முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

அன்பான சகோதரர்களுக்கு,

என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் புனித மிக்க ரமலான் மாதத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் எனக்கு இருக்கும் சில ஐயங்களைப் பகிர்ந்து, அதற்கான மார்க்க விளக்கங்களைப் பெற விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

அறியாமைக் காலத்தில் இருந்த நாட்களில் எனக்காக என் பெற்றோர் சேமித்து வைத்திருந்த நகைகள், நிரந்தர வைப்புத் தொகை இப்படியாக என்று சமீபத்தில் என் உடன்பிறந்த இளைய சகோதரர் (அவருக்கும் அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்) ஒரு குறிப்பிட்ட தொகையையும், 112 சவரன் நகைகளையும் என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன். அவரும் வலுக்கட்டாயமாக, "இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது. எனவே உனக்கே உரியது" என்று சொல்லி என்னிடமே விட்டுச் சென்று விட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவை என்னிடமே இருக்கின்றன.

ஐயம் - 1
இதனை இப்போது நான் ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுத்திடணுமா ?

ஐயம் - 2
ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக அந்தத் தங்கத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி என்றால் எனக்காக எனச் சொல்லி என் தந்தை சேர்த்து வைத்த காலத்திலிருந்து ஜக்காத்தைக் கணக்கிட வேண்டுமா? அல்லது என்னுடைய கைகளுக்கு கிடைத்த நாளில் இருந்து கணக்கிட வேண்டுமா?

ஐயம் - 3
எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில் ஒரு முஃமினாக நான் என்ன செய்ய வேண்டும்?


தெளிவான விளக்கம் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் அனைவரின் நற்கருமங்களையும் செயல்களை பொருந்திக் கொள்வானாக.

இப்படிக்கு,
உங்கள் சகோதரி
ஆமினா அப்துல்லாஹ் (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:-

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சொத்துகள், அந்தச் சொத்து்கள் மீதான மற்ற உடன் பிறப்புகள் - சகோதரர்கள் சகோதரிகள் நியாயமான ஆட்சேபணை தெரிவிக்காத வரையில் பெற்றோர்களால் எந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்டதோ அவை அவருக்குரியதே!

''இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது; உனக்கே உரியது'' என்று சகோதரர் ஒப்படைத்து விட்டபின் ரொக்கத்தையும் நகைகளையும் வாங்கிக் கொள்வதில் தவறேதும் இல்லை. வாங்கியபின் 112 சவரன் நகைகளும் குறிப்பிட்ட ரொக்கத் தொகையும் உங்களுடைய அனுபவத்துக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இந்த நகைகளுக்கும், ரொக்கத்திற்கும் நீங்கள் மட்டுமே முழு உரிமையுள்ளவராவீர்கள்.

ஐயம் - 1
இதனை இப்போது நான் ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுத்திடணுமா?

தெளிவு:-
தந்தை - மக்கள் உறவில் இருவரில் ஒருவர் முஸ்லிம் அல்லாதவராயின் சொத்துரிமையில் ஒருவருக்கொருவர் பங்கு கிடையாது. ஆனால், ஒரு முஸ்லிம் தந்தையின் சொத்துகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கும் முஸ்லிம் பிள்ளைகளின் சொத்துகளில் முஸ்லிம் பெற்றோருக்கும் உரிமையுள்ளது என்கிற 'சொத்துரிமை' அடிப்படையில் உங்கள் தந்தை, இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தவராயின் அவர் அளித்தவற்றை 'சொத்துரிமை' வகையில் அவரின் மகளாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்வதே நேர்மையாகும் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

இல்லாவிடினும், அதாவது தந்தை - மக்கள் வெவ்வேறு வாழ்க்கை நெறியைச் சார்ந்தவராயினும், இயல்பான பிள்ளைப் பாசத்தின் அடிப்படையிலான 'அன்பளிப்பு' முறையில் வழங்கினாலும் அவற்றை மறுத்தலாகாது.

ஐயம் - 2
ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக அந்தத் தங்கத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி என்றால் எனக்காக எனச் சொல்லி என் தந்தை சேர்த்து வைத்த காலத்திலிருந்து ஜக்காத்தைக் கணக்கிட வேண்டுமா? அல்லது என்னுடைய கைகளுக்குக் கிடைத்த நாளில் இருந்து கணக்கிட வேண்டுமா?

தெளிவு:-
ரொக்கமும் நகைகளும் உங்களுக்கு மட்டும் சொந்தமானவை என உறுதியான நாளிலிருந்தே அவற்றுக்கான ஸகாத் தொகையைக் கணக்கிட்டுக் கொடுப்பது உங்கள் மீது கடமையாகிறது. அதற்கு முன்னர் அவை உங்களுக்குச் சொந்தமானவை என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் இருந்ததால், அன்றைய நாள்களில் ரொக்கத்திற்கும் நகைக்குளுக்கும் ஸகாத் கொடுப்பது உங்கள் மீது கடமை இல்லை. அவை உங்களுக்கென உரிமையாக்கப்பட்டு எப்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதோ அன்றிலிருந்து அதற்கான ஸகாத்தைக் கணக்கிட்டு நீங்கள் கொடுத்தால் போதுமானது! கூடுதல் விபரங்களுக்கு: நகைகளுக்குரிய ஸகாத்தை யார் கொடுப்பது? எனும் நமது தளத்தின் பழைய பதிவைப் பார்வையிடவும்.

ஐயம் - 3
எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில்
ஒரு முஃமினாக நான் என்ன செய்ய வேண்டும்? தெளிவான விளக்கம் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ்.

