முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்
கல் இது கல், இது கருப்புக்கல்.

காபா எனும் எனும் புனித ஆலயம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். அதன் நான்கு மூலைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. காபாவின் தலைவாயிலை ஒட்டியுள்ள வடகிழக்கு மூலைக்கு 'ஹஜருல் அஸ்வத் மூலை' -(ருக்னுல் அஸ்வத்)- கருப்புக்கல் மூலை என்று பெயர். அந்த மூலையில்தான் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மூலைக்கு 'யமன் மூலை' (ருக்னுல் யமானீ) என்று பெயர். இவ்விரு மூலைகளையும் சேர்த்து யமனிய மூலைகள் என்பர். காபாவை தவாஃப் - சுற்றி வரும்போது கருப்புக்கல் மூலையை தொட்டு முத்தமிடுவதும், யமன் மூலையைத் தொடுவதும் நபிவழி ஆகும்.

கருப்புக் கல் மூலைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. 1. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அஸ்திவாரத்தில் அமைந்திருப்பது. 2. ஹஜருல் அஸ்வத் - கருப்புக் கல் பதிக்கப்பட்டிருப்பது. ஆனால் யமன் மூலைக்கு இச்சிறப்புகளில் முதலாவது மட்டுமே உண்டு.

அடுத்து தென்மேற்கு மூலைக்கு 'ஷாம் (சிரியா) மூலை' - ருக்னுஷ் ஷாம் என்றும், வடமேற்கு மூலைக்கு 'இராக்கிய மூலை' (ருக்னுல் இராகீ) என்றும் பெயர். இவ்விரு முனைகளுக்கும் சேர்த்து 'ஷாமிய மூலைகள் என்பர். காபாவைத் தவாஃபு செய்யும்போது இவ்விரு முனைகளையும் தொடுவதோ, முத்தமிடுவதோ கிடையாது என்பதே பெரும்பாலனோரின் கருத்து. (அல்மின்ஹாஜ், ஃபத்ஹுல் பாரீ)

அஸ்வத் மூலையில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல் சரித்திரம் வாய்ந்த ஒரு கல். இந்தக் கல்லைப் பற்றி விமர்சிக்கும் பிற மதத்தவர்கள் அவர்களின் கடவுளாகிய சிவனின் கற்சிலை வடிவங்களில் ஒன்றான சிவலிங்கத்தோடு ஒப்பிட்டு, காபாவில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லும் முஸ்லிம்களால் வணங்கப்படும் ஒரு சிலையாகச் சித்தரிக்கிறார்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால், இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்களின் கோர முகத்தை வெளிக்காட்ட வெட்கப்பட்டுத்தானோ என்னவோ இவர்கள் முஸ்லிம்களின் பெயர்களை முகமூடியாக பயன்படுத்தி மறைத்துக் கொண்டு, ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லை சோதனை செய்ய வேண்டும் என்று உளறுகிறார்கள். சோதனையை அவர்களின் கற்சிலை சிவலிங்கத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.

சிவனைக் கல்லில் செதுக்கிய சிலையாக வடித்து. அதைக் கடவுள் என்று நம்பிக்கைகொண்டு வணங்கும் இவர்களுக்கு, இது கல், கருப்புக் கல் என்று கல்லைக் கல்லென்று சொல்லும் முஸ்லிம்களை விமர்சிக்க இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை! இவர்களைப் போல் முஸ்லிம்கள் கல்லைக் கடவுளாக்கவில்லை. செதுக்கிய கல்லை சிவலிங்கம் என்று இவர்கள் நம்புவது போல், முஸ்லிம்கள் கருப்புக் கல்லைக் கடவுளாக ஒருபோதும் நம்புவதில்லை!

உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ''நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்'' என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா, தாரிமி)

கருப்புக் கல்லுக்கு எவ்வித சக்தியும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லை முத்தமிட்டார்கள் என்பதைத் தவிர அதற்கு எந்த சிறப்பும் இல்லை. என்பதை நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் இங்கே நிறுவுகிறார்கள். 

கருப்புக் கல்  

பிறகு முஸ்லிம்கள் கருப்புக் கல்லை என்னவாகக் கருதுகிறார்கள்?

ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதீ, நஸயீ, அஹமத்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை ஒரு கருப்புக் கல் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். அதற்கு இறைத்தன்மை இருப்பதாகவோ, இந்த சமூகம் அதை வணங்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. அந்தக் கல்லின் அசல் நிறம் பாலை விட வெண்மையானதாக இருந்து மனிதர்களின் பாவக்கரங்கள் பட்டு அது கருப்பாகி விட்டது என்று - கருப்புக் கல் எதனால் கருப்பானது என்ற வரலாற்றையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

''ஆதமுடைய மக்களின் பாவங்களை கல் வாங்கிக்கொண்டதால் அது கருப்பாகி விட்டது'' என்று சொல்லவில்லை என்பதை கருப்புக் கல்லை சிவலிங்கமாகக் கருதும் சிவபக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனிதருடைய பாவத்தை இன்னொரு மனிதரே ஏற்க இயலாது என்ற நிலை இஸ்லாத்தில் இருக்கும் போது, ஒரு கல் பாவங்களை வாங்கிக் கொண்டதால் கருப்பானது என்று கருதுவது நகைப்புக்குரியது. கருப்புக் கல் சுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கல், இந்த பூமியில் சுவனத்தின் பொருளாக கருப்புக் கல் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள். நபியவர்கள் அதை முத்தமிட்டதால், அதைப் பின்பற்றி இந்த சமூகம் அதை முத்தமிடுவதையும், தொடுவதையும் சிறப்பாகக் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யும்போது, கருப்புக் கல்லை மட்டும் தொடவில்லை. காபா ஆலயத்தின்  யமன் மூலைகள் - ருக்னுல் யமானீ என்று சொல்லப்படும் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளையும் தொட்டிருக்கிறார்கள்.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கருப்புக் கல், ருக்னுல் யமனி ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர இறையில்லம் காபாவில் வேறு எந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை'' (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்)

நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல் மூலையை மட்டும் சிறப்பிக்கவில்லை. யமனிய மூலைகள் இரண்டையும் சிறப்பித்திருக்கிறார்கள். கருப்புக் கல்லைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள் என்று அறிவிப்புகள் இருப்பது போல் அதை கம்பாலும் தொட்டிருக்கிறார்கள், அதை நோக்கி சைகையும் செய்திருக்கிறார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃபு செய்தார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதேல்லாம் தம்மிடமிருந்த விளைந்த கம்பால் கருப்புக் கல்லைத் தொட்டார்கள்'' (புகாரி, முஸ்லிம்)

''நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து காபாவை தவாஃப் செய்வார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்'' (புகாரி, முஸ்லிம்)

மேலும்,

ஹஜ். உம்ரா, தவாஃபு என காபாவைச் சுற்றி வலம் வரத் துவங்கும்போது, முதல் சுற்றை இந்த கருப்புக்கல் மூலையிலிருந்தே துவங்க வேண்டும். துவங்கி, சுற்றி மீண்டும் கருப்புக் கல் மூலைக்கு வந்தால் ஒரு சுற்று நிறைவடையும்.

''நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லிலிருந்து, கருப்புக் கல் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும், நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்'' (திர்மிதீ)

கருப்புக் கல் மூலையிலிருந்து தவாஃப் சுற்றைத் தொடங்கி, ஏழு சுற்றுக்களில் ஒவ்வொரு சுற்றிலும் கருப்புக் கல் மூலைக்கு வந்து, அந்த மூலையை நோக்கி சைகை செய்தால் அந்தச் சுற்று முழுமை பெற்று அடுத்தச் சுற்றுத் துவங்கும். தவாஃப் கிரியைகளில் கருப்புக் கல்லை முத்தமிடுவது, முத்தமிடாமல் அதை நோக்கி சைகை செய்வது இவ்விரண்டும் நபிவழிகள் ஆகும். இதை வசதிக்கேற்றவாறு முஸ்லிம்கள் கடைபிடித்து நிறைவேற்றிக்கொள்ளலாம். இதில் கட்டாயம் என்று எதுவுமில்லை.

கருப்புக் கல்லும், சிலைகளும்

கருப்புக் கல்லை, சிலைகளுக்கொப்பாகக் கருதி, கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று விமர்சிக்கும் சில கிணற்றுத் தவளைகள், வேண்டுமானால் முஸ்லிம் பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து - அவர்கள் உள்ளத்தால் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளா விட்டாலும் பரவாயில்லை - வந்து காபாவை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டுப் பின்னர் விமர்சிக்கலாம்.

மக்கா வெற்றியின்போது, நபி (ஸல்) அவர்கள் காபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்புறப்படுத்தும்படி கட்டளையிட்டார்கள். அந்த சிலைகளில், நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சிலைகளும் இருந்தன. அம்பு மூலம் குறி சொல்வது சிலையாகச் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்ணியமிக்க இறைவனின் நண்பராகத் திகழ்ந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிலையையும் அப்புறப்படுத்தினார்கள் என்றால் அதை விட மற்ற சிலைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிலைகள் வணங்கப்படுபவைகளாக இருந்தன. நபி இப்ராஹீம்  (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரின் சிலைகளும் வணங்கப்பட்டு வந்தன.

