முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 21

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழ வைத்தார்கள். அதன்பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழ வைத்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா).

ஸஹர் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள், இஷா முதல் ஸஹர் வரை நபியவர்கள் ஒரேயொரு தொழுகையைத் தொழுதிருக்கிறார்கள் என்றால் அது தஹஜ்ஜுத் தொழுகைதான் என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ஏனெனில் நம்மைப் பொருத்தவரை சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகை என்பது நபிகள் நாயகம் அவர்கள் தவறாமல் (ரமளான் அல்லாத காலங்களிலும்) நிறைவேற்றி வந்த ஒரு தொழுகையாகும். இந்தத் தொழுகையை விடுத்து நபி(ஸல்) மற்றொரு சிறப்பான தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள் என எவரும் கூற முன் வரமாட்டார்கள்.  இதிலிருந்து ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

உமர்(ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமளானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும், வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர்(ரலி) அவர்கள் "இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு நான் ஏற்பாடு செய்வது நல்லதாக இருக்குமே" என்று எண்ணி அவ்வாறு செயல்படுத்தினர். உபை இபுனு கஅபு (ரலி) அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோரு இரவு பள்ளிக்கு வந்து மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றித் தொழுவதைக் கண்டார்கள். "இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறதே! இப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதைவிட உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி ).

உமர்(ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விஷேசத் தொழுகை எதுவும் கிடையாது என்பதை அறிவிக்கிறது. "இப்போது தொழுதுவிட்டு உறங்குவதைவிட, உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது சிறந்தது" என்ற அவர்களின் கூற்றிலிருந்து இத்தொழுகை இரவின் இறுதிப்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) தொழுது வந்த தஹஜ்ஜுத் தொழுகை என்பதனையும் விளங்கலாம். "இரவின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே தொழுகைதான். ஆரம்ப நேரம் ஒரு தொழுகை, இறுதி நேரம் ஒரு தொழுகை" என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அன்றாடம் இரவு தொழுதுவரும் தஹஜ்ஜுத் தொழுகைதான் ரமளானிலும் உள்ளது. ரமளானுக்கென்று தனித் தொழுகை எதுவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.

மேற்கண்ட ஹதீஸில் உமர்(ரலி) அவர்கள் உபை இபுனு கஅப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக மற்றொரு ஹதீஸில்,

உபை இபுனு கஅப் (ரலி) அவர்களையும் தமீமுத் தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக் அத்துகள் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: முஅத்தா).

உமர் (ரலி) அவர்கள் 11 ரக் அத்கள் தொழ வைக்குமாறு இமாமை நியமனம் செய்தது 20 ரக்அத் கொண்ட தராவீஹ் என்ற தனித்தொழுகை கிடையாது என்பதைத் தெளிவாக்குகிறது.

அப்படி என்றால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழவேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. "யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்நோக்கியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதில் ஆர்வமூட்டுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பதினோரு ரக் அத்துகளைக் கொண்டு சில வேளைகளில் இரவு முழுவதும் நின்று வணங்கியுள்ளதால் அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபி (ஸல்) 11 ரக் அத்துகளே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிறை 1 | பிறை 22 >

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...

Comments   

M.Mohamed Abbas
0 #1 M.Mohamed Abbas 2009-09-13 12:53
அஸ்ஸலாமு அலைக்கும் உம்மு ஸாலிஹா அவர்களுக்கு


20 ரக்கத்து சரியா அல்லது தவறா எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்..அ தைப்பற்றி அதன் ஹதிஸ் நிலை மற்றும் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் என்ன என்பதை பிறகு பார்ப்போம்.

20 ரக்கத்தின் நிலமையை பலகினமானது என்று குறள் கொடுக்கும் சிலர் 8+3 ரக்கத்தில் வரும் அறிவிப்பளார்களி ன் நிலைமையையும் கட்டாய தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக நபி(ஸல்) அவர்கள் தொழுததாக ஆதராத்தையும் முன் வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும

கீழ் கண்ட ஹதிஸை எடுத்து வைக்கும் சிலர்(என்னை எவ்வாறு தொழக்கண்டீர்கள ோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக சொல்லி 30 நாள் ஜமாத்தாக தொழுது வருக்கின்றார்ர் கள். நபி(ஸல்) அவர்கள் வழியை தூய்மையாக பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள், நபி(ஸல்) தொழுதது போல் தான் நாங்கள் தொழுகுவோம் என்று சொல்பவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமலானில் பள்ளியில் கூட்டாக 30 நாள் இரவு தொழுகை நடத்தி காட்டினார்கள் என்று ஸஹிஹ்வான ஹதிஸ் வேண்டாம் ஒரு பலகினமான ஹதிஸ் கூட இவர்களால் எடுத்து வைக்க முடியாது,


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

1)ஜாபிர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமலானில் 8ரக்கத்துகளும் வித்ரு 3 ரக அத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள ்.(அபுதாவுத், நஸயி)இது இந்த இரண்டும் நூல்களில் இடம் பெறும் இந்த ஹதிஸ் முன்கர்,சாத், மத்ருக் தரத்தில் அமைந்த ஹதிஸ் ஆகும் என இமாம் அபுதாவுத்(ரஹ்), இமாம் நஸயி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்தததை மறுக்கும் சகோதரர்கள் மறைத்து தாங்கள் முழுமையாக ஸஹிஹ் வான ஹதிஸ் பின்பற்றும் என்று அறியாத மக்களை மூடராக்கி கொண்டு இருக்கிறார்கள். மேலும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களி ன் நிலைமை.

இமாம் அபுதாவுத்(ரஹ்), இமாம் நஸயி(ரஹ்) இதில் வரும் அறிவிப்பாளர் ஈஸா பின் சாரியா யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதிஸ் ஏற்க தக்கதல்ல என விமர்சனம் செய்யப்பட்டுள்ள து.மேலும் இதில் வரும் மற்றொரு அறிவிப்பாளர் முகம்மது பின் ஹூமைத் அர் ரஜி ஒரு பொய்யர் என்றும் குறிப்பிட்டுள்ள ார்கள்.2)மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:உமர்(ரலி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரலி),தமிமு த்தாரி(ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்கத்து தொழவைக்கும் படி கட்டளையிட்டார்க ள்(மாலிக் மூஅத்தா)இது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக வரவில்லையே, உமர்(ரலி) அவர்கள் அறிவித்தாக வருகின்றது, நபி(ஸல்) அவர்களை பின்பற்றிற்களா? அல்லது உமர்(ரலி) அவர்களை பின்பற்றிற்களே?

