முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இயற்கை

blackcuminஐயம்:

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா?

வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)

தெளிவு:

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.

 • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
 • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
 • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
 • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
 • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
 • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
 • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
 • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
 • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
 • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
 • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
 • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
 • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

Comments   

Jaffar
+1 #1 Jaffar 2009-07-13 09:35
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


அல்கம்துலில்லாஹ், பயனுள்ள ஆக்கம். எனக்கு குறட்டை பிரச்சனை உள்ளது. அதனைப் போக்க இந்தக் "கருஞ்சீரகத்தை" எப்படி பயன்படுத்துவது?


தயவுசெய்து விரிவாக விளக்கவும்.
Quote | Report to administrator
ansari
0 #2 ansari 2009-07-15 18:52
கருஞ்சீரகம் குறித்த விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

இந்தக் கருஞ்சீரகத்தை விற்பனை செய்வதற்கு ஹதீஸ்களை விளம்பரத்திற்கா கப் பயன்படுத்திக் கொள்ளலாமா?
Quote | Report to administrator
Nasoordeen
-1 #3 Nasoordeen 2009-07-15 20:01
அஸ்ஸலாமு அலைக்கும்
கருஞ்சீரகம் பற்ரிய விபரங்கல் பலருக்கு நன்மையாக இருந்திருக்கும் இது போன்ற ஆக்கங்கள் வெளிநாடுகளில் இருக்கும் என் போன்றவர்களுக்கு மிக்க பிரயோசனம் அல்ஹம்துலில்லாஹ
Quote | Report to administrator
Hanifa
+2 #4 Hanifa 2009-07-16 15:47
இது புற்றுநோயைக் குணமாக்குமா?
Quote | Report to administrator
ahamed
-1 #5 ahamed 2009-07-23 15:01
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த விஷயத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே
Quote | Report to administrator
Muslim
+2 #6 Muslim 2009-07-23 19:43
இந்த ஆக்கத்தில் சகோதரர் முஸ்லிம் பதிவு செய்த மறுமொழியைக் காணல.
Quote | Report to administrator
Rucknudeen
0 #7 Rucknudeen 2009-07-23 23:52
அல்ஹம்துலில்லாஹ்

படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. நானும் முன்பு ஒரு மாத பத்திரிக்கையில் பார்த்த நினைவு. மேலும் தைராய்டு தொல்லைகளால் அவதிபடுபவர்களுக ்கு, பொடியாக்கிய தோலில் நல்லெண்ணை மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு கரண்டி சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது டிப்ஸ்.
Quote | Report to administrator
Muslim
+1 #8 Muslim 2009-07-27 17:57
//கருஞ்சீரகம் குறித்த விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

இந்தக் கருஞ்சீரகத்தை விற்பனை செய்வதற்கு ஹதீஸ்களை விளம்பரத்திற்கா கப் பயன்படுத்திக் கொள்ளலாமா?//


கருஞ்சீரகத்தை வேறு மூலிகைகளுடன் கலந்து மருந்தாகவோ, எண்ணெயாகவோ பயன்படுத்தி அதை வியாபாரமாக்கினா ல், கருஞ்சீரகம் குறித்து சிறப்பித்துக் கூறும் நபிமொழியை விற்பனை விளம்பரத்திற்கா கப் பயன்படுத்துவது கூடாது!


நீரழிவு நோய், எய்ட்ஸ் நோய், புற்று நோய்கள், பறவைக் காய்ச்சல் என எவ்வளவோ நவீன நோய்கள் தோன்றியுள்ளன. தற்போது அதி நவீன நோயாக பன்றிக் காய்ச்சலும் பரவி வருகின்றன. இந்த நோய்களுக்கெல்ல ாம் நிவாரணியை மனிதன் கண்டுபிடித்து வென்றுவிடவில்லை , இன்னும் ஆராய்ச்சியிலேயே உள்ளன.


தீராத இந்நோய்களையெல் லாம் கருஞ்சீரகத்தால் வெல்ல முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? என்றால் சொல்ல முடியாது. ஏனெனில் ஆய்வில் வெற்றி பெறும்வரை மருத்துவத் துறைக்கு சவலாகத் தோன்றியுள்ள இவை உயிர்கொல்லி நோய்களாகும்.


''கருஞ்சீரகத்தி ல் 'சாமை'த் தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)


''கருஞ்சீரகத்தி ல் அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் வேறு சில மருத்துவத்தையும ் பரித்துரைத்துள் ளார்கள். வரும் ஹதீஸ் புகாரி நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5680
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள் வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்க ு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலு ம் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.


