முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

ஆய்வுக் கட்டுரைகள்

எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!முஹம்மது அலி ஜின்னா!

தவறாக புரிய வைக்கப்பட்ட சிறந்த அரசியல் தலைவர்! குப்பைகள் மட்டுமே அதிகம் நிரப்பப்பட்டதால் அந்த மனிதரைப் பற்றிய துணுக்கு செய்திகளுக்குக் கூட இடம் கொடுக்காமல், “பாகிஸ்தானைப் பிரித்தார்” என்ற ஒரே வரியை மட்டுமெழுதி, உண்மைகளை மட்டுறுத்தி, பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை நயம்பட நிரப்பி, வெறுக்கச் செய்யப்பட்ட உயர்ந்த தேசியவாதி!

அவர் பன்றிமாமிசம் சாப்பிட்டாரா இல்லையா?, மது சீக்ரெட் பழக்கத்திற்கு அடிமையானவரா?, நாய் வளர்த்தாராமே?, ஒரு முறை கூட ஹஜ் செய்யாதவரா? etc.. போன்ற விவாதங்கள் இணையத்தில் எக்கசக்கம். ஒரு முழுமையான முஸ்லிமாக அவர் வாழவில்லை என்ற சந்தேகத்தைச் சில புகைபடங்கள் விதைக்கின்றன. உதாரணத்திற்கு, இஸ்லாம் வலியுறுத்தும் நாகரிக உடை அணியாமல் நவநாகரிக மங்கையாக மகள் தினா! செல்லநாய் வளர்க்கும் ஜின்னா!..... போதும் போதும்... நமக்கு எக்கசக்க வேலை இருக்கு... அவர் ஈமானை அளக்கும் பொறுப்பைப் படைத்தவனிடமிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்!

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தார் என நமக்கு நன்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜின்னா உண்மையில், பாகிஸ்தான் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் அல்லர். மாறாக, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கைக் கடுமையாக எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து செயல்பட்டவர்.

1906ல் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கை ‘மத நிறுவனம்’ என கிண்டல் செய்த ஜின்னா, அதனைப் புறந்தள்ளி விட்டு காங்கிரஸில் சேர்ந்து அயராது உழைத்து “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதர்” என காங்கிரஸால் கொண்டாடப்பட்ட ஜின்னா.... உயிராய் நேசித்த காங்கிரஸை விட்டு பிற்காலத்தில் விலகி, தாம் வசைபாடி தீர்த்த முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைமை பொறுப்புக்கே வருவதற்குமான காலச்சக்கரம் சுழல காலம் எடுக்கவில்லை... மிக விரைவாகவே நிகழ்ந்தேறியது...!

எனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1!பாகிஸ்தான் பிரிவினையில் மறைந்திருக்கும் நுண்ணரசியல் ஆழமானது; சூழ்ச்சிகள் நிறைந்தது. கொலை செய்தவனை விட, செய்ய தூண்டியவன்தான் அதிக தண்டனைக்குத் தகுதியானவன்..! ஆனால் நம் வரலாறு ஜின்னாவின் தலையில் மட்டும் ஒட்டுமொத்த பழியை இறக்கியது !

முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக ஆக்குவோம் எனக் கொக்கரித்து, இந்தியாவை ஹிந்துத்துவ நாடாக மாற்றும் லட்சியத்துடன் செயல்பட்ட மிகச் சிறியதொரு ஃபாஸிச குழுவின் திட்டமிட்ட, உறுதியான செயல்பாட்டைக் கண்டும் காணாமல் கண்மூடிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்புக்கும், அலட்சியத்திற்கும் இந்தியா கொடுத்த மாபெரும் விலைதான் “பிரிவினை”!

இதனை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், ஜின்னா யார், அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் என்ன என்பதை ஓரளவேனும் நாம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

- தொடரும்...

ஆமினா முஹம்மது.