வணங்கப்படும் எந்த சிலைகளும், பொருள்களும் புனித ஆலயமான காபாவில் இருக்கக்கூடாது என இறைவனுக்கு இணையாக வணங்கப்படுவைகளை அகற்றினார்கள். கருப்புக் கல் காபாவின் கட்டடத்தின் கற்களில் ஒரு கல்லாக காபாவோடு இருந்தது. சிலைகள் மற்றும் எவரையும், எதையும் வணங்காத நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரும் காபாவை அதன் அஸ்திவாரத்திலிருந்து எழுப்பிபோது கருப்புக் கல்லை அதனிடத்தில் பதித்துக் கட்டடம் எழுப்பினார்கள். குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது அதனாலேயே கருப்புக் கல்லுக்கு முக்கியத்துவம் வழங்கி, குறைஷியரில் எல்லாக் கோத்திரத்தினரும் தமது கையால் கருப்புக் கல்லை அதனிடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு சர்ச்சை செய்து கொண்டனர்.

மீண்டும்,

கல் அது கல், அது கருப்புக் கல் என்று கூறி முஸ்லிம்கள் எவரும் அந்தக் கருப்புக் கல்லை வணங்கவும், வழிபடவுமில்லை. ஒரு கல்லை கல்லென்று சொல்வது வணக்கமாக ஆகாது நன்றி!

(மீண்டும் அடுத்த பகுதியில், இறை நாட்டப்படி)

ஆக்கம்: அபூ முஹை.

< பகுதி 2 | பகுதி 4 >

Comments   

வஹ்ஹாபி
0 #1 வஹ்ஹாபி -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)//

மேற்காணும் ஹதீஸ் மறுஆய்வுக்குரிய து. பாலை விட வெண்மையாக இருந்த காலகட்டத்தில் அக்கல்லுக்குப் பெயரென்ன?
Quote | Report to administrator
உஸ்தாத்
-1 #2 உஸ்தாத் -0001-11-30 05:21
கருப்புக்கல் கருப்புக்கல் என்று அதன் புனிதத்தை குறைக்கும் விதமாக பலமுறை கூறுவது ஏன்?

அது வெறும் கருப்புக்கல் என்றால், அதனை காலால் எத்த அனுமதிப்போமா? அல்லது அதன் மீது எச்சில் உமிழ அனுமதிப்போமா?

இந்த கட்டுரையில் அபுமுஹையின் வஹாபி வெறிதான் தெரிகிறது. வஹாபித்தனத்தை நிரூபிப்பதற்காக நபிகளார் வீட்டை இடித்தது போல ஹஜருல் அஸ்வத்தையும் உடைத்து எறிந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #3 அபூ முஹை -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)//

மேற்கண்ட நபிமொழி மறு ஆய்வுக்கு உட்பட்டிருந்தால ் மாற்றிக்கொள்வத ில் எந்தத் தடையும் இல்லை. கருப்புக் கல் என்ற பெயரைத் தவிர வேறு பெயரை நான் அறிந்திருக்கவில ்லை. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம். நன்றி!
Quote | Report to administrator
haneefm
0 #4 haneefm -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)// இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை ஒரு கருப்புக் கல் என்றுதான்
அடையாளப்படுத்து கிறார்கள்.
நண்பர் வஹ்ஹாபி தங்களால் முடிந்த தக்க சான்ரிதள்களை குஃர்கான் மற்றும் ஹஃதிஸ்கள் முலம் மற்றவர்களுக்கு விளக்கம் தரட்டுமே முன் வருவரா?
ஹஃணீப்-குவைத்
Quote | Report to administrator
வஹ்ஹாபி
+1 #5 வஹ்ஹாபி -0001-11-30 05:21
الا تزروا وازرة وزر أخرى
(நபியே) அறிந்து கொள்வீராக! ஒருவனுடைய (பாவச்) சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது [053:038]

அன்புச் சகோதர்கள் அபூமுஹை, ஹனீஃப் அறிவது:
மேற்காணும் இறைமறை வசனத்திற்கு விளக்கம் தேவையில்லை என்று நம்புகிறேன். இதே கருத்தை [006:164], [017:015], [035:018], [039:007] ஆகிய வசனங்கள் உணர்த்தி நிற்கின்றன.

ஒரு ஹதீஸின் தரத்தை உரசிப் பார்ப்பதற்கான முதல் உரைகல் இறைவேதம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

மேற்காணும் இறைமறை வசனங்கள் யார் நாவின் வழியாக உலகுக்கு அறிமுகமானதோ அதே நாவிலிருந்து உதிர்ந்த உன்னத முத்துகள்:

'என்னருமை மகளே ஃபாத்திமா! இவ்வுலகுசார் உதவிகளில் உனக்குத் தேவைப் படுவதை என்னிடம் நீ கேட்கலாம். ஆனால், மறுமையில் நான் உனக்கு உதவ முடியாது'

மறு ஆய்வுக்குரியவை என்று நான் சுட்டிய சொற்கள், திண்ணமாக அண்ணலாரின் நாவிலிருந்து வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.

