்பட்டுள்ளத ு என்பதை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இதுவரை வந்தப் பதிவுகளில் தொடர்ச்சியாக, வீட்டை அடகு வைத்தால் வீடு உபயோகப்படுத்தப ்படுகின்றது வீடு உபயோகப்படுத்தப ்படுகின்றது என்ற வாதம் வைக்கப்படுகின்ற தே தவிர, வீட்டை பிடித்தவரின் பணம் வாங்கியவரால் உபயோகப்படுத்தப ்படுவதைப் பற்றி (நாம் அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சுட்டிக் காட்டியும்) கண்டுக் கொள்ளவே இல்லை. எனவே கருத்திடும் சகோதரர்கள் முழுமையாக படித்து கருத்துக்களை உள்வாங்கி பதிலிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்து சகோதரர் முஹம்மத் (பதிவு 13) அவர்களின் வாதங்களைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
ஜி என்
0 #19 ஜி என் 2013-10-30 13:10
****இருவரின் ஒப்புதல் எதையும் ஹலால் ஆக்கிவிடும் என்றால் எத்தனையோ விஷயங்கள் ஹராம் இல்லை ஹலால் எனும் நிலை ஏற்படும். இது விபரீதமான சிந்தனையாகும்.* **** முஹம்மத்

மிகச் சரியான சிந்தனை வாதமாகும் இது. ஒன்றை ஹராம் என்று கூறுவதற்கோ, ஹலால் என்று கூறுவதற்கோ தக்க சான்றுகள் வேண்டும். நாமாக தீர்மானிக்க முடியாது. அதே போன்று சம்பந்தமில்லாத சான்றுகளை எடுத்துக் காட்டியும் எதையும் ஹராம் - ஹலால் என்று சொல்லவும் கூடாது.

லாப நஷ்டத்தை வியாபாரத்தில் மட்டும் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று முந்தைய பதிவில் நான் தெளிவாக குறிப்பிட்டுள்ள ேன். உயிர்களின் நஷ்டத்தினாலும் நாம் சோதிக்கப்படுவே ாம் என்று குர்ஆன் கூறுவதை கவனியுங்கள்.

வீட்டை ஒத்திக்கு பிடிப்பவர் வீடு இடிந்து விழுதல் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக நஷ்டமடைய வாய்ப்புள்ளதையு ம் மறுக்க முடியாது. (எல்லா வீடுகளிலும் இப்படி நிகழாது என்ற வாதத்தை நீங்கள் வைத்தால் எல்லா வியாபாரங்களும் நஷ்டத்தில் முடிவதில்லை என்பது அங்கு பொருந்தி விடும்)

****இலாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் சத வீதம் எனும் அடிப்படையில் முன்னரே ஒப்பந்தம் செய்து கூட்டு முறையில் வியாபாரம் செய்வது அனுமதிக்கப் பட்டது *****முஹம்மத்

நஷ்டம் என்பது பொதுவானது. எல்லாவற்றிர்க்க ும் பொருந்தும். ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் ஒத்திகை என்பதில் நஷ்டம் இரு தரப்பிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் நஷ்டங்களை கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்ற ன.

நாம் போகியம் என்ற சட்ட விளக்கத்திலிருந ்து வியாபாரம் என்பதில் நுழைந்து விட்டோம். ஹோட்டல் உதாரணம் எடுத்துக்காட்டப ்பட்டதால் திசை மாறியுள்ளது. எனவே இதை பிரிதொரு சந்தர்பத்தில் பேசுவதே சரியாக படுகின்றது.

****இது கடன் இல்லை என்று மீண்டும் கூறியுள்ளீர்கள் இது கடன் இல்லையா என்பது வேறு விஷயம் ஆனால் இது ஹலால் இல்லை ஹராம் என்பது மிகவும் தெளிவாக உள்ளது***** முஹம்மத்

போகியம் என்பது கடனல்ல என்பதே நமது நிலைப்பாடு. காரணம் அதை கடன் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை.

என் பணத்தை நீ பயன்படுத்து, உன் வீட்டை நான் பயன்படுத்துகிறே ன். நீ பணத்தை ஒப்படைக்கும் போது நான் வீட்டை ஒப்படைக்கிறேன் என்ற கூட்டு ஒப்பந்தமே இங்கு நிகழ்கின்றது. அவ்வளவுதான். பணத்தையும் பயன்படுத்திக் கொண்டு வாடகையையும் கேட்க சொல்வது வீட்டுக்கு சொந்தக்காரரை வட்டியில் தள்ளுவிடும் என்றே நாம் அஞ்சுகிறோம்.

நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள 2:282 வது வசனம், உண்மையில் நீங்கள் போகியத்தை கடனென்று முடிவு செய்தால் வீட்டுக்கு வாடகைக் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளதை கவனிக்க நீங்கள் தவறியுள்ளீர்கள் .

فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ۚ

யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. (2:282)

வீட்டை வைத்து கடன் படுபவர் பத்திர வாசகத்தை அமைக்க வேண்டும். எப்படி அமைக்க வேண்டும்? அவர் பெற்ற கடனிலிருந்து எதையும் குறைத்து திருப்பி கொடுக்கக் கூடாது என்பதே இறைவனின் வாக்கு.

போகியம் கடனே கிடையாது. போகியத்தை கடன் என்று நீங்கள் கருதினால் அவ்வளவு பெற்றீர்களோ அதை குறைக்காமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்கிறான் இறைவன். இந்த வசனத்தை எடுத்துக் காட்டுகிறீர்களே ... கடனுக்கு வாடகைப் பெற வேண்டும் என்ற ஷர்த்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?

