முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

கட்டுரையின் முதல் பகுதியினைப்டித்துவிட்டுத் தொடருங்கள்.

முஷ்ரிகீன்மத்தியில்முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட காரியம் என்பது போலவும்அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்துவராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக் காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக் குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்க வில்லை. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோகடமையையோ நிர்பந்திக்கவும் இல்லை.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை.அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன், 002:286)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், என்னால் முடிந்த விஷயங்களில்என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம். (முஸ்லிம்: 3803; புகாரி: 7204)

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்கவேண்டிய அவசியமில்லை. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும் .

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன.

குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காணஇயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்”என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ''ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள்.அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (முஸ்லிம்: 4849)

(உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோடு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவுமுக்கியத்துவம்வாய்ந்தஅந்தவஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோஅதுபோன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!)முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்." (அல்குர்ஆன 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள். (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

மேலும்,

மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்என்று கூறினார்கள். (புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத் தக்கது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக்காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக்கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்என்று அப்போது கூறினார்கள்.அல்லாஹ்வின் தூதரே!ஏன்?என்று நபித்தோழர்கள் கேட்டனர். இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாதுஎன்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.(திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொருஇடத்தில்நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் என்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால்சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்கவேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக்கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் முர்ஸல்வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள்அனுப்பியபடையினரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வது தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர்ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிகீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்”என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது. இப்படி விளங்கினால்திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். ஹிஜ்ரதஎப்பொழுது, யாருக்குக் கடமையாகுமஎன்பதையுமஇந்தியாவிலவாழுமமுஸ்லிம்களுக்கஅதகடமையஎன்பதையுமகுறித்தஇன்ஷஅல்லாஹஅடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

< பகுதி 1 | பகுதி 3 >

Comments   

ஜி.நிஜாமுத்தீன்
0 #1 ஜி.நிஜாமுத்தீன் -0001-11-30 05:21
அபூமுஹை, அல்லாஹ் உங்களுக்கு சிந்தனையாற்றலை இன்னும் அதிகப்படுத்தி வைக்கட்டும்.

ஹஸ்அம் கோத்திரத்தை நோக்கி படை அனுப்பப்பட்டதில ிருந்தே அந்தப் பகுதியினர் நபியின் கட்டுப்பாட்டுக் கு கீழ் அதுவரை வரவில்லை என்பதை விளங்கலாம். அங்கு வாழ்ந்த முஷ்ரிகீன்களுக் கு மத்தியில் முஸ்லிம்களும் வாழ்ந்துள்ளார்க ள். இருப்பினும் நபியிடமிருந்து படை வந்துள்ளது என்று தெரிந்தும் அவர்கள் முஷ்ரிகீன்களுக் கு உதவி இருக்க வேண்டும் (நமது மாநில மாமன் மச்சான் பழக்கம் போன்று) அவர்களுக்கு மத்தியில் நட்பு நீடித்திருந்ததா ல் நமது பகுதி ஆட்களை நாம் பாதுகாப்போம் என்ற தோரைணையில் அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் (இது ஒருவகை தேசிய வாதம்) எனவே அந்தப் பகுதி முஸ்லிம்களை எச்சரிக்கும் விதமாவே நபி(ஸல்) அந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள் ளார்கள்.

இது அந்தப் பகுதி மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட எச்சரிக்கை என்று விளங்கினால் குழப்பம் ஏற்படாது. அந்த எச்சரிக்கையை இன்றைக்கு எங்கும் சொல்ல முடியாது. ஏனெனில் நபியுடைய ராணுவம் இன்றைக்கு எந்தப் பகுதிக்கும் படையெடுத்து செல்லாது.

முஷ்ரிகீன்களுக் கு மத்தியில் வாழ்வதற்கான ஆதாரங்களை அபூமுஹை அடுக்கியுள்ளார் . சுலைமான் போன்றவர்களுக்க ு விளங்குமா..
Quote | Report to administrator
அபூ முஹை
0 #2 அபூ முஹை -0001-11-30 05:21
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி!

நீங்கள் கூறுவது போன்று தேசியவாதம் கூடாது என எச்சரிக்கிறது என்று பொருள் கொண்டாலும் அதை விடவும் “முஷ்ரிகீன்  மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாத ு'' என்ற கருத்து விரிந்த பொருள் கொண்டது என்று கருதுகிறேன்.