Comments   
Julaiha nazir
+3 #1 Julaiha nazir 2014-11-15 01:00
மாஷா அல்லாஹ் ...அழகான தொடக்கம் ஆமீனா மேன்மேலும் உங்களின் எழுத்து பணித்தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.
Quote | Report to administrator
Shajakan
+3 #2 Shajakan 2014-11-15 13:23
மாஸா அல்லாஹ்.... தொடருங்கள்.....
Quote | Report to administrator
ஆயிஷா பேகம்
+2 #3 ஆயிஷா பேகம் 2014-11-15 18:15
மா ஷா அல்லாஹ்...அருமை யான தொடக்கம் ஆமினா..வாழ்த்து க்கள்.
Quote | Report to administrator
Syed Ali
+3 #4 Syed Ali 2014-11-15 18:38
வாழ்த்துகள். எனக்கு கொஞ்சம் துவா செய்யுங்ள். உங்களை போன்ரு நல்லா எழுதனும்ண்டு.
Quote | Report to administrator
suvanappiriyan
+2 #5 suvanappiriyan 2014-11-17 02:19
வாழ்த்துக்கள் !
Quote | Report to administrator
shajakan
+3 #6 shajakan 2014-11-17 12:19
நல்ல கருத்துக்களை சுமந்து செல்கின்ற
ஒரு ஆரோக்கியமான வாகனம் ஊடகம்,
தற்போது நச்சு கருத்துக்களை சுமந்து
மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறது.
மனிதருக்குள் ஊடுருவி செல்ல கூடிய ஒரு
அபார சக்தி ஊடகதிருக்கு இருக்கிறது
தற்போது இதை பயன்படுத்தும் விதம்
ரொம்ப கொடியாதாக இருக்கிறது
தலித்களோ, முஸ்லிம்களோ,
இன்னும் தாழ்த்தபட்டவர்க ளோ
எந்த ஒரு நல்ல சமூக பணிகளை செய்தாலும்
அதை வெளியிட தயங்கிறது காரணம்
இவர்கள் மேல் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம்
வந்து விட்டால் ஊடகதிருக்கு வேலை
இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
ஆக நம்மை தீவிரவாதிகளவும் ,
அரக்கனாகவும் காட்சி ஊடகத்தில் காட்டபடுகின்றது.
ஆக பிற சமய சகோதரர்களின் மீது நாம் வைக்கும்
உண்மையான பாசம் கூட அவர்களுக்கு பொய்யாக தெரிகிறது.
மத சார்பற்ற நாட்டில் மத சாயம் பூசாமல்
மனிதனாக வாழ நாம்தான் வழி வகுக்க வேண்டும்.
அதற்க்கு நாம் எப்படி இந்த நாட்டின் சுதந்திரத்திற்க ாக நம் பொருளாதரத்தையும ், நேரத்தையும் மற்றும் நம் உழைப்ப்பையும் கொடுத்தோமோ அது போன்று இந்த ஊடகதிற்க்ககாவும ் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இப்பொழுது தள்ள பட்டுவிட்டோம்
இதை நாம் இன்னமும் கையில் எடுக்க வில்லை என்றால் நாம் மற்றும் நம் சந்ததியனர் பெரும் இழப்புக்கு ஆளாக்கபடுவார்கள ் என்பதில் ஐயம் இல்லை.முதலில் நமக்கு கிடைத்த ஊடகத்தை முறையாக பயன்படுத்துவோம் இது நம் முதல் படியாக இருக்கட்டும்
இறைவன் நாடினால் அணைத்து தரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் முதல் பத்திரிக்கையாளர ாகவும் , ஊடகத்தில் உண்மையை எடுத்து சொல்லி நீதியை நிலை நாட்டும் மக்களாகவும் நாம் களம் காணலாம்.
இது நமக்காக மட்டும் அல்ல நம் நாட்டின்
அனைத்து சமய மக்களுக்காவும்..!
மு. ஷாஜஹான்
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
+2 #7 அபூ ஸாலிஹா 2014-11-18 16:46
அழகான நடையில் அழுத்தமான தகவல்களுடன், அடுத்த பகுதியை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது தொடர்.