நபி(ஸல்) கவசத்தை அடைமானம் வைத்து வார்கோதுமைப் பெற்றார்கள் என்ற புகாரியின் ஹதீஸை எடுத்துக் காட்டினேன். வார் கோதுமையை திரும்ப கொடுத்து கவசத்தை பெற்றுக் கொள்வதே ஒப்பந்தம். எவ்வளவு எளிமையான வழிகாட்டல் இருக்கும் போது வட்டி, வாடகை என்று இங்கு திணிப்பதை எவ்வாறு ஒத்துக் கொள்ள முடியும்?
Quote | Report to administrator
ஜி என்
0 #20 ஜி என் 2013-10-30 15:20
*****கடனும் அடைமானமும் வெவ்வேறானவை எனில், கடன் பெறும்போது அடைமானமாக ஏதாவது கொடுப்பது கூடாதல்லவா?

அடைமானமாக எதுவுமே பெறாமல் ஒருவரை நம்பி பெரிய தொகையினைக் கடன் வழங்க யார் முன்வருவர்?

எனவே கடனும் அடைமானமும் வெவ்வேறானவை அன்று; ஒன்றுக்கொன்று தொடர்பானவையே என்றே தோன்றுகிறது.

கடனில்லையேல் அடைமானம் இல்லை; அடைமானம் இல்லையேல் கடன் இல்லை!**** அப்துர்ரஹ்மான் (கருத்து 17)

கடனுக்கு அடைமானத்தை இஸ்லாம் ஒரு ஷர்த்தாக ஆக்கியுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எடுத்துக் காட்டுங்கள்.

கடன் பட்டால் சாட்சிகளுடன் எழுதி வைத்துக் கொள்ளவே இஸ்லாம் வழிகாட்டுகின்றத ு. (அல்குர்ஆன் 2:282)

அதுவே கடன் பத்திரங்களாக சாட்சிகளுடன் பதிவு செய்யப்படுகின்ற ன.

கடனுக்கு அடைமானம் ஷர்த் என்றால் அது எல்லா கடன்களுக்கும் பொருந்தும். பெரியத் தொகைக்கு மட்டும்தான் என்று கிடையாது.

"கடனுக்கு அடைமானம் வைக்கப்பட்ட ஹதீஸ்கள் வந்துள்ளதே...." என்று இங்கு கேள்வி எழலாம். ஹதீஸ்களை பார்த்தால் எல்லா கடன்களுக்கும் ஈட்டுப் பொருள் கொடுக்கப்படவில ்லை என்பதை விளங்குவதுடன் அடைமானம் பற்றி வரும் ஹதீஸ்களை ஊன்றி கவனித்தால் விருப்பப்பட்டால ் கொடுப்பவரும் - வாங்குபவரும் பேசி அடைமானப்பொருளை பெற்றுக்கொள்ளல ாம் என்பது புரியும். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததாகும்.

**கடனில்லையேல் அடைமானம் இல்லை; அடைமானம் இல்லையேல் கடன் இல்லை*** என்ற உங்கள் வாதம் இஸ்லாமிய ஷர்த்துக்கு உட்பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

*****இதுவே ரூபாய் அன்றி டாலர் அல்லது யூரோ எனில்? அவற்றின் மதிப்பு உயருகிறதே? அப்படி எனில், யூரோ அல்லது டாலராக பணத்தைப் பெற்றவர், பணம் பெற்ற அன்றைய மதிப்பில்தான் திரும்ப செலுத்தும்போது கொடுப்பாரா? அல்லது பெற்ற பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பாரா?**** அப்துர்ரஹ்மான்.

கரன்சி என்றால் ரூபாய் - டாலர் - யூரோ எல்லாம் அதில் அடங்கத்தான் செய்யும். நிலையான மதிப்பில்லாத இவைகளின் ஏற்றத் தாழ்வை கருத்தில் கொள்ளப்படத்தான ் வேண்டும். நாம் இந்திய ரூபாயை மட்டும் கருத்தில் கொண்டு பேசுவது முறையல்ல.

இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத ்தான் தங்கத்தின் மதிப்பில் கொடுக்கல் - வாங்கல் எல்லாம் அமைவது நல்லது என்கிறோம்.

*****வீட்டை ஒத்திகைக்கு விட்டவர், தம் தொழில் விருத்திக்காகவோ அல்லது வீட்டை முழுமைபடுத்துவத ற்காகவோ மட்டும்தான் பணம் பெற வாய்ப்புள்ளதா? தமது வேறொரு கடனுக்காகவோ அல்லது மருத்துவ செலவுக்காகவோ இப்படி ஏதாவது தம் அத்தியாவசிய செலவுக்காக தம் வீட்டை அடைமானமாக கொடுத்து பணம் பெற வாய்ப்புள்ளதுதா னே? இதில் பணம் பெற்றவருக்கு என்ன லாபம்?**** அப்துர்ரஹ்மான்.

லாபம், நஷ்டம், வட்டி போன்ற வாதங்களை நாம் எடுத்து வைக்கவில்லை. அவ்வாறு எடுத்து வைக்கப்பட்டதற்க ு பதிலளித்தோம். அவ்வளவுதான்.

தேவை நிறைவேறுவதையே நாம் கவனத்தில் கொள்கிறோம். என்பணத்தை நீ பயன்படுத்து, உன் வீட்டை நான் பயன்படுத்துகிறே ன். இங்கு தேவைகள் நிறைவேறுகின்றன.

வீட்டை அடைமானம் வைக்காமல் பூட்டி வைத்தால் அவரது கடன் அடையுமா...? மருத்துவ செலவுதான் நிறைவேறுமா...? என்று யோசியுங்கள். இங்கு இருவரின் தேவையும் நிறைவேறுகின்றது.