இக்கருத்தையே மற்ற நபிமொழிகளும் பிரதிபலிக்கின்ற ன உதாரணமாக:

''எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை மேற்கொண்டு அவர்களைப் போன்று நடக்கின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்' ' (அபூதாவூத், அஹ்மத்)

''மார்க்கத்தில் இல்லாததை உருவாக்குவது அனாச்சாரங்களாகு ம். அனாச்சாரங்கள் யாவும் வழிகேடாகும்'' (புகாரி. முஸ்லிம்)

''நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு காரித்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படு ம்'' (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

இந்த நபிமொழிகளெல்லா ம் முஷ்ரிகின்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள், முஷ்ரிகீன் கொள்கைகளைப் பின்பற்றி விடக் கூடாது என்றே எச்சரிக்கிறது.
Quote | Report to administrator
mumin
0 #3 mumin -0001-11-30 05:21
இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் முஸ்லீம்கள் இருக்கக்கூடாது - கட்டார் இமாம் கராடாவி பட்வா

இஸ்லாமுக்கு எதிராக உலகம் முழுவதும் போர் நடப்பதால், முஸ்லீம்கள் இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் வாழக்கூடாது, குடியுரிமை பெற்றிருக்கக்கூ டாது என்று பட்வா விதித்துள்ளார் டாக்டர் யூசூப் அல் கராடாவி என்ற கட்டார் நாட்டு இமாம்.
Quote | Report to administrator
வஹ்ஹாபி
0 #4 வஹ்ஹாபி -0001-11-30 05:21
//இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் முஸ்லீம்கள் இருக்கக்கூடாது - கட்டார் இமாம் கராடாவி பட்வா//

மேற்காணும் 'பட்வா'வுக்கு அவர் குர் ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ அளித்திருக்கும் சான்றுகள் யாவை?
Quote | Report to administrator
ஜி.என்
0 #5 ஜி.என் -0001-11-30 05:21
உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு பயங்கரத்துடன் தொடர்வதால் முஸ்லிம்கள் ஓரணியில் ஓரிடத்தில் (ஒரே நாட்டில் அல்லது பரப்பளவில்) வாழவேண்டும் என்ற எண்ணம் பரவலாக முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதன் வெளிபாடுதான் அறிஞர் யூசுப் கர்ளாவியின் ஃபத்வாவாகும்.

ஆனால் அதற்கு தற்போது எத்தகைய சாத்தியமும் இல்லை என்பதை யூசுப் கர்ளாவி உட்டப சமுதாய மற்றும் மார்க்க தலைவர்கள் விளங்கித்தான் உள்ளார்கள்.

முஸ்லிம் நாடுகளின் ஐக்கியம் ஒன்றே இதற்கான துவக்கமாக அமையும். ஆனால் அதற்கெல்லாம் எந்தம வகையிலும் வழி தெரியாத அளவிலேயே கிறிஸ்த்தவ மற்றும் ஆதிக்க வெறி பிடித்த அமேரிக்கா முஸ்லிம் நாட்டு மன்னர்களை தன் கைவசம் வைத்துள்ளது.
Quote | Report to administrator
அபுசுஃபா
0 #6 அபுசுஃபா -0001-11-30 05:21
இஸ்லாமுக்கு எதிராக உலகம் முழுவதும் போர் நடப்பதால், முஸ்லீம்கள் இஸ்லாமிய நாடுகள் அல்லாதவற்றில் வாழக்கூடாது, குடியுரிமை பெற்றிருக்கக்கூ டாது என்று பட்வா விதித்துள்ளார் டாக்டர் யூசூப் அல் கராடாவி என்ற கட்டார் நாட்டு இமாம். ---- mumin.
**********************

அய்யா mumin அதற்கென்ன?

கட்டார் நாட்டு கராடாவி பட்வா விதித்த உடன் நாங்கள் எல்லாம் இந்தியாவிலிருந் து வெளியேறி விட வேண்டுமா?

எனக்கு எனது தாய்நாடான இந்தியாவிலிருந் து வெளியேற விருப்பம் இல்லை. கட்டார் கராடாவி என்ன செய்து விடுவார்?

சரி அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது என்றே வைத்துக் கொள்வோம்.

உலகில் இஸ்லாமிய நாடு என ஒன்று இருக்கின்றதா?

அதாவது இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்த ப்பட்டு இஸ்லாமிய அடிப்படையிலான கலீஃபா முறையிலான ஆட்சி நடைபெறுகின்றதா?

