முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் பகுதி

லகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,

A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)

இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,A-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.
A-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.

ஒரே இறைவன் - படைத்தவனை ஒருமைப்படுத்துதல் - ஏக இறைவன் - என்ற கொள்கையினையே "ஏகத்துவம்/தௌஹீத்" என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம்.

அதாவது "ஏகத்துவவாதிகள்" அல்லது "தௌஹீதுவாதிகள்" என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.

இப்போது, "இறைவன் ஒருவனே" என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.

எளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே? இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் "ஜெகோவா" பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே? உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, "ஏகத்துவம்-இறைவன் ஒருவனே" சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும். அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.

அப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன?

இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். "ஏகத்துவம் - லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை" - இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. "லா இலாஹ இல்லல்லாஹ் - ஏகத்துவம்" + "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை! ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.

ஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

முன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான "ரிஸாலத்" (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர்.

வரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள்.

தொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, "ஒரே இறைவன் - ஏகத்துவம்" என்பதோடு நில்லாமல், முஹம்மது(ஸல்) அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

அதே சமயம், ஒரே இறைவன் - ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது(ஸல்) அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால் அவர் முஸ்லிம் ஆகமாட்டார். ஆனாலும், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் அவரும் தௌஹீதுவாதி / ஏகத்துவவாதியே!

அல்லாஹ்வும் தன் மறையில், அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய சொல்லைக் கூறுபவர் யார்?” (குர்ஆன் 41:33) என்று கூறுகிறான்.

எனவே, நாம் நம்மை வெறுமனே தவ்ஹீதுவாதி என்று அழைத்துக் கொள்வதைவிட, என் கொள்கை தவ்ஹீது என்று சொல்லிக் கொள்வதைவிட இறைக்கட்டளையின் படி "நான் முஸ்லிம்; என் கொள்கை இஸ்லாம்" என்று சொல்லிக் கொள்வதே சாலப் பொருத்தமானது.

- அபூ சுமையா

Comments   

Muhammad
0 #51 Muhammad 2013-06-07 19:23
தவ்ஹீத் என்பது மனித இனம் அனைவருக்கும் பொதுவான ஏகத்துவ சிந்தனையாகும். ஓரிறைவனை வணங்குவதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. திருக்குரான் இறைவேதம் என்றோ அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதரென்றோ ஷஹாதா எனும் சத்தியப்பிரமாணம ் எடுக்க வேண்டியதில்லை.

யூதர்கள், அஹ்மதியாக்கள் எல்லாம் ஒரிறைவனை மட்டுமே வணங்கும் தவ்ஹீத்வாதிகள்தான்.

அப்படியானால் அண்ணல் நபி(ஸல்) காட்டிய வழியையும் திருக்குரான் அறிவிக்கும் நீதியையும் வாழ்க்கையின் விதிமுறைகளாக கொண்டு ஏக இறைவனை வணங்கும் முஸ்லிம்களுக்கு ம் மற்ற தவ்ஹீத்வாதிக்கள ுக்கும் என்ன வித்தியாசம்?, தவ்ஹீத் என்பது ஆன்மீகம். இஸ்லாம் என்பது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல. அது ஒரு மார்க்கம். இந்த உலகவாழ்க்கையில் சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி நிலைக்க எவ்வாறு வாழவேண்டும் எனும் வழியை காட்டும் மார்க்கம்.

இதைத்தான் இந்த கட்டுரை எழுதிய சகோதரர் மிக அழகாக சொல்கிறார். பிரச்னை என்னவென்றால், தவ்ஹீத் எனும் இஸ்லாமிய இயக்கத்தைத்தான் குத்திக்காட்டுக ிறார் என்று அந்த இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்படுகின்றனர்,

பெரிய தாடி தொப்பியுடன் ISI எனும் முத்திரை குத்திய பையுடன் பாம்பே ரயில்வே ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த நபரை, பாக்கிஸ்தான் ISI உளவாளி என்று அதிரடிப்படை பாய்ந்து கைது செய்து விசாரித்த பிறகு அவர் Indian Statistical Institute எனும் இந்திய புள்ளயியல் துறையில் பணியாற்றும் ஓர் அதிகாரி என்பது தெரிந்து அசடு வழிந்த கதைதான்.

மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்
Quote | Report to administrator
Imran
+1 #52 Imran 2013-06-08 12:16
"தவ்ஹீத் என்பது மனித இனம் அனைவருக்கும் பொதுவான ஏகத்துவ சிந்தனையாகும். ஓரிறைவனை வணங்குவதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. திருக்குரான் இறைவேதம் என்றோ அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதரென்றோ ஷஹாதா எனும் சத்தியப்பிரமாணம ் எடுக்க வேண்டியதில்லை.

யூதர்கள், அஹ்மதியாக்கள் எல்லாம் ஒரிறைவனை மட்டுமே வணங்கும் தவ்ஹீத்வாதிகள்தான்."