மேற்கண்ட ஹதிஸ் அவர்கள் கூற்றுபடி உமர்(ரலி) பின்பற்றுவதை ஏற்று கொள்வதாக என்று வைத்து கொண்டாலும் 23 ரக்கத்து என்பதை கீழ்கண்ட தொடர் மூலம் அறியலாம்.ஸாயப் பின் யாஜித் அவர்களின் வழியாக இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகி ன்றது, இவர் அறிவிப்பு செய்யும் வரிசையில் 11, 13, 20 ரக்கத்துகள் இடம் பெறுவதால் மார்க்க அறிஞர்களிடத்தில ் கருத்து வேறுபாடு இருக்கின்றது. அவற்றின் தொடரை விரிவாக பார்த்தால் உன்மை நிலையை நாம் கண்டறியலாம்,ஸாயிப் பின் யாஜித் அவர்களிடமிருந்த ு 3 பேர் ஹதிஸை அறிவிக்கிறார்கள்

1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான்

2)யாஜித் பின் குஷைபா

3)முகம்மது பின் யூசுப்இதில் 1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான் மற்றும் 2)யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேரும் 20 ரக்கத்து என அதே ஹதிஸில் குறிப்பிடுக்கின ்றார்கள், மேலும் யாஜித் பின் குஷைபா அவர்களிடத்தில் இரண்டு மாணவர்களும் ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் 20 ரக்கத்து என அறிவிப்பு செய்கிறார்கள்.யாஜித் பின் குஷைபா

1)இப்னு அபிதைப்

2)முகம்மது பின் ஜாபர்ஆகிய இருவரும் 20 ரக்கத்து என ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் அறிவிப்பு செய்கிறார்கள்.இப்போது கருத்து வேறுபாடு முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் வருகிறதுமுகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் மூன்று மாணவர்கள் இடம் பெறுகின்றார்கள்

1)இப்னு இசாக்

2)தாவுத் பின் கைஸ்

3)இமாம் மாலிக்இதில் இப்னு இசாக் 13 ரக்கத்தும், இமாம் மாலிக் 11 ரக்கத்தும், தாவுத் பின் கைஸ் 21 ரக்கத்து அறிவிப்பு செய்கிறார்கள்.இதில் மூன்று பேர் அறிவிக்கும் ஹதிஸ் வெவ்வேறாக வருவதால் இது முள்தரப் வகையை சார்ந்தது, அதாவது அறிவிப்பாளர் விசய்த்திலோ அல்லது அறிவிக்கப்படும் செய்திகளிலோ குழப்பம் இருத்தல், இது போன்ற ஹதிஸ் ஏற்கத்தக்கதல்ல, எனவே இதுவும் பலவினமடைகிறது,மேலும் 1)ஹரித் பின் அப்துர் ரஹ்மான் 2)யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேர் வழியாக வரும் ஹதிஸில் எந்த வித குழப்பமும் இல்லை, அறிவிக்கும் நபர்கள் பற்றி யாரும் விமர்சனம் செய்யப்படவில்லை , இதன் தொடர் மிகவும் அழகானதாகும், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்தவையாகும், எனவே 20 ரக்கத்து என்பது பலமாக இங்கு நிருபிக்கப்பட்ட ுள்ளது.நபி(ஸல்) அவர்கள் 3 நாட்கள்(தராவிஹ் ) மட்டும் தொழுகை நடத்தினார்கள்:ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள், நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தா ன் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.

"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் (தராவிஹ்) மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)எந்த எந்த நாட்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நோன்பு இருந்தோம், அம்மாத்தத்தில் ஏழு நாட்கள் எஞ்சி இருக்கும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. அவ்விரவில்(24ம் இரவில்) மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். ஆறு நாட்கள் மீதம் இருக்கும் போது(25ம் இரவில்)எங்களுக் கு தொழுகை நடத்தவில்லை. ஐந்து நாட்கள் மீதம் இருக்கும் போது(26ம் இரவில்) பாதி இரவு கழிவும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், அப்போது நாங்கள் அல்லாவின் தூதரே! அவ்விரவில் மீதமுள்ள நேரத்தில் எங்களுக்கு உபரியான வணக்கத்தை நடத்தலாமே? என்றோம் அதற்கவர்கள் யார் இமாம் தொழுகையை முடிக்கும் வரை இமாமுடன் தொழுகிறாரோ அவர் பாதி இரவு வணங்கியதாக பதிவு செய்யப்படுகினறத ு. என்று கூறினார்கள் மீதமிருக்கும் போது(27ம் இரவில்) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயு ம் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள ்.இதை ஜுபைர் பின் நுபைர் அறிவிக்கிறார்கள ்(நஸயி,இப்னுமஜா ,திர்மதி,அஹ்மத் ,தாரிமி,அபுதாவு த்)எவ்வாறு என்னை தொழுகை கண்டீர்களோ அதுபோல தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எனவே மறுக்கும் சகோதரர் 23ம், 25ம், 27ம் இரவில் மட்டும் கூட்டாக தொழ வேண்டும், அப்படி இல்லை என்றால் 30 நாட்கள் பள்ளியில் ஜமாத்தாக தொழுகை நடத்தினார்கள் என ஆதரத்தை நிருபிக்க வேண்டும்.

என்னை எவ்வாறு தொழுகைகண்டீர்கள ோ அது போல் தொழுகுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள் , நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் 23,25,27ம் நாட்களில் மட்டுமே தொழுதார்கள், கவனிக்கவும் நபி(ஸல்) 1- 22 ம் நாள் பள்ளியில் ஜமாத்தாக தொழவில்லை, 24ம் நாள் தொழவில்லை, 26ம் நாள் தொழவிலை,28,29,3 0 ம் நாள் தொழவில்லை, நபி(ஸல்) அவர்களிம் மொழிக்கு ஏற்ப(என்னை எவ்வாறு தொழுகைகண்டீர்கள ோ அது போல் தொழுகுங்கள் ) முழுமையாக நபி(ஸல்) பின்பற்றுவதாக இருந்தால் மேற்சொன்ன நபி(ஸல்) வழியை தான் பின்பற்ற வேண்டும். மேலும்
மறுப்பவர்கள்
23ம்---->மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்
25ம்---->பாதி இரவு கழிவும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்,
27ம்---->வெற ்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள்
மேற்சொன்ன நபி(ஸல்) தொழுத முறையை தான் இவர்கள் பின்பற்ற வேண்டும், அது தான்(என்னை எவ்வாறு தொழுகைகண்டீர்கள ோ அது போல் தொழுகுங்கள்) என்பது தான் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற சரியான சுன்னதாகும், ஏன் அவ்வாறு செய்வதில்லை, அது போல் ஒரு ரமலானிலாவது ஹதிஸை முழுமையாக பின்பற்றுகிறோம் என்று சொல்லும் சகோதரர் ஏன் தொழுதுள்ளார்களா ? இந்த ஒருவிசயத்தில் மட்டும் சகபாக்கள்(ரலி) பின்பற்ற காரணம் என்ன? மேலு அந்த மூன்று நாட்களில் எத்தனை ரக்கத்து தொழுதார்கள் என்று இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களின் விளக்கத்தை படித்தால் தாங்களுக்கு 20 என்று புரியும்..

