முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவரான ரஹ்மான் சாதிக் அவர்களை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் ...!

"...இன்னும் மனிதனுக்கு, அவன் அறியாததை எல்லாம் அவனே கற்றுக் கொடுத்தான் ..." எனும் அல்குர்ஆனின் (96:5) அழகிய வார்த்தைகளுடன் ஆரம்பம் செய்கின்றேன் ....

இஸ்லாமிய வரலாறுகளைப் படிக்கும்போது நமது சிந்தனையும் அறிவும் வளர்வது மட்டுமல்லாமல், இறைவனின் திருப்திக்காக நமது வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மேலோங்குவதை உணர்கிறோம்.

அப்படிப்பட்ட வரலாறுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்குத் தனி இடம் உண்டு. அவர்கள் சுவைத்த அந்த ஈமானின் வெளிப்பாடான தியாகங்கள், செயல்களின் அடிப்படையில் பத்துப் பேருக்கு அண்ணலார் சுவனத்தை உறுதியளித்தார்கள்.

அதில் முதலாமவர் நமது வரலாற்று நாயகரான அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) பற்றி நான் அறிந்துகொண்ட வரலாற்றுத் தகவல்களை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களோடு அடுத்து வரும் நாட்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து 'அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், 'அர்ரய்யான்' என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று கூறினார்கள். உடனே அபூபக்ரு(ரலி), 'இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது' (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, 'அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், 'நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூபக்ரே' என்று கூறினார்கள் (புகாரீ 3666).

சுவனத்திற்குப் பல வாசல்கள் உண்டு; அதில் ஒவ்வொரு வாசல் வழியாகவும் மனிதர்கள், தாம் செய்த ஒவ்வொரு சிறப்பான அமல்களின் அடிப்படையில் நுழைவார்கள் ...ஆனால் நமது வரலாற்று நாயகரோ அதன் எல்லா வாசல் வழியாகவும் நுழையத் தகுதி பெற்றவராக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விரும்பப்பட்டவராவார்.

அப்படி என்றால் தமது வாழ்வில் ஒவ்வொரு செயலையும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் வண்ணமாக அமைத்துக் கொண்டவரின் வரலாற்றை நாமறிவதுதானே உண்மையான கல்வி ?

அதன் முயற்சியே இந்தச் சிறு பணி! அடுத்தடுத்த நாட்களில் அபூபக்ரு (ரலி) எனும் நபித் தோழமையின் பேராளுமையைத் தொடர்ந்து சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்!

நிறைந்த அன்போடு,
ரஹ்மான் சாதிக்
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Comments   

Wassim
+5 #1 Wassim 2014-04-25 14:20
மிகவும் தேவையான பதிவு , எதிர்பாக்கிறேன் இன்ஷா அல்லாஹ்...
Quote | Report to administrator
அ மு அன்வர் சதாத்
+5 #2 அ மு அன்வர் சதாத் 2014-04-25 19:17
மிக்க மகிழ்ச்சி.

மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்
Quote | Report to administrator
நூருத்தீன்.
+5 #3 நூருத்தீன். 2014-04-26 00:21
புதிய தொடர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது . அணுக்கத் தோழரின் வரலாற்றைக் காண ஆவல்.
Quote | Report to administrator
ஜபருல்லாஹ் இஸ்மாயில்
+5 #4 ஜபருல்லாஹ் இஸ்மாயில் 2014-04-26 02:43
மாஸா அல்லாஹ்.... எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே.. ..உனது எழுத்துக்கள் சத்திய மார்க்கம்.காம் தளத்திற்கு மேலும் அழகூட்ட அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன், இச்சமயம் சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கும் சத்தியமார்க்கம் .காம் தள நிர்வாகிகளுக்கு ம் எனது நன்றியினை துஆவாக சமர்ப்பிகிறேன். அல்லாஹ் உங்களை உயர்ந்த அந்தஸ்தில் உயர்த்திவைப்பான ாக....
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக்
+5 #5 முஹம்மத் ஆஷிக் 2014-04-26 05:04
அருமையானவரின் வரலாறை அழகிய முறையில்
இணைய உலகிலுள்ளோருக்க ு இத்தளத்தின் மூலம் அறியத்தருவதை
உவகையுடன் வரவேற்கிறேன்.
சகோ. ரஹ்மான் சாதிக்,
இன்ஷாஅல்லாஹ் சிறப்புடன் தொடர்க.
Quote | Report to administrator
ஆஷிக் அஹ்மத்
+4 #6 ஆஷிக் அஹ்மத் 2014-04-26 07:34
அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்நோக்கி இருக்கின்றோம்.
Quote | Report to administrator
Nijar
+4 #7 Nijar 2014-04-26 10:49
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்
Quote | Report to administrator
Adirai Ahmad
+3 #8 Adirai Ahmad 2014-04-26 10:51
'ரஹ்மான சாதிக்'....!?