எனில், அது எந்த நாடு என முதலில் காட்ட சொல்லுங்கள். அப்படியே அந்த நாட்டில் நமக்கு குடியுரிமையையும ் வாங்கி அனுப்ப சொல்லுங்கள். அதன் பின்னர் வேண்டுமெனில் இந்தியாவிலிருந் து வெளியேறுவதைக் குறித்து ஆலோசிப்போம்.

அப்படியே mumin எந்த இஸ்லாமிய நாட்டில் தற்போது குடியுரிமை பெற்றுள்ளீர்கள் என்பதையும் தெரிவித்து விடுங்கள்.

உளறும் பொழுது சற்றாவது பொருந்தும் விதத்தில் உளறினால் பதில் கூற சுவாரசியமாக இருக்கும்.
Quote | Report to administrator
இப்னு ஹமீது
0 #7 இப்னு ஹமீது -0001-11-30 05:21
திரு. mumin,

கட்டார் நாட்டு இமாம் கராடாவி சொன்னதை நீங்களும் உங்களைப் போலவே கருத்து சொன்ன Sulaiman என்பவரும் இந்தியாவை விட்டு பொட்டியைக் கட்டிக் கிளம்புங்கள். பிறகு எங்கு குடி பெயர்ந்தீர்கள் என்று சொல்லுங்கள். பிறகு உங்களோடு தொடர்ந்து பேசலாம் என இருக்கிறேன்.
Quote | Report to administrator
Sulaiman
0 #8 Sulaiman -0001-11-30 05:21
சகோதரர் இப்னு ஹமீது,
நான் கட்டாரில்தான் இருக்கிறேன். இந்தியாவை விட்டு எப்போதோ வெளியெறிவிட்டேன்.
சகோதரர் முமின் தன் சொந்த கருத்துக்களை இங்கே எழுதவில்லை. எழில் என்பவரது பதிவிலிருந்து அப்படியே காப்பி எடுத்து இங்கே போட்டிருக்கிறார ். இப்படி ஒரு பதிவு எழுதப்பட்டிருக் கிறது என்பதை சுட்ட அப்படி காட்டியிருக்கலாம்.
சகோதரர் அபுசுஃபா, இஸ்லாமிய அடிப்படையிலான காலிஃபா ஆட்சி எங்கே நடைபெறுகிறது என்று கேட்டிருக்கிறார ். முழுமையான இஸ்லாமிய அடிப்படையிலான காலிஃபா ஆட்சி என்பது இஸ்லாமியரின் குறிக்கோள். அதனை நோக்கி செல்வதற்கு இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுமே வழிதான். (துருக்கி இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இருந்தாலும் அது இஸ்லாமிய சட்டதிட்டங்களை ஒப்புக்கொள்வதில்லை)
//''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்”//

என்றுதான் நேரடியாக சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு இங்கே வளைத்து இஷ்டம்போல உள்ளே எதையெதையோ செருகி சகோதரர் அபுமுஹை பொருள் தந்திருக்கிறார்கள்.

முழு கட்டுரைக்கும் காத்திருக்கிறேன ்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #9 அபூ முஹை -0001-11-30 05:21
//''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்//

//என்றுதான் நேரடியாக சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு இங்கே வளைத்து இஷ்டம்போல உள்ளே எதையெதையோ செருகி சகோதரர் அபுமுஹை பொருள் தந்திருக்கிறார் கள்.//

சகோதரர் சுலைமான்,
முஷ்ரிகின்களோட ு முஸ்லிம்கள் சேர்ந்து வாழலாம் என்பதற்கு நாமும் திருக்குர்ஆன், நபிவழியிலிருந்த ு நேரடியான ஆதாரங்களை எழுதியிருக்கிறே ாம்.