உமர்(ரலி) இந்த ஒரு விசயத்தில் எடுத்து கொள்வது ஏன்? இந்த ஒரு விசயத்தில் சகபாக்களை பின்பற்ற காரணம் என்ன? நபி(ஸல்) அவர்களின் மாற்றதற்கு சகபாக்கள் மாற்றமாக இருந்தால் சகபாக்களை பின்பற்ற மாட்டோம் என்று சொல்லும் அன்பு சகோதரர்கள் இப்போது உமர்(ரலி) அவர்களின் சுன்னத்தை பின்பற்ற காரணம் என்ன? நபி(ஸல்) நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொன்னால் 3 நாள், சகபாக்கள்(ரலி)( (உமர்(ரலி),உஸ்ம ான்(ரலி),அலி(ரல ி)) பின்பற்றுகிறோம் என்று சொன்னால் 30 நாட்கள், எது தங்கள் வழி என்பதை விளக்கவும், இன்சா அல்லா , உமர்(ரலி) 20 ரக்கத்துகள் பலகினமானது என்று சொன்னீர்கள், பலமானது என்று சரியான தொடரில் பதித்தால் ஏற்று கொள்ளதயாரா என உங்கள் பதில் கருத்துமுன் பதிவு செய்ய வேண்டும்.. சரியான தொடரில் இருபது என்று ஏற்று கொள்கிறேன் என்று உங்கள் சத்திய வார்த்தை பதிக்க வேண்டும், வாக்குறுதியை நிற வேற்ற வேண்டும், வாக்குறுதியை மீறுபவன் நயவஞ்சகன் என்ற நபிமொழியை மனதில் நிறுத்தி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்,
உமர்(ரலி) பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களின் சுன்னதாகும், ஆனால் உமர்(ரலி) அவர்கள் ஏற்பாடு செய்த தராவிஹ் 23 ரக்கத்து மட்டும் மறுப்பது ஏன்? 23 ரக்கத்து ஸஹிஹ் வான பல ஹதிஸ்கள் இருக்க அதை ஏற்க மறுப்பது ஏன்?
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (தராவிஹ்) சகபாக்கள் எப்படி தொழுதார்கள்:

ரமளானின் (தராவிஹ்) மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.( புகாரி)(ரமளானின் (தராவிஹ்) அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுத ு நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!" என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்(புகாரி )நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபி(ஸல்) மரணிக்கும் வரை மக்கள் தனிதனியாகவே தொழுது வந்தனர், எனவே மறுக்கும் சகோதரர்கள் தனிதனியே தொழ வேண்டும்,உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜமாத்தாக தராவிஹ் நடத்தபட்டது:நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச ் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர் . அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார் கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நல்லதாகிவிட்டது .எந்த தொழுகைவிட்டு நீங்கள் உறங்கின்றீர்களோ அந்த தொழுகை சிறந்த தொழுகையே! என்று உமர்(ரலி) கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ்(புகாரி,மாலிக் முஅத்தா)உமர்(ரலி) பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த பொன் வார்த்தைகள்:ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள ். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (அபூதாவுத்,அஹமத ்)உமர்(ரலி) அவர்களின் நாவில் அல்லா குடி இருக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(திர ்மதி)என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களையும், உமர்(ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்(மிஷ்காத், அஹ்மத்,திர்மதி,இப்னுமஜா).

எனக்கு பிறகு அல்லா ஒரு நபியை இந்த உலகிற்க்கு அனுப்ப நாடினால் அது உமராக(ரலி) அவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அல்லா என்னை இறுதி நபியாக தேர்ந்தெடுத்துவ ிட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(நபி மொழியின் சுருக்கம்)

இதுபோல் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போனாலும் அவர்கள் மார்க்கத்திற்கு செய்த அருட்கொடைகள்கள் சொல்ல வார்த்தைகளுகள் நம்மிடத்தில் இல்லை, அல்லா அவர்களை அந்தஸ்துகளையும் , அவர்களின் கபுருகளையும் ஒளிமயமாக்குவனாக ! ஆமின்.

3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்.

//நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது ?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள் " என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி 3569 முஸ்லிம் 1343 //

மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.

தராவிஹ்க்கும் தஹஜ்ஜத்க்கும் உள்ள வேறுபாடு:

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்.(17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக(76:26)

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி,முஸ்லிம் ,திர்மதி,அபுதாவ ுத்,இப்னுமஜா,நஸ யி,அஹ்மத், மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கித்தாப்புகளிலு ம் நபி(ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

கடமையான(பர்ளான) தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத்தொழுகையாக ும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள ்(திர்மதி,அபுதா வுத்,நஸயி,இப்னு குஸைமா,இப்னுமஜா )

பர்ளான தொழகைக்கு பிறகு மிகச்சிறந்தது இரவு தொழுகையை(தஹஜ்ஜத ்) நிறைவேற்றுவதாகு ம், ரமலான் நோன்பிற்கு பிறகு நோன்புகளில் மிகச்சிறந்தது முகர்ரம் மாதம் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹீமைத் பின் அப்திர்ரஹ்மான்( ரலி) அவர்கள் கூறினார்கள்(இப்னுமஜா)

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால ் அதை நான் அங்கீகரிக்கிறேன ். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்,பஜ்ர் நேரம் வரை இவ்வாறு கூறி கொண்டு இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி,திர்மதி,அபுதாவுத்,நஸயி,இப்னுமஜா)

அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினா ர்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை,

அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு

ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் நடந்த சிறப்பு தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை , ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??. ஒரு நிமிடம் மனதை ஒருமைபடுத்தி சிந்தியுங்கள் அன்பான சகோதரரே..இன்சா அல்லா, 23 ரக்கத்து ஸஹிஹ்வான ஹதிஸ் சரியான தொடர் விரைவில்.

இன்சா அல்லா, தொடரும்
Quote | Report to administrator
Mohamed Ashik
0 #2 Mohamed Ashik 2009-09-14 15:03
அஸ்ஸலாமு அலைக்கும்.
M.Mohamed Abbas அவர்களுக்கு ஒரு சவால்.

அல்லாஹ் செல்வதாக குரானிலோ அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செல்வதாக (மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவ ும்) ஸஹிஹான ஹதீஸிலோ, "தராவிஹ்" என்ற வார்த்தை எங்குள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. தாங்கள் தேடி எடுத்து எங்களுக்கு காட்டினால் நாங்களும் "தராவிஹ்" என்ற அந்த "புது தொழுகையை" நிங்கள் சொன்ன நாள் முதல் இன்ஷாஅல்லாஹ் தொழ ஆரம்பித்து விடுவோம்.

"அது" எத்தனை ரக்கத் என்றும் தெரியாதவர்களாய் உள்ளோம். அதனையும் அல்லாஹ் செல்வதாக குரானிலோ அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செல்வதாக (மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவ ும்) ஸஹிஹான ஹதீஸிலோ, சுட்டிக்காட்டி சொல்லிவிட்டால் நிங்கள் சொன்ன நாள் முதல் 20 ரக்கத் இன்ஷாஅல்லாஹ் தொழ ஆரம்பித்து விடுவோம்.

////மேலு அந்த மூன்று நாட்களில் எத்தனை ரக்கத்து தொழுதார்கள் என்று இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களின் விளக்கத்தை படித்தால் தாங்களுக்கு 20 என்று புரியும்.. ////------இவர்க ளின் விளக்கங்கள் குரான் ஆயத் அல்லது ஹதீஸ் ஆகுமா?

/////....எனினும ், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.

"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் (தராவிஹ்) மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)//// ----- தமிழ் படிக்கதெறிந்த சிறு பிள்ளைகளுக்கும் புரியும் விஷயம்:

நபி(ஸல்) அவர்கள் ஜமாத்தாக தொழ ஆசைப்பட்டார்கள் . அது பர்ளாகி விடுமோ என்று பயந்துதான் ஜாமாத்தாய் தொழுவதை தொடரவில்லை. அவர்களின் காலத்துக்கு பிறகு இஸ்லாம் முழுமை அடைந்து விட்டதாகையால் தைரியமாக அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகிறோம். மிகச்சரியாகவா என்றால் இல்லை. நள்ளிரவில் பள்ளிக்கு செல்வதற்கு பதில் இஷாவுக்குப்பின் சிக்கிரமாய் ஆரமித்துவிடுகிற ோம். மிக நீண்ட தொழுகையாக இல்லாமல் சுருக்கமாய் ஒரு மணி நேரத்தில் (8 / 20 ரக்கத்..!)முடித ்து விடுகிறோம்.

