முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நற்சிந்தனைகள்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10

ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்:

 

ஸஹர் உணவு:

"நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).

"நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி, நூல்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643).

பஜ்ருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்பது நல்லது. ஸஹர் நேரத்துக்கு எழுந்து உண்ணாமல், வழக்கமான இரவு உணவு வேளையில் சாப்பிட்டு விட்டுத் தூங்கிவிடும் பழக்கத்தை உடையவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து (ஒரு பேரீத்தம் பழம், தண்ணீர், பால் போன்ற) எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பு துறப்பது:

சூரியன் மறைந்தவுடன் தாமதப்படுத்தாது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது, இல்லையெனில்  தண்ணீரைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகும்.

நீர், தூய்மையானது"உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூல்கள்: திர்மிதி 631,இப்னுமாஜா 1699).

"விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, திர்மிதி 635, இப்னுமாஜா 1697).

நோன்பு துறந்ததும் ஓதவேண்டிய துஆ (பிரார்த்தனை):

நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறந்த வேளையில்,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

'தஹபள் ளமவு, வப்தல்லதில்  உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்" என்று ஓதுவார்கள். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகி விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350).

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் அனுகூலம்:

'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).

- தொடரும் இன்ஷா அல்லாஹ்

பிறை 1பிறை 11

 சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது.  அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...
Comments   
முனாஸ் சுலைமான் இலங்கை.
0 #1 முனாஸ் சுலைமான் இலங்கை. 2009-09-03 00:28
இன்னும் இன்னும் தொடரட்டும் சகோதரரே அருமையான ஆக்கம் நன்றிகள்.
Quote | Report to administrator
SEYLANEE
0 #2 SEYLANEE 2014-07-18 21:57
salam, DEAR EDITOR,
AS PER RESEARCH BY ISLAMIC SCHOLAR A DUAA MENTIONED IN YOUR ARTICLE IS FALSE AND NOT ACCEPTABLE....P L READ BELOW ARTICLE ...IF U HAVE PROOF THEN WRITE HERE...
by : P.J.Zainul Abdeen., TamilNadu.

நோன்பு நோன்பு துறப்பதற்கென்று எந்த துஆவும் இல்லை

pl go to this AND read carefully ...please.

onlinepj.com/.../#.U8lHfKNQXbw
Quote | Report to administrator
Mustafa Kamal
0 #3 Mustafa Kamal 2014-07-21 13:25
Quoting SEYLANEE:
salam, DEAR EDITOR,
AS PER RESEARCH BY ISLAMIC SCHOLAR A DUAA MENTIONED IN YOUR ARTICLE IS FALSE AND NOT ACCEPTABLE....PL READ BELOW ARTICLE ...IF U HAVE PROOF THEN WRITE HERE...
by : P.J.Zainul Abdeen., TamilNadu.

நோன்பு நோன்பு துறப்பதற்கென்று எந்த துஆவும் இல்லை

pl go to this AND read carefully ...please.

onlinepj.com/.../#.U8lHfKNQXbw


சகோதரர் SEYLANEE கொடுத்த சுட்டியில் சென்று பார்த்தால்.."இத ன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லைஎன்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்பப ிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்." என்று போட்டிருக்கிறார ்கள்.

ஆனால் மேலே உள்ள கட்டுரையில் கடைசியில் உள்ள நபிமொழியில் நிராகரிக்கப்படா த பிரார்த்தனைகளில ் ஒன்றாக நோன்பு துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனையையு ம் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இப்போ ஒரு முஸ்லிம் செய்ய வேண்டியது என்ன? சகோதரர் பி.ஜே. அவர்கள் விளக்கியுள்ளது போல 'பிஸ்மில்லாஹ்' மட்டும் சொல்லி நோன்பு துறக்க வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியபடி பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் அந்த நேரத்தில் துஆ-க்களை ஓதி நோன்பு துறக்கலாமா?
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்