சும்மா வளைத்து இஷ்டம் போல் செருகி எழுதியிருக்கிறே ன் என்று வெறும் வார்த்தையால் இல்லாமல், எங்கே வளைக்கப்பட்டிரு க்கிறது, எங்கே செருகப்பட்டிருக ்கிறது என்பதை தக்க ஆதாரங்களுடன் எழுத வேண்டும்.
Quote | Report to administrator
muslimeen
0 #10 muslimeen -0001-11-30 05:21
பிஸ்மில்லாஹிர்ர ஹ்மானிர்ரஹீம்

குர் ஆன் ஹதீஸோடு நடைமுறை சாத்தியங்களையும ் புரிந்துக்கொள்ள ுங்கள்.நடைமுறைக ்கு ஒவ்வாததையும் மனிதனால் இயலாததையும் அல்லாஹ் கூறவில்லை.இன்று இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களையும் ஏற்றுக்கொள்ள எந்த முஸ்லிம் நாடு தயாராக உள்ளது?.வேலை வாய்ய்ப்புக்கு சென்றோரை எப்போது வெளியேற்றலாம் என்றுதான் அந்த நாடுகள் காத்துக்கொண்டிர ுக்கின்றன.
இந்தியா சரியான தாவாவுக்கான ஒருகளம்.முஸ்லிம ் சமூகத்தை எல்லா விதத்திலும் சக்திப்படுத்தி இஸ்லாத்தை இங்கு நிலைநாட்டுவதுதா ன் இந்திய முஸ்லிமின் தலையாய கடமை.இதை புரிந்துக்கொள்ள ாமல் வீண் வாதங்களில் ஈடுபடுவதில் என்ன பயன்?.டாக்டர் யூசுபுல் கர்தாவி அவர்கள் தற்காலத்தின் தலைசிறந்த அறிஞர்.எடுத்தேன ் கவிழ்த்தேன் என ஃபத்வாக்கொடுக்க க்கூடியவரல்லர் அவர்.அவர்க்கொடு த்த ஃபத்வா காப்பியை காண்பியுங்கள்.
Quote | Report to administrator
இப்னு ஹமீது
0 #11 இப்னு ஹமீது -0001-11-30 05:21
திரு. Sulaiman,

உங்கள் கூற்றுப்படி நீங்கள் இந்தியாவை விட்டுப் பொட்டியைக் கட்டி விட்டு 'எப்போதோ' கட்டாருக்குப் போய் விட்டீர்கள். இனி இந்தியாவிற்கு வர மாட்டீர்கள், அப்படித்தானே?

உங்களின் பாஸ்போர்ட், கட்டார் ரெசிடென்ஸ் விபரங்களைத் தெரிவித்தால் கராடாவி அவர்களின் கருத்துக் குறித்த உங்கள் கருத்தை கட்டார் அரசுக்கும், இந்தியாவிற்கு நீங்கள் திரும்பி வரப்போவதில்லை என்ற உங்கள் சங்கற்பத்தை இந்திய இம்மிக்ரேஷனுக்க ும் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

நன்றி!
Quote | Report to administrator
அபுசுஃபா
0 #12 அபுசுஃபா -0001-11-30 05:21
//நான் கட்டாரில்தான் இருக்கிறேன். இந்தியாவை விட்டு எப்போதோ வெளியெறிவிட்டேன்.//


நானும் தான் கட்டாரில் இருக்கிறேன். இந்தியாவை விட்டு எப்போதோ வெளியேறி விட்டேன். ஆனால் கட்டாரின் முழு குடியுரிமை மட்டும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் இரு வருடங்களுக்கு ஒருமுறையாவது என்னை கழுத்தைப் பிடித்து கட்டாரிலிருந்து தள்ளி விடுகின்றார்கள்.

நான் போக மாட்டேன் என அடம்பிடிக்க முடியுமா? என்ன செய்வது? சகோதரர் சுலைமான் குறிப்பிடும் அதே காஃபிர் நாடு இந்தியாவிற்குத் திரும்ப செல்ல வேண்டி உள்ளதே?

கட்டாரின் இமிக்ரேசன் சட்டதிட்டத்தை அவ்வாறு வகுத்து வைத்துள்ளனர். நானும் எங்காவது புகுந்து கட்டாரின் குடியுரிமையைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையில் விசாரித்துப் பார்த்தேன். தற்போது இங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை கொடுக்கமாட்டார் களாம். கட்டார் தனி நாடாக ஆன பொழுது அதற்காக உதவிய சில பாகிஸ்தானிகளுக் கு மட்டும் குடியுரிமை கொடுத்து இராணுவத்தில் சேர்த்திருக்கின ்றனர். மற்றபடி எவருக்குமே நிரந்தர குடியுரிமை கொடுக்க மாட்டார்களாம். அதிகப்படியாகப் போனால் ஒரு 5 வருடம் அவ்வளவே.

அது காலாவதியானால் மீண்டும் புதிப்பிக்க வேண்டும். இல்லையெனில் ஒரேயடீயாக ஆப்பு தான்.

