முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

மொழியியல்

பழகு மொழி 14(2) 3.பகுபதங்கள்

பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, "பகுதி" என்றும் இரண்டாவது உறுப்பு, "விகுதி" என்றும் கூறப்படும். சிலர், பகுதியை "அடிச்சொல்" என்றும் அதில் வந்து ஒட்டும் விகுதியை "ஒட்டு" எனவும் கூறுவர். ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்.

பகுதியான அடிச்சொல் சுருக்கமான பொருளை உடையதாக விளங்கும். பகுதியும் விகுதியும் இணைந்து, விரிந்த பொருள் தரும். ஆனால், தனித்த விகுதி பொருளற்றுக் கிடக்கும்.

காட்டாக,

ஆடு+கள் = ஆடுகள். இதில் "ஆடு" எனும் சொல்லானது பொருள் தரும் தனித்த அடிச்சொல்(பகுதி) ஆக அமைந்துள்ளது. "கள்" எனும் விகுதி, பன்மையைச் சுட்டுவதற்காக வந்து ஒட்டியுள்ளது. இங்கு விகுதியாக வந்து ஒட்டிய "கள்", தனித்துப் பொருள் தரக்கூடிய குடிக்கும் "கள்" அன்று. எனவே, விகுதியான "கள்" பொருள் தரத்தக்கச் சொல்லன்று.

சுக்கு, அச்சு, கட்டு, பத்து, காப்பு, மாற்று ஆகியவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகும். இவற்றைப் பழகுமொழி-05இன் பாடம் (1):2:2இல் படித்திருக்கிறோம். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து வரும் சொல் (வருமொழி) க/ச/த/ப ஆகிய ஏதேனும் ஒரு வல்லின உயிர்மெய்யில் தொடங்கினால், நிலைமொழியான குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் க்/ச்/த்/ப் ஆகிய வல்லொற்று இணைந்து கொள்ளும் என்பது விதி. இவ்விதி, வருமொழியானது தனித்துப் பொருள் தரும் சொல்லாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

காட்டுகள்:

சுக்கு+குழம்பு = சுக்குக்குழம்பு; மாற்று+சாலை = மாற்றுச்சாலை; கட்டு+திட்டம் = கட்டுத்திட்டம்; பத்து+பாட்டு = பத்துப்பாட்டு

அதனாற்றான், எழுத்து, கருத்து, வாழ்த்து, பாட்டு ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருந்தபோதும் அவற்றுடன் வந்து ஒட்டும் தனித்துப் பொருள் தராத "கள்" விகுதியில் வலிமிகலாகாது என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

காட்டுகள்:

எழுத்து+கள் = எழுத்துகள்; கருத்து+கள் = கருத்துகள்; வாழ்த்து+கள் = வாழ்த்துகள்; பாட்டு+கள் = பாட்டுகள்.

ஒரு சொல் பகுக்கத் தக்க இரு உறுப்புகளைக் கொண்டிப்பதுபோல் தோன்றினாலும் இரு உறுப்புகளும் பொருள் தருவனவாக அமைந்திருந்தால் அச்சொல்லைப் பகுதி+விகுதி எனப் பிரித்துக் கூறலாகாது.

காட்டுகள்:

ஆடு+குட்டி = ஆட்டுக்குட்டி; தாய்+மடி = தாய்மடி; யானை+தந்தம் = யானைத்தந்தம்

மேற்காண்பவற்றுள் குட்டி, மடி, தந்தம் ஆகியன தனித்துப் பொருள் தரும் சொற்கள். எனவே, ஆட்டுக்குட்டி, தாய்மடி, யானைத்தந்தம் ஆகிய சொற்களை, "கூட்டுப்பகுதி" எனக் கூறுவர். அஃதாவது விகுதி அல்லாத, பகுதிகளின் கூட்டு என்பது அதன் பொருள்.

கூட்டுப்பகுதியை, "தொகைச்சொல்" என்றும் கூறுவர். தொகை என்றால் தொக்கி (மறைந்து) நிற்பதாகும். மேற்காணும் மூன்று காட்டுகளிலும் "இன்" எனும் ஐந்தாம் வேற்றுமை தொக்கி (மறைந்து) உள்ளது.

விளக்கம்:

ஆடு+இன்+குட்டி = ஆட்டின் குட்டி / ஆட்டுக்குட்டி; தாய்+இன்+மடி = தாயின் மடி / தாய்மடி; யானை+இன்+தந்தம் = யானையின் தந்தம் / யானைத்தந்தம்.

(2) 3.1 பகுபத வகைகள்

பகுபதங்கள் அறுவகைப் பெயர்களையும் காலங் காட்டும் இருவகை வினைகளையும் உள்ளடக்கியவை என்று நன்னூல் கூறுகிறது:

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே
- நன்னூல் 132.


- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

- அதி. அழகு

<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 | பகுதி-11 | பகுதி-12 | பகுதி-13 >

Comments   
கனி
0 #1 கனி 2010-03-20 11:20
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தாய்மொழியாம் நம் தமிழ் மொழியை இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதற்கு இதுபோன்ற தொடர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நமது இணையதளத்தில் எழுதும் பல அன்பர்களுடைய கருத்துக்களில் அதிகமான எழுத்துப் பிழைகள் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.

நம்முடைய சமுதாய மக்கள் இன்று இணையதளங்களை அதிகமாக உபயோகிக்கக்கூடி யவர்களாக இருந்தும் தமிழில் எழுதும் பொழுது அதிகமான எழுத்துப் பிழை ஏற்படுவது ஏன் என்பது தெரியவில்லை.

கருத்துகளை எழுதும் அன்பர்கள், எழுதிமுடித்தவுட ன் அதில் பிழைகள் இல்லாமல் இருக்க சரிபார்த்துக்கொள்ளவும்.

பொதுவாக தமிழ் மொழியை போசக்கூடியவர்கள ான நாமக்கு இன்னும் ழ‍‍ ‍உடைய உச்சரிப்பு, ள உடைய உச்சரிப்பு, ல உடைய உச்சரிப்பு சரியாக வருவதில்லை. என்னையும் சேர்த்துத்தான்

எழுதுவதிலாவது எழுத்துப்பிழையி ல்லாமல் எழுதுவதற்கு முயற்சிப்போம்.

வாழ்க தமிழ்
Quote | Report to administrator
r.i.sabry
0 #2 r.i.sabry 2010-03-20 22:25
அஸ்ஸலாமு அலைக்கும்.
சார்,
உங்கள் கட்டுரை முழுமையாக பிரிண்ட் எடுக்க முடியாது. வசதி செய்து தரவும்.
Quote | Report to administrator
அதி.அழகு
0 #3 அதி.அழகு 2010-03-21 21:28
அன்பான சகோதரர் ஸப்ரீ,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

இதே பக்கத்தில் 'சேவைகள்' எனும் பகுதிக்குக் கீழுள்ள ப்ரிண்ட்டர் ஐகானை அழுத்தினால் இப்பக்கத்தைப் ப்ரிண்ட் எடுத்துக் கொள்ள முடிகிறது.

உங்கள் ப்ரிண்ட்டர் செட் அப் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி!
Quote | Report to administrator
mohamad.nasar
0 #4 mohamad.nasar 2010-03-22 00:01
அஸ்ஸலாமு அலைக்கும்.
தயவுசெய்து உங்கள் ஆக்கங்களில் ப்ரிண்ட் எடுக்கும்போது a4-இல் ஒரு சில எழுத்துக்கள் குறைவாக வருகின்றது. தயவுசெய்து சரி பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்கின் றேன்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்