முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11

இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.

நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் 'இக்லாஸ்' எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)

இன்னும், உறவினர்களுக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக! எதையும்) வீண் விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)

நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)

நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்

பிறை 1பிறை 12 >

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...

Comments   

mohammedrizvi
0 #1 mohammedrizvi 2009-09-02 12:06
மாஷா அல்லாஹ், அருமையான பதிவு.
Quote | Report to administrator
A.Abdul Hameed
0 #2 A.Abdul Hameed 2009-09-04 08:51
இவ்வாறு உணவை வீணாக்கும் நபர்களுக்கு இனியாவது வீண் விரயம் செய்யாமலிருக்க எல்லாம் வல்ல இறைவன் ஹிதாயத் செய்வானாக, ஆமீன்.
Quote | Report to administrator
M.J. SYED ABDULRAHMAN
0 #3 M.J. SYED ABDULRAHMAN 2010-08-23 16:08
Sorry Fondly not weast your Time and Food, Please food-stuff from ALLAH

Thank you Good wishes,
Quote | Report to administrator
abu hudhaifa
0 #4 abu hudhaifa 2010-08-24 04:25
பல அருள்களைத்தாங்க ி வந்திருக்கும் ரமழானை நாம் நல்ல முறையில் பயன் படுத்தி,நம்மிடம ிருக்கும் கெட்ட குணங்களையும்,நட த்தைகளையும் வேறோடு பிடிங்கி எறிந்து நல்லவற்றில் அதிக வேகத்துடனும்,வி வேகத்துடனும் நம்மை பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

//இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்த ு அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது//
இதை தினம் தினம் நான் வசிக்கும் கத்தர் நாட்டில் கண்கூடாக பார்த்து நெஞசம் குமுறிக்கொண்டிர ுக்கிறேன்.குப்ப ைத்தொட்டியைப்பா ர்க்கும் போது சில மணித்துளிகள் சோமாலியர்களின் எலும்புக்கூடு உடம்புகளை நினைத்து கண்கள் ரத்தம் வடிக்கின்றன.இலை தலைகளையும்,புற் பூண்டுகளையும் சாப்பிடும் அவர்களின் பரிதாப நிலையைக்கண்டால் கல் நெஞ்சமும் உருகி விடும்.ஆனால் இந்த அரபுகளின் கண்களுக்கு அது ஒரு பொருட்டாகவே தென் படுவதில்லை.
Quote | Report to administrator
A.K.IRFANULLAH
0 #5 A.K.IRFANULLAH 2010-08-24 14:52
INDA RAMALAAN MADA SIRAPPOGALAI UNARNDU ULAHA MUSLIMKAL VETRIYALARKALAA HA AHA VENTUM
Quote | Report to administrator
mohamed asmeen
0 #6 mohamed asmeen 2010-08-24 16:14
எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்த ு செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.மாஷா அல்லாஹ், அருமையான பதிவு.1
Quote | Report to administrator
SABEERAHMED
0 #7 SABEERAHMED 2011-08-14 13:13
ALHAMDULILLAH THANS
Quote | Report to administrator
Jafarullah Ismail
0 #8 Jafarullah Ismail 2017-06-07 18:54
அருமையான விழிப்பூட்டல்.
ரமலானில் உணவுகள் வீணடிக்கப்படுவத ு வேதனையான விசயம். ஒரு வேளை உணவுகூட கிட்டாமல் வாடும் மக்களை நினைத்தாவது உணவுகளை வீன் விரயம் செய்யாமல் உறுதி பூணுவோம்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்