முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நுட்பம்

எச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.

தொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான் எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

உங்களால் இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம் எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.

தகவல்: அபூ ஸாலிஹா

Comments   
கிருஷ்ணசாமி
0 #1 கிருஷ்ணசாமி -0001-11-30 05:21
ஐயா,

நான் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்கிறேன்.
அதில் pdf ஃபைல்களைக் கொண்டு வருவது எப்படி என்று சொல்லித் தாருங்கள்.

அன்புடன்,
கிருஷ்ணசாமி
Nagercoil rn:9245567008
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #2 அபூ ஸாலிஹா -0001-11-30 05:21
அன்பு கிருஷ்ணசாமி,

ஸ்க்ரிப்ட்.காம் போன்று சில தளங்கள் இதற்கான வசதியைத் தருகின்றன. அதாவது உங்கள் வலைப்பூவில் இணைத்துள்ள பி.டி.எஃப் அல்லது வேர்டு டாக்குமெண்ட்களை டவுன்லோடு செய்யாமல் உங்கள் வலைப்பூவில் இருந்து கொண்டே பக்கங்களையும் எவரும் வாசிக்க இயலும்.

உதாரணத்திற்கு:

scribd.com/.../Tamil-Kavithai
Quote | Report to administrator
krishnaswamy
0 #3 krishnaswamy -0001-11-30 05:21
உங்கள் பதில் கிடைத்தது. மிக்க நன்றி. இருந்தாலும் என்னுடைய சந்தேகம் தெளிவாகவில்லை. தங்களின் போன் நம்பரை தெரிவித்தால் போனில் பேச வசதியாக இருக்கும். நான் ஒரு பி.டி.எப்.. அல்லது வேர்டு டாகுமெண்டு வைத்திருக்கிறேன ் அதை எப்படி என்னுடைய பிளாக்கில் கொண்டு வைப்பது என்று தெளிவுப்படுத்து ங்கள். அப்படி வைக்கப்பட்ட பைலை மற்றவர்கள் பார்கக வேண்டும். விருப்பபட்டால் பிரிண்ட் எடுத்து கொள்ளவும் வசதி வேண்டும். இதை எப்படி செய்வது என்று தெளிவுபடுத்த அன்புடன் கேட்டு கொள்கிறேன். அஸ்லாம் அலைக்கும் . நன்றி . இப்படிக்கு கிருஷ்ணசாமி
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #4 அபூ ஸாலிஹா -0001-11-30 05:21
சத்தியமார்க்கம் .காம் தளத்தினர் இயன்றால் இவருக்கு உதவி செய்யுங்கள்.

நண்பர் கிருஷ்ணசாமி அவர்களே,

என் தரப்பிலான உதவியைச் செய்ய தயாராக உள்ளேன். எனது மின் அஞ்சல் abusaaliha[at]g mail.com இல் தொடர்பு கொள்ளுங்கள்.

விருப்பமிருந்தால் உங்கள் மடலில் வேர்டு டாக்குமெண்ட் இணைப்பையும் உங்கள் வலைப்பதிவின் விபரங்களையும் அனுப்புங்கள். நன்றி!
Quote | Report to administrator
TAMIL
0 #5 TAMIL 2009-08-03 19:22
நல்ல செய்தி
Quote | Report to administrator
A.R.Sajith Ali
+1 #6 A.R.Sajith Ali 2010-02-18 17:45
ஐயா, நான் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்கிறேன்... அதில் நேரடி றேடியோ எனக்கென உருவாக்குவெது எப்படி
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்