முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இயற்கை

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?

 1. மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

 2. பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

 3. ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.

 4. உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.

 5. காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

 6. பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

 7. இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

 8. உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

 9. பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

 10. மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.


தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்

- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.


 1. தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

 2. வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

 3. தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.

 4. மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

 5. மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

 6. மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது:

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

- அபூ ஸாலிஹா

Comments   

முஹம்மத் ஆஷிக்_citizen of world
0 #1 முஹம்மத் ஆஷிக்_citizen of world 2011-10-19 05:18
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷாஅல்லாஹ், மிகவும் பயனுள்ள குறிப்புகள். முழுமையான பதிவு. அருமையான ஆக்கம். ஜசாக்கல்லாஹ் க்ஹைர், சகோ.அபூ ஸாலிஹா.
Quote | Report to administrator
jalaal
0 #2 jalaal 2011-10-19 07:06
Honey, Habbatus sauda oil & olive oil are the best cure for mouth ulcer.
Quote | Report to administrator
YACOOB SAIT
0 #3 YACOOB SAIT 2011-10-19 07:37
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷாஅல்லாஹ், மிகவும் பயனுள்ள குறிப்புகள். முழுமையான பதிவு. அருமையான ஆக்கம். ஜசாக்கல்லாஹ் க்ஹைர்,
Quote | Report to administrator
M Muhammad
0 #4 M Muhammad 2011-10-19 11:44
Assalamu Alaikum Alhamdulillah Good and Usefull Article
மிகவும் பயனுள்ள குறிப்புகள். .
JazakAllahu Khair
Quote | Report to administrator
Mohamed Ali Jinnah
0 #5 Mohamed Ali Jinnah 2011-10-19 16:37
வயிற்றில் (குடலில் ) புண் அல்லது மற்ற வயிறு கோளாறினாலும் அல்லது ஒவ்வாமையாலும்(a llergy ) வாய்ப்புண் வர வாய்ப்புண்டு.
Quote | Report to administrator
Abufaisal
0 #6 Abufaisal 2011-10-19 18:29
எனக்கும்வாய்ப்ப ுண் வந்திருந்தது... அது சகோ. அபூஸாலிஹா எண்.1 ல் குறிப்பிட்டதுபோ ல் வலி நிவாரணி மாத்திரையால் வந்தது. அதை நிறுத்திய இரண்டு நாட்களில் சரியாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ ்...! இதற்காக நான் மருந்து எதுவும் உட்கொள்ள வில்லை...!
Quote | Report to administrator
Fazul kareem
0 #7 Fazul kareem 2011-10-20 03:14
தமிழில் வாய்ப்புண் அல்சர் பற்றி பல வலைதலங்களில் தேடி இருக்கிறேன். கிடைக்கவில்லை.
மிகவும் நன்றி. இது எனக்கு பயனுள்ள தகவல்.
Quote | Report to administrator
Jamal Mohamed
0 #8 Jamal Mohamed 2011-10-20 20:18
பயனுள்ள தகவல் !
ஷுக்ரன் ஜஸீலன்!
Quote | Report to administrator
சஃபி
0 #9 சஃபி 2011-10-20 20:28
வாய்ப் புண்ணுக்கு மிளகு தக்காளிக் கீரையைச் சாறு வைத்துக் குடித்தால் உடனடி குணம் கிடைக்கும். மிளகு தக்காளிப் பழமும் நல்ல குணம் தரும்.
Quote | Report to administrator
Prabakar.J
0 #10 Prabakar.J 2011-10-21 15:23
Informative. Thanks for this article. I follow the First tip My ulcer pain is totally gone
Please publish more articles useful for our day to day needs
Quote | Report to administrator
கான்
0 #11 கான் 2011-10-22 12:44
{{தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது}}

நல்லா சொன்னீங்க போங்க.... என் போன்றவர்களுக்கு வாய்ப்புண்ணை ஒழிக்கவே முடியாது போலிருக்கு. தினசரி தூங்கும் நேரம் மிக குறைவு என்பதால்.
Quote | Report to administrator
AHAMED RIYAS
0 #12 AHAMED RIYAS 2011-10-26 20:41
பலருக்கு மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி. எங்கள் ஊரின் தலத்தில் மறுபதிப்பு செய்துள்ளோம்

melathirupanthuruthi.com/.../
Quote | Report to administrator
seasonsnidur.wordpress.com
0 #13 seasonsnidur.wordpress.com 2011-10-27 13:07
We too published this article with courtesy

seasonsnidur.wordpress.com/... /...
Quote | Report to administrator
Rafiq Rahman
0 #14 Rafiq Rahman 2011-11-02 10:23
very useful message...Jazak allahu Khair...
Quote | Report to administrator
shahul hameedmohamed yusuf
0 #15 shahul hameedmohamed yusuf 2011-11-22 12:10
வாய்ப் புண்ணுக்கு மிளகு தக்காளிக் கீரையைச் சாறு வைத்துக் குடித்தால் உடனடி குணம் கிடைக்கும். மிளகு தக்காளிப் பழமும் நல்ல குணம் தரும்.
22-11-2011
Quote | Report to administrator
O J DEEN
0 #16 O J DEEN 2011-11-23 09:01
மிகவும் பயனுள்ள குறிப்புகள். .
JazakAllahu Khair
Quote | Report to administrator
jp
0 #17 jp 2012-07-01 22:22
thank you for your information
Quote | Report to administrator
msadevan
0 #18 msadevan 2012-08-26 17:34
நல்ல பயனுள்ள தகவல்கள். மணிதக்காளி கீரையைப் பச்சையாக மென்று தின்றாலும் பலன்தரும் என்கிறார்கள்.
Quote | Report to administrator
poornima
0 #19 poornima 2014-11-27 14:37
இந்த பதிவு என்னைப்போல் வாய்ப்புண் ஏற்படும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்