முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24

தவறான கருத்துகள்:

  • எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
  • இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காக நிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.
  • சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.
  • தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களைத் தொழுகையினூடே சேர்ப்பது. ஒவ்வொரு, இரண்டு ரக்அத்களுக்கு இடையே குறிப்பிட்ட சில திக்ருக்களைக் கூறுவது. தமிழகத்தின் சில ஊர்களில், இவ்வாறு சில திக்ருகளைக் குறிப்பிட்ட சிலர் பெருங்குரலெடுத்து ஓதுவதும் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும் நடக்கிறது.

ரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த ட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவதுதான் சுன்னத் (நபிவழி) என்று கூறுவோம். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை.

7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துவோம்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுவோம். உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்ய வேண்டாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

< பிறை 1 | பிறை 25 

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...

Comments   

ummu hudahaifa
0 #1 ummu hudahaifa 2009-09-14 17:27
"இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப் குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அற ிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:ப ுகாரி,முஸ்லிம்)
இந்த நபிமொழியிலிருந் து இரவு நேரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் இரண்டு இரண்டாக தொழுது கொண்டே போகலாம் ரக் அத் எண்ணிக்கையை வறையறுக்க முடியாது என்று தெரிய வருகிறது.ஆகவே இதை தவறான கருத்தாக எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்?
Quote | Report to administrator
shahid
+1 #2 shahid 2009-09-15 10:55
அஸ்ஸலாமு அலைக்கும்,

உம்மு ஹுதைஃபா அவர்கள் சரியான நெத்தியடி கேள்வியைக் கேட்டுள்ளார்கள் . "தவறான கருத்துக்கள்" எனும் இவர்களது போதனையில் உள்ள தவறான கருத்தைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

இந்த 8 ரக்'ஆத் அல்லது 20 ரக்'ஆத் என பூசலுக்கு உள்ளாகும் இரவுத் தொழுகையாக இருந்தாலும் சரி, தொழுகையில் செய்முறைகள் விஷயமாக இருந்தாலும் சரி, "மத்ஹபுகளை பின்பற்ற வேண்டாம்" என்று சொல்பவர்களில் ஒரு ஒற்றுமையான செயல்பாடுகள் இருக்கும். அது எப்படி ? நபி அவர்கள் பல மாதிரி தொழுதுள்ளார்கள் என சஹீஹ் ஹதீஸ்கள் உள்ளன. மத்ஹபுகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக அல்லவா தொழவேண்டும் ? அப்போது தானே அவர்களை மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள ் எனக் கூறமுடியும் ? ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே விதத்தில் தொழுது, தனி மத் ஹபினைத்தானே உருவாக்கியுள்ளா ர்கள் ?

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானா ல், தொழுகை அமர்வில் விரலசைப்பவர்களி ல் எல்லோரும் எப்படி எட்டு ரக்'ஆத்துக்களில ் எழுந்து சென்றுவிடுகிறார ்கள் ? அப்போ அது மத்ஹபுதானே ?
Quote | Report to administrator
மு முஹம்மத்
0 #3 மு முஹம்மத் 2009-09-24 20:48
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே

// "இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப் குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அற ிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:ப ுகாரி,முஸ்லிம்) //

இந்த நபி மொழி மூலம் இரவு தொழுகைகள் எத்தனை ரக் அத்துகள் வேண்டுமானாலும் தொழலாம் என்பதை விளங்க முடிகிறது ஆகையால் 20 ரக் அத்துக்கள்??? தொழலாம் என்று சிலரும்...

எத்தனை ரக் அத்துகள் வேண்டுமென்றாலு தொழலாம் என்று சிலரும் ....

சுன்னத்து 8 அல்லது , தராவிஹ் 20 ரக் அத்துகள் இது போக மீதி எத்தனை வேண்டுமென்றாலும ் நபிலாக தொழலாம் தவறில்லை என்று சிலரும் கருத்து கொண்டுள்ளனர்....