கலிபா உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு இமாம் ஜமாஅத் ஏற்படுத்திவிட்ட ு, அவர்கள் தொழாமல் வீட்டுக்கு போய் தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்து தொழுவதையே சிறப்பான நபிவழி என்றும் அதையே தான் பின்பர்றப்போவதா கவும் கூறிய புகாரி ஹதீஸின் கடைசி பகுதியை ஏன் 'சென்சார்' செய்து விட்டிர்கள், Mr.M.Mohamed Abbas ?

புகாரி ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, புகாரி (ரஹ்) அவர்களால் போடப்பட்ட"தராவி ஹ்" என்ற தலைப்பின் கீழ், தஹஜ்ஜத் தொழுகைக்கான அனைத்து ஹதீசும், "தஹஜ்ஜத்" என்ற தலைப்பிற்கும் அதே அனைத்து ஹதிசும் இடம்பெற்றிருப்ப து ஏன் என்று புரியவில்லையா?
Quote | Report to administrator
ummu hudahaifa
0 #3 ummu hudahaifa 2009-09-14 15:46
சகோதரர் முகம்மது அப்பாஸ் அவர்கள்,ஒரு நீண்ட உறையையே நிகழ்த்திவிட்டா ர்.மாஷா அல்லா.

ஆனால்"உமர்(ரழி)20 ரக அத் தொழவைக்க ஏற்பாடு செய்தார்கள்" என்ற விபரத்துக்கு ஆதாரத்தை தரவில்லை.அதை குறிப்பிட்டால் மேற்கொண்டு விவாதிக்க வசதியாக இருக்கும்.எது ஆதாரப்பூர்வமான நபிமொழி மூலம் நிரூபிக்கப்படுக ிறதோ அதை ஏற்றுக்கொள்வதுத ான் ஒரு முஃமினுடைய பன்பாக இருக்கவேண்டும். சகோதரர் அந்த நபி மொழியை குறிப்பிடும் படி கேடுக்கொள்கிறேன ்.
Quote | Report to administrator
abu muhai
+1 #4 abu muhai 2009-09-14 21:27
//நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது ?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள் " என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி 3569 முஸ்லிம் 1343 //

ரமளானில் மட்டுமில்லை ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு அதிகமாகத் தொழுததில்லை என்றேத் தெளிவுப்படுத்து கிறது. நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்துக்கென்று பிரத்தியேகமாக எந்தத் தொழுகையையும் தொழுததில்லை, எல்லா மாதங்களிலும் தொழுது வந்த வழக்கமான இரவுத் தொழுகையையே ரமளான் மாதம் இரவிலும் தொழுது வந்தார்கள். என்பதையே மேல்கண்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந் து விளங்க முடிகிறது!

//மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.//

மேல்கண்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ''தஹஜ்ஜுத்'' தொழுகையைத்தான் குறிப்பிடுகிறதெ னில் அதைத் தெளிவாக ஹதீஸ் வாசகங்களிலிருந் து எடுத்துத்தர முஹம்மது அப்பாஸ் என்பவரைக் கேட்டுக்கொள்வோம்.

மேலும் ரமளான் இரவு காலத்தில் ''தஹஜ்ஜுத்'' தொழுகையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ''தராவீஹ்'' என்ற பெயரில் ஒரு தொழுகையைத் தொழுதுள்ளார்கள ் என்பதற்கான ஆதாரங்களையும் முஹம்மது அப்பாஸ் என்பவர் இங்கு எடுத்து வைக்கக் கடமைப்பட்டுள்ளார்!

அன்புடன்,
அபூ முஹை
Quote | Report to administrator
abu muhai
0 #5 abu muhai 2009-09-14 22:16
//ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள ். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யாரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே , எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (அபூதாவுத்,அஹமத ்)//

மேல்கண்ட நபிமொழிக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு ள்ளது. சரியான வாசகம்:

''உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை தங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்து நேர்வழி சென்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக்கொள் ளுங்கள்''

இதுவே சரியான மொழிபெயர்ப்பு.

கலீஃபாக்களே ரஸுலல்லாஹ்வைப் பின்பற்றினால்தா ன் நேர்வழி பெறமுடியும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிய கலீஃபாக்களைப் பின்பற்றுவதென்ப து நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியதாகும ே தவிர கலீஃபாக்களைப் பின்பற்றியதாகாத ு. இஸ்லாம் என்பது திருக்குர்ஆன், நபிமொழிகள் இவ்விரண்டைத் தவிர வேறில்லை. இதில் மூன்றாவதாக எதையாவது சேர்ப்பவன், அல்லது சேர்க்க முயல்பவன். இஸ்லாம் மார்க்கம் முழுமையடையவில்ல ை எனக்கூறி திருமறை வசனங்களைப் பொய்யாக்க முயலுகிறான்.

//உமர்(ரலி) பின்பற்ற வேண்டும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த பொன் வார்த்தைகள்://

மேல்கண்ட நபிமொழியில் குறிப்பிடும் ''குலஃபாயே ராஷிதீன்கள்'' என்பது உமர் (ரலி) அவர்களை மட்டும் குறிக்குமா? அல்லது அன்றிலிருந்து மறுமை நாள் வரை ஆட்சிக்கு வரும் எல்லா குலாஃபாயே ராஷீதீன்களையும் குறிப்பிடுகின்ற தா? என்பதையும் முஹம்மது அப்பாஸ் என்பவர் விளக்கிச் சொல்ல வேண்டும்.

விளக்கிச் சொன்ன பிறகு குலாஃபாயே ராஷீதீன்களைப் பற்றி மேலும் சில கேள்விகளை வைப்போம். அதற்கு முஹம்மது அப்பாஸ் என்பவர் முரண்படாமல் மீண்டும் விளக்கம் சொல்ல வேண்டும்.

அன்புடன்,
அபூ முஹை
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #6 M.Mohamed Abbas 2009-09-15 15:14
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்துஹீ

//"அது" எத்தனை ரக்கத் என்றும் தெரியாதவர்களாய் உள்ளோம். அதனையும் அல்லாஹ் செல்வதாக குரானிலோ அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செல்வதாக (மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவ ும்) ஸஹிஹான ஹதீஸிலோ, சுட்டிக்காட்டி சொல்லிவிட்டால் நிங்கள் சொன்ன நாள் முதல் 20 ரக்கத் இன்ஷாஅல்லாஹ் தொழ ஆரம்பித்து விடுவோம். //

இன்சா அல்லா 20 ரக்கத்து பற்றி அதன் தரத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறேன், நேரம் கிடைக்கும் போது அதை முழுமையாக பதிவுச் செய்கிறேன், நான் இன்னும் இரண்டு தினங்களில் அலுவலக பணியின் காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் இன்சா அல்லா திருப்பி வந்தபிறகு தங்களுக்கு முழுமையாக விரிவாக பதிக்கிறேன்.அதற ்கு பிறகு தாங்கள் பொறுமை காக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

//////மேலு அந்த மூன்று நாட்களில் எத்தனை ரக்கத்து தொழுதார்கள் என்று இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அபுதாவுத்(ரஹ்) அவர்களின் விளக்கத்தை படித்தால் தாங்களுக்கு 20 என்று புரியும்.. ////------இவர்க ளின் விளக்கங்கள் குரான் ஆயத் அல்லது ஹதீஸ் ஆகுமா? ///

முன்பு தாங்கள் பதித்தது:

//ஸஹிஹான ஹதீஸிலோ, சுட்டிக்காட்டி சொல்லிவிட்டால் நிங்கள் சொன்ன நாள் முதல் 20 ரக்கத் இன்ஷாஅல்லாஹ் தொழ ஆரம்பித்து விடுவோம்//

ஹதிஸ்கலைகளை நன்கு ஆராய்ந்து ஸஹிஹ்வான ஹதிஸ் மற்றும் ளயிபான ஹதிஸ் என்று பிரித்து காட்டினது முன்சென்ற நல் இமாம்கள் தான் ஆனால் அதை மற்றும் ஏற்று கொள்கிறீர்கள், ஆனால் அதே இமாம்கள் ஆராய்ந்து கருத்துகளை கூறும்போது உதரி தள்ளுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை, ..

