முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

அறுசுவை

உடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா.

பொரி பிரியாணி

நீங்களே சொல்லாதவரை, இந்த பிரியாணியின் மூலம் (Source) என்னவென்று யாருக்கும் தெரியாத பொரி பிரியாணி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தேவையான பொருள்கள்

கோஸ் (அரிந்தது)

1கப்

பெரிய வெங்காயம் (அரிந்தது)

1கப்

பச்சை மிளகாய்

3

இஞ்சி பூண்டு விழுது

1 மேசைக் கரண்டி

சோயா சாஸ்

1 மேசைக் கரண்டி

மைதா மாவு

4 மேசைக் கரண்டி

அரிசி  மாவு

2 மேசைக் கரண்டி

சோளமாவு

2 மேசைக் கரண்டி

கருவேப்பிலை

தேவையான அளவு

கொத்தமல்லி தழை

தேவையான அளவு

உப்பு

தேவையான அளவு

எண்ணெய்

தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது:

மிகமிக எளிது

உண்ணும் நபர்கள்:

4

தயாராகும் நேரம்:

30 நிமிடம்

சமைக்கும் நேரம்:

20 நிமிடம்

 

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

 

ரமளானின் மாதத்தில் நோன்பு துறக்கும் சமயத்தில் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படும் நோன்புக்கஞ்சி, நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும் ஓர் அற்புத உணவாகும்.

மளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும்.

{mosimage}

தேவையான பொருள்கள்
சிக்கன் - 200 கிராம்
கேரட் - 1
புரோகளி (Broccoli)- 100 கிராம்
குடை மிளகாய் (Capsicum)- 1
பீன்ஸ் - 50 கிராம்
வெங்காயத் தாள் - 2
கரு மிளகு - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 5
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 12 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 5 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. பீன்ஸ், கேரட், புரொக்களி, குடைமிளகாய் காய்களை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். (மாற்றமாக ரெடிமேடாக கிடைக்கும் உறையவைக்கப்பட்ட காய்கறிக் கலவை (Frozen Mixed Vegetable) உபயோகிக்கலாம்)

2. வெங்காயத் தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

3. கரு மிளகை பொடி செய்து கொள்ளவும்


செய்முறை

பாத்திரத்தில் சுமார் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு, சிக்கனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.  பிறகு சிக்கனை எடுத்து எலும்பு நீக்கி உதிர்த்து கொள்ளவும்.  அதே தண்ணீரில் நறுக்கிய காய்கள் மற்றும் உதிர்த்த சிக்கன் போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும். ('புரோசன் மிக்ஸெட் வெஜிடபள்' உபயோகித்தால், ஒரு நிமிடம் வேக வைத்தால் போதுமானது).  பிறகு ஒரு தேக்கரண்டி சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  கொதித்ததும் நறுக்கிய வெங்காய தாள் போட்டு இறக்கி விடவும்.

 

சூப் குவளைகளில் ஊற்றி மிளகு தூவி சூடாக பரிமாறவும்.

 

குறிப்பு

 

உம்மு ரேஹான்

{mosimage}

தேவையான பொருள்கள்
மட்டன் கீமா - 1/2 கிலோ
தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு -1 தேக்கரண்டி
உப்பு - தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
க்கரு மிளகு - 1 தேக்கரண்டி
முட்டை - 2
கரம் மசாலா - தேவையான அளவு
மைதா மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
நெய் - 2 தேக்கரண்டி

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 50 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. மைதா மாவை நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 3/4 மணி நேரம் ஊர வைக்கவும்

2. முட்டையை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும்

3. வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

4. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்

5. கரு மிளகை பொடி செய்து கொள்ளவும்


செய்முறை

சமையல் எண்ணையை வாணலியில் விட்டு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.  பிறகு மட்டன் கீமா சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மிளகு தூள், தக்காள்ளி சாஸ் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

 

மைதா மாவு கலவையை உருட்டி அதன் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை தடவி சமைத்த கீமா கலவையை வைத்து பொரித்த வெங்காயத்தை தூவி மடக்கிவிடவும்.

 

வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்.

 

எடுத்து நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

{mosimage}
தேவையான பொருள்கள்
மீன் - 1/2 கிலோ

முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம்

மல்லித்தூள் - 100கிராம்

சிவப்பு மிளகாய் - 8கிராம்

மஞ்சள் தூள் - 2கிராம்

மிளகுத்தூள் - 4கிராம்

வெந்தயம் - 2கிராம்

தேங்காய் எண்ணெய் - 50மிலி

தேங்காய் - 1

வெங்காயம் - 300கிராம்

கொடும்புளி(Cocum) - 15கிராம்

உப்பு - தேவையான அளவு

தக்காளி - 80கிராம்

இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம்

கடுகு - 3கிராம்

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. மீனை நன்கு சுத்தப்படுத்தி தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
2. துருவிய தேங்காய், மல்லித்தூள், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வெந்தயம் மற்றும் மிளகுத்தூளை வறுத்துக்கொள்ளவும்.

