முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா? (சகோதரர் இம்ரான்)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பெருந்துடக்கு நோன்புக்கு இடையூறு அல்ல. நோன்பாளிக்கு உறக்கத்தில் ஸ்கலிதமானால் அவர் நோன்பைத் தொடரலாம். தொழுகைக்குக் குளிப்புக் கடமையாகும்.

"நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்!" (அறிவிப்பாளர் - ஆயிஷா (ரலி) உம்மு ஸலமா (ரலி) நூல்கள் - புகாரி 1930, முஸ்லிம் 2033, 2035, திர்மிதீ 710)

ஒரு மனிதர் (ஒரு விஷயத்தில்) தீர்ப்புக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நான் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் (ஃபஜ்ர்) தொழுகையின் நேரம் என்னை வந்தடைந்தால், அப்போதும் நான் நோன்பு நோற்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் (ஃபஜ்ர்) தொழுகை நேரம் என்னை வந்தடைகிறது. அப்போதும் நான் நோன்பைத் தொடரவே செய்கிறேன்'' என்று விடையளித்தார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களைப் போன்றவர்கள் அல்லர். அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டானே?'' என்று சொன்னார். அதற்கு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கைளவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும், எவற்றிலிருந்து நான் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களைவிட அதிகமாக அறிந்தவனாகவும் இருக்கவே நான் விருப்பப்படுகிறேன்'' என்றார்கள். (அறிவிப்பவர் - ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம் 2034)

நோன்பாளி வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல் நோன்பை முறித்து விடும். நோன்பாளி தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பரிகாரத்திற்குரிய குற்றமாகும். இச்சை நீர் வெளிப்படுவது நோன்பை முறித்துவிடாது. அதற்காக உளூச் செய்தாலே போதுமானது.

இச்சைக் கசிவு (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப்பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிக்) கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ''அதற்காக உளூ (அங்கத் தூய்மை)செய்வதுதான் கடமை, (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (அறிவிப்பவர் - அலீ (ரலி) நூல்கள் - புகாரி 132, 178, 269 முஸ்லிம் 508, 509 நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக்)

'''(அவ்வாறு இச்சைக் கசிவு வெளிப்பட்டால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை) இன உறுப்பைக் கழுவிக் கொள்வீராக'' என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று மேலதிகமாக புகாரி 269வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

பாலுணர்வு ஏற்படும்போது இன உறுப்பிலிருந்து வெளிவரும் பசை போன்ற இளகிய வெண்மை நிற நீர் போன்ற இச்சைக் கசிவில், விந்து வெளியாகும்போது ஏற்படும் துள்ளல் இருக்காது. இது வெளியேறினால் குளிப்புக் கடமை இல்லை, ஆனால் உளூ முறிந்துவிடும். இன உறுப்பைக் கழுவிக் கொண்டு, உளூச் செய்தால் போதும், நோன்பு முறியாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

idris
+1 #1 idris 2013-08-07 15:11
Dear Brother,

Question is "may i do sexual talk with my wife at fasting time ?".
I could not find your reply for this..
Please kindly clarify!.

Jazakallah khairan!.
Quote | Report to administrator
asee
0 #2 asee 2013-08-07 16:50
cone podalama..ithar kku thelivaha pathil tharungal..
Quote | Report to administrator
சாணக்கியன்
+1 #3 சாணக்கியன் 2013-08-07 16:56
மன இச்சையை அடக்குவதுதான் நோன்பின் அடிப்படை. காம இச்சை மட்டுமல்ல, பண இச்சை, பதவி இச்சை, பொறாமை, கோபம், புறம் பேசுதல் போன்றவையும் இதில் அடங்கும்.
Quote | Report to administrator
Mohamed Yousef
0 #4 Mohamed Yousef 2013-08-07 17:46
இந்த ஆக்கம் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு விடையாக இருக்கிறது. நன்றி.

சகோ. இத்ரீஸ், நீங்கள் தமிழை வாசித்து விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

கேள்வி கேட்டவர் நோன்பு சமயத்தில் மனைவியிடம் அவ்வாறு பேசலாமா என்று எங்கே கேட்கிறார்? இச்சையினால் சுரக்கும் திரவத்தினால் நோன்பு முறியுமா? குளிக்க வேண்டி வருமா என்று தான் கேட்கிறார்.

இதற்கு சிறப்பாக பதிலும் சொல்லியிருக்கின ்றனர். நன்றி சத்தியமார்க்கம் . இது போன்ற சந்தேகங்களை குர் ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்குவது மிகவும் சிறப்பான பணி.
Quote | Report to administrator
idris
0 #5 idris 2013-08-15 09:28
Dear Yousuf,

My brother's question " ஐயம்: நோன்பு வைத்திருக்கும்ப ொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா? ".

Clarification should be as below,
1. Whether we can talk sexually with our wife at the time of fasting since he mentioned " நோன்பு வைத்திருக்கும்ப ொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால்" (most of us know after fasting time we can have sex relation with wife & no issue about sperm ejacuation by dream even though at the time of fasting it happens) ?.
2. If we can talk, what is the Shariah(law) for ejacuating the "Madhi" which is ejacuating at that time? (actually this is not sperm just desire fluid that is called as "madhi")

Intention for replying is I also want to know the shariath for this matter ?.