/////....எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.

"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் (தராவிஹ்) மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)//// ----- தமிழ் படிக்கதெறிந்த சிறு பிள்ளைகளுக்கும் புரியும் விஷயம்:

நபி(ஸல்) அவர்கள் ஜமாத்தாக தொழ ஆசைப்பட்டார்கள் . அது பர்ளாகி விடுமோ என்று பயந்துதான் ஜாமாத்தாய் தொழுவதை தொடரவில்லை. அவர்களின் காலத்துக்கு பிறகு இஸ்லாம் முழுமை அடைந்து விட்டதாகையால் தைரியமாக அவர்களின் ஆசையை நிறைவேற்றி வருகிறோம். மிகச்சரியாகவா என்றால் இல்லை. நள்ளிரவில் பள்ளிக்கு செல்வதற்கு பதில் இஷாவுக்குப்பின் சிக்கிரமாய் ஆரமித்துவிடுகிற ோம். மிக நீண்ட தொழுகையாக இல்லாமல் சுருக்கமாய் ஒரு மணி நேரத்தில் (8 / 20 ரக்கத்..!)முடித ்து விடுகிறோம். //

சகோதரரே நான் மறுப்பு தெரிவிக்க வில்லை.. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 3 நாட்கள் மட்டும் தான் ஜமாத்தாக தொழுதார்கள், அது தான் சுன்னத், 30 நாள் பள்ளியில் தொழுதார்கள் என ஆதாரத்தை பதிவு செய்த பிறகு உங்க்ள் கருத்தை பதிவு செய்யுங்கள்.. ரமலானில் ஜமத்தாக ஏற்பாடு செய்ததது உமர்(ரலி) அவர்கள் தான் என்று அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் ஆட்சி காலத்திலும் சரி, அபுபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் மக்கள் தனிதனியாக தொழுது கொண்டு இருந்தார்கள் என அறிவிப்பு செய்கிறார்கள், அதுவரை மக்கள் ஜமாத்தாக தொழுது வரவில்லை, உமர்(ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் தான் ஜமாத்தாக தொழுகை ஏற்படத்தப்பட்டத ு, மேலும் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ் இந்த புதிய ஏற்பாடு நன்றாகிவிட்டது என்று தான் கூறினார்கள் என்பதை சகோதரர் படித்து பார்க்கவும்.
3 நாள் தொழுதால் 30 நாள் தொழுகலாம் என்று சொல்விர்கள் என்றால் அது போல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை செய்த அமல்கள் ஏறலாம், அதை இன்று பலர் செய்யும் போது தவறு என்று வாதடுகின்றனர்கள ், அதை நான் எடுத்து வைக்கிறேன் மறுப்பவர்கள் அதை ஏற்க வேண்டும்,


//கலிபா உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு இமாம் ஜமாஅத் ஏற்படுத்திவிட்ட ு, அவர்கள் தொழாமல் வீட்டுக்கு போய் தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்து தொழுவதையே சிறப்பான நபிவழி என்றும் அதையே தான் பின்பர்றப்போவதா கவும் கூறிய புகாரி ஹதீஸின் கடைசி பகுதியை ஏன் 'சென்சார்' செய்து விட்டிர்கள்//

நான் எங்கும் நீக்க வில்லை முழு ஹதிஸையும் தான் பதிவு செய்துள்ளேன்..

தவறான அர்த்தம்:
//"இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதைவிட உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி ).//

சரியான அர்த்தம்:

அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நல்லதாகிவிட்டது .எந்த தொழுகைவிட்டு நீங்கள் உறங்கின்றீர்களோ அந்த தொழுகை சிறந்த தொழுகையே! என்று உமர்(ரலி) கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள ்(புகாரி,மாலிக் முஅத்தா)

(தராவிஹ்) தொழுகைவிட (தஹஜ்ஜத்) தொழுகை சிறந்தவையே என்றும் தான் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள், இந்த தொழுகை தொழுதுவிட்டு உறங்கி விடாதீர்கள், அந்த (தஹஜ்ஜத்) தொழுகை தொழுங்கள் என்று சொன்னார்கள்.

//புகாரி ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, புகாரி (ரஹ்) அவர்களால் போடப்பட்ட"தராவி ஹ்" என்ற தலைப்பின் கீழ், தஹஜ்ஜத் தொழுகைக்கான அனைத்து ஹதீசும், "தஹஜ்ஜத்" என்ற தலைப்பிற்கும் அதே அனைத்து ஹதிசும் இடம்பெற்றிருப்ப து ஏன் என்று புரியவில்லையா? //

//அல்லாஹ் செல்வதாக குரானிலோ அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செல்வதாக (மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவ ும்) ஸஹிஹான ஹதீஸிலோ, "தராவிஹ்" என்ற வார்த்தை எங்குள்ளது என்று எங்களுக்கு தெரியவில்லை. தாங்கள் தேடி எடுத்து எங்களுக்கு காட்டினால் நாங்களும் "தராவிஹ்" என்ற அந்த "புது தொழுகையை" நிங்கள் சொன்ன நாள் முதல் இன்ஷாஅல்லாஹ் தொழ ஆரம்பித்து விடுவோம். //

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தஹஜ்ஜத் என்று ஒரு தலைப்பும், தராவிஹ் என்று தலைப்பு என்று பிரித்து காட்டியுள்ளார்க ள் அதை இன்றைய இமாம்கள் மொழிபெயர்ப்பு அப்படித்தான் செய்துள்ளார்கள் ,

//கலீஃபாக்களே ரஸுலல்லாஹ்வைப் பின்பற்றினால்தா ன் நேர்வழி பெறமுடியும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிய கலீஃபாக்களைப் பின்பற்றுவதென்ப து நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியதாகும ே தவிர கலீஃபாக்களைப் பின்பற்றியதாகாத ு. இஸ்லாம் என்பது திருக்குர்ஆன், நபிமொழிகள் இவ்விரண்டைத் தவிர வேறில்லை. இதில் மூன்றாவதாக எதையாவது சேர்ப்பவன், அல்லது சேர்க்க முயல்பவன். இஸ்லாம் மார்க்கம் முழுமையடையவில்ல ை எனக்கூறி திருமறை வசனங்களைப் பொய்யாக்க முயலுகிறான். //

தங்களின் மொழிபெயர்ப்பை இப்பத்தான் முதன்முதலில் காண்கிறேன், நான் பதிவு செய்தத்து போல் தான் இஸ்லாம்கல்வி.கா ம், அந்நஜாத்.காம் ஹதிஸை தொகுக்கும் மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள ், அதனால் நான் பதிவு செய்த ஹதிஸ் தவறு ஒன்றுமில்லை,

மேலும் நான் ஒன்று ஹதிஸை பதித்திருந்தேன் அதை மறுபடியும் படித்து பார்க்கவும்:

என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களையும், உமர்(ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ்(மிஷ்காத், அஹ்மத்,திர்மதி, இப்னுமஜா).

