முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும் ஸகாத் கொடுத்தால் போதும் என்று அறிந்தேன். ஹனஃபி மத்ஹபுக்கு சட்டம் என்ன? ஹனஃபிக்கும் அதே சட்டம் என்றால், பெண்களின் தேவைக்கு உள்ள அளவு என்ன? விளக்கம் தாருங்கள்! (- ஸாதிக்)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

சகோதரர் ஸாதிக்,

இஸ்லாமிய மார்க்கத்தில் மத்ஹபின் பெயரால் எந்தப் பிரிவும் இல்லை! ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி என எந்த மத்ஹபும் இஸ்லாத்தில் இல்லை! முற்கால இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட மத்ஹபுகளுக்கும் அந்த இமாம்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பின்னாளில் தோன்றிய அறிஞர்கள் சிலர், இமாம்களின் பெயர்களைப் பயன்படுத்தி மார்க்க விளக்கம் கொடுத்ததால் இது இன்னின்ன இமாமின் சட்டம் என இமாம்களின் பெயரால் நிலைத்து, இன்றளவும் தொடர்கிறது.

நான்கு இமாம்களும் குர்ஆன், சுன்னாவைத் தான் பின்பற்றினார்கள். குர்ஆன், சுன்னா ஒளியில் சட்டங்கள் இயற்றி, மார்க்க தீர்ப்புகள் அளித்தனர். எனவே, ஹனஃபி, ஷாஃபி... போன்ற மத்ஹபுகள் இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஜகாத் எனும் கடமையான தர்மம், அதைக் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் அந்தக் கடமையானக் கொடையை கட்டாயம் வழங்கியாக வேண்டும். இது இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்ற முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கடமையாகும்.

தங்கத்தின் நிஸாப் نِصاب - வரம்பு 20 மிஃத்கால் ஆகும். தங்கம் இந்த அளவுக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும். ஒரு மிஃத்கால் என்பது 4.374 கிராம்கள் எடை கொண்டது. 20 மிஃத்கால் (20X4.374=87.48 கிராம்கள்) சுமார் 11 சவரனுக்குச் சமம். இதில் இரண்டரை சதவீதம் சுமார் 2.187 கிராம் - கால் சவரன் தங்கத்தை ஜகாத் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையை மதிப்பிட்டு கால் சவரன் எடையின் தங்கத்திற்கான ரூபாயை ஜக்காத்தாகக் கொடுக்கலாம்.

வெள்ளியின் நிஸாப் - வரம்பு 5 ஊக்கியாவாகும். ஓர் ஊக்கியா என்பது 122.472 கிராம்கள் எடை கொண்டதாகும். 5 ஊக்கியா ( 5x122.472 ) = 612.36 ~ சுமார் 615 கிராம்கள் ஆகும். இதில் 2.5 சதவீதம் - 15 கிராம் வெள்ளியை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையை மதிப்பிட்டு 15 கிராம் எடையின் வெள்ளிக்கான ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்கலாம்.

(விற்பனைக்காக இல்லாத) குதிரைகளுக்காகவும், அடிமைகளுக்காகவும் ஜகாத் இல்லை என நான் தள்ளுபடி செய்துவிட்டேன். எனவே, நாற்பது திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹம் என்ற அளவில் வெள்ளிக்கான ஜகாத்தைக் கொடுத்துவிடுங்கள். நூற்றுத் தொண்ணூறு திர்ஹங்களில் (ஜகாத்) எதுவும் (கடமை) இல்லை. அவை இருநூறை அடைந்துவிட்டால் அவற்றில் ஐந்து திர்ஹங்கள் (ஜகாத்) உண்டு. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் - அலீ (ரலி) நூல் - திர்மிதீ 563)

ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்குக்குக் குறைந்த (தானியத்)தில் ஜகாத் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் - அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் - புகாரி 1405, முஸ்லிம் 1780, திர்மிதீ 568, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, முவத்த மாலிக், தாரிமீ)    

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மிஃத்கால் தங்கத்துக்கும் அரை மிஃத்கால் தங்கத்தை (40ல் ஒரு பாகத்தை) ஜகாத்தாக எடுப்பார்கள். (இப்னு மாஜா)

இரண்டரை சதவீதம்

கையிருப்பில் உள்ள தங்கமானது ஜகாத்துக்கான உச்சவரம்பை அடைந்து, தங்கம் தவிர்த்து மேலதிகமாகப் பணமிருந்தால் தங்கத்தின் விலை மதிப்புடன் பணத்தையும் சேர்த்து அந்தத் தொகைக்கான ஜகாத் மதீப்பிடு செய்யவேண்டும்.