இந்நிலையில் சுலைமானுக்கு எப்படி கட்டாரில் நிரந்தர குடியுரிமை கிடைத்ததோ? ஒருவேளை கடாராவி வாங்கிக் கொடுத்திருப்பாரோ?

இனி சுலைமான் கூறட்டும். மேலே கூறியது பொய் தானே?
Quote | Report to administrator
அபூ முஹை
0 #13 அபூ முஹை -0001-11-30 05:21
//சகோதரர் அபுமுஹை தன் கருத்துக்களை எழுதினார். நான் அவரது முழு கட்டுரைக்கும் காத்திருக்கிறேன ் என்று எழுதியிருந்தேன்.//

சகோதரர் சுலைமான்,

நீங்கள் முக்கியமாக வைத்தக் கருத்தின் கரு - //''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்// - இதுதான்.

இணைவைப்பவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் வாழலாம் என்பதற்கு இஸ்லாத்தின் பல ஆதாரங்களில் சிலவற்றை இக்கட்டுரையில் சுட்டியிருக்கிற ோம். நாம் எழுதியவற்றில் மறுப்பு இருந்தால் அதை நேரடியாகக் குர்ஆன், சுன்னா ஆதாரங்களைக்கொண ்டு நீங்கள் மறுக்க வேண்டும். அதைவிடுத்து...

//குஃபார் நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற வேண்டும் என்பது என் கருத்து மட்டுமல்ல. இதன் அடிப்படையில் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன .
ஷேக் அப்துலஜீஸ் பின் ஸாலீஹ் அல்ஜபரு எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன்//

...முஸ்லிம்கள் காஃபிர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை நிலைநாட்ட சில அறிஞர்கள் எழுதியப் புத்தகங்களை அப்படியே பரிந்துரைப்பது சரியல்ல! முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் வாழக்கூடாது என்று சொல்லும் அறிஞர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க குர்ஆன், சுன்னாவிலிருந்த ு எதை ஆதாரமாக வைக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம். இதல்லாமல் சுயமாகக் கருத்தைச் சொல்லும் எந்த அறிஞரின் கருத்தும் முஸ்லிம்களிடம் எடுபடாது.

எனவே இஸ்லாமிய அறிஞர்கள் சொன்னார்கள் என்று அறிஞர்களின் புத்தகத்தைப் படித்து அதை இங்கே பரிந்துரைக்க வேண்டாம். அப்துல் அஜீஸ் பின் ஸாலிஹ் அல்ஜபரு என்ற அறிஞர், ''முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழக்கூடாது'' என்று எழுதியிருக்கிறா ர் என்றால் அதற்கு குர்அன், சுன்னாவிலிருந்த ு ஆதாரங்களைக் காட்டுவது யாவை? என்பதை இங்கே எடுத்து எழுதுங்கள் பரிசீலிப்போம் இன்ஷா அல்லாஹ்.

மேலும், ஹிஜ்ரத் பற்றிய பகுதி -3 கட்டுரையை சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக ்கு அனுப்பியுள்ளேன் . நோன்பு, மற்றும் பெருநாள் விஷேஷங்கள் கழிந்தே பரிசீலனை செய்து பதிவு செய்வார்கள் என்று கருதுகிறேன். ஹிஜ்ரத் என்பது அது தனித் தளம். அதற்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்பில்லை.

இங்கு மீண்டும் சொல்வது இதுதான்,

//''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்//

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழக் கூடாது என்பதற்கு நீங்கள் வைத்த நபிமொழி. இந்த நபிமொழிக்கான விளக்கத்தை எழுதி, இந்தக் கட்டுரையில் உங்கள் வாதம் சரியில்லை என்று நிறுவப்பட்டிருக ்கிறது. இதன் மீதான மறுப்பு உங்களிடம் இருந்தால் எழுதலாம். அதை விட்டு, சொன்தையேத் திரும்பத் திரும்ப எழுதி மற்றவர்களின் நேரத்தை விரயம் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்கி றேன் நன்றி!
Quote | Report to administrator
அபுசுஃபா
0 #14 அபுசுஃபா -0001-11-30 05:21
சகோதரர் சுலைமான் அவர்களுக்கு...

அப்படியே நீங்கள் கட்டாரில் நிரந்தரக் குடியுரிமை தான் பெற்றுள்ளீர்கள் எனில், கண்டிப்பாக என்னைத் தொடர்பு கொள்ளவும். என் கட்டார் தொலைபேசி எண்: 4503145.