அல்லாஹ் தெளிவைக் கொடுக்க போதுமானவன். அவன் மீது நம்பிக்கை வைக்கிறோம்.
Quote | Report to administrator
சஃபி
0 #21 சஃபி 2013-10-30 22:01
Quote:
பிரச்சனை அதுவல்ல. அடைமானத்திற்காக அவர் ஏன் பணத்தைப் பெறுகிறார்? வீட்டு பீரோவில் பூட்டி வைக்கவா.... நிச்சயம் அந்தப் பணத்தைக் கொண்டு அவரது தேவை நிறைவேறுகின்றது. பணம் கொடுத்தவர்களுக்கு வீட்டு தேவை நிறைவேறுகின்றது. அவ்வளவுதான்.
அன்புச் சகோதரர் ஜி என்,
நீங்கள் இதுவரைக்கும் எழுதியுள்ள நீண்ட பின்னூட்டங்கள் அனைத்தும் உங்களுடைய சொந்தக் கருத்துகளாகவே உள்ளன என்பதையும் நீங்கள் எடுத்தாண்ட நபி (ஸல்) கவச அடைமானத்தைப் பற்றிய ஒரேயொரு ஹதீஸிலும் உங்கள் கருத்தைப் புகுத்திப் பதித்துள்ளீர்கள ் என்பதையும் முதலில் பதிவு செய்துகொள்கிறேன்.

அடுத்து,
நீங்கள் எழுதும் நெடிய விளக்கங்கள் அனைத்தும் இரு சாராருடைய தேவை நிறைவேறும் ஒற்றைக் கருவைச் சுற்றியே இருப்பதாக நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

அவ்வாறாயின்,
நீங்கள் குறிப்பிட்ட கவச ஹதீஸின் பிரகாரம் அடைமானம் வைத்த நபி (ஸல்) அவர்களுக்குத் தேவை நிறைவேறியது. கவசத்தைப் பெற்றுக்கொண்ட யூதருடைய தேவை ஏதும் கவசத்தால் நிறைவேறியதா என்பதைப் பற்றிய சான்று இருந்தால் தர வேண்டுகிறேன்.
Quote | Report to administrator
ஜி என்
0 #22 ஜி என் 2013-10-30 23:24
****நீங்கள் குறிப்பிட்ட கவச ஹதீஸின் பிரகாரம் அடைமானம் வைத்த நபி (ஸல்) அவர்களுக்குத் தேவை நிறைவேறியது. கவசத்தைப் பெற்றுக்கொண்ட யூதருடைய தேவை ஏதும் கவசத்தால் நிறைவேறியதா என்பதைப் பற்றிய சான்று இருந்தால் தர வேண்டுகிறேன்.****சஃபி

நபி(ஸல்) அவர்களுக்கு தேவை இருந்தது அவர்கள் கோதுமையை பெறுகிறார்கள். யூதனிடம் பெற்றதால் பகரமாக கவசத்தை ஒப்படைக்கிறார்க ள். கவசத்தை அவன் பயன்படுத்தினானா ... இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் பயன்படுத்தினால் தவறில்லை. ஏனெனில் அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற எந்த ஒப்பந்தமும் அங்கு செய்யப்படவில்லை.

பயன்படுத்தித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும ் வைத்துக் கொள்ளலாம். பயன்படுத்துவது கட்டாயம் என்பது போல நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள்.

இன்றைக்கு வீட்டை அடைமானம் வைத்து பணம் பெறுபவர்கள் அந்த பணத்தை பயன்படுத்தாமல் வைத்துக் கொண்டால் அது அவர்களின் சொந்த விருப்பம். பயன்படுத்தத் தடையில்லை.. பணத்தை பயன்படுத்தக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து யாரும் வீட்டைப் பெறுவதில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்.
Quote | Report to administrator
M Muhammad
0 #23 M Muhammad 2013-10-31 01:21
அன்பு சகோதரர் ஜி என் அவர்களே

சகோ சஃபி அவர்கள் கூறியது போல் ஒரு ஆதாரமும் இல்லாமல் / ஆதாரங்களை தவறாக புரிந்து புரிய வைக்க முனைந்து வருகின்றீர்கள்.

சில இடங்களில் முன்னும் பின்னும் விட்டு விட்டு நடுவில் ஒன்றை எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள், அல்லது துவக்கத்தை விட்டு விட்டு இறுதியை மட்டும் எடுத்து ஏதேதோ பேசுகிறீர்கள்.

இதற்கு //'போக்கியத்தில ் இலாப நஷ்டம் இரு சாராருக்கும் என்பது புரிந்துக் கொள்ள வேண்டியது அதனால் அதை ஒப்பந்த்தத்தில் குறிப்பிடுவதில் லை// என்பது ஒரு சிறிய சான்று.

இதை உதாரணமாக கொண்டு நீங்கள் போக்கியம் எனும் முறையில் பெற்ற வீடு உங்கள் தவறு இல்லாமல் இடிந்து விழுந்தால் அதை உங்கள் செலவில் கட்டி கொடுப்பீர்கள் அல்லது வீட்டு சொந்தக்காரரோடு சேர்ந்து செலவு செய்து கட்டிக் கொடுப்பீர்கள் சரிதானே....

இது நீங்கள் உங்கள் விருப்பமாக செய்யலாம் ஆனால் அதை நிபந்தனையாக்க இயலாது. அதே போல் தான் உங்கள் பணம் மூலம் அவர் கட்டிய அவருடைய வீடு இடிந்தாலும் அதை நீங்கள் வேண்டுமானால் கட்டித் தரலாம் ஆனால் இது நியதி அல்லது நிபந்தனையாகாது.