தெளிவு:-
''ரொக்கமும் நகைகளும் எனக்குரியது இல்லை எனும் பட்சத்தில் நான் என்ன செய்யவேண்டும்?'' எனும் இந்த மூன்றாவது கேள்வி மிக முக்கியமெனக் கருதவேண்டியுள்ளது. ரொக்கமும் நகைகளும் உங்களுக்குரியது இல்லை என்பதற்குத் தெளிவாக காரணத்தை நீங்கள் கூறவில்லை. அவற்றுக்கு நீங்கள் உரிமையாளர் ஆகமுடியாது என்றால் அவற்றுக்கு நியாயப்படி உரியவர்கள் யார்?/யாவர்? என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படி அறிந்திராத நிலையாக இருந்தாலும் அவை சேரவேண்டிய உண்மையான உரிமையாளரை தேடிப் பிடித்து அவரிடம் ஒப்படைக்கலாம்!

தெரியாத நிலை நீண்டு நீடிக்குமெனில் ரொக்கத்தையும் நகைகளையும் பெற்றோரின் பெயரால் தர்மம் செய்துவிடலாம்!

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் "ஆம்" என்றனர். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி 1388, 2760, 2762, முஸ்லிம் 1830, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Comments   

பிந்து ஸல்ஹா
0 #1 பிந்து ஸல்ஹா 2011-08-12 07:33
ஸலாலுன் அலைகும்!
//பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சொத்துகள், அந்தச் சொத்து்கள் மீதான மற்ற உடன் பிறப்புகள் - சகோதரர்கள் சகோதரிகள் நியாயமான ஆட்சேபணை தெரிவிக்காத வரையில் பெற்றோர்களால் எந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்டதோ அவை அவருக்குரியதே!//
இந்த கருத்திற்கு ஆதாரம் உண்டா?

ஏனெனில், ஒரு ஸஹாபி தன் ஒரு பிள்ளைக்கு அன்பளிப்பு கொடுக்க நாடி ரஸூலுல்லாஹ்வை சாட்சியாக இருக்க வேண்டிய போது, எல்லா பிள்ளைகளுக்கும் கொடுக்காத அநியாயத்திற்கு தான் சாட்சி சொல்லப் போவதில்லை என்ரு மறுத்தார்களே தவுர, மற்ற பிள்ளைகளின் நிலைபாட்டை கேட்கவில்லையே!

அவ்வாறெனில், சகோதரர்களின் ஆட்சேபனை இன்றி வழங்கப்படும் சீதனச் சொத்துக்கள் விஷயத்தில் மற்றும் சொத்துப்பகிர்வி ல் நாம் எவ்வாறு எடுத்துக்கொல்வது?
தயவுசெய்து விளக்கவும்.
Quote | Report to administrator
muslim:
0 #2 muslim: 2011-08-14 23:37
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே* நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர் களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். அறிவிப்பாளர்: ஆமீர் பின் பஷீர் (ரஹ்) (நூல்கள்: புகாரி 2587, முஸ்லிம் 3325, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)

நுஃமான் (ரலி) அவர்களுக்கு, அவரின் தந்தையார் பஷீர் (ரலி) அவர்கள் ஓர் அடிமையை அன்பளிப்பு வழங்கியதாக முஸ்லிம் 3321 அறிவிப்பில் பதிவுசெய்யப்பட் டுள்ளன. பிள்ளைகளிடையே அன்பளிப்பு வழங்குவதில் பாராபட்சமின்றி சமமாக நடந்து கொள்ள வேண்டும். என்று நபிமொழிகள் வலியுறுத்துகின் றன.

அன்பளிப்பு என்பது வேறு, சொத்துரிமை என்பது வேறு. இந்த இழையில் அன்பளிப்பு குறித்து எங்கும் சொல்லப்படவில்ல ை. சொத்துரிமைத் தொடர்பாகவே பேசப்பட்டுள்ளன.

//பெற்றோரிடமிர ுந்து பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சொத்துகள், அந்தச் சொத்து்கள் மீதான மற்ற உடன் பிறப்புகள் - சகோதரர்கள் சகோதரிகள் நியாயமான ஆட்சேபணை தெரிவிக்காத வரையில் பெற்றோர்களால் எந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்டதோ அவை அவருக்குரியதே!//

வாரிசுரிமையுடையோருக்கு வஸிய்யத் செய்தல் இல்லை என்றாலும், அசையும் சொத்து, அசையாச் சொத்து, என இரு வகை சொத்துகளில் ரொக்கம், நகைகள் போன்ற அசையும் சொத்துகளை ''இவை உனக்கு'' என்று பெண்மக்களுக்கென பெற்றோர்கள் கூறுவதுண்டு. இதனால் அசையாச் சொத்துகளில் பெண்மக்களுக்குச ் சொத்துரிமை இல்லை என்பது அர்த்தமல்ல!

ரொக்கத்தையும் நகைகளையும் தமையன் "இவை உனக்கு உரியது'' என்று தமைக்கையிடம் ஒப்படைத்திருக்க , வேறு உடன் பிறப்புகள் இருந்து, பாகப்பிரிவினை அடிப்படையில் இதை ஆட்சேபிக்காத வரை, பெற்றோர்களிடமி ருந்து இவை மகளுக்குக் கிடைத்த சொத்துரிமையாகு ம்! இவற்றை அன்பளிப்பு மற்றும் சீதனத்துடன் ஒப்பிடுவது பொருத்தமாக இல்லை!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்