முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சித்தம்

தேவை கொஞ்சம் தேன்...தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே.  பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும்.  இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்
 
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.  நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும்.  ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

மூலம்: Therapeutic uses of Honey in Ayurveda
தமிழில்: அபுஷிஃபா

Comments   

Muhammed Shifaz
+1 #1 Muhammed Shifaz -0001-11-30 05:21
Alhamthullillah above the septe is very perfect thanks for your information
Quote | Report to administrator
அபூதாஹிர்
0 #2 அபூதாஹிர் -0001-11-30 05:21
அல்ஹம்துலில்லாஹ ்! பயனுள்ள தகவல்களை நேர்த்தியாக தருகிறீர்கள். நன்றி!
Quote | Report to administrator
mustafa
0 #3 mustafa -0001-11-30 05:21
your web design is very good.
Quote | Report to administrator
jafar
0 #4 jafar -0001-11-30 05:21
அருமையான ஆக்கம்! தொடர்ந்து இதுபோன்ற பயன்தரதக்க செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோ ம். அல்ஹம்துலில்லாஹ ்!!
Quote | Report to administrator
nihmath
0 #5 nihmath -0001-11-30 05:21
ALHAMDULILLAH ITS AN EXCELLENT WEB I LIKE TO READ.
Quote | Report to administrator
nihmath
0 #6 nihmath -0001-11-30 05:21
ALHAMDULILLAH ITS AN EXCELLENT WEB I LIKE TO READ.
Quote | Report to administrator
அருளடியான்
0 #7 அருளடியான் -0001-11-30 05:21
இந்த ஆக்கம் ஆரிப் மரிக்கார் அவர்கள் பதிந்துள்ளார்.

geocities.com/.../blog.html

அதனை அப்படியே இங்கேயும் பதிந்துள்ளீர்கள்.

இஸ்லாம் நன்றி நவில்வதை சிறந்த முஸ்லிமின் பண்பாக கூறுகிறது.

ஆரிப் மரிக்கார் அவர்களின் தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிப்பித்துள்ள நீங்கள் அதற்கு ஒரு நன்றியையாவது பின் குறிப்பில் இணைத்திருக்கலாம்.

செய்வீர்கள் என நம்புகிறேன்.
Quote | Report to administrator
நிர்வாகிசத்தியமார்க்கம்.காம்
0 #8 நிர்வாகிசத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரர் அருளடியான் அவர்களே.

இன்ஷா அல்லாஹ் சத்தியமார்க்கம் .காம் இயன்றவரையில் இஸ்லாமிய பண்புகளைப் பேணி சமுதாயத்துக்கு ஓர் முன்மாதிரியாக திகழ முயலும்.

தாங்கள் சுட்டிக்காட்டிய இவ்விஷயத்தைப் பொறுத்தவரை இக்கட்டுரை சகோ. அபூ ஷிஃபா அவர்களால் இரு வாரங்களுக்கு முன்பே சத்தியமார்க்கத் திற்கு அனுப்பித் தரப்பட்டு முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட ு மூன்று தினங்களுக்கு முன் தளத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னரே சகோ. ஆரிப் அவர்களால் நீங்கள் சுட்டிக்காட்டிய தளத்தில் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உங்களின் பார்வைக்காக ஓர் சிறு ஆதாரத்தை முன் வைக்கிறோம். சத்தியமார்க்கம் .காமில் நாம் பதிந்த தேதியை முகப்பில் (புதிய செய்திகள் பகுதியில்) கீழ்கண்டவாறு காணலாம்.

'சனி, 08. ஜூலை 2006
தேவை கொஞ்சம் தேன்'

நீங்கள் சுட்டிக்காட்டிய சுட்டியில் இந்த கட்டுரை பதிந்த தியதியை அச்சுட்டியில் கீழ்கண்டவாறு காணப்படுகிறது.

'2006-07-10 06:35:51 GMT'

அதாவது சத்தியமார்க்கத் தில் பதிந்த இரு தினங்களுக்குப்ப ின். எங்கிருந்து எங்கு நகல் எடுக்கப்பட்டது எனப் புரிந்திருப்பீர ்கள் என நினைக்கிறோம்.

நன்றி.
Quote | Report to administrator
அருளடியான்
0 #9 அருளடியான் -0001-11-30 05:21
தவறுக்கு வருந்துகிறேன்.

முதலில் ஆரிப் மரிக்கார் தளத்தில் இக்கட்டுரையை படித்தபின் இத்தளத்தினை பார்த்ததால் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டேன்.

நீங்கள் சுட்டிக்காட்டிய ிருப்பதை கவனத்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது.

தவறாக முடிவெடுத்து உங்களை விமர்சித்ததற்கு மன்னிக்கவும்.

என்னுடைய மேற்கண்ட கருத்து தற்போது ஆரிப் மரிக்காயர் அவர்களுக்குத் தான் பொருந்துகிறது. அவர் இங்கிருந்து எடுத்து அவருடைய தளத்தில் பதிந்த பொழுது நன்றி சத்தியமார்க்கம் என்று மட்டுமாவது போட்டிருந்தால் இத்தவறான புரிந்துணர்வு நிகந்திருக்காது.