எல்லா ஏகத்துவ சிந்தனைகளும் ஒன்றல்ல. குறிப்பிடத்தக்க தனித்தன்மையான வேறுபாடு உள்ளது. யூதர்களின் ஏகத்துவமும் கிறித்தவர்களின் ஏகத்துவமும் முஸ்லிம்களின் ஏகத்துவமும் ஒன்றல்ல. அடிப்படையில் இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட ஏகத்துவத்தை போதிக்கின்றன. வேறல்லாத ஏகனும், பலகீனனான பாரபட்சமான ஏகனும், மூன்றில் ஒன்றான ஏகனும் சமமாக மாட்டார்கள்..மு ஸ்லிம்களின் தவ்ஹீதும் ஏனையவர்களின் தவ்ஹீதும் ஒன்றல்ல...அல்லா ஹ் நன்கறிந்தவன்..
Quote | Report to administrator
Muhammad
+1 #53 Muhammad 2013-06-08 23:28
"எவ்வித தேவையுமற்ற ஈடு இணையற்ற உருவமற்ற மனிதனால் கற்பனை செய்யமுடியாத ஓரிறைவன்" என்றால் ஒரே ஓர் இறைவன்தான்.

மனிதனின் மொழிக்கும் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. எல்லாமே மாயமாய் மறைந்துவிட்டால் என்ன மிஞ்சும் என்று கேட்டால் வெற்றிடம் என்று சொல்லலாம். அதுவும் போய்விட்டால் என்ன இருக்கும் என்றால் மனிதனால் சிந்திக்கவும் முடியாது சொல்லவும் முடியாது. அதுதான் எல்லை.

அதே சமயம் முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று சொல்வது தவறு. நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை காணத்துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இஸ்லாம் சொல்லும் தவ்ஹீத் கட்டத்தை அடைந்துவிடுகிறா ன். அவர்கள் திருக்குரானின் ஓரிரு வசனங்களை கேட்டதும் இஸ்லாத்தை தழுவி விடுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை இல்லாமல் முஸ்லிம் பெற்றொருக்கு பிறந்தால் மட்டும் முஸ்லிமாகி விடமுடியாது.
Quote | Report to administrator
இம்ரான்
0 #54 இம்ரான் 2013-06-09 08:57
அஸ்ஸலாமு அலைக்கும்

1. ஒரு சொல்லிற்கு பலவித பொருள்களும், இன்னும் அவை ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் இருக்கும் நிலையில் பொருந்தாத பொருள் வரும் இடங்களில் பொருந்தாத, முழுமையடையாத பொருள் தரும் விதாமாக அச்சொல்லைப் பயன்படுத்துவது நீதியாகாது. இது உண்மையை பொய்யுடன் கலப்பதாகும். அநீதியாகும். இதனை மொழிப்பயன்பாட்ட ுரீதியில் அணுகினால் நடைமுறையில் அத்தகைய ஒன்றுக்கொன்று உடன்படாத அர்த்தங்கள் இருக்கும் நிலையில் ஒரு பொது சொல்லைப் பயன்படுத்துவது அறிவுடமையாகாது அதற்கு (பொருந்தாத அர்த்ததை தவிர வேறு) எந்த அர்த்தமும் இருக்காது. இது நாம் அறிந்ததே.

2. "எவ்வித தேவையுமற்ற ஈடு இணையற்ற உருவமற்ற மனிதனால் கற்பனை செய்யமுடியாத ஓரிறைவன்" என்றால், என்றால் மட்டுமே ஒரே ஓர் இறைவன் என்று பொருள் கொண்டால் அது "ஓரிறைகொள்கை" என்ற பதத்தின் பல பொருட்களுள் ஒன்றுதான். எல்லையுண்டு உண்மைதான், வார்த்தைகளுக்கு த்தான்; மொழிக்கு அல்ல. மேற்குறிப்பிடப் பட்டவாறு விரிந்து "ஓரிறைகொள்கை" என்ற சொல்லிற்கு இலக்கணம் கண்டால் ; பொருள் கொண்டால் அல்ஹம்துலில்லாஹ ் மொழியும் ஓர் அருட்கொடைதான்.

3. முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று சொல்வதை விட சரியான பிரயோகம் எதுவெனில், முஸ்லிம்களால் மட்டுமே சரியான ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்பதேயாகும். மனிதர்கள் எல்லோராலும் ஏகத்துவ சிந்தனை செய்ய முடிந்தாலும் (உண்மையில் செய்கிறார்கள். இணைவைப்போரும் கூட) சரியான ஏகத்துவம் முஸ்லிகளிடம் மட்டுமே காணப்படுகிறது.

