முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.

அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.

உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது". நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.

ஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.

இணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.

தனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.

காந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.

இதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா?

சமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், "கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

மறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.

சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.

நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.  சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து  தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

எனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: நல்லடியார்.

பகுதி 1 >

Comments   

முஸ்லிம்
0 #1 முஸ்லிம் -0001-11-30 05:21
''ஊரறிஞ்ச அய்யருக்கு பூணுல் தேவையில்லை'' ன்னு சொல்லுவாங்க. சிஃபி இணையத்தளம் ஒரு ''இந்துத்வ உயர் ஜாதி சார்புடையது'' ன்னு அதை படிப்பவர்களுக்க ு நல்லாவே தெரியும்.

சிஃபி இணையத்தில் முஸ்லிம் சார்பு மறுப்பு கட்டுரையா..?

அதுவும் மலர் மண்ணுக்கு மறுப்பவா..?

ஓய்.. நீர் எந்த லோகத்தில் இருக்கிறீர்..?
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #2 அபூ ஸாலிஹா -0001-11-30 05:21
இணையத்தில் கலக்கும் நல்லடியார் எழுதும் புதிய தொடரா?.. ம்...ம்! எழுதுங்கள்!

சொந்தமாக உருப்படியாக எதையும் சிந்திக்கத் தெரியாத, தன்னைத் தானே அறிவுஜீவியாக கருதிக் கொள்ளும் நேச குமார் என்பவர் மேற்கத்திய உளரல்களை 'உள்வாங்கி' மனம் பிறழ்ந்து எழுதிய வஹி சம்பந்தமாக, தமிழோவியத்தில் முன்பு வெளியான ஒரு தொடருக்கு நீங்கள் அளித்த தர்க்க ரீதியான பதிலடி தொடரால் அவரை கோமா நிலைக்கு நீங்கள் கொண்டு சென்றது எனக்கு நினைவில் நிற்கிறது.

அதே போன்று சிஃபியில் எழுதிய ம.ம வின் தோலுரிக்கப்படுவ தையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

நன்றி!

(சிஃபியில் ம.ம எழுதிய கட்டுரையின் இணைப்பை தர முடியுமா?)
Quote | Report to administrator
அழகு
0 #3 அழகு -0001-11-30 05:21
உங்கள் தொடர் முடியும்போது, ம.ம. மீண்டும் நிரந்தரமாக வடக்கிருப்பார் என எதிர்பார்க்கிறோ ம்.
Quote | Report to administrator
M. AHAMED
0 #4 M. AHAMED -0001-11-30 05:21
tamil.sify.com/columns/
malarmannan/moreheadlines.php
?ctid=2&cid=14344770
Quote | Report to administrator
இறை நேசன்
0 #5 இறை நேசன் -0001-11-30 05:21
சகோதரரே ஈனப்பிறவியைக் குறித்தா எழுதுகிறீர்.

எருமையை விட அதிகம் தோல் தடித்த இந்த ஈனப்பிறவிக்கு நீங்கள் எவ்வளவு தான் உறைக்கும் படி எழுதினாலும் ஒன்ன்றும் ஆகப் போவதில்லை.

ஒரு ஜென்மம் ஈனப்பிறவி எனத் தெரிந்த பின் அதற்கு வாந்தி எடுக்க இடம் கொடுப்பவரும் நிச்சயம் ஈனப்பிறவியாக தான் இருக்க வேண்டும்.

அந்த விதத்தில் சிஃபியும் தன்னை ஈனப்பிறவியாக அறிவித்துக் கொண்டதோ?

ஈனப்பிறவிகளைக் குறித்து மேலதிக விவரங்களுக்கு:

copymannan.blogspot.com/.../.. .
Quote | Report to administrator
கிருபா
0 #6 கிருபா -0001-11-30 05:21
இங்கு நீங்கள் குய்யோ, முறையோ என்று குதிக்கும்படி சிஃபியில் எழுதியிருக்கும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்களின் எழுத்துக்களில் நான் தவறு ஒன்றும் காணவில்லை.

அய்யா இறைநேசன்,

ஒருவரை விமர்சிக்கும்போ து கொஞ்சம் மரியாதையாக எழுதக் கூடாதா?

KS
Quote | Report to administrator
இறை நேசன்
0 #7 இறை நேசன் -0001-11-30 05:21
சகோதரர் கிருபா அவர்களே,

தாங்கள் ஒருமுறை நான் மேலே கொடுத்துள்ள சுட்டியில் சென்று முழுதாக படித்துப் பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.

மண்டத்தனமாக எழுதும் ஈனப்பிறவி மலர்மன்னனுக்கு 'ஈனப்பிறவி' என்ற பட்டம் நான் கொடுத்ததல்ல. அது அவர் தன்னைத் தானே சூட்டிக்கொண்ட பெயர். அதனை மேற்கண்ட சுட்டியில் மேலும் சில அறிவு ஜீவிகள் அவருக்கு அந்த பட்டம் பொருத்தமானதே என பரிந்துரைக்கவும ் செய்திருக்கின்ற னர். அதனை தான் நான் மறுமொழிந்திருக்கின்றேன்.

கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் வந்தேறிய பார்ப்பன ஹிந்துத்துவ வெறிக்கூட்டத்தை ச் சேர்ந்த திருவாளர் மலர்மன்னன், இந்த கட்டுரையில் சகோதரர் நல்லடியார் சூட்டியது போல தேசவிரோதி மலர்மன்னன்(காந் தியை கொலை செய்தவனை நியாயப்படுத்திய இந்த ஈனப்பிறவியை தேசவிரோதி என அழைத்ததில் எந்த தவறும் இல்லை), தனது நாற்றம் பிடித்த வார்த்தைகளின் மூலம் இந்திய நாட்டின் குடிகளை தங்களுக்குள் அடித்துப் பிரிய நன்றாகவே சூழ்ச்சி செய்கிறது.

தற்போது சிஃபியில் எழுதியிருக்கும் கட்டுரையும் அந்த வகையை சார்ந்ததே. பார்ப்பன ஹிந்துத்துவ மூகமூடியை கழற்றி வைத்துக் கொண்டு படிப்பவர்களுக்க ு அது நன்றாகவே தெரியும். ஆனால் தங்களுக்கு அந்த கட்டுரையில் எந்த தவறும் தெரியாமல் போனதன் காரணம் ஏனோ?

அன்புடன்
இறை நேசன்.
Quote | Report to administrator
அபூ முஹை
0 #8 அபூ முஹை -0001-11-30 05:21
நல்லடியார் உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

அன்புடன்,
அபூ முஹை

//இங்கு நீங்கள் குய்யோ, முறையோ என்று குதிக்கும்படி.. .// -கிருபா

கிருபா அவர்களே முஸ்லிம்கள் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு பதில் எழுதினால் அது உங்களுக்கு குய்யோ முறையோ எனத் தோன்றுவது சற்று அதிர்ச்சியைத் தருகிறது.

அன்புடன்,
அபூ முஹை
Quote | Report to administrator
முகவைத்தமிழன்
0 #9 முகவைத்தமிழன் -0001-11-30 05:21
தேசத்துரோகி மலர் மன்னன் போன்றோருக்கு எது தீவிரவாதம் எது தற்காப்பு என்றெல்லாம் சிந்திக்க இயலாத அளவிற்கு மதவெறி அவரது கண்களை மறைத்துள்ளது.

மேலை நாட்டு ஊடகங்களான பி.பி.சி, சி. என்.என் போன்றவை காட்டிக் கொடுக்கும் அதே வழியைத்தான் இவர்களும் பின் பற்றுகின்றார்கள ். மருத்துவமனை செல்ல காத்து நிற்கும் கற்பினியையும் முதியோரையும் சிறுவர்களையும் இஸ்ரேலிய ரானுவம் சுட்டுக்கொன்றா ல் அது பயங்கரவாதம் இல்லை தவறுதலாக சுடப்பட்டனர் என்றும் அதே சமயம் தங்கள் வாசஸ்த்தளங்களைய ும் வயல்வெளிகளையும் அழிக்கும் இஸ்ரேயிலிய டாங்கிகளுக்கு எதிராக வெறும் கல்லை எறிந்து தனது எதிர்ப்பை காட்டும் பாலஸ்த்தீன சிறுவர்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சித்தரிக்கும் அதே யூத ஃபாசிச பயங்கரவாத சிந்தனை தான் இந்த தேச விரோதி மலர் மன்னனுக்கும் ஒன்று பட்ட சமுதாயத்தை கூறு போட நினைக்கும் சிஃபி தளத்திற்கும் உள்ளது என்றால் மிகையில்லை.

வழியெங்கும் கிடக்கும் இந்திய வரலாறுகளை இந்த தேசத்துரோகி மலர் மன்னனை புரட்டி பார்க்க சொல்லுங்கள்... தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமாக பாரதத்தில் நடந்த அத்தனை வகுப்பு கலவரங்களின் மூலகர்த்தாக்கள் இந்த பாசிஸ்ட்டுகளே என்று இந்திய வரலாறு தன்னுள் பதிந்து வைத்துள்ளது.

இப்பயங்கரவாதிகளால் மூட்டப்பட்ட கலவரத்தீயில் பெரும்பாலும் எரிந்து சாம்பலானவர்களும ் அழிகக்கப்பட்ட சொத்துக்களும் சிறுபான்மையினருடையதே!!

திட்டமிடப்பட்டு பரப்பப்படும் அவதூறுகளால் தங்களது பூர முகத்தை மறைத்து பாதிக்கப்பட்டவர ்களை பயங்கரவாதிகளாக சித்தறிக்கு முயலும் மலர் மன்னன் போன்ற பாசிச பயங்கரவாதிகள் கட்டாயம் அடையாளப்படுத்தப ்பட வேண்டும். தொடரும் இது சம்பந்தமான கட்டுரைகளை இன்னும் சில பல மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் எனது வலைப்பதிவிலும் பதிகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்
www.tmpolitics.net
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்