ஒருவனுடைய பாவச் சுமையை சுமப்பதற்கு இன்னொரு மனிதனுக்குக் கடமை இருக்குமாயின் அல்லது முடியுமாயின் தாய்-தந்தை மீது உண்மையான பாசமுள்ள ஒரு மகன், தன் பெற்றோரின் பாவத்தைச் சுமக்க முன்வருவான். அவ்வாறே கணவன் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு மனைவி, பெற்ற பிள்ளைகள் மீது பாசத்தைப் பொழியும் தந்தை போன்ற உறவுகள் மற்றோருக்குப் பாவப் பகிர்தல் செய்து கொள்வதற்குத் தயங்கார்.

இனி, சிந்திக்கச் சில வினாக்கள்:
'பாவத்தைச் சுமப்பது' என்றால் என்ன பொருள்?

தன் தந்தையின் பாவத்தை ஒரு மகன் சுமக்க முடிந்தால் அம்மகன் என்ன செய்வான்?

இயன்றவறை நிறைய நல்லறங்களைத் தன் தந்தைக்காகச் செய்து அவருடைய 'சுமை'யைக் குறைக்க முயல்வான். ஏனெனில் அவனால் அது முடியும்.

ஆனால், மனிதருக்கு எவ்வித நன்மையோ தீமையோ செய்யவியலாத கருப்புக்கல் என்ன செய்து மனிதரின் பாவத்தைப் போக்கும்?

ஏதும் செய்யச் சக்தியற்றக் கருப்புக்கல், மனிதரின் பாவங்களை உள்வாங்க வேண்டிய தேவை என்ன?

என்னுடைய சிந்தனையில் தவறிருப்பின் சான்றுகளுடன் சுட்டிக் காட்டுங்கள், நன்றி!
Quote | Report to administrator
அபூ முஹை
0 #6 அபூ முஹை -0001-11-30 05:21
//ஆனால், மனிதருக்கு எவ்வித நன்மையோ தீமையோ செய்யவியலாத கருப்புக்கல் என்ன செய்து மனிதரின் பாவத்தைப் போக்கும்?//

கருப்புக் கல் பற்றிய நபிமொழியில் வஹ்ஹாபி அவர்களின் சந்தேகம் இதுதான் என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அந்த நபிமொழி இல்லை. மேலும் அது பலவீனமான நபிமொழி என்பதற்கு எதேனும் அறிஞர்களின் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

வேலைக்குச் செல்வதால், மாலை வீடு திரும்பிய பின் அந்த நபிமொழியைப் பற்றிய விளக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்
Quote | Report to administrator
haneefm
0 #7 haneefm -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)// இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை ஒரு கருப்புக் கல் என்றுதான்
அடையாளப்படுத்துகிறார்கள்.
நண்பர் வஹ்ஹாபி[சொல்லுவ து உண்மைதான்] ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், மேற்கண்ட (திர்மதீ.நஸயீ. அஹமத்) இவர்கள் முலம் நமக்கு தொளிவுபடுத்துகி ரார்கள் இதை மறுக்கும் ஹஃதிஸ்கள் இருந்தால் தங்கள் அடையாளப்படுத்து ங்கள்,
என்னைபோன்றவர்கள ுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்,
ஹஃனிப்- குவைத்
Quote | Report to administrator
வஹ்ஹாபி
0 #8 வஹ்ஹாபி -0001-11-30 05:21
//நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அந்த நபிமொழி இல்லை//

'ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன.'

(நபியே) அறிந்து கொள்வீராக! ஒருவனுடைய (பாவச்) சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது [053:038].


எனது புரிதலில் தவறு இருந்தால் திருத்துக!
Quote | Report to administrator
haneefm
0 #9 haneefm -0001-11-30 05:21
2.26 நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் [அற்பத்தில்] மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டா ன்.[இறை] நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அ[வ்வுதாரணமான]த ு தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவர்கள்; ஆனால் [இறை நம்பிக்கையற்ற] காஃபிர்களோ.'இவ் வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்? என்று [ ஏளனமாகக்] கூறுகிறார்கள், அவன் இதைக்கொண்டு பலரை வழிகெட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழி படுத்திகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர [வேறு யாரையும்] அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2.11 பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள ் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
உண்மை
(நபியே) அறிந்து கொள்வீராக! ஒருவனுடைய (பாவச்) சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது [053:038].
இன்னும் தக்க ஹஃதிஸ்களை வெளிப்படுத்தினா ல் மிக்க உதவியாக இருக்கும்
ஹஃணிப்- குவைத்
Quote | Report to administrator
அபூ முஹை
0 #10 அபூ முஹை -0001-11-30 05:21
//ஆனால், மனிதருக்கு எவ்வித நன்மையோ தீமையோ செய்யவியலாத கருப்புக்கல் என்ன செய்து மனிதரின் பாவத்தைப் போக்கும்?//

மனிதர்களின் பாவங்களைக் கருப்புக் கல் போக்கும் என்ற கருத்து இருந்தால் தான் நன்மையோ, தீமையோ செய்யவியலாத கருப்புக் கல் என்ன செய்து மனிதர்களின் பாவங்களைப் போக்கும் என்ற கேள்வி சரியாக இருக்கும்.

