முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், "இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை" என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித் தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப் பட்டிருந்தது.

அதில் சுலைமான் என்பவர், "இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்" என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரியான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:

முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (4:97) - சுலைமான்.

முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

"இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்" என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரின் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்தும் அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் கூட அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப்படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது...

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, "காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை" எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்கு விளக்க வந்திருக்கிறார். - (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) - அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் கூறவராத ஒரு கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?" என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப்பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்.

[நபி(ஸல்) அவர்களின் காலத்தில்] முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்:

(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி 'இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் து றந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத்ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 'குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது' என்று இவர்கள் கூறினர். பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்... (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கியர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 'இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம்கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். - சுலைமான்.

- இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

பகுதி 2 >

Comments   

haneefm
0 #1 haneefm -0001-11-30 05:21
//இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள ். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்க ள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.//
மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 'இவ்வெற்றிக்குப ் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)


நண்பர் ஆபு முகையின் விளக்கங்கள் வரவேற்க்கும் வவையில் உள்ளது, தொடரும் உங்கள் விளக்க ஆக்கங்களுக்கு வாழ்த்துகள்
ஹஃணிப்- குவைத்
Quote | Report to administrator
Sulaiman
0 #2 Sulaiman -0001-11-30 05:21
சஹி சுனான் அபுதாவுத் அத்தியாயம் 14, எண் 2473

ஹித்ததுன் கூறுவது இருக்கும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் இருக்கும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரைக்கும் ஹித்ததுன் கூறுவதும் இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

மெக்காவை வெற்றிகொண்டபின் னால் மெக்காவிலிருந்த ு ஹிஜ்ரத் கிடையாது என்றுதான் அறிவித்துள்ளார் கள். அதிலிருந்து ஹிஜ்ரத் செய்யவேண்டியதில ்லை. அதனை நோக்கி ஹிஜ்ரத் செய்யவேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்
Quote | Report to administrator
ஜி.நிஜாமுத்தீன்
0 #3 ஜி.நிஜாமுத்தீன் -0001-11-30 05:21
சகோதரர் அபூ முஹை அவர்களுக்கு. தங்கள் கட்டுரைப் படித்தேன். மக்கா வெற்றிக்கு பிறகு ஹிஜ்ரா கிடையாது என்பது பொதுவான கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் குறிப்பிட்ட ஹதீஸில், 'ஹிஜ்ரத் கிடையாது என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து அறப்போர் உண்டு போருக்கு அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்' என்று கூறியுள்ளார்கள் . இதிலிருந்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் கிடையாது என்பது விளங்குகிறது. ஹிஜ்ரத் தேவையில்லை ஏனெனில் முஸ்லிம்கள் இங்கு (இஸ்லாமிய ஆட்சியாளரின் கீழ்) சுதந்திரமாக வாழ வழியுள்ளது. ஆட்சியாளர் போருக்கு அழைத்தால் இந்த குடிமக்கள் அவருடன் புறப்பட வேண்டும் என்ற சட்டம் தெளிவாக விளங்குகின்றது.

இந்த நிலை இல்லாதவர்களின் ஹிஜ்ரத்தை தடுக்க ஆதாரம் ஒன்றும் இல்லை என்று கருதுகிறேன். மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் முஸ்லிம்கள் ்நாடு துறந்தால் இடம் கிடைக்கும் என்ற நிலையைக் கண்டால் (அன்றைய அபிசீனியா மற்றும் மதீனா போன்ற இடங்கள்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொள்ளலாம். சுலைமானின் வாதங்கள் சரியில்லை என்றாலும் அதற்கு மறுப்பு என்ற பெயரில் ஹிஜ்ரத்தை இன்றைக்கு மறுப்பது சரியாகத் தெரியவில்லை.
Quote | Report to administrator
Munthasir
0 #4 Munthasir -0001-11-30 05:21
I dont think, i am intellectually elegible to take a stance in discussion of this kind, but i want to bring few questions to the author's attention so that he would address those concerns as well.

1. First of all both 'Abu muhay' and 'sulaiman' has failed to mention the historical background. When Muslims migrated, they migrated to Caliphate. It is not country, It is a state which is establishing Islam as a law. What has been approved in sight of ALLAH is encouraged and what is disapproving to ALLAH is forbidden. Now do we have caliphate ? Same can be said for those who argue that 'secular' country is not like Kuffar country. Can secular country be equal to Islamic caliphate ? Islamic governments in the past, even if it is not righly guided they were implementing what was revealed as a law. Jus' because islam has traits of secularism like allowing other people to worship whatever they chose as an individual, it doesn't mean secularism is islamic.