3. மேற்கூறிய அனைத்தையும் நைசாக அரைத்து கொள்ளவும்.
4. கொடும்புளி (cocum) ஐ நீரில் நனைத்து ஈரமாக வைத்துக்கொள்ளவும்.
5. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கவும்.


செய்முறை:

6. எண்ணெயை சூடாக்கி, கடுகைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்காயை அதில் இட்டு வதக்கவும்.
7. பின்னர் இஞ்சி, பூண்டு கலவையையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
8. அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி, கொடும்புளி(cocum), மீன், மற்றும் தேவையான அளவில் நீர் இட்டு மிதமான சூட்டில் சமைக்கவும்.
9. இப்போது தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும்.
10. குழம்பு நன்கு சுண்டும் வரையில் மிதமான தீயில் சமைக்கவும்.
11. குழம்பை அடுப்பிலிருந்து இறக்கும் போது வறுத்த கறிவேப்பிலைகளை தெளித்து சூடாகப் பரிமாறவும்.

 

தொகுப்பு: அபூ ஸாலிஹா

சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

{mosimage}
தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் – 300 கிராம்

பெரிய வெங்காயம் – 250 கிராம்.

தக்காளி – 150 கிராம்

சோயா சாஸ் – 20 மில்லி

சில்லி சாஸ் – 15 மில்லி

அஜினா மோட்டோ – 4 மில்லி

முட்டை -  1 எண்ணம்

இஞ்சி – 10 கிராம்

பூண்டு -  10 மி.கி

எண்ணை – 100 கிராம்.

கலர் – 1 துளி

மைதா – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகு – தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 30 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து நீரைத் துடைத்து மாற்றி ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. முட்டையை அடித்து அதில் மைதா, அஜினா மோட்டோ, உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து பிசைந்து தனியாக வைக்கவும்.

3. இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி அரைத்து அதனுடன் மைதா கலவையையும் காலிஃப்ளவர் பூவையும் சேர்த்து குழைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.


செய்முறை

அரை மணி நேரம் ஊறிய கலவையை வாணலியில் எண்ணை ஊற்றி வறுத்து எடுக்கவும். சிறிது பல்லாரியை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் பல்லாரியையும் தக்காளியையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள பல்லாரியை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

 

பின்னர் பொரித்த பல்லாரி, தக்காளி கலவை மற்றும் காலிஃப்ளவர் கலவை வறுத்து அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். இடையே ருசி பார்த்து தேவையான காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் நிறம் சேர்த்து தேவையான அளவுக்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம்.

 

குறிப்பு: வேக வைக்கும்பொழுது பரிமாற அவசியமான வடிவத்திற்குத் தகுந்தது போல் நீர் சேர்த்துக் கொள்ளவும்.

 

ஆக்கம்: அபூ சுமையா

{mosimage}
தேவையான பொருள்கள்
1/4 தேக்கரண்டி அஜின மோட்டோ ஸால்ட்
1 கிலோ சுத்தம் செய்யப்பட்ட கோழி
1 கப் ஸோயா ஸாஸ்
1/2 கப் வினிகர்
2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மஞ்சள்
2 பெல்லாரி வெங்காயம்
2 டீஸ்பூன் மிளகுத்தூள்
3 மேசைக்கரண்டி கார்ன்ஃபிளவர்
2 மேசைக்கரண்டி மைதா
பொரிப்பதற்கு நெய் அல்லது எண்ணெய்

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: 1000 
தயாராகும் நேரம்: 30 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்) 

 

முன்னேற்பாடுகள்:

கோழியை எலும்புடன் சிறு உருண்டைத்துண்டுகளாக நறுக்கி, அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், ஸாஸ், வினிகர், அஜினமோட்டோ ஸால்ட், உப்பு, மஞ்சள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.


செய்முறை

முன்னேற்பாடாக ஊற வைத்தவற்றை குக்கரில் அரை வேக்காடு வேக வைக்கவும். பின்பு கார்ன் ஃபிளவரையும் மைதா மாவையும் தண்ணீர் விட்டுக் கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் தனியே எடுத்து மாவில் தோய்த்து வாணெலியில் காயும்வரை நெய்யில் போட்டு சிவக்கும்வரை இரண்டிரண்டாக பொரித்து எடுத்துச் சூடாக பறிமாறவும்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா

சமீப கருத்துக்கள்