முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

அலோபதி

{mosimage}காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள் மூளையின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக அசைந்து கொண்டே இருக்கும். இது சில வேளைகளில் நல்ல ஆரோக்கியமான கண்பார்வை இருந்தும் இமைகளைத் திறக்க இயலாத வகையில் பார்வையை மறைக்கும் மோசமான நோயாகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளை காஃபி தொடர்ச்சியாகக் குடிப்பதன் மூலம் கண்ணிருந்தும் குருடாக்கும் (functionally blind) இந்நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம் என இத்தாலிய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கோளாறுகள் மூலம் ஏற்படும் இந்த ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) நோய், 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதினரை அதிகமாக தாக்கும். காஃபியில் அடங்கியுள்ள கஃபைன் (caffeine) என்ற வேதிப்பொருள் தான் இந்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது எனக் கருதப்படுகின்றது. இத்துறையில் மேலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என இத்தாலியில் உள்ள நரம்பியல் மற்றும் மனவியல் (Neurolgical and psychiatric Sciences) பல்கலைக்கழகப் பேராசிரியர் டி பாஸியோ கூறியுள்ளார்.

அதேபோல மூளையின் கட்டுப்பாடு இழந்து இயக்கு தசைகள் (Voluntary muscles) தன்னிச்சையாக (குறிப்பாக முகத்தசைகள்) இயங்கும் நோய்க்குறியீடான பார்க்கின்சன் நோய் (Parkinson's disease) ஏற்படுவதையும் கஃபைன் தடுக்க வல்லது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments   
MOHAMED ALI JINNAH
0 #1 MOHAMED ALI JINNAH -0001-11-30 05:21
காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை!

தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அணு ஆய்வு மையத்தின், பயோ மெடிக்கல் பிரிவின் முன்னாள் இயக்குநரும், பிரபல கதிரியிக்க ஆய்வாளருமான பி.சி.கேசவன் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது எம்.எஸ்.சுவாமிந ாதன் ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் கேசவன் இதுகுறித்துக் கூறுகையில், காஃபியில் உள்ள காஃபின், புற்று நோய், சர்க்கரை வியாதி2, இதய நோய், பர்கின்ஸன் நோய், வயிற்றில் கல் ஏற்படுவது ஆகியவற்றை அறவே குறைப்பதாக கூறுகிறார்.

இதுதொடர்பாக கடந்த 6 முதல் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்ட ுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காஃபின் தவிர பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், குளோரோஜெனிக் அணிலம் மற்றும் பினோலிக் கூட்டுப் பொருள் ஆகியவை நமது உடம்பில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறதாம்.

தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் படு சாதாரணமான விஷயமாகி விட்டது. இந்த நிலையில் அடிக்கடி காஃபி சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால் இது நல்ல பழக்கம்தான், நல்ல சுத்தமான காஃபியை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சி மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார் கேசவன்.
Quote | Report to administrator
அப்துல் ஸலாம்
0 #2 அப்துல் ஸலாம் -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் நல்ல பயனுள்ள குறிப்பு, காபி, டீ போன்றதை தவிர்க்கும் என் போன்றவர்கள் சிந்திக்க வேண்டிய மற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமாகி விட்டது.
இதனை பற்றி மேலும் நம்பத்தக்க ஆராய்ச்சிக் குறிப்புகள் கிடைப்பின் இணைப்பில் புதுபிக்கவும்(அ ப் டேட்) என்று கேட்டுக் கொள்கிறேன்.
Quote | Report to administrator
fayaz
0 #3 fayaz -0001-11-30 05:21
நல்ல ஆக்கம்! ஆழமான மருத்துவ விளக்கத்தை எளிமையாக கொடுக்கிறீர்கள் . இங்கே கருத்து தெரிவித்திரூக்க ும் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் குறிப்புகளும் பயனுள்ளவை. ஜின்னா அவர்கள் இது போன்ற குறிப்புகளை இந்த தளத்தில் அனுமதி பெற்று எழுதலாமே?

Fayaz.M
Quote | Report to administrator
நிர்வாகி, சத்தியமார்க்கம்.காம்
0 #4 நிர்வாகி, சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
வ அலைக்கும் ஸலாம்(வரஹ்) சகோதரர் அப்துல் ஸலாம்.

இன்ஷா அல்லாஹ். தங்களின் கோரிக்கைக்கேற்ப இது தொடர்பான வேறு அதிகப்படியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இதே ஆக்கத்திலேயே அப்டேட் செய்கின்றோம்.

தங்களின் கருத்துக்கும் இணைந்த பங்களிப்புக்கும ் மிக்க நன்றி.

_______________________________
- நிர்வாகி (சத்தியமார்க்கம ்.காம்)
Quote | Report to administrator
Manzoor
0 #5 Manzoor -0001-11-30 05:21
Ungal Work Nallaeruk
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்