முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

 

"நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், "இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாய் (ரலி) புகாரீ, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது - ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் - இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின்  ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

"நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், "விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஆண்டுகள் உருண்டோடின. யூதர்களைப் போன்றே பல முஸ்லிம்களும் முஹர்ரம் 10ஆம் நாளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்கு ஓராண்டிற்கு முன்னர்,  நபித்தோழர்களுள் சிலர் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்றனர்:

"ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்" என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, "அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது.

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும் பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம் 10ம் வைக்க வேண்டும், பத்திலும் பதிவொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.

வழக்கமாக எல்லாப் பிரச்சனைகளிலும் கட்டுக்கதைகள் நுழைந்தது போலவே இந்த ஆஷுரா நாள் பற்றியும் நிறைய கட்டுக்கதைகள் உலா வருகின்றன.ஆஷுரா நாளில் ஒருவன் குளித்தால் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்பட மாட்டான் என்று கூறப்படுவதும், நபிமார்கள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஆஷுரா தினத்தில்தான் நடந்தன என்று கூறப்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய பொய்களாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் இதற்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை. ஒரு சில குத்பா கிதாபுகளிலும், கிஸ்ஸாக்களிலும்தான் அவை காணப்படுகின்றன. ஹதீஸ்கலை வல்லுனர்கள் அவற்றை ஏற்கவில்லை.

இதே ஆஷுரா தினத்தில் நபி(ஸல்) அவர்கள் பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சியாகும். கல் நெஞ்சமும் கரைந்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில்தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல, மனிதாபிமானம் உள்ள எவரும் அந்த நிகழ்ச்சியைக் கேள்வியுறும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

'கர்பலா' என்ற இடத்தில் நபி(ஸல்) அவாகளின் பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஆஷுரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி கிடையாது. இந்த நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒன்று பிர்அவுனுக்கும், மூஸா(அலை) அவர்களுக்கும் நடந்தது. அதில் மூஸா(அலை) வென்றார்கள். அதே ஆஷுரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

ஓர் உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருத வேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள் என்போர் நபிமார்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் பேரருக்கு அந்த மகத்தான அந்தஸ்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ஷஹீதாக்கி விட்டான். அந்த மாபெரும் அந்தஸ்தை இமாம் ஹுஸைன்(ரழி) அடைவதற்குக் கர்பலாதான் காரணமாக இருந்தது.

இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள்தாம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுது புலம்புவர். மறுஉலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், "நாம் மறு உலக வாழ்வில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கிறோம்" என்று, தம்மைத் தேற்றிக் கொள்வர்.

"தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும்போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:156) என்று அல்லாஹ் கூறியதற்கிணங்க வாழும்போதுதான் இறைவனின் திருப் பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

ஒரு வரலாற்றுச் சோகத்துக்காக ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும், யஸீதையும் மற்றவர்களையும் ஏசுவதும், ஹுஸைன் மவ்லுது ஓதுவதும் நமக்குத் தேவையில்லாதவற்றைப் பேசுவதும், ஒரு முறை ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை வர்ணனையுடன் பல பொய்களைக் கலந்து சொல்லி ஆண்டுதோறும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாம் காட்டிய மரபு அல்ல.

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

"உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: அஹ்மத்

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறைகள்தாம். இவற்றைச் செய்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களைச் சேராதவர்களாக நாம் ஆகிவிடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக. தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் முஹர்ரம் மாதம் பத்து நாட்கள் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுகின்ற கொடுமையும் நடந்து வருகின்றது. "அந்தப் பத்து நாட்களில் கரு உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகும்" என்று அதற்கு மடத்தனமான காரணம் வேறு கூறிக் கொள்கின்றனர்.

இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை, கை போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை அவித்து, பாத்திஹா ஓதி வருகின்றனர், அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்புக்கு இது ஓர் அடையாளம் என்று தவறாக எண்ணிக் கொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்பவர்களைப் பற்றி "என்னைச் சேர்ந்தவரல்லர்" என்று நபி(ஸல்) அவாகள் மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாத்தில் இது போன்ற செயல்களுக்கு அறவே இடம் இல்லை.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பாற்றினான் என்று எண்ணிக் கொண்டு, அந்தப் பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக!