கருப்புக் கல்லைத் தொடுவதாலோ, முத்தமிடுவதாலோ அது தொட்டு முத்தமிட்டவரின் பாவத்தைப் போக்கிவிடும் என்ற கருத்தை அந்நபிமொழியும் சொல்லவில்லை. கட்டுரையிலும் அக்கருத்து இல்லை! ஒரு மனிதரின் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்ற திருக்குர்ஆனின் கருத்தையே கட்டரையிலும் சொல்லப்பட்டிரு க்கிறது.

கருப்புக் கல் மனிதரின் பாவத்தைப் போக்கிவிடும் என்று முஸ்லிம்கள் நம்பவில்லை. நம்பவும் கூடாது.

//''ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன.'

(நபியே) அறிந்து கொள்வீராக! ஒருவனுடைய (பாவச்) சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது [053:038].//

ஆதமுடைய மக்களின் பாவக் கறைகள் அதைக் கருக்க வைத்து விட்டன, என்ற பொருளில் தான் ஹதீஸை மொழிபெயர்த்திர ுக்கிறார்கள்.

பாவிகள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. செய்த பாவங்களுக்கான தண்டனைகளைப் பெற்று, பிறகு சொர்க்கம் செல்வார்கள். சுவனவாசிகள் மட்டுமே தொடுவதற்குத் தகுதியான சுவனத்தின் பொருளாகிய அந்தக் கல் பூமிக்கு இறங்கியதால், எண்ணத்தாலும் செயலாலும் பாவங்கள் செய்து, பாவக் கறைகள் கொண்ட நரகவாசிகள் அதைத் தொட்டதால் அதன் நிறத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலா ம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமப்பதென்பது சுமப்பவர் பாவத்தையேற்றுக் கொண்டு, பாவம் செய்தவரின் பாவச் சுமை இறங்கியதாக இருக்க வேண்டும். கருப்புக் கல்லைத் தொடுவதால் பாவம் செய்தவரின் பாவச் சுமையைக் கருப்புக் கல் சுமந்து கொண்டது அதனால் அதைத் தொட்டவரின் பாவச் சுமை இறங்கி விட்டது என்ற பொருளில் ஹதீஸின் கருத்து இல்லை என்பதால், ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற (திருக்குர்ஆன், 053:038) வசனத்திற்கு முரண்படவில்லை!
Quote | Report to administrator
வஹ்ஹாபி
0 #11 வஹ்ஹாபி -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)//

//கருப்புக் கல்லைத் தொடுவதால் பாவம் செய்தவரின் பாவச் சுமையைக் கருப்புக் கல் சுமந்து கொண்டது அதனால் அதைத் தொட்டவரின் பாவச் சுமை இறங்கி விட்டது என்ற பொருளில் ஹதீஸின் கருத்து இல்லை//

ஆதமின் மக்களின் பாவங்களுக்கும் வெள்ளைக்கல் கருப்பானதற்கும் என்னதான் தொடர்பு?
Quote | Report to administrator
அபூ முஹை
0 #12 அபூ முஹை -0001-11-30 05:21
//ஆதமின் மக்களின் பாவங்களுக்கும் வெள்ளைக்கல் கருப்பானதற்கும் என்னதான் தொடர்பு?//

பாவிகளால் பார்க்கவும் முடியாத சுவனக் கல், பாவிகளின் பார்வைக்கு வந்ததால் கருப்பானது.

//பாவிகள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. செய்த பாவங்களுக்கான தண்டனைகளைப் பெற்று, பிறகு சொர்க்கம் செல்வார்கள். சுவனவாசிகள் மட்டுமே தொடுவதற்குத் தகுதியான சுவனத்தின் பொருளாகிய அந்தக் கல் பூமிக்கு இறங்கியதால், எண்ணத்தாலும் செயலாலும் பாவங்கள் செய்து, பாவக் கறைகள் கொண்ட நரகவாசிகள் அதைத் தொட்டதால் அதன் நிறத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலா ம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)//
Quote | Report to administrator
haneefm
0 #13 haneefm -0001-11-30 05:21
அபூ முஹை அவர்களுக்கு வெரும் வர்த்தைகளால் விளக்குவதை விட மிக அழகான குர்ஃகான் அல்லது தக்க ஹஃதிஸ்களுடன் விளக்கம் குடுத்தால் என்னை போன்றவர்கலுக்கு ம் மாற்று மத சகோதர்கலுக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்
ஹஃணிப்-குவைத்
Quote | Report to administrator
அபூ முஹை
0 #14 அபூ முஹை -0001-11-30 05:21
//அபூ முஹை அவர்களுக்கு வெரும் வர்த்தைகளால் விளக்குவதை விட மிக அழகான குர்ஃகான் அல்லது தக்க ஹஃதிஸ்களுடன் விளக்கம் குடுத்தால் என்னை போன்றவர்கலுக்கு ம் மாற்று மத சகோதர்கலுக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்
ஹஃணிப்-குவைத்//