அதாவது, ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 11 பவுனுக்கு 2,20,000 ரூபாய்கள் மதிப்பீடாகும். இத்துடன் 30,000 ஆயிரம் ரூபாய்கள் கையிருப்பு ரொக்கப் பணமாக இருந்தால், எஞ்சியுள்ள அந்தப் பணத்தையும் தங்கத்தின் விலையுடன் சேர்த்தால், மொத்தம் 2,50,000 ரூபாய்களாகும். இதில் நாற்பதில் ஒன்று என்கிற கணக்கின்படி இந்த இரண்டரை லட்சத்துக்கும் நூற்றுக்கு இரண்டரை சதவீதமான 6250 ரூபாய்கள் ஜக்காத்தாகக் கொடுக்க வேண்டும்.

பெண்களின் "தேவைக்கு மேல்" உள்ள அளவு என்ன? என்று கேள்வியில் கேட்டிருப்பது போல் பெண்கள் தேவைக்கென எந்த அளவும் இல்லை. நூறு பவுன் நகைகளை அள்ளி அணிந்தாலும் அவை பெண்களின் தேவையாகத்தான் இருக்கும். ஆகவே, பெண்களின் தேவைக்குப் போக எஞ்சியுள்ள தங்கத்துக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என எவ்வித ஆதாரமும் இல்லை. ஜகாத் கொடுக்கும் அளவுக்கு தங்கம் இல்லை என்றால் தங்கத்திற்கான உச்சவரம்பை அவை அடையவில்லை. அதனால் நிஸாபுக்குக் குறைவாக இருக்கும் தங்கத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.

தங்கம் நிஸாபை அடைந்து, அதற்கு மேலும் தங்கம் கையிருப்பில் இருந்தால் மொத்த தங்கத்தையும் கணக்கிட்டு ஸகாத் வழங்கவேண்டும். அதாவது, ஒருவரிடம் நூறு கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் தங்கத்துக்கான உச்சவரம்பு சுமார் 88 கிராம்கள்; அல்லது 11 பவுன்கள் ஆகும். இங்கு நூறு கிராம் தங்கத்தையும் கணக்கிட்டு அதில் இரண்டரை சதவீதமான இரண்டரை கிராம் தங்கத்தை அல்லது அதற்கான கிரயத்தை ஜகாத்தாக வழங்கிட வேண்டும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

Yassar
0 #1 Yassar 2013-08-01 09:37
Varumaanam illa tha iedathukku (Nilath thukku) yappadi ?
Quote | Report to administrator
Nijar Mohamed
+2 #2 Nijar Mohamed 2013-08-01 13:36
assalamu alikum,
Naan tharpothu en father house la stay panni iruken, tharpothu sambathithu, veettu manai one ru en payaril vangivullen value 7lacks, naan atharku jakat kodukanuma?? ithu ennakunnu sontha veedu katta vangiya manai.

Nijar Mohamed
Bahrain
Quote | Report to administrator
Nijar Mohamed
0 #3 Nijar Mohamed 2013-08-01 13:41
salam,

Now i am staying with my father house,recently I bought new housing land for the purpose of bulding new house for me, value is 7lakh, my question is "do i need to give jakath on it?? or is this land eligible for jakath???

NIjar
Quote | Report to administrator
Abu Muhai
0 #4 Abu Muhai 2013-08-06 14:44
சகோதரர்கள் யாஸர் மற்றும் நிஜார் முஹம்மத் இருவரின் கேள்விகளும் ஒரு கருத்துடையவையாக உள்ளன.