ஆக்கம்: அபூ முஹம்மத்

நன்றி: அந்நஜாத் செப்டம்பர், 1986

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு (முன்னுரை)

Comments   
abdul azeez
0 #1 abdul azeez -0001-11-30 05:21
இஸ்லாமிய மாதமான ஒன்பது மற்றும் பத்தாம் நாள் இன்றைய ஆங்கில நாளில் எப்பொழுது என்ற விபரம் இருந்தால் சற்று நன்றாக இருக்கும். நோன்பு வைப்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்.

மா சலாம்.

அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
maswood
+1 #2 maswood -0001-11-30 05:21
சகோதரர் அப்துல் அசீஸ்,

நான் வளைகுடாவில் பணியாற்றுகிறேன் . இங்கே எதிர்வரும் திங்கள் இரவு (செவ்வாய் பகல்) முஹர்ரம் ஒன்பது துவங்குகிறது என்று அறிவித்துள்ளார்கள்.

இங்குள்ள அரபிக் காலண்டரிலும் இதுவே இடம் பெற்றுள்ளது. அறியவும்.
Quote | Report to administrator
மு முஹம்மத்
-1 #3 மு முஹம்மத் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரரே

முஹர்ரம் 9 ஒன்பது இன்று அதாவது திங்கள் கிழமை 05.1.2009ம் செவ்வாய் 06.01.2009 அன்று 10 பத்தாவது நாள் அஷுரா என்றும் தற்போது கத்தரில் அறிவிக்கப்பட்டு ள்ளது இன்றிரவு ஒன்பதாவது நோன்பிற்கு ஸஹர் செய்ய வேண்டும்.....
இன்ஷா அல்லாஹ்...
Quote | Report to administrator
M Muhammed
0 #4 M Muhammed -0001-11-30 05:21
From: Towards Huda
Date: Sun, Jan 4, 2009 at 5:46 PM
Subject: Fwd: CORRECTION - 10th Muharram on Tuesday-6 January 2009
To:CORRECTION - 10th Muharram on Tuesday 6 January 2009

al-Hamdu-Lillaa hi Rabbil-'Aalamee n was-Salaatu was-Salaamu 'alaa Ashrafil-Anbiya a. e wal-Mursaleen, wa ba'd:
as-Salaam 'alaykum wa-Rahmatullaah e wa-Barakaatuhu,
Fatwa-Online has been informed of the official decision by Shaykh Saalih al-Luhaydaan, Head of the High Judiciary Council of Saudi Arabia, that the Day of 'Aashooraa (10th of Muharram) shall be on Tuesday 6th January 2009, inshaa.-Allaah.
09 muharram = monday 5 january 2009
10 muharram (day of 'aashooraa) = tuesday 6 january 2009
11 muharram = wednesday 7 january 2009
Quote | Report to administrator
aboo hudhaifa
-1 #5 aboo hudhaifa 2009-12-25 23:02
முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் பிறை 1முதல்10வரை ஒரு சில முஸ்லிம்கள் மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறிவிடுகிறார்க ள்.பஞ்சா ஊர்வலமாக வரும்போது சாம்பிராணி புகைப்போட்டு,கா ணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவா ர்கள்.அவர்களிடம ் உப்பு ஒரு பார்சலும்,மிளகு ஒரு பார்சலும் கொடுப்பார்கள்.ந மக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை இந்த உப்பும் மிளகும் நீக்கி விடும் என்ற நம்பிக்கை.மேலும ் ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் கொழுக்கட்டை செய்து பஞ்சா ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வினியோகிப்பார்க ள்.ஹுசைன்(ரழி)க ொல்லப்படுவதற்கு முன்பு தண்ணீர் கேட்டார்களாம்.அ ப்போது நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார்க ளாம்.எனவே அந்நாளில் யாரும் தாகத்துடன் இருக்கக்கூடாதாம ்.எனவே புதிய மண்பானை வாங்கி அதில் மோர் அடைத்து மதிய நேரத்தில் வினியோகிப்பார்க ள்.இப்படீப்பட்ட முஸ்லிம்களின் இந்த கேவலமான அவலத்தை எங்கு போய் சொல்வது?கடந்த 25 ஆண்டுகளாக ஏகத்துவ பிரச்சாரம் தீவிரமாக நடைப்பெற்று வருகின்ற போதும் இன்னும் இந்த மாதிரி ஜென்மங்களை திருத்த முடியவில்லை என்பது வேதனைக்குறிய விஷயம் தான்.
Quote | Report to administrator
M.S.K.
0 #6 M.S.K. 2009-12-26 05:20
// மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்க வேண்டும், பத்திலும் பதிவொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.//

