முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

Mohd Ali ips

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-1

தொடர்ச்சி ...

தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளுக்குக் கீழ்க்கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அவை, சமுதாயத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அதற்கு நீங்களெல்லாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்குத் தருகிறேன்:

  • அரசு பஸ்களில் நான்கில் ஒரு பங்குக் கட்டணச் சலுகை

  • தொழிலுக்காகக் கடனுதவி பெறுவதற்கு அரசு அளித்து வரும் உத்திரவாதத் தொகை ரூபாய் நான்கு கோடியிலிருந்து, எட்டு கோடியாக உயர்வு.

  • திருமண உதவித் தொகை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்வு.

  • பத்தாவது, பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தைப் பிடிப்போருக்கு ரொக்கப் பரிசுத்தொகை மூன்று மடங்காக உயர்வு.

  • ஒன்றுக்கு மேற்பட்ட அங்கக்குறைபாடுகள் உடையவர்களுக்கு வழங்குவதற்காக ஓராண்டுக்கு 1500 மடக்கு சக்கர நாற்காலிகள்.

  • முடக்கு வாதத்தால் பாதித்தவர்களுள் 500 பேருக்குச் சிறப்பு நாற்காலிகள்.

  • சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய முக்கிய மாவட்டங்களில் தசைப்பயிற்சி மையம் அமைத்தல்.

  • அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை.

மேலும், பெரும்பாலான ஏழை முஸ்லிம் பெண்கள் வீட்டுவேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அங்கன் வாடியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் சமுதாய, அரசியல் கட்சிகள்/அமைப்புகள் முனைப்புடன் உதவி செய்து, அவர்களை அரசு அரவணைக்கும் ஊழியர்களாக ஆக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு என்று அண்மையில் அறிவிப்பு வந்துள்ளது.

Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்