நீஙள் இருவரும் சேர்ந்து ஊரில் இடிந்து விழுந்த அனைவரின் வீட்டையும் கட்டித்தரலாம் அது நன்மையை பெற செய்யும். அது இங்கு பேசு பொருளல்ல.

இங்கு ஒத்தி என்பதில் போக்கியம் என்பதில் இலாபம் நஷ்டம் எனும் அடிப்படையில்லை இலாபம் நஷடம் எதுவாயினும் திருப்பிப் பெரும் போது முழுமையாக கடன் போல் குறைவோ கூடுதலோ இல்லாமல் பெறும் நிலை உள்ளதால் அதை பயன் படுத்துவது கூடாது என்பதே பேசப்படுகிறது அதை மீறி பயன் படுத்தினால் அது வட்டியன்றி வேறல்ல என்பதே கவனிக்க வேன்டியது ஆகும்.

மேலும் நீங்கள் ஒருவருக்கு பல இலட்சங்கள் எந்த பெயரிலாவது தரலாம் அது கூட்டு வியாபாரம் அல்லாமல் அதை திருப்பி பெரும் நிலையிருப்பின் அதில் கடன் வருகிரது.

அதே போல் ஒருவர் தங்களுக்கு இருப்பதற்காக தமது வீட்டை இலவசமாக / தர்மமாக தரலாம் நீங்களும் இலவசமாக குடியிருக்கலம் ஆனால் அதற்கு பகரமாக ஒரு தொகையை அல்லது ஒரு பொருளை கொடுத்து விட்டுதான்' எனும் போது அது தெளிவாக வட்டியாகும்... என்பதே பேசு பொருள்.

//போகியம் கடனே கிடையாது. போகியத்தை கடன் என்று நீங்கள் கருதினால் அவ்வளவு பெற்றீர்களோ அதை குறைக்காமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்கிறான் இறைவன். இந்த வசனத்தை எடுத்துக் காட்டுகிறீர்களே ... கடனுக்கு வாடகைப் பெற வேண்டும் என்ற ஷர்த்தை எங்கிருந்து எடுத்தீர்கள்? //


கூறாததை கூறியுள்ளதாக விளங்கிகிறீர்கள ். கூறியதை கவனத்தில் கொண்டு தெளிவு பெறாமல் விட்டு விடுகிறீர்கள். நமது கிராம பாஷையில் சுருக்கமாக சொல்வதென்றால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயல்கிறீர்கள். . கைர் மேலும் முயலுவோம்.

அன்பு சகோதரரே தங்கம் வெள்ளி அல்லது கல்லை கூட அடமானமாக பண்ட மாற்றமாக பயன் படுத்தலாம் பெரும் பாரங்கற்களையும் இவ்வாரு பண்ட மாற்று இருப்பு தொகையாக பயன் படுத்தப் பட்டு வந்துள்ளது வரலாம்... இங்கு அது பிரச்சினையில்லை .

ஆனால் ஒத்தி(கை) என்பது தவறு என்று தரப்பட்ட விளக்கங்கள் சுட்டியிலும் 15 வது யு ட்யூபிலும், 16வது பின்னூட்டத்திலு ம் உள்ளதை விட்டு விட்டு... எனது வாதம் தான் கூறப்பட்டுள்ளது என்று தங்கத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.. . இது தான் ஒரு விஷயத்தை அணுகும் /ஆய்வு செய்யும் முறையா சகோதரரே..

ஒரு விஷயத்தை ஆதாரம் இல்லாமல் அனுமானங்களோடு பேசுவது தவறு.

போக்கியமும் கடனும் வேரு என்று கூறி வருவதால் போக்கியத்தில் கடன் எனும் நிலை இல்லையா என்பதை சிந்திக்க தவறுகிறீர்கள். எல்லாக் கடனும் போக்கியம் அல்ல ஆனால் எல்லா போக்கியத்திலும் அடமானத்திலும் கடன் எனும் நிலை உள்ளது. கடனுக்கு உரிய விதியே இங்கு வரும். கிரய வியாபாரம் அல்லது கூட்டு பங்கு தொழில் எனும் நிலை வராது என்பதை உணராமல் ஏதாவது கூறினால்..அது வேரு ஆகிவிடுமா ..ஹோட்டல் உதாரணங்கள் தெளிவடைய போதவில்லையா?

கடன் என்றால் என்ன என்பதை அல்லாஹ் தெளிவாக 2 : 282 ல் கூறுகின்றான் என்று கூறினால் அதை விட்டு விட்டு அதை போக்கியத்தோடு இனைத்து கூறியுள்ளீர்கள் உங்களுக்கு அது எப்படி சரியாக படுகிறது என்பது ஆச்சர்யமாக் உள்ளது. மேலும் நான் அந்த வசனத்தை போக்கியமும் கடனும் ஒன்று என்பதற்கு ஆதாரமாக எங்கு கூறினேன். 'கடன்' என்றால் ஒரு குறிப்பிட்ட தவனைக்கு பின் திருப்பி பெறப்படும் கை மாற்று, என்பதும் உடனுக்குடன் ஏற்படும் கைமாற்று கடனில் வராது அது கிரய வணிகம் ஆகும் என்பதை சுட்டவே அது என்பதை இங்கு கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சாதாரன விஷயம் அடமானமாக பெற்ற பொருளை உபயோகிக்க கூடாது என்றதை விளக்கி உயிருள்ளவைகள் அடமானமாக பெறப்படும் போது அவற்றை உயிர் வாழ பராமிக்கும் தொடர் செலவு உண்டு எனும் அடிப்படையில் பயன் படுத்த தனி அனுமதி வழங்கப்பட்டது அது உயிரற்ற தொடர் பராமரிப்பாகிய உணவு போன்ற தேவைகள் அற்ற வீடு கேடயம் சட்டி பானைகள் பாத்திரங்கள் ஆபரணங்கள் அணிகலன்கள் எனும் போது உபயோகிக்கலாகாது அது தொகைக்கு அல்லது வழஙப்பட்ட பொருளுக்கு (SECURITY)உத்தி ரவாதம் எனும் அடிப்படையில் பெற்று பத்திரமாக திருப்பி தரப்பட வேண்டும். அதை பயன் படுத்தினால் அது வட்டி என்று வாகன உதாரணம் மூலம் உள்ள ஹதீஸை காட்டினேன் அதை பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லை.