(10லும்) பத்திலும் (11லும்) பதிவொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.
Quote | Report to administrator
HASAN1
+1 #7 HASAN1 2010-12-15 14:15
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு :-)
Quote | Report to administrator
N Muhammad Naushad
+1 #8 N Muhammad Naushad 2010-12-15 22:09
முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா தினத்தில் கர்பலாவில் இமாம் ஹுசைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மேலும் தூய அஹ்லுல்பைத் குடும்பத்தினர,ம ற்றும் தோழர்களான உண்மை விசுவாசிகள் ஆக மொத்தம் 72பேர்கள் சபிக்கப்பட்டவன் கொடுங்கோலன் யஸீதினால் அநீதமான முறையில் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
Quote | Report to administrator
அபூ ஹுதைஃபா
0 #9 அபூ ஹுதைஃபா 2010-12-21 19:36
சகோதரர் நவ்ஷாத் அவர்களே!"கொடுங் கோலன் யஸீதால் 73 பேர் கொல்லப்பட்டனர்" என்று தாங்கள் குறிப்பிட்டுள்ள து மிகப்பெரிய அவதூறாகும்.அது திரித்துக்கூறப் பட்ட வரலாறாகும்.நாகூ ர் ஹனீஃபா பாடிய பாடலுக்கும் நீங்கள் கூறியதற்கும் ஒரு சிறு வித்தியாசம் தான்.அவர்"கண்டவ ரும் குலை நடுங்கும் சண்டாளன் யஸீதென்போன் கொன்றான் இமாம் ஹுசைனை குடியரசு சாய்ந்ததம்மா"என ்று பாடினார்.நீங்கள ோ "கொடுங்கோலன்"என ்று கூறியிருக்கிறீர ்கள்.அவ்வளவுதான ் வித்தியாசம்."சண ்டாளன்"என்ற வார்த்தையை விட"கொடுங்கோலன் "என்ற வார்த்தை கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.மற்றப டி இருவரின் குற்றச்சாட்டும் ஒன்றே!

ஹுசைன்(ரழி)கொலைக்கும் யஸீதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.யஸீத் ஹுசைனை அல்லாஹ்வின் தூதரின் பேரன் என்ற அடிப்படையில் கண்ணியமான முறையில் கைது பண்ணிதான் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.ஆன ால் படைக்கு தளபதியாக சென்றவர்தான் ஹுசைன்(ரழி)மேல் உள்ள ஆத்திரத்தின் காரணமாக அவரைக்கொன்று தலையை கொய்து வந்து யஸீதுக்கு முன்பு கொண்டு வந்தார்.அப்போது யஸீத் கடுமையான கோபம் அடைந்தார்"அல்லா ஹ்வின் தூதரின் பேரனின் தலையைக்கண்டு கண்ணீர் வடித்தார்.இவ்வா று கடுமையான முறையில் நடந்து கொண்டதற்காக அத்தளபதியை கைது செய்தார்.மேலும் தன் மனைவியையும்,தன் குடும்பத்தாரையு ம் ஹுசைன்(ரழி)யின் மரணத்திற்காக மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கச்சொன ்னார்.அதுமட்டும ல்ல ஹுசைனின் எஞ்சியிருந்த குடும்பத்தாரை அழைத்து வரச்செய்து அவர்களின் எதிர்காலத்துக்க ு தானே பொருப்பேற்றுக்க ொண்டார்.[அவர்கள ை அவரே வளர்க்க பொருப்பேற்றுக்க ொண்டார்]இது தான் உண்மையான வரலாறு.

இன்னும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வின் தூதரால் சுவனத்தைக்கொண்ட ு நற்செய்தி சொல்லப்பட்டவர் யஸீத் பின் முஆவியா அவர்கள்.உண்மை இவ்வாறு இருக்க,அவருக்கு எதிராக எல்லோருடைய மனசிலும் துவேஷத்தை உண்டு பண்ணுவதற்காக வரலாற்றை திரித்து எழுதி அவரை ஒரு மோசமான கொலை காரராக சித்தரித்த வரலாற்று ஆசிரியர்களையும் ,அதை நாவு கூசாமல் பொது மேடையிலும்,ஜும் ஆ மேடையிலும் சொல்லிக்கொண்டிர ுக்கும் ஆலிம்களைடயும் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.

ஒரு தாபியீ விஷயத்தில் அதுவும் சொர்க்கத்தைக்கொ ண்டு நற்செய்திபெற்ற ஒருவருடைய விஷயத்தில் இந்த மாதிரி அவதூறுகளையும்,ப ொய் புரட்டுகளையும் கூறுபவர்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் இழிவு படுத்துவான்.

