முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறுசுவை
{mosimage}
தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் – 300 கிராம்

பெரிய வெங்காயம் – 250 கிராம்.

தக்காளி – 150 கிராம்

சோயா சாஸ் – 20 மில்லி

சில்லி சாஸ் – 15 மில்லி

அஜினா மோட்டோ – 4 மில்லி

முட்டை -  1 எண்ணம்

இஞ்சி – 10 கிராம்

பூண்டு -  10 மி.கி

எண்ணை – 100 கிராம்.

கலர் – 1 துளி

மைதா – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகு – தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 30 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து நீரைத் துடைத்து மாற்றி ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. முட்டையை அடித்து அதில் மைதா, அஜினா மோட்டோ, உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து பிசைந்து தனியாக வைக்கவும்.

3. இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி அரைத்து அதனுடன் மைதா கலவையையும் காலிஃப்ளவர் பூவையும் சேர்த்து குழைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.


செய்முறை

அரை மணி நேரம் ஊறிய கலவையை வாணலியில் எண்ணை ஊற்றி வறுத்து எடுக்கவும். சிறிது பல்லாரியை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் பல்லாரியையும் தக்காளியையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள பல்லாரியை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

 

பின்னர் பொரித்த பல்லாரி, தக்காளி கலவை மற்றும் காலிஃப்ளவர் கலவை வறுத்து அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். இடையே ருசி பார்த்து தேவையான காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் நிறம் சேர்த்து தேவையான அளவுக்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம்.

 

குறிப்பு: வேக வைக்கும்பொழுது பரிமாற அவசியமான வடிவத்திற்குத் தகுந்தது போல் நீர் சேர்த்துக் கொள்ளவும்.

 

ஆக்கம்: அபூ சுமையா

Comments   
-நிர்வாகி சத்தியமார்க்கம்.காம்
0 #1 -நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
சமையல் குறிப்புகளை அழகிய வடிவத்தில் அச்செடுக்க விரும்பும் வாசகர்கள் ஆக்கத்தின் வலது பக்க மூலையில் உள்ள அச்செடு(Print) எனும் படத்தைச் சொடுக்கவும்.

-நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்)
_____________________________
Quote | Report to administrator
mamdha
0 #2 mamdha -0001-11-30 05:21
very very taste dish
i like gopimanjurian
Thanks Abu Sumaiya.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்