2. Retrospective question.

If we assume secular country as a non muslim country, does that make our ancestors kaffir as well ? Not necessary. Islam was the source of law during Mughal dynasty, even if its not, contemporary caliphate present in turkey was implementing Islam as a law and was accepted as a defacto protector of muslims all over the world until its demise. Proof for the turkish caliphate influence in India can be understood by studying the reasons of Khilafat movement started in 1945 in India.

3. The whole question of Dar al Harb and Dar al Islam producing mixed emotions commenced with the demise of caliphate in turkey by 1921. So if author includes the perspective of caliphate while he addresses this issue it would be more beneficial.

4. At one instance in the above article author implies hijrath isn't allowed anymore but Jihad is. Can muslim join any Jihad, especially of Alqaeda ? If we simply take that particular hadith as a proof for invalidity of hijrath in modern days, then muslims are duty bound to listen to Al qaeda.

Any good came from ALLAH and all the bad from me.
Quote | Report to administrator
Sulaiman
0 #5 Sulaiman -0001-11-30 05:21
என் வாதங்கள் சரியில்லை என்றால் அதனை சரியாக எடுத்துவைக்கவில ்லை என்றே பொருள்.

இங்கே அபுமுஹை கூறியிருப்பது போல யார் வேண்டுமானாலும் தான் தோன்றித்தனமாக ஜிஹாத் செய்துவிட முடியாது. மெக்காவை வெற்றிக்கொண்ட பின்னர் இஸ்லாமிய அரசின் கீழ்தான் ஜிஹாத். இஸ்லாமிய அரசின் கீழ் இஸ்லாமிய சட்டங்களின் கீழ் இஸ்லாமிய தலைமையின் கீழ்தான் ஜிஹாத் இருக்கும். அபுமுஹை சொல்வது போல செய்வதென்றால், அல்குவேதா போன்ற பயங்கரவாதமாகிவி டும். இஸ்லாமியர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் மட்டுமே வரவேண்டும் என்பதற்காகத்தான ் ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்ட ுள்ளது.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #6 அபூ முஹை -0001-11-30 05:21
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! சுலைமான் எ்னபவர் 004:097வது வசனத்தை மேற்கோளாகக்காட ்டி இந்திய முஸ்லிம்கள் நாடு துறந்த செல்ல வேண்டும் என்று அந்த வசனத்துக்கு விளக்கம் கொடுத்திருந்தா ர். இஸ்லாம் மேலோங்கவும், இஸ்லாத்தை நிலைநாட்டவும் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்களின் உதவி மிக அவசியமாக இருந்தது. அதனால் அன்று ஹிஜ்ரத் வலியுறுத்தப்பட் டது.

மார்க்க வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இல்லை! அதனால் அவர்கள் ஹிஜ்ரத் செல்ல வேண்டிய அவசியமில்லை, அது கடமையும் இல்லை என்றே சொல்லியிருந்தே ன். ஹிஜ்ரத் பற்றிய இரண்டு கருத்துக்கள் இருப்பதை அடுத்த பகுதியில் கீழ்வரும் ஹதீஸோடு இணைத்துச் சொல்ல நாடியிருந்தேன்.

''நபி (ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக ்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்க ள். ''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்'' என்று அப்போது கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன்?'' என்று நபித்தோழ ர்கள் கேட்டனர். ''இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள ்.'' (நூல், திர்மிதீ)

இன்றைய நிலையில் இந்த ஹதீஸை முஸ்லிம்களால் செயல்படுத்த முடியாது. காரணம் மக்கா, மதீனா என்ற இரூர்களைத் தவிர உலகில் முஷ்ரிகீன்கள் வசிக்காத இடமேயில்லை! செயல்படுத்த முடியாத ஒரு அமலை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு க் கட்டளையிட்டிருப ்பார்களா? என்பதுவே இங்கே சிந்தனைக்குரியத ு. இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் இது பற்றிய விளக்கம் வரும்போது, இன்றைய நிலையில் ஹிஜ்ரத்தைச் செயல்படுத்த முடியுமா? என்பதையும் குர்ஆன், சுன்னாவின் பார்வையில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

நன்றி!
Quote | Report to administrator
அபூ முஹை
0 #7 அபூ முஹை -0001-11-30 05:21
//சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.//

சுலைமான் ஐயா!