வீட்டு மனைகள், நிலங்கள், வாடகைக்கு விடப்படும் வீடுகள் கடைகள் இவற்றிற்கு ஸகாத் இல்லை. இவற்றிலிருந்து வரும் வருமானத்திற்கு மட்டும் ஸகாத் கொடுக்கவேண்டும் என்று ஒரு சாராரும், இவற்றிற்கும், இவற்றிலிருந்து வரும் வருமானத்திற்கும ் ஸகாத் கொடுக்கவேண்டும் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இது குறித்து அறிஞர்களிடையே இருவித கருத்துகள் உள்ளன. நாமறிய இருவித கருத்துக்களுக்க ும் நேரடியான நபிவழி ஆதாரங்கள் இல்லை.

ஸகாத் என்றவுடன் தங்கத்தை மட்டும் நினைத்து, தங்கத்தைக் கணக்கிட்டு ஸகாத் கொடுத்தால் போதும் என எண்ணி, மற்ற செல்வங்களைத் தவிர்த்து விடுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது பின்வருமாறு உரையாற்றினார்கள்,

உங்கள் இறைவனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங் கள். உங்கள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுங்கள் . உங்கள் (ரமளான்) மாதத்தில் நோன்பு நோறுங்கள். உங்கள் செல்வங்களுக்கான ஸகாத்தை நிறைவேற்றி வாருங்கள். உங்களில் அதிகாரமுடையேருக ்குக் கட்டுப்படுங்கள் . (அப்படி நீங்கள் செய்வீர்களானால் ) உங்கள் இறைவனின் சொர்க்கத்தில் நுழைவீர்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் - அபூஉமாமா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 559 இதேக் கருத்தில் அமைந்த நபிமொழிகள் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்து புகாரி 63, முஸ்லிம் 10)

குடியிருக்கும் வீடு, உபயோகிக்கும் வாகனம், உணவு, உடைகள், தொழிற்கருவிகள் இவைபோன்ற அவசியத் தேவைக்கான பொருட்கள் தவிர, மற்றவை மேலதிகமான ''உங்கள் செல்வங்களில்'' அடங்கும். வீட்டுமனை, நிலம், வாடகை வீடுகள், வாடகைக் கடைகள் இவற்றில் முதலீடு செய்யாவிட்டால் அந்தப் பணம் ரொக்கமாகவே கையிலிருக்கும். அப்போது மேலதிகமாக கையிலிருக்கும் ரொக்கத்திற்கான ஸகாத் தொகையைக் கணக்கிட்டுக் கொடுக்கவேண்டும் . அதுபோல் கை வசமிருக்கும் ரொக்கப் பணத்தைக் கொண்டு அசையாச் சொத்துக்கள் வாங்கினால் அந்த செல்வங்களையும் முறையாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்கிட வேண்டும் என்பதே சரியெனப் படுகிறது.

மேற்கண்ட நபிமொழியில், ''உங்கள் செல்வங்களுக்கான ஸகாத்தை நிறைவேற்றி வாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் , ரொக்க ரூபாய்களாக இருந்தாலும் அசையா சொத்துக்களாக இருந்தாலும் இவை மேலதிக செல்வங்களாகவே கணக்கிட வேண்டும். என்றே விளங்கமுடிகிறது .

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
wassim
+1 #5 wassim 2016-06-08 12:30
Assalamu alaikum,

சகோ,
எனக்கு போன மாதம் தான் திருமணம் முடிந்தது. என் மனைவியிடம் 35 பவுன் நகை உள்ளது. நான் இந்த வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா இல்லை ஒருவருடம் முடிந்தவுடன் தான் கடமையா??
Quote | Report to administrator
Abu Muhai
0 #6 Abu Muhai 2016-06-10 18:57
Quoting wassim:
Assalamu alaikum,

சகோ,
எனக்கு போன மாதம் தான் திருமணம் முடிந்தது. என் மனைவியிடம் 35 பவுன் நகை உள்ளது. நான் இந்த வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா இல்லை ஒருவருடம் முடிந்தவுடன் தான் கடமையா??


வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

சகோதரர் wassim, பாரக்கல்லாஹ்.

கடந்த மாதம் திருமணம் முடிந்ததாகக் கூறியுள்ளீர்கள் , திருமணம் முடிந்த பிறகு மனைவியின் நகைகளுக்கு நீங்கள் ஜகாத் கணக்குப் போட்டாலும், திருமணத்திற்கு முன் நகைகள் எவ்வளவு காலம் தம்மிடம் இருந்தன என்கிற உண்மையான கால அளவை உங்கள் மனைவியே அறிந்தவராவார்.