தொடருவோம் இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
சஃபி
0 #24 சஃபி 2013-11-02 16:58
Quote:
கவசத்தை அவன் பயன்படுத்தினானா... இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் பயன்படுத்தினால் தவறில்லை. ஏனெனில் அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற எந்த ஒப்பந்தமும் அங்கு செய்யப்படவில்லை.

பயன்படுத்தித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் வைத்துக் கொள்ளலாம். பயன்படுத்துவது கட்டாயம் என்பது போல நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள்.

இன்றைக்கு வீட்டை அடைமானம் வைத்து பணம் பெறுபவர்கள் அந்த பணத்தை பயன்படுத்தாமல் வைத்துக் கொண்டால் அது அவர்களின் சொந்த விருப்பம். பயன்படுத்தத் தடையில்லை.. பணத்தை பயன்படுத்தக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து யாரும் வீட்டைப் பெறுவதில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்.
எப்போது கேட்டாலும் திருப்பிக்கொடுக ்க வேண்டிய ஒன்று என்பதுதான் அடைமானம் என்பதன் பொருள். இத்தனை ஆண்டுக்கு என்று ஒப்பந்தம் எழுதிக்கொண்டு பயன்படுத்துவதான ால் எல்லாமும் சரிதான் என்பதுபோல் நீங்கள் வெற்று வாதம் செய்கின்றீர்கள்.

வங்கியில் வட்டிக்கு நகைக்கடன் வாங்குவதிலிருந் து ஃபைனான்ஸ் கம்பெனிகளில் கடன் பெறும் அனைவரும் தம் சுயநினைவோடு முழுமன ஒப்புதலோடு ஒப்ப்ந்தத்தில் கையெழுத்திட்டுத ான பெறுகின்றனர். அவையெல்லாம் ஹலாலா?
Quote | Report to administrator
GN
0 #25 GN 2013-11-04 21:15
*****சகோ சஃபி அவர்கள் கூறியது போல் ஒரு ஆதாரமும் இல்லாமல் / ஆதாரங்களை தவறாக புரிந்து புரிய வைக்க முனைந்து வருகின்றீர்கள். **** முஹம்மத்

*****நீங்கள் இதுவரைக்கும் எழுதியுள்ள நீண்ட பின்னூட்டங்கள் அனைத்தும் உங்களுடைய சொந்தக் கருத்துகளாகவே உள்ளன****ஷபி

*****
கூறாததை கூறியுள்ளதாக விளங்கிகிறீர்கள ். கூறியதை கவனத்தில் கொண்டு தெளிவு பெறாமல் விட்டு விடுகிறீர்கள். நமது கிராம பாஷையில் சுருக்கமாக சொல்வதென்றால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயல்கிறீர்கள். . **** முஹம்மத்

ஆதாரமில்லாமல் எழுதும் ஒருவரிடம் தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் செய்யத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதே வாதத்தை நான் உங்கள் பதிவுகள் பற்றி எடுத்து வைக்க முடியும். அது ஆரோக்யமானதாக அமையாது.

ஒன்றை பரிந்துக் கொள்ளும் விஷயத்தில் நமக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மை. அது குறித்து எழுதி வருகிறோம். வாசகர்களுக்கு இது விளங்கும்.

****சில இடங்களில் முன்னும் பின்னும் விட்டு விட்டு நடுவில் ஒன்றை எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள், அல்லது துவக்கத்தை விட்டு விட்டு இறுதியை மட்டும் எடுத்து ஏதேதோ பேசுகிறீர்கள். *** முஹம்மத்

எந்த அணி ஜெயிக்கப் போகின்றது என்று பார்ப்பதற்காக நாம் எழுதிக் கொண்டிருக்கவில ்லை. சாதகமானதை எடுத்து பாதகமானதை விட. மையக் கருவாக உள்ள வாதங்களுக்கு என் தரப்பு பதிலை பதிகிறேன். அதற்கே நீங்களிருவரும் நீ்ண்ட நெடிய பதிவு என்றெல்லாம் எழுதுகிறீர்கள். இன்னும் வரிக்கு வரி பதில் என்றால் என்ன சொல்வீர்களோ....

முக்கிய நோக்கம் சட்டத்தை புரிய வைப்பதுதான். எனது நீண்ட பதிவுகளில் எத்துனை வரிகளுக்கு நீங்கள் பதிலளித்துள்ளீர ்கள் என்பதை மீண்டும் படித்து பாருங்கள். எனக்காக வைத்த உங்கள் வாதத்தி்ன் பலவீனம் புரியும்.

இனி, "ஆதாரமில்லாமல். ..." ஏதேதோ பேசுகிறீர்கள்.. . நெடிய விளக்கம்.....தவ றானவாதம்.... மொட்டைத் தலை.....போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து வந்தால் அதை நான் கண்டுக் கொள்ள மாட்டேன்.

புதியவாதங்களை மட்டும் கவனிப்பேன். அது சரியாக இருந்தால் ஏற்பேன் பதிலளிக்க வேண்டி வந்தால் இன்ஷா அல்லாஹ் பதிலளிப்பேன்.