நான் மேற்கோள் காட்டிய ஹனீஃபாவுடைய அப்பாடலின் கடைசி வரிகள் தான் அபத்தமே தவிர ஆரம்ப வரிகள் நூறு சதம் உண்மையானதாகும்.அதாவது
"கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே!பு ண்ணாகி நெஞ்சமெல்லாம் புலம்பியே துடிக்கு தம்மா!"என்பதுதா ன் அதன் ஆரம்ப வரிகள்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால் அதே நேரத்தில் யஸீதை கொலைகாரராக சித்தரிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
சகோதரர் நவ்ஷாத் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்வது சாலச்சிறந்தது

சகோதரரே!யஸீத் சபிக்கப்பட்டவரா ?நவூது பில்லாஹி மின்ஹா!சபிக்கப் பட்டவர் அதற்கு தகுதியுடையவராக இல்லையென்றால்,அ ந்த சாபம் சபித்தவரையே வந்து சேரும் என்பது நபி மொழி!
Quote | Report to administrator
alavutheen
0 #10 alavutheen 2010-12-22 12:56
அஸ்ஸலாமு அலைக்கும்
முஹர்ரம் மாதம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். சந்தோஷமான செய்தி.எழுதியவர ுக்கு நன்றி...
அழகான சொற் பிரயோகங்களாலும் நடு நிலையாகவும் கையாண்ட விதமே இஸ்லாத்தின் நற்பண்புகள். கொள்கை வெறி பிடித்த சிலரின் அணுகுமுறையால்தா ன் இஸ்லாத்தின் கண்ணியம் மாசுபடுத்த படுகிறது. எனவே சகோதரர் எழுதிய கட்டுரை பூரணமாக வாசித்தேன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். இருந்தாளும் சகோதரர் சிலரின் எல்லை மீறிய செயலுக்காக ஒட்டு மொத்த ஷீஆக்களையும் விமர்சிப்பது சரியாக இருக்காது .நானும் ஒரு ஷீஆ கொள்கையை சேர்ந்தவன்தான்
ஆனால் ஒரு போதும் உண்மையாக அஹ்லுல் பைத்தை நேசிக்கின்ற தூய்மையான ஷீஆக்கள் இவ்வாறு நடப்பதை எதிர்க்கின்றோம் . அது தவறான அநாச்சார செயல் என்று நாமும் உறுதியாக இருக்கின்றோம். உண்மையில் நாம் 9ம் 10ம் நாட்கள் நோட்பது இல்லை.அதற்காக நீங்கள் நோற்பதை நாம் தவறு என்று சொல்லவுமில்லை. எங்களுக்கு
நபிகளாரிடமிருந் து அவர்களின் அஹ்லுல் பைத்தினூடாக எந்த தகவலும் கிடைக்க வில்லை. மேலும் சுன்னாக்களிடமே இந்த நோன்பை விரும்பியவர் விடலாம் பிடிக்கலாம் என்று இருக்கிறது. நாங்கள் அதைபிடிக்க விரும்ப வில்லை என்று வைத்து கொள்ளுங்கள். இது பற்றி நாம் ஒரும் கட்டுரை எழுதினோம் அதையும் நீங்கள் வாசித்து பார்க்கலாம். இவ்வாறு இருக்க நபிகளார் தனது மரணத்திற்கு பின் தனது உம்மத்திற்காக பின் பற்ற சொன்னவை எவை ? அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் என்று தெளிவான ஹதீஸ் இருக்கயில் ஏன் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுமாறு வந்த பலயீனமான ஹதீஸை பின்பற்றுகின்றீ ர்கள். இவ்வாறான பல வினாக்களுக்கும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டும் இது பற்றி ஆதார பூர்வமாக நாம் நிரூபித்து இருக்கிறோம் நீங்கள் படித்து பார்க்கலாம்.
எனவே இதை நாம் ஒரு சவாலாக எழுத வில்லை. உண்மையை அறிய வேண்டும் என்ற தேடல் நோக்கம்தான்.

noonvalkalame.blogspot.com/
www.al-shia.org/
Quote | Report to administrator
abu hudhaifa
-1 #11 abu hudhaifa 2010-12-22 20:53
"அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் என்று தெளிவான ஹதீஸ் இருக்கயில் ஏன் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுமாறு வந்த பலயீனமான ஹதீஸை பின்பற்றுகின்றீர்கள்"
எங்கே அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை கொஞ்சம் காட்டுங்கள் பார்ப்போம்.
Quote | Report to administrator
Muslim
-1 #12 Muslim 2010-12-23 11:05
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் அபூ ஹுதைஃபா அவர்களுக்கு

//இன்னும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வின் தூதரால் சுவனத்தைக்கொண்ட ு நற்செய்தி சொல்லப்பட்டவர் யஸீத் பின் முஆவியா அவர்கள்.// - அபூ ஹுதைஃபா.