//''குலஃபாயே ராஷிதீன்கள்'' //

1) அபுபக்கர் சித்திக்(ரலி)
2)உமர் பின் கத்தாப்(ரலி)
3)உஸ்மான்(ரலி)
4)அலி(ரலி)

மேல் உள்ள நான்கு பேர் மட்டும் ஆவார்கள்.

//மேல்கண்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ''தஹஜ்ஜுத்'' தொழுகையைத்தான் குறிப்பிடுகிறதெ னில் அதைத் தெளிவாக ஹதீஸ் வாசகங்களிலிருந் து எடுத்துத்தர முஹம்மது அப்பாஸ் என்பவரைக் கேட்டுக்கொள்வே ாம்.

மேலும் ரமளான் இரவு காலத்தில் ''தஹஜ்ஜுத்'' தொழுகையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ''தராவீஹ்'' என்ற பெயரில் ஒரு தொழுகையைத் தொழுதுள்ளார்கள ் என்பதற்கான ஆதாரங்களையும் முஹம்மது அப்பாஸ் என்பவர் இங்கு எடுத்து வைக்கக் கடமைப்பட்டுள்ளா ர்! //

இன்சா அல்லா... நான் அலுவலக பணியை முடித்துவிட்டு வந்த பிறகு தங்களுக்கு விளக்குகிறேன்.. . அலுவலக பணியின் சுமையின் காரணமாக கருத்துபரிமாற்ற செய்ய எனக்கு நேரமில்லை, எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் கருத்துகள் பதிவு செய்ய முடியும்.

அல்லா மட்டும் அனைத்து அறிந்தவன்.
Quote | Report to administrator
வருத்தமில்லா வாலிபர்
-1 #7 வருத்தமில்லா வாலிபர் 2012-12-10 01:20
மிஸ்டர் அப்பாஸ் @@@ //// இன்சா அல்லா... நான் அலுவலக பணியை முடித்துவிட்டு வந்த பிறகு தங்களுக்கு விளக்குகிறேன்.. . அலுவலக பணியின் சுமையின் காரணமாக கருத்துபரிமாற்ற செய்ய எனக்கு நேரமில்லை, எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் கருத்துகள் பதிவு செய்ய முடியும்/// என்று சொல்லிவிட்டு போய் மூணு வருஷம் ஆகுது...!!! இன்னுமா உங்கள் அலுவலக பணியின் சுமை முடியாமல் இருக்கு,
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #8 M.Mohamed Abbas 2012-12-18 20:33
வருத்தப்படாத வாலிபரே,

நான் இன்று உங்கள் கருத்தை கண்டேன், எனக்கு ஞாபகம் இல்லை, ஞாபகம் செய்ததற்கு நன்றி.. உங்களுக்கான பதிலை இன்சா அல்லாஹ் தருகிறேன், அதற்கான ஏற்பாட்டை தற்போது துவங்குகின்றேன்
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #9 M.Mohamed Abbas 2012-12-30 21:40
வருத்தப்படாத வாலிபரே,

நான் ஏற்கனவே மேல் பதில் அளித்துள்ளேன், நீங்கள் எதை சரியாக கேட்கீறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை,


தராவிஹ்க்கும் தஹஜ்ஜத்க்கும் உள்ள வேறுபாடு:

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின ்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும்.(17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக(76:26 )

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி,முஸ்லிம் ,திர்மதி,அபுதாவ ுத்,இப்னுமஜா,நஸ யி,அஹ்மத், மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கித்தாப்புகளிலு ம் நபி(ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

கடமையான(பர்ளான) தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத்தொழுகையாக ும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள ்(திர்மதி,அபுதா வுத்,நஸயி,இப்னு குஸைமா,இப்னுமஜா )

பர்ளான தொழகைக்கு பிறகு மிகச்சிறந்தது இரவு தொழுகையை(தஹஜ்ஜத ்) நிறைவேற்றுவதாகு ம், ரமலான் நோன்பிற்கு பிறகு நோன்புகளில் மிகச்சிறந்தது முகர்ரம் மாதம் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹீமைத் பின் அப்திர்ரஹ்மான்( ரலி) அவர்கள் கூறினார்கள்(இப் னுமஜா)

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால ் அதை நான் அங்கீகரிக்கிறேன ். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்,பஜ்ர் நேரம் வரை இவ்வாறு கூறி கொண்டு இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி,திர்மதி ,அபுதாவுத்,நஸயி ,இப்னுமஜா)

அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினா ர்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை,

அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு

ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட ு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் நடந்த சிறப்பு தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை , ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??. ஒரு நிமிடம் மனதை ஒருமைபடுத்தி சிந்தியுங்கள் அன்பான சகோதரரே..
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #10 M.Mohamed Abbas 2012-12-30 21:47
சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு,

கலிபாக்களை பின்பற்றுவது நபி(ஸல்) அவர்களின் சுன்னதாகும்

கீழுள்ள லிங்க் கிளிக் செய்து படித்து பார்க்கவும்

.../blog-post_27.html
Quote | Report to administrator
abdul azeez
+1 #11 abdul azeez 2013-01-13 02:32
அஸ்ஸலாமு அலைக்கும். M.Mohamed Abbas அவர்களுக்கும், மற்றும் ஏனைய முஸ்லிம்களுக்கு ம். அன்பு மிக்க சகோதரரே!

// 3 நாட்கள் நடந்த சிறப்பு தொழுகையை பற்றி தான் இங்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் //

சிறப்பு தொழுகை என்று எந்த முகாந்திரமும் இல்லாதிருக்கும் போது. எந்த அடிப்படையில் இத்தொழுகைக்கு சிறப்பு தொழுகை என்றீர்கள். அவ்வளவு

சிறப்பானதாக இத்தொழுகை இருந்துருக்குமே யானால் நபி (ஸல்) அவர்கள் ஏன் ? மக்களுக்கு முன் கூட்டியே சுட்டிக்காட்டவி ல்லை. அந்த ஹதீத் எடுத்துரைக்கும் விதம். முதல் நாள் முதற்கொண்டு மூன்றாம் நாள் வரை மக்கள் சிறிது சிறிதாக வந்ததாக எடுத்துரைக்கின்றது.

// ஹதிஸ்கலைகளை நன்கு ஆராய்ந்து ஸஹிஹ்வான ஹதிஸ் மற்றும் ளயிபான ஹதிஸ் என்று பிரித்து காட்டினது முன்சென்ற நல் இமாம்கள் தான் ஆனால் அதை மற்றும் ஏற்று கொள்கிறீர்கள், ஆனால் அதே இமாம்கள் ஆராய்ந்து கருத்துகளை கூறும்போது உதரி தள்ளுவது ஏன்//

ஹதீதை பற்றி இமாம்கள் பிரித்து காட்டினது ஏகோபித்த முடிவில்(இமாம்க ள்) அனைவராலும் ஏற்றுக்கொண்ட விதிமுறை. அறிவிப்பாளர் விஷயத்தில்

கூட அந்த ஏகோபித்த விதிமுறை அடங்கும். இந்த விதிமுறைக்கு மாற்றமாக அதே இமாமால் ஒரு சுய அபிப்பிராயத்தை சொல்லப்பட்டால் அது பொருட்படுத்தப்ப டாது.