இவர்கள் அனைவரும்

ரமலானிலும் ரமலானல்லாத மாதங்களிலும் இரவில்
நபி(ஸல்) அவர்கள் 11 ரக் அத்துக்களுக்கு மேல் (அதிகமாக ) தொழுததில்லை எனும் ஆயிஷா ரலி அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸையும்,

அதிகபட்சமாக அவர்கள் 13 ரக் அத்துக்கள் வரை தொழுதுள்ளார்கள் எனும் இன்னிமொரு ஆதாரபூர்வமான ஹதீஸையும்...

மறந்து விடுகின்றனர் அல்லது இதை பற்றி வேறு தவறான நிலையில் உள்ளனர் என்று தோன்றுகிறது.

மேலும் நபி ஸல் அவர்கள் இரவு தொழுகையை பின்னிரவிலும் தொழுதுள்ளனர் எனும் ஹதீஸ்கள் ஒரு ரக் அத்தின் நீளம் சில நேரம் 'ஸுரே பக்ரா' 'ஆல இம்ரான்' போன்ற பெரிய சூராக்கள் ஓதி கால்கள் வீங்கும் அளவுக்கு தொழுதுள்ளனர் என்பதை கூறும் ஹதீஸ்களை ஆய்வு செய்து பார்க்கும் போது... நபி ஸல் அவர்கள் 13க்கு மேல் நபிலாகவோ கூட அதிகப்படுத்தவில ்லை என்று அறிய முடிகிறது.

இந்நிலையில் மேற்கண்ட ஹதீஸ் ( இரவில் பின்னேரத்தில் எழுந்து அல்லது பெரிய சூராக்கள் ஓதி) இரண்டிரண்டாக தொழுது கொண்டு இருக்கும் போது ( இந்த 11 அல்லது 13 எனும எண்ணிக்கையை முடிக்கும் முன்னர் ) வித்ரு மூன்று ரக் அத்துக்கள் தொழும் முன்னர் சுபுஹ் நேரம் வந்து விடுமென்று பயந்தால் ஒரு ரக் அத் வித்ரு தொழுது கொள்ளுங்கள் என்ற கருத்துப்படி விளங்குவதே சரியாகவும் நபிவழிக்கு நெருக்கமானதாகவு ம் உள்ளது..என்பதை கவனிக்கவும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
ராஜா முஹம்மத்
0 #4 ராஜா முஹம்மத் 2009-09-25 22:55
மேற்சொல்லப்பட்ட ஹதீஸை அடிப்படையாக வைத்து தான் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள்"இரவுத்த ொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்யக்கூடாது எவ்வளவு வேண்டுமானாலும் தொழுதுகொள்ளலாம் "என்று ஃபத்வா கொடுத்துள்ளார்க ள்.உண்மையிலேயே பின் பாஸ் அவர்கள் உலகம் போற்றும் மிகச்சிறந்த ஆலிம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.அல்லாஹ ்வின் நல்லடியாராக திகழ்ந்தவர்.எல் லோராலும் அங்கீகரிக்கப்பட ்ட ஒரு முஃப்தி.ஆகவே அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்க முடிய்யாது என்பது என் கருத்து.அல்லாஹு அஃலம்.
Quote | Report to administrator
மு முஹம்மத
0 #5 மு முஹம்மத 2009-09-26 23:54
அஸ்ஸலாமு அலைக்கும்

எந்த ஒரு மார்க்க காரியமும் ஒரே ஒரு ஹதீஸை அல்லது ஒரு சில ஹதீஸ்களை மட்டும் அடிப்படையாக வைத்து அதற்கு மாற்றமான அல்லது விளக்கமான மற்ற ஹதீஸ்களை ( அவை ஆதாரபூர்வமானவை எனில்) மறுத்து இயற்றலாகாது.

அனைத்து ஆதாரபூர்வமான நபி மொழிகளும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைத்து அவற்றிற்கு முரணற்ற விதத்திலேயே எந்த ஒரு அமலும் செயல் படுத்தப் பட வேண்டும்.

