முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

ஒளிமயமான எதிர்காலம் லக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.

முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

  1. இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.

  2. இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.

"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.


ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.


"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள.


இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.

முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

  • பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.

  • பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.

  • பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.

  • ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.

இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

- ஆக்கம்: முன்னா

(சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கம், வாசகர்களின் பார்வைக்காக மறுபதிக்கப்பட்டுள்ளது)

Comments   

ஜாஃபர் அலி
0 #1 ஜாஃபர் அலி -0001-11-30 05:21
முஸ்லிம் சமுதாயத்திற்குத ் தேவையான மிக அருமையான ஆக்கம்! தொடருங்கள்!! அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானா க!!!
Quote | Report to administrator
syed ali
0 #2 syed ali -0001-11-30 05:21
Bismillahirrahumanirraheem

a goog ariticle by munna.
Quote | Report to administrator
syed ali
0 #3 syed ali -0001-11-30 05:21
Bismillahirrahumanirraheem

a good ariticle by munna.
Quote | Report to administrator
அதி. அழகு
0 #4 அதி. அழகு -0001-11-30 05:21
தேவையான பதிவு.

சுட்டெரிக்கும் பாலை மணலால் பாதங்கள் கொப்பளித்துப் போன பின்னும் ஏற்றுக் கொள்ளக் காத்திருந்த யஃத்ரிபை நோக்கிப் பயணித்த அந்த விலை மதிப்பற்ற ஹிஜ்ரத்தின் சுவடுகள், இன்று மறக்கப் பட்ட 'பழங்கனவு'.

வருத்தமே எஞ்சி வாட்டுகிறது!

ஓ ... ஹிஜ்ரா!
Quote | Report to administrator
Abu Shabin
0 #5 Abu Shabin -0001-11-30 05:21
Assalamu alaikkum warahmathullah...
Meanful article....Such as article we expecting more and more...
Quote | Report to administrator
Mushtaq Muhammd
0 #6 Mushtaq Muhammd -0001-11-30 05:21
Alhamdulillah
very good article reminding muslim ummah about the historic as well as practical aspect and meaning of Muharram, New year and teachings to be learn't and engraved in our day to day life as well....
Jazaakallhu khair
Mushtaq Muhammad
Quote | Report to administrator
Mushtaq Muhammd
0 #7 Mushtaq Muhammd -0001-11-30 05:21
Alhamdulillah
very good article reminding muslim ummah about the historic as well as practical aspect and meaning of Muharram, New year and teachings to be learn't and engraved in our day to day life as well....
Jazaakallhu khair
Mushtaq Muhammad
Quote | Report to administrator
shameer
0 #8 shameer 2009-12-25 19:57
இளைய தலைமுறைக்குத் தேவைப்படும் முக்கியமான கட்டுரை.

=========
உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது.
நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட:
www.satyamargam.com/.../
- சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator
shameer
0 #9 shameer 2009-12-25 19:58
அஸ்ஸலாமு அலைக்கும்.

புதிய தலைமுறையினருக்க ு மிகவும் அவசியமானதொரு ஆக்கம் இது.

---------------------------------------
மட்டுறுத்தினர் அறிவிப்பு:

தமிழில் தட்டச்ச இங்கே செல்லுங்கள்:
www.satyamargam.com/.../
---------------------------------------
Quote | Report to administrator
haneefm
0 #10 haneefm 2011-11-26 22:00
புகழுக்குறியவன் அல்லாஹ்!!!!!
இன்னும் இது போன்ற நல்ல ஆக்கங்களை தந்து இஸ்லாமியர்களுக் கும் நம் இளையசமுதாயத்துக ்கும் மறுமலர்ச்சியை உண்டாகட்டும்,வா ழ்த்துகள் உங்கள் ஆக்கங்களுக்கு
A.M.ஹனிப்
திருக்களாச்சேரி
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்