முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

துரித சமையல்

மட்டன் மர்க் (Mutton Margh)

தேவையானவை:

ஆட்டிறைச்சி - 1/2 கிலோ

இஞ்சி பேஸ்ட் - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு, கொத்துமல்லித் தழை

 

செய்முறை:

  1. அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்.

  2. பின்னர் இஞ்சி பேஸ்ட் போட்டு ஒட்டிக் கொள்ளாதவாறு கிளறவும்.

  3. பின்னர் இறைச்சியையும் மிளகுத் தூளையும் தேவையான அளவு உப்பையும் அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  4. இறைச்சி மூழ்கும் அளவு நீரை நிரைத்து குக்கரை மூடி வைக்கவும்.

  5. மூன்று விசிலிற்குப் பிறகு திறந்து இறைச்சி வெந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, கொத்துமல்லித் தழை தூவினால் "மர்க்" ரெடி.

மர்குக்குத் தேவையில்லாத வெங்காயம், தக்காளி, மசாலாக்கள், தேங்காய்ப்பால், தயிர், குங்குமப்பூ போன்ற எதையும் இதில் சேர்த்துவிட வேண்டாம்.

பரோட்டோ, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியனவற்றுக்கு எளிதான விரைவான ஸைட் டிஷ் மர்க் ஆகும்.

குறிப்பு : இந்த மெனு அரைகிலோ ஆட்டிறைச்சி மர்க்குக்கானதாகும். உறுப்பினர்கள் அதிகமுள்ள பெரிய குடும்பம் என்றாலோ அவசரமாக வந்துபோகும் விருந்தினர்கள் என்றாலோ இறைச்சியையும் பிறவற்றையும் இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம்

- ஆக்கம்: Zahid Hussain, Dallas, USA

Comments   

mohamed ali
+1 #1 mohamed ali 2010-07-22 08:41
WOW
ருசியோ ருசி
Quote | Report to administrator
althaaf
0 #2 althaaf 2010-07-22 08:44
உண்டபின் ரகசியமாய் வரும் பதில்.
Quote | Report to administrator
rahamath
0 #3 rahamath 2010-07-22 09:09
aslam alikum,

super taste
Quote | Report to administrator
Zahid Hussain Dallas USA
0 #4 Zahid Hussain Dallas USA 2010-07-22 18:08
Assalamu Alaikum WRH,

Those were the forced bachelor days, and I had a wonderful brother by name Farrukh Asif from Karachi, Pakistan who taught me this recipe. I am happy that it is being utilized. The actual credit goes to my brother Farrukh Asif. Please pray for him and his family as well for me and my family and as well for the moderator and people involved in this website doing all the noble works.

Masalaam.

Zahid Hussain.
Quote | Report to administrator
syedtcd
-1 #5 syedtcd 2010-07-23 14:48
i think it is good. let me try one time...
8)
Quote | Report to administrator
குக்கர் இல்லாதவன்
-1 #6 குக்கர் இல்லாதவன் 2010-07-23 21:26
எங்கள் வீட்டில் குக்கர் இல்லை.

குக்கர் இல்லாமல் மர்க் எப்படி சமைப்பது?
Quote | Report to administrator
அடுப்பு உள்ளவன்
-1 #7 அடுப்பு உள்ளவன் 2010-07-23 21:38
குக்கர் இல்லியா? அடுப்பாவது இருக்கா?
Quote | Report to administrator
அடுப்பும் குக்கரும் இல்லாதவன்
-1 #8 அடுப்பும் குக்கரும் இல்லாதவன் 2010-07-23 23:42
எனக்கு அடுப்பும் இல்லை; குக்கரும் இல்லை. நான் என்ன செய்யட்டும்?
Quote | Report to administrator
அடுப்பு உள்ளவன்
-1 #9 அடுப்பு உள்ளவன் 2010-07-23 23:49
அழகிய கலர் பேப்பரில் இந்தக் குறிப்பை பிரின்ட்டு செஞ்சு பிரேம் செய்து வீட்டில் மாட்டிக் கொள்ளவும். ;-)
Quote | Report to administrator
பிரிண்டர் இல்லாதவன்
-1 #10 பிரிண்டர் இல்லாதவன் 2010-07-24 00:54
என்னிடம் பிரண்டர் இல்லையே!
மேற்கொண்டு என்ன செய்யலாம்?
Quote | Report to administrator
நபீஸா
0 #11 நபீஸா 2010-07-24 12:22
இதை வாசிக்கும் மானிட்டராவது இருக்கில்ல அதைப் பார்த்து திருப்தி பட்டுக்கவும். :D
Quote | Report to administrator
G u l a m
+1 #12 G u l a m 2010-07-25 08:43
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஆக்கத்திற்கு தேவையில்லாத கேலி செய்யும் நோக்குடன் அனுப்பப்படும் கருத்துக்களை தயவுக்கூர்ந்து இங்கு பதிய வேண்டாம். (example: //குக்கர் இல்லாதவன் // போன்ற போலிகளின் பதிவுகள்,அதற்கு ம் இறுதியாக சகோதரி நபீஸா அவர்கள் தந்த பதில்தான் நச்!) ஏனெனில் அது பேசுப்பொருளை திசை திருப்பும். ஆக்கத்திற்கு எதிர்மறையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தாராளமாக முன்னுரிமை அளிக்கலாம்.இன்ச ா அல்லாஹ் நம் சகோதரங்கள் தெளிவாக பதில் அளிப்பார்கள்.மே லும் இவ்வாக்கம் புலால் உணவு குறித்ததாக இருப்பதால் இவ்விடத்தில் ஒரு செய்தி தமிழ் ஹிந்து தளத்தில் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படும் உயிரினங்களின் உணவுகள் அறிவியல் ரீதியாக அசுத்தமானவைகள் என்பதுப்போல் ஒரு கட்டுரையே வடித்திருக்கிறா ர்கள்.அதற்கு மறுப்பு தெரிவிப்பது இங்கு நோக்கமல்ல என்ற போதிலும்.நடு நிலையாளர்களுக்க ு அந்த கட்டுரை தவறாக பொருள் கொள்ள வழிவகுக்கும் என்பதால் அதுக்குறித்து விளக்கமாக ஒரு ஆக்கம் உருவாக்க வேண்டுகிறேன். இறைவன் நாடுவானாக.,
-ஓர் இறையின் அடிமை
Quote | Report to administrator
Basheer
+1 #13 Basheer 2010-07-26 11:52
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ், அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்.
நானும் இது குறித்து தெரிவிக்க‌ எண்ணினேன். ச‌கோத‌ர‌ர் முந்திவிட்டார். மாஷா அல்லாஹ்! எதிர்கால‌த்தில் இது போன்ற‌வை த‌விர்க்க‌ப்ப‌ட ும் என‌ ந‌ம்புகிறோம். r /:sad:
Quote | Report to administrator
M.DEVIKA
0 #14 M.DEVIKA 2011-01-17 13:23
This is a Very Nice cooking tips I will try
Quote | Report to administrator
anandhi
0 #15 anandhi 2011-06-23 11:18
i like it because it expences is very ow and very tasty
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்