இது எவ்வளவு பெரிய மார்க்க அறிஞராக இருப்பினும் அல்லது சாதாரண பாமர முஸ்லிமாக இருப்பினும் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய விதிமுறையாகும்.

நபி ஸல் அவர்கள் ரமலான் மற்றும் ரமலான் அல்லாத இரவுகளில் 11 ரக்கத்துக்கள் அல்லது 13 ரக்அத்துக்களுக் கு மேல் தொழவில்லை எனும் நபி ஸல் அவர்கள் மனைவிகளாகிய அன்னை ஆயிஷா(ரலி) போன்றோர் அறிவிக்கும் ஹதீஸுக்கு மாற்றமாக யார் கூறினாலும் அல்ல்து யார் செயல் படுத்தினாலும் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட உத்திரவாதம் இல்லை என்பதுடன் நிராகரிக்கப்படு ம் என்பதே ஹதிஸ்களின் மூலம் உள்ள எச்சரிக்கையாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
Quote | Report to administrator
ummuhudhaifa
0 #6 ummuhudhaifa 2009-09-28 00:53
//அனைத்து ஆதாரபூர்வமான நபி மொழிகளும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைத்து அவற்றிற்கு முரணற்ற விதத்திலேயே எந்த ஒரு அமலும் செயல் படுத்தப் பட வேண்டும்.//

இதுவும் ஒரு ஆதாரப்பூர்வமான நபி மொழிதான்.இதையும ் சேர்த்துத்தான் நீங்கள் சொன்னமாதிரி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.இது பலகீனமானது இல்லையே?//நபி (ஸல்)அவர்கள் ரமலான் மற்றும் ரமலான் அல்லாத இரவுகளில் 11 ரக்கத்துக்கள் அல்லது 13 ரக்அத்துக்களுக் கு மேல் தொழவில்லை//
இதுவும் ஒரே நபி மொழிதான் திரும்ப திரும்ப ஒரே அறிவிப்பாளர் வழியாகத்தான் பல இடங்களில் வருகிறது.வேறு அறிவிப்பாளர் வழியாக வருவதாக தெரியவில்லையே?ந பி(ஸல்)அவர்களோட ு தொடர்பு படுத்தி பேசும் வேறு ஏதாவது நபிமொழி உள்ளதா?
Quote | Report to administrator
மு முஹம்மத
0 #7 மு முஹம்மத 2009-09-28 11:09
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரி உம்மு ஹுதைஃபா அவர்களே

// "இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப் குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அற ிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:ப ுகாரி,முஸ்லிம்) //

// இதுவும் ஒரு ஆதாரப்பூர்வமான நபி மொழிதான்.இதையும ் சேர்த்துத்தான் நீங்கள் சொன்னமாதிரி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.இது பலகீனமானது இல்லையே? //

தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் இரவு தொழுகை இரண்டு இரண்டு என்றும் அதை முடிக்கும் முன்னர் சுபுஹ் நேரம் வந்தால் ஒரு ரக் அத் வித்ருடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. ( எண்ணிக்கை குறிப்பிடப்படவி ல்லை )

// வேறு அறிவிப்பாளர் வழியாக வருவதாக தெரியவில்லையே?ந பி(ஸல்)அவர்களோட ு தொடர்பு படுத்தி பேசும் வேறு ஏதாவது நபிமொழி உள்ளதா? //

பின் வரும் நபி மொழிகளையும் பார்க்கவும்....

// நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ரு தொழுவார்கள் (சுருக்கித்தரப் பட்டுள்ளது)

என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.//

// பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது.

முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்

என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது//

// உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத் தான் சான்று உள்ளது. (முஅத்தா) //


......ஆக இரவு தொழுகையின் எண்ணிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்ட ுள்ள ஹதீஸ்கள் ஆதார பூர்வமாக பல நூல்களில் இருக்கும் போது அதையும் இணைத்தே தாங்கள் காட்டியுள்ள ஹதீஸை விளங்க வேண்டும்.