போர் என்பது இஸ்லாமிய ஆட்சிதான் நடத்த வேண்டும். அதைத் தனியொரு மனிதனோ அல்லது குழுவாகவோ சட்டத்தைக் கையிலெடுப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. இதை பல இடங்களில் நாம் கூறியிருக்கிறோம்.

சொந்த மண், சொந்த உடமை என்று சொன்னது ஒருவருக்குச் சொந்தமான நிலம், வீடு, மற்றும் வாகனங்கள் இவற்றை இன்னொருவர் வன்முறையாகப் பறிக்க முயற்ச்சித்தால் தம் உடமைகளைப் பாதுகாத்துக்கொ ள்ள அவரோடு அறப்போர் செய்யலாம். தமது உடமையைக் காக்கப் போராடி அதில் மரணித்தாலும் அதுவும் ஒரு முஸ்லிமிற்கு நன்மையே என்று இஸ்லாம் கூறுகிறது. நிதானமாக விளங்கிப் படியுங்கள், புரியவில்லை என்றால் சந்தேகம் கேளுங்கள்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #8 அபூ முஹை -0001-11-30 05:21
சகோதரர் Munthasir,

1. முதலில், முஸ்லிம்கள் ஒரு நாட்டுக்கு இடம்யெரவில்லை என்பது தவறு, முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் அபிசீனியா எனும் நாட்டை நோக்கி இருந்தது. அப்போது அபிசீனியாவில் எந்தக் கலீஃபாவின் ஆட்சியும் நடக்கவில்லை! பிறந்த மண்ணில் இறைவிசுவாசத்தை நிறைவேற்ற முடியாமல் கொடுமைக்கு ஆளாக நேரிடும்போது, எங்கு நிறைவேற்ற முடியுமோ அங்கு குடியேறலாம்.

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்றும் நாம் சொல்லவில்லை. பிற மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தியவர் களுக்கு தண்டனை என மதசார்பற்ற நாடாக அறிவித்துள்ளது. இந்திய எந்த மதத்தினருக்கும் சொந்தமில்லை என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளத ு.

4. ஓரிடத்தில் ஹிஜ்ரத் இல்லை என்றும், ஆனால் ஜிஹாத் உண்டு என்றும் நாம் சொல்லவில்லை! நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.

ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் ஒன்றல்ல!

ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றால் மீண்டும் பிறந்த மண்ணுக்கு குடிவரக்கூடாது!

ஜிஹாது - அறப்போர் சென்றால் திரும்ப சொந்த வீட்டுக்குத் திரும்பலாம்!

மற்ற உங்கள் கருத்துக்கள் கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல ் இருப்பதால் அவைகள் தவிர்க்கப்படுகி ன்றன. அல்காயிதாவுக்கு ம், கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சுட்டினால் தெரிந்து கொள்ளலாம்! முக்கியமாக...

//ஹிஜ்ரத் இல்லை என்று கொண்டால் முஸ்லிம்கள் மீது அல்காயிதாவின் சொல் கேட்பது கடமையாகிவிடும். //

ஹிஜ்ரத் இல்லை என்றால் முஸ்லிம்கள் அல்காயிதாவின் சொல்லை ஏன் கேட்க வேண்டும்? விளக்குவீர்களா.
Quote | Report to administrator
Sulaiman
0 #9 Sulaiman -0001-11-30 05:21
சகோதரர் அபுமுஹை அருமையான ஹதீஸை இங்கே மேற்கோள் காட்டியிருக்கிற ார்கள்.

//''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்'' என்று அப்போது கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன்?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள ்.'' (நூல், திர்மிதீ)//

அதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாமிய நாடுகளில் முஷ்ரிகீன் வசிக்கக்கூடாது என்பதையும், அப்படி வசித்தால் தனி இடங்களில் வசிக்கவேண்டும் என்பதையுமே வலியுறுத்துகிறா ர்கள் (ஒருவரது நெருப்பு மற்றவரது நெருப்பை பார்க்காமல்).

முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லீமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிற ேன் என்று தெளிவாகவே நபிகள் நாயகம் (ஸல்) கூறும்போது, அதற்கு மாற்றாக ஏன் அபு முஹை கூறுகிறார் என்று விளங்கவில்லை.