Thanks for understanding!.
Idris.
Quote | Report to administrator
Abu Muhai
0 #6 Abu Muhai 2013-08-15 12:03
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

satyamargam.com/.../...

சகோதரர் இத்ரீஸ்,

மேற்கண்ட சுட்டியைத் திறந்து ஒருமுறை வாசித்துக்கொள்ளுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தமது மனைவியரைக் கட்டியணைப்பார்க ள், முத்தமிடுவார்கள ் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இது நோன்பாளி தம் மனைவியிடம் பாலியல் பேச்சுப் பேசுவதையும் தாண்டி பாலியல் உறவுக்கு உணர்வைத் தூண்டிவிடும் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

நோன்பாளி தம் மவைியை கட்டியணைக்கலாமா ? முத்தமிடலாமா? என்று கேட்டால், சுட்டியிலுள்ள இரண்டாவது அறிவிப்பு: நோன்பாளி அவ்வாறு தம் மனைவியைக் கட்டியணைக்கவும் , முத்தமிடவும் முதியவருக்கு அனுமதி வழங்கியும், இளைஞருக்கு மறுக்கப்பட்டும் தீர்ப்புவழங்கியுள்ளது!

நோன்பாளி இளைஞருக்கு மறுக்கப்படும் காரணம் கணவன் மனைவி இருவருமே வாலிபத்தில் இருப்பதால் எளிதில் உணர்வுக்கு வசமாகி உடலுறவு வரை சென்று விடக்கூடும் என்பதால் இளைஞருக்கு அணை போடப்படுகிறது. ஆனால், வெவ்வேறு சூழ்நிலைகளில் குறைந்த - நீண்ட நாட்கள் பிரிவின் காரணமாக நோன்பாளி தன் மனைவியை நோக்கும் முதல் பார்வையிலேயே இச்சை ஏற்படும். அவ்வாறு இச்சை ஏற்படக்கூடாது என்று ஷரீயத் எங்கும் சொல்லவில்லை.

நோன்பாளி தம் மனைவியிடம் இச்சை உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை, செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதனால் மனைவியுடன் பேசக்கூடாது என்று தடைவிதிக்க முடியாது. நோன்பாளி மனைவியிடம் பேசும்பொழுது இச்சை உணர்வு ஏற்படுவது திட்டமிட்ட செயல் என்று கொள்ளாமல் எதிர்பாராத உணர்வின் தூண்டுதல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பதிவிலுள்ள கேள்வியின் அம்சம்: இச்சைக் கசிவு ஏற்பட்டால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா?

இச்சைக் கசிவு ஏற்பட்டால் குளிப்புக் கடமை இல்லை. ஆனால் உளூ முறிந்துவிடும். பின்னர் உளூச் செய்து கொண்டு தொழலாம் இதனால் நோன்பு முறியாது. என்றும், (விந்து) ஸ்கலிதம் ஆனாலும் நோன்பாளி நோன்பைத் தொடரலாம். குளிப்புக் கடமை நோன்புக்கு இடையூறு அல்ல. தொழுகைக்காக குளிப்புக் கடமையாகும் என்று சத்தியமார்க்கம் தளத்தினர் ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இவற்றில் மேலும் சந்தேகம் இருந்தால் சத்தியமார்க்கம் கேள்வி பதில் பகுதிக்கு எழுதிக் கேட்கலாமே.
Quote | Report to administrator
idris
0 #7 idris 2013-08-18 05:14
Brother Abu Muhai,
Walaikkum salaam(rah),

Thanks for your detailed answer.
Allah's grace now i get clarification in this matter.

Jazakallah Khair,
Idris.
Quote | Report to administrator
yasmin
0 #8 yasmin 2013-08-30 17:19
very use full
Quote | Report to administrator
hajima
-1 #9 hajima 2015-02-28 20:53
பென்கலுக்கு எப்போது குலிப்பு கடமையாகிரது?
ச்கலிதம் என்ட்ரால் என்ன மதன நேர் என்ட்ரால் என்ன?
இதில் எது ஏர்பட்டால் குலிப்பு கடமையாகிரது?
Quote | Report to administrator
hajima
0 #10 hajima 2015-02-28 20:57
தொழுகயில் ஒர்மையுடன் இருக்க என்ன செய வேன்டும்.
பொருமையுடனும், பெருமை இல்லாமலும் இருக்க என்ன செய்ய வேன்டும்
Quote | Report to administrator
sharbudeen
0 #11 sharbudeen 2017-12-18 13:16
இச்சை கசிவு எனக்கு ஏற்பட்டு, நான் அணிந்து இருக்கும் உள்ளாடையில் இச்சை கசிவு படர்ந்து இருந்தாலும் உளூச் செய்தால் போதுமானதா? அதனுடன் உளூச் செய்து தொழலாமா?
Quote | Report to administrator
உமர் பாரூக்.மு
-1 #12 உமர் பாரூக்.மு 2018-01-15 18:58
இச்சை கசிவு எனக்கு ஏற்பட்டு, நான் அணிந்து இருக்கும் உள்ளாடையில் இச்சை கசிவு படர்ந்து இருந்தாலும் உளூச் செய்தால் போதுமானதா? அதனுடன் உளூச் செய்து தொழலாமா?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்