உதாரணம் படுத்திருக்கும் குதிரையை காலால் உதைத்து எழுப்பினார். என்ற செயலுக்காக அவர் ஹதீதை ஏற்க்க மறுத்தார். ஓர் இமாம். ஆனால் இது ஒரு விஷயம் இல்லை என்று அந்த ஹதீதை ஏற்றுக் கொண்டவர் மற்றவர் விதம். இதில் ஏற்றுக் கொண்டவர் தான் சிறந்ததாக படுகிறது.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #12 M.Mohamed Abbas 2013-01-16 15:21
அலைக்கும் ஸலாம் சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு

//சிறப்பு தொழுகை என்று எந்த முகாந்திரமும் இல்லாதிருக்கும் போது. எந்த அடிப்படையில் இத்தொழுகைக்கு சிறப்பு தொழுகை என்றீர்கள். அவ்வளவு

சிறப்பானதாக இத்தொழுகை இருந்துருக்குமே யானால் நபி (ஸல்) அவர்கள் ஏன் ? மக்களுக்கு முன் கூட்டியே சுட்டிக்காட்டவி ல்லை. அந்த ஹதீத் எடுத்துரைக்கும் விதம். முதல் நாள் முதற்கொண்டு மூன்றாம் நாள் வரை மக்கள் சிறிது சிறிதாக வந்ததாக எடுத்துரைக்கின் றது. //

நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் தொழுகைக்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் நான்காம் நாள் தொழ வைத்தார்கள் என்று எந்த ஒரு நபி மொழிகளும் கிடையாது, நபி(ஸல்) அவர்கள் ஆணைக்கு கிழ்படிந்த சகபாக்கள்(ரலி) அவர்களுக் நான்காம் நாளில் தொழுததாகும் ஹதிஸ் இல்லை,

நபி(ஸல்) அவர்கள் தொழுததது தராவிஹ் தான். ஏனென்றால் நான்காம் நாள் நபி(ஸல்) அவர்கள் தொழவில்லை என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழவில்லை என்று வராது என்றால் மற்றொரு வழியில் நபி(ஸல்) அவர்கல் சில நாட்கள் தவிர அனைத்து நாட்களும் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

//ஹதீதை பற்றி இமாம்கள் பிரித்து காட்டினது ஏகோபித்த முடிவில்(இமாம்க ள்) அனைவராலும் ஏற்றுக்கொண்ட விதிமுறை. அறிவிப்பாளர் விஷயத்தில்

கூட அந்த ஏகோபித்த விதிமுறை அடங்கும். இந்த விதிமுறைக்கு மாற்றமாக அதே இமாமால் ஒரு சுய அபிப்பிராயத்தை சொல்லப்பட்டால் அது பொருட்படுத்தப்ப டாது.

உதாரணம் படுத்திருக்கும் குதிரையை காலால் உதைத்து எழுப்பினார். என்ற செயலுக்காக அவர் ஹதீதை ஏற்க்க மறுத்தார். ஓர் இமாம். ஆனால் இது ஒரு விஷயம் இல்லை என்று அந்த ஹதீதை ஏற்றுக் கொண்டவர் மற்றவர் விதம். இதில் ஏற்றுக் கொண்டவர் தான் சிறந்ததாக படுகிறது. //

இதைத் தான் நாங்களும் கூறுகிறோம், சில இமாம்கள் தராவிஹ் தொழுகை ஒன்று இல்லை என்கிறார்கள், சிலர் இமாம்கள் உண்டு என்கிறார்கள், இரு வேறு இமாம்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும், நாமாக முடிவு செய்ய கூடாது, இதே நிலையில் தான் இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் நபித்தோழர்கள்,த ாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும ்,இமாம் ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இமாம ் இப்னுல் முபாரக்(ரஹ்),இம ாம் ஷாஃபீ, இமாம்க் அஹமத்(ரஹ்),இமாம ் இஸ்ஹாக்(ரஹ்)ஆகி யோரின் கருத்தும் இதுவாகும்

இவர்கள் அனைவரும் தாபின்களும், தபதாபின்களும் அதாவது சகபாக்களை நேரில் கண்டவர்களும், தாபின்களைகளை நேரில் கண்டவர்கள், இவர்கள் எந்த ஒரு முடிவும் சகபாக்கள் காலத்தில் நடக்காத விசயத்தை கூறி இருக்க மாட்டார்கள்
Quote | Report to administrator
abdul azeez
0 #13 abdul azeez 2013-01-18 00:37
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் M.Mohamed Abbas அவர்களுக்கு

நீங்கள் சொன்னது சிறப்பு தொழுகை என்றீர்கள். அதற்க்கு என்ன ஆதாரம்.

// நபி(ஸல்) அவர்கள் தொழுததது தராவிஹ் தான். //

இதற்கும் ஆதாரம் தேவை. தராவீஹ் என்ற பெயர் நபி(ஸல்) அவர்கள் அதற்க்கு வைத்தார்களா ?

// நான்காம் நாள் தொழ வைத்தார்கள் என்று எந்த ஒரு நபி மொழிகளும் கிடையாது, நபி(ஸல்) அவர்கள் ஆணைக்கு கிழ்படிந்த சகபாக்கள்(ரலி) அவர்களுக் நான்காம் நாளில் தொழுததாகும் ஹதிஸ் இல்லை, //

நான்காம் நாள் ஐந்தாம் நாள் நாள் தொழ வைத்தார்களா ? என்ற விபரம் உங்களிடம் நான் கேட்கவில்லை

// இதைத் தான் நாங்களும் கூறுகிறோம்,//

நீங்கள் வேறு நான் வேறு என்ற மனோ பாவம் எனக்கில்லை. சகோதரர் தான்.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
M.Mohamed Abbas
0 #14 M.Mohamed Abbas 2013-01-24 19:51
//நீங்கள் சொன்னது சிறப்பு தொழுகை என்றீர்கள். அதற்க்கு என்ன ஆதாரம்.//

//இதற்கும் ஆதாரம் தேவை. தராவீஹ் என்ற பெயர் நபி(ஸல்) அவர்கள் அதற்க்கு வைத்தார்களா ? //

இதற்கு பதில் நான் முன்பே அளித்துவிட்டேன்

இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் நபித்தோழர்கள்,த ாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும ்,இமாம் ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இமாம ் இப்னுல் முபாரக்(ரஹ்),இம ாம் ஷாஃபீ, இமாம்க் அஹமத்(ரஹ்),இமாம ் இஸ்ஹாக்(ரஹ்)ஆகி யோரின் கருத்தும் இதுவாகும்