இன்றைக்கு மெக்கா மெதீனா என்ற இரு ஊர்களில் மட்டுமே அப்படி ஒரு நிலை இருக்கிறது என்றால், அரேபிய நாட்டின் ஆட்சியாளர்கள் நபிகள் நாயகத்தின் சொற்களை பின்பற்றவில்லை என்றுதான் பொருள். அதே போல, அரேபிய நிலம் எல்லா முஸ்லீம்களுக்கு ம் ஹிஜ்ரத் செய்யும் நிலமாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறிய அறிவுரையை 'செயல்படுத்த முடியாத அமல்' என்று கூறுவது பொருந்துமா என்று சிந்திக்கவேண்டு ம். அவ்வாறு அரேபிய மண் எல்லா முஸ்லிம்களுக்கு ம் ஹிஜ்ரத் செய்யும் நிலமாக இருக்கத்தான் நபிகள் நாயகம் அறிவுறுத்தியிரு க்கிறார்கள். அதனை செய்யாதது தற்போதைய அரபிய ஆட்சியாளர்களின் தவறுதானே ஒழிய நபிகள் நாயகம்(ஸல்) காட்டிய வழிப்படி நடக்க முயலும் நம் தவறு அல்ல.

'எதிரியோடு முஸ்லீம்கள் போரிடும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் நிறுத்தப்படாது' என்று கூறியுள்ளார்கள் (சஹிஹ் சுனான் அபுதாவுத் 2645)
Quote | Report to administrator
Sulaiman
0 #10 Sulaiman -0001-11-30 05:21
//ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றால் மீண்டும் பிறந்த மண்ணுக்கு குடிவரக்கூடாது!//

சகோதரர் அபுமுஹை எந்த ஹதீஸ் ஆதாரத்தில் இப்படி எழுதியிருக்கிறா ர் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஹிஜ்ரத் சென்று மீண்டும் மெக்காவை வெற்றிகொள்ள திரும்பிவந்தார் நபிகள் நாயகம் (ஸல்) என்பதினை நினைவு படுத்திட விரும்புகிறேன்.

அல்லாஹ் போதுமானவன்
Quote | Report to administrator
ஜி.நிஜாமுத்தீன்
0 #11 ஜி.நிஜாமுத்தீன் -0001-11-30 05:21
சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு.
உங்களின் இரண்டாம் பதிவிற்காக காத்திருக்கிறேன ். ஏனெனில் அதில் நீங்கள் ஹிஜ்ராவைப் பற்றி விளக்குவதாக கூறியுள்ளீர்கள் . சுலைமான் மீண்டும் தவறான சிந்தனையை முன் வைப்பதால் அவருக்கு பதிலளிக்கும் முன் உங்களின் இரண்டாம் கட்டுரையைப் பார்க்க வேண்டும்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #12 அபூ முஹை -0001-11-30 05:21
//முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லீமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிற ேன் என்று தெளிவாகவே நபிகள் நாயகம் (ஸல்) கூறும்போது, அதற்கு மாற்றாக ஏன் அபு முஹை கூறுகிறார் என்று விளங்கவில்லை.//

முஷ்ரிகீன் தாய் தந்தந்தையருக்கு க் கட்டுப்பட்டு நடக்கவும், அவர்களுடன் நல்ல முறையில் உறவைப் பேணி வாழவும் குர்ஆன், சுன்னா கூறுகிறது. இன்னும் வேறு காரணங்களால் இதை செயல்படுத்த முடியாது.

//சகோதரர் அபுமுஹை எந்த ஹதீஸ் ஆதாரத்தில் இப்படி எழுதியிருக்கிறா ர் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஹிஜ்ரத் சென்று மீண்டும் மெக்காவை வெற்றிகொள்ள திரும்பிவந்தார் நபிகள் நாயகம் (ஸல்) என்பதினை நினைவு படுத்திட விரும்புகிறேன்.//

நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல, முஹாஜிர்கள் அனைவருமே மீண்டும் மக்காவுக்கு வந்தாந்தார்கள். அனால் எவரும் மக்காவில் மீண்டும் குடியேறவில்லை! (பிற்காலத்தில், முஹாஜிர்களின் பிள்ளைகள் மக்காவில் குடியேறினார்களே என்று மீண்டும் விளங்காமல், தவறானக் கருத்தை வைக்க மாட்டீர்கள் என்று நம்புவோம்)

இஸ்லாம் பற்றிய புரிதல் இல்லாமல் மீண்டும், மீண்டும் உங்கள் தவறானக் கண்ணோட்டத்திற் கு தனிக்கட்டுரைகளி ல் விரிவான விளக்கங்களை பார்வையிடுங்கள் நன்றி!
Quote | Report to administrator
haneefm
0 #13 haneefm -0001-11-30 05:21
பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹிம்
இந்தியா காஃபி நாடா? இது பற்றி இன்னும் சரியான விளக்கங்கள் தந்தப்படில்லை நாண்பர் சுலைமான் நேரடியாக தாங்கள் கருத்தை பதிக்கவும் இன்னும் அபூ முஹையின் இரண்டாம் பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தவண் னம் இருக்கிறேன்
ஹஃணிப்-குவைத்
Quote | Report to administrator
Munthasir
0 #14 Munthasir -0001-11-30 05:21
Salaam Bro. Abu Muhay.

