முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

நுட்பம்
{mosimage}அவசரத்திற்கு நாம்  சில தேவைகளுக்காகச் சிறு குறிப்புகள் எழுதுவதுண்டு. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு தேவையெனில் பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படும், தேவையில்லையெனில் அழிக்கப்படும்.  இதே வேலையை நாம் கணினியிலும் செய்யலாம் . தேவை, மூன்றே படிகள்,

1.  ஒரு கோப்பினை (Word Document) திறவுங்கள்,

2.  RESIZE  பொத்தானை அழுத்தி  அந்தச் சட்டத்தை (Document Window) சிறிதாக்குங்கள்,

3.  ஏதாவது ஒரு பத்தியை (Paragraph) தேர்ந்தெடுத்துக்கொண்டு, பின்பு அதை  DRAG செய்து டெஸ்க்டாப்பில் (Desktop) உள்ள ஐகொன்களுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் போடுங்கள்.  தேவையெனில், CUT/COPY&PASTE முறையையும் பயன்படுத்தலாம்.

 

இப்போது டெஸ்க்டாப்பில் (Desktop), படத்தில் இருப்பது போன்ற, நீல மற்றும் மஞ்சள் கோடு போட்ட ஐகான் (icon), Document Scrap என்று ஆரம்பித்து, உங்கள் கோப்பின் பெயர் (Document Name) கொண்ட தலைப்புடன் உருவாகி விடும்.

 

பின்பு தேவைப்படும்போது அதை மவுஸினால் இருமுறை சொடுக்கினால் (Double Click), அது Word கோப்பில் திறக்கப்பட்டு காட்சியளிக்கும். அதை தேவைக்கேற்றாற் போல் மாற்றி சேமித்து (SAVE) கொள்ளலாம், அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் கோப்பில் (Word Document) DRAG/DROP செய்து தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

 

ஆக்கம்: முஹம்மத் அலி ஜின்னா

 

Comments   
மானா
0 #1 மானா -0001-11-30 05:21
வாழ்த்துக்கள்..
இதுபோன்ற பயனுள்ள ஆக்கங்களை - தொடர்ந்தும் எழுதுங்கள் முஹம்மது அலி ஜின்னா.

மானா
13.08.2006
Quote | Report to administrator
MuSa
0 #2 MuSa -0001-11-30 05:21
சுவையான குறிப்பைக் கொடுத்தமைக்கு நன்றி ஜின்னா அவர்களே!

MS Word & MS Excel இல் நன்றாக வேலை செய்யும் இவ்வழிமுறை ஏனோ Frontpage ல் வேலை செய்யவில்லை. :sad:
Quote | Report to administrator
Firoz
0 #3 Firoz -0001-11-30 05:21
very usefull info. thanks a lot mr. jinna.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்