இன்னும் சில நோய்களுக்கு வேறு சில மருத்துவத்தையும ் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என நேரடிப் பொருள் கொண்டால் கருஞ்சீரகத்தையே மருந்தாக்கி நோயினால் எவருமே மரணிக்க முடியாதபடிச் செய்து விடலாம். ஆனால் அன்றும் நோயினால் பாதிக்கப்பட்டு மனிதர்கள் மரணித்தனர். இன்றும் நோயினால் மரணமடைகின்றனர்.


அப்படியானால் ஹதீஸின் பொருள்:


ஆக்கத்தில் சொல்லப்பட்டுள் ள, மனிதனுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்கள் கருஞ்சீரகத்தால் குணமடையும் என்றாலும் ஒருவருக்கு குளிர் காய்ச்சலால் மரணம் ஏற்படும் என்றிருந்தால் கருஞ்சீரகம் குளிர் காய்ச்சலையும் குணப்படுத்திடாத ு. மரணம் வென்றுவிடும்.


''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)


நோய்குரிய மருத்துவம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் நோய் நீங்கும் என்பது நபியின் வாக்கு. எனவே மருத்துவம் குறித்து எல்லா நபிமொழிகளையும் ஆய்வு செய்தால், கருஞ்சீரகத்தால் எல்லா நோயும் குணமாகும் எனச் சொல்லி கருஞ்சீரக மருத்துவ விற்பனைக்கு நபிமொழியை விளம்பரமாகப் பயன்படுத்துவது ஒருவித ஏமாற்று மோசடி!


(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
முருகன்
0 #9 முருகன் 2009-07-28 08:50
அப்படின்னா எயிட்ஸுக்கும் இது நல்ல நோய் நிவாரணியா?
Quote | Report to administrator
ummu hudhaifa
0 #10 ummu hudhaifa 2009-07-28 19:33
''கருஞ்சீரகத்தி ல் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)
intha hadheesilirunth u ''uyirkolli noyaaka"iruntha alum atharkkum shifaa undu enru arivathuthaan oru moominudaya panbaakum.
Quote | Report to administrator
Muslim
0 #11 Muslim 2009-07-30 09:46
//''கருஞ்சீரகத் தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)
intha hadheesilirunth u ''uyirkolli noyaaka"iruntha alum atharkkum shifaa undu enru arivathuthaan oru moominudaya panbaakum.//


அன்புச் சகோதரி ummu hudaifa அவர்களே!


ஸஹீஹான அறிவிப்புகளை இணைத்து விளங்குவதே முஸ்லிம்களின் பண்பாகும்.
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு மருத்துவம் சரியாக அமைந்துவிட்டால் ''பி இத்னில்லாஹ் - அல்லாஹ்வின் அனுமதியால்'' குணம் ஏற்படும்.


நோய் நிவாரணி சரியாக அமைந்தாலும் இறைவனின் அனுமதியின்றி குணமேற்படாது என அறிவதும் முஸ்லிமுடைய பண்பாகும். நோய், முருத்துவம் குறித்த பல அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவ ை!
Quote | Report to administrator
sarbudeen a
0 #12 sarbudeen a 2009-08-18 17:51
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந ்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக ் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறா ர்கள். நமது பாட்டி வைத்தியத்திலும் , வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்க ள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் , என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும ் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
Quote | Report to administrator
muhammad yakoob
0 #13 muhammad yakoob 2010-03-26 16:55
விந்து அடிகடி துக்கதில் வெலியெருஹிரது என்ன செய்ய வென்டடும்
Quote | Report to administrator
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்
0 #14 கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம் 2010-03-27 15:26
"பாதாம் பிசின்" என்று நாட்டு மருந்துகடையகளில ் கிடைக்கும்; அதனை சிறிதளவு எடுத்து காலையில் தண்ணீரில் போட்டு ஊறவைத்துவிட்டால ், பூப்போல மலர்ந்துவிட்டபி ன், பாலில் கலந்து இரவு படுக்கப்போகுமுன ்பாகக் குடித்து வரலாம். சுமார் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்; இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பலன் கிட்டும்.