Thanx for your prompt responses. But by ignoring the issue of historical background and the presence of caliphate influencing the issue of 'hijrath' and 'Jihad' you have manifested your 'phase of Denial'.

One can't make fiqh ( i hope you are qualified to make law out of texts) while ignoring the complete context. If we choose to ignore the historical background, what amount in quran and hadith is overamassed information.

At the flip side , i am not novice to be given the definition of hijrath & Jihad. Another issue which is being ignored in your discussion is the definition of muslim's duty.

If a muslim is capable of performing his individual acts of worship is good enough for the completion of his religion ? What about 'enjoining good and Forbidding Wrong' expected of muslim as a community ? If a muslim isn't allowed to carry out particular responsibility in a secular country how should he guide himself ?

Any good came from ALLAH and all the bad from me.
Quote | Report to administrator
Sulaiman
0 #15 Sulaiman -0001-11-30 05:21
சகோதரர் அபுமுஹை,
குறிப்பாக மெக்காவை பொறுத்து முஹாஜிர்களுக்கு நபிகள் நாயகம் கொடுத்த அறிவுரையை எல்லா ஹிஜ்ரத்துகளுக்க ும் நீட்டிக்க முயல்கிறீர்கள்.

உங்களது இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன ்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #16 அபூ முஹை -0001-11-30 05:21
சகோதரர் Munthasir அவர்களுக்கு ஸலாம்.

கலீஃபத்துவம் என்று இஸ்லாத்தில் தனியாக ஒன்று இல்லை! இஸ்லாமிய ஆட்சித் தலைவரையே கலீஃபா என்று சொல்வார்கள். மேலும் ஹிஜ்ரத்தையும், ஜிஹாதையும் ஏற்படுத்தியது இஸ்லாம். இஸ்லாத்தைப்பின் பற்றியே கலீஃபா ஆட்சி அமைய வேண்டும். அன்று அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியாக இருந்தார்கள். முழுக்க முழுக்கப் பின்பற்றத்தக்க ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்கள்தான். அதனால் அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் அழைத்த ஹிஜ்ரத்துக்கும் , ஜிஹாதுக்கும் இறைவனிடம் நன்மதிப்பு மிக்கது.

//மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்ட ும் எனக் கட்டாயப்படுத்தப ்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட் டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்.//

கட்டுரையிலுள்ள மேற்கண்ட வாசகங்களை நீங்கள் படித்திருப்பீர் கள் என்று கருதுகிறேன். இதன் பின்னணி வருமாறு:

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவின் ஆட்சியராக இருந்தபோது ஷாம் நாட்டினருக்கெதி ரான போருக்காக மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பி வைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந் து ஆணை பிறப்பிக்கப்பட் டிருந்தது. அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் அந்தப்போரில் கலந்து கொள்ள வேண்டாமென வன்மையாகத் தடுக்கப்பட்டார் கள் என்றால் அந்தப்போர் அல்லாஹ்வின் வழியிலான ஜிஹாத் இல்லை என்பதற்காகவேத் தடுக்கப்பட்டார் கள்.

நன்கு கவனியுங்கள்! கலீஃபாவிடமிருந் து போருக்குப்படை அனுப்பி வைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட் டு, அந்தப்போர் அல்லாஹ்வின் பாதையிலான அறப்போராக இல்லையென போரில் கலந்து கொள்வது தவிர்க்கப்பட்டி ருக்கிறது. எனவே கலீஃபாவாக - இஸ்லாமிய ஆட்சித் தலைவராக இருந்தாலும் அவரது கட்டளை இஸ்லாத்துக்குட் பட்டதாக இருக்கிறதா? அல்லது இஸ்லாத்துக்கு மாறுபட்டதாக இருக்கிறதா? என்பது கவனித்து செயல்படவேண்டும் . இன்றைய நிலையில் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் தூயகொள்கைகளைப் பின்பற்றும் எந்த நாடும் இல்லை. அதனால் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத், ஜிஹாத் என்பது ஆழமாகச் சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம். சுருங்கச் சொன்னால் இனறைய இஸ்லாமிய ஆட்சியர் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் பதவியின் நோக்கம் மட்டுமே இருக்கிறது!