இல்லையெனில் நபி வழியில் இரண்டிரண்டாக 13க்கும் அதிகமாக தொழுததற்கு ஆதாரம் வேண்டும், அதை விடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று முடிவெடுப்பது சரியான முடிவாக இருக்காது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
mohamed
0 #8 mohamed 2010-02-02 10:30
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் ஏன் நமக்குள் சண்டையிட்டு்க் கொள்ள வேண்டும். யூதர்களும், கிறித்தவர்களும் முஸ்லிம்களுக்கு தொல்லையளிக்க காத்திருக்கின்ற னர். தயவுசெய்து அவர்கள் வேலையை செய்யாதீர்கள். கருத்து வேறுபாடு 1400 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருந்தத ு. தயவுசெய்து இத்தகைய விஷயங்களை பொதுவில் விவாதிக்காதீர்க ள். தேவையெனில் தங்களுடைய தனிப்பட்ட ஈமெயிலில் பேசிக்கொள்ளுங்க ள். இத்தகைய விவாதங்கள் ஒரு முடிவுக்கு வராது. மேலும் இவை நம்முடைய பலவீனங்களை மற்றவருக்கு வெளிப்படுத்தும் . நாம் பலத்தை ஒற்றுமையின் மூலம் காண்பிக்க வேண்டும்.

அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னீப்பானாக. ஆமீன்
Quote | Report to administrator
Muhammad Nafiz
0 #9 Muhammad Nafiz 2011-08-03 02:01
சரியாக சொன்னீர்கள் முஹம்மது .........முஸ்லி ம்களாகிய நம்மிடம் ஒற்றுமை இல்லை
Quote | Report to administrator
abdul saleem
0 #10 abdul saleem 2011-09-11 00:02
அதிகமாக தொழுவதால் நன்மை தானே கிடைக்கும் .... இதற்காக ஏன் இத்தனை பெரிய விவாதங்கள் ...
Quote | Report to administrator
ரியாஸ்
0 #11 ரியாஸ் 2011-09-12 06:45
அஸ்ஸலாமு அலைகும் வரஹ் சகோதரர் அப்துல் சலீம் அவர்களே அதிகமாக தொழுதால் நன்மை தானே என்று மிகவும் சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்க கூடியது.இது போன்ற கேள்விகளின் மூலமாக நம் இஸ்லாமிய சமூகத்தில் இஸ்லாமியர்கள் கூட மார்க்க விஷயங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் உள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.அதிகம ாக செய்தால் நன்மை தானே என்றால் லுஹருடைய தொழுகையை ஐந்து ரக்அத்தாக தொழவேண்டியது தானே மார்க்கம் என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நமக்குள் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதிகமான தொழுதால் நன்மை தானே கூற ஆரம்பித்தால் நபி ஸல் அவர்களின் வழி முறையை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும். தொழுகையில் ரஃப் உல் யதைன் செய்வது சுன்னத்தாக உள்ளது என்பதற்காக நபி ஸல் சொல்லாத இடங்களில் நன்மை தான் என்று செய்தால் சரியாகுமா? இன்றைக்கு பித்அத் செய்பவர்கள் கூட நன்மை தானே என்று கூறி தான் மார்க்கத்தில் இல்லாத மௌலிது , 3ம் நாள் 7ம் நாள் என்று செய்து வருகிறார்கள். அதிகமாக செய்தால் நன்மை தானே என்று செய்தால் நபி ஸல் அவர்களுக்கு இல்லாத தக்வா நமக்கு வந்துவிட்டதா? நபி ஸல் அவர்களுக்கு அதிகமாக நற்செயல்களை செய்ய வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் போய்விட்டாதா?(ந வூதுபில்லாஹ்) முக்கிய குறிப்பு: சத்தியமார்க்க .காம் நிர்வாகிகளுக்கு பாமர மக்கள் இது போன்ற வாதங்களை எழுப்பியிருந்தா ல் பரவாயில்லை.இந்த தளத்தை படிப்பவர்கள் இது போன்ற அறியாமையில் உள்ளார்கள் எனவே இது சம்பந்தமாக தனி கட்டுரை வெளியிடப் படவேண்டும். இது போன்ற வாதங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு எவ்வளவு முரணானது என்பதை தெளிவுப் படுத்த வேண்டும்.இது போன்ற வாதங்களை சாதாரண கருதினால் இஸ்லாமே இல்லாமலாகிவிடும ். இதனை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Quote | Report to administrator
ரியாஸ்
0 #12 ரியாஸ் 2011-09-12 06:46
அஸ்ஸலாமு அலைகும் வரஹ் சகோதரர் அப்துல் சலீம் அவர்களே அதிகமாக தொழுதால் நன்மை தானே என்று மிகவும் சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்க கூடியது.இது போன்ற கேள்விகளின் மூலமாக நம் இஸ்லாமிய சமூகத்தில் இஸ்லாமியர்கள் கூட மார்க்க விஷயங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் உள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.அதிகம ாக செய்தால் நன்மை தானே என்றால் லுஹருடைய தொழுகையை ஐந்து ரக்அத்தாக தொழவேண்டியது தானே மார்க்கம் என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நமக்குள் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதிகமான தொழுதால் நன்மை தானே கூற ஆரம்பித்தால் நபி ஸல் அவர்களின் வழி முறையை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும். தொழுகையில் ரஃப் உல் யதைன் செய்வது சுன்னத்தாக உள்ளது என்பதற்காக நபி ஸல் சொல்லாத இடங்களில் நன்மை தான் என்று செய்தால் சரியாகுமா? இன்றைக்கு பித்அத் செய்பவர்கள் கூட நன்மை தானே என்று கூறி தான் மார்க்கத்தில் இல்லாத மௌலிது , 3ம் நாள் 7ம் நாள் என்று செய்து வருகிறார்கள். அதிகமாக செய்தால் நன்மை தானே என்று செய்தால் நபி ஸல் அவர்களுக்கு இல்லாத தக்வா நமக்கு வந்துவிட்டதா? நபி ஸல் அவர்களுக்கு அதிகமாக நற்செயல்களை செய்ய வேண்டும் என்று ஆர்வம் இல்லாமல் போய்விட்டாதா?(ந வூதுபில்லாஹ்) முக்கிய குறிப்பு: சத்தியமார்க்க .காம் நிர்வாகிகளுக்கு பாமர மக்கள் இது போன்ற வாதங்களை எழுப்பியிருந்தா ல் பரவாயில்லை.இந்த தளத்தை படிப்பவர்கள் இது போன்ற அறியாமையில் உள்ளார்கள் எனவே இது சம்பந்தமாக தனி கட்டுரை வெளியிடப் படவேண்டும். இது போன்ற வாதங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு எவ்வளவு முரணானது என்பதை தெளிவுப் படுத்த வேண்டும்.இது போன்ற வாதங்களை சாதாரண கருதினால் இஸ்லாமே இல்லாமலாகிவிடும ். இதனை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Quote | Report to administrator
மு முஹம்மத்
0 #13 மு முஹம்மத் 2011-09-13 00:12
அன்பு சகோதரர் அப்துல் ஸலீம்

//அதிகமாக தொழுவதால் நன்மை தானே கிடைக்கும்//

அதிகம் தொழுவதால் நன்மை கிடைக்கும் என்பது சரியான கருத்து எனில்...

1) அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ அவ்வாரு கூறியிருக்க வேண்டும். அவ்வாரு கூறியதாக ஆதாரம் இல்லை, மாறாக நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் ஓதி ஒரு ஒரு ரக்அத்துக்களை தொழுது வந்துள்ளார்கள், சில நேரம் ஒரு ரக்அத்தில் "ஸூரா பக்ரா" "ஆல் இம்ரான்" போன்ற பெரிய ஸூராக்கள் ஓதி தொழுதுள்ளார்கள் என்பதை பார்க்கும் போது அதிக எண்ணிக்கைக்கு அதிக நன்மை என்பதற்கு சான்றில்லை என்று உணரலாம்.