என்னை நோக்கி கேள்வி கேட்காதீர்கள் எனக்கு சுயமாக சொல்ல அதிகாரம் கிடையாது, நீங்கள் கேட்பது என்றால் மேலுள்ள நல்ல இமாம்களை நோக்கி கேளுங்கள், மேல் உள்ள இமாம்கள் தவறு செய்திருப்பார்க ள் என்று கூறினால் அவர்களது ஹதிஸ்களை ஆய்வை சந்தேகம் படுமளவிற்கு சென்று இறுதியில் அவர்களின் ஹதிஸ்களின் தொகுப்புகளை நிராகரிக்கும் சென்று விடுவீர்கள், மேலும் இன்றும் மக்கா மற்றும் மதினாவில் ஸலாத்துள் தராவிஹ் என்று தான் நிய்யத் செய்து தொழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் ஸலாத்துள் தஹஜ்ஜத் என்று நிய்யத் செய்வதில்லை,

//நீங்கள் வேறு நான் வேறு என்ற மனோ பாவம் எனக்கில்லை. சகோதரர் தான்.//

உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), முஆவியா(ரலி) அவர்கள் தராவிஹ் இருபது ரக்கத் தொழுதார்கள் என்று ஆதாரபூர்வமான ஹதிஸ் இருந்தும் சகபாக்கள்(ரலி) பின்பற்ற மாட்டோம் என்று கூறுபவர்களிடம் நான் எவ்வாறு கூறுவது?,

நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அபூபக்கரையும் உமரையும் சுட்டிக் காட்டினார்கள் என ஹுதைபா இப்னுல் எமான் (ரலி) அறிவிக்கிறார்கள ்.(இமாம் அபூதாவூத்(ரஹ்), இதை இமாம் திர்மிதி(ரஹ்)

நபி(ஸல்) அவர்களை சொல்லை கேட்காமல் இருப்பது நீங்கள் இல்லை நாங்களா?

நபி(ஸல்) அவர்கள், உமர்(ரலி) அவர்களைப் பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார்கள் , அதனால் தான் இன்று வரை மக்கா மற்றும் மதினாவில் தராவிஹ் தொழுகை நடந்து கொண்டு இருக்கிறது, அல்ஹம்துலில்லா...

ஆனால் சிலர் இன்று மக்கா மற்றும் மதினாவில் இருபது ரக்கத்து நடைப்பெறுவது தவறு மக்கள் இடையே நஞ்சு கருத்துகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்

எந்த நயவஞ்சகர்களாலும ் அதை தடுக்க முடியாது, ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ,

மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள் என இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
என ஸஅத்(ரலி) அறிவித்தார்கள். இமாம் புஹாரி(ரஹ்)

"மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற் குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனைய ும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்த ு) வெளியேற்றி விடுவான்!" என இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள். இமாம் புஹாரி(ரஹ்)

குழப்பவாதியான தஜ்ஜாலே நுழைய முடியாத பகுதித் தான மக்கா மற்றும் மதினா, அந்த இடத்தில் எந்த வித குழப்பவாதியும் உள்ளே நுழைய முடியாது. நமது நபி(ஸல்) அவர்கள் முனாஃபிக்கள் செய்யும் தந்திரத்திற்கு சவால் விடுகிறார்கள்
Quote | Report to administrator
abdul azeez
0 #15 abdul azeez 2013-01-25 21:19
அஸ்ஸலாமு அலைக்கும். M.Mohamed Abbas

// புகாரி ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, புகாரி (ரஹ்) அவர்களால் போடப்பட்ட"தராவி ஹ்" என்ற தலைப்பின் கீழ், தஹஜ்ஜத் தொழுகைக்கான அனைத்து ஹதீசும், "தஹஜ்ஜத்" என்ற தலைப்பிற்கும் அதே அனைத்து ஹதிசும் இடம்பெற்றிருப்ப து ஏன் என்று புரியவில்லையா? //

என்றசகோதரர் Mohamed Ashik கேள்வியை மேலெழுப்பி புகாரி (ரஹ்) அவர்களின் ஹதீதில் ஓர் இரவில் என்ற வாசகமும் மற்றொரு ஹதீதில் இரவில் என்ற வாசகமும் அமைந்துள்ளன. ஒரு வழியாக இரவு தொழுகை என்ற வாக்கியத்தை கொடுக்கின்றன.

''இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!"

இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார். ( Volume :2 Book :31 புகாரி 2010.)

நாம் தஹஜ்ஜத் தொழுகைக்கும் இரவு தொழுகைக்கும் உள்ள வித்தியாசம் அறிந்துள்ளோம். குழம்புவது அவசியமில்லை.

// இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் நபித்தோழர்கள்,த ாபின்கள் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரில் அநேகரின்கூற்றும ்,இமாம் ஸூப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),இமாம ் இப்னுல் முபாரக்(ரஹ்),இம ாம் ஷாஃபீ, இமாம்க் அஹமத்(ரஹ்),இமாம ் இஸ்ஹாக்(ரஹ்)ஆகி யோரின் கருத்தும் இதுவாகும் //

நான் ஏற்க்கனவே சொன்னது தான். இமாம்களின். கூற்றுகள். அபிப்பிராயம். ஹதீத் என்ற நிலைக்கு அடங்காது. அதாவது மத்ன் ஆக முடியாது. இன்னும் இஸ்நாத் என்ற அறிவிப்பாளர் பட்டியலாகவும் முடியாது.

// உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), முஆவியா(ரலி) அவர்கள் தராவிஹ் இருபது ரக்கத் தொழுதார்கள் என்று ஆதாரபூர்வமான ஹதிஸ் இருந்தும் சகபாக்கள்(ரலி) பின்பற்ற மாட்டோம் என்று கூறுபவர்களிடம் நான் எவ்வாறு கூறுவது?,//


உமர்(ரலி), தராவிஹ் இருபது ரக்கத் தொழுதார்கள் என்று வையுங்க உங்கள். கருத்துப்படி.. தராவிஹ் என்ற பெயரில் இஷாவுக்கு பின் இருபது ரக்கத் பிறகு தூங்கி எழுந்து இரவின் பிற்பகுதியில் இருபது ரக்கத் ஆக மொத்தம் நாற்ப்பது ரக்கத் தொழுதார்களா?

முஆவியா(ரலி) அவர்களின் பிறை சம்பந்தப்பட்ட செய்தியை ஏற்று கொள்ளாமல் இப்ன் அப்பாஸ் (ரலி), இவ்வாறு நமக்கு சொல்லி காட்டவில்லை என்று நிராகரித்தார்கள ். அதை நம்மில் தௌஹீத் சகோதரர்கள் வாயில் கவ்வி பிடித்துள்ளார்க ள்.

அதனால் முஆவியா(ரலி) மற்றும் இப்ன் அப்பாஸ் அவர்களின் முரண்பட்ட கூற்றினால். இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களை உங்களால் வேறுபடுத்தி காட்ட முடியுமா??

நாம் முஸ்லிம்கள் நமக்குள் ஓடுவது ஈமான் என்ற இரத்தம் வேற்றுமை என்ற விஷத்தை உட்கொள்ளக்கூடாத ு. பிரிவு என்ற அழிவின் பக்கம் விழுவதை நாம் தடுக்க கடமை பட்டுள்ளோம். அமைப்புகளாகவும் , சுன்னத் ஜமாஅத், தௌஹீத், த மு மு க, போன்ற ஏகப்பட்ட குழுக்களாக உள்ள சகோதரர்கள். விடு பட்டு முஸ்லிம்களாக மட்டுமே இருப்போமாக. அப்படியே மரிப்போமாக..

மா சலாம்.

அப்துல் அஜீஸ் .
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்