முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

அறிவியல்
 
 Wi-Fiவீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை அறிக்கையைக் காணும் வரைக்கும் காத்திருக்கவோ பொறுமை இல்லை.

Wi-Fi

சரி... வானிலை குறித்த வலைத்தளங்களைப் பார்க்கலாமே என்கிறீர்களா? அடப்போங்கப்பா இப்போ தான் கணினியிலிருந்தே எழுந்திருத்தேன் என்கிறீர்களா?

இதற்காக சிகாகோவிலிருக்கும் மெட்டீரியஸ் எனும் நிறுவனம் ஒரு வைஃபை(Wi-Fi) குடையை வடிவமைத்துள்ளது. குடையை மாட்டி வைக்கும் கைப்பிடியில் உள்ள கம்பியிலா இணைய இணைப்பு மூலம் முன்னரே வரையறுக்கப்பட்ட வானிலை வலைத்தளங்களுக்கு தானே தொடர்பு கொண்டு வானிலை நிலவரத்தை குடைக் கைப்பிடி நிறம் மாறுவது மூலம் தெரிவிக்கும்.

ஒரு சாதாரண குடை தானே  என இனி யாரும் ஏளனமாக நினைக்க வேண்டாம். இக்குடை இன்னும் சந்தைக்கு வரவில்லை. இம்மாதம் 23ம் தேதி (23-05-2005) ஹவுட் கிரீன் எனும் கண்காட்சியில் இக்குட இடம் பெறும் என மெட்டீரியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல்: அபூஷைமா
Comments   
haneefm
0 #1 haneefm -0001-11-30 05:21
اللَّهُ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَيَبْسُطُهُ فِي السَّمَاء كَيْفَ يَشَاء وَيَجْعَلُهُ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ فَإِذَا أَصَابَ بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள். (30:48)

وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ

எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிரு ந்தனர். (30:49)

فَانظُرْ إِلَى آثَارِ رَحْمَتِ اللَّهِ كَيْفَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ ذَلِكَ لَمُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறா ன்? (இவ்வாறே) மரித்தவர்களையும ் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் . (30:50)
இந்த மனிதயினத்தை படைத்து ஆட்சியை தன் வசம் வைத்திருக்கும் அல்லாஹ்கே புகழ் அனைத்தும்,
வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி நிமிடத்துக்கு நிமிடம் புதுமைதான் இதில் நம் இஸ்லாமியர் பங்கு தான் என்ன?
ஹனிஃப்-குவைத்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்