2) மேலும் நபி(ஸல்) அவர்கள் ரமளான் மற்றும் ரமளான் அல்லாத நாட்களிலும் குறிப்பிட்ட 11 அல்லது 13 ரக்அத் எனும் எண்ணிக்கைக்கு அதிகமாக தொழுத ஆதாரம் இல்லை எனும் நிலையில் அதிக படுத்துவது நன்மையாகாது நபி வழிக்கு மாற்றமாக செய்த, தீமையாகும் நிலையே உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்..

3) க்டமையான ஐவேளை தொழுகையின் எண்ணிக்கைகளை பஜ்ரு இரண்டு மக்ரிப் மூன்று என்பதை அதிகபடுத்தி ஐவேளையும் நான்கு ரக் அத்துகள் என்று தொழுவது நன்மையாகுமா நபி வழிக்கு மாற்றமாக செயல் பட்டால் தீமையாகுமா?

4) தொழுகையில் ஒரு ரக் அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் என்பதை அதிகமாக நான்கு அல்லது ஐந்து என்று செய்தால், அதிகம் என்பதால் நன்மையாகுமா?

5)அல்லது தொழுகையின் இறுதியில் நாம் வலது புறமும் இடது புறமும் ஒரு முறை கூறும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்பதை அதிகமாக மேலும் இரு,முறை சேர்த்து, 4 அல்லது 5 முறை கூறினால் அது நனமையாகும் என்றும் கூறமாட்டோம்.

ஆக நபி வழிக்கு மாற்றமாக அதிகபடுத்தினாலு ம் அது நன்மையானதாகாது என்பது உண்மை.

// .... இதற்காக ஏன் இத்தனை பெரிய விவாதங்கள் ... //

இஸ்லாம் மார்க்கம் என்பது ஆதாரபூர்வமான குர் ஆன் மற்றும் நபி வழியில் செயல்படுவது என்பதை உணர்த்திட சில நேரங்கள் விவாதிக்க அனுமதி உள்ளது பார்க்க ( 4 : 59, 16 :125 )

சந்தேகமானவ்ற்றை விட்டு விலகி நபிவழியில் உள்ள் ஆதாரபூர்வமானவற் றை செயல் படுத்தி மறுமையில் வெற்றி பெற அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக
Quote | Report to administrator
M ABDULLAH
0 #14 M ABDULLAH 2013-07-10 01:07
ALHAMDULILLAH GOOD DISCUSSION RAMADHAN MUBARAK TO ALL
Quote | Report to administrator
முபாரக்
0 #15 முபாரக் 2016-06-29 14:28
நான் வளைகுடாவில் வசிக்கிறேன். இங்கேயுள்ள 99% பள்ளிவாசல்களில் , இஷா முடிந்தவுடன் 8 ரக் அத் தொழுகை (தராவிஹ்) நடைபெறும்.

பின்பு கியாமுல் லைல் இரவு 12 மணி வாக்கில் நடைபெறும். அது ஒரு 8 ரக்காத்.

ஆக, ஒவ்வொருவரும் 8 + 8 + 3 = 19 ரக்காத் தொழுகின்றனர்.

தவ்ஹீது மத்ஹபு சகோதரர்களும் இவ்வாறு தான் தொழுகின்றனர்.

எனில் 20 ரக் அத் தொழுபவர்களை ஏளனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது?
Quote | Report to administrator
S.Khalifullah
0 #16 S.Khalifullah 2017-08-10 23:36
அஸ்ஸலாமு அலைக்கும்.............
தராவீஹ் 8 அல்லது 20 என்பது மாறுபட்ட கருத்துதான்; முரண்பாடான கருத்து அல்ல. கருத்து வேறுபாடுகளைக் கருத்து முரண்பாடு என்று தவறாக எண்ணியதால்தான் இத்தனை வீண் விவாதங்கள். இக்கட்டுரையில் கூறப்பட்ட முதல் பொருளைப் பற்றி இத்தனை வாதங்களைக் கூறியவர்கள் மற்ற மூன்று சர்ச்சைக்குரிய பொருள்களைப் பற்றி ஏன் அதிகமாகக் கூறவில்லை?
அல்லாஹ்தான் அனைத்தும் அறிந்தவன்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்