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
Quote | Report to administrator
sadiq
0 #15 sadiq 2010-06-11 21:14
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல நல்ல விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சி. நல்ல நல்ல பயனுள்ள செய்தி. நன்றி.
Quote | Report to administrator
ihsan
0 #16 ihsan 2010-12-09 17:40
assalamu alikum ithu nalla payanulla vidayam. nanri
Quote | Report to administrator
gkmurugan
0 #17 gkmurugan 2011-05-10 17:48
The same subject available chenaitamilulaa.bigforumpro.co m/.../. who is scam person:cry:
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #18 சத்தியமார்க்கம்.காம் 2011-05-10 21:24
அன்பான முருகன் அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிட்டுள்ள 'சேனைத் தமிழ் உலா' தளத்தில் நமது கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளனர். "நன்றி" போடும் இடத்தில் 'சத்தியமார்க்கம ்' என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக 'சன்மார்க்கம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக் கும் நன்றி!
Quote | Report to administrator
abdulrahman
0 #19 abdulrahman 2011-09-12 07:01
thank you assalaamu alaikkum
Quote | Report to administrator
manivannan
0 #20 manivannan 2012-07-16 10:59
quran vanthu 2000m andugale agiradhu adharku munnare sathiyathai patrium dharmathai patrium bagavath geethail kurapatuvitathu melum marunthugalaipa tri ayurvedhamum nam munnorgal kuriyathaithan quranil koorapatuladhu enbathai namm marakakoodathu( tamilanthan muthan muthalil sitha vaithiyamuraiya i
ulagirku arimugam seithan)
Quote | Report to administrator
abdul azeez
-1 #21 abdul azeez 2012-07-17 12:28
அன்பு நண்பர் மணிவண்ணன் அவர்களே !

// quran vanthu 2000m andugale agiradhu //

குர்ஆன் வந்து 1433 வருடங்கள் ஆகிறது

// adharku munnare sathiyathai patrium dharmathai patrium bagavath geethail kurapatuvitathu melum marunthugalaipa tri ayurvedhamum nam munnorgal kuriyathaithan quranil koorapatuladhu enbathai namm மரககூடது//

நம் முன்னோர்கள் கூறியதை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்பது பொய் காரணம் குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து மலக் ஜிப்ரீல் (அலை) மூலம் முஹம்மது (ஸல் ) அவர்களுக்கு அருளப்பட்டது.

சும்மாவே அதாரம் இல்லாமல் முன்னோர்கள் சொன்னதை சொல்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழுவது போல் சொல்வது முட்டாள் தனம்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
ஆரோக்கியம்
0 #22 ஆரோக்கியம் 2012-07-17 14:43
நண்பர் மணிவண்ணன், மேற்கண்ட இந்த ஆக்கத்தில் Quran தான் ஆயுர்வேதத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தது என்று எங்குமே கூறப்பட வில்லையே? பின்னே எதுக்கு டென்ஷன்? ;-)

மேலும், நீங்கள் கூறியுள்ளபடி தமிழர்களின் சித்த வைத்திய முறை பற்றிய உங்களது சொந்த ஆக்கங்கள் இருப்பின் இந்த தளத்தினருக்கு அனுப்பித் தந்தால் பல தமிழர்கள் அதனைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்குமே?
Quote | Report to administrator
mohdrafiahamed
0 #23 mohdrafiahamed 2012-08-26 19:37
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல நல்ல விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சி. நல்ல நல்ல பயனுள்ள செய்தி. நன்றி
அல்கம்துலில்லாஹ், பயனுள்ள ஆக்கம். எனக்கு குறட்டை பிரச்சனை உள்ளது. அதனைப் போக்க இந்தக் "கருஞ்சீரகத்தை" எப்படி பயன்படுத்துவது?


தயவுசெய்து விரிவாக விளக்கவும்.... நன்றி... நன்றி.... நன்றி
Quote | Report to administrator
naa. sivalingam
0 #24 naa. sivalingam 2012-09-05 15:04
indruthaan intha valaitthalathai paarthen. payanulla thagavalgalai tharuvatharku nandri.
Quote | Report to administrator
syed Abuthahir
0 #25 syed Abuthahir 2012-09-15 15:21
அல்கம்துலில்லாஹ ், பயனுள்ள ஆக்கம். எனக்கு குறட்டை பிரச்சனை உள்ளது. அதனைப் போக்க இந்தக் "கருஞ்சீரகத்தை" எப்படி பயன்படுத்துவது?
Quote | Report to administrator
mohammad ashiq.a
+1 #26 mohammad ashiq.a 2013-04-07 16:55
Karunjeeragatha i payanbaduthi udal edai kuraika mudeuma appadi mudendhal satru vilakkaum
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்