மேலும், குடும்பத்தோடு இந்தியாவிலிருந் து வெளியேறி கட்டாரில் நிரந்தரமாகக் குடியேற்றி விட்டீர்களா என்பதையும் தெரிவிக்கவும். ஏனெனில் எனக்கு நான் மட்டும் இந்தியாவை விட்டு வெளியேறி குடும்பத்தை அங்கேயே காஃபிர்களுக்கு இடையே வாழும் முஷ்ரிக்குகளாக விட்டுவிட மனமில்லை! நீங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
Quote | Report to administrator
அதி. அழகு
0 #15 அதி. அழகு -0001-11-30 05:21
//முட'மின் தனது சொந்த கருத்துக்களை இங்கே எழுதவில்லை என்பதும், எழில் என்பவரது பதிவிலிருந்து அப்படியே காப்பி எடுத்து தான் இங்கே போட்டார் என்பதும் சிலை'மானுக்கு எப்படித் தெரிந்தது?//

அதானே!

இறை நேசன் ஏற்கனவே ஜயராமனைப் பற்றி 'மடராமனுக்கு ஜே' என்று ஒரு பதிவு எழுதி இருந்ததும் அதையடுத்து அவன் மாட்டிக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது.

ஐயா சுலைமான்,
உங்களுக்கு இங்கு என்ன வேணும்? தெளிவாச் சொல்லிட்டீங்கன் னா தருவதற்கு வசதியாக இருக்கும்.

இல்லேன்னா ஒங்கபாடு இறை நேசன் பாடு.
Quote | Report to administrator
mumin
0 #16 mumin -0001-11-30 05:21
இங்கே நான் எழுதியதை எடிட் செய்து பிரசுரித்ததால் இந்த குழப்பம் நேர்ந்துள்ளது. எழிலின் பதிவு பிரபலமானது. அதிலிருந்து எடுத்து போட்டேன் என்று இணைப்பை கொடுத்திருந்தேன ். அது என் பின்னூட்டதிலிரு ந்து நீக்கப்பட்டுள்ள து. எழிலின் பதிவு எல்லோரும் படிக்கும் பதிவு. அதிலிருந்து எடுக்கப்பட்டது என்று சுலைமானுக்கு தெரிந்திருப்பதி ல் ஆச்சரியம் என்ன?
Quote | Report to administrator
MOPHAMED ALI JINNAH
0 #17 MOPHAMED ALI JINNAH -0001-11-30 05:21
//எழிலின் பதிவு பிரபலமானது.???? ?????? அதிலிருந்து எடுத்து போட்டேன் என்று இணைப்பை கொடுத்திருந்தேன்.mumin,//

எழில் என்னும் தியாகப்போராளி .

முஸ்லிம் பெண்கள் மீது அக்கறைப்பட்டு அவர்களின் விடுதலைக்காக வலைப்பூவில் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கும் எழில் என்ற தியாகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த நபருக்கு இந்து மதத்தில் பெண்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதில் எந்த அக்கறையும் இல்லை. பெண் அர்ச்சகர் விவகாரம் முதல் மாதவிலக்குக் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப் படுவது வரை இந்து மத்தில் பெண்ணடிமைத் தனம் பற்றிய எந்த விவாதத்திலும் இவருக்கு அக்கறை இல்லை.

ஆனால் எங்கே முஸ்லிம் பெண்கள் புரட்சிக்கு தயாராகிறார்களோ அங்கே இவர் தவறாமல் ஆஜராகி அவர்களுக்காக இலவசமாக வாதாடும் வக்கீலாகி விடுவார்.

இசுலாம் எப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறது, கிறிஷ்துவர்கள் எப்படி மதமாற்றம் செய்கிறார்கள் என்று கேட்டால் மிக விளக்கமாக ஆதாரங்களுடன் விவாதம் செய்யுவர்.

கிறிஷ்துவத்தின் குறைபாடு பற்றி கிறிஷ்துவ நாத்திகன் எழுதினால் அது இவருக்கு ஆதாரம். இசுலாம் பற்றி இசுலாமியர் விமர்சித்தால் இவருக்கு அது மிகப்பெரிய பொக்கிஷம். இந்து மதத்தின் சீர்கேடுகள் பற்றி இந்து நாத்திகன் எழுதினால் அது மட்டும் மதத்துவேஷம்.