வாழ்த்துக்கள்.
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
+1 #8 சுல்தான் பாபர் 2014-11-19 11:50
எனது நன்பரின் மகனுக்கு பி.இ. முடித்து 3 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. சென்ற மாதம் ஒரு சென்னை கம்பெனியில் இண்டர்வியு பாஸ் செய்து வேலை ஆர்டரும் தந்து விட்டனர். வேலையில் சேரும் தினம், எச்.ஆர் டிபார்ட்மெண்ட் ஆர்டரை ரத்து செய்து விட்டது. "என்ன குற்றம் கண்டாய்" என்று அந்த இளைஞர் பொருமிய போது "முஸ்லிம்களை எடுக்கக் கூடாதுனு மேனேஜ்மென்ட் ஆர்டர்" என்று பதில் வந்தது. ஏன் என்று கேட்டபோது "உங்களுக்குத்தா ன் சவூதி அரேபியா இருக்கு. 55 முஸ்லிம் நாடுங்க இருக்கு. எங்கே வேண்டுமானாலும் போய் பிழைக்கலாம். எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு ஹிந்து நாடுதானே. நாங்க எங்க போறது?" என்று பதிலடி கிடைத்தது.

அந்த இளைஞர் நொந்து போய் சொன்னது "இப்ப புரியுது பாய், ஜின்னா ஏன் பாக்கிஸ்தான உருவாக்கினார்னு".

"கொலைகாரன் பிரதமன் ஆகிவிட்டான். இந்த நாட்டில் இனி பிழைக்கமுடியாது . இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கினாலென் ன?" எனும் எண்ணம் முஸ்லிம் சமுதாயத்திடம் வலுப்பெறுகிறதென ்றால் மிகையாகாது.

ஜின்னாவை தட்டியெழுப்பும் தருணம் வந்துவிட்டது.
Quote | Report to administrator
ABDUL AZEEZ
+1 #9 ABDUL AZEEZ 2014-11-19 13:52
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே சுல்தான் பாபர்,
ரிஸ்க் வழங்குபவன் அல்லாஹ் ஒருவன்னே மனிதர்கள், நிருவனங்கள், வெரும் பார்வையில் ஆடும் பொம்மைகலே! உன் அரிவுக்கும், திரமைக்கும் எங்கு விலை நிர்னயிக்கப் படுகிறதோ அங்கு உன் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
meeran
+1 #10 meeran 2014-11-22 11:58
மாஷா அல்லாஹ் ...அழகான தொடக்கம் ஆமீனா மேன்மேலும் உங்களின் எழுத்து பணித்தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
0 #11 சுல்தான் பாபர் 2014-11-24 21:23
புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி. ஞானையா
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 175
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (www.newbooklands.com/)
----------

முகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்கு த் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்ல ை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:
1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி.
2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
...........
--------
- ஞானசேகர்

puththakam.blogspot.ae/.../...
Quote | Report to administrator
Amina Mohammed
0 #12 Amina Mohammed 2014-11-26 23:29
கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைர்... மிகுந்த ஊக்கத்தை தருகின்றது உங்கள் வார்த்தைகள்... நன்றி..

@சுல்தான் பாபர் சகோ
இந்த புத்தகம் இந்த வாரம் தான் வாங்கினேன். நீங்கள் தரும் சுட்டிகள் , தரவுகள் அனைத்தும் பெரிதும் எனக்கு உதவியாக இருக்கிறது. ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
0 #13 சுல்தான் பாபர் 2014-11-27 11:36
ஈழத்தமிழர் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் சகோதரர் வேதனையுடன் சொன்னது: "எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால் , இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம ். பாலஸ்தீனின் யாசர் அராபத் போல், கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்".
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்