நிகழ்ந்த தவறுக்கு மன்னிக்கவும்.

ஆரிப் மரிக்கார் அவர் தளத்தில் இங்கிருந்து எடுத்ததை மேற்கோள் காட்டுவார் என எதிர்பார்க்கிறே ன்.
Quote | Report to administrator
Rafiudeen
0 #10 Rafiudeen -0001-11-30 05:21
This is the usefull information for us 'Than you,
Quote | Report to administrator
நிலோஃபர் ஃபாத்திமா
0 #11 நிலோஃபர் ஃபாத்திமா -0001-11-30 05:21
How to Verify the Purity of Honey


Fake and impure honey have become commonplace in the market today, despite many people's preference of 100% bees' honey. The problem with this is, unfortunately, fake and impure honey can be passed off as pure very easily. When viewed on the shelf, it is very hard to pick out what is pure, and what is not. There are, however, a few ways to figure this out.


Steps
Check the label. You would be amazed at how many people neglect to look closely at the label of food products before buying them, and then are dismayed to find they bought something they really didn't want. Check around the brand name, and the ingredients list (if there is one) for a mention of additives. The company should be required to list them if you are shopping in certain countries. If there are no mentions of additives, buy the honey.
Taste the honey. If it seems off, and yet the label claims it is pure, there are a few simple tests you can run to check the purity of the honey.

The water glass test.

Get a glass of water. This and a tablespoon of honey are all you need for the first test.
Empty the honey into the water. If the honey is impure, it will dissolve in the water- the most common additive to honey is syrup of jaggery, which dissolves. If it is pure, the honey will stick together, and sink as a solid lump to the bottom of the glass.

The flame test.

Get a lighter and a candle with a cotton wick. This test is better if you don't have as much honey to spare.
Dip the cotton wick of the candle into a bit of the honey, and shake off the excess.
Attempt to light the wick. If it burns, then that is completely pure honey. If it refuses to burn, then the presence of water is not allowing the wick to burn. (If there is only a very small amount of honey on the wick, though, it might still burn. It will produce a crackling sound, and it would be best to blow out the wick and try again if it does, this time with more honey.)


The absorption test.

Pour a few drops of honey on blotting paper and observe whether or not it is absorbed. If it's absorbed, the honey's not pure.
If you don't have blotting paper, pour a little bit of honey on a white cloth, then wash the cloth. If there is any stain left by the honey, it is probably not pure.


The mixture test.

Mix equal part honey and methylated spirits.
Stir well.
Pure honey will settle to the bottom. Impure honey is more likely to remain dissolved and make the solution milky.
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #12 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
தேன்!! தேன்!!! படித்-தேன!!; தொகுத்-தேன்!!

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தா ல் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்ச ி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக் குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச ் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
Quote | Report to administrator
Faridha
0 #13 Faridha -0001-11-30 05:21
Assalamu Alaiku,

Good Site. ... valuable information.
Keep posting such a usefull things in addition to community round up message.

Wasallam
Quote | Report to administrator
MOHAMED ALI JINNAH
0 #14 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால், தேனீ வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதுதான் முடிவு.
Quote | Report to administrator
ஜமீல்
0 #15 ஜமீல் -0001-11-30 05:21
தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!
Quote | Report to administrator
நல்லடியார்
0 #16 நல்லடியார் -0001-11-30 05:21
ஒருதுளி தேனை சருமத்தில் தடவினால் சருமம் வெள்ளையாகும்/நர ைக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன் .அனுபவப்பட்டவர் கள் தெளிவு படுத்தினால் பலருக்கும் ஐயம் தீரும்.

சுத்தமான தேனில் எறும்பு மொய்க்காது என்பது தேனுக்கு உள்ள இன்னொரு சிறப்பு. இனிப்புகளை தேடித்திண்ணும் எறும்பிடமிருந்த ு தேனைப் பாதுகாக்க இறைவனின் ஏற்பாடோ?
Quote | Report to administrator
மஸ்தூக்கா
0 #17 மஸ்தூக்கா -0001-11-30 05:21
தேனை சருமத்தில் தடவினால் முடி நரைக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இக்கருத்து தவறானதாகும். பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் அறிவியல் ஆசிரியர் அவ்விதம் தடவிக் காட்டினார். மிக நீண்ட காலத்திற்கு பின்னும் அவருக்கு நரைக்கவில்லை.
நல்ல தேனைக் கண்டுபிடிக்க இன்னொரு வழியை ஒரு நண்பர் சொன்னார். நல்ல தேனை நாயக்கு வைத்தால் நாய் சாப்பிடாதாம். சர்க்கரைப்பாகாக இருந்தால் மட்டுமே நாய் சாப்பிடுமாம்.
Quote | Report to administrator
Emmran Khan
0 #18 Emmran Khan 2012-04-28 18:28
Nalla karuthu ..
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்