இந்து நியூஸ் நெட்வொர்க் (INN :-)) என்று வைத்துக் கொண்டு மேலே கண்ட அத்தனையும் செய்யும் இந்த சாதனையாளர் தாய்மதம்? திரும்பிய இசுலாமிய, கிறிஷதுவர்கள் பற்றி புள்ளி விவரங்களும் அள்ளி விடுவார்.

வாழ்க எழிலரசரின் எழிலான சேவை.
mahadevanmayon.blogspot.com/.. ./...
Quote | Report to administrator
mumin
0 #18 mumin -0001-11-30 05:21
உண்மை. ஆனால் என்ன செய்வது? எழில் பதிவு ஏராளமானவர்கள் படிக்கும் பதிவாக இருக்கிறதே!
Quote | Report to administrator
safar
0 #19 safar -0001-11-30 05:21
Ipporhu muminukku enna vendum? kuzappuvathai niruththi thelivaaki vittaal nalladhu
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #20 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
எழில் = R.S.S. mumin = ???

//எழில் பதிவு ஏராளமானவர்கள் படிக்கும் பதிவாக இருக்கிறதே!//
:-))) :-)))

ஏன்?? இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாடுகள்
மீதும் அளவிட முடியாத வீண் புரட்டுகளையும் அவதூறுகளையும் அனுதினமும்
; எழில் தன் ' HINDU NETWOK ' ;என்ற எழிலின் பதிவில் பதிந்து வருவதாலேயா?
Quote | Report to administrator
இறை நேசன்
0 #21 இறை நேசன் -0001-11-30 05:21
//எழில் பதிவு ஏராளமானவர்கள் படிக்கும் பதிவாக இருக்கிறதே!//

அய்யோ அய்யோ அய்யோ. ஏனய்யா இப்படி கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள் ? ரமலான் முடிந்து ஷவ்வாலின் 6 நோன்புகளில் இருப்பதால் சிரித்த சிரிப்பில் வயிறெல்லாம் விண் விண்ணென வலிக்கிறது. வேதனையில் நான் நோன்பை விட்டு விட்டால் அதற்கான தண்டனை mumin அய்யாவுக்குத்தா ன் வரும். பார்த்துக் கொள்ளுங்கள்!!!

காமடி செய்வதற்கு ஒரு அளவே இல்லையா அய்யா? ஆனாலும் உங்களுக்கு குறும்பு ரொம்ப ஜாஸ்தி தான் அய்யா.

சரி அதை விடுங்கள்.

//சகோதரர் முமின் தன் சொந்த கருத்துக்களை இங்கே எழுதவில்லை. எழில் என்பவரது பதிவிலிருந்து அப்படியே காப்பி எடுத்து இங்கே போட்டிருக்கிறார்.//

நீர் அப்படியே காப்பி எடுத்தது எப்படிய்யா சிலை'மானுக்குத் தெரிந்தது?

ஒருவேளை நீரும் கட்டாரில் அவருடன் தான் உள்ளீரோ?

சரி அதையும் விடும். நீர் எப்படி? இந்தியாவிலிருந் து கூண்டோடு ஹிஜ்ரத் செய்து தற்போது எங்கு டேரா அடித்துள்ளீர்கள ்? சிலை'மானுடன் கட்டாரிலா?. எனில், கட்டாருக்கு நானு8ம் ஒரு அப்ளிகேசன் போட எண்ணியுள்ளேன்.

மேலே சகோதரர் அபுசுஃபா கேட்டுக்கொண்டபட ி சகோதரர் சிலை'மான் அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டால் சகோதரர் அபுசுஃபா அந்த தகவலை இங்கு தயவு செய்து தெரியபடுத்தவும் . இது போன்று இந்தியாவிலிருந் து ஹிஜ்ரத் செய்ய நாட்டமுள்ள மற்றவருக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா?

இல்லையெனில், சகோதரர் mumin மற்றும் சிலை'மானே நேரடியாக அதனுடைய வழிமுறைகளை இங்குக் குறிப்பிடலாமே. சமுதாயம் இஸ்லாமிய அடிப்படையில்
செயல்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட தாங்கள் இருவரும் கண்டிப்பாக கட்டாரில் நிரந்தர குடியுரிமை பெற செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இங்கு கூறுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன ் காத்திருக்கின்றேன்.

