முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

ஆய்வுக் கட்டுரைகள்

"லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்" என்றும் "இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்" என்றும் எச்சரித்து வரும் மடல்கள் உண்மையா? விளக்கம் அளிக்கவும். (வாசகர் சுல்தான், குவைத்).


இதேபோன்ற மடல்கள் இன்னும் சில விதமாகவும் பரப்பப்படுகின்றன. விளக்கத்திற்குச் செல்லும் முன் அவற்றையும் பார்ப்போம்

"அமெரிக்காவின் மெடிக்கல் ரிஸர்ச் இன்ஸ்ட்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் அம்ஜத் கான் என்பவர் செய்த ஆராய்ச்சியில், கீழ்க்கண்ட பொருட்களில் பன்றிக் கொழுப்பு இருப்பது நிரூபணம்(!) ஆகியுள்ளது. எனவே ..." எனத் தொடர்ந்து, "கீழ்க்காணும் TOOTH PASTE, SHAVING CREAM, CHEWING GUM, CHOCOLATE, SWEETS, BISCUITS, CORN FLAKES, TOFFEES, CANNED FOODS, FRUIT TINS போன்ற சில பொருட்களை முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டாம்"

என்பதாக, எச்சரிக்கைகள் வரும். சிலர் கள ஆய்வு(!) செய்து படத்தோடு மெயில் அனுப்புவர்:

விளக்கம்:

இமெயில்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் பரப்பப்பட்டு வரும் இச்செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கடந்த 2006 ஆண்டு முதல் இப்பொய்ச் செய்திகள், இணையவெளியில் உலவி வருகின்றன.

லேஸ் என்னும் உருளைக்கிழங்கு சீவல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவனவற்றில் E631 எனப்படும் டைசோடியம் இனோசினேட் ( Sodium inosinate ) என்ற சுவை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது.

இதனை விலங்குகளின் இறைச்சியிலிருந்தும் மீன்களில் இருந்தும் தயாரிக்கலாம். அன்றி வள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிக்கலாம். இப்பொருளின் மூலத்தை, தயாரிப்பாளர் சொல்வதை வைத்துத் தான் தீர்மானிக்க முடியும்.

'தாவரப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது' என்ற பச்சைப் புள்ளி இடப்பட்ட பொட்டலங்களில் தான் லேஸ் சிப்ஸ் வெளியாகிறது. அதாவது, தாவரங்களில் இருந்துதான் லேஸ் சிப்ஸின் அனைத்து மூலப் பொருட்களும் தயாரிக்கப்பட்டன என்ற உறுதி, லேஸ் சிப்ஸ்களை இந்தியாவில் தயாரித்து விற்கும் பெப்சிகோ தளத்தில் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளது. எனவே பன்றி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று தக்க ஆதாரம் இல்லாமல் இதைக் குற்றம் சாட்ட இயலாது.

எனவே, எவ்வித ஆதாரமும் இன்றி அமெரிக்காவில் முகம் தெரியா எவரோ ஒருவர் செய்த ஆராய்ச்சி என்ற பெயரில் கிளப்பி விடப்பட்டிருக்கும் இதுபோன்ற அவதூறுகளை அவசரப்பட்டு பிறருக்கு அனுப்பும் முன்,  "கேள்விப்படும் செய்திகளை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன்" என்ற நபிமொழி விடுக்கும் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்வோமாக!

- அபூஷைமா

Comments   
வாசிம்
+3 #1 வாசிம் 2014-06-10 05:27
நான் pepsico பொருள்களை பயன்படுத்துவதில ்லை , காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நம் இனத்தை அழிக்க பயன்படுத்தப்படு கிறது,
Quote | Report to administrator
Karunagaran
+6 #2 Karunagaran 2014-06-10 23:59
விழிப்புணர்வு கட்டுரை. பாராட்டுக்கள்!

வாசிம், இப்படி நம்ம இனம், நம்ம சமூகம், நம்ம ஜனம் என்று பிரித்து பிரித்து தான் மனித நேயமே இல்லாமல் போய் விட்டது.

Pepsico மனித இனத்திற்கு அழிவைத் தருகிறது எனில் சொல்லுங்கள். எதிர்ப்பவர்களில ் நான் முதல் வரிசையில் நிற்கிறென்.
Quote | Report to administrator
வாசிம்
0 #3 வாசிம் 2014-06-11 05:07
Karunagaran , நீங்கள் சொல்லும் கருத்தோடு நான் சிரித்து முரண் படுகிறேன், ஒரு சாமானியனிடம் இன பேதம் கற்பித்தல் இல்லை இது .ஒருவன் ஒரு இனத்தை அழிக்க நினைக்கும் போது அவன் செயலை முறியடிப்பது,
எப்ப்டி காந்திஜி கள்ளுக்கடை மறியல் செய்து வெள்ளை அரசுக்கு இழப்பு ஏற்பட செய்தாரோ அதேபோல்.
Quote | Report to administrator
சுல்தான், குவைத்
+2 #4 சுல்தான், குவைத் 2014-06-11 15:52
என்னுடைய கேள்வியை ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்து பதில் அளித்தமைக்கு நன்றி.

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள லேஸ் (Lays) போன்று, எண்ணற்ற ஆதாரமில்லா பொய்யான விசயங்கள் மட்டற்று சுற்றுக்கு விடப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது நிறுவனத்தையோ வணிக ரீதியில் முடக்க போட்டி நிறுவனங்களின் தந்திரமாகவும் இவை இருக்கலாம். இவை போன்ற விசயங்களை ஆய்வு செய்யாமல் உடனே பரப்புபவர்கள் இது போன்ற கட்டுரைகளை படித்தாவது திருந்த வேண்டும்.
Quote | Report to administrator
subramanian
+1 #5 subramanian 2014-06-12 14:07
Good mature answer, keep it up
Quote | Report to administrator
Syed
+2 #6 Syed 2014-06-17 15:13
Quoting Karunagaran:
விழிப்புணர்வு கட்டுரை. பாராட்டுக்கள்!

வாசிம், இப்படி நம்ம இனம், நம்ம சமூகம், நம்ம ஜனம் என்று பிரித்து பிரித்து தான் மனித நேயமே இல்லாமல் போய் விட்டது.

Pepsico மனித இனத்திற்கு அழிவைத் தருகிறது எனில் சொல்லுங்கள். எதிர்ப்பவர்களில் நான் முதல் வரிசையில் நிற்கிறென்.

வாழ்த்துக்கள் சரியா சொன்னீர்கள். மனித நேயம் போற்றப்பட வேண்டும்.
Quote | Report to administrator
.A.Mohideen AbdulKha
0 #7 .A.Mohideen AbdulKha 2014-11-16 12:25
ஆனால் லேசில் சேர்க்கப்படும் உப்பு உடல் நலத்திர்கு கேடு
Quote | Report to administrator
rajadaisy1986
0 #8 rajadaisy1986 2014-11-16 17:42
நான் entha ready made பொருள்களை பயன்படுத்துவதில ்லை , காரணம் இதன் மூலம் கிடைக்கும் enagry articficial.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்