******இங்கு ஒத்தி என்பதில் போக்கியம் என்பதில் இலாபம் நஷ்டம் எனும் அடிப்படையில்லை இலாபம் நஷடம் எதுவாயினும் திருப்பிப் பெரும் போது முழுமையாக கடன் போல் குறைவோ கூடுதலோ இல்லாமல் பெறும் நிலை உள்ளதால் அதை பயன் படுத்துவது கூடாது என்பதே பேசப்படுகிறது அதை மீறி பயன் படுத்தினால் அது வட்டியன்றி வேறல்ல என்பதே கவனிக்க வேன்டியது ஆகும்.****** முஹம்மத்

முன்பு பதிலளிக்கப்பட்ட வாதத்தையே மீண்டும் வைத்துள்ளீ்ர்கள ். கடன் போல மீண்டும் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதால் அதை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது வட்டியாகும் என்கிறீர்கள். முந்தைய பதிவுகளைப் படியுங்கள். கூடுதலோ குறைவோ இல்லாமல் திரும்பத் தர வேண்டியது எண்ணிக்கையில்லல ்ல, மதிப்பில் என்பதை முன்பே பதித்துள்ளோம்.

சரி, இப்படி சிந்தியுங்கள். மூன்று லட்சத்திற்கு 15 பவுனை கொடுத்து ஒருவர் வீட்டை பிடிக்கிறார். திரும்ப கொடுக்கும் போது 15 பவுன் கொடுங்கள் என்கிறார். இப்போது 15 பவுன் கூட்டவோ, குறைக்கவோ படாமல் மீண்டும் கொடுக்க வேண்டிய அடகு பொருளாகும். இந்த 15 பவுனைப் பெற்றவர் அதை 3 லட்சத்திற்கு விற்று தமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார். ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் தங்கத்தை ஒப்படைப்பதற்காக மார்க்கட்டில் வாங்குகிறார். இப்போது அதன் விலை 3 லட்சத்து 50 ஆயிரம் என்று கூடியுள்ளது. தங்கத்தைப் பெற்று பயன்படுத்திக் கொண்டவர் இப்போது என்ன செய்ய வேண்டும்?

இதற்கு பதிலளியுங்கள். இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.
Quote | Report to administrator
M Muhammad
0 #26 M Muhammad 2013-11-05 03:33
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் ஜி என்.

வைத்த வாதங்களை விளங்கிக் கொண்டால் மறு கேள்வி எழாது அல்லது அதை கண்டு கொள்ளாமல் விடுபவர்களுக்கு ம் மறு கேள்வி எழாது.

நீண்ட விளக்கங்கள் என்பது இங்கு குறிப்பிடப் படவில்லை எவ்வளவு நீண்ட அல்லது சுருக்கமான வாதம் வேண்டுமானாலும் வைக்கலாம், ஆனால் அது பேசு பொருளுக்கும் கருவுக்கும் விளக்கமாக இருக்க வேண்டும் சுய கருத்துக்களாக திசைமாறிய வாதங்களாக இருத்தலாகாது.

எங்களால் வைக்கப் பட்ட ஹதீஸ்களுக்கு , வாதங்களுக்கு ஒரு கருத்துமில்லை, கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை ஆனால் மீண்டும் ஒரு சம்பந்தமில்லாத ஆதாரமற்ற கேள்வி கேட்டு இதற்கு என்ன பதில் என்று கேட்டுள்ளீர்கள்.

வரிக்கு வரி பதிலளித்தால் என்ன சொல்வீர்களோ என்று கூறி கருவுக்கு அப்பாற்பட்ட மேற்கோள் காட்டியுள்ளீர்க ள்,

உம்... முன்னும் பின்னும், மொட்டை தலைக்கும்... போன்றவை. ஆனால் சுட்டிக் காட்டிய ஹதீஸை பற்றி ஒன்றும் காணோம். வரிக்கு வரி விமர்ச்சிக்க வரிக்கு வரி திறந்த மனதோடு நடு நிலையாக படிக்க வேண்டும், செவி தாழ்த்தி கேட்க வேண்டும் சிந்திக்க வேண்டும் உணர வேண்டும் அதை விட்டு திசை திருப்பும் கேள்வி கேட்பது எந்த பலனையும் தராது என்பதை வாசகர்கள் அறிவார்கள்...

உங்கள் வாதம் சிறந்ததா எங்கள் வாதம் சிறந்ததாத என்பதை காட்ட இது பட்டி மன்றம் அல்ல. மறுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அல்லாஹ்வோடு போர் பிரகடனம் செய்யும் நிரந்தர நரகிற்கு கொண்டு சேர்க்கும் வட்டி சம்பந்தமான தவறான வாதங்களை தெளிவு படுத்தும் முயற்சியே இது. உங்களுக்கும் பலன் விளைய துவாக்கள்.

கடன் கொடுத்தவர் வாகனத்தில் லிஃப்ட் வாங்குவது வட்டி, வெவ்வேரு ரக பேரித்தம் பழங்கள் மாற்றி திரும்ப பெருவதும் வட்டி என்றும், பிற்காலத்தில் பல பெயரில் மக்கள் வட்டியில் ஈடுபடுவார்கள் என்றும் நபி ஸல் அவர்கள் எச்சரித்தது போதாதா, அல்லது அதையும் தேவைகள் நிரைவேற்றிட மறுக்க வேன்டும் என்று கூறுவீர்களா.?

மேலும் ஜகாத் வசூலிக்க சென்றவர் இது ஜகாத் இது எனக்கு கிடைத்த அன்பளிப்பு என்று நபி(ஸல்) வர்களிடம் கூறிய போது நீஙள் உங்கள் தந்தையர் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அன்பளிப்பு வருகிறதா என்று பாருங்கள் என்று அதை கண்டித்தார்கள் நபி(ஸல்) அவர்ர்கள்.

