முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது. வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள் தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லவே இல்லை.

வித்ரு ஒரு ரக்அத் தொழும்போது எட்டு ரக்அத்துகளைப் பத்து ரக்அத்களாகவும் நபி(ஸல்) தொழுதிருக்கிறார்கள். நபி(ஸல்) இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ருடைய சுன்னத் இரு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்களாகும்

என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) வித்ருத் தொழுகையை ஒன்பது ரக்அத்கள் தொழுதால் அத்துடன் போதுமாக்கிக் கொள்வார்கள். தனியாக எட்டு ரக்அத்கள் தொழுவதில்லை. நபி(ஸல்) ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அப்போது எட்டு ரக்அத்கள் தவிர அதற்கு முந்தைய ரக்அத்தில் உட்கார மாட்டார்கள். அதன்பின் ஒன்பதாம் ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதினொன்று ரக்அத்துக்களாகும். நபி(ஸல்) முதுமையை எட்டியபோது ஏழு ரக்அத்துகள் தொழுதுவிட்டு, பிறகு உட்கார்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆக மொத்தம் ஒன்பது ரக்அத்துகள்

என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வேறொரு விதமாகவும் அவர்கள் இதே எண்ணிக்கையில் தொழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) எட்டு ரக்அத்துகள் தொழுவார்கள். பின்னர் ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். முதுமை அடைந்தபோது ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்

என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

மிக அதிகமாக அவர்கள் பன்னிரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறார்கள். அதன் பிறகு வித்ருத் தொழுதிருக்கிறார்கள்.

நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ருத் தொழுவார்கள் (சுருக்கித்தரப்பட்டுள்ளது)

என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது. மற்றோர் அறிவிப்பில் மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள் (ஃபஜ்ர் சுன்னத் நீங்கலாக) தொழுததாக உள்ளது. இதன் மூலம் பனிரெண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழும்போது வித்ரு ஒரு ரக்அத் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது.

முதலில் இரண்டு ரக்அத்களை, சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள்

என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

வித்ரையும் சேர்த்து நபி(ஸல்) பதிமூன்று ரக்அத்களுக்குக் கூடுதலாகத் தொழுததில்லை. குறைந்த பட்சம் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்களுக்கும் குறைவாக இரவில் தொழுததில்லை. இந்த எண்ணிக்கையைவிடக் குறைப்பதும், இதைவிடக் கூட்டுவதும் நபி வழிக்கு மாற்றமானதாகும்.

20 ரக்அத்களும், வித்ரு மூன்று ரக்அத்களும் என்று வாதிடுவோர்களுக்கு நபி வழியில் ஒரு ஆதாரமும் இல்லாதபோது, உமர்(ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் 20+3 ரக் அத்கள் தொழுததாக, அல்லது தொழ வைத்ததாக - தொழும்படி ஏவியதாகக் கதை புனைந்துள்ளனர். உமர்(ரலி) அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கோ, தொழ வைத்தார்கள் என்பதற்கோ ஒரு ஆதாரமும் இல்லை.

உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) இப்படி உமர்(ரலி) அவர்கள் 11 ரக்அத்கள் தொழ வைக்கக் கட்டளையிட்ட செய்தி தெளிவாக இருக்கும் போது, நபி வழிக்கும் இதுவே பொருத்தமாக அமைந்திருக்கும் போது இதை ஏற்பதே அறிவுடைமையாகும்.

உமர்(ரலி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் யாவும் குறைபாடுடைய செய்திகளாகும். ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஏற்றுக் கொண்டால்கூட அவர்களின் தெளிவான கட்டளை 11 ரக்அத்கள் என்பதைப் பறை சாற்றும் போது அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க இயலும்? உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட கட்டளை இல்லாவிட்டால் வேண்டுமானால் அவர்களின் காலத்தில் நடந்ததை அவர்கள் நடத்தியதாக நம்ப இடமிருக்கும். அவர்களின் கட்டளை, அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மாற்றமாக இருக்கும்போது உமர்(ரலி) அவர்களுடன் இதை எப்படி சம்பந்தப் படுத்த முடியும்?

பிறை 1 | பிறை 24 >

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...

Comments   

M.Mohamed Abbas
-1 #51 M.Mohamed Abbas 2011-09-05 08:40
அஸ்ஸலாமு அலைக்கும்

இதற்கு கொடுத்த தலைப்பு, அதன் கீழ் எனது விளக்கம், மற்ற ஹதிஸ்களை பதிக்கும் போது அது பலகினமாக இருந்தால் அந்த ஹதிஸ் கீழ் குறிப்பிடுவேன், இந்த ஹதிஸ்யின் எனது விளக்கம் எவ்வாறு இருந்தது என முழுமையாக படிக்கவும்

நான் பதித்தவை,

3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்.

//நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது ?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள் " என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி 3569 முஸ்லிம் 1343 //

மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்.(17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக(76:26)

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி,முஸ்லிம் ,திர்மதி,அபுதாவ ுத்,இப்னுமஜா,நஸ யி,அஹ்மத், மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கித்தாப்புகளிலு ம் நபி(ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால ் அதை நான் அங்கீகரிக்கிறேன ். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)


அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினா ர்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை,

அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு

ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை , ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??. சிந்திப்பவர்களு க்கு விளக்கம் கிடைக்கும்.
Quote | Report to administrator
சஃபி
0 #52 சஃபி 2011-09-06 19:38
முஹம்மது அப்பாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

கேள்வியைப் புரிந்து கொள்வது பதிலில் பாதி.

ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலகினமானது என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள ். அந்த பலகீனமான ஹதீஸ்கள் யாவை? எப்படி பலவீனமாயின? மத்தனிலா இஸ்னாதிலா?

இந்த மூன்று கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். அதற்குப் பிறகு மற்றவற்றைப் பார்ப்போம். நான் கேட்காதவற்றுக்க ு விளக்கம் என்ற பெயரில் எதுவும் வேண்டாம்.
Quote | Report to administrator
abdul azeez
+1 #53 abdul azeez 2011-09-06 21:11
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கு ம் அன்பு மிக்க சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களே.

//மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல. // September 05, 2011 07:10

தராவிஹ் என்று நபி (ஸல்) அவர்களால் பெயர் குறிப்பிட்டு இஷா தொழுகைக்கு பிறகு தொழுது காட்டிய தொழுகை யாவை ? என்பதை நபியின் ஹதீத் மூலம் விளக்குங்களேன்!
Quote | Report to administrator
M.Mohamed Abbas
-1 #54 M.Mohamed Abbas 2011-09-07 08:55
பதில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள ்ளது, கட்டுரை முழுவதமாகப் மேலும் ஒரு முறை படித்து கொள்ளவும், விவாதம் என்று பெயரில் விதாண்டவதம் பண்ணுபவர்களிடம் அஸ்ஸலாமு அலைக்கும்,
Quote | Report to administrator
சஃபி
0 #55 சஃபி 2011-09-08 12:39
சகோ. முஹம்மது அப்பாஸ்,

இங்கு யாரும் விவாதம் செய்யவில்லையே! நீங்கள் எழுதியவற்றுக்கு விளக்கம் மட்டும்தான் கேட்கப்பட்டது.

அதற்குள் சலாம் சொல்லிப் போய்விட்டீர்களே!

சரி, வ அலைக்குமுஸ்ஸலாம ்.
Quote | Report to administrator
அப்துல் அஜீஸ்.
0 #56 அப்துல் அஜீஸ். 2011-09-08 16:50
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களே

//பதில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள ்ளது,//

என்று போட்டுள்ளீர்கள் அதில் தேடி பார்த்தால் கிடைக்கவில்லை நீங்கள் அந்த தொழுகைக்கு உள்ள இரண்டு வரி மட்டும் காப்பி பன்னுங்கள். காரணம் ரசூல் ( ஸல் ) அவர்கள் மூலம் நமக்கு அறிமுகம் செய்யப்பட தொழுகையாவது பருழ், சுன்னத், கஸ்ர், மற்றும் தஹஜ்ஜத் போன்ற பெயர்கள் மூலம் நாம் தொழுது வருகிறோம் அனைவரும் அறிந்தது தான். ஒரு வணக்கம் செய்கிறோம் என்றால் அதற்க்கு பெயர் இல்லாமல் இருக்காது இஸ்லாத்தில். நான் விதன்டாவாதம் செய்ய வரலை நீங்கள் ஒன்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறீர்கள் என்றால் அதற்க்கு தக்க ஆதாரம் சமர்பிக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்.
Quote | Report to administrator
முபாரக்
0 #57 முபாரக் 2016-06-29 14:52
கூட்டு துஆ கிடையாது; அது பித்அத் என்பதை புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், வளைகுடா நாடுகளில் அனைத்து பள்ளிவாசல்களிலு ம் ஜும்மா குத்பாவின் நிறைவில் கூட்டு துஆ ஓதப்பட்டு அனைவரும் சத்தமாக ஆமீன் சொல்கிறோம்.

அதே போல், ரமழானின் ஒவ்வொரு வித்ரு தொழுகையிலும் கண்ணீர் மல்க கூட்டு துஆ ஓதப்பட்டு கூட்டாக ஆமீன் சொல்லப்படுகிறது.

தவ்ஹீத் மத்ஹபு சகோதரர்களும் இதில் விதிவிலக்கல்ல.

கிட்டத்தட்ட 100% நடைமுறை இவ்வாறு உள்ள சூழலில் என்னை போன்ற பாமரர்கள் எப்படி தனித்து நிற்பது? எதை பின்பற்றூவது? எல்லாரும் ஆமீன் சொல்லும் போது சும்ம்மா இருப்பது குற்ற உணர்ர்ச்சியாக உள்ளாது.
Quote | Report to administrator
S.Khalifullah
0 #58 S.Khalifullah 2017-08-02 19:41
அஸ்ஸலாமு அலைக்கும்...... ......
உமர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து தானே இன்று வரை மக்காவிலும் மதினாவிலும் 20 ரக்அத்கள் தராவீஹ் தொழப்படுகின்றது . 8 ரக்அத்கள் சரி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் 20 ரக்அத்களும் தொழலாம் என்ற இன்னொரு கருத்தையும் ஏன் பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? சென்ற 30 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வாதம் (விதண்டாவாதம்?) என்றுதான் முடிவுக்கு வருமோ.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்