முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அகீகா கொடுக்கும் முறை பற்றி விளக்கம் தரவும்.

- சகோதரர் ஷாஜஹான். (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காகவும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது ''அகீகா'' என்பதாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்குப் பெயரிட வேண்டும். இதுதான் அகீகா கொடுப்பதின் முறை!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் சல்மான் இப்னு ஆமிர் (ரலி) (நூல்கள்: புகாரி 5472. நஸயீ, அபூதாவுத், இப்னுமாஜா)

குழந்தைகள் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள். ஏழாம் நாள் (பிராணி) அறுக்கப்பட வேண்டும். பெயரிடப்பட வேண்டும். தலை மழிக்கப்பட வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸமுரா (ரலி) (நூல் - திர்மிதீ 1559)

அகீகாவுக்கென அறுத்து பலியிடும் ஆட்டின் இறைச்சியை பங்கிடுவது குர்பானிச் சட்டம் போன்றதாகும். குர்பானி இறைச்சியின் சட்டம் அறிய,

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

இன்னும்
(குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 22:28, 36)

குர்பானி இறைச்சியை உண்ணலாம், தர்மமும் செய்யலாம்!

ஏழாம் நாள் பெயரிடப்பட வேண்டும் என்று நபிமொழியிலிருந்து அறிந்தாலும், பிறந்த அன்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டலாம். மர்யம் (அலை) பிறந்த அன்று அவரது தயார் அவருக்கு மர்யம் என்று பெயரிட்டதாக குர்ஆன் வசனம் கூறுகிறது.

அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்தபோது ''என் இறைவனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்'' என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும் ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)ருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் (என்றார்) (அல்குர்ஆன் 3:36)

ஆண் குழந்தை சார்பில் சமவயதுடைய இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பில் ஓர் ஆடும் (அறுக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: திர்மிதீ 1549, இப்னுமாஜா)

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சார்பாக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: அபூதாவூத்)

அறியாமை காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து குழந்தையின் தலை முடியை நீக்கி ஆட்டின் இரத்தத்தைத் தலையில் தடவுவோம். (அல்லாஹ் எங்களுக்கு) இஸ்லாத்தைத் தந்தபோது ஓர் ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலை முடியை நீக்கி, தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம். அறிவிப்பவர்: புரைதா (ரலி) (நூல்கள்: நஸயீ, அஹ்மத்)

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றும் அறிவிப்புகள் உள்ளது போல், ஆண் குழந்தைக்கு ஓர் ஆட்டை அகீகா கொடுத்ததாவும் அறிவிப்புகள் உள்ளன. இரு விதமாகவும் செய்து கொள்ளலாம்.

ஏழாம் நாள் அகீகா கொடுப்பது சம்பந்தமாக வரும் அறிவிப்புகள் தவிர, 14, 21ம் நாள் அகீகா கொடுக்கலாம் என வரும் அறிவிப்புகளும், குழந்தையின் தலை முடி இறக்கி, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்யவேண்டும் என்று வரும் அறிவிப்புகளும் பலவீனமானவை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   
Mohamed Aashiq
0 #1 Mohamed Aashiq 2011-09-27 23:31
அகீகா (குழந்தை பிறந்து ஏழாம் அன்று கொடுக்க வேண்டியது)
அன்பார்ந்த சகோதரர்களே, அகீகா சம்பந்தமான விதிமுறைகள் அதன் சட்டத்திட்டங்கள ் சம்பந்தமான விளக்கம் எனக்கு அவசியப் படுகின்றன. நான் வெளிநாட்டில் வசித்து வருவதோடு, எனது குடல்வாய் ஜனங்கள் (சொந்த பந்தங்கள்) இலங்கையில் வசித்தும் வருகின்றனர். நான் வாழும் இந்த பகுதியில் (இங்கிலாந்தில்) உள்ள நம் கொள்கை சகோதரர்கள் அல்லாஹ்வின் கிருபையால் அனைவரும் இந்த சுன்னாஹ்வுக்கு மிக அழுத்தம் கொடுத்து செய்தும் வருகின்றனர். இங்கு மூன்று விதமாக இவற்றை செய்தும் வருகின்றனர்.

1)இங்கே வாழும் இடத்திலேயே (யூகே) அகீகா பிராணியை அறுத்து மாமிசத்தை பங்கிடுகின்றனர் . அனால் சொந்தக் காரர்கள் இங்கு வாழவில்லை என்பதால் நண்பர்களுக்கு பங்கீடு செய்கின்றனர்.
2)பணத்தை பிறந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து அங்கு பிராணியை அறுத்து பங்கிடுமாறு சொல்கின்றனர். இதில் யார் கொடுக்கின்றாரோ அவருக்கு பங்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
3)இங்கேயே அறுத்து அதை சமைத்து அகீகா விருந்து என்று அனைவரையும் அழைத்து விருந்தோம்பல் கொடுக்கின்றனர்.
இதில் அனேகமானோர் தெரிவு செய்வது மூன்றாவது நடைமுறையையே, காரணம், இதனால் தனக்கும் புசிக்கும் வாய்ப்பு கிட்டுகின்றது, அனைவருக்கும் கொடுத்ததாகவும் இருக்கும். அறுத்து மாமிசமாக பங்கிடுவதால் ஏற்றத்தாழ்வு ஏற்ப்படுகின்றது . நூற்றுக்கும் மேற்பட்டு வாழும் சகோதரர்களில் குறிப்பிட்ட சிலருக்கே கொடுக்க முடியும் என்பதால். விருந்தாக கொடுத்தால் அவ்வாறான தர்ம சங்கடங்கள் நிகழ்வதில்லை.
ஆனால், சிலர் இது (அகீகா) ஒரு விருந்தாக கொடுப்பது தவறு என்றும் சொல்லி வருகின்றனர். காரணம், பல சுன்னத்தான விருன்தோம்பல்கள ் இஸ்லாத்தில் உண்டு, ஆனால் அகீகா என்றொரு விருந்தோம்பல் இல்லை, அது மாத்திரமன்றி இதை ஹஜ்ஜின் குருபாணி எவ்வாறு அறுத்து மாமிசமாக பங்கீடு செய்வதோ அவ்வாறே செய்யப்
படல் வேண்டும் என்கின்றனர். ஹஜ்ஜின் குருபாணியை எவ்வாறு சமைத்து விருந்தாக கொடுக்க முடியாதோ, அவ்வாறே அகீகாவையும் விருந்தாக கொடுக்கப் படுதல் தவிர்க்க வேண்டியதே என்கின்றனர்.