ஹனீஃப் எம் அவர்களே
எவ்வித குறைபாடுமில்லாத ஒரு ஹதீஸை எந்தக் காரணமும் இல்லாமல் ஒதுக்கிட முடியாது. அதைப் புறக்கணிக்க வேண்டுமானால் வலுவான சான்றுகளை எதிர்வாதம் செய்பவர்களே சமர்ப்பிக்க வேண்டும், நாமல்ல!
Quote | Report to administrator
வஹ்ஹாபி
0 #15 வஹ்ஹாபி -0001-11-30 05:21
//எவ்வித குறைபாடுமில்லாத ஒரு ஹதீஸை எந்தக் காரணமும் இல்லாமல் ஒதுக்கிட முடியாது. அதைப் புறக்கணிக்க வேண்டுமானால் வலுவான சான்றுகளை எதிர்வாதம் செய்பவர்களே சமர்ப்பிக்க வேண்டும், நாமல்ல!//

தேடுதலுக்கும் தெளிவு பெறுவதற்கும் வாய்ப்பளித்தற்க ு நன்றி!

சகோதரர் அபூமுஹை அவர்கள் இக்கட்டுரையில் எடுத்தாண்டிருக் கும் ஹதீஸ்:
ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியபோது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமின் மக்களது பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'அப்துல்லாஹ் பின் அம்ரு, அபூஹுரைரா ஆகியோரும் (இத்தலைப்பின்கீ ழ்) அறிவிக்கின்றனர் . இபுனு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கும் மேற்காணும் ஹதீஸ்(803), ஹஸன் - ஸஹீஹ் என்ற தரமுடையதாகும்' என்று அபூ ஈஸா (திர்மிதீ) கூறுகிறார்.

மேற்காணும் ஹதீஸின் மூலம்:
‏حدثنا ‏ ‏قتيبة ‏ ‏حدثنا ‏ ‏جرير ‏ ‏عن ‏ ‏عطاء بن السائب ‏ ‏عن ‏ ‏سعيد بن جبير ‏ ‏عن ‏ ‏ابن عباس ‏ ‏قال ‏
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني ‏ ‏آدم ‏
‏قال ‏ ‏وفي ‏ ‏الباب ‏ ‏عن ‏ ‏عبد الله بن عمرو ‏ ‏وأبي هريرة ‏ ‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏حديث ‏ ‏ابن عباس ‏ ‏حديث حسن صحيح

சுட்டி: hadith.al-islam.com/.../...

மேற்காணும் ஹதீஸைக் குறித்து ஓர் அலசல்:
(1). 'ஹஸன் - ஸஹீஹ்' என்ற சொல்லாட்சி, ஹதீஸ் கலையில் இரண்டாவது இடத்துக்குரியதா கும். அதாவது, இந்த ஹதீஸ் ஸஹீஹானதன்று; ஆனால் இந்த ஹதீஸிலுள்ள கருத்து/கருத்து கள் ஸஹீஹான வேறு பதிவுகளில் உள்ளன என்பதே அதன் பொருளாகும்.

எனவே, இந்த ஹதீஸை மூன்று கருத்துகளாகப் பிரித்துக் கொள்வோம்:
1. ஹஜருல் அஸ்வது சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியது.
2. சுயத்தில் பாலைவிட வெண்மையானது.
3. ஆதமின் மக்களின் பாவங்களினால் கருப்பாகி விட்டது.

இதன் அறிவிப்பாளர் வரிசை:
இபுனு அப்பாஸ்
சயீத் பின் ஸுபைர்
அதா பின் அஸ்ஸாயிப்
ஜரீர்
குதைபா
இமாம் திர்மிதீ

மேற்காணும் மூன்று பொருள்களுள் 1 மட்டும் நஸயீயில் பதிவாகிவுள்ளது:
أخبرني إبراهيم بن يعقوب قال حدثنا موسى بن داود عن حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس
أن النبي صلى الله عليه وسلم قال الحجر الأسود من الجنة

'ஹஜருல் அஸ்வது சுவர்க்கத்தைச் சார்ந்தது'
சுட்டி: hadith.al-islam.com/.../...

இதன் அறிவிப்பாளர் வரிசை:
இபுனு அப்பாஸ்
சயீத் பின் ஸுபைர்
அதா பின் அஸ்ஸாயிப்
ஹம்மாத் பின் ஸலம
மூஸா பின் தாவூத்
இப்ராஹீம் பின் யாகூப்
இமாம் திர்மிதீ

மேற்காணும் இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களை க் குறித்துக் கட்டாயம் நாம் அறிய வேண்டும்.