இப்படி எத்தனயோ சம்பவங்கள் தெளிவாக எச்சரிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலையின்றி நீங்கள் புதுமையான நூதனமான கேள்விகளை கேட்பதை என்ன சொல்வது.

எனது வார்த்தைகள் கடுமையாக இருப்பின் அது எனக்காக அல்ல மார்க்க விஷயம் உதாசீனப்படுகிறத ே என்பதற்காக தான் என்பதை கூறிக் கொள்கிறேன்.

உங்கள் கேள்வி அதில் கூறப்பட்ட விஷயம் 15 பவுன் மூன்று இலட்சம் என்று பெற்று விற்று விட்டு பயன் படுத்தி திருப்பி தரும் போது அதிக விலையில் அதை பெற்று தரும் நிலை சரியா தவறா? அதற்கு ஆதாரம் அனுமதியுண்டா? என்றும்

அதே நிலை அதற்கு எதிராக குறந்த விலையில் பெற்றால் என்று இருந்தால் என்னவாகும் என்பதையும் உங்களையே கேட்டு பதில் பெற முயலுங்கள் தேவையானல் இல்லையேல் நாம் பதிலளிக்கிறோம்.

தங்கம் என்றோ பாறாங்கல் என்றோ பணம் என்றோ காலகெடுவோடு திருப்பி பெறுவது என்று ஆகும் போது அதை பற்றி கூடினால் குறைந்தால் என்று அலட்டிக் கொள்ள வேண்டம். இங்கு தெளிவாக ஒருவர் பயன் படுத்த வாடகைதொகையை தராமல் பயன் படுத்துவது கொடுத்த பணத்திற்கு பிரதி பலனாக வட்டி என்பதே விளக்கப் படுகிறது. நீங்கள் கொடுத்த பணத்தி அல்லது பொருளை அவர் உபயோகிப்பது கட்டயப் படுத்தப் பட வேண்டிய ஒன்றல்ல அதை கொண்டு அவர் இலாபமோ நஷ்டமோ பெற்றாலும் பெற வில்லையானாலும் அவர் அதை முழுமையாக திருப்பி தர வேண்டிய நிலையில் உள்ளர்.

ஆனால் நீங்கள் உங்கள் பணத்தின் காரணமாக வாடகை தொகை எனும் குறிப்பிட்ட இலாபமின்றி பயன் படுத்த முடிவு செய்து வாங்குகிறீர்கள் , அதாவது பயண சீட்டின்றி வாகனத்தில் பயணம் செய்ய துணிந்துள்ளீர்க ள், அல்லது இலவசமாக ஓட்டலில் சாப்பிட முடிவு செய்துள்ளீர்கள் .... இது தெளிவான வட்டியே அல்லாஹ் மிக அறிந்தவன்
Quote | Report to administrator
abu hamza
0 #27 abu hamza 2015-08-16 14:31
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவர் தன் பணத் தேவைக்காக தன் வீட்டை(பிளாட்) அடமானம் வைக்கிறார். அடமானம் வாங்கியவர் அந்த வீட்டை உபயோகப் படுத்தாமல் பூட்டி வைக்க அனுமதி உள்ளதா? அப்படியானால் அந்த வீட்டின் (பிளாட்) பராமரிப்பு செலவு (maintenance charge ) யாரை சாரும்?
Quote | Report to administrator
Abu Muhai
0 #28 Abu Muhai 2015-08-18 22:59
Quoting abu hamza:
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவர் தன் பணத் தேவைக்காக தன் வீட்டை(பிளாட்) அடமானம் வைக்கிறார். அடமானம் வாங்கியவர் அந்த வீட்டை உபயோகப் படுத்தாமல் பூட்டி வைக்க அனுமதி உள்ளதா? அப்படியானால் அந்த வீட்டின் (பிளாட்) பராமரிப்பு செலவு (maintenance charge ) யாரை சாரும்?


வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

வீட்டை அடைமானம் வைத்தல் என்றால், ஆவணம் (DOCUMENT) மட்டும் கைமாறும். வீடு உரிமையாளரின் கைவசம் இருக்கும். சொந்த வீட்டில் குடியிருந்து அல்லது வாடகைக்கு விட்டு அவரே பராமரித்துக் கொள்ளவேண்டும். வீட்டின் உரிமைக்கான அரசாங்க முத்திரை பத்திரம் கடனுக்குப் பிணையாக - ஈடாக அடைமானம் வைக்கப்பட்டிருப ்பதால் வீட்டை விற்க இயலாது.

கடன் தொகைக்கு ஈட்டுப் பொருளாக தங்கம் போன்ற சிறு பொருட்கள் அடைமானம் வைக்கப்பட்டால் அவை கைமாறும். அதுவே கடன் தொகைக்கு ஈடாக இரு சக்கரம் நான்கு சக்கரம் வாகனங்கள், வீடு, நிலம் என அசையா சொத்துகள் அடைமானம் வைக்கப்பட்டால் அவற்றின் ஆவணங்கள் மட்டும் கைமாறும். சொத்துக்கள் உரிமையாளரின் பராமரிப்பில் இருக்கும் அவற்றை அவர் அனுபவித்துக் கொள்ளலாம்.

கடனுக்கு ஈடாக உயிருள்ளவற்றை அடைமானம் பெற்றால் அவற்றுக்கு உணவளித்து பராமரிக்கும் செலவு இருப்பதால் அதற்குப் பகரமாக அடைமானம் பெற்றவர் அவற்றிலிருந்து பயனை அடைந்து கொள்ளலாம்.
Quote | Report to administrator
mohammed sam
0 #29 mohammed sam 2016-10-05 12:37
[quote name="
கடனும் அடைமானமும் வெவ்வேறானவை எனில், கடன் பெறும்போது அடைமானமாக ஏதாவது கொடுப்பது கூடாதல்லவா?