சகோதரர்களின் கருத்துக்களை ஆக்கப் பூர்வமாகவும் இங்குள்ள நிலைமைகளையும் கருத்தில் கொண்டு குர்ஆன் சுன்னாஹ்வின் ஒளியில் இவற்றுக்கு தக்க விளக்கங்களை அல்லது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் கொண்ட லிங்க் களையோ தந்துதவுமாறு கேட்கின்றேன்.
Quote | Report to administrator
muslim:
0 #2 muslim: 2011-11-09 13:10
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

அகீகா கொடுப்பது உயிர்ப்பிக்க வேண்டிய ஒரு நபிவழி! விரும்பியவர் குழந்தை பிறந்து ஏழாம் நாளில் தமது குழந்தைக்காக ஆடு அறுத்து பலியிடலாம். அகீகா கொடுப்பதை இஸ்லாம் கட்டாயமாக்கிவிடவில்லை.

''தமது குழந்தைக்காக (அகீகா கொடுத்திட) அறுத்து பலியிட விரும்பினால் ஆண் குழந்தைக்கு இரண்டும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கட்டும்' ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - நஸயீ, அஹ்மத் நூலில் இடம்பெற்ற ஹதீஸின் ஒரு பகுதி)

அகீகா கொடுக்க விருப்பமுடையோர ் குறிப்பிட்ட நாளில் அறுத்து பலியிட வேண்டும். இதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர் அகீகா கொடுப்பதைத் தவிர்த்துக்கொள ்ளலாம் அதனால் குற்றம் இல்லை! இங்கு, மறுமொழியில் சகோதரர் சந்தேகம் கேட்டிருக்கும் அளவுக்கு அகீகா கொடுப்பதில் இவ்வளவு கடினமான அழுத்தம் எதுவுமில்லை!

ஒருவர் எங்கு வாழ்கின்றாரோ அந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தக்கவாறு செயல்களை அமைத்துக்கொள்ள லாம். அகீகாவுக்கென பலியிட்ட பிராணியின் இறைச்சியை ''நீங்களும் உண்ணுங்கள், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்'' என்று 22:28, 36 திருமறை வசனங்கள் கூறுவதால் எங்கிருந்தாலும் இதைப் பின்பற்றலாம். உறவினருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை இல்லாத நாட்டில் உறவினருக்குக் கொடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தமில்ல ை!

பிறருக்கு வழங்கும் உணவுப் பொருள்களில் சமைக்காதது, சமைத்தது என்ற பாகுபாடு இல்லை. ஆனால், விருந்து என்று வரும்போது விருந்துக்கு அழைக்கப்பட்டவர் கள் மட்டுமே வருவார்கள். அறிந்தவர்கள் மட்டுமே அழைக்கப்படுவர். அதனால் அகீகா விருந்து என்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

திருக்குர்ஆன் கூறியுள்ளபடி கஷ்டப்படும் ஏழைக்கும், உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து யாசிக்காமலிருப் போருக்கும், யாசிப்போருக்கு ம் உண்ணக் கொடுத்திட வேண்டும்! இதுவே குர்பானிப் பிராணியின் மாமிசங்களை வழங்குவதில் முக்கிய அம்சமாகும். அவரவர் வாழும் பகுதிகள் சூழ்நிலைக்கேற்ப இவற்றைப் பேணி நிறைவேற்றிக்கொள்ளலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
Abu Muhai
0 #3 Abu Muhai 2013-08-25 12:12
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

குழந்தைக்காக அகீகா கொடுப்பது கட்டாயக் கடமை இல்லை! அதனால் அகீகா கொடுக்கா விட்டால் குற்றமில்லை. (இத்துடன் மேற்கண்ட மறுமொழியை வாசித்துக் கொள்ளுங்கள்)
Quote | Report to administrator
Shahul Hameed
+2 #4 Shahul Hameed 2014-01-24 19:41
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,
அகீகா கொடுகபடாமல் நிபந்தனை காலம் முடிந்தநிலையில் (ஒரு வருடம் முடிந்த நிலையில்) அவரின் நிலை என்ன.இப்பொழுது கொடுக்கலாமா?
Quote | Report to administrator
feroz
0 #5 feroz 2016-05-10 10:56
is it authentic we have to shave baby hair and according to the weight we have to donate in equivalent of gold or silver ? what about telling adhan in ear ?
Quote | Report to administrator
For Br Feroz
0 #6 For Br Feroz 2016-05-16 09:37
Dear Br Feroz,

Please refer this link

satyamargam.com/.../...
Quote | Report to administrator
H.N.M.M.YAHYAKHAN
0 #7 H.N.M.M.YAHYAKHAN 2016-08-27 13:32
அகீகா கொடுக்கும் ஆட்டின் எழும்பை உடைத்து (கொத்தி)
போடலாமா?
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்