(2) திர்மிதீயின் விரிவுரையான 'துஹ்ஃபத்துல் அஹ்வதீ பிஷரஹி ஜாமியித் திர்மிதீ' என்ற நூலில், இங்குப் பேசுபொருளான ஹதீஸின் அறிவிப்பாளர்கள் குறித்து அலசப் படுகின்றது.
قال الحافظ في الفتح : وفيه عطاء بن السائب وهو صدوق لكنه اختلط وجرير ممن سمع منه بعد اختلاطه لكن له طريق أخرى في صحيح ابن خزيمة فيقوى بها وقد رواه النسائي من طريق حماد بن سلمة عن عطاء مختصرا ولفظه : الحجر الأسود من الجنة

இதில் இடம்பெறும் (மூன்றாவது அறிவிப்பாளாரான) அதா பின் ஸாயிப் வாய்மையானவர்தாம ். ஆனால் (பிற்றைக் காலத்தில்) குழம்பி விட்டார். அவரது தடுமாற்றக் காலகட்டத்தின் பின்னர் அவரிடமிருந்து செவியுற்றவர்களு ள் ஜரீரும் ஒருவராவார். எனினும் வேறு தொடரில் அமைந்த இபுனு ஹுஸைமாவின் பதிவு, இந்த ஹதீஸுக்கு வலுச் சேர்க்கிறது. அதையே (ஜரீரையன்றி) ஹம்மாத் பின் ஸலம வழியாக 'ஹஜருல் அஸ்வது சுவர்க்கத்தைச் சார்ந்தது' என்று சுருக்கமாக நஸயீ பதிவு செய்திருக்கிறார்.

மேற்கண்டவாறு தெளிவாக்குபவர், புகாரீயின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரீயின் ஆசிரியப் பெருந்தகை இமாம் இபுனு ஹஜர் அஸ்கலானீ அவர்கள்.
சுட்டி: hadith.al-islam.com/.../...

(3) உவமைகள் கூறும் ஹதீஸ்களில், அதா பின் அஸ்ஸாயிப் ஹம்மாதுடைய காலத்திலேயே குழம்பித்தான் போனார் என்பதற்கான சான்று:
حدثنا عفان حدثنا حماد أخبرنا عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس
أن رسول الله صلى الله عليه وسلم قال الحجر الأسود من الجنة وكان أشد بياضا من الثلج حتى سودته خطايا أهل الشرك

'ஹஜருல் அஸ்வது சுவர்க்கத்தைச் சார்ந்தது. அது பனிக்கட்டியைவிட வெண்மையாக இருந்தது. இணைவைப்பாளர்களி ன் பிழைகளினால் கருப்பாகி விட்டது'

அறிவிப்பாளர் வரிசை : இபுனு அப்பாஸ், சயீத் பின் ஸுபைர், அதா பின் அஸ்ஸாயிப், ஹம்மாத், அஃப்ஃபான், இமாம் அஹ்மது.

அதா பின் அஸ்ஸாயிப் (திர்மிதீயில்) பயன் படுத்திய சொல்லான பாலுக்குப் பகரம் 'பனிக்கட்டி' என்றும் ஆதமின் மக்கள் என்ற சொல்லுக்குப் பகரம் 'இணைவைப்பாளர்கள ்' என்று இமாம் அஹ்மது அவர்களின் பதிவான இந்த ஹதீஸில் அவரே மாற்றிக் கூறுவதைக் கவனிக்கவும்.

சுட்டி: hadith.al-islam.com/.../...

எனவே, சகோதரர் அபூமுஹை அவர்கள் எடுத்தாண்ட ஹதீஸ், குறைபாடுகளைக் கொண்டது; மறு ஆய்வுக்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி!

பி.கு:
சொர்க்கத்தின் கவ்ஸர் தடாகத்தின் உவமைச் சொற்கள்:
حدثنا وهب بن جرير حدثنا أبي قال سمعت عاصما عن زر عن حذيفة قال
إن حوض محمد صلى الله عليه وسلم يوم القيامة شرابه أشد بياضا من اللبن وأحلى من العسل وأبرد من الثلج وأطيب ريحا من المسك وإن آنيته عدد نجوم السماء

மறுமை நாளில், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தடாக பானம் பாலைவிட வெண்மையானதாக, தேனைவிட இனிமையானதாக, பனிக்கட்டியைவிட குளுமையானதாக, கஸ்தூரியைவிட நறுமணம் நிறைந்ததாக இருக்கும். (அதை எடுத்து அருந்துவதற்கு) விண்தாரகைகளின் எண்ணிக்கையில் (அங்கு) அதன் பாத்திரங்கள் இருக்கும்.

இமாம் அஹ்மது அவர்களின் பதிவான இந்த ஹதீஸில் 'பால்', 'பனிக்கட்டி' போன்ற உவமைச் சொற்கள் இடம் பெற்றிருப்பது இங்குச் சிந்தனைக்குரியது.
சுட்டி: hadith.al-islam.com/.../...
Quote | Report to administrator
அபூ முஹை
0 #16 அபூ முஹை -0001-11-30 05:21
//ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)//

மேற்கண்ட ஹதீஸ் குர்ஆனுக்கும், வேறு நபிமொழிக்கும் முரண்படவில்லை. அறிவிப்பளார்களி டையே உள்ள குறைபாடுகளை சுட்டிய சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு நன்றி!