மேல்கண்ட செய்திக்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பு இருந்தால் அறியத் தாருங்கள்!
Quote | Report to administrator
Muslim:
+1 #13 Muslim: 2010-12-23 14:23
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

//இவ்வாறு இருக்க நபிகளார் தனது மரணத்திற்கு பின் தனது உம்மத்திற்காக பின் பற்ற சொன்னவை எவை? அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் என்று தெளிவான ஹதீஸ் இருக்கயில் ஏன் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுமாறு வந்த பலயீனமான ஹதீஸை பின்பற்றுகின்றீ ர்கள். இவ்வாறான பல வினாக்களுக்கும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டும் இது பற்றி ஆதார பூர்வமாக நாம் நிரூபித்து இருக்கிறோம் நீங்கள் படித்து பார்க்கலாம்.// - alavutheen.

அன்புச் சகோதரர் alavutheen அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ள மேல்கண்ட நபிவழிச் செய்தி சுருக்கமாக:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள கும்மு எனும் நீர் நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார் கள்.
எஅப்போது, அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, இறைவாழ்த்துக்கு ப்பின், மக்களே! கவனியுங்கள், நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது . அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன ், நான் உங்களிடையே கனமான இரண்டை பொருள்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங ்கள்'' என்று கூறி அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள். அதில் ஆர்வமூட்டினார்க ள்.

(பிறகு, ''மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன ். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன ். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன ். என்று (மூன்று முறை) கூறினார்கள். அறிவிப்பவர் யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) (நபிமொழிச் சுருக்கம், நூல்கள் - முஸ்லிம் 4782, அஹ்மத், தாரிமீ)

சுட்டி: hadith.al-islam.com/.../

وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمْ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي

கனமான இரண்டு பொருள்களில் ஒன்று: ''கிதாப் அல்லாஹ் - அல்லாஹ்வின் வேதம்'' அல்லாஹ்வின் வேதத்தை பற்றிக்கொள்ளுங ்கள்'' அதில் நேர்வழியும், பேரொளியும் இருக்கின்றன என்று வலியுறுப்படுகிற து.

மற்றொன்று: ''அஹ்லுல் பைத் - நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்' ' என் குடும்பத்தார் விஷயத்தில், ''உங்களுக்கு அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன ்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் . இதிலிருந்து அஹ்லுல் பைத்தினரிடம் பற்றிக்கொள்ளவே ா பின்பற்றவோ எந்த ஆதாரமும் இல்லை! மாறாக, அவர்களுக்குரிய உரிமைகளையும், கண்ணியத்தையும் வழங்கிட வேண்டும் என்றே விளங்கவேண்டும். இதை மேலும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளைக்க ொண்டு நம்மால் நிறுவமுடியும். அதற்கு முன் மார்க்க விஷயத்தில், அஹ்லுல் பைத் எனும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரைய ும் பின்பற்றுதல் வேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருந்தால் அவற்றை உறுதிப்படுத்துங ்கள்.
Quote | Report to administrator
சஃபி
0 #14 சஃபி 2010-12-23 15:46
அன்பான சகோதரர் அபூஹுதைஃபா அவர்களே,

//இன்னும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வின் தூதரால் சுவனத்தைக்கொண்ட ு நற்செய்தி சொல்லப்பட்டவர் யஸீத் பின் முஆவியா அவர்கள்//

"யஸீதுக்கு சுவனம்" எனக்கூறும் ஹதீஸ் ஆதாரம் தரவியலுமா?

நன்றி!
Quote | Report to administrator
yassar Arafat
0 #15 yassar Arafat 2016-10-10 13:44
இஸ்லாமிய மாதமான ஒன்பது மற்றும் பத்தாம் நாள் இன்றைய ஆங்கில நாளில் எப்பொழுது என்ற விபரம் இருந்தால் சற்று நன்றாக இருக்கும். நோன்பு வைப்பவர்களுக்கு வசதியாகவும் இருக்கும்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்