மற்ற உங்கள் கருத்தக்களுக்கு நாலு வரியில் மறுமொழியில் பதில் சொல்வது விளக்கமாக இருக்காது என்பதால் நேரம் கிடைக்கும்போது பிறகு எழுதலாம் இன்ஷா அல்லாஹ்.

அடுத்த ஒரு முக்கிய விபரம்:

தமிழில் எழுத வேண்டும் என்று உங்களைக் கட்டாயப்படுத்த எனக்கு உரிமையில்லை. எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் உங்கள் ஆங்கிலக் கருத்துக்களை இன்னொரு நண்பரின் உதவியுடன் தமிழாக்கம் செய்தபின்பே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நண்பர்கள் தமிழாக்கம் செய்வதைத் தவிர்த்துக்கொண ்டால் பிறகு உங்கள் ஆங்கிலக் கருத்துக்கள் எனக்குத் தெரியாமலேயே போய்விடும் என்பதையும் தெரிவித்துக்கொ ள்கிறேன் நன்றி!  
Quote | Report to administrator
ஜி.என்
0 #17 ஜி.என் -0001-11-30 05:21
இஸ்லாமிய ஆட்சியாளர் போருக்கு கட்டளையிட்டால் அதை மறுக்கும் உரிமை - போருக்கான காரணத்தை பரிசீலிக்கும் உரிமை - ராணுவவீரர்களுக் கோ - ஆட்சி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கோ கிடையாது என்பதை அபூமுஹையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
Quote | Report to administrator
Muhammad
0 #18 Muhammad 2012-03-28 14:34
Dear Brothers Assalamu alaikkum,
My question is for brother Abu Muhai,
You are saying that we have freedom to establish our salah and other obligations of Islam in india.
here is my question, whether can we Implement Shari'ah in india as it is also an obligation in Islam.?
And my opinion is that, we have only permission to do our religious obligations not freedom.

Please Correct me as a brother if i mistook anything. May Allah Guide as all in Right path.
Wassalam.
Quote | Report to administrator
abumuhai
0 #19 abumuhai 2012-04-01 10:25
வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

அன்புச் சகோதரர் Muhammed

திருக்குர்ஆன் 004:097ம் வசனத்தையும், திர்மிதீ நூலில் இடம்பெற்ற முஸ்லிம்கள் இணைவைப்போருடன் சேர்ந்து வாழ்தல் கூடாது என்கிற தரத்தில் முர்ஸலான நபிமொழிகளையும் இணைத்து பிறமதத்தவரால் இஸ்லாம் தவறாக விமர்சிக்கப்பட்டது.

அதைக் களைந்திட இஸ்லாம் காஃபிர் நாடா? என்றக் கேள்விக்குறியுட ன் இணைவைப்போருடன் முஸ்லிம்கள் வாழலாம் என இஸ்லாமிலிருந்து ஆதாரங்களுடன் விளக்கம் எழுதப்பட்டன.

மார்க்க வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம் என்ற சுதந்திரம் வழங்கப்படும் நாடுகளில் முஸ்லிம்கள் வாழலாம் என்பது அடிப்படையாகும். இதற்குச் சான்றாக மக்காவிலிருந்து அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்களும் அவர்களை அனுப்பிவைத்த நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் வழிமுறையும் ஆதாரமாக உள்ளன. அபிசீனியா அன்று கிறிஸ்தவ நாடக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஷரிஆவை நடைமுறைப்படுத்த இயலுமா? என்ற உங்கள் கேள்விக்கு, ஷரிஆவை நிறைவேற்ற இயலாத நாடுகளிலும், மார்க்க வழிபாடுகளை நிறைவேற்ற சுதந்திரம் இருக்கமாயின் அங்கு முஸ்லிம்கள் வாழலாம். ஷரிஆவை நிறைவேற்றத்தக்க நாடுகளில்தான் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதுவுமில்லை. என்பதும் இஸ்லாமின் நிலைப்பாடு.

ஹிஜ்ரத் - நாடுதுறந்து சென்ற துவக்கத்தில் மக்கா, அபிசீனியா மற்றும் மதீனா ஆகிய நாடுகளின் நிலைகளை நினைவுகூர்ந்தால ் மேலதிக விளக்கம் பெறலாம்!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்