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைத் தொடர்பாக ஏற்கெனவே அறிஞர்கள் மறு ஆய்வுக்குட்படுத ்தியிருக்கிறார் கள் என்பதால் இனி புதிதாக ஒரு மறு ஆய்வு தேவையா என்பதே எமது நிலைப்பாடு.

திர்மதீயில் இடம் பெறும் ஹதீஸில்,

''அதா பின் ஸாயிப் என்பார் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும், இறுதிக் காலத்தில் இவரது நினைவாற்றல் பழுதாகி விட்டது. அந்தக் காலகட்டத்தில் அவரிடமிருந்து ஜரீர் என்பவர் இவர் வழியாக அறிவிப்பதால் இது பலவீனமான ஹதீஸாகும். ஆயினும் நஸயியிலும் இடம் பெறும் அறிவிப்பில் அதா பின் ஸாயிப் அவர்களிடமிருந்த ு ஹம்மாத் பின் ஸலமா என்பார் அறிவிக்கிறார். இவர் அதா பின் ஸாயிப் அவர்களின் நினைவாற்றல் குறைவதற்கு முன் அவரிடமிருந்து செவியுற்றவர் எனவே இந்த ஹதீஸ் ஹஸன் என்ற நிலைக்கு உயர்கின்றது''.

என்று திர்மிதியின் தமிழாக்கத்தில் குறிப்பிடுகிறார ்கள்.

மேலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் முதல் பதிப்பு வெளியீடு 31.03.2004, 2வது பாகம், 492வது பக்கத்தில்...

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முகம் பதித்து முத்தமிட்டு ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை நான் கண்டேன் (எனவே உன்னை முத்தமிடுகிறேன் )'' என்றார்கள். முஸ்லிம் தமிழாக்கம், 2439வது செய்தி.
இந்த 'அஸர்' - செய்திக்கு அடிக்குறிப்பு எழுதுகிறார்கள்...

''இந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்த ு தெரிவதாவது, 'ஹஜருல் அஸ்வத்' எனும் கருப்புக் கல்லை நபி (ஸல்) அவர்கள் தொட்டு முத்தமிட்டார்கள ். இதைப் பின்பற்றியே இன்று ஹஜ் யாத்ரீகர்களும் அதைத் தொட்டு முத்தமிடுகிறார் கள். மற்றபடி அந்தக் கல்லுக்கு எந்த ஆற்றலும் கிடையாது மனிதர்களுக்கு நன்மை அளிக்கவோ, தீங்கிழைக்கவோ அதனால் இயலாது. ஆகவே அக்கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் என எவரும் கருதிவிடக் கூடாது. விவரம் தெரியாதவர்கள் அவ்வாறு எண்ணக்கூடும் என்பதாலேயே உமர் (ரலி) அவர்கள் இந்த விளக்கத்தை அளித்தார்கள். (அல்மின்ஹாஜ்) ''ஹஜருல் அஸ்வத் சொர்க்கத்திலிர ுந்து இறங்கியது. அப்போது அது பாலைவிட வெண்மையாக இருந்தது. மனிதர்களின் பாவக் கறைகள் அதைக் கருக்க வைத்துவிட்டன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)''

திருக்குர்ஆன் விரிவுரை மற்றும் நபிமொழி தமிழாக்கம் பணியை மேற்கொண்டிருக் கும் மார்க்க அறிஞர்கள் குழு, மேற்கண்ட விளக்கங்களை எழுதுகிறார்கள். அதில், திர்மிதீ, நஸயீ ஆகிய ஹதீஸ் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ''கருப்புக் கல் பாலைவிட வெண்மையானது'' என்ற ஹதீஸையும் தவறாமல் குறிப்பிடுகிறார ்கள். இந்த அறிஞர்கள் குழு தவறானத் தகவலைத் தருவார்கள் என்பதை ஏற்கமுடியவில்லை !

ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிர ுந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹமத்)

இந்த ஹதீஸில் முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க எந்த அமலும் இல்லை. கருப்புக் கல்லைத் தொடுவது, முத்தமிடுவது, அதை நோக்கி சைகை செய்வது போன்ற செயல்களுக்கு ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளில் வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு ஹஸன் என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றே இன்றைய அறிஞர்கள் பயன்படுத்துகிறா ர்கள் - இந்த ஹதீஸை நிராகரிக்கவில்ல ை!

இது நிராகரிப்பட வேண்டிய ஹதீஸ் என்றால் சகோதரர் வஹ்ஹாபி அவர்கள், rahmathpublicat ions[at]hotmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் குழுவினர் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வார்கள். அல்லது உங்களுக்கு விளக்கங்களை அளிப்பார்கள். நன்றி!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்