உங்கள் மனைவியிடம் உள்ள 35 பவுண் நகையும் வரதட்சணைப் பெற்றதாக இருக்காது என்று நம்புவோம். வரதட்சணையாக உங்கள் மனைவி கொண்டு வந்தது என்று வைத்துக் கொண்டாலும், அல்லது அந்த நகைகளை நீங்களே உங்கள் மனைவிக்கு அளித்திருந்தாலு ம் அந்த நகைகள் உங்கள் மனைவிக்குச் சொந்தமானவையாகும ் என்பதைக் கவனத்தில் வைத்து, உங்கள் மனைவியே அந்நகைகளுக்கான ஜகாத்தைக் கணக்கிட்டு வழங்கிட வேண்டும்.

மனைவி கணவருக்குரியவர் அதனால் மனைவியின் செல்வங்களும் கணவருக்குரியவை என்பதாக வழி வழி நாட்டு நடப்பு வழக்கமாகியதே தவிர, திருமணத்திற்குப ் பின் மனைவியின் செல்வங்களுக்குக ் கணக்கிட்டு ஜகாத் வழங்கும் கடமையைக் கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இஸ்லாமிய சட்ட விதிகள் எதுவும் இல்லை.

கூடுதல் புரிதலுக்கு சுட்டியில் வாசிக்க:

satyamargam.com/.../...
Quote | Report to administrator
suhail
0 #7 suhail 2016-06-16 14:13
virpanaikkaha vangi potta nilam.
5 varudamaga vilai pokamal ulladu.
athilirundu oru varumanamum illai.
innilathuku jakath kadamaiyya?
Quote | Report to administrator
Abu Muhai
0 #8 Abu Muhai 2016-06-19 00:00
Quoting suhail:
virpanaikkaha vangi potta nilam.
5 varudamaga vilai pokamal ulladu.
athilirundu oru varumanamum illai.
innilathuku jakath kadamaiyya?


சகோதரர் suhail,

சகோதரர்கள் yassar, nijar mohammad இருவரும் ஏற்கெனவே இதே இழையில் கேட்ட கேள்வியைத்தான் நீங்களும் கேட்டுள்ளீர்கள்.

வருமானம் இல்லாத சொத்து என்பதால் விலை கொடுத்து வாங்கிய நிலம் விலை இல்லாமல் ஆகிவிடாது. பணம் ரொக்கமாக கையிருப்பிலிருந ்தால் அதனாலும் வருமானம் வராது, தங்கம் ஆபரணமாக கையிருப்பிலிருந ்தாலும் அதனாலும் வருமானம் இல்லை ஆயினும், நிஸாபைக் கடந்து அதிகமாகப் பணம், தங்கம் வைத்திருந்தால் அதற்கான ஜகாத் கடமையாகிவிடும் என்பது ஏதார்த்தம்தானே!

எல்லா சொத்துக்களுக்கு ம் இதே அளவுகோல்தான், தங்கமாக இருந்தாலும் அல்லது ரொக்கப் பணமாக இருந்தாலும், அசையா சொத்துகளாக இருந்தாலும் தேவைக்குப் போக நிஸாப் - வரம்பு கடந்த சொத்துகளுக்கு ஜகாத் கடமையாகும்.

கணிசமான தொகையை விலை கொடுத்தே நிலத்தை வாங்கியிருப்பீர ்கள், நிலம் வாங்கவில்லை என்றால் அந்தத் தொகை பணமாக உங்கள் கைவசமிருந்திருக ்கும். ரொக்கமாக கைவசமிருக்கும் பணத்திற்கு ஜகாத் கடமையாவதுபோல், முதலீடு செய்த நிலத்திற்கும் ஜகாத் கடமையாகும்.

மேலும், சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒன்றரை லட்சம் விலை கொடுத்து வாங்கிய நிலம் இன்று 25 லட்சங்கள் வரை பேரம் பேசப்படுகின்றது . இப்படி நிலங்களால் மறைமுகமான வருமானம் இருப்பதை மறுப்பதற்கில்லை !
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்