பெயர் வைப்பதில் பெற்றோர் தவறிழைத்துவிட்ட ார்கள் எனினும், அப்பெயரில் உள்ள அனர்த்தத்தை உணர்ந்து, 'அப்துர்ரஹ்மான் ' என்றோ, 'சாதிக்' என்றோ மாற்றிக்கொள்வது தான் கொள்கை அடிப்படையில் மிக நல்லதாகும்.
Quote | Report to administrator
A.W.Hasanudeen
+3 #9 A.W.Hasanudeen 2014-04-26 10:59
Masha Allah .Allah will give you more success in this regard. Appreciate your effort . Alhamdhulillah
Quote | Report to administrator
முபி ஜன்னத்
+4 #10 முபி ஜன்னத் 2014-04-26 11:17
அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ். மிகுந்த மகிழ்ச்சி. ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்.
Quote | Report to administrator
ABDUL AZEEZ
+3 #11 ABDUL AZEEZ 2014-04-26 14:02
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே.
அபூ பக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஒரு முன்னோடி சஹாபி அவர்கள் பற்றி எழுத நீங்கள் நிரைய சிரமம் மேர்கொள்ள வேண்டிவரும். உங்கள் முயற்சி வாழ்த்துக்குறியது.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
Yasmin Bint Mohamed
+3 #12 Yasmin Bint Mohamed 2014-04-26 14:54
மாஷா அல்லாஹ்... அல்ஹ்ம்துளில்லா ஹ்... இப்படி ஒரு சிறந்த வலைத்தளைத்தில் உங்களது கட்டுரை வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி...

இந்த தொடரை படித்து நாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெறப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..

படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட உங்களது எழுத்து நடை கண்டு படிக்கும் ஆர்வத்தை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ ்..

அத்தனை சுவை உங்கள் எழுத்து நடையில்.. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த எழுத்தாற்றலை நம் சமுதாயத்தினருக் கு உங்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோளுடன் வாழ்த்துகள்...

தொடர்ந்து எழுத வல்ல இறைவன் துணை புரிவானாகா!!! ஆமின்..
Quote | Report to administrator
shajahan
+3 #13 shajahan 2014-04-26 14:59
அல்ஹம்துலில்லாஹ ்,

அல்லாஹு உங்கள் மூலம் இந்த வேலையை வாங்கி கொண்டான் .

இன்னும் மேலும் நீங்க வளர என் வாழ்த்துக்கள்.

ஷஹீத் சையது குத்துப் போன்று நீங்களும் எழுத்துகளில் பெரிய புரச்சியை ஏற்படுத்துங்கள் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிர்ப்பான்.
Quote | Report to administrator
rahimahaja
+3 #14 rahimahaja 2014-04-26 17:01
அல்ஹம்துலில்லாஹ
Quote | Report to administrator
ஹசன்
+3 #15 ஹசன் 2014-04-26 17:09
மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி.

அல்லாஹ் யாவற்றையும் சிறப்பாக்கி தர போதுமானவன்.
Quote | Report to administrator
Syed Ibrahim
0 #16 Syed Ibrahim 2014-04-26 21:58
SALAMU ALAIKUM,
MASHA ALLAH .GREAT WORK
Quote | Report to administrator
julaiha nazir
+2 #17 julaiha nazir 2014-04-27 02:04
உங்களின் எழுத்துக்களை புத்தகமாக மறுவடிவத்தில் படிக்க நினைத்திருந்தோம ் ஆனால் மிகபெரும் தளத்தில் மீண்டும் இதை படிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ..நாங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்த தொடரை நம் மற்ற அனைத்து சகோதர சகோதரிகளும் படித்து பயன் பெற வேண்டும்... அல்லாஹ் உங்களுக்கு கல்விஞானத்தைக்க ொடுத்து இன்னும் நிறைய எழுத அல்லாஹ் துணை நிற்பானாக..வாழ் த்துகள் நாநா..
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
+3 #18 அபூ ஸாலிஹா 2014-04-27 17:56
மிகுந்த மகிழ்ச்சி!

ஆர்வமூட்டும் தலைப்பு - மிகச் சரியான இயங்குதளம் - எவர்களை இணைத்து இது போன்ற சிறந்த பணிகளை வாங்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்து அழகாக கோர்த்துள்ள இறைவனுக்கு நன்றி!
Quote | Report to administrator
யாசர் அரஃபாத்
+1 #19 யாசர் அரஃபாத் 2014-04-28 21:13
மாஷா அல்லாஹ்,சத்தியம ார்க்கம் ஒரு சிறந்த நன் எழுத்தாளரையே தேர்ந்தெடுத்துள ்ளது. மேலும் சகோ ரஹ்மான் சாதிக்கின் உணர்வூட்டும் எழுத்துகளை மென்மேலும் காண ஆவலாய் உள்ளேன்.அர்ரஹ்ம ான் உங்களையும், நல் வாய்ப்புக்கொடுத ்த சத்தியமார்க்க குழுவில் உள்ள சகோஸ்களுக்கும் அருள்புரிவானாக!
Quote | Report to administrator
பானு
+1 #20 பானு 2014-04-29 14:06
மாஷா அல்லாஹ்... அறிமுகம் பிற பகுதிகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கிறது. அழகிய முறையில் எடுத்த பணியை முடிக்க அல்லாஹ் உதவுவானாக.
Quote | Report to administrator
ribnas
0 #21 ribnas 2014-05-05 13:00
வாழ்த்துக்கள் தொடருங்கள் அண்ணா வாசகனாய் வரலாற்றை அறிந்துகொள்ள ஆவளுடன் நான்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்