4. முஸ்லிம்களால் மட்டுமே ஏகத்துவ சிந்தனை செய்ய முடியும் என்று கோரினால் அது தவறுதான். மனிதன் என்ற முறையில் எல்லா சிந்தனையையும் எந்த மனிதாலும் செய்ய முடியும். ஏனெனில் சிந்தனை மூளையின் இயல்பு. ஆனால் அத்தகைய சிந்தனையாவும் சரியாகவும், சமமாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. சிந்தனை என்பதுவேறு உண்மை (அ-து, நேர்வழி) என்பது வேறு. மனிதனின் சிந்திக்கும் திறன்/வாய்ப்பு மனிதர்கள் அனைவருக்கும் சமமானதே. அதே சமயத்தில் சரியான சிந்தனை சமமானதல்ல. மேலும் கட்டுரை குறிப்பிட்ட சிந்தனையைப் பற்றியே ஆராய்கிறது. மாறாக சிந்திக்கும் இயல்பைப்பற்றி; வாய்ப்பை பற்றி அல்ல.

5. மனிதர்களுக்கு எல்லையுண்டு. ஆகவே மனிதர்களுக்கு நேர்வழி காட்ட இறைவன் பொறுப்பேற்கிறான ். இறைவன் கற்றுதந்த ஏகத்துவ சிந்தனை சரியானதாகாவும் மனிதர்கள் கற்பித்துக் கொண்ட ஏகத்துவ சிந்தனை குறைபடுடையதாகவு ம் உண்மைக்கு மாற்றமாகவும் இருக்கின்றது. இதன்படி முஸ்லிம்களின் ஏகத்துவ சிந்தனை மற்ற எல்லாவற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. எவ்வாறெனில் மற்ற ஏகத்துவ சிந்தனை போல முஸ்லிம்களின் ஏகத்துவ சிந்தனை மனித சிந்தனையில் பிறந்ததில்லை. இறைவனிடமிருந்து வந்த ஏகத்துவ சிந்தனையும் மனிதர்களிடமிருந ்து வந்த ஏகத்துவ சிந்தனையும் சமமாகமாட்டா. முஸ்லிம்களின் தவ்ஹீதும் மற்றவர்களின்(நி ராகரித்தோரின்,இ ணைவைப்போரின் தவ்ஹீதும்(?),அல ்லாஹ் நேர்வழியில் செலுத்தாதோரின்) தவ்ஹீதும் சமம் இல்லை.

6. முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்ததாலேயே எவ்வாறு ஒருவர் தவ்ஹீது வாதியாக ஆகமுடியாதோ அதுபோலத்தான் ஏகத்துவ சிந்தனை செய்வதாலேயே ஒருவர் தவ்ஹீதுவாதியாக முடியாது. இரண்டுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். அவர்கள் சரியான தவ்ஹீதை அறிந்திருக்கவில ்லை அல்லது அதை சரியென அங்கீகரிக்கவில் லை அவர்களது உள்ளங்கள்...இந் த இரண்டு நிலைகளிலும் அவர்களை நாம் தவ்ஹீதுவாதி என்று கூறமாட்டோம்.

7. நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை காணத்துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இஸ்லாம் சொல்லும் தவ்ஹீத் கட்டத்தை அடைந்துவிடுகிறா ன். அவர்கள் திருக்குரானின் ஓரிரு வசனங்களை கேட்டதும் இஸ்லாத்தை தழுவி விடுகிறார்கள். ஆம் இது உண்மைதான் சரியான வாசகம்தான், ஆனால் அந்த இறுதி கட்டத்தில்தான் அந்த மனிதனுடைய ஓரிறைகொள்கை முஸ்லீம்களின் தவ்ஹீதோடு இணைகிறது மற்ற நிலையில் இல்லை. மற்ற கட்டத்தில் இதன் செய்தி மாறுபட்டதே. ஆகவே அந்த கட்டத்தை அடையாத, அடைய விரும்பாத யூத,கிறித்தவ சிந்தனையாளர்களி ன் தவ்ஹீதும் முஸ்லீம்களின் தவ்ஹீதும் ஒன்றாக மாட்டாது.

8. "ஓரிறைகொள்கை" என்ற சொல் போன்றல்லாமல் நடைமுறையில் தவ்ஹீது என்ற சொல் "முஸ்லீம்களின் ஓரிறைகொள்கை" என்ற பொருளில்தான் புரிந்துகொள்ளப் படுகிறது. இதன்படி தவ்ஹீதுவாதி என்பது முஸ்லீம்களை மட்டுமே குறிப்பதாகிறது. அவ்வாறல்லாமல் அதன் மொழி அகராதி அடிப்படையிலேயே தவ்ஹீது என்பதற்கு பொருள் கொள்ள வேண்டும் என்று முற்பட்டால் முஸ்லீம்களின் தவ்ஹீதும் ஏனையவர்களின் தவ்ஹீதும் சமமாக மாட்டா. இன்னிலையில் "தவ்ஹீது" என்ற சொல்லுக்கு பொருள் ஏற்படாது. அச்சொல்லைப் பயனடுத்த வேண்டும் எனில் விளக்கமாகவோ, அல்லது அந்தந்த கூட்டத்தாரோடு சேர்த்தோதான் பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே தெளிவானது சரியானது. எல்லாவற்றுக்கும ் மேலாக நீதியானது. இஸ்லாம் தெளிவானதன் பக்கமும் நீதியின் பக்கமும் அழைக்கிறது.

அல்லாஹ் நன்கறிந்தவன்..ப ோதுமானவன்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்