அன்புடன்
இறை நேசன்.
Quote | Report to administrator
இப்னு ஹமீது
0 #22 இப்னு ஹமீது -0001-11-30 05:21
'இஸ்லாத்திற்கெத ிரான குப்பைகள் எங்கிருந்தாலும் இங்கே அள்ளப்படும்' என்ற கொள்கையை உடைய, எல்கேஜித் தனமான வாதங்களால் infamous ஆன, பதிவின் பெயர் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் உள்ளடக்கத்திலும ் கழிசடைகளைக் கொண்ட 'அந்தப்' பதிவுக்கு mumin கொடிபிடிக்கிறார ் என்றால், நம் புரிதல் எளிமையாகிவிடுகிறது.

சந்தடிசாக்கில் கட்டார் ரெசிடென்சி குறித்த விபரங்களைத் தராமல் போனால் எப்படி திரு. Sulaiman சார்?

உண்மையிலேயே நீங்கள் அப்பாவித் தனமாக கட்டார் இமாம் சொன்னதைப் புரிந்து கொண்டு சிரமேற்கொண்டு 'எப்போதோ' இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தால், உங்கள் பிராக்சி mumin என்பவர் சுட்டிய கழிசடைப் பதிவுகளில் மனம் துணுக்குறாமல், இறைவனின் தூதர்களில் ஒருவர் பெயரை புனைப்பெயராக அல்லாமல் உண்மையிலேயே ஏற்று தூய இஸ்லாத்தைப் பின்பற்ற வாருங்களேன்.
Quote | Report to administrator
அதி. அழகு
0 #23 அதி. அழகு -0001-11-30 05:21
கட்டாருக்கு ஹிஜ்ரத் செய்து செட்டிலாகி விட்ட இந்தியரின் கட்டார் முகவரி இங்கு வெளியிடப் படவேண்டும். அதற்குப் பின்னரே அவருடைய பின்னூட்டங்கள் இங்குப் பதிக்கப் படவேண்டும்.

கட்டுரையின் கரு திசை திருப்பப் படாமலிருக்க இதுவே சரியான தீர்வாக இருக்கும்.
Quote | Report to administrator
மரைக்காயர்
0 #24 மரைக்காயர் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபூமுஹை அவர்கள் தமது வழக்கமான தெளிவான நடையில் சிறந்த விளக்கங்களை முன்வைத்திருக்க ிறார்கள். அவருக்கு நன்றி.

இக்கட்டுரைக்கு இஸ்லாமிய புனைப் பெயர்களில் பின்னூட்டமிட்ட அன்பர்கள் சிலர் 'எழில்' என்பவரின் வலைப்பதிவு ஏராளமானவர்கள் படிக்கும் பதிவாக இருப்பதாக குறிப்பிட்டு இலவச விளம்பரம் கொடுத்திருந்தனர ்.

இஸ்லாமின் அதிவேக வளர்ச்சியை கண்டு அதிர்ந்து, அதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தின ால்தான் தங்களது 'பொழப்பு' தொடர்ந்து நடக்கும் என்ற காழ்ப்புணர்ச்சி யில் செயல்படும் கும்பலைச் சேர்ந்தவர் இந்த எழில் என்பவர். தனது மதத்தைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை எழுத வக்கற்ற இந்த நபர் இஸ்லாம் பற்றிய எதிர்மறைக் கருத்துகளை வெளியிடுவது மூலமாகத்தான் தனது மதத்தைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். இந்து நியூஸ் நெட்வொர்க் என தனது பதிவில் பதிந்து வைத்திருக்கும் இந்நபரிடம் அவரது மதத்தைப் பற்றி நான் கேட்ட சில அடிப்படையான கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆரியசமாஜம் என்ற அமைப்பிற்கு தனது பதிவில் இலவச விளம்பரம் கொடுக்கும் இந்த நபர், ஐயாயிரம் பத்தாயிரம் வாங்கிக் கொண்டு இவர்கள் தமது மதத்திற்கு ஆள் பிடிக்கும் 'சேவை' செய்ததைப் பற்றி பத்திரிக்கைகள் கிழிகிழி என்று கிழித்தபோது எங்கே போயிருந்தார்?

எழிலின் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சத்தியமார்க்கம் தளம். உங்கள் இலவச விளம்பரங்கள் இங்கே வேண்டாம். அதையெல்லாம் 'ஏராளமானவர்கள் படிக்கும்' அவரது பதிவிலேயே வைத்து கும்மியடித்துக் கொள்ளுங்கள்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்