அடைமானமாக எதுவுமே பெறாமல் ஒருவரை நம்பி பெரிய தொகையினைக் கடன் வழங்க யார் முன்வருவர்?

வ சலாம் வராஹ்,
சிறிய தொகையோ பெரிய தொகையோ நம்பிக்கையிலும் , அல்லாஹ்வின் பொருத்தத்தின் அடிப்படையில் நன்மையை எதிர்பார்த்துமே கொடுக்கப்படுவது , கடன்,, என்று பொருள் கொள்ளப்படுவதனை தெளியவேண்டும் !

நம்பிக்கை இல்லை, அறிமுகமில்லாதவர ் மற்றும் இலாபத்தினை எதிர்பார்கின்றவ ர்கள் எனின், அடைமானத்தை வைத்து ஒப்பந்த அடிப்படையில் இணங்கிக் கொள்வதினை அடைமானம் வைத்தல் என பொருள் கொள்ளலாம் ?

//இதுவே ரூபாய் அன்றி டாலர் அல்லது யூரோ எனில்? அவற்றின் மதிப்பு உயருகிறதே? அப்படி எனில், யூரோ அல்லது டாலராக பணத்தைப் பெற்றவர், பணம் பெற்ற அன்றைய மதிப்பில்தான் திரும்ப செலுத்தும்போது கொடுப்பாரா? அல்லது பெற்ற பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பாரா?//
இது அத்தனையயும் பாராது நன்மை என்ற ஒன்றை மட்டும் இருத்திக் கொள்வதே கடன் என மார்க்கம் கூறி இருக்கிறது. //அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும் வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டு விடுவீர்களானால் - (அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் 002:280)

கடன் வாங்கியவர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு வசதி வரும்வரை அவகாசம் கொடுங்கள் என்பது அல்லாஹ்வின் அறிவுரையாகும். அவகாசம் என்பதில் கால அளவு குறிப்பிட்டுச் சொல்லாததால் இங்கு காலஅளவுக்கு எல்லையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!

விலைவாசி ஏற்றம், பண மதிப்பின் வீழ்ச்சி, என்பதெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை நன்கு அறிந்த இறைவன், கடன் கொடுத்தோருக்க ு அவகாசம் கொடுங்கள் என்றும் கூறுகின்றான். பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பிச் செலுத்தினால் கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகிற ார் என்று கூறுவது சரியல்ல.
மேலும், கடன் வாங்குபவரிடம், கொடுப்பவர் - இத்தனைத் தவணைகளில் - இத்தனை மாதங்களில் கடன் திருப்பி அடைக்கப்படும் என்ற உறுதிமொழிகள் முன்னமே ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் கடன் தொகை கை மாறும் போது, கொடுத்தவரின் பாதிப்பு பற்றி பேசுவதும் முறையல்ல...

கடன் வாங்கியவர் பத்து ஆண்டுகள் கழித்து வட்டியில்லாமல் கடனைத் திரும்பச் செலுத்தும்போது , கடன் கொடுத்தவரை ஏமாற்றுகிறார் அல்லது கடன் கொடுத்தவரிடமிர ுந்து திருடிக் கொள்கிறார் என்கிற கருத்தைஅல்லாஹ்வ ோ இறைத் தூதரோ சொல்லாமல் நாமாக முடிவு செய்ய இயலாது.// (சத்திய மார்க்கம் )

//வீட்டை ஒத்திகைக்கு விட்டு பணம் பெற்றவர் அதனைக் கொண்டு பெறும் லாபம்(தொழிலில் முதலீடு அல்லது வீட்டை முழுமைபடுத்தல்) , வீடு ஒத்திகைக்கு எடுத்தவர் அதனைப் பயன்படுத்துவதால ் சமன் ஆகிறது என்று கூறியுள்ளீர்கள் . வீட்டை ஒத்திகைக்கு விட்டவர், தம் தொழில் விருத்திக்காகவோ அல்லது வீட்டை முழுமைபடுத்துவத ற்காகவோ மட்டும்தான் பணம் பெற வாய்ப்புள்ளதா? தமது வேறொரு கடனுக்காகவோ அல்லது மருத்துவ செலவுக்காகவோ இப்படி ஏதாவது தம் அத்தியாவசிய செலவுக்காக தம் வீட்டை அடைமானமாக கொடுத்து பணம் பெற வாய்ப்புள்ளதுதா னே? இதில் பணம் பெற்றவருக்கு என்ன லாபம்?//

சகோதரரே, சொத்து உள்ளவரை நாம் ஏழை என்ற வட்டத்துக்குள் சேர்பதில்லை, காரணம் அவரிடம் பணம் ரொக்கமாக இல்லை என்றாலும் சொத்தாக உள்ளது அவருடைய செல்வம். ஆக அவர் அவருடைய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கே ஒத்திகைக்கு பணம் பெற்றுக்கொள்கிற ார் இதனுடைய அர்த்தம் அவர் இலாபமடைகிறார்.. .ஏனெனில், அவருடைய தேவைக்காக அவர் அவருடைய சொத்தை விற்று பணம் எடுக்காமல், சொத்தை அப்படியேவைத்துக ்கொண்டு பணத்தினை பெற்றுக்கொள்கிற ார் எனின் சொத்தை இழக்காதது இலாபம் தானே அவருக்கு ?
தவறு இருந்தால் மன்னிக்கவும், தலைப்புக்கேற்றவ ாரு தொடருங்கள். (உங்கள் ஆக்கங்களிலிருந் து கற்றுக்கொண்டிரு க்கிறேன்)
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்