முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இஸ்லாம்

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு(ரலி) மற்றும் பிரபல நபித்தோழரான அனஸ்(ரலி) போன்றவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸ்களின் தரத்தினைக் குறித்து கண்டோம். அடுத்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியின் தரத்தினைக் குறித்து காணலாம்.


நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன் , உனக்கு நன்மையைத் தருகிறேன். உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன்" என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன்.

"(அப்போது) பகல் சாயும்போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! (என்று கூறி முன்னர் அபூ ராஃபிவு (ரலி) அறிவித்ததைப் போன்று கூறினார்கள்.) பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப்பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்ததால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும்" என்றார்கள். அப்போது நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு "பகலில் இரவில் ஏதாவது ஒருநேரத்தில் தொழுது கொள்!" என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அபூதாவூத் (1105).

தஸ்பீஹ் தொழுகை உண்டு என கருதும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸினையும் அதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரங்களில் அமைந்த ஹதீஸ் அன்று.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை, நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அம்ர் பின் மாலிக்...... என்றவாறு அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவதாக வரும் அம்ர் பின் மாலிக் என்பவரை நம்பகமனவர் இல்லை என ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஆட்சேபிக்கின்றனர்.

அம்ர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவர் நம்பகமானவர்களிடமிருந்து மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர் . மேலும் ஹதீஸ்களைத் திருடுபவர்.  அமர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவரை அபூயஃலா அவர்கள் பலவீனமானவர் என்று கூற நான் கேட்டுள்ளேன் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 5 பக்கம் 150)

இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் என்ற நூலில் (பாகம் 2, பக்கம் 231) எடுத்தெழுதியுள்ளார்கள்.


எனவே நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் மேற்கண்ட ஹதீஸ் தஸ்பீஹ் தொழுகை உண்டு என்பதற்கான ஆதாரப்பூர்வ ஹதீஸ் அல்ல.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-2 | பகுதி-4 >

