முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

துரித சமையல்

இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு - காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடியது. பண்டிகை நாட்களிலும், விருந்தினர் வருகையின்போதும் பரிமாறிப் பாராட்டைப் பெறலாம். சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு எப்படிச் செய்வது என்று சொல்லித் தருபவர் நம் தொடர் வாசக சகோதரி நூர்ஜஹான் ரஹீம்.

தேவையானப் பொருட்கள்:

பாஸ்மதி அரிசி

150 கிராம்

சர்க்கரை 200 கிராம்(அல்லது தேவைக்கேற்ப)
கிரீம் மில்க் (அ) சுண்டக்காய்ச்சிய பால் 400 மில்லி
மில்க் மெயிட் 100மி
பாதாம் பருப்பு 25 (எண்ணிக்கை
முந்திரிப்பருப்பு 15
பிஸ்தாப்பருப்பு 100கி
தண்ணீர் 500மி.

 

ஆயத்தம்:
1. பாஸ்மதி அரிசியக் களைந்து 20 நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. மூன்று பருப்புகளையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிய விட்டு, பாதாம் பிஸ்தா இரண்டையும் தோல் நீக்கவும்.
3. மூன்று பருப்புகளிலும் பாதியை எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
4. மீதியை மெல்லிய இழைகளாக கத்தியால் சீவிக்கொள்ளவும்.
5. ஒரு ஸ்பூன் நெய்யில் பருப்பு இழைகளை 2 நொடிகள் பிரட்டி எடுக்கவும்.

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசியையும், நீரையும் கலந்து அடுப்பை மிதமான தணலில் வைத்து விடாமல் கட்டித்தட்டாமல் மாவு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் விட்டாலும் கட்டியாகிவிடும். மாவு வெந்து இறுகி வரும்போது பால்,அரைத்துவைத்துள்ள விழுது, மில்க் மெயிட் எல்லாம் சேர்த்து கிளறவும். மிகவும் கெட்டியில்லாமல் தளர இருக்க வேண்டும்.இரண்டு கொதிவந்ததும் சர்க்கரையைக் கலந்து கொதித்ததும் நெய்யில் புரட்டியதைக்கலந்து இறக்கவும். ஃபிர்னி மீடியம் அடர்த்தியில் இருக்க வேண்டும். சுவையான ஃபிர்னி ரெடி பிரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாற, சாப்பிடுபவர்கள் எல்லாம் குளிர்ந்து போவார்கள். பிறகு என்ன பாராட்டு மழையில் நீங்களும்தான்!

குறிப்பு :
இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 பேருக்கு போதுமானது. எண்ணிக்கைக்கு ஏற்ப அளவைக் கூட்டிக்கொள்ளலாம். சிரமம் பார்க்காமல் மாவை கட்டித் தட்டாமல் கிளறுவதில் தான் சுவையே இருக்கிறது.

ஆக்கம்: ஆர். நூர்ஜஹான்ரஹீம் (கல்லை)

 

வாசித்து விட்டீர்களா?  சத்தியமார்க்கம்.காம் தள அறுசுவை பகுதியில் இடம் பெறும் உங்கள் சமையல் குறிப்பு ஆயிரக்கணக்கானோருக்குச் சென்றடைகிறது. பிற தளங்களில் இருந்து Copy செய்யாத சொந்தமான சமையல் குறிப்பினை நீங்கள் அறிந்து வைத்திருந்தால் எங்களுக்கு உடனடியாக எழுதி அனுப்புங்கள்.

Comments   

MOHAMED RAFI
0 #1 MOHAMED RAFI 2010-09-06 10:12
RAFI,
THIS VERY INFROMATIVE
Quote | Report to administrator
malar
0 #2 malar 2010-09-17 09:26
really superb...
Quote | Report to administrator
ashik
0 #3 ashik 2010-10-20 18:35
Arusuvai unavu 1
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்