Comments   

சையது இப்ராஹீம்
0 #1 சையது இப்ராஹீம் 2011-06-29 15:36
தஸ்பீஹ் நபில் தொழுகை சம்பந்தமாக உள்ள இந்த ஆய்வு சரியில்லை. ஏனெனில் அம்ர் மாலிக் நுகைரி பலமானவர்தான் இதனை தஹபி அவர்கள் மீஜானுல் இஃதிலாலில் , ஹாபிள் இப்னு ஹஜர் தஹ்தீப் தஹ்தீபில் குறிப்பிட்டுள்ள ார்கள். பிறகு காமிலில் இப்னு அதி கூறுவதானது அவருக்கு கவனக் குறைவால் ஏற்பட்டது. ஏனெனில் தஹபி அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ள ார்கள் அம்ர்பின்மாலிக் நுகைரியின் மீது மேற்குறிப்பிட்ட குற்றஞ்சாட்டுஇல ்லை .மாறாக அம்ர் இப்னு மாலிக் ராஸிபி இவர் மீது தான் குற்றஞ்சாட்டு உள்ளது. இதனை அறியாமல் இப்னு அதி எழுதி விட்டார்.
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #2 சையது இப்ராஹீம் 2011-07-01 20:41
அஸ்ஸலாமு அலைகும் தஸ்பீஹ் தொழுகை ஆய்வை எழுதிய கட்டுரையாளர்நான ் வைத்த விஷயத்திற்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #3 சத்தியமார்க்கம்.காம் 2011-07-02 10:50
அன்புச் சகோதரர் சையது இப்ராஹீம்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தகவலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவலின் அரபு மூலம் கிடைத்தால் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அது, கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய முழுத் தொடரையும் படித்து விட்டீர்களா?
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #4 சையது இப்ராஹீம் 2011-07-02 20:05
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்) இந்த ஆய்வானது நான் மதரஸாவில் படிக்கும் போது செய்தது. அந்த புத்தகம் என்னிடம் தற்போது இல்லை. இன்ஷா அல்லாஹ் அந்த புத்தகங்களில் எத்தனையாவது பாகம் பக்க விவரம் உள்ளது.அதனை அனுப்பி வைக்கிறேன்.அந்த குறிப்பு என்னிடம் ஒரு வேளை இல்லாமல் இருந்தால் கூட எந்தப் பிரச்சனை இல்லை ஏனெனில் இந்த ஆய்வை செய்த கட்டுரையாளர் நான் குறிப்பிட்ட புத்தகங்களை பார்த்தால் எளிதாக விளங்கி விடும் ஏனெனில் அஸ்மாவுர் ரிஜாலில் அறிவிப்பாளர் பெயர் வரிசைக்கிரமமாக உள்ளது.எனவே தேடி எடுப்பது மிகவும் சுலபம் மேலும் இந்த ஆய்வுக் கட்டுரையை பல முறை வெவ்வேறு இணைய தளங்களில் படித்து விட்டேன் ஆகவே என்னின் ஆய்வின்படி தஸ்பீஹ் தொழுகை பலமானது மேலும் ஹதீஸ்கலை ஆய்வை வைத்தும் பல கோணங்களில் பார்த்தாலும் ஆதாரப்பூர்வமானத
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #5 சையது இப்ராஹீம் 2011-07-03 19:08
நான் மொபைலில் தான் கருத்துக்களைஅனு ப்புகிறேன் என்னின் மொபைலில் அரபி டைப் இல்லை. இதனால் நான் அரபி வாசகங்களை பதிய முடியாது. என்னின் வாதத்திற்கான ஆதாரம் அம்ர்பின் மாலிக் பற்றி தஹபி அவர்கள் மீஜானுல் இஃதிலாலில் பலமானவர் என்பதற்கு ஸிகத் என்று குறிப்பிட்டுள்ள ார் பக்கம்:286 பாகம்:3 அடுத்து ஹாபிள் இப்னு ஹஜர் தஹ்தீப் தஹ்தீபில் அம்ர் பின் மாலிக் நுகைரி ரிவாயத்தில் அவரின் மகனின் அறிவிப்பின்றி வந்தால் ஏற்கப்படும் இல்லையெனில் அவர் தவறு செய்பவர்.( இந்த ஹதீஸில் மகன் இல்லை.) பக்கம்:378 பாகம்: 4 அடைப்பு குறிக்குள் இருப்பது அதில் இல்லை. எனவே இந்த ஹதீஸானது பலமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகவே கட்டுரையாளர் என்னின் நியாயமான வாதங்களுக்கு பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற ேன். இதற்கு பதில் அளித்த பிறகு என்னின் அடுத்த வாதங்களை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். அன்புடன் சையது இப்ராஹீம் இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #6 சையது இப்ராஹீம் 2011-07-03 19:37
font size யை குறிப்பிடுகிறீர ்களா? அல்லது நான் வைத்த வாதங்கள் சிறியதாக உள்ளது என்கிறீர்களா? தயவு செய்து விரைவாக பதில் அளியுங்கள்
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #7 சையது இப்ராஹீம் 2011-07-04 15:42
அஸ்ஸலாமு அலைகும் வரஹ் என்னின் கேள்விக்கு விரைவாக பதில் தருவதற்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற ேன்.அடிக்கடி தொந்தரவு செய்வதாக எண்ணி விடாதீர்கள்.மக் களுக்கு உண்மை விளங்கவேண்டும் இது தான் என்னுடைய நோக்கமாகும். அன்புடன் சையது இப்ராஹீம்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #8 சத்தியமார்க்கம்.காம் 2011-07-04 21:05
அன்புமிக்க சகோதரர் சையது இப்ராஹீம்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸில் இடம்பெறும் "அம்ரு பின் மாலிக் அல்நுகைரீ பலவீனமானவர்" என்று இமாம் இபுனு அதீ கவனக் குறைவாகக் குறிப்பிட்டிருப ்பதாகச் சுட்டியிருந்தீர்கள்.

அல்காமிலில் இமாம் இபுனு அதீ அவர்கள் வெறுமனே அல்நுகைரீயை பலவீனமானவர் எனச் சொல்லவில்லை. அவருடையை அறிவிப்பை எடுத்துப் போட்டுத்தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களை மரணப் படுக்கையில் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "இவருடைய இறப்பிற்காக அர்ரஹ்மானுடைய அர்ஷு குலுங்குகிறது" என்று கூறியதாக அறிவிப்புச் செய்தவர் அல்நுக்ரீ என்று அல்காமிலில் பதிவு செய்திருக்கிறார்கள்:

تنبيه:عَمْرُو بْنُ مَالِكٍ النُّكْرِيُّ :Quote:

قال ابن عدي في الكامل(5/150):
الكامل في الضعفاء ج 5 /ص 150
عمرو بن مالك النكري بصري منكر الحديث عن الثقات ويسرق الحديث سمعت أبا يعلى يقول عمرو بن مالك النكري كان ضعيفا أخبرنا أبو يعلى وعمران السجستاني وعلي بن سعيد بن بشير الرازي قالوا حدثنا عمرو بن مالك النكري البصري قال ثنا الوليد بن مسلم عن الأوزاعي عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن معيقب قال لما نظر رسول الله إلى سعد بن معاذ على سريره قال لقد اهتز لموته عرش الرحمن واللفظ لأبي يعلى وهذا بهذا الإسناد لم يروه عن الوليد غير عمرو بن مالك هذا وغيره من أصحاب الوليد وروي هذا عن الوليد بهذا الإسناد أن النبي e قال ويل للأعقاب من النار والحديث هو ذاك وهذا جاء به عمرو بن مالك حدثنا أبو يعلى ثنا عمرو بن مالك ثنا الفضيل بن سليمان عن عبد الرحمن بن إسحاق القرشي عن محمد بن المنكدر عن أنس قال قال رسول الله e سألت ربي عز وجل اللاهين من ذرية البشر فوهبهم لي وهذا رواه غير عمرو بن مالك عن الفضيل بن سليمان عن عبد الرحمن بن إسحاق عن الزهري عن أنس قال عمرو عن محمد بن المنكدر عن أنس ولعمرو غير ما ذكرت أحاديث مناكير بعضها سرقها من قوم ثقات ولعمرو غير ما ذكرت أحاديث مناكير بعضها سرقها من قوم ثقات
"இவருடைய இறப்பிற்காக அர்ரஹ்மானுடைய அர்ஷு குலுங்குகிறது" என அறிவித்தவர் அல்நுக்ரியா அர்ராஸிபியா என்பதை அறியத் தாருங்கள்.

மேலும், கட்டுரையாளர் பணிப்பளுவில் இருந்து வருவதால் அவருடைய பதில் பெற்றுப் பதியச் சுணக்கம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுடைய கருத்துகளுக்கு ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
சையது இப்ராஹீம்
0 #9 சையது இப்ராஹீம் 2011-07-05 05:56
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்) தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக உள்ள ஹதீஸ் பற்றிய விளக்கம் அம்ர்பின் மாலிக் நுகைரி வழியாக வரும் ஹதீஸ் பலமானது என்பதற்கு மற்றொரு புறக்காரணி அபூதாவூதில் வரும் ஹதீஸின் முதல் அறிவிப்பாளர் 1.அப்துல்லாஹ்இப ்னு அம்ர் (ரளி) 2.அபுல்ஜவ்ஜாயி 3.அம்ர்இப்னுமால ிக் நுகைரி மற்றும் சிலர் இந்த அறிவிப்பாளர் தொடரில் கவனிக்க வேண்டியது 2, 3வது அறிவிப்பாளர்களை தான். தஹபி அவர்கள் மீஜானுல் இஃதிலாலில் இவ்வாறு குறிப்பிடுகிறார ்கள்: அபுல் ஜவ்ஜாயிடமிருந்த ு அறிவிக்கும் அம்ர்இப்னுமாலிக ்நுகைரி என்பவர் பலமானவர். தஸ்பீஹ் தொழுகை உள்ள ஸனதை குறிப்பிடுகிறார ்கள். அடுத்த புறக்காரணி தஹபி அவர்கள் மீஜானுல் இஃதிலாலில் அம்ர்பின்மாலிக் நுகைரிக்குபின் அடுத்த ராவி யைகுறிப்பிடுகிற ார்:அம்ர் பின் மாலிக் நுகைரிஅல்ல ராஸிபி என்று இப்னு அதி அவர்களின் விமர்சனம் இவர் முன்கருல் ஹதீஸ் என்பதையும், ராஸிபியின் மீது உள்ள மற்ற விமர்சனங்களையும ் சுட்டி காட்டுகிறார்கள் . அடுத்த புறக்காரணி இப்னு ஹஜர் அவர்கள் தஹ்தீப் தஹ்தீபில் அம்ர் பின் மாலிக் நுகைரியின் அறிவிப்பில் மகன் இன்றி இருந்தால் ஏற்கப்படும் என்கிறார்கள். இந்தளவிற்கு தெளிவாக உள்ளது . எனவே தஸ்பீஹ் நபில் தொழுகை ஆதாரப்பூர்வமானத ுதான் பின்குறிப்பு: தஸ்பீஹ் தொழுகை பற்றி எழுதும் கட்டுரையாளர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டும் கிரந்தம் துஹ்பதில் அஹ்வதி அதில் உள்ள பாதியை குறிப்பிடுகிறார ்கள். மீதிபாதியை விட்டுவிடுகிறார ்கள்.மீதி பாதியில் தான் தஸ்பீஹ் தொழுகை கூடும் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்றே விட்டுவிடுகிறார ்களா? என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். அன்புடன் சையது இப்ராஹீம்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #10 சத்தியமார்க்கம்.காம் 2011-07-06 16:48
அன்புச் சகோதரர் சையது இப்ராஹீம்,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

நீங்கள் குறிப்பிடிருந்த வாறு இமாம் தஹபி அவர்கள் மீஸானில், இரு அம்ருகளைப் பற்றிக் குறிப்பிட்டு,
Quote:
عمرو بن مالك النكرى ، عن أبي الجوزاء وعمرو بن مالك الجنبى عن أبي سعيد الخدرى وغيره ، تابعي فثقتان
"அபுல் ஜவ்ஸா வழியில் அறிவிக்கும் அம்ரு பின் மாலிக் அல்நுக்ரியும் அபூஸயீத் அல்குத்ரீ வழியில் அறிவிக்கும் அம்ரு பின் மாலிக் அல்ஜுனுபியும் நம்பகமானவர்கள்தாம்"
.எனக் கூறுகிறார்கள். ஆனால், மீஸானில் தஸ்பீஹ் தொழுகை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை.

மேலும்,
ஓர் இமாம், ஓர் அறிவிப்பாளரைப் பற்றிச் சான்றுகளுடன் குறை காண்பதற்கும் எவ்விதச் சான்றும் இல்லாமல் இன்னோர் இமாம் அதே அறிவிப்பாளரை "அவரு ரொம்ப நல்லவரு" என்று சொல்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்.

அல்நுக்ரியின் இன்னோர் அறிவிப்பு:
قال الدرامي في سننه - حدثنا ابو النعمان ثنا سعيد بن زيد ثنا عمرو بن مالك النكري حدثنا ابو الجوزاء اوس بن عبد اللة قال

قحط اهل المدينة قحطا شديدا ، فشكوا إلى عائشة ، فقالت انظروا قبر النبي صلى الله عليه وسلم فافتحوا منه كوى إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف ففعلوا . فمطرنا مطرا حتى نبت العشب وسمنت الابل حتى تفتقت من الشحم فسمى عام الفتق

அதற்கு,
"وما روي عن عائشة رضى الله عنها من فتح الكوة من قبره إلى السماء لينزل المطر فليس بصحيح ولا يثبت إسناده، وإنما نقل ذلك من هو معروف بالكذب ومما يبين كذب هذا أنه في مدة حياة عائشة لم يكن للبيت كوة بل كان بعضه باقيا كما كان على عهد النبي صلى اله عليه وسلم بعضه مسقوف وبعضه مكشوف، وكانت الشمس تنزل فيه كما ثبت في "الصحيحين "عن عائشة أن النبي صلى اله عليه وسلم كان يصلي العصر والشمس في حجرتها لم يظهر الفيئ بعد.
என்பது இமாம் இப்னு தைமியா அவர்களின் மறுப்பு விளக்கம்.

நீங்கள் புறக்காரணிகளைக் குறிப்பிட்டுப் பின்னூட்டமிட்டிருந்தீர்கள்.

ஆனால், தஸ்பீஹ் தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுத, அல்லது அவர்கள் கற்றுக் கொடுத்த நபித் தோழர்கள் தொழுத "அகக் காரணிகள்" எதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. அகமின்றிப் புறம் எதற்குப் பயன்படும்?

தங்களுடைய முதல் பின்னூட்டத்தில்,Quote:
ஆகவே என்னின் ஆய்வின்படி தஸ்பீஹ் தொழுகை பலமானது மேலும் ஹதீஸ்கலை ஆய்வை வைத்தும் பல கோணங்களில் பார்த்தாலும் ஆதாரப்பூர்வமானது
என்று குறிப்பிட்டிருந ்தீர்கள். அதை நீங்கள் முழுமையாக எழுதி எங்களுக்கு அனுப்புங்களேன்.
Quote | Report to administrator
syed ibrahim
0 #11 syed ibrahim 2011-07-07 17:44
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்) தங்களின் வாதம்: ஒருவரை காரணத்தோடு பலகீனம் என்பதற்கு சான்றுகளின்றி பலம் என்பதற்கும் வித்தியாசத்தைஅற ிந்திருப்பீர்கள ் என்று கூறுகிறீர்கள் என்னின் கருத்து: ஒருவரை பலம் என்பதற்கு சான்றுகள் தேவையில்லை இதனை நீங்களும் அறிந்திருப்பீர் கள். மேலும் தஹபி சான்றுடன் தான்கூறியுள்ளார ். ஏனெனில் அம்ர் பின்மாலிக்ராஸிப ி மாறாக நுகைரி அல்ல இவரின்மீது தான் விமர்சனம் உள்ளது என்று அடித்துசொல்லுகி றார் . ஒரு வாதத்திற்கு இதனை விட்டாலும் ஹாபிள் இப்னு ஹஜர் தஹதீப் தஹ்தீபில் இவரின் மகன் அல்லாத அறிவிப்பு ஏற்கப்படும்.நீங ்கள் மகனிடமிருந்து தான் அறிவித்தார் என்று நிரூபியுங்கள்.இ வ்வளவு தெளிவாக இப்னு ஹஜர் அவர்கள் சொல்லும் போது எதனை எடுப்பது? மேலும் இப்னு அதி அவர்கள் அம்ருபின்மாலிக் நுகைரியை தான் விமர்சித்துள்ளா ர்கள் வைத்துக்கொண்டால ும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானத ு தான் இதனை ஆராய்வோம் . இப்னு அதி அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்கிறார். இதன் மூலம் பலகீனம் என்று வாதிட முடியாது ஆதாரம் : ஸீயூத்தி ரஹ் தத்ரீபுர் ராவி ஷர்ஹ் தக்ரீபுன்னவவி பக்கம்153ல் குறிப்பிட்டுள்ள ார். நான் இவரின் அறிவிப்பை (முன்கர்) வெறுக்கிறேன் என்றால் அது பலகீனமாக கருதப்படாது. இப்னு அதி ஒருவரை முன்கர் என்றார். புரைதா பின் அப்துல்லாஹ்பின் அபிபுரைதா ஆனால் இவர் பலமானவர். ஆதாரம்2: இப்னு அதி இக்ரிமாவை முன்கர் என்கிறார். இதற்கு ஹாபிள் இப்னு ஹஜர் கூறுகிறார் இவரிடத்தில் முன்கர் என்பது பலமானவருக்கும் , பலகீனமானவருக்கு ம் பயன்படுத்துவார் . ஆதாரம்: (ஹத்யுஸ்ஸாரி) 2:152 இன்ஷா அல்லாஹ் கருத்துக்கள் தொடரும் அன்புடன் சையது இப்ராஹீம்
Quote | Report to administrator
syed ibrahim
0 #12 syed ibrahim 2011-07-07 19:10
அஸ்ஸலாமு அலைகும் இறுதியாக நீங்கள் அனுப்பிய பின்னோட்டத்திற் கு பதில் அனுப்பினேன்.ஆனா ல் கருத்து மிக சிறியதாக உள்ளது. இதன் காரணம் என்ன? விரைவில் பதில் அளியுங்களேன் நான் என்னின் கருத்துக்களை அனுப்ப ஏதுவாக இருக்கும். அன்புடன் சையது இப்ராஹீம்
Quote | Report to administrator
ராஷித் அஹமத்
0 #13 ராஷித் அஹமத் 2011-07-09 10:49
தஸ்பீஹ் நபில் பற்றிய ஹதீஸ்கள் நான் தேடிக்கொண்டிருந ்தேன். தங்கள் தொடரால் நிறைய ஹதீஸ்கள் படித்து சந்தேகம் தீர்ந்தது. நான் இந்த தொழுகையை வாரம் ஒரு முறையாவது தொழுவேன். இனி இந்த தொழுகையை இன்னும் அதிகமாக்கி தவறாமல் கடைபிடிக